Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 23, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
விசாரணைகளை மேற்கொள்வதற்காக நாம் வரவில்லை - உண்மைகளை கண்டறிவதற்காகவே வந்தோம்: - ஐநா அலுவலக அதிகாரிகள் தெரிவிப்பு.
[Sunday, 2012-09-16 10:32:52]
News Service

சாட்சிகளின் பாதுகாப்பு மற்றும் காணாமற்போனோர் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அலுவல கத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழு கலந்துரையாடியுள்ளது. இலங்கை வந்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகக் குழுவின் தலைவரான ஹன்னி மெகாலி மற்றும் ஒஸ்கார் சொலேரா ஆகியோரே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகளை நேற்று முன்தினம் காலை சந்தித்தனர்.

  

இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றை மதிப்பீடு செய்வதற்கு இந்த அதிகாரிகள் குழு வந்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதீபா மஹாநாம கூறினார்.

சாட்சிகள் பாதுகாப்புச் சட்டத்தை மூன்று மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் மேற்படி அதிகாரிகளுக்குக் கலாநிதி மஹாநாம தெரி வித்துள்ளார். 2012 ஜனவரி முதல் 2013 ஓகஸ்ட் 13 ஆம் திகதிவரையில் இடம்பெற்ற 37 காணாமல்போன சம்பவங்கள், மற்றும் வெள்ளைவான் கடத்தல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.

மேலும் மூன்று காணாமல் போதல் சம்பவங்கள் குறித்து எமக்கு முறைப்பாடுகள் கிடைத்தன. ஆனால் அந்த நபர்கள் சட்டவிரோதமாக மேற்கு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்துவிட்டனர் என்பதை நாம் கண்டறிந்தோம். மற்றொரு முறைப்பாடு பின்னர் வாபஸ்பெறப்பட்டது என அவர் கூறினார்.

அதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அதிகாரிகள் ஒருபோதும் புள்ளிவிபரங்களைக் கேட்கவில்லை எனவும் அவர்கள் காணாமல் போனசம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் குறித்தே கேட்டனர் எனவும் பிரதீப மஹாநாம தெரிவித்தார்.

ஊடக சுதந்திரம் அருகிவருகிறதென்ற முறைப்பாடு குறித்தும் அவர்கள் கேள்வி எழுப்பியதகாவும் மஹாநாம கூறினார். எனினும், தாம் விசாரணைகளை மேற்கொள்வதற்காக வரவில்லை எனவும் உண்மை கண்டறிவதற்கான பயணமொன்றையே மேற்கொண்டுள்ளதாகவும் அவ்வதிகாரிகள் திட்டவட்டமாக கூறியதாக மஹாநாம தெரிவித்தார்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

சிலாவத்தையில் புதிய நிர்வாகம் - பறிபோனது டக்ளஸின் பதவி!
[Thursday, 2013-05-23 19:43:49]

கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் சிலாவத்தை கிராம அபிவிருத்திச் சங்க உத்தியோகத்தர்கள் தெரிவு நீண்டகால இழுபறியின் பின்னர் நேற்று முன்தினம் முறையாக இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், கரைதுறைப் பற்று பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கரைதுறைப்பற்று கிராம அபிவிருத்திச் சங்கங்கள், மகளிர் அபிவிருத்திச் சங்கங்களின் சமாசத் தலைவர் ஆகியோர் முன்னிலையில் தெரிவு இடம் பெற்றது. இந்தத் தெரிவின்போது சிலாவத்தை கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவராக இருந்து புதிய நிர்வாகத் தெரிவுக்கு முட்டுக்கட்டை போட்டு வந்தார் என மக்கள் குற்றஞ்சாட்டிய திருச்செல்வம் டக்ளஸ் பங்குபற்றவில்லை.



கட்சிக்கு நிதி கிடைக்கப் பெறும் வழிகள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை!
[Thursday, 2013-05-23 19:38:44]

கட்சி நிதி தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். எந்த வழிகளில் கட்சிக்கு நிதி கிடைக்கப் பெறுகின்றது என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் நோக்கில் அச்சிடப்பட்ட சுவரொட்டிகளை வைத்திருந்தவர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். தற்போது கட்சி நிதி மூலங்கள் பற்றி கேள்வி எழுப்பப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கட்சி உறுப்பினர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்ட போதிலும், நாளாந்த அடிப்படையில் காவல் நிலையத்திற்கு ஆஜராகுமாறு அழைக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.



