Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 19, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோருவது ஜனநாயகத்திற்கு விடுக்கபபட்ட பாரிய அச்சுறுத்தல்: - கி.துரைராஜசிங்கம்
[Sunday, 2012-09-16 21:56:20]
News Service

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தெரிவான தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் தெரிவான வேட்பாளர்களை அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோருவது ஜனநாயகத்திற்கு விடுக்கபபட்ட பாரிய அச்சுறுத்தல் என மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவான கி.துரைராஜசிங்கம் விசனம் தெரிவித்துள்ளது.

  

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பாதுகாப்புக் குறித்தும் தேர்தல் ஆணையாளருக்கு கடிதமொன்றையும் அனுப்பிவைத்துள்ளார்.

இம்மாவட்டத்தில் தெரிவான வேட்பாளர்கள் எதிர்நோக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் வெற்றிபெற்ற உறுப்பினர்களிடம் சிலர் வந்து வௌ;வேறு கருத்துக்களைக் கூறி கிழக்கு மாகாண சபையிலே அரசு அமைப்பதற்கு உதவி செய்ய வேண்டும் என்ற அடிப்படையிலே பேசியிருக்கிறார்கள்.

இவ்வாறான பேச்சு அவர்களை மிகவும் பீதியடையச் செய்துள்ளது. தங்களுடைய வெற்றி தொடர்பாக தங்களின் சந்தோசத்தில் ஈடுபட வேண்டிய ஆதரவாளர்கள் வாழ்த்துக் கூற வர வேண்டிய வெற்றி பெற்ற வேட்பாளர்கள் ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டிய சூழ்நிலையில் குறித்த நபர்களின் இத்தகைய செயற்பாடு வெற்றி பெற்ற வேட்பாளர்களை பீதியடையச் செய்துள்ளது.

தொலைபேசிகளில் அழைப்புகளில் கூட அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதன்காரணமாக வருகின்ற தொலைபேசி அழைப்புகளும் இவ்வாறான அழைப்புகளாக இருக்குமோ? என்ற சந்தேகம் அச்சம் காரணமாக அந்த தொலைபேசி அழைப்புகளை தொடாமல் இருக்கும் அளவிற்கு பயமுறுத்தப்பட்டிருக்கிறார்கள். மூளை சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள் வௌ;வேறு விதமாக அழுத்தங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்ய தூண்டப்படுகின்றோமோ? என்று அச்சுகின்ற சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

இது உண்மையிலே சந்தோசமாக இருந்து தங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி யோசிக்க வேண்டிய சந்தர்ப்பத்தில் எமது வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அச்சுறுத்தப்படுவது மிகப்பெரிய மனித உரிமை மீறல் மட்டுமல்ல மிகப்பெரிய ஜனநாயக விரோத செயல் ஆகும். இது ஜனநாயகத்தை வேறுரொரு திசைக்கு திருப்பிச் செல்கின்ற நடவடிக்கையாகவே அமைகிறது. ஒரு ஜனநாயகத்தை மதிக்கின்ற நாட்டிலே இத்தகைய நடவடிக்கை ஒரு வெட்கப்பட வேண்டிய நடவடிக்கையாகவுள்ளது.

இதன்காரணமாக எமது வெற்றி பெற்ற வேட்பாளர்கள் இவர்களுடைய தொந்தரவு தாங்க முடியாமல் தமது வீடுகளிலே தங்கிருக்க முடியாமல் வேறு இடங்களில் தங்கிருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலை ஜனநாயகத்திற்கு எதிராக விடுக்கப்பட்ட பாரிய சவாலாகும்.

இந்த நாட்டில் ஜனநாயகம் மீண்டுள்ளது ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் ஜனநாயகத்திற்கு உயிரூட்டுவோம் என்று கூறுபவர்கள் இப்படி நடந்துகொள்வது ஜனநாகத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

வந்தவர்கள் அரசுக்கு சார்பாக நீங்கள் செயற்படும் வகையில் உங்களுடைய நடவடிக்கைகளை அமைத்துக்கொள்ள வேண்டும் அதற்கு நாங்கள் தேவையான அளவிற்கு சன்மானங்கள் வழங்குவோம். நீங்கள் சந்தோசமாக இருக்கக் கூடிய வகையில் அந்த சன்மானங்கள் வழங்கப்படும். உங்களுக்கு உங்களுடைய பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருக்கு அவ்வாறான சந்தோசங்களை செய்து விடலாம் என்ற ரீதியல் அவர்களுக்குச் சொல்லி மக்கள் வழங்கிய ஆணையை புறந்தள்ளுவதற்குத் தூண்டுவதும் ஒரு தவறான வழிக்கு தள்ளிச் செல்வதும் ஒரு ஜனநாயக விரோத செயல் என்றே கருதவேண்டும்.

