Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 22, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
இந்தியாவைத் தாக்க இலங்கையில் பாரிய சதித்திட்டம்! - கைதான ஐஎஸ்ஐ உளவாளி பரபரப்பு வாக்குமூலம்
[Wednesday, 2012-09-19 08:27:24]
News Service

மும்பையை தீவிரவாதிகள் தாக்கியதுபோல் தென்னிந்தியாவை தாக்க சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக திருச்சியில் பிடிபட்ட ஐஎஸ்ஐ உளவாளி தமீம் அன்சாரி க்யூ போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

  

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஆசாத் நகரைச் சேர்ந்தவர் தமீம் அன்சாரி (35). கடந்த சில வருடங்களாக தஞ்சை தாஜ் ரெஸிடென்ஸி பகுதியிலுள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்து, இலங்கைக்கு காய்கறிகளை அனுப்பி வைக்கும் தொழில் செய்து வந்தார். ரகசிய தகவலின் பேரில், க்யூ பிரிவு போலீசார் கடந்த 6 மாதத்திற்கு மேலாக தமீம் அன்சாரியை கண்காணித்து வந்தனர்.

நேற்று முன்தினம் திருச்சியிலிருந்து விமானம் மூலம் இலங்கை செல்ல இருந்த தமீம் அன்சாரியை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் சில சிடிக்களும், பென் ட்ரைவ்களும் இருந்தன. அதுபற்றி விசாரித்தபோது, விரைவில் சினிமா தயாரிக்க உள்ளதாகவும், அதற்கான சூட்டிங் நடத்துவதற்கு இடங்களை (லொகேஷன்) தேர்வு செய்து வைத்திருப்பதாகவும் தமீம் அன்சாரி கூறினார்.

அவற்றை ஆய்வு செய்ததில் தென்னிந்தியாவில் உள்ள இந்திய ராணுவ அலுவலகங்கள் குறித்த விபரங்களும், ஊட்டி குன்னூரிலுள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி மையம், விசாகப்பட்டினம் கடற்படை தளம், நாகப்பட்டினம் மற்றும் மல்லிப்பட்டினம் துறைமுகம், தஞ்சை விமானப்படை தளம் ஆகியவற்றின் வீடியோ காட்சிகளும், வரைபடங்களும் பதிவு செய்யப்பட்டு இருந்தன. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அவரை ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்பிற்கும் தமீம் அன்சாரிக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் தமீம் அன்சாரியை க்யூ பிரிவு போலீசார் திருச்சி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். தமீம் அன்சாரியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்துள்ள தகவல்கள்:

வியாபாரம் தொடர்பாக இலங்கைக்கு செல்லும்போது, அங்கு பாகிஸ்தானை சேர்ந்த சிலருடன் தமீம் அன்சாரிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் தென்னிந்தியாவில் உள்ள ராணுவ மையங்களின் வீடியோ காட்சிகளை சேகரித்து தந்தால், லட்சக்கணக்கில் பணம் தருவதாக கூறியுள்ளனர். அதற்கு தமீம் அன்சாரி சம்தித்ததால், அவரை கொழும் பில் உள்ள ஐஎஸ்ஐ இந்திய பொறுப்பாளரான பாஸ் (எ) அமீரிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.

அவர்கள் முதற்கட்டமாக ஒரு ரூபா லட்சம் வரை கொடுத்துள்ளதாக தெரிகிறது. வேலையை முடித்து கொடுத்தால் 10 லட்சம் ரூபா தருவதாக உறுதியளித்துள்ளனர். அதன்பின் தமீம் அன்சாரி இந்தியா வந்து, கடந்த சில மாதங்களாக தென்னிந்தியாவில் இந்திய ராணுவ மையங்கள் அமைந்துள்ள அனைத்து இடங்களுக்கும் சென்று வந்துள்ளார். அந்த ஊர்களில் நண்பர்கள் மூலமாக சிலரை பிடித்து, விரைவில் சினிமா எடுக்க உள்ளதாகவும், அதற்கான லொக்கேஷனுக்காக சில இடங்களின் வீடியோ தேவைப்படுவதாக கூறியுள்ளார். மேலும், வீடியோ தரும் நபர்களை யும், வீடியோ எடுக்க உதவி செய்வோரையும் சினிமாவில் நடிக்க வைப்பதாகவும் ஆசை காட்டியுள்ளார்.

