Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
June 20, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
பார்வையற்றவர்களுக்காக திரையிடப்படுகிறது தாண்டவம் ப்ரிமியர் ஷோ
[Sunday, 2012-09-16 21:08:34]
News Service

விக்ரம், அனுஷ்கா நடிப்பில் விஜய் இயக்கியுள்ள படம் தாண்டவம். இதில் விக்ரம் பார்வையற்றவராக நடித்துள்ளார். இதனால் இந்த படத்தின் மூலமாக பார்வையற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று படத்தை தயாரித்துள்ள யுடிவி நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி வருகிற 27ந் தேதி இரவு பத்து மணிக்கு சத்யம் திரையரங்கில் உள்ள 6 திரையரங்குகளிலும் தாண்டவம் ப்ரிமியர் ஷோ நடக்கிறது.

  

இந்த ஷோவை பார்க்க வரும் வி.ஐ.பிக்கள் தங்களால் இயன்ற உதவியை பார்வையற்றவர்களுக்கு தந்து ஷோவுக்கான பாசை பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் கிடைக்கும் தொகை அனைத்தும் இந்திய பார்வைற்யோர் சங்கத்துக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து யுடிவியின் தென்மண்டல அதிகாரி தனஞ்செயன் கூறும்போது "இது எங்களால் இயன்ற சிறு பணிதான். இனி எங்கள் ஒவ்வொரு படம் வெளிவரும்போது இதுபோன்ற சிறு சமூக சேவைகளை செய்ய முடிவு செய்திருக்கிறோம்" என்றார். இந்திய பார்வையற்றோர் சம்மேளன தலைவர் நீனா ரெட்டி, செயலாளர் எழில் ஆகியோர் இதற்கான பாஸ்களை தனஞ்செயனிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

யு சான்றிதழிற்காக போராடும் மரியான்
[Wednesday, 2013-06-19 18:38:39]

பரத்பாலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் மரியான். மூன்று எண்ணெய் நிறுவன தொழிலாளர்களை சூடானில் பிணையக் கைதிகளாக பிடித்து வைத்து சித்ரவதை செய்வதுதான் இப்படத்தின் மையக்கருவாம். அதிலிருந்து தனுஷ் எப்படி தப்பி வருகிறார் என்பதுதான் க்ளைமாக்சாம். ஆனால், இந்த க்ளைமாக்ஸ் காட்சியை கொடூரமான முறையில் படமாக்கியிருக்கிறார்களாம். இதனால் சென்சார் சான்றிதழுக்காக அனுப்பி வைக்கப்பட்ட மரியானுக்கு யுஏ சான்றிதழ் வழங்கிவிட்டார்களாம். யு சான்றிதழ் கிடைத்தால் படத்துக்கு வரிவிலக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்த மரியான் டீமி்ற்கு இநத யுஏ சான்றிதழ் விவகாரம் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் வருகிற 27-ந்தேதிக்கு படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பவர்கள், முன்னதாக படத்தை மேல்முறையீட்டு குழுவுக்கு அனுப்பி வைத்து எப்படியாவது யு சான்றிதழ் வாங்கி விட வேண்டும் என்று வரிந்து கட்டி நிற்கிறார்கள்.



கவுண்டமணியின் வேடத்தில் பிரம்மானந்தம்
[Wednesday, 2013-06-19 18:35:17]

ஆக்ஷன் கிங் அர்ஜூன் தயாரித்து நடிக்கும் படம் ஜெய்ஹிந்த்-2. ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ஜெய்ஹிந்த். இப்படத்தில் அர்ஜூனுக்கு ஜோடியாக ரஞ்சிதா நடித்திருந்தார். இப்படத்தில் வரும் கவுண்டமணி- செந்தில் நகைச்சுவை காட்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருக்கிறார் அர்ஜூன். புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக சுர்வீன் சாவ்லா நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் செந்தில் நடிப்பது உறுதியாகிவிட்ட நிலையில், கவுண்டமணிக்கு பதில் தெலுங்கு நடிகர் பிரம்மானந்தம் நடிக்கப் போகிறாராம். ஏன் இந்த மாற்றம் என்ற கேள்விக்கு, அர்ஜூன் தரப்பில் சும்மா தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பழைய ஜெய்ஹிந்த் படத்துக்கும், ஜெய்ஹிந்த்-2க்கும் படத்தலைப்பை தவிர வேறு ஒற்றுமை ஒன்றும் இல்லை என்றும் தெளிவுப்படுத்தியுள்ளார்.