எங்களது வெற்றி தொடர்பான விடயம் இன்றும் வர்த்தமானியிலே அறிவிக்கப்படாத காரணத்தினால் அந்த விடயம் தற்போது தேர்தல் ஆணையாளருக்கு உட்பட்டது. இதன் காரணமாகவே இவர்களின் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து தேர்தல் ஆணையாருக்கு முறைப்பாடு செய்துள்ளேன். தேர்தல் ஆணையாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் சம்பவங்களை விபரித்து இவர்களுக்கெல்லாம் பாதுகாப்பு வழங்குமாறு குறிப்பிட்டிருக்கின்றேன். எங்களது ஆறு உறுப்பினர்களுடைய பெயரை நான் குறிப்பிட்டிருக்கின்றேன்.

அந்த கடிதத்திலே இனந்தெரியாத பலர் எங்களது வெற்றி பெற்ற நான்கு உறுப்பினர்களை சந்தித்து கிழக்கு மாகண சபையில் ஆட்சி அமைப்பது தொடர்பாக அரசுக்கு ஆதரவு வழங்கும் விதத்தில் தங்களோடு இணைந்து செயற்படும்படி இவர்களை தூண்டப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அவ்வாறு செய்யாதவிடத்து அதனால் சில பின்விளைவுகளை எதிர்நோக்க வேண்டும் என்ற ரீதியிலே அந்த உரையாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன.

இந்த சந்தர்பத்தில் எமது உறுப்பினர்களுக்கு தாங்கள் வேறு இடங்களுக்கு கடத்தப்படலாமே என்ற அச்சம் கூட எற்பட்டிருக்கிறது. அதைவிட உயிர் ஆபத்து ஏற்படலாமோ? என்றும் கூட அவர்கள் பயப்பட்டுள்ளார்கள்;. இந்த சந்தர்ப்பத்திலே அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டியது தேர்தல் ஆணையாளரின் கடமை என்பதனை அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளேன்.

இந்த விடயத்தில் தேர்தல் ஆணையாளர் துரிதமாக செயற்பட்டுள்ளார் எனது இந்த கோரிக்கையை பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்கு கொணடுவந்துள்ளதாகவும் அவர் இது தொடர்பான நடவடிக்கைகைள எடுப்பார். என்னையும் அவருக்கு இது தொடர்பான கடிதமொன்றை அனுப்பிவைக்குமாறு என தேர்தல் ஆணையாளர் எனக்கு அனுப்பிவைத்துள்ள பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்பிரகாரம் பொலிஸ் மா அதிபருக்கு இல்லாவிட்டாலும் மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பாதுகாப்பு முக்கியமானதென்றும் அவர்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு வழங்கவேண்டியதன் அவசியம் பற்றியும் கடிதமொன்றை தொலை நகல் மூலம் அனுப்பிவைத்துள்ளேன்.

அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ள நான்கு பேர் மடடுமல்ல தெரிவு செய்யப்பட்ட ஆறு பேரின் பாதுகாப்புக் குறித்தும் அதில் சுட்டிக்காட்டியுள்ளேன். இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா ஊடாக பிரதிப் பொலிஸ் மா அதிபரைத் தொர்பு கொண்ட போது பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தல் எதிர்பார்க்கப்படுவதாக பதிலளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை.

அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று எமது கட்சியிலிருந்து தெரிவான வேட்பாளர்களுக்கு இந்த அழுத்தத்தைக் கொடுப்பவர்கள் யார்? என்று தெளிவாக கூற முடியாவிட்டாலும் அவர்கள் அரசாங்கத்தினால் அனுப்பட்ட தரகர்கள் அல்லது முகவர்களாக இருக்க வேண்டும். காரணம் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குமாறு அவர்கள் கோருவதால் அரசாங்கத்தின் உயர் மட்டத்திலிருந்தே இவர்கள் வழிநடத்தப்பட்டிருக்க வேண்டும்" என்றார்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

படையினரின் பிரசன்னம் வட மாகாணசபைத் தேர்தலின்போது அதிகரிக்கும் - சுட்டிக்காட்டியது கபே!
[Sunday, 2013-05-19 15:02:46]

எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலின் போது படையினரின் பிரசன்னம் அதிகரிக்கும் என தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்கள் அச்சம் வெளியிட்டுள்ளன. தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வடக்கில் இராணுவத்தின் பிரசன்னம் உயர்வடையக் கூடிய சாத்தியம் அதிகரித்துள்ளதாக கபே என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது, தேர்தல் நடாத்தப்படுவதற்கு முன்னதாக கருத்துச் சுதந்திரம், ஊடக சுதந்திரம் மற்றும் சுதந்திரமாக நடமாடக் கூடிய உரிமைகள் முழுமையாக உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். சுதந்திரமாக சென்று பிரச்சாரங்களை மேற்கொள்வதில் தொடர்ந்தும் தடைகள் நீடிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அத்திவாரம் தமிழரசுக் கட்சியே - மாவை சேனாதிராஜா எம்.பி!
[Sunday, 2013-05-19 14:58:10]

'தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து அதன் அத்திவாரமாக தமிழரசுக்கட்சி திகழ்கிறது' என்று தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். நல்லூர் பிரதேச சபையின் நிதியில் அமைக்கப்பட்ட 'யாழ்ப்பாணம் வரவேற்கிறது' வளைவு திறப்பு விழா, இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறுகையில்,



யுத்த வெற்றிக் கொண்டாட்டத்தின்போது கடலில் மூழ்கிய கடற்படை வீரரின் சடலம் மீட்பு!
[Sunday, 2013-05-19 14:53:27]

யுத்த வெற்றி விழா கொண்டாடத்தின் போது காணாமற் போன கடற்படை வீரரது சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. இவரது சடலம் பம்பலப்பிட்டி கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். காலி முகத்திடல் கடற்பரப்பில் நேற்று (18) காலை இடம்பெற்ற யுத்த வெற்றிவிழாவின் போது குறித்த சிறிய ரக படகு மூழ்கியது. படகில் இருவர் பயணித்ததாகவும் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும் ஒருவர் தப்பித்துக் கொண்டதாகவும் கடற்படை தகவல்கள் தெரிவித்தன.



ஸ்ரீலங்கா அரசிற்கு எதிராக அணி திரட்டுகின்றார் அமைச்சர் டக்ளஸ்!
[Sunday, 2013-05-19 11:29:30]

13வது அரசியலமைப்பு திருத்த சட்டத்தை ஒழிக்கும் நடவடிக்கைக்கு எதிராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான குழுவொன்று ஒன்றிணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 13வது திருத்தத்திற்கு அமைய காணி, காவல்துறை அதிகாரங்கள் மாகாணசபைகளிடமே தொடர்ந்து இருப்பதையும், 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்தவும் இந்த அணி உருவாக்கப்பட்டுள்ளது. டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையிலான இந்த அணியில் ஆளும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 31 பேர் இடம்பெற்றுள்ளனர்.



ஸ்ரீலங்காவிற்கு எதிரான ஐ.நா தீர்மானத்தின் பின்னரான நிலைமைகள் குறித்து அமெரிக்கா கவனம்!
[Sunday, 2013-05-19 11:15:16]

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னரான நிலைமைகள் குறித்து அமெரிக்கா கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துமாறு கோரி இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்தத் தீர்மானத்தில் குறிப்பிட்பட்ட பரிந்துரைகளை அரசாங்கம் பின்பற்றுகின்றதா? இல்லையா? என்பது குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்ட எஸ்.கஜேந்திரன் உள்ளிட்ட 15 பேர் விடுதலை!
[Sunday, 2013-05-19 09:00:35]

கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உட்பட 15 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.பி.லக்சிறி விஜியசிங்க தெரிவித்தார். முள்ளிவாய்க்காலில் இறந்த தமிழ் உறவுகளை நினைவுகூரும் முகமாக மன்னார் பெரியகடை பொதுமண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட அஞ்சலி கூட்ட நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன் உள்ளிட்ட 9 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் கைது செய்யப்பட்டனர். இதன் போது செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் ஜோசப் பெணாண்டோவும் கைது செய்யப்பட்டார்.