இதை நம்பி பலர் வீடியோக்களை கொடுத்துள்ளனர். மேலும் ராணுவ மையங்கள் சார்பாக நடத்தப்பட்ட சாகச போட்டிகளில் பங்கேற்ற விமானங்கள், அவற்றின் திறன், கையாளும் துப்பாக்கிகளின் வகைகள், ஒவ்வொரு மையத்திலும் உள்ள ராணுவத்தினரின் எண்ணிக்கை போன்றவற்றையும் சேகரித்துள்ளார். இந்த தகவல்களை இலங்கையிலுள்ள ஐஎஸ்ஐ அதிகாரிகளிடம் கொடுக்க முயற்சித்தபோது, தமீம் அன்சாரி சிக்கிக் கொண் டார். இவருக்கு உதவி செய்துள்ளதாக 12 பேரை கண்டறிந்துள்ள போலீசார் இவர்களில் 5 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்ந்து தஞ்சையிலுள்ள தமீம் அன்சாரியின் வீடு மற்றும் அவருடன் நெருங்கி பழகியவர்களின் வீடுகளிலும் நேற்று திடீர் சோதனை நடத்தப்பட்டது. தமீம் அன்சாரியை ஒரு வாரம் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யவும் க்யூ பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய சுபேர், ஷாஜி உள்ளிட்டவர்கள் இலங்கையில் உள்ளதால் அவர்களிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் விரைவில் கொழும்பு செல்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமீம் அன்சாரிக்கு இலங்கையை சேர்ந்த ஹாஜி என்ற சிராஜ் அலிதான் முதன் முதலாக அறிமுகம் ஆகி உள்ளார். இவர்தான் பாகிஸ்தானுக்கு ஆதரவாக தென்னிந்தியாவில் உளவு பார்க்கும் வேலைக்கு ஆள் பிடிக்கும் ஏஜென்ட் ஆவார். இவரது வலையில் சிக்கிய தமீம் அன்சாரிக்கு தமிழகம், ஆந்திர மாநில உளவுப்பணி அசைன்மென்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக அவர் தமிழகத்தின் முக்கிய பகுதிகளுக்கும், ஆந்திர மாநில முக்கிய நகரங்களுக்கும் சென்று தகவல்களை திரட்டி வந்து ஹாஜி மூலம் பாகிஸ்தானுக்கு அனுப்பி வந்து உள்ளார்.

மும்பை சம்பவம் போல தென்னிந்தியாவிலும் ஒரு ஆபரேஷன் நடத்த திட்டமிட்டு இந்த பணிகளை தொடங்கி உள்ளனர். இதற்காக ஹாஜி பல லட்சங்களை தமீம் அன்சாரிக்கு வழங்கியுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட தமீம் அன்சாரியிடம் இருந்து இலங்கையில் உள்ள சம்பத் வங்கியின் எடிஎம் கார்டு ஒன்றினையும் க்யூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இலங்கையில் உள்ள வங்கியில் தமீம் அன்சாரிக்கு அக்கவுன்ட் ஆரம்பித்து கொடுத்து, சர்வதேச அளவில் பயன்படுத்தும் வசதி கொண்ட இந்த ஏடிஎம் கார்டினையும் ஐஎஸ்ஐ அதிகாரிகள் வாங்கிக்கொடுத்துள்ளனர். இதன் மூலம் அவர் தமிழகத்திலும் இலங்கையிலும் பணம் எடுத்துள்ளார். இந்த வங்கி கணக்கு குறித்தும் விசாரணை நடத்த க்யூ பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