வீதிகளில் பிகினி உடையில் திரியும் நமீதா
[Wednesday, 2013-06-19 18:32:47]

சினிமாவில் குட்டை பாவாடை, பிகினி கலாசாராம் என்றெல்லாம் கட்டவிழ்த்து விட்ட நமீதாவுக்கு போதாத நேரம் போலிருக்கு. அதனால்தான் அவர் எந்த அளவுக்கு இறங்கி நடிக்க தயாராக இருந்தும் துக்கடா வேடங்களை அவருக்கு கொடுக்கக்கூட கோடம்பாக்கத்தில் எந்த புண்ணியவான்களும் முன்வரவில்லை. இதனால் தனது பெரிய உடம்பு, பெரிய திரைக்காரர்களுக்கு வேண்டாததாகி விட்டது என்று இப்போது சின்னத்திரை பக்கம் தலை காட்டி வருகிறார். ஆனால், கோலிவுட்டில் வேலை வெட்டி இல்லாமல், சதா வீட்டு மோட்டு வளையத்தையே பார்த்து பார்த்து அவருக்கு செம போரடித்து விட்டதாம். அதனால் அடிக்கடி மும்பைக்கும், சில வெளிநாடுகளுக்கும் எஸ்கேப்பாகி வருகிறார் நமீதா. அப்படி அங்கு செல்லும்போது, சென்னையில் வீதிகளில் செல்வது போல் உடம்பை கவர் பண்ணி செல்லாமல் பிகினி உடையணிந்து ஹாயாக காத்தாட திரிகிறாராம் நமீதா.



ரகசியமாக தயாராகும் ரஜினியின் புதிய படம்
[Wednesday, 2013-06-19 18:28:50]

கோச்சடையான் படத்துக்கு முன்பாக புதிய படமொன்றில் நடிக்க உள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி. இந்தியத் திரையுலகின் முதல் மோஷன் கேப்சரிங் படமாக தயாராகி வருகிறது கோச்சடையான். இதில் ரஜினி நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி தீபிகா படுகோனேவும் நடிக்கின்றனர். படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதனிடையே ரஜினிகாந்த் கோச்சடையான் படத்தின் வெளியீட்டு முன்பாக ஒரு புதிய படத்தில் நடிக்க திட்டமிட்டிருக்கிறார். இதற்கு காரணம் கோச்சடையான் படம் தொடர்ந்து தள்ளிக் கொண்டே போவது தானாம். இந்தப் படத்தை ரஜினியின் ஆஸ்த்தான இயக்குனரான கே.எஸ்.ரவிக்குமார் இயக்க இருக்கிறார். சமீபத்தில் கே.எஸ்.ரவிக்குமாரை அழைத்து பேசிய ரஜினி, முத்து, படையப்பா பாணியில் நகைச்சுவை கலந்த ஆக்ஷன் படத்தை தயார் பண்ணுங்கள் என்று கூறியுள்ளாராம். மேலும் படத்தை இரண்டு மாதத்தில் முடித்துவிட வேண்டும் என்றும், படப்பிடிப்பு முடிவடைந்த பிறகுதான் படம் பற்றிய தகவல்களை வெளியிட வேண்டும் என்றும் கண்டிஷனும் போட்டிருக்கிறார்.



தமிழ் சினிமாவில் கேரள அழகிகளின் புதிய டிரெண்
[Wednesday, 2013-06-19 18:26:03]