"ராஜபக்ஷ எந்தநாளும் விளையாடாதே" - மின் கட்டண உயர்வை கண்டித்து ஜே.வி.பி. நடாத்திய ஆர்ப்பாட்டம்!
[Thursday, 2013-05-23 18:58:50]

அதிகரிக்கப்பட்டுள்ள மின் கட்டணத்தினை இரத்துச் செய்யுமாறு அரசாங்கத்தை வற்புறுத்தி ஜே.வி.பி.யினால் இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இவ் ஆர்ப்பாட்டப் பேரணி பொரளையிலிருந்து ஆரம்பமாகி மருதானையூடாக கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் வரை இடம்பெற்றது. இதில் ஜே.வி.பி.யின் முக்கியஸ்தர்களான ரில்வின் சில்வா, விஜித ஹேரத், கே.டி.லால்காந்த, சுனில் ஹந்துன்நெத்தி, இராமலிங்கம் சந்திரசேகரன் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் கலந்து கொண்டனர். "ராஜபக்ஷ எந்தநாளும் விளையாடாதே", "மக்கள் மீது சுமையை ஏற்றுவதை நிறுத்து", "உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை இரத்துச் செய்", "அமைச்சர்களின் மின் கட்டணம் அப்பாவி மக்களின் தலையில்" போன்ற கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இலங்கை சர்வதேசத்தின் முன்னால் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றது - மங்கள சமரவீர!
[Thursday, 2013-05-23 18:29:22]

ராஜபக்ஷ அரசாங்கம், நாட்டை சர்வாதிகார ஆட்சியை நோக்கி கொண்டு சென்றுக்கொண்டிருப்பதாகவும் சர்வதேச சட்டங்கள் மற்றும் சர்வதேசத்திற்கு மத்தியில் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றாததால், சர்வதேச முன்னால், இலங்கை அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். குடும்ப நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக நாட்டில் இருந்த ஜனநாயக நிறுவனங்கள் அனைத்தையும், ராஜபக்ஷ அரசாங்கம், வலுவிழக்க செய்துள்ளது. இதன் காரணமாக நாட்டு மக்களின் உரிமைகளில் பல இல்லாமல் போயுள்ளன எனவும் மங்கள சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.



ஜனாதிபதியை சந்திக்க சென்ற 3 பாடசாலை மாணவிகள் பொலிஸாரால் கைது!
[Thursday, 2013-05-23 18:27:53]

ஜனாதிபதியை சந்திக்கும் நோக்கில் பெற்றோரிடம் தெரிவிக்காமல் கொழும்பு நோக்கிப் பயணம் செய்த 2 பாடசாலை மாணவிகள் குருநாகல் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



வடக்கு தேர்தலுக்கு அஞ்சும் நீங்கள், தமிழர்களின் அச்சம் பற்றி சிந்தித்ததுண்டா? இனவாதிகளிடம் மனோ கேள்வி!
[Thursday, 2013-05-23 18:22:13]

வடக்கு மாகாண சபை கூட்டமைப்பின் கரங்களுக்கு போவது தொடர்பில் சிங்கள மக்களுக்கு அச்சம் உள்ளது என்று திரும்பத் திரும்பக் கூறுகின்றீர்கள். ஆனால் தமிழர்களின் அச்சம் பற்றி என்றாவது சிந்தித்துப் பார்த்தீர்களா? நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அதிகாரத்தையும், பலமிக்க நாடாளுமன்றத்தையும், முப்படைகளையும் வைத்திருக்கும் உங்களுக்கு அச்சம் இருந்தால் இன்று தமிழர்களுக்கு, தமது எதிர்காலம் தொடர்பில் எந்தளவு அச்சம் இருக்கும் என்பதை ஏன் புரிந்துகொள்ள மறுக்கின்றீர்கள்? இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன். கொழும்பில் நேற்று இடம்பெற்ற அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது:



31 புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்!
[Thursday, 2013-05-23 18:01:03]

புகலிடம் கோரி சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற மேலும் ஒரு தொகுதி இலங்கையர்கள் இன்று (23ம் திகதி) நாடு திரும்புகின்றனர். 31 இலங்கையர்கள் இவ்வாறு நாடு திரும்புவதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிரன்டன் ஓ கொன்னர் தெரிவித்துள்ளார். கிறிஸ்மஸ் தீவில் இருந்து இவர்கள் இலங்கை - கொழும்புக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி கடந்த வருடம் ஒகஸ்ட் தொடக்கம் இதுவரை 1161 இலங்கை அகதிகள் நாடு கடத்தப்பட்டதாகவும் அவர்களில் 950 பேர் சுய விருப்பின் பேரில் அனுப்பப்பட்டதாகவும் பிரன்டன் ஒ கொன்னர் தெரிவித்துள்ளார்.



7 வயதுச் சிறுமி மீது பாலியல் பலாத்காரம் - இராணுவ வீரர் கைது!
[Thursday, 2013-05-23 17:26:35]

வவுனியா நெடுங்கேணி பகுதியில் 7 வயதுடைய சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் இராணுவ வீரர் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 14.05.2013 அன்று வவுனியா நெடுங்கேணி சேனைப்புலவு என்ற கிராமத்தில் ஏழுவயதான பள்ளிச் சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டார். இச்சம்பவமானது அப்பிரதேசத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. இதனையடுத்து சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸார் தாமதித்தமையால், கடந்த திங்கட்கிழமை பிரதேச மக்களால் குறித்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவரை உடன் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனக்கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றும் மேற்கொள்ளப்பட்டது.



ஜனாதிபதி அறிவித்தவாறு எதிர்வரும் செப்டம்பரில் வடமாகாண சபைத் தேர்தல்!
[Thursday, 2013-05-23 17:13:02]

இலங்கையின் வடமாகாண சபைக்கான தேர்தல் ஜனாதிபதி அறிவித்துள்ளபடி எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று அரசு தெரிவித்துள்ளது. அந்தத் தேர்தலை ஒத்திப் போடும் எண்ணம் அரசுக்கு கிடையாது என்று வாராந்திர அமைச்சரவை முடிவுகள் குறித்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அதன் பேச்சாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். அதே போல மாகாண சபைகளை உருவாக்கி அதற்கு காணி மற்றும் போலிஸ் அதிகாரங்களை வழங்கிய அரசியல் அமைப்பின் 13 ஆவது சட்டத் திருத்ததில் மாறுதலையும் கொண்டுவரவோ அல்லது அதை ரத்து செய்யவோ அரசாங்கத்துக்கு எந்த எண்ணமும் இல்லை என்றும் அமைச்சர் யாப்பா இந்தக் கூட்டத்தில் அறிவித்தார்.



விடுதலைப்புலிகளின் தலைவரை கோழை என தெரிவித்த அமைச்சர் நாராயண சாமிக்கு எதிராக முறைப்பாடு!
[Thursday, 2013-05-23 16:55:38]

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் நாம் தமிழர் கட்சி தொடர்பாக அமைச்சர் வி.நாராயணசாமி வெளியிட்ட அறிக்கைபற்றி முறைபாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையானது தமிழ்பேசும் இந்தியர்களுக்கும் தமிழர் அல்லாதோருக்கும் இடையில் பகைமையை தோற்றுவித்தது என, நியாயதுரந்திரர் சி.ரமேஷ் தெற்குவலய பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடொன்றை தொடுத்துள்ளார். கடந்த 20ம் திகதி அமைச்சர் நாராயணசாமி விடுத்த அறிக்கையில்,



'இந்திய அரசின் வீட்டுத் திட்டமா? இஸ்லாமிய குடியேற்றத் திட்டமா?' மட்டக்களப்பில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தவர்கள் கைது!
[Thursday, 2013-05-23 11:38:36]

மட்டக்களப்பு மாவட்டத்தின் உறுகாமம் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்திய வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வின்போது துண்டுப்பிரசுரங்களை விநியோகித்ததாகக் கூறப்படும் இருவரை கரடியனாறு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் உறுகாமம் பிரதேசத்தில் இந்திய வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று புதன்கிழமை நடைபெற்றது. இதன்போது பொதுமக்களிடம் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்ததாகக் கூறப்படும் இளைஞர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன், இவர்களிடமிருந்து மேற்படி துண்டுப்பிரசுரங்களை கைப்பற்றியுள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.