தமீம் அன்சாரி போல மேலும் பலரை அவர் தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு அனுப்பியிருக்கலாம் என க்யூ பிரிவு போலீசார் சந்தேகிக்கின்றனர். குறிப்பாக தென்னிந்தியாவில் நாசவேலை செய்வதற்காகவே ஐஎஸ்ஐ இலங்கையில் ஒரு அலுவலகத்தை திறந்து உள்ளது. அந்த அலுவலகத்தில் சுபேர், ஷாஜி என்ற இரு பாகிஸ்தான் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் மீதும் க்யூ பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இந்தியாவில் நாசவேலை செய்ய இலங்கையில் மிகப்பெரிய சதி நடந்து உள்ளது மத்திய உளவுத்துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த டெல்லியில் இருந்து பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஓரிரு நாளில் திருச்சி வந்து, மத்திய சிறையில் உள்ள தமீம் அன்சாரியிடம் விசாரணை நடத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

இந்திய நலனுக்கு எதிராக சீனா ஒருபோதும் செயற்படாது - பிரணாப்பிடம் வாக்குறுதி கொடுத்தார் சீனப்பிரதமர்!
[Wednesday, 2013-05-22 07:45:07]

இந்தியாவின் நலனுக்கு எதிராக சீன அரசு ஒருபோதும் செயல்படாது என்று சீன பிரதமர் லீ கெகியாங் கூறினார். இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள சீன பிரதமர் லீ கெகியாங்,செவ்வாய்க்கிழமை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசினார். அப்போது இத்தகைய உறுதிமொழியை அவர் அளித்தார். சீனாவின் மிகச் சிறந்த வர்த்தகக் கூட்டாளி நாடாகத்தான் இந்தியாவைப் பார்க்கிறோம். இத்தகைய சூழலில் இந்தியாவுக்கு எதிராக ஒருபோதும் செயல்பட மாட்டோம் என்று அவர் கூறினார். இந்தியாவுடனான இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்தவே சீனா விரும்புகிறது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.



சென்னையில் 7 பரிமாண தியேட்டர் - இந்தியாவிலேயே முதல்முறை!
[Wednesday, 2013-05-22 07:31:56]

சென்னை புரசைவாக்கம் அபிராமி மெகா மாலில், இந்தியாவிலேயே முதல்முறையாக 7டி (7 பரிமாண) தியேட்டர் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இசையமைப்பாளர் தேவா திறந்து வைத்தார். தியேட்டர் குறித்து அதன் உரிமையாளர் அபிராமி ராமநாதன் நிருபர்களிடம் கூறியதாவது: முதல் பரிமாணம் என்பது, சிறந்த முப்பரிமாணத்தில் படம் பார்ப்பது. 2வது, அற்புதமான அதிரும் ஒலி கொண்டது. 3வது, உணர்வது. 4வது, நறுமணம். 5வது, காற்று மற்றும் மின்னல். 6வது, மழை. 7வது, பனிப்பொழிவு. இந்த 7டி தியேட்டருக்கான உபகரணங்கள் மற்றும் 7டி படங்கள் இஸ்ரேல் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.



இணையத் தொலைத்தொடர்பு சேவையை கட்டுப்படுத்த 128 ஆண்டுகால சட்டத்தைத் திருத்துகிறது இந்தியா!
[Wednesday, 2013-05-22 07:27:31]

இணையதள தொலைதொடர்பு சேவையை, பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகள் தவறாக பயன்படுத்துவதை தடுக்க, 128 ஆண்டு பழமை வாய்ந்த, "இந்திய டெலிகிராப்' சட்டத்தில், திருத்தம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில், இணையதள தொலைதொடர்பு சேவை, முக்கிய இடத்தை பெறுகிறது. இந்தச்சேவையை, பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகள், சர்வசாதாரணமாக பயன்படுத்தி, சதி வேலைகளில் ஈடுபடுகின்றனர் . இதைத் தடுக்கும் வகையில், 128 ஆண்டுகளாக அமலில் உள்ள, இந்திய டெலிகிராப் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.