கேரளாவில் இருந்து வந்த மூன்று அழகிகள், தமிழ் திரையுலகில் புதிய டிரெண்டை உருவாக்கி வருகிறார்கள். எந்த மொழி நடிகையாக இருந்தாலும், தமிழில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏனெனில் தமிழ் அவர்களுக்கென்று தனித்தனி அடையாளத்தை ஏற்படுத்தி தருகிறது. தற்போதைய சூழலில் பெரும்பாலான நடிகைகள் தாராளமாக கவர்ச்சி காட்டி நடித்து வருகின்றனர். இந்நிலையில் கேரளாவில் இருந்து வந்து தமிழ் படங்களில் நடிக்கும் 3 நடிகைகள் புதிய டிரெண்டை செட் பண்ணுகின்றனர். அதாவது, மூன்று பேரும் நடிப்பு தான் முக்கியம், கவர்ச்சி காட்டி நடிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர். நித்யா மேனனின் நடிப்பை இயக்குனர்களும், பத்திரிக்கைகளும் பாராட்டுகின்றன. ஆனால் அவர் எனக்கு கதாபாத்திரம் தான் முக்கியம், கவர்ச்சி காட்டி நடிக்க வேண்டிய அவசியம் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் தமிழில் மிக வேகமாக வளர்ந்து வரும் லக்ஷமி மேனனும், கவர்ச்சிக்கு தடை விதித்துள்ளார். இப்பட்டியலில் இணைந்துள்ளார் மற்றொரு நாயகி நஸ்ரியா நஸீம்.



சித்தார்த் - சமந்தா ஜோடி திருமணத்திற்கு பெற்றோர்களின் சம்மதம்
[Wednesday, 2013-06-19 18:19:38]

சித்தார்த், சமந்தா திருமண ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளதால் தனது கைவசம் உள்ள படங்களை விரைவில் முடிக்கவுள்ளார் சமந்தா. சமந்தாவை விட சித்தார்த்திற்கு வயது அதிகம். ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன. சமந்தா பெற்றோர் தரப்பிலும் அதிருப்தி இருந்தது. இதுபோல் சித்தார்த் பெற்றோரும் காதலை ஏற்கவில்லை. இதையடுத்து பெற்றோரை சமரசப்படுத்தி சம்மதம் வாங்கும் முயற்சியில் இருவரும் ஈடுபட்டுள்ளனராம். இது நிமிர்த்தமாக சமந்தா நேரடியாக சித்தார்த் வீட்டிற்கு சென்று, அவரது பெற்றோர்களையும், உறவினர்களையும் சந்தித்து நீண்ட நேரம் பேசி விட்டுச் சென்றுள்ளாராம். நீண்ட யோசனைக்கு பின்பு சித்தார்த் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.



ஜெயம் ரவியுடன் ஜோடி சேரும் நயன்தாரா
[Wednesday, 2013-06-19 18:05:10]

பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பின்பு நயன்தாராவின் மவுசு கூடிவிட்டது. இந்த ஆண்டு மட்டும் உதயநிதி ஸ்டாலின், அஜித், ஆர்யா ஆகியோருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதுதவிர கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் தமிழ் - தெலுங்கில் உருவாகும் அனாமிகா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தமிழில் மீண்டும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். ஜெயம் ராஜாவின் இயக்கத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார். தில்லாலங்கிடிக்குப் பிறகு ராஜா - ரவி இணையும் இந்தப் படத்தை கல்பாத்தி அகோரத்தின் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏற்கெனவே நிமிர்ந்து நில் படத்தில் ரவியின் ஜோடியாக நயன்தாராதான் ஒப்பந்தமானார். ஆனால் சில காரணங்களால் அவருக்குப் பதில் அமலா பால் ஒப்பந்தமானார். இப்போது மீண்டும் இருவரும் இணைகிறார்கள்.



இயக்குநர் மணிரத்தினத்தின் சினிமா குடோனில் தீ விபத்து - முழுவதும் தீக்கிரை
[Wednesday, 2013-06-19 17:58:56]

இயக்குநர் மணிரத்தினத்தின் திரைப்படப் பொருட்கள் தயாரிப்புக் கூடம் தீவிபத்தில் சிக்கிய சேதமடைந்தது. இந்த கிட்டங்கியானது தியாகராய நகர் ஜி.என்.செட்டி சாலையில் உள்ளது. இங்கு நேற்று நள்ளிரவில் தீவிபத்து ஏற்பட்டது. மின்சாரக் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் கிட்டங்கி முழுவதுமாக எரிந்து போய் விட்டது.



