Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 26, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் கட்சியோடு கூட்டுச் சேர்வது முஸ்லிம் மக்களுக்குச் செய்யும் இரண்டகமாகும்: - நக்கீரன்
[Sunday, 2012-09-16 13:02:31]
News Service

நடந்து முடிந்த தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் மோசடி நடந்துள்ளதாக சில இணையதளங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் (ததேகூ) ஆதரவாளர்கள் மிரட்டப்பட்டார்கள். சிலர் தாக்கப்பட்டார்கள். பிள்ளையானின் சொந்த ஊரான பேத்தாழைக்குப் பரப்புரைக்குச் சென்ற நா.உறுப்பினர் திரு சீ. யோகேஸ்வரன் அச்சுறுத்தப்பட்டார். தேர்தல் பரப்புரையை பாதியில் முடித்துக் கொண்டு ஊர் திரும்ப நிர்ப்பந்திக்கப்பட்டார்.

  

கல்குடா தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம், எரிவாயு இயந்திரங்கள், தண்ணீர் இறைக்கும் பொறிகள், மிதி வண்டிகள், சேலை, வேட்டி, மது போன்றவை தாராளமாக வழங்கப்பட்டன. எல்லா தேர்தல் தொகுதிகளிலும் அரச வளங்கள் தாராளமாக ஆளும் கட்சிக்குச் சாதகமாகப் பயன்படுத்தப்பட்டன. ஆனால் வாக்கு மோசடி நடந்ததற்கான சான்றுகள் இருப்பதாகத் தெரியவில்லை.

கடந்த 2010 நாடாளுமன்றத் தேர்தலில் ததேகூ மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்ட போது 66,235 வாக்குகள் மட்டும் பெற்றிருந்தது. அதே சமயம் அய்க்கிய மக்கள் சுதந்திர முன்னணி (அயமசுமு) 62, 009 பெற்றிருந்தது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (தமவிபு) தனித்துப் போட்டியிட்டு பெற்ற வாக்குகள் 16,886. கீழே கொடுக்கப்படட அட்டவணை 1 தேர்தல் முடிவுகளைக் காட்டுகிறது.

மட்டக்களப்பு தேர்தல் மாவட்ட நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் 2010

இம்முறை கிழக்கு மாகாண சபைக்கு மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் முடிவுகளைக் கீழ்க் கண்ட அட்டவணை 2 காட்டுகிறது.

மட்டக்களப்பு தேர்தல் மாவட்ட மாகாணசபைத் தேர்தல் முடிவுகள்: 2012

கீழ்க் கண்ட அட்டவணை 3, 2010 நாடாளுமன்றத் தேர்தலில் ததேகூ கிடைத்த வாக்குகளோடு 2012 கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கிடைத்த வாக்குகளை ஒப்பு நோக்குகிறது.

அய்மசுமு யும் தமவிபு இரண்டும் இணைந்து போட்டியிட்டுப் பெற்ற மொத்த வாக்குகள் 64, 190 ஆகும்.

2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அய்மசுமு யும் தமவிபு இரண்டும் பெற்ற வாக்குகள் 78, 895 ஆகும். எனவே நடந்து முடிந்த தேர்தலில் அய்மசுமு 14,705 வாக்குகள் குறைந்துள்ளதைக் காணலாம்.

அதே சமயம் ததேகூ 2010 தேர்தலில் 66,235 வாக்குகளை மட்டும் பெற்றிருந்தது. ஆனால் இம்முறை 104,682 வாக்குளைப் பெற்றிருக்கிறது. எனவே இம்முறை 38,447 (58.05) வாக்குகள் அதிகமாகக் கிடைத்திருக்கிறது.

கீழ்க்கண்ட அட்டவணை 4 தேர்தல் மாவட்டங்களான மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை உள்ளடக்கிய கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுகளைக் காட்டுகிறது.

மட்டக்களப்பில் அய்மசுமு 4 இடங்களையும் முஸ்லிம் காங்கிரஸ் ஒரு இடத்தையும் பிடித்துள்ளது. இது நாலில் மூன்று விழுக்காடு முஸ்லிம் வாக்காளர்கள் ஆளும் அய்மசுமுக வாக்களித்ததைக் காட்டுகிறது. மட்டக்களப்பில் தமிழர்கள் 74 விழுக்காடும் முஸ்லிம்கள் 25 விழுக்காடும் இருக்கிறார்கள்.