அரசியலில் குதிக்கிறார் பிரபல பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா!
[Wednesday, 2013-05-22 07:22:33]

பிரபல பாலிவுட் நடிகை, பிரீத்தி ஜிந்தா. ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியின் உரிமையாளராகவும் இருக்கிறார். சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: சமீபகாலமாக நாட்டில் நடக்கும் நிகழ்வுகள் என்னை மிகவும் கவலை அடைய செய்துள்ளன. எனவே, ஒரு நல்ல மாற்றம் ஏற்பட வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று கருதுகிறேன். இதனால் அரசியலில் ஈடுபடுவது பற்றி சமீபகாலமாக யோசித்து வருகிறேன். அரசியிலில் ஈடுபட்டால், நான் நேர்மையான அரசியல்வாதியாக இருப்பேன். நிச்சயம் ஊழலில் ஈடுபட மாட்டேன். அரசியலில் ஈடுபட்டால் கவர்ச்சிகரமான அரசியல்வாதியாக இருப்பேன். நல்ல ஆடைகளுடனும், நல்ல கூந்தலுடனும் காட்சி அளிப்பேன். ஒரு நாள் மக்களை சந்தித்து எனக்கு வாக்களியுங்கள் என்று கேட்பேன். ஊழல் ஒழிந்தால் இந்தியா பிரகாசிக்கும். ஊழலால் ஏழை மக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். இது எனக்கு வேதனையாக இருக்கிறது என்றார்.



டோனி மனைவியுடன் அமர்ந்து கிரிக்கெட் பார்த்த தாராசிங்கின் மகன் சூதாட்டத்தில் சிக்கியதால் பரபரப்பு!
[Wednesday, 2013-05-22 07:17:24]

ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் தொடர்பாக பிரபல நடிகர் தாராசிங்கின் மகன் வின்டு தாரா சிங் நேற்று கைது செய்யப்பட்டார். அவரை 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் தொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா, அங்கீத் சவான் மற்றும் புக்கிகள் (தரகர்கள்) கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் நடத்தப்படும் தீவிர விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வரிசையாக வெளியாகி கொண்டிருக்கின்றன. நாடு முழுவதும் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த சூதாட்டத்தில் தொடர்புடைய நடிகர் வின்டு தாரா சிங்கை மும்பையில் போலீசார் நேற்று கைது செய்தனர்.



இந்தியப் பொருட்களுக்கு சீன சந்தையைத் திறந்துவிட சீனப்பிரதமர் இணக்கம்!
[Tuesday, 2013-05-21 18:27:16]

சீன சந்தையில் இந்திய பொருட்களுக்கு அனுமதியளிக்கப்படும் என உறுதியளித்துள்ள சீனப்பிரதமர் லீ கெகியாங், இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக பிரச்னைகள் தீர்க்கப்படும் என உறுதியளித்துள்ளார். மூன்று நாள் பயணமாக டில்லி வந்துள்ள சீனப்பிரதமர் லீ கெகியாங், நேற்று முன்தினம் இரவு பிரதமர் மன்மோகன் சிங்கை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசினர். பின்னர் அவருக்கு பிரதமர் விருந்தளித்தார். இன்று டில்லியில் நடந்த தொழிலதிபர்கள் மாநாட்டில் சீனப்பிரதமர் லீ கெகியாங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, வர்த்தகம் தொடர்பாக இந்தியா தெரிவித்துள்ள கவலைகள் தீர்க்கப்படும். இந்திய பொருட்களை, சீன சந்தைகள் பயன்படுத்த மேலும் பல வசதிகள் செய்து தரப்படும்.



சீனப் பிரதமரைக் கவர்ந்த 3 இடியட்ஸ் இந்திப்படம்!
[Tuesday, 2013-05-21 18:16:34]

சீனப் பிரதமர் லீ கெகியாங் 3 நாள் பயணமாக நேற்று முன்தினம் டெல்லி வந்தார். நேற்று அவர் பிரதமர் மன்மோகன்சிங்கை 2-வது முறையாக சந்தித்துப் பேசினார். அப்போது இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பிரச்சினைப் பற்றி பேசினார்கள். இரு நாடுகள் இடையே வர்த்தகம், பொருளாதார ஒத்துழைப்பு, அணுமின் உற்பத்தி திட்டங்கள், ராணுவ ஒத்துழைப்பு குறித்து பேசினார்கள். பின்னர் சீனப் பிரதமர் இந்திய குழுவினருடன் இயல்பான முறையில் பேசினார். அப்போது சீனாவில் இந்திப் படங்களுக்கு வரவேற்பு இருப்பதாக தெரிவித்தார்.