காஜல் அகர்வாலின் 28 வது பிறந்தநாள் இன்று
[Wednesday, 2013-06-19 17:53:13]

காஜல் அகர்வால் இன்று தனது 28வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பழனி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் காஜல் அகர்வால். அதன் பின் மோதி விளையாடு, நான் மகான் அல்ல, மாற்றான் ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு வெற்றி நாயகி என்ற பெயரை வாங்கிக் கொடுத்த படம் துப்பாக்கி தான். துப்பாக்கியின் வெற்றிக்கு பிறகு காஜலுக்கு தமிழ் திரையுலகில் மவுசு கூடிவிட்டது. தற்போது மீண்டும் விஜய்யுடன் இணைந்து ஜில்லாவிலும், கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகுராஜா என்ற படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் கமல் இயக்கி நடிக்கும் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை கால்ஷீட் பிரச்னையால் ஏற்க மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்திய படங்களில் நடிக்க ஆசைப்படுகிறார் ஜாக்கிசான்
[Wednesday, 2013-06-19 17:38:08]

முதன் முறையாக இந்தியாவில் நேற்று தொடங்கிய சீன திரைப்பட திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. டெல்லியில் நடைபெறும் இவ்விழாவை பிரபல நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான ஜாக்கிசான் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இந்த திரைப்பட விழாவில் ஜாக்கிசான் இயக்கி நடித்துள்ள 'தி சைனீஸ் ஜோடியாக்' என்ற படம் முதல் படமாக திரையிடப்பட்டது. இதுகுறித்து ஜாக்கிசான் கூறுகையில், நான் இந்தியாவில் 10 வருடங்களுக்கு முன் மல்லிகா ஷெராவத்துடன் 'தி மித்' திரைப்படத்தில் நடித்தேன். அந்த படப்பிடிப்பில் 4 மாதங்கள் இங்கு தங்கி இருந்த போது பல இந்திய படங்களை பார்த்தேன். பாட்டுப் பாடுவதும் ஆடுவதும் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் நல்ல பாடகர். இந்திய இயக்குனர்கள் நல்ல கதாபாத்திரத்துடன் என்னை அழைப்பார்கள் என்று நம்புகிறேன். நான் நன்றாக சண்டை போடுபவன் மட்டும் அல்ல, நல்ல நடிகனும் கூட. 3 இடியட்ஸ் மட்டும் இல்லாமல் பாலிவிட்டில் பல நல்ல படங்கள் உள்ளன.



ஐதராபாத்தில் விருது வழங்கும் விழா - சூர்யா, காஜல் அகர்வாலுக்கு விருது Top News
[Tuesday, 2013-06-18 19:14:34]

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் சிறந்த நடிகர், நடிகைகளுக்கு விருது வழங்கும் விழா ஐதராபாத்தில் நடந்தது. இதில் தமிழில் சிறந்த நடிகராக சூர்யா தெரிவு செய்யப்பட்டார். மாற்றான் படத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டையர் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்ததாக அவரை தெரிவு செய்தனர். சிறந்த நடிகையாக காஜல் அகர்வால் தெரிவு செய்யப்பட்டார். இவர் துப்பாக்கி படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தெரிவு செய்தனர். இதுபோல் தெலுங்கில் சிறந்த நடிகராக பவன் கல்யாண், சிறந்த நடிகையாக சமந்தாவும், சிறந்த வில்லன் நடிகராக சுதீப்பும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா விருதுகளை வழங்க, சூர்யாவும், காஜல் அகர்வாலும் மேடையில் ஏறி பெற்றுக் கொண்டனர். நாகர்ஜூனா, நித்யாமேனன் போன்றோரும் சிறந்த நடிகர், நடிகை விருதை பெற்றனர். விழாவையொட்டி நடிகர், நடிகைகள் நடனம் உட்பட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன.



சித்தார்த்திடம் தோற்றுபோன சந்தானம்
[Tuesday, 2013-06-18 18:59:29]

பொதுவாக சந்தானம் தான் காமெடி என்ற பெயரில் மற்றவர்களை கலாய்ப்பது வழக்கம். அதிலும், படப்பிடிப்பு தளங்களில் அப்பாவியாக நடிகைகள் யாராவது சிக்கிக்கொண்டால் போதும், அவர்களை அப்பளமாக்கி விடுகிற அளவுக்கு வறுத்து எடுத்து விடுவார். இதனால், சந்தானம் வருகிறார் என்றாலே சில இளவட்ட நடிகைகள் தலைதெறிக்க ஓடி ஒளிவார்கள். ஆனால், அப்படிப்பட்ட சந்தானத்தையே சில நடிகர்கள் கலாய்க்கத் தொடங்கி விட்டார்கள். அவர்களில் ஆர்யா, சித்தார்த் இருவரும் குறிப்பிடத்தக்கவர்கள். இதில் ஆர்யா, சந்தானத்தை நேரில் கலாய்ப்பதை விட போனில்தான் ஜாஸ்தியாக கலாய்ப்பாராம். சந்தானம் படங்களில் பேசிய டயலாக்குகளை கொண்டே, அதாவது அவர் வீசியெறிந்த பந்துகளையே அவர் மீது திருப்பி விடுகிறாராம். இதனால் ஆர்யாவின் போன் வருகிறது என்றாலே எமகண்டம் ஸ்டார்ட் ஆயிடுச்சே என்று அலறுகிறாராம் சந்தானம்.



தேடி வரும் வாய்ப்புக்களை ஏற்பேன் - நானாக யாரிடமும் கெஞ்ச மாட்டேன் சினேகா
[Tuesday, 2013-06-18 18:53:58]

எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என யாரிடமும் கெஞ்ச மாட்டேன் என்கிறார் புன்னகை இளவரசி சினேகா. தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த சினேகா, பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார். அத்துடன் படங்களில் நடிப்பதையும் குறைத்துக் கொண்டார். இந்நிலையில் நடிப்பிற்கு முழுக்கு போட்டு விட்டீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த சினேகா, திருமணத்திற்கு முன்பு ஹரிதாஸ் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். திருமணத்துக்கு பிறகு தான் அதன் ஷூட்டிங் முடிந்து வெளியானது. சினிமா வாழ்க்கைக்கும், நிஜ வாழ்க்கைக்கும் இடையே நான் ஒரு எல்லை வகுத்திருக்கிறேன். எல்லா பெண்ணும் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழிக்க வேண்டும் என எண்ணுவார்கள், அதைத்தான் இப்போது நான் செய்து கொண்டிருக்கிறேன் நல்ல கதாபாத்திரங்கள் வந்தால் ஏற்பேன். அதுவும் என்னை தேடி வந்தால் தான் ஏற்பேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் எனக்கு வாய்ப்பு தரும்படி யாரிடமும் கெஞ்சி கொண்டிருக்க மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.



12 கோடிக்கு வியாபாரமான சிவகார்த்திகேயனின் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்'
[Tuesday, 2013-06-18 18:44:26]
சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல் படங்களில் நடித்த சிவகார்த்திகேயன் தற்போது நடித்துள்ள வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் ரூ. 12 கோடிக்கு வியாபாரமாகியுள்ளதாம். இது இதுவரை அவர் நடித்த படங்களில் அதிக விற்பனையான முதல் படமாகும். இதனால், காலரை தூக்கிவிட்டபடி நடிக்கத் தொடங்கியிருக்கும் சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தையும் 1.5 கோடியாக உயர்த்தியுள்ளாராம். மேலும், சம்பள விஷயத்தில் ஆரம்பத்திலிருந்தே படாதிபதிகளை மிரட்டும் வகையில் பேசும் அவர், இப்போது இன்னும் எகிறிப் பேசி வருகிறாராம். அதனால் சிவகார்த்திகேயனிடம் கால்சீட் கேட்டு வட்டம் போட்டு வந்த பட்ஜெட் படாதிபதிகள், அவர் மேல்தட்டு ஹீரோவாகி விட்டார் என்று முடிவு செய்து டிராக்கை மாற்றிக்கொண்டு வருகிறார்கள்.


த்ரிஷாவை வென்ற அமலா பால்..
[Tuesday, 2013-06-18 18:39:25]
நீ தானே என் பொன் வசந்தம் படத்திற்கு பிறகு கௌதம் மேனன் இயக்கும் படம் துருவ நட்சத்திரம். சூர்யா நாயகனாக நடிக்கும் இப்படத்தில், பார்த்திபன், சிம்ரன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஆனால் படத்தின் நாயகி யார் என்பதில் த்ரிஷாவுக்கும், அமலா பாலுக்கும் இடையே போட்டி நிலவியது. இதன் பின்னர் நீண்ட விவாதம் நடத்தி, தற்போது மார்க்கெட்டில் இருக்கும் அமலா பால் நடித்தால் நன்றாக இருக்கும் என முடிவு எடுத்தார்களாம். அத்துடன் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் வியாபாரத்திற்கு பலமாக இருக்கும் என்றும் நினைத்தார்களாம். இந்நிலையில் இது குறித்து அமலா பாலிடம் பேசி ஓ.கே வாங்கி விட்டார்களாம். இதனையடுத்து தலைவா படம் முடிந்த பிறகு, சூர்யாவுடன் இணைகிறாராம் அமலா பால்.


பவர்ஸ்டார் வேடத்தில் நடிக்கும் டி.ஆர் - பட்டைய‌‌ை‌ கிளப்பும் தாடிக்காரர்
[Tuesday, 2013-06-18 18:36:08]

'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் ஏற்படுத்திய பரபரப்பு காரணமாக, மளமளவென்று புதிய படங்களில் ஒப்பந்தமானார் பவர்ஸ்டார் என்கிற டாக்டர் சீனிவாசன். இதில், கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை சந்தானத்துடன் இணைந்து தயாரித்த டைரக்டர் இராம.நாராயணன் பவர்ஸ்டாரை நாயகனாக்கி 'ஆர்யா சூர்யா' என்றொரு படத்தை இயக்கினார். படமும் வேகமாக வளர்ந்து வந்தது. ஆனால், பாதி வழியில் சென்று கொண்டிருந்தபோது, மோசடி வழக்கில் பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால், இப்போது பவர்ஸ்டார் நடித்த வேடத்துக்கு டி.ஆரை ஒப்பந்தம் செய்து மீதி படத்தை படமாக்கி வருகிறார் இராமநாராயணன். சின்னத்திரை தொடர்களில், இனி அவர் வேடத்தில் இவர் நடிப்பார் என்பது போன்று, இப்படத்திலும் கார்டு போடப்படுகிறதாம். மேலும், இதில் பவர் ஆடவிருந்த ஒரு குத்துப்பாட்டு இப்போது டிஆருக்கு கிடைத்திருக்கிறது.



அம்மாவாக நடிக்கும் ரம்யா நம்பீசன்!
[Tuesday, 2013-06-18 18:28:31]

தமிழில் 'ராமன் தேடிய சீதை', 'ஆட்டநாயகன்', 'குள்ளநரி கூட்டம்', 'பீட்ஸா' உட்பட சில படங்களில் நடித்தவர் மலையாள நடிகை ரம்யா நம்பீசன். இவர் மலையாளத்தில் 'பிலிப்ஸ் அண்ட் தி மொங்கி பென்' என்ற படத்தில் நடிக்கிறார். இதில் ஜெயசூர்யா ஹீரோ. அவர் மனைவியாக வரும் ரம்யா, பத்து வயது குழந்தைக்கு அம்மாவாக நடிக்கிறார். இதுபற்றி படக்குழு கூறும்போது, 'குழந்தைக்கும் பெற்றோருக்குமான உறவு பற்றிய படம் இது. சிறு வயதில் காதலித்து திருமணம் செய்யும் கேரக்டர் ஹீரோயினுக்கு. அதனால் இளம் வயதிலேயே குழந்தை பெறுகிறார். குழந்தைக்கு பத்து வயது ஆகும் போது நடக்கும் விஷயங்கள்தான் கதை' என்றனர்.



விஜய்யின் கண்டிசனால் ஒதுங்கும் சுந்தர்.சி
[Tuesday, 2013-06-18 18:23:45]

விஜய்யைப்பொறுத்தவரை ஒரு உறுதியான கொள்கை வைத்திருக்கிறார். அதாவது எந்த இயக்குனராக இருந்தாலும் தன்னிடம் முழுக்கதையையும் சொல்ல வேண்டும். அதன்பிறகுதான் அந்த கதையில் நடிப்பதா? வேண்டாமா? என்பது பற்றி முடிவெடுப்பேன் என்பதில் உறுதியாக இருப்பவர். டைரக்டர் கெளதம்மேனன்கூட யோஹன் அத்தியாயம் ஒன்று படத்துக்கு ஒரு வருடத்துக்கு முன்பே விஜய்யை புக் பண்ணியிருந்தார். ஆனால், கடைசிவரை அவரிடம் கதை சொல்லவில்லை. கதை சொன்னால்தான் நடிப்பேன் என்று விஜய் சொன்னபோது இவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இதனால் அப்படம் ட்ராப் ஆனது. அதையடுத்து, இப்போது விஜய்யை வைத்து படம் இயக்க வேண்டும் என்று ஆசைப்படும் முன்னணி இயக்குனர்கள்கூட கதையை தெளிவாக வடிவமைத்து விட்டுதான் அவரை அணுகுகிறார்கள். இந்த நிலையில், விஜய்யை வைத்து படம் பண்ண வேண்டும் என்ற ஆசை மனதளவில் இருந்தாலும், அவர் கதை கேட்பாரே என்று அவரிடம் கால்சீட் கேட்க தயங்கி நின்று கொண்டிருக்கிறார் டைரக்டர் சுந்தர்.சி.



திரையுலக அபிமானிகளின் நெஞ்சில் பால் வார்த்த சமந்தா
[Tuesday, 2013-06-18 18:12:25]

அம்மாவாக ஆசைப்படுவதாக சமந்தா சொன்ன செய்தி மீடியாக்களுக்கு இனிப்பு செய்தியாக இருந்தாலும், அவரது திரையுலக அபிமானிகளுக்கு அது கசப்பு செய்தியாகி விட்டதாம். ஆளாளுக்கு போன் போட்டு, அப்படி என்ன உனக்கு வயதாகி விட்டது. இப்போது டீன்ஏஜ் பெண்தானே நீ. இன்னும் சினிமாவில் சாதிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறதே என்று அவரது நலம்விரும்பிகள் போன்று அக்கறையோடு சொன்னார்களாம். அதைக்கேட்ட சமந்தா, சினிமாவில் பல ஆண்டுகளாக போராடி இப்போதுதான் ஒரு இடத்தை பிடித்திருக்கிறேன். தெலுங்கில் எனக்கென கமர்சியல் வேல்யூ உருவாகியிருப்பதைப்போன்று அடுத்து தமிழிலும் ஒரு மார்க்கெட்டை நிறுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறேன். இந்த நேரத்தில் எப்படி திருமணம் செய்து கொள்வேன் என்று அவர்களுக்கு பதிலுரைத்திருக்கிறார் சமந்தா. அம்மாவாக ஆசை வந்திருப்பதாக பேட்டி கொடுத்தது பற்றி அவர்கள் கேட்டதற்கு, பெண் என்றாலே என்றைக்காவது ஒருநாள் திருமணம் செய்து குழந்தைகளுக்கு அம்மாவாகித்தானே ஆக வேண்டும். அதிலும் எனக்கு அன்பு, பாசம் கொஞ்சம் ஜாஸ்தி.



இம்மாதம் 21 - ந்தேதி வெளிவரும் ராஞ்சனா - பின்வாங்கும் மரியான்
[Tuesday, 2013-06-18 17:48:30]

இந்தியில் தனுஷ் நடித்துள்ள ராஞ்சனாவையும், தமிழில் நடித்துள்ள மரியான் படத்தையும் இம்மாதம் 21 - ந்தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். மேலும், ராஞ்சனா தமிழ்ப்பதிப்பான அம்பிகாபதியை மரியான் ரிலீசாகி ஒரு வாரத்துக்குப்பிறகு ரிலீஸ் செய்வது என்றும் முடிவாகி இருந்தது. ஆனால், தணிக்கைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மரியான் படத்துக்கு சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறதாம். அதனால், ரிலீஸ் தேதியை ஒரு வாரத்துக்கு தள்ளி வைக்கப்போகிறார்களாம். அதனால், ராஞ்சனா மட்டும் வருகிற 21-ந்தேதி வெளியாவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மரியான் வெளியாவது தாமதமாகியிருப்பதால், ராஞ்சனா வெளியாகும் அன்றே அம்பிகாபதியை வெளியிட யோசித்து வருகிறார்களாம். அதுமட்டுமின்றி, ராஞ்சனா படத்திற்கான ப்ரமோஷன் வேலைகளில் ஈடுபட்ட தனுஷ், இதுவரை மரியான் பட ப்ரமோஷன் வேலைகளை தொடங்காததால், ராஞ்சனா ரிலீசுக்குப்பிறகு விளம்பரங்கள் தொடங்கியபிறகுதான் மரியான் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.


TDE_Computers2011
Suresh-remax-2013-01-01
INNSYS-20120930
NIRO-DANCE-100213
TamilsGuid-191012-2013
AJRwindows22.05.13
Mahesan supramaniyam 031109
RoyaShades-l2011(04-12-11)
Ramans2011
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com