இன்னொரு இனத்தை அழித்து விழா கொண்டாடுவதுதான் வெற்றி விழாவா?: முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் அரியநேந்திரன் Top News
[Sunday, 2013-05-19 08:32:44]

தமிழ் மக்களுக்கு சுதந்திரமான அரசியல் தீர்வு விடுதலை எப்போது கிடைக்கின்றதோ, அது வரையும் எமது பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுகளை நினைவு கூர்ந்து பிராத்தனை செய்யும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மட்டக்களப்பிலுள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு செல்லுவது போல அடிக்கடி 4ம் மாடிக்கும் செல்கின்றனர். ஒரு மாதத்திற்கு இரண்டு தடவைகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு செல்வது போன்று மாதத்திற்கு ஒரு தடவையாவது 4ம் மாடிக்கு செல்ல வேண்டியுள்ளது.



நோர்வேயில் எழுச்சியுற நடைபெற்ற இன அழிப்பு நாள் நினைவேந்தல் நிகழ்வு Top News
[Sunday, 2013-05-19 07:45:25]

18.05.2013 மாலை 1700 மணிக்கு இன அழிப்பு நாள் நினைவேந்தல் பேரணி ஒஸ்லோ மத்திய தொடரூந்து நிலைத்தின் அருகாமையிலுள்ள சதுக்கத்தில் இருந்து ஆரம்பமாகி நோர்வே பாராளமன்றத்தை சென்றடைந்தது. பாராளமன்றத்தின் முற்பகுதியில் முள்ளிவாய்கால் பெரும் நெருப்பில் கொண்ட கொள்கைக்காக பெரும் புயலை எதிர்கொண்டு வீரகளமாடிய வேங்கைகளுக்கும் அவர்களின் கேடயமாய் நின்று மானப்போர் புரிந்த மக்களுக்கும் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. ஈழத்தமிழ் அவையினர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பேரணியில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கரம்கோர்த்து தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.



நேற்றைய தினம் சுவிஸில் நடைபெற்ற மே-18 முள்ளிவாய்க்கால் செந்நெருப்புநாள் நிகழ்வு! Top News
[Sunday, 2013-05-19 07:38:28]

விடுதலைக்காகப் போராடிய தமிழினத்தை உலக நாடுகள் பலவற்றின் துணையோடு இனப்படுகொலை செய்த, இந்தக்காலத்தின் அதியுச்ச இனப்பேரழிப்பு நடந்த தமிழீழத்தில், இறுதிவரை மண்டியிடாது போராடிய மாவீரர்களுக்கும், மக்களுக்குமான நான்காம் ஆண்டு நினைவு எழுச்சி நிகழ்வான மே-18 முள்ளிவாய்க்கால் செந்நெருப்புநாள், நேற்று சூரிச் மாநிலத்தில் அமைந்துள்ள Helvetia Platz திடலில் நடைபெற்றது. இதில் சுவிஸ் வாழ் தமிழ்மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டிருந்தனர். சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற வணக்க நிகழ்வானது பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகி, சுவிஸ் மற்றும் தமிமீழத் தேசியக்கொடிகள் ஏற்றப்பட்டதனைத் தொடர்ந்து, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன், மலரஞ்சலி செலுத்தப்பட்டது.



'புலிகளின் தலைவர் பிரபாகரன் எரித்திரியாவில் இருப்பது பேய் கதை' - இராணுவப்பேச்சாளர் ருவான்
[Sunday, 2013-05-19 07:25:25]

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற யுத்தத்தில் நந்திக்கடல் களப்பில் பலியாகிவிட்டார். அதனை அவருடைய சகாக்களே உறுதிப்படுத்திவிட்டனர். இந்நிலையில், பிரபாகரன் எரித்திரியாவில் இருப்பது என்பதை இலங்கை படைத்தரப்பு முற்றாக மறுத்துள்ளதுடன். பிரபாகரன் எரித்திரியாவில் இருப்பது என்பது ஒரு பேய்கதையாகும் என்றும் இராணுவம் அறிவித்துள்ளது.