வரும் ஜுனில் இந்தியாவுக்கு கிடைக்கிறது புதிய இன்டர்நெட் முகவரி!
[Tuesday, 2013-05-21 18:07:06]

வரும் ஜூன் மாதத்தில் இந்தியாவுக்கு புதிய இன்டர்நெட் முகவரி கிடைக்க உள்ளது. இந்தியாவில் டொமைன் நேம்களின் மிகப் பெரிய வினியோகஸ்தரான டைரக்டி குழுமம் டாட் இன் டாட் நெட் (.IN.NET) என்ற புதிய இன்டர்நெட் முகவரியை அறிமுகப் படுத்தியுள்ளது. அதாவது முகேஷ்அன்ட்சன்ஸ்.இன் அல்லது .காம் என்று பதிவு செய்வதற்கு பதிலாக முகேஷ்.இன்.நெட் என்று பதிவு செய்யலாம். உலக அளவில் இன்டர்நெட்டை அதிகமாகப் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் மட்டும் சுமார் 3 மில்லியன் டொமைன் நேம்கள் மற்றும் இன்டர்நெட் முகவரிகள் பயன்பாட்டில் உள்ளன. டாட் இன் டாட் நெட் முகவரியை முன்பதிவு செய்ய விரும்புவர்கள் வரும் ஜூன் மாதம் 18ம் தேதி முதல் செய்யலாம்.



யாசின் மாலிக்கை நாம் தமிழர் கூட்டத்துக்கு அழைத்து வந்ததில் என்ன தவறு? - சீமான் ஆவேசக் கேள்வி!
[Tuesday, 2013-05-21 17:50:01]

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக்கை நாம் தமிழர் கூட்டத்துக்கு அழைத்து வந்ததில் என்ன தவறு? பிரதமர்களும் அரசு அதிகாரிகளும் அழைத்துப் பேச்சு நடத்தும் யாசின் மாலிக் தமிழகத்துக்கு வரக்கூடாதா.. இது என்ன தலைக்கு ஒரு சீயக்காய், தாடிக்கு ஒரு சீயக்காயா? என்று ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார் சீமான். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடலூர் நகரில் நாம் தமிழர் கட்சி நடத்திய உள்அரங்குக் கூட்டத்தில் ஜம்மு - காஷ்மீர் விடுதலை முன்னணியில் தலைவர் யாசின் மாலிக் கலந்துகொண்டதற்கு காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகள் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளன. காஷ்மீர் மக்களால் பெரிதும் மதிக்கப்படும் தலைவரான யாசின் மாலிக்கின் ஜம்மு காஷ்மீர் விடுதலை இயக்கம் ஒரு தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல.



சென்னையில் தாய், மனைவி, மகளைக் கொன்று விட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த இலங்கைத் தமிழர்!
[Tuesday, 2013-05-21 17:27:19]

சென்னையில் டிராவல்ஸ் நிறுவனம் வைத்திருந்த இலங்கை தமிழர் தனது தாய், மனைவி, மகளை கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை ஆதம்பாக்கம் தில்லைகங்கா நகர் 42வது தெருவைச் சேர்ந்தவர் இலங்கை தமிழர் சுந்தரேசன்(52). இலங்கையின் உள்நாட்டு போர் காரணமாக அவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் வந்து குடியேறினார். அவர் தன்னுடன் தனது தாயையும் அழைத்து வந்தார். ஆதம்பாக்கத்தில் அவர் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றை வைத்து நடத்தி வந்தார். அவரது மனைவி சித்ரா(45). அவர்களுக்கு சமீரா(12) என்ற மகள் இருந்தார். அவர் நங்கநல்லூரில் உள்ள பள்ளி ஒன்றில் 8ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் லாபத்தில் சென்ற டிராவல்ஸ் நிறுவனம் கடந்த சில மாதங்களாக நஷ்டத்தில் ஓடியது.



