Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 25, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
கூடங்குளம் தாக்குதல் சம்பவத்துக்கு கட்சித் தலைவர்கள் கண்டனம்!
[Tuesday, 2012-09-11 07:15:05]
News Service

கூடங்குளத்தில் போராட்டக் குழுவினர் மீது தமிழக காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூடு, தடியடி சம்பவங்களுக்கு கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

  

விஜயகாந்த் (தேமுதிக தலைவர்):

கூடங்குளம் அணு மின் நிலையம் தொடங்கப்படுவதையொட்டி, அப்பகுதி மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். அரசு, முறையாக அவர்களிடம் எத்தகைய பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. இந்த சூழ்நிலையில் எவ்வித தடுப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் பாமர மக்கள் பலர் கூடியுள்ள ஒரு போராட்டத்தில் எடுத்த உடனேயே காவல்துறை கண்மூடித்தனமாக தாக்குவது என்பது அந்த மக்களைப் பற்றி அரசு ஒரு பொருட்டாக கருதவில்லை என்பதும், துச்சமாகவே எண்ணியிருக்கின்றனர் என்பதும் வெளிப்படையாக தெரிகிறது.

தங்களிடம் காவல் துறை இருக்கிறது என்ற காரணத்தினாலேயே நெறிமுறைகளுக்கு மாறாக எவ்வித ஆயுதங்களும் இல்லாமல் அறவழியில் போராடும் மக்களை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளதை வன்மையாக கண்டிக்கின்றேன். மேலும் இந்த நிலை தொடர்வதை தடுக்கும் வகையிலும், இந்த சிக்கல் ஒரு பெரிய நெருக்கடியாக உருவாகாத வகையிலும் தீர்க்கப்பட வேண்டுமானால் முதல்வர் கூடங்குளம் பகுதிக்கு நேரில் சென்று அந்த மக்கள் பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண்பதுதான் ஒரே வழி என்று கருதுகிறேன்.

ராமதாஸ் (பாமக நிறுவனர்):

கூடங்குளம் பிரச்னையில் இதுவரை மக்களுக்கு சாதகமாக நடந்து வந்த தமிழக அரசு, இப்போது ஆங்கிலேயர் ஆட்சி காலத்து வைஸ்ராய்களை போல மாறி, மத்திய அரசின் உத்தரவுக்கு பணிந்து, அப்பாவி மக்கள் மீது ஒடுக்குமுறையை ஏவிவிடுவது முறையல்ல. கூடங்குளம் மக்களின் உணர்வுகளை மிதிப்பதை விட்டுவிட்டு, அவர்களின் உணர்வுகளை மதித்து அரசு செயல்பட வேண்டும். கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரவுள்ள வழக்கு விசாரணை முடியும் வரை அணு உலையில் எரிபொருள் நிரப்புவதை மத்திய அரசு நிறுத்தி வைக்க வேண்டும். இது தொடர்பாக தமிழக அமைச்சரவையை உடனடியாக கூட்டி தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் மாநில செய லாளர்):

தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கிராமத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை கலைக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அந்தோணி என்ற மீனவர் மாண்டுபோன செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது, வேதனையளிக்கிறது. காவல் துறையினரின் துப்பாக்கிச்சூடு நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டு சுமுகமான நிலை ஏற்பட ஒத்துழைக்க வேண்டும். அரசும் அமைதியை ஏற்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கையையும் எடுக்க வேண்டும்.

பொன்.ராதாகிருஷ்ணன் (பாஜ மாநிலத் தலைவர்):

போராட்டக்காரர்கள் மீது காவல் துறை தடியடி நடத்தியிருப்பது வருத்தத்திற்கும், கண்டனத்திற்கும் உரியதாகும். இடிந்தகரை மக்கள் போராட்ட களத்தில் இறங்கிய போதே அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் இது போன்ற சூழ்நிலை ஏற்பட்டிருக்க வாய்ப்பு இல்லை. உயர் நீதிமன்றம் அணு உலை ஆபத்தில்லாதது. உலகின் பல பகுதிகளில் ஏற்பட்ட விபத்துக்கள் போல் இங்கு வர வாய்ப்பில்லை என்று தெளிவுபட தெரிவித்தவுடன், மத்திய அரசு பணி தொடங்க காட்டிய அவசரத்தை மக்களின் பயத்தை போக்குவதற்கும், புரிய வைப்பதற்கும் மேற்கொண்டிருக்க வேண்டும். மக்களின் உணர்வுகளை கொஞ்சம் கூட புரிந்து கொள்ளாமல் சுமுகமாக முடிந்திருக்க வேண்டிய துவக்கம். தற்போது, கலவரமாக மாறியிருப்பதற்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்.