மட்டக்களப்பில் ஏனைய கட்சிகளை விட மொத்தம் 104,682 (50.83) வாக்குகளை ததேகூ பெற்றிருக்கிறது. திருகோணமலையில் ததேகூ 44,396 (29.08) ஆகக் கூடுதலான வாக்குகளைப் பெற்றிருக்கிறது. அம்பாறையில் மொத்த தமிழ் வாக்காளர் தொகை 69,783 ஆகும். இதில் 44,749 (64.13) வாக்காளர்கள் ததேகூ வாக்களித்துள்ளார்கள்.

திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாரை மாவட்டங்களில் இனவாரியான வாக்காளர் எண்ணிக்கையும் ததேகூ கிடைத்த வாக்குகளும் விழுக்காடும்.

மட்டக்களப்பில் ததேகூ வாக்கு விழுக்காடு குறைந்ததற்குக் காரணம் தமிழ் வாக்குகள் பிரிபட்டுப் போனதே. செல்லுபடியான வாக்குகளில் மட்டக்களப்பில் (தமிழர்கள் 74 விழுக்காடு) ததேகூ விழுந்த வாக்கு விழுக்காடு 50.83 ஆகும். திருகோணமலையில் (தமிழர்கள் 36 விழுக்காடு) 29.08 விழுக்காடாகும். அம்பாரை (தமிழர்கள் 16 விழுக்காடு) 16.28 விழுக்காடாகும்.

இங்குள்ள வானொலி செவ்வி கண்ட ஆய்வாளர் ஒருவர் மட்டக்களப்பில் 150,000 தமிழ் வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை என்ற வாதத்தை முன்வைத்தார். அதாவது மொத்த தமிழ் வாக்குகளில் (255,115) ததேகூ விழுந்த வாக்குகளை (104,682) கழித்து எஞ்சிய 150,433 வாக்காளர்கள் வாக்களிக்க வில்லை என்று முடிவு கட்டினார். அவர் பிள்ளையானுக்கும் கருணாவின் சகோதரிக்கும் சுயேட்சைக் குழுக்களுக்கும் விழுந்த தமிழ் வாக்குகளை கணக்கில் எடுக்காது விட்டுவிட்டார். அத்தோடு செல்லுபடியாகாத வாக்குகளையும் (11,324) கணக்கில் எடுக்கத் தவறிவிட்டார்.

மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் வாக்களித்தவர் விழுக்காடு 64.29 ஆகும். அதன் அடிப்படையில் தமிழர்கள் அளித்த வாக்குகள் 160,013 ஆக இருக்க வேண்டும். எனவே 35 விழுக்காடு தமிழ்வாக்காளர்களே தேர்தலில் வாக்களித்தார்கள் என்பது சரியல்ல. 35 விழுக்காடு வாக்காளர்கள் மட்டும் வாக்களித்திருந்தால் 78,790 வாக்குகள் மட்டும் ததேகூ கிடைத்திருக்கும்! மொத்தம் 150,000 வாக்களிக்கவில்லை என்றும் 35 விழுக்காட்டினரே வாக்களித்தார்கள் என்று சொல்லித் திரிவது ததேகூ வாக்குப் பலம் இல்லை என எண்பிக்கச் செய்யும் வீண் முயற்சியாகும்.

உண்மையில் ஒரு நீதியான, நியாமான, சுதந்திரமான தேர்தல் நடந்திருந்தால் ததேகூ அதன் குடித்தொகைக்கு ஒப்ப 14 (35 x 40 %) இருக்கைகளை பிடித்திருக்க வேண்டும். ஆனால் பிடித்ததோ 11 இருக்கைகள் மட்டுமே. அதே சமயம் முஸ்லிம்களின் குடித்தொகைக்கு ஒப்ப 13 (35 x 38 %) இருக்கைகள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் மொத்தம் 15 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். சிங்களவர்களுக்கு மட்டும் அவர்களது குடித்தொகைக்கு ஒப்ப 8 இருக்கைகள் கிடைத்துள்ளன.

ஆகவே இத்தேர்தலில் சிலர் நினைப்பது போல வாக்கு மோசடி இடம்பெற்றதாகத் தெரியவில்லை. குறிப்பாக கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்கு மோசடி இடம்பெற்றதாகத் தெரியவில்லை! தேர்தலில் போட்டியிட்ட அய்தேக யும் மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்தவித வாக்கு மோசடியும் இடம்பெறவில்லை என அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. (தமிழ்வின் - செப்தெம்பர் 15,2012)

ஆனால் தேர்தலுக்கு முதலும் தேர்தல் நாளன்றும் தமிழ் வாக்காளர்கள் மிரட்டப்பட்டார்கள். வாக்களிக்கப் போகக் கூடாது என ஆளும் கட்சி ஆதரவாளர்கள் தமிழ் வாக்காளர்களைத் தடுத்தார்கள். இவற்றை மீறியே வாக்களித்தவர்களில் 90 விழுக்காடு தமிழ் மக்கள் ததேகூ யை ஆதரித்து வாக்களித்துள்ளார்கள். ஏழு இருக்கைகளைக் கைப்பற்றிய முஸ்லிம் காங்கிரஸ் மூன்றில் இரண்டு பங்கு முஸ்லிம் வாக்காளர்களது ஆதரவைப் பெற்றுள்ளது எனக் கூறலாம்.