23 ஆயிரம் உடி உயரத்தில் பறக்கக் கூடிய ஹெலிகளை ரஷ்யாவுடன் இணைந்து தயாரிக்கிறது இந்தியா!
[Tuesday, 2013-05-21 08:00:59]

ரஷ்யா நிறுவனத்துடன் இணைந்து, பெங்களூரில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் 23 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் ஹெலிகாப்டர்களை தயாரிக்க உள்ளது என, பெங்களூரு இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவன மேலாண்மை இயக்குனர் சவுந்திரராஜன் கூறினார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ரஷ்யா நிறுவனம், பெங்களூரில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துடன் இணைந்து, ஹெலிகாப்டர்களை தயாரிக்க உள்ளது. ஹெலிகாப்டர் தயாரிப்பு பணிக்கு, இந்தியாவில் இருந்து 50 பொறியாளர்கள் ரஷ்யா செல்ல உள்ளனர். பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்ட, வி.ஐ.பிக்கள் பயன்படுத்தும் வகையில், சிறப்பு வசதிகள் கொண்ட ஹெலிகாப்டர்கள், தயாரிக்கப்பட உள்ளன.



திருப்பதி ஏழுமலையானுக்கு உள்ள அசையா சொத்துகளின் மதிப்பு 1 இலட்சம் கோடி ரூபா!
[Tuesday, 2013-05-21 07:36:52]

திருப்பதி ஏழுமலையானின் அசையா சொத்தின் மதிப்பு 1 லட்சம் கோடி ரூபாய் என, திருப்பதி தேவஸ்தான நிதி நிபுணர்கள் குழு கணக்கிட்டுள்ளது. திருப்பதி கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர். இதை நெறிமுறைப்படுத்த திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி எல்.வி.சுப்ரமணியன், சில நடைமுறைகளை மேற்கொண்டு வருகிறார். 2009ம் ஆண்டு நிலவரப்படி, வருவாய்ப் பிரிவு மேலதிகாரி, ராமச்சந்திர ரெட்டி, நாடு முழுவதும் மற்றும் பிற நாடுகளில் திருப்பதி கோவிலுக்கு சொந்தமாக உள்ள நிலங்கள் குறித்து, ஒரு ஆண்டு காலம் கணக்கிட்டு, 4,143 ஏக்கர் உள்ளதாக பதிவு செய்தார். இந்த அசையா சொத்துகளின் அப்போதையை மதிப்பு, 34.4 ஆயிரம் கோடி ரூபாய். இவற்றில் ஆந்திராவில் உள்ள அசையா சொத்து மதிப்பு, 33.1 ஆயிரம் கோடி ரூபாய்; அண்டை மாநிலங்களில், உள்ள அசையா சொத்து மதிப்பு, 298.59 கோடி ரூபாய்.



இந்திராகாந்தியின் ரே பரேலி தொகுதியில் போட்டியிடுகிறார் பேர்த்தி பிரியங்கா!
[Tuesday, 2013-05-21 07:28:05]

மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம், ரே பரேலி தொகுதியில் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா வதேரா போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திரா காந்தி பிரதிநிதித்துவம் செய்த ரே பரேலி தொகுதி அவரது குடும்பத்தின் விருப்பத் தொகுதியாக விளங்குகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் அங்கு காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது. அதனால், ரே பரேலி மக்களவைத் தொகுதி உறுப்பினரும் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி, அவரது மகனும் காங்கிரஸ் துணைத் தலைவருமான ராகுல் காந்தி அதிருப்தி அடைந்தனர்.



பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு எட்டு மணிநேரம் இதய அறுவைச் சிகிச்சை!
[Tuesday, 2013-05-21 07:19:10]

பாமக நிறுவனர் ராமதாஸ், 8 மணிநேர இதய அறுவைச் சிகிச்சைக்கு பிறகு வார்டுக்கு கொண்டுவரப்பட்டார்.கடந்த ஏப்ரல் 30ம் தேதி கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட பாமக நிறுவனர் ராமதாஸ் மே 11ம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.அன்று பிற்பகல் தைலாபுரம் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். இரவு 7 மணியளவில் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடந்த 14ம் தேதி ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவருக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்ய மருத்துவர்களால் முடிவு செய்யப்பட்டது.நேற்று காலை 7 மணியளவில் ராமதாஸ் அறுவை சிகிச்சை அரங்குக்கு அழைத்து செல்லப்பட்டார்.



ஐபிஎல் சூதாட்டக் கும்பலின் தலைவர் சரண் - கைதான கிரிக்கெட் வீரர் வீட்டில் 20 இலட்சம் ரூபா சிக்கியது!
[Tuesday, 2013-05-21 07:08:58]

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸாரால் தேடப்பட்டு வந்த சென்னை சூதாட்ட கும்பல் தலைவர் பிரசாந்த் நேற்று சரணடைந்தார். சென்னை உள்ளிட்ட பல இடங்களில் ஐ.பி.எல். சூதாட்டம் நடைபெறுவதாக சி.பி.சி.ஐ.டி. போலீஸாருக்கு கடந்த வியாழக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் சென்னையில் தீவிரமாக சோதனை நடத்தி 6 பேரை கைது செய்தனர். ஆனால் சென்னையில் சூதாட்ட கும்பலின் தலைவராக செயல்பட்ட அயனாவரம் மேடவாக்கம் டேங்க் சாலை பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் தலைமறைவாகி விட்டார். இதில் பிரசாந்த் கார் சென்னை விமான நிலையத்தில் நின்றதால், அவர் வெளிநாட்டுக்கு தப்பியோடி இருக்கலாம் என போலீஸாரால் சந்தேகிக்கப்பட்டது.



திரிபுராவில் நாளிதழ் அலுவலகத்தில் மர்மநபர்கள் வெறியாட்டம் - மூன்று ஊழியர்கள் கத்தியால் குத்திக்கொலை!
[Monday, 2013-05-20 17:46:19]

திரிபுரா மாநிலத்தில் உள்ள தினசரி நாளிதழ் அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் பட்டப்பகலில் 3 பேரை வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரிபுராவில் உள்ள அகர்தலா நகரில் தைனிக் ஞானதூத் என்ற நாளிதழ் அலுவலகம் உள்ளது.நேற்று மாலை 3 மணியளவில் இந்த அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள், தரை தளத்தில் பணியிலிருந்த புரூஃப் ரீடர் மற்றும் டிரைவர் ஆகியோரை சரமாரியாக கத்தியால் குத்தினர். இச்சம்பவத்தை பார்த்த நிருபர் ஒருவர் மயங்கி விழுந்ததால் அவரை ஒன்றும் செய்யாமல் முதல் மாடிக்கு சென்றனர்.



சீமானை 10 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும் - மத்திய அமைச்சர் நாராயணசாமி ஆவேசம்!
[Monday, 2013-05-20 17:41:34]

புதுவை மக்கள் காங்கிரஸ் கட்சி மீதும், ராஜீவ்காந்தி மீது மதிப்பும், மரியாதையும் கொண்டவர்கள். ராஜிவ் காந்தி 5 ஆண்டுகள் பிரதமராக பதவியில் இருந்த போது இந்தியாவை வல்லசராக்க அரும்பாடுபட்டார். ராஜிவ்காந்தி தீவிரவாதத்தை ஒடுக்குவதில் தீர்மானமாக இருந்தார். அவருடைய காலத்தில் மிசோரம், அசாம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தீவிரவாதம் ஒடுக்கப்பட்டது. இலங்கையில் தீவிரவாதத்தை ஒடுக்க அமைதிப்படையை அனுப்பி வைத்தார். போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு கப்பலில் உணவு பொருட்களை அனுப்பி வைத்தார்.அதனை பெற இலங்கை ராணுவம் முன்வராதபோது விமானம் மூலம் உணவு பொருட்களை தமிழர் பகுதியில் போடச் செய்தார். அவரை விடுதலை புலிகள் இயக்கத்தால் இழந்தோம்.