லண்டனில நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கெடுப்பு Top News
[Sunday, 2013-05-19 07:22:29]

பிரித்தானிய தமிழர் பேரவையினால் லண்டனில் நேற்றையதினம் 18-05-13 சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொண்டு எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் மகா நாட்டில் கலந்து கொள்வது என்ற பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனின் முடிவுக்கு தமது கண்டனத்தையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியிருக்கிரார்கள்.



இறந்த உறவுகளுக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் விட முடியவில்லை - மாவை சேனாதிராசா
[Sunday, 2013-05-19 07:17:29]

இறந்தவர்களுக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் விட முடியாத அளவிற்கு இராணுவ அடக்குமுறையை இந்த அரசாங்கம் பிரயோகித்து வருகின்றது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் போது உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் மே 18 நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



படையினரால் மீட்கப்பட்ட வன்னி மக்களுக்கு உணவுகொடுக்க புலம்பெயர் சமூகம் முன்வரவில்லை - ஜனாதிபதி மகிந்த Top News
[Saturday, 2013-05-18 20:54:42]

"இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது படையினரால் மீட்கப்பட்ட மக்களுக்கு உணவுகொடுக்க புலம்பெயர் சமூகம் வரவில்லை" என்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறுகிறார். இலங்கை அரசாங்கத்தின் நான்காவது போர் வெற்றிவிழா மேடையிலேயே மகிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறினார். கொழும்பு காலி முகத்திடலில் நடந்த அரசாங்கத்தின் போர் வெற்றி விழாவில் சிறப்பு விருந்தினர்கள், அரசியல்வாதிகள், முப்படையினர் மற்றும் பொதுமக்கள் என பெருமளவிலானோர் கலந்துகொண்டனர். "மனிதக் கேடயங்களாக பிடித்து வைக்கப்பட்டிருந்த மக்களை படையினர் மீட்டனர். அவர்களுக்கு உணவுகொடுக்க புலம்பெயர் சமூகத்தினர் வரவில்லை, அரசாங்கமும் படையினரும் தான் உணவுகொடுத்து பராமரித்தார்கள்" என்றார் மகிந்த ராஜபக்ஷ.



ஸ்ரீலங்கா மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அனைத்து தமிழ் குடும்பங்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் - ஒன்ரோறியோ என்.டி.பி கட்சித் தலைவர்!
[Saturday, 2013-05-18 20:45:00]

தமிழினப் படுகொலை நாள் நடக்கவுள்ள தமிழர் நினைவு நாளுக்கு ஒன்ரோறியோ முதல்வர் காத்லீன் வ்ய்ன், அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து ஒன்ரோறியோ என்.டி.பி கட்சித் தலைவர் அண்ட்ரியா ஹோர்வேத், ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். தமிழர் நினைவு தினத்தை முன்னிட்டு ஒன்ரோறியோ என்.டி.பி கட்சித் தலைவர் அண்ட்ரியா ஹோர்வேத் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது ,



யுத்த வெற்றிவிழா கொண்டாட்டத்தின் போது கடலுக்குள் மூழ்கிய கடற்படை படகு!
[Saturday, 2013-05-18 20:43:50]

தமிழின அழிப்பினை வெற்றிவிழாவாகக் கொண்டாடிய போது கடற்படைக்குச் சொந்தமான படகொன்று கடலில் மூழ்கியுள்ளதாக தெரியவந்திருக்கின்றது. இந்தச் சம்பவத்தினை கடற்படை ஊடகப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய உறுதிப்படுத்தியிருக்கின்றார். காலி முகத்திடல் கடற்பரப்பில் இன்று காலை இடம்பெற்ற யுத்த வெற்றிவிழாவின் போது குறித்த சிறிய ரக படகு மூழ்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். படகில் இருவர் பயணித்ததாகவும் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும் ஒருவர் தப்பித்துக் கொண்டதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.