இந்தத் தேர்தலில் ஆளும் அய்மசுமு க்கு எதிராக 68.48 விழுக்காடு வாக்குகள் விழுந்துள்ளது கவனிக்கத்தக்கது.

இதனை எழுதும் போது கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைப்பது பற்றிய இழுபறி தொடர்கிறது. தனது கட்சிக்குக் கிடைத்த 7 இருக்கைகளை வைத்துக் கொண்டு இராவ் ஹக்கீம் சனாதிபதி மகிந்த இராசபக்சேயோடு பேரம் பேசுவதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். முஸ்லிம் காங்கிரசுக்கு மேலதிகமாக ஒரு அமைச்சர் பதவி, 2 துணை அமைச்சர் பதவி, தேசியப் பட்டியலில் 1 இடம், தூதுவர் பதவிகள் என்று பெரிய பட்டியலை அவர் மகிந்த இராசபக்சேயுடன் நடத்திய பேச்சு வர்ர்த்தைகளின் போது கொடுத்துள்ளார்.

அதே சமயம் ததேகூ இன் தலைவர்களோடு சந்திப்பதைத் தவிர்த்து வருகிறார். இதன் மூலம் அவரது உள்ளக்கிடக்கை தெளிவாகத் தெரிகிறது. ததேகூ ஓடு ஆட்சி அமைத்தால் கிழக்கு மாகாண சபை முதல் அமைச்சர் பதவியும் வேறு சில அமைச்சர் பதவிகளும் மட்டும் கிடைக்கும். ஆனால் மகிந்த இராசபக்சேயோடு சேர்ந்து ஆட்சி அமைத்தால் இருக்கும் அமைச்சர் பதவிகளோடு மேலும் பல அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

இராவ் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் முழுக்க முழுக்க சந்தர்ப்பவாத அரசியலைக் கடைப்பிடித்து வருகிறது. அமைச்சர் பதவிகளைப் பாதுகாத்துக் கொள்ள 18 ஆவது சட்ட திருத்தத்திற்கு - சனாதிபதியை சர்வாதிகாரி ஆக மாற்றும் சட்ட திருத்தத்திற்கு - ஆதரவாக வாக்களித்தது நினைவு கொள்ளத்தக்கது. அப்போது தனது முடிவு இரண்டும் கெட்ட தார்மீகக் குழப்பம் (moral dillema) எனக் கூறியிருந்தார்.

பிள்ளையான் என்று அழைக்கப்படும் நேசதுரை சந்திரகாந்தன் தான் பாவம். கருணா போல் பிரதேசவாதம் பேசிய அவர் நட்டாற்றில் விடப்பட்டுள்ளார். சிங்களவனுக்குப் போட்டாலும் யாழ்ப்பாணிக்குக் போடக் கூடாது என்று சொல்லித் தனது அடிமைப் புத்தியை ஊரும் உலகமும் அறியச் செய்தார். காணி, காவல்துறை அதிகாரங்கள் வேண்டாம் என்று சிங்கள - பவுத்த பேரினவாத அரசுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தார். வழ - கிழக்கு இணைப்பை எதிர்த்தார். இப்படியான திருக்கல்யாண அழகுகளைக் கொண்ட ஒருவரை இங்குள்ள தமிழ் வண் தொலைக்காட்சி ஒரு பொருட்டாக மதித்து நேர்காணல் கண்டது பலரது புருவத்தை உயரச் செய்துள்ளது. இந்தத் தொலைக்காட்சி தேர்தல் காலத்தில் ததேகூ எதிரான நிலைப்பாட்டை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. தேர்தல் பற்றி கலந்துரையாட ததேகூ (கனடா) நேரம் ஒதுக்குமாறு கேட்டபோது இந்தத் தொலைக்காட்சி தட்டிக் கழித்துவிட்டது. " யாருக்குப் போட வேண்டும் என்பது மக்களுக்குத் தெரியும். நாங்கள் சொல்லத் தேவையில்லை" என்றும் ததேகூ (கனடா) தலைவர் அரசியல் சுயலாபத்துக்காகவே ததேகூ யை ஆதரிப்பதாகவும் ஆணவத்தோடு அதன் ஊடகத்துறை பொறுப்பாளர் அவதூறு கற்பித்திருந்தார்.