சீமானைக் கைது செய்யக் கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார்!
[Monday, 2013-05-20 17:34:35]

இந்து மக்கள் கட்சியின் சென்னை மண்டல தலைவர் முத்து ரமேஷ்குமார் டி.ஜி.பி. அலுவலகத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது-கடந்த 18-ந்தேதியன்று கடலூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் இந்தியாவில் பிரிவினையை தூண்டும் விதமாக காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் பேசி உள்ளார். தீவிரவாதி அப்சல்குரு தூக்கிலிடப்பட்டதை கண்டித்து ஹபீஸ் சையது என்ற தீவிரவாதியுடன் இணைந்து இஸ்லாமாபாத்தில் போராட்டம் நடத்தியவர்தான் இந்த யாசின் மாலிக்.இவ்வாறு இந்தியாவுக்கு எதிராக செயல்படும் தீவிரவாதிகளுடன் கைகோர்த்துள்ள அவர் தமிழகத்தில் பிரிவினையை தூண்டும் வகையில் பேசி உள்ளார்.



அதிருப்தியில் ஜெயலலிதா - அமைச்சரவை மாற்றம் எந்தநேரமும் நிகழலாம் என்பதால் கலக்கத்தில் அமைச்சர்கள்!
[Monday, 2013-05-20 17:27:54]

தமிழக அமைச்சர்கள் சிலரின் நடவடிக்கையில் முதல்வர் ஜெயலலிதா அதிருப்தியில் உள்ளதால், விரைவில் அமைச்சரவை மாற்றம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அமைச்சர்கள் சிலரின் செயல்பாடுகள் முதல்வருக்கு திருப்தியளிக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும், விரைவில் லோக்சபா தேர்தல் வருவதால், அதை எதிர்கொள்ளும் வகையில் அமைச்சரவை மாற்றியமைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் பதவியிலிருந்து கல்தா கொடுக்கப்பட்டவர்களில் சிலர் மீண்டும் அமைச்சர்களாக்கப்படலாம் என்பதால், அ.தி.மு.க.வில் பரபரப்பு நிலவுகிறது.



மும்பை ஹோட்டலில் பெண்களுடன் தனியாக இருந்ததை படம்பிடித்து ஸ்ரீசாந்தை வளைத்துப் போட்ட தரகர்கள்!
[Monday, 2013-05-20 17:08:49]

மும்பை ஹோட்டலில் பெண்களுடன் இருந்ததை ரகசியமாக படம் எடுத்து, அதன் மூலம் ஸ்ரீசாந்த்தை சூதாட்டத்தில் ஈடுபடும்படி மிரட்ட தரகர்கள் திட்டமிட்டு இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.கிரிக்கெட் சூதாட்ட புகாரில் கைதாகியுள்ள வீரர்கள் மற்றும் தரகர்களிடம் டெல்லி தனிப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.இதில் இந்த ஆண்டு தொடக்கத்தில் 6 முறை தரகர்கள் பெண்களை ஸ்ரீசாந்த் மற்றும் அஜித் சண்டிலா ஆகியோருக்கு ஏற்பாடு செய்து கொடுத்த அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது. அதுபோல், ஸ்ரீசாந்த் பெண்களுடன் இருப்பதை ரகசியமாக வீடியோ படம் எடுத்து அதனைக் காட்டி மிரட்டி அவரை சூதாட்டத்தில் ஈடுபடும்படி கட்டாயப்படுத்தவும் தரகர்கள் திட்டமிட்டு இருந்தது அம்பலமாகியுள்ளது.


NIRO-DANCE-100213
Ramans2011
Mahesan supramaniyam 031109
TDE_Computers2011
INNSYS-20120930
Canada Kanthasamy Kovil
RoyaShades-l2011(04-12-11)
TamilsGuid-191012-2013
Suresh-remax-2013-01-01
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com