கனடா - பிரித்தானியா - பிரான்ஸ் : தமிழீழ சுதந்திர சாசன முரசறைவும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் நிகழ்வரங்கும் ! Top News
[Thursday, 2013-05-23 11:26:46]

தமிழீழ சுதந்திர சாசன முரசறைவினை மையாக கொண்டு முள்ளிவாய்க்கால் நான்காம் ஆண்டுப் பெருவலியினை கூட்டுநினைவு கொள்ளும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் நிகழ்வுகள் கனடா, பிரித்தானியா, பிரான்சு ஆகிய நாடுகளில் இடம்பெற்றுள்ளன. தமிழீழ சுதந்திர சாசன முரசறைவின் பிரதான நிகழ்வு அமெரிக்காவில் இடம்பெற்றிருந்த சமவேளை, பிரித்தானியா, கனடா (ரொறன்ரோ) மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளில் ஒன்றுகூடிய தமிழர்கள் உணர்வுபூர்வமாக சுதந்திர சாசனத்தினை முரசறைந்து நினைவேந்திக் கொண்டிருந்தனர்.



கிழக்கில் மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ்கின்றனர் என்பதற்கான அடையாளமே இந்திய வீடமைப்புத் திட்டம் - பஷில்
[Thursday, 2013-05-23 11:23:49]

கிழக்கு மாகாணத்தில் மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள் என்பதற்கு அடையாளமாகவே இந்திய வீடமைப்புத் திட்டம் விளங்குகிறது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள வீடுகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் விசேட அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.



13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை - அரசாங்கம்
[Thursday, 2013-05-23 11:17:01]

13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஜே.என்.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யுமாறு கோரியிருந்தன. 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனித்து தீர்மானம் எடுக்க மாட்டார் என அரசாங்க பதில் பேச்சாளர் அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வது தொடர்பில் இதுவரையில் எவ்விதத் தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வதற்காக ஜே.என்.பி.யும் ஜாதிக ஹெல உறுமய கட்சியும் பல்வேறு வழிகளில் முயற்சி எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



வடக்கில் தேர்தல் இடம்பெறுவது சந்தேகமே? - பிபிசி
[Thursday, 2013-05-23 10:52:37]

இலங்கையின் வட மாகாண சபைக்கான தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிப்படையாக அறிவித்திருந்தாலும் அந்தத் தேர்தல் நடைபெறுமா என்று கேள்விக் குறிகளும் எழுந்துள்ளன. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, தேசப்பற்றுள்ள மக்கள் முன்னணியின் தலைவர் குணதாச அமரசேகர ஆகியோர் இதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தனர். பின்னர் பௌத்த கடும்போக்கு அமைப்பு என்று கருதப்படும் பொதுபல சேனா எதிர்ப்பை வெளியிட்டது. இப்போது ஆட்சியில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமயவும் இதை எதிர்க்கிறது.



பிரபாகரனுடன் என்னை ஒப்பிடவேண்டாம் - மன்னார் ஆயர்
[Thursday, 2013-05-23 10:29:01]

"பிரபாகரன் தனிச்சிறப்புக் கொண்டவர். அவருடன் என்னை ஒப்பிடவேண்டாம். பச்சைப் பொய்களைக் கூறி தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் ஒற்றுமையைக் குழப்புவதற்கும், நாட்டுக்குத் தீமை செய்யவுமே பொதுபலசேனா என்ற இனவாத அமைப்பு முளைத்துள்ளது. இதை நாட்டு மக்கள் முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்." இவ்வாறு கடும் ஆவேசத்துடன் தெரிவித்தார் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப். "இனவாதிகளின் கருத்துகளுக்குச் செவிசாய்க்காமல் வடக்கில் மாகாணசபைத் தேர்தலை அரசு உடனடியாக நடத்தியே ஆகவேண்டும். அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு சகல உரிமைகளையும் வழங்கவேண்டும். அதேவேளை, வடக்கு, கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்புக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.



மத்தளயில் விமான நிலையத்துக்கு பதிலாக குளத்தை கட்டியிருந்தால் ராஜபக்ஷ பெயரும் வரலாற்றில் பதிவாகியிருக்கும் - பொது பலசேனா
[Thursday, 2013-05-23 10:14:15]

மத்தளயில் சர்வதேச விமான நிலையத்தை கட்டியதற்கு பதிலாக அங்கு குளம் ஒன்று கட்டியிருந்தால் மஹா பராக்கிரமபாகு போன்று ராஜபக்ஷ பெயரும் வரலாற்றில் பதிவாகியிருக்கும் என்று தெரிவித்துள்ள பொதுபலசேனா ஜனாதிபதியை சூழவுள்ள ஆலோசகர்கள் இவ்வகையான பயனற்ற திட்டங்களை ஜனாதிபதிக்கு கூறி மக்களின் நிதிக்கு ஆப்பு வைக்கக் கூடாது என்றும் அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது. பொதுபலசேனாவின் தலைமையகத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின்போது மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.



வலிகாமம் வடக்கு காணி சுவீகரிப்பு தொடர்பில் அடிப்படை மனித உரிமை வழக்குகள் யாழ்ப்பாணச் சட்டத்தரணிகளால் தாக்கல்!
[Thursday, 2013-05-23 10:02:59]

நேற்றையதினம் (22.05.2013) இலங்கை உயர்நீதிமன்றத்தில் வலிகாமம் வடக்குப் பிரதேசத்தைச் சேர்ந்த 192 பேர் தமது காணிகள் சுவீகரிக்கப்படுவதை எதிர்த்து அடிப்படை உரிமை மீறல் வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர். தமக்கு வௌ;வேறாக சொந்தமாக இருக்கக் கூடிய காணிகள் ஒரே காணியாக கருதப்பட்டு சுவீகரிக்க முடியாது என்றும் அவ்வாறாக சுவீகரிப்பதற்கான பொதுத் தேவை தொடர்பில் தெளிவாகத் தமக்கு கூறப்படவில்லை என்றும் தமக்கு முறையாக தமது காணிகள் சுவீகரிப்பது தொடர்பில் அறிவித்தல் தரப்படவில்லை என்றும் கூறி இவ் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தம் சார்பில் சட்டத்தரணிகள் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் சென்று அறிவித்தல்களைப் பார்வையிடுவதற்கும் இராணுவத்தினர் அனுமதி மறுத்ததாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர் மீண்டும் கஜேந்திரனிடம் விசாரணை!
[Thursday, 2013-05-23 09:56:59]

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரனிடம் மீண்டும் பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர் நேற்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினரின் யாழ்.அலுவலகத்தில் நேற்று நண்பகல் 12.30 மணியிலிருந்து பிற்பகல் 3.00 மணிவரை இந்த விசாரணைகள் இடம்பெற்றுள்ளன. இவ் விசாரணை தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்; பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர் யாழ்ப்பாணம், நாவலர் வீதியிலுள்ள அவர்களுடைய அலுவலகத்திற்கு நண்பகல் 12.00 மணிக்கு என்னை வருமாறு அழைத்திருந்தனர். அதற்கமைய நானும் குறித்த நேரத்திற்கு அவ் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். என்னிடம் பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர் கட்சியின் நடவடிக்கைகள் தொடர்பாக சுமார் மூன்று மணித்தியாலங்கள் விசாரணைகளை மேற்கொண்டனர். மேலும் பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் என்னிடம் விசாரித்தனர் என்றார்.



கனடா ஒன்ராரியோ பாராளுமன்றம் முன்றலில் இடம்பெற்ற தமிழினப் படுகொலை நினைவு நாள் - மே 18, 2013 Top News
[Thursday, 2013-05-23 09:43:07]

மே 18, 2013, சனிக்கிழமை, மாலை 5:00 மணிக்கு கனடாவில் ரொறன்ரோ மண்ணில், குயின்ஸ் பார்க் (ஒன்ராரியோ பாராளுமன்ற) முன்றலில், முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் நான்காம் ஆண்டு நினைவாக 'தமிழினப் படுகொலை நாள் 2013' நிகழ்வானது மாபெரும் மக்கள் எழுச்சியோடு ஓரணியில் அணி திரண்ட பேரணியாக எழுச்சிகரமாக நடைபெற்றது. விடுதலைக்காக விதைக்கப்பட்டவை என்றோ ஒரு நாள் தலைமுறைகள் கடந்தாலும் மறுபடியும் பலமுறைகள் முளைத்தே தீரும் என்பதற்கு முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை ஒரு சிறந்த எடுகோள். கனடியத் தமிழர் தேசிய அவையின் ஒருங்கிணைப்பில் கனடாத் தமிழர் சமூகமும், மாணவர் சமூகமும் மற்றும் ஏனைய அமைப்புக்களையும் பொதுமக்களையும் உள்ளடக்கிய மக்கள் சமூகமாக ஒருங்கிணைந்து இந்த மாபெரும் நிகழ்வு நடந்தேறியது.


Canada Kanthasamy Kovil
NIRO-DANCE-100213
Ramans2011
Mahesan supramaniyam 031109
INNSYS-20120930
Suresh-remax-2013-01-01
TDE_Computers2011
TamilsGuid-191012-2013
AJRwindows22.05.13
RoyaShades-l2011(04-12-11)
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com