இதற்கு முற்றிலும் மாறாக தமிழ்த் தொலைக் காட்சி (TVI) தொடர்ச்சியாக தேர்தலின் போதும் தேர்தல் முடிந்த பின்னரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பற்றி தனது வெளிச்சம் நிகழ்ச்சியில் ஒளிபரப்புச் செய்தது. தமிழ்த் தொலைக்காட்சிக்கு கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பற்றிய அரசியல் முக்கியத்துவம் தெரிகிறது. ஆனால் தமிழ் வண் தொலைக்காட்சிக்கு அது தெரியவில்லை. நாய்க்குத் தெரியுமா போர்த் தேங்காயின் அருமை என்று சொல்வார்களே அது மாதிரி அது நடந்து கொண்டது. ஒரு உண்மையைச் சொல்ல வேண்டும். இந்தத் தொலைக்காட்சிக்கு இப்படி எடுத்தெறியும் மனப்போக்கு மிக அண்மையில்தான் ஏற்பட்டுள்ளது. புதிதாகப் பணியில் சேர்ந்த ஒருவர்தான் இந்த மோதல் போக்கில் ஈடுபட்டுள்ளார். ஏணியில் மேலே ஏறியாகி விட்டது. இனி ஏணி தேவையில்லை என்று இந்தத் தொலைக்காட்சி நினைக்கிறது போலும்.

இந்தப் பின்னணியில்தான் அரசியலில் செல்லாக் காசாகிப் போய்விட்ட பிள்ளையானை தமிழ் வண் தொலைக்காட்சி நேர்காணல் கண்டுள்ளது. அவர் நிறுத்திய 11 வேட்பாளர்களில் அவர் ஒருவர்தான் தப்பினார். எந்தப் புற்றுக்குள் எந்தப் பாம்பு இருக்கிறது என்பது பாம்பு வெளியில் வரும்போதுதான் தெரிந்து கொள்ள முடியும். அது மட்டும் தெரிய வழியில்லை.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் இராவ் ஹக்கீம் நடந்து கொள்வதைப் பார்த்தால் அவர் ஆளும் கட்சியோடு சேர்ந்து ஆட்சி அமைப்பது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. அதற்காக அலரி மாளிகைக்கு நாயாய் பேயாய் அலைந்து கொண்டிருக்கிறார். ஆளும் கட்சிக்கு எதிராகவே பெரும்பாலான முஸ்லிம் மக்கள் முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களித்தார்கள். முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் கட்சியோடு கூட்டுச் சேர்வது முஸ்லிம் மக்களுக்குச் செய்யும் இரண்டகமாகும். முஸ்லிம் மக்கள் முஸ்லிம் காங்கிரசின் முடிவை ஏற்றுக் கொள்கிறார்களா இல்லையா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மறு பக்கத்தில் இராவ் ஹக்கீம் கேட்பதைக் கொடுத்து கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை மீண்டும் பிடிப்பதை விட ஆளும் கட்சிக்கும் வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

இலங்கையில் எனக்கு பாதுகாப்பில்லை: அமெரிக்க தூதரிடம் அசாத் சாலி தெரிவிப்பு!
[Sunday, 2013-05-26 09:08:05]

இலங்கையில் தமக்கு பாதுகாப்பு இல்லை என்று கொழும்பு மாநகரசபையின் முன்னாள் பிரதி முதல்வரும், முஸ்லிம் தமிழ் தேசிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலி, அமெரிக்க தூதரிடம் தெரிவித்துள்ளார். அண்மையில் அமெரிக்க தூதரகத்தில் வைத்து, அசாத் சாலி அவரை சந்தித்து இந்த விடயம் குறித்து பேச்சு நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அரசாங்கம் தமக்கு உரிய பாதுகாப்பை வழங்க தவறிவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்த விடயம் தொடர்பில் இஸ்லாமிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் அசாத் சாலி தெரிவித்துள்ளார். இதேவேளை தமக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து, மேலும் இரண்டு அடிப்படை மனித உரிமை மீறல் வழக்குகளை தாக்கல் செய்யவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



சர்வதேச திரைவெளியில் தடம்பதிக்க முனையும் ஈழத்தமிழ் கலைஞர்கள்! Top News Top News
[Sunday, 2013-05-26 08:55:00]

சர்வதேச திரைப்பட விழாக்களில் முக்கியமானாதொரு திரைப்பட விழாவென கருதப்படும் Shanghai International Film Festivalவில் கனடா வாழ் ஈழத்தமிழ் கலைஞர் லெனின்.எம்.சிவம் இயக்கிய A Gun & A Ring எனும் திரைப்படமும், றுகினா பசோ நாட்டில் இடம்பெறுகின்ற Cin Droit Libre de Ouagadougou விழாவில் பிரான்ஸ் வாழ் ஈழத் தமிழ்கலைஞர் விஜிதன் சொக்கா ஒளி-ஒலி பதிவுசெய்திருந்த journalistes-vos-papiers ஆவணப்படமும் கலந்து கொள்கின்றன.



தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மூன்று அமைச்சர்கள் ஆதரவு! - சுரேஸ்
[Sunday, 2013-05-26 08:46:50]

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பான விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மூன்று இடதுசாரி அமைச்சர்கள் தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். பேராசிரியர் திஸ்ஸ விதாரண, வாசுதேவ நாணயக்கார, மற்றும் டியு.குணசேகர ஆகியோரே தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். கடந்த புதன்கிழமை நாடாளுமன்றக் கட்டடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவை இவர்கள் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பின் போது, 13வது திருத்தச்சட்டம் பலவீனப்படுத்தப்படக் கூடாது என்றும் அதில் எந்தத் திருத்தமும் செய்யப்படாமலேயே வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் மூன்று அமைச்சர்களும் கூறியதாக த.தே.கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.



ஆயுதக்குழு கடத்தலானது திட்டமிட்ட குடியேற்றங்களை தடுப்பவர்களை எச்சரிக்கும் செயற்பாடு - அரியநேந்திரன் எம்.பி!
[Sunday, 2013-05-26 08:40:58]

அம்பாறை மல்வத்தை பகுதியிலுள்ள தனியார் காணிகளில் திட்டமிடப்பட்டுள்ள அத்து மீறிய குடியேற்றத்தை எதிர்ப்பவர்களை அச்சுறுத்தவே தமிழரசுக்கட்சியின் அப்பகுதி மூத்த உறுப்பினர் ஆயுதக் குழுவால் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரந்திரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,



புலம்பெயர் தமிழர்களின் கைப்பாவையாக சர்வதேச மன்னிப்புச்சபை செயற்படுகிறது - ருவன் வணிகசூரிய
[Sunday, 2013-05-26 08:38:55]

போர்க்குற்றவாளிகள் இலங்கையில் சுதந்திரப் பறவைகளாக உலாவுகின்றனர் என்று சர்வதேச மன்னிப்புச்சபை சுமத்தியுள்ள குற்றச்சாட்டை அடியோடு நிராகரித்த இராணுவம், புலம்பெயர் தமிழர்களின் கைப்பாவையாக மன்னிப்புச்சபை செயற்பட்டு இலங்கைக்கு எதிராக இதுபோன்ற ஆதாரமற்ற பொய்க்குற்றச்சாட்டுகளை முன்வைத்து சர்வதேச ரீதியில் தமக்குள்ள நற்பெயரை இழக்கின்றது எனவும் இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்றதற்குத் தகுந்த ஆதாரங்கள் இருப்பின் அவற்றைச் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கவேண்டும் என்று இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய, மன்னிப்புச்சபையிடம் கோரிக்கை விடுத்தார்.



மீண்டும் தமரா குணநாயகத்தை ஜெனீவா அனுப்புவது குறித்து கவனம் செலுத்துகின்றது அரசு!
[Sunday, 2013-05-26 08:37:27]

இலங்கையின் சிரேஸ்ட இராஜதந்திரிகளில் ஒருவரான தமரா குணநாயகத்தை மீளவும் ஜெனீவா அனுப்பி வைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனீவாவிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதியாக மீளவும் குணநாயகத்தை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜெனீவாவிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதியாக தற்போது ரேனுகா செனவிரட்ன கடமையாற்றி வருகின்றார். இவரை ஐரோப்பிய நாடொன்றின் தூதுவராக நியமித்து அந்தப் பதவியை குணநாயகத்திற்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.



தற்கொலைகளில் இலங்கை உலகசாதனை படைத்துள்ளது - எதிர்க்கட்சி தெரிவிப்பு!
[Sunday, 2013-05-26 08:34:01]

இலங்கை தற்கொலைகளில் உலக சாதனை படைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. மதுபான மற்றும் தற்கொலைகள் நுகர்வில் இலங்கை உலக அரங்கில் முன்னணி வகிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். போதைக்கு முற்றுப் புள்ளி என அரசாங்கம் பிரசாரம் செய்தாலும், உண்மையில் நிலைமை தலைகீழாகவே காணப்படுகின்றது. கண்டியில் பௌத்த பிக்கு ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள மேற்கொண்ட முயற்சி பாரதூரமானது. இதற்கு யார் உந்து சக்தியாக அமைந்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்ததுடன், உடலுக்கு தீ மூட்டிக் கொண்டமையின் பின்னணியில் ஏதேனும் அரசியல் சக்திகள் செயற்பட்டனவா என்பது குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும்.



கட்சியின் பௌத்த வாக்காளர்களை தக்க வைத்துக்கொள்ளுமாறு ரணிலிடம் கோரிக்கை!
[Sunday, 2013-05-26 08:27:26]

ஐக்கிய தேசியக் கட்சியின் பௌத்த வாக்காளர்களை தக்க வைத்துக் கொள்ளுமாறு கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பௌத்த கட்டமைப்பை வலுப்படுத்திக் கொள்ளக் கூடிய வகையிலான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென மூன்று பிரதித் தலைவர்கள் நியமிக்கப்பட வேண்டும். இதன்படி மேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களை உள்ளடக்கக் கூடிய வகையில் பிரதித் தலைவர்கள் நியமிக்கப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது. எனினும், இந்த கோரிக்கை தொடர்பில் ரணில் விக்ரமசிங்க எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை.



ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை மீறி இலங்கை செயற்படுகின்றது - அமெரிக்காவின் குற்றச்சாட்டினால் இராஜதந்திர முறுகல்!
[Sunday, 2013-05-26 08:19:31]

ஈரான் மீதான தடைகளை இலங்கை மீறுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர முறுகல் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த விவகாரம் குறித்து பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச பிரச்சினை எழுப்பியிருந்தார். இதுதொடர்பாக இலங்கை அரசாங்கத்துக்கு அமெரிக்கா தகவல் பரிமாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய மகிந்த ராஜபக்ச, இலங்கை போன்ற சிறிய நாடுகள் மீது அமெரிக்கா இத்தகைபய குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக குறிப்பிட்டதுடன்,



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலை புலம்பெயர் தமிழர்கள் தயாரிக்கின்றனர் - சிங்கள் ஊடகம்!
[Sunday, 2013-05-26 08:14:28]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலை புலம்பெயர் தமிழர்களே தயாரித்து வருவதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலேய இவ்வாறு தயாரிக்கப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாரை தேர்தலில் களமிறக்க வேண்டும் என்பதனை புலம்பெயர் தமிழர்களே தீர்மானித்து வருகின்றனர். அதிகளவு சட்டத்தரணிகளை வேட்பாளர்களாக பெயரிட திட்டமிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் உயர் நீதிமன்ற நீதவான் விக்னேஸ்வரனை நியமிக்கத் தீர்மானிக்க்பபட்டுள்ளது.



மட்டக்களப்பு கோராவெளி கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம்!Top News
[Saturday, 2013-05-25 21:09:14]

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாழைச்சேனை புதுக்குடியிருப்பு கிராம எல்லையில் குடிகொண்டு அருள்பாலிக்கும் கோராவெளி கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த சடங்கு உற்வசத்தின் திருக்குளிர்த்தியாடும் நிகழ்வு இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. இவ்வாலய உற்சவம் கடந்த செவ்வாய்கிழமை ஆரம்பமாகி சனிக்கிழமை காலை தீ மிதிப்பு, திருக்குளிர்த்தியாடும் வைபவத்துடன் நிறைவுபெற்றுள்ளது. இறுதி நாள் அன்னதானக் குழுவினரால் அன்னதானம் வழங்கப்பட்டது. தீ மிதிப்பு நிகழ்வில் ஐநூக்கு மேற்பட்ட பக்தர் கலந்து கொண்டிருந்தனர்.



வெசாக் தினத்தில் தீக்குளித்த பிக்கு மரணம்!
[Saturday, 2013-05-25 21:04:22]

கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் மிருக வதையினை கண்டித்து தனக்கு தானே தீமூட்டிக்கொண்ட பௌத்த பிக்கு, சிகிச்சை பலனின்றி இன்று சனிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கண்டி தலதா மாளிகைக்கு முன்பாகவே நேற்று வெள்ளிக்கிழமை அவர் தீ மூட்டிக்கொண்டார். வெசாக் தினத்தையொட்டி கண்டி தலதா மாளிகையில் விசேட மத நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையிலேயே அவர் தனக்கு தானே தீ மூட்டிக்கொண்டுள்ளார்.



இலங்கையைப் போல சிறந்த நிர்வாகத்தைக் கொண்ட நாடு உலகில் கிடையாது - பிரதமர்
[Saturday, 2013-05-25 20:09:26]

இலங்கையில் மதங்களுக்கிடையில் பாராபட்சம் நிலவுவதாகக் காட்டி நாட்டைப் பிளவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் சர்வதேச நீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என பிரதமர் டி.எம். ஜயரட்ண குற்றம் சாட்டியுள்ளார். கண்டி தலதா மாளிகையில் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, எதிர்வரும் காலங்களில் எந்தவொரு நாடோ அல்லது இனவாதிகளோ நாட்டை அபகரிக்க இடமளிக்க முடியாது. நாட்டில் மதங்களுக்கிடையில் பாராபட்சம் நிலவுவதாகக் காட்டி நாட்டைப் பிளவுபடுத்துவதற்கான சூழ்ச்சிகளை சர்வதேம் மேற்கொண்டு வருகின்றது. எனவே இந்த விடயத்தில் அனைவரும் மிகுந்த கவனம் செலுத்துவது அவசியமாகும். நாட்டில் யுத்தம் முடிவடைந்த பின்னர் சகல மதங்களும் பராமரிக்கப்பட்டு மதத் தலங்களும் அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் நிலையில் இங்கு மதங்களுக்கிடையில் எத்தகைய ஏற்றத்தாழ்வும் கிடையாது.



அறுவை சிகிச்சையின் போது பெண்ணின் வயிற்றுக்குள் ஊசியை வைத்து தைத்த வைத்தியர் - கிண்ணியாவில் சம்பவம்
[Saturday, 2013-05-25 18:59:57]

கிழக்கு மாகாணத்தில் கிண்ணியா பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது அப்பெண்ணின் வயிற்றுக்குள் ஊசியினை வைத்து தைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் குறித்த பெண்ணுக்கு ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக கடந்த 22 ஆம் திகதி வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். அப்பெண்ணின் வயிற்றுப் பகுதியை எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது வயிற்றுகுள் ஊசி இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் மீண்டும் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்துவதற்காக அப்பெண் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



சார்க் நாடுகளின் திரைப்பட விழா இ்ம்மாதம் 26ஆம் திகதி ஆரம்பம்..
[Saturday, 2013-05-25 18:49:27]

இலங்கையிலுள்ள தெற்காசிய நாடுகளின் கலாசார மத்திய நிலையம் ஏற்பாடு செய்துள்ள சார்க் நாடுகளின் திரைப்பட விழா இம்மாதம் 26ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்தில் நடைபெறவுள்ளது. ஆப்கானிஸ்தான் தவிர்ந்த ஏனைய நாடுகள் இந்த திரைப்பட விழாவுக்காக சினிமா திரைப்படங்களையும் விவரணத்திரைப்படங்களையும் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விழாவின் போது தெரிவு செய்யப்படும் சிறந்த திரைப்படங்கள் விவரணப்படங்கள் மற்றும் சிறந்த நடிகர் நடிகைகளுக்கு விருதுகளும் வழங்கப்படவுள்ளன. கடந்த ஆண்டில் இலங்கை திரைப்படம் ஒன்றே மேற்படி விழாவின் போது சிறந்த திரைப்படமாக தெரிவு செய்யப்பட்டது.



வராலற்று சிறப்பினைச் பதிவு செய்த தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு மாநாடு !Top News
[Saturday, 2013-05-25 17:43:54]

ஈழவிடுதலைப் போராட்டத்தில் பெரும் வராலற்று சிறப்பினைச் பதிவதாக தமிழீழ சுதந்திர சாசன முரசறைவும் அதனையொட்டிய இடம்பெற்றிருந்த மாநாடும் அமைந்திருந்ததென மாநாட்டின் செயற்குழு தனது உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தமிழீழ சுதந்திர சாசன மாநாட்டு செயற்குழுத் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது : அடிமை ஒழிப்புக்குக் குரல் கொடுத்த பெருமகன் திரு. 'தாடுஸ் ஸ்டீவன்சன்' அவர்களின் பிறப்பிடமாகிய அமெரிக்காவின் பென்சில்வேனிய மாநிலத்தின் லாங்காஸ்டர் நகரில் தமிழீழசுதந்திர சாசனம் மே-18மம் நாள் சனிக்கிழமை (18-05-2013) உணர்வெழுச்சியுடன் முரசறையப்பட்டது.



கைதிகளுக்கு இம்முறை பொதுமன்னிப்பு இல்லை - சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர்!
[Saturday, 2013-05-25 17:39:43]

இம்முறை வெசாக் பண்டிகையின் போது சிறைக் கைதிகள் எவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படவில்லையென புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஜி.எஸ்.விதானகே தெரிவித்துள்ளார். சிறு குற்றங்களை புரிந்து தற்போது சிறையில் உள்ள குற்றவாளிகள் சிலரின் பெயரை நீதி அமைச்சுக்கு பரிந்துரை செய்தபோதிலும் அதற்கான அனுமதி தமக்கு கிடைக்கவில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



கொழும்பு துறைமுக தீ விபத்து தொடர்பில் 13 பேரிடம் வாக்கு மூலம்!
[Saturday, 2013-05-25 17:31:37]

கொழும்புத் துறைமுக களஞ்சியசாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து தொடர்பில் இதுவரையிலும் 13 பேரிடம் வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரசாயன பகுப்பாய்வு நடவடிக்கைகளும் இன்று இடம்பெற்றன. கொழும்பு துறைமுக களஞ்சியசாலையில் நேற்று 24 ஆம் திகதி ஏற்பட்ட திடீர் தீ விபத்தையடுத்து களஞ்சியசாலை தொகுதியை பொலிஸார் பொறுப்பேற்றதுடன் விசாரணைகளையும் துரிதப்படுத்தினர். இந்நிலையிலேயே இதுவரையிலும் 13 பேரிடம் வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.



தேன்மதுர தமிழ் இசையால் கோடிக்கணக்கான இதயங்களை கட்டிப்போட்ட மதுரக் குரல் இன்று ஓய்ந்தது! Top News
[Saturday, 2013-05-25 17:26:59]

பிரபல தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகர் டி. எம். சௌந்தரராஜன் அவர்கள் சென்னையில் காலமானார். இருதயக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் பின்னர் வீடு திரும்பியிருந்தார். ஆயினும் இன்று சனிக்கிழமை சற்று நேரம் முன்னதாக அவர் தனது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 91. தென்னிந்திய திரையுலகில் அரை நூற்றாண்டுக்கும் அதிகமாக பின்னணி பாடி வந்த இவர், பட்டினத்தார் உட்பட சில திரைப்படங்களிலும் நடித்திருந்தார். 1923 ஆம் ஆண்டு மதுரையில் சௌராஸ்டிர குடும்பத்தில் பிறந்த இவரது தகப்பனார் பெயர் மீனாட்சி ஐயங்கார். 1950 ஆம் ஆண்டும் கிருஷ்ண விஜயம் என்னும் படத்தில் 'ராதே என்னை விட்டுப் போகாதடி'' என்னும் பாடலுடன் இவர் அறிமுகமானார். தமிழ் தவிர தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளிலுமாக 10, 000 பாடல்களுக்கும் அதிகமாக அவர் பாடியிருக்கிறார்.



கிளி.வட்டக்கச்சி இந்து மயானத்திற்கு எரிகொட்டகை கையளிப்பு! Top News
[Saturday, 2013-05-25 17:19:40]

வட்டக்கச்சி மம்மில் இந்து மயானத்திற்கு இராமநாதபுரத்தைச் சேர்ந்த அமரர் இராஜேஸ்வரி வேலுப்பிள்ளை ஞாபகார்த்தமாக அவரின் குடும்பத்தவரால் எரிகொட்டகை அமைத்து வழங்கப்பட்டது. அமரர் இராஜேஸ்வரி வேலுப்பிள்ளை அவர்களது நிதிப் பங்களிப்பில் வட்டக்கச்சி அறிவொளி சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் இவ் எரிகொட்டகை அமைக்கப்பட்டு, வட்டக்கச்சி கிராம முன்னேற்ற சங்கங்களிடம் கையளிக்கும் நிகழ்வு கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் வி.சுவிஸ்கரன் தலைமையில் மம்மில் இந்து மயானத்தில் இடம்பெற்றது.


INNSYS-20120930
TDE_Computers2011
AJRwindows22.05.13
Canada Kanthasamy Kovil
TamilsGuid-191012-2013
Mahesan supramaniyam 031109
Ramans2011
RoyaShades-l2011(04-12-11)
Suresh-remax-2013-01-01
NIRO-DANCE-100213
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com