சரத்குமார் (சமக தலைவர்):

கூடங்குளத்தில் பதற்ற நிலை உருவானதும், போராட்டக்குழுவின் தலைவர் உள்பட பலர் தப்பியோடி இருப்பது அவர்களது நம்பகத்தன்மையை சந்தேகிக்க வைக்கிறது. மேலும், இப்போராட்டத்தில் அப்பாவி பொதுமக்களை பாதிப்பிற்கு உள்ளாக்கி இருப்பது கண்டனத்துக்குரியது. எனவே, பொதுமக்கள் தீய சக்திகளின் வதந்திகளை நம்பாமல் அமைதி காத்து, சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதில் முதல்வருக்கு ஆதரவு அளிக்க வேண்டும். அரசியல் தலைவர்களும் இப்பிரச்னையை அரசியல் ஆக்காமல் எதிர்மறை விமர்சனங்களை விதைப்பதை விட்டுவிட்டு சுமூக நிலை உருவாக்க ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

எஸ்.எம்.தெஹ்லான் பாகவி (எஸ்டிபிஐ மாநில தலைவர்):

பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட மக்கள் மீது காவல் துறை கொடூரமாக தடியடி மற்றும் கண்ணீர் புகை தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இந்த தாக்குதல் ஜனநாயக விரோதமானது, கண்டிக்கத்தக்கது. இந்த அசாதாரண சூழ்நிலைக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும். மக்கள் போராட்டங்களை அடக்குமுறையில் தடுத்து நிறுத்திவிட முடியாது என்ற வரலாற்று உண்மையை அரசுக்கு நினைவுபடுத்துகிறேன். அரசு இடிந்தகரை பகுதியில் தனது ஜனநாயக விரோத நடவடிக்கையை கைவிட்டு மக்களோடு பேச்சு நடத்தி சுமூகமான சூழலை உருவாக்க வேண்டும்.

எஸ்.ரிபாயீ (மனித நேய மக்கள் கட்சித் தலைவர்):

போலீசாரின் இந்த நடவடிக்கை முள்ளிவாய்க்கால், தாமிரபரணி படுகொலை சம்பவத்தை நினைவுபடுத்துகிறது. தமிழக அரசின் இந்த வன்முறையை வன்மையாக கண்டிக்கிறோம். போலீஸ் வன்முறையை அரசு கைவிட வேண்டும்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

அறுபது ஆண்டுகளில் யாரும் பெறாத இடத்தைப் பெற்றார் டிஎம்எஸ் - கருணாநிதி இரங்கல்!
[Saturday, 2013-05-25 18:52:59]

சென்னையில் இன்று காலமான பிரபல பின்னணிப் பாடகர் டி.எம்.செளந்தரராஜனுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:- 1950ஆம் ஆண்டில் சேலம் மாடர்ன் தியேட்டரில் மந்திரிகுமாரி திரைப்படத்திற்கு நான் திரைக்கதை-வசனம் எழுதிய காலத்திலிருந்து, நண்பர் டி.எம்.எஸ். அவர்களுடன் எனக்கு நல்ல நட்பு உண்டு. திரை இசை, மக்கள் இசை! அதன் அறுபது ஆண்டு கால வரலாற்றில் வேறு எந்தப் பாடகரும் பெறாத இடத்தை டி.எம்.எஸ். பெற்றிருக்கிறார். தியாகராஜ பாகவதரைப் பின்பற்றிப் பாடத் தொடங்கியவர்; இசை அமைப்பாளர் ஜி. ராமநாதனால் சிறந்த பின்னணிப் பாடகராக உருவாக்கப்பட்டவர்.



ஐபிஎல் சூதாட்டத்தில் கிறிஸ் கெய்ல் மீதும் சந்தேகம்!
[Saturday, 2013-05-25 18:42:17]

நாட்டை உலுக்கி எடுத்து வரும் ஐபிஎல் பிக்ஸிங் விவகாரத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் புயலாக வர்ணிக்கப்படும் கிறிஸ் கெய்ல் பெயரும் அடிபடுகிறது. பிக்ஸிங் விவகாரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 3 வீரர்கள் சிறைக்குப் போனார்கள். பிறகு நாட்டின் பல நகரங்களிலும் பல புக்கிகள் தொடர்ந்தும் சிக்கி வருகின்றனர். பாலிவுட் நடிகர் வின்துவும் சிக்கப் போய் இப்போ சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகி குருநாத் மெய்யப்பன் சிறைக்குப் போயிருக்கிறார். அத்துடன் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின் 8 வீரர்கள் சிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்த நிலையில் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர் கிறிஸ் கெய்ல் பெயரும் பிக்ஸிங் விவகாரத்தில் அடிபடுகிறது.



ஆந்திராவில் அனலாய் கொதிக்கும் வெயில் - நேற்று மட்டும் 293 பேர் பலி!
[Saturday, 2013-05-25 18:20:26]

ஆந்திராவில் கடந்த சில நாட்களாக அனல் காற்றுடன் வெயில் கொளுத்துகிறது. நேற்று மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 115 டிகிரிக்கும் அதிகமாக வெயில் பதிவானது. கம்மம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 122 டிகிரி வெயில் கொளுத்தியது. நெருப்பு மழை கொட்டுவது போல் அனல் காற்று வீசியது. இரவு 10 மணி ஆன போதிலும் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை. அனல் காற்று மற்றும் வெயிலின் வெப்பத்துக்கு ஆந்திராவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 293 பேர் பலியானார்கள். இவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள், கூலித் தொழிலாளர்கள், குழந்தைகள் ஆவார்கள்.



மணிப்பூரில் பேச்சுக்கு வந்த போராளிக் குழுத் தலைவர் சுட்டுக்கொலை!
[Saturday, 2013-05-25 17:58:50]

மணிப்பூர் மாநிலத்தைப் பிரிக்க வேண்டும் என்று குகி தேசிய முன்னணி உள்ளிட்ட பல போராளி இயக்கங்கள் போராடி வருகின்றன. தற்போது அந்த இயக்கங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதற்காக நியமிக்கப்பட்ட சிறப்பு முகாம்களில் தீவிரவாத இயக்க தலைவர்கள் தங்கியிருக்கின்றனர். அமைதி பேச்சுவார்த்தைக்காக, சேனாபதி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தங்கியிருந்த குகி தேசிய முன்னணி தலைவர் சீகோபாவ் கிப்கன் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அந்த முகாமின் கமாண்டராகவும் அவர் செயல்பட்டு வந்தார்.



எல்லையில் பாகிஸ்தான் படையினர் சுட்டதில் இந்திய பிரிகேடியர் படுகாயம் - மற்றொரு வீரர் கண்ணிவெடிக்குப் பலி!
[Saturday, 2013-05-25 17:52:00]

இந்திய எல்லையான காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பிரிகேடியர் ஒருவரும், 2 வீரர்களும் காயமடைந்தனர். எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் துத்மாரி கலி என்ற இடத்தில், பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறிய ரக ஆயுதங்களைக் கொண்டு இந்திய எல்லையைக் குறி வைத்து தாக்குதல் நடத்தினர். இதில் மூன்று பேர் காயமடைந்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் எல்லைப் பகுதியான பூஞ்சில் நேரிட்ட கண்ணிவெடித் தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார்.



மருத்துவமனையில் ராமதாசை சந்தித்து நலம் விசாரித்தார் கனிமொழி - பாமகவுடன் கூட்டணிக்கு திமுக புதுவியூகம்!
[Saturday, 2013-05-25 08:05:35]

மாநிலங்களவைத் தேர்தலில் தி.மு.க. எப்படியாவது ஓரிடத்தