Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 20, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
சப்ரகமுவ மாகாணத்தை பின்பற்றி கம்பஹா மாவட்டத்திலும் தமிழ் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்: - ஜனநாயக மக்கள் முன்னணி
[Wednesday, 2012-09-19 11:33:07]
News Service

ஜனநாயக மக்கள் முன்னணி வத்தளை வட்டார செயற்குழு தீர்மானம் வத்தளை, நீர்கொழும்பு, களனி, ஜா-எல, கட்டானை ஆகிய பல்வேறு வட்டாரங்கள் கம்பஹா மாவட்டத்திற்குள் வருகின்றன. குறிப்பாக வத்தளை, நீர்கொழும்பு ஆகிய வட்டாரங்களில் தமிழர்கள் கணிசமாக வாழ்கிறார்கள். இங்கே தமிழர்களின் வாக்குகளை வாங்குவதில் அக்கறை காட்டும் பெரும்பான்மை கட்சிகள், அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவங்களையும், நியமனங்களையும்கூட வழங்குவதில்லை. எனவே இங்கு வாழும் தமிழர்கள் தங்கள் உரிமைகளை வென்றெடுப்பதற்கு, தலைவர் மனோ கணேசனை முழுமையாக பயன்படுத்த வேண்டும்.

  

நடந்து முடிந்த சப்ரகமுவ மாகாண தேர்தல் வியூகம் அமைப்பதில் தலைவர் மனோ கணேசன், எத்துனை விட்டுகொடுப்புகளுக்கு மத்தியில், நேர்மையாக செயலாற்றினார் என்பதை நான் பக்கத்தில் இருந்து பார்த்தேன். இரத்தினபுரி, கேகாலை மாவட்ட தமிழர்கள் தங்கள் மாகாணசபை பிரதிநிதித்துவங்களை பெற வேண்டும் என்பதற்காக அவரின் தலைமையில் ஜனநாயக மக்கள் முன்னணி பாரிய பங்காற்றியது. கொழும்பில் இருந்து சப்ரகமுவ மாகாணம் தூரத்தில் இருக்கின்றது. ஆனால் கம்பஹா மாவட்டம், கொழும்பு மாவட்டத்துடன் சேர்ந்து மேல் மாகாணத்தில் இருக்கின்றது.

எனவே தூரத்தில் வாழும் நாம், மனோ கணேசனை பயன்படுத்தும்போது, இங்கு கம்பஹா மாவட்டத்தில் வாழும் தமிழர்களாகிய நீங்கள் அவரை கட்டாயம் பயன்படுத்த வேண்டும். உங்களுக்கு ஒரு அரிய சந்தர்ப்பம் வந்து கொண்டிருக்கின்றது. எதிர்வரும் மேல்மாகாணசபை தேர்தலில் நீங்கள் தலைவர் மனோ கணேசனுக்கும், ஜனநாயக மக்கள் முன்னணிக்கும் ஒற்றுமையுடன் முழுமையான ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

அதன்மூலம் தங்களுக்கு உரிய ஜனநாயக தமிழ் பிரதிநிதித்துவத்தை, கம்பஹா மாவட்ட தமிழர்கள் நிச்சயமாக பெற முடியும் என, கம்பஹா மாவட்ட ஜனநாயக மக்கள் முன்னணி அலுவலகத்தில் நடைபெற்ற வத்தளை வட்டார செயற்குழு கூட்டத்தில், பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய சப்ரகமுவ சிவில் சமூக கழகத்தின் அமைப்பாளர் ரஞ்சித் ஜெயகர் தெரிவித்தார்.

ரஞ்சித் ஜெயகரை அடுத்து உரையாற்றிய முன்னணியின் கம்பஹா மாவட்ட செயலாளர் ஜெரோம் விக்னேஸ்வரன் கூறியதாவது, சபரகமுவ தேர்தல் மலையக தமிழர்களின் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இத்தேர்தல் இன்று சரித்திரத்தில் இடம் பிடித்துவிட்டது. நமது தலைவர் மனோ கணேசன் இக்கூட்டு முயற்சிக்காக, இனவுணர்வுடன் செயல்பட்டார். இரத்தினபுரியில் மட்டும் அல்ல, நாம் போட்டியிடாத கேகாலை மாவட்டத்திற்கும் சென்று அவர் பிரச்சாரங்களில் ஈடுபட்டார். கடந்த காலங்களில் வட மாகாணத்திற்கும் சென்று அங்கு வாழும் வட-கிழக்கு தமிழர் மத்தியில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவாக அவர் பிரச்சாரங்களில் ஈடுபட்டதை நீங்கள் அறிவீர்கள்.

அவர் வடக்குக்கு சென்றதையும் சிலர் குறை சொன்னார்கள். இன்று அவர் சப்ரகமுவ சென்றதையும் சிலர் குறை சொல்கிறார்கள். அவர் இந்த விமர்சனங்களை துச்சமாக கருதி செயற்படுகிறார். தமிழர்கள் வாழும் பகுதிகளில் எல்லாம் தமிழ் பிரதிநிதித்துவம் உறுதிபடுத்தப்பட வேண்டும் என்பதே அவரது குறிக்கோள்.

இன்று, வத்தளை உட்பட கம்பஹா மாவட்டத்தில், மலையகத்திலிருந்து குடிபெயர்ந்த இந்திய வம்சாவளி தமிழர்களும், வட-கிழக்கிலிருந்து குடிபெயர்ந்த தமிழர்களும் நிரந்தரமாக இணைந்து வாழ்கிறார்கள். இந்துக்களும், கிறிஸ்தவர்களும் வாழ்கிறார்கள். இங்கு மலையகத்தமிழர், வட-கிழக்கு தமிழர், இந்து, கத்தோலிக்கர் என்று பிரித்து வைத்து அரசியல் செய்யமுடியாது. தமிழர் என்று மாத்திரமே அரசியல் செய்யமுடியும்.

நம் அனைவரையும் தமிழர் என்ற ஒரே அடையாளத்தின் கீழ் ஒன்று சேர்க்க கூடிய ஒரே தலைவர் மனோ கணேசன் அவர்கள் ஆகும். ஆகவே, எதிர்காலத்தில் வரும் மாகாணசபை தேர்தலில், கம்பஹா மாவட்ட தமிழர்கள் ஒருமித்து வாக்களித்தால், எமது தலைவர் தலைமையிலான ஏணி சின்னத்தில் நாம் ஒன்று அல்லது இரண்டு ஆசனங்களை பெற முடியும். எனவே சிறு, சிறு குழுக்களாக பிரிந்து நிற்பதை நாம் நிறுத்த வேண்டும். ஜனநாயக மக்கள் முன்னணியில் நாம் அனைவரும் இணைய வேண்டும். எமது கட்சியின் கட்டமைப்பு இன்று கம்பஹா மாவட்டம் முழுக்க அமைக்கப்பட்டு வருகின்றது.

நமது ஒளிமயமான எதிர்காலத்திற்காக நாம் இன்று நம்மை தயார்படுத்துவோம். இந்த நோக்கில், சப்ரகமுவ மாகாணத்தை பின்பற்றி கம்பஹா மாவட்டத்திலும் தமிழ் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை நான் பிரேரிக்கிறேன்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களுக்கான நான்காம் ஆண்டு நினைவேந்தல், மயிலாடுதுறை - உலக தமிழர் பாதுகாப்பு இயக்கம்!Top News
[Monday, 2013-05-20 21:10:53]

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை போர்க்குற்றநாள் நினைவேந்தல் நிகழ்வு நேற்றுமுன்தினம் மயிலாடு துறையில் இடம்பெற்றது (18 05 2013). இதில் ஏராளமான தமிழின உணர்வாளர்கள் கலந்துகொண்டதோடு படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு அஞ்சலிகளையும் செலுத்தியுள்ளனர்.



நெதர்லாந் நாட்டில் இடம்பெற்ற தமிழினவழிப்பின் 4ம் அண்டு நினைவு நாள். Top News
[Monday, 2013-05-20 20:22:03]

சிங்கள பேரினவாதம் 60 ஆண்டுகளாக தமிழிழ மக்கள் மீது திட்டமிட்ட தமிழினவழிப்பை மேற்கொள்கின்றது. சிங்கள பேரினவாதம் செய்த தமிழினவழிப்பின் உச்சக்கட்டமே 18. வைகாசி 2009ம் ஆண்டாகும். வைகாசி 18ம் திகதியை உலகெங்கும் வாழ்கின்ற தமிழீழ உறவுகள் ஓர் துயரநாளாகவும் தமிழீழ மண்ணை மீட்டெடுக்க வேண்டுமென உறுதியெடுக்கின்ற நாளாகவும் எழுச்சிப்பூர்வமாக நினைவுகூர்ந்து வருகின்றார்கள்.



லயன் எயார் விமானம் தொடர்பில் கிளம்பியது புதிய சந்தேகம் - சுட்டு வீழ்த்தப்பட்டதா? கடத்தப்பட்டதா என குழப்பம்!
[Monday, 2013-05-20 19:51:45]

இரணைதீவுக் கடலில் 1998ம் ஆண்டில் வீழ்ந்த லயன் எயர் விமானம், சுட்டு வீழ்த்தப்பட்டதா அல்லது கடத்தப்பட்டதா என்ற சந்தேகம், அதில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடம் எழுந்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது. இரணைதீவுக் கடலில் இந்த மாதம் 4ம் நாள் தீவிரவாத புலனாய்வுப் பிரிவின் வழிகாட்டலில், லயன் எயர் விமானத்தின் சிதைவுகளை சிறிலங்கா கடற்படையினர் மீட்டனர். கடலில் 25 அடி ஆழத்தில் இருந்த சுழியோடிகளால் விமானத்தின் இரண்டு இறக்கைகள், மூன்று சக்கரங்கள் உள்ளிட்ட பல பாகங்கள் மீட்கப்பட்டன. இரண்டு நாட்கள் நீடித்த இந்த மீட்புப் பணியின் போது, பெண் ஒருவரின் தேசிய அடையாள அட்டை, செயற்கைப் பல், மற்றும் மனித எலும்புகள் சிலவும் மீட்கப்பட்டதாக கூறப்பட்டது.



வேலைநிறுத்த போராட்டத்தின் போது ஏதாவது ஒரு காரியாலயம் மூடப்பட்டால் நான் பதவி துறப்பேன்: பிரதியமைச்சர்
[Monday, 2013-05-20 19:04:39]

மின்சார கட்டண அதிகரிப்பிற்கு எதிராக எதிர்க்கட்சிகளினால் முன்னெடுக்கப்படும் வேலைநிறுத்த போராட்டத்தின் போது ஏதாவது ஒரு காரியாலயம் மூடப்பட்டால் நான் பதவிதுறப்பேன் என்று பிரதியமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். அரசாங்க காரியாலயங்கள் அல்லது எந்தவொரு தனியார் காரியாலயமும் நாளை செவ்வாய்க்கிழமை மூடப்பட்டால் நான் பதவிதுறப்பேன். என்று பெருந்தோட்ட கைத்தொழில் பிரதியமைச்சர் ஏர்ல் குணசேகர தெரிவித்துள்ளார். கம்பளை ரத்னாசார விஹாரையில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு சவால் விடுத்தார்.



ஆட்கொணர்வு மனுவை மீளப்பெறுமாறு காணாமல்போனவர்களின் உறவினர்களுக்கு படையினர் அச்சுறுத்தல்!
[Monday, 2013-05-20 19:00:15]

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து, பின்னர் காணாமற்போனவர்கள் தொடர்பில் வவுனியா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை திரும்பப் பெறுமாறு மனுதாரர்களுக்கு இனந்தெரியாத நபர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகள் 2009 ம் ஆண்டு மே 18ம் திகதி இராணுவத்தினரின் அறிவித்தலுக்கு அமைய சரணடைந்திருந்தனர். இதன் பின்னர் சரணடைந்தவர்கள் அவர்களது உறவினர்களின் கண்ணெதிரே படையினரால் பஸ்களில் ஏற்றிச் செல்லப்பட்டனர். எனினும் அதன் பின்னர் அவர்களது நிலை என்னவென்று தெரியா நிலையில் அவர்களது உறவினர்கள் உள்ளனர்.



மக்கள் எழுச்சியைக் கண்டு ராஜபக்ஷ ரெஜிமென்ட் பயந்துவிட்டது - ரணில்!
[Monday, 2013-05-20 18:42:18]

ராஜபக்ஷ ரெஜிமென்ட் கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் எழுச்சியைக் கண்டு பயந்துள்ள நிலையில் நாளை இடம்பெறவுள்ள தேசிய தொழிற்சங்க போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,



காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் தற்போதைக்கு வழங்கப்படத் தேவையில்லை - டக்ளஸ்!
[Monday, 2013-05-20 18:27:33]

தற்போதைக்கு மாகாணசபைகளுக்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படத் தேவையில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வட மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படவுள்ள நிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஆங்கில ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின் இரண்டு பிரதான இன சமூகங்களுக்கு இடையில் சரியான புரிந்துணர்வு எட்டப்படும் வரையில் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்குவது தொடர்பிலான தீர்மானத்தை சற்றே ஒத்தி வைக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். வட மாகாணசபைக்கு காணி காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டால் சிங்கள மக்கள் அது குறித்து கவனம் செலுத்துவர், இந்த அதிகாரங்கள் வழங்கப்படாவிட்டால் தமிழ் மக்கள் அது குறித்து கவனம் செலுத்துவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



மீண்டும் த.தே.ம.மு உறுப்பினர்களை விசாரணைக்கு அழைத்தது குற்றத்தடுப்பு பொலிஸ்!
[Monday, 2013-05-20 18:17:34]

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் பொதுச் செயலாளர் உட் பட்ட 4பேர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் இன்று மீளவும் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பதாக கட்சியின் யாழ்.வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 18ம் திகதி மன்னாரில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு நாள் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த சமயம் முன்னணியின் பொதுச்செயலாளர் செ.கஜேந்திரன், சட்டத்தரணி வி.மணிவண்ணன் மற்றும் இளைஞரணி தலைவர் எஸ்.சத்தியசீலன் உட்பட 15பேர் கைதுசெய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் நள்ளிரவு விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் முன்னணியின் உபதலைவர் சி.கஜேந்திரகுமார், மற்றும் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ்.வசந்தரூபன் ஆகியோர் இன்று காலை 9மணிக்கு பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.



இராணுவத்தினால் காணி சுவீகரிப்பு - தடுக்குமாறு நாமல் எம்.பிக்கு கடிதம்!
[Monday, 2013-05-20 18:13:18]

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான காணியினை அரசாங்க அதிபர் குழுவினர் சுவீகரிக்க முயற்சிப்பதாகவும் இதனை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு, இலங்கை போக்குவரத்து சபை கிளிநொச்சிசாலை ஊழியர்கள் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 12 ஏக்கர் காணியில், முதற்கட்டமாக வனவள திணைக்களத்திற்கும், சிறுவர் பூங்காவிற்கும், இராணுவத்தினரின் புனித பூமிக்குமாக எமது காணி சுவீகரிக்கப்பட்டது.



வடக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியிடம் கோரவில்லை: தயா மாஸ்டர்
[Monday, 2013-05-20 17:51:40]

தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் எந்தவொரு கட்சியையும் அணுகவில்லை என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்குமாறு எந்தவொரு அரசியல் கட்சியிடமும் கோரவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் தேர்தலில் போட்டியிட தயா மாஸ்டர் சந்தர்ப்பம் கோரியதாகவும் அதனை நிராகரித்ததாகவும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தார். எனினும், இவ்வாறான எந்தவொரு கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



வவுனியாவில் 7 வயதுச் சிறுமி மீது பாலியல் வல்லுறவு - நீதி கோரி பாரிய ஆர்ப்பாட்டம்!Top News
[Monday, 2013-05-20 15:33:34]

வவுனியா நெடுங்கேணி சேனைப்பிலவில் 7 வயது சிறுமியொருவரைப் பாலியல் பலாத்காரம் செய்தவரை உடன் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனக்கோரி திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருக்கின்றது. சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் பேரில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு சிறுவர்களுக்கும் பெண்களுக்கும் எதிராக நடத்தப்படுகின்ற சித்திரவதைகள் வன்முறைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கின்றனர்.



பாராளுமன்றத்திற்கு செல்வது போன்று அடிக்கடி 4ம் மாடிக்கும் செல்கின்றோம் - அரியநேந்திரன் எம்.பி!
[Monday, 2013-05-20 15:21:41]

எப்போதும் தமிழ் மக்களுக்கு சுதந்திரமான அரசியல் தீர்வு விடுதலை கிடைக்கின்றதோ அது வரையும் எமது பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன் தெரிவித்தார். முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து பிரார்த்தனை செய்யும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கணடவாறு கூறினார். தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,



கோவையில் நடைபெற்ற மே 18 போர்க்குற்றநாள் நிகழ்வில் பெருமளவு ஈழ விடுதலை ஆதரவாளா்கள் பங்கேற்ப்பு. Top News
[Monday, 2013-05-20 10:26:35]

கோவையில் நேற்றையதினம் (18 05 2013) முள்ளிவாய்க்கால் இனப்படுகொல போர்க்குற்றநாள் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஏற்ப்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெருமளவான தமிழீழ விடுதலை ஆதரவாளா்களும் செயற்ப்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர்.



ஜனாதிபதி மஹிந்த சீனாவுக்கு ஆறாவது தடவையாக விஜயம்!
[Monday, 2013-05-20 09:16:57]

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வரும் புதன்கிழமை சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வரும் 22ம் நாள் தொடக்கம் 26ம் நாள் வரை சீனாவில் பயணம் மேற்கொள்ள ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார். எனினும் இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னமும் வெளியாகவில்லை. ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்ற பின்னர், சீனாவுக்கு மேற்கொள்ளவிருக்கும் ஆறாவது பயணம் இதுவாகும். அண்மையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர், சிறிலங்கா அதிபர் நடத்தவுள்ள முதல் சந்திப்பு இதுவாகும்.



கனடாவில் நாடு கடந்த தமிழீழ அரசின் சார்பில் நடைபெற்ற தமிழீழ தேசிய துக்க நாள் நிகழ்வு Top News
[Monday, 2013-05-20 09:15:07]

"ஈழத் தமிழ் மக்களுக்கான தீர்வு சுதந்திர இறைமை உடைய தமிழீழ அரசே"
- தமிழீழ சுதந்திர சாசன முரசறைவில் பிரதமர் உருத்திரகுமாரன் வலியுறுத்தினார்.

"தமிழீழ மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கி அமைய விருக்கும் தமிழீழ அரசு ஜனநாயக விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும். சுதந்திர இறைமை உடைய அரசே தமிழ் மக்களுக்கு அவசியம். மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளுக்கு சட்டமியற்றி, அதனை அமுல்படுத்தும் உரிமை இருக்கும். சட்டத்தின்முன் தமிழீழ மக்கள் அனைவருமே சரிசமமாக நடாத்தப்படுவார்கள். தமிழீழ அரசாங்கம் மதசார்பற்றதாக இருக்கும். தமிழ், முஸ்லீம் மக்களது தனித்துவம் பேணப்படும்.



கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையில் இம்மாத இறுதிக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம்: - சிவாஜிலிங்கம்
[Monday, 2013-05-20 09:12:26]

தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிக்களுக்கிடையில் இந்த மாத இறுதிக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும். இதற்கான முன்னேற்பாடுகள் இடம் பெற்று வருகின்றன. இதற்கான பொறுப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று ரெலோவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.



கனடாவின் நகர்வுகள் குறித்து உன்னிப்பாக கண்காணிக்கப்படும் என்கிறது இலங்கை அரசு!
[Monday, 2013-05-20 09:11:55]

கனடாவின் நகர்வுகள் தொடர்பில் உன்னிப்பாக கண்காணிக்கப்படும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை தடுத்து நிறுத்தும் நோக்கில் கனடா நடவடிக்கைகளை மேற்கொள்கின்றதா என்பது குறித்து கவனிக்கப்பட உள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகள் நடத்தப்படுவது குறித்து கனடாவும் பஹாமாஸூம் அண்மையில் நடாத்திய பேச்சுவார்த்தைகள் குறித்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. நாட்டின் உண்மையான நிலைமைகள் குறித்து அந்தந்த நாடுகளுக்கு தெளிவுபடுத்துமாறு வெளிநாடுகளுக்கான இலங்கைத் தூதுரக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.



அரசின் யுத்த வெற்றிவிழா ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் இரத்தக் கண்ணீரால் எழுதப்பட்ட ஒரு துக்க தினம். - ஜனா
[Monday, 2013-05-20 09:06:05]

யுத்த வெற்றிவிழா இலங்கை அரசைப் பொறுத்தவரை கொண்டாட்ட நிகழ்வாக இருக்கும். ஆனால் ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் இரத்தக் கண்ணீரால் எழுத்தப்பட்ட ஒரு துக்க தினம் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவிக்கிறார். யுத்த வெற்றிக் கொண்டாட்டம் நடைபெறுவது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.



இலங்கை நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து நோர்வே அரசு அதிர்ச்சி!
[Monday, 2013-05-20 08:52:13]

இலங்கை நீதிமன்றின் தீர்ப்புகள் தமக்கு அதிர்ச்சியளிப்பதாக நோர்வே அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கைக்கான நோர்வே தூதரக அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர முடியும் என கொழும்பு நீதிமன்றம் அண்மையில் அறிவித்திருந்தது. கொழும்பு மேலதிக நீதவான் அமாலி ரணவீர இந்த உத்தரவினை பிறப்பித்திருந்தார். முன்னணி தன்னார்வ தொண்டு நிறுவனமான சகவாழ்வு மன்றத்தின் தலைவர் குமார் ரூபசிங்கவினால் நோர்வே தூதரக அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. உறுதிமொழி அளிக்கப்பட்டதனைப் போன்று நிதி உதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நோர்வேயின் முன்னாள் தூதுவர் ஹில்டே ஹரால்ஸ்டட் மற்றும் இரண்டு அதிகாரிகள் 98.5 மில்லியன் ரூபாவினை வழங்கத் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.



பௌத்த பிக்குகள் பொறுமையுடனும், புத்திசாலித்தனமாகவும் செயற்பட வேண்டும் - பிரதமர்
[Monday, 2013-05-20 08:39:20]

பௌத்த பிக்குகள் மிகவும் பொறுமையுடன் செயற்பட வேண்டுமென பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார். சிலர் வேற்று மதங்களுடன் மோதல்களை ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர். இதனால் நாட்டின் பெரும்பான்மை இனத்திற்கு அதிக அழிவு ஏற்படும். இதனை பௌத்த மாநாயக்கத் தேரர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பௌத்த மதத் தலைவர்கள் பொறுமையுடனும், புத்திசாலித்தனமாகவும் செயற்பட வேண்டும். மக்களின் மனதுகளை வென்றெடுக்கக் கூடிய மதத் தலைவர்கள் இல்லையென்றால், எத்தனை பெரிய விஹாரைகள் அமைத்தாலும் அதில் பயன் கிடையாது என பிரதமர் தெரிவித்துள்ளார். களனியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


TamilsGuid-191012-2013
TDE_Computers2011
INNSYS-20120930
NIRO-DANCE-100213
Ramans2011
Canada Kanthasamy Kovil
RoyaShades-l2011(04-12-11)
Suresh-remax-2013-01-01
Mahesan supramaniyam 031109
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com