தமிழர்களின் காணிகளை இராணுவம் அபகரிப்பது குறித்து இந்தியா இலங்கைக்கு எச்சரிக்கை!
[Saturday, 2013-05-18 20:39:38]

இந்திய மத்திய அரசாங்கம் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பின் முன்னணி ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. வட மாகாணத்தில் உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் படையினர் காணிகளை அபகரித்து செல்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்திய இலங்கை வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் போது இந்த விடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது. வட மாகாண தமிழ் மக்களின் காணிகளை படையினர் சுவீகரிப்பதானது பொருத்தமாகாது என இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையானது உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளுக்கு புறம்பானது என குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான நடவடிக்கைகள் நல்லிணக்க முனைப்புக்களுக்கும் பாதகத்தை ஏற்படுத்தும் என அமைச்சர் குர்ஷித் சுட்டிக்காட்டியுள்ளார்.



தமிழர் படுகொலை நினைவு தினத்தில் உங்களுடன் நானும் இணைந்து கொள்கிறேன் - ஒன்ராறியோ முதல்வர் காத்லீன்!
[Saturday, 2013-05-18 20:38:22]

சமீப காலமாகவே தமிழர்களுடன் கை கோர்த்து செயல்படுவதையே பெரும்பான்மையான கனடிய அரசியல் கட்சிகள் விரும்புகின்றன என்பதும் கனடாவில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக தமிழினம் மாறி என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே. வருடம் முழுவதும் பல நிகழ்வுகளும், விழாக்களும் நம்மவர்களிடையே நடத்தப்பட்டு வந்த போதிலும் கூட பிரதான உணர்வு ரீதியான நிகழ்வாக நம்மவர்கள் அனைவராலும் கருதப்படுவது இனவழிப்பு நினைவுநாள் தொடர்பான் நிகழ்வுதான்.



விடுதலைப் புலிகளுக்கு யார் அஞ்சலி செலுத்தினாலும் கைதுசெய்யப்படுவர் - வன்னி இராணுவ கட்டளைத் தளபதி
[Saturday, 2013-05-18 20:22:29]

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்தும் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்படுவர் என்று வன்னி மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி பொனிபஸ் பெரேரா தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஒரே ஒரு இராணுவமே உள்ளது. இலங்கையர்கள் யாரும் யாருக்கு வேண்டுமானாலும் தமது ஆதரவை வெளிப்படுத்தும் உரிமை இருக்கிறது. ஆனால் விடுதலைப் புலிகள் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான அமைப்பு. இந்த அமைப்புக்கு ஆதரவாக ஏற்பாடு செய்கின்ற எந்த நிகழ்வுகளுக்கு எதிராகவும் இராணுவம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



சொந்தங்களுக்காக கண்ணீர் சிந்தும் உரிமையும் இல்லையா? கஜேந்திரன் கைதுக்கு கூட்டமைப்பு கண்டனம்!
[Saturday, 2013-05-18 19:55:44]

யுத்தத்தில் உயிர்நீத்த தம் சொந்தங்களை நினைவு கூர்ந்து கண்ணீர்மல்க அமைதியாக அனுஸ்டிக்கப்பட்ட இரங்கல் கூட்டத்தில் வைத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இக்கைதினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது என அதன் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக தமிழ்மிரரிடம் கூறுகையில்...



தமிழ்த் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் கஜேந்திரன் கைது!
[Saturday, 2013-05-18 19:43:06]

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் உட்பட அந்தக் கட்சியின் சில உறுப்பினர்கள் மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன. மன்னாரில் அந்தக் கட்சியின் சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவுநிகழ்வு ஒன்றை நடத்தியபோதே இவர்கள் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. கஜேந்திரனுடன், அவர்களது கட்சியின் தேசிய அமைப்பாளரான மணிவண்ணன் என்னும் சட்டத்தரணியும் வேறு சுமார் 10 பேரும் கைது செய்யப்பட்டதாக கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.


Suresh-remax-2013-01-01
Ramans2011
Canada Kanthasamy Kovil
TamilsGuid-191012-2013
NIRO-DANCE-100213
Mahesan supramaniyam 031109
RoyaShades-l2011(04-12-11)
TDE_Computers2011
INNSYS-20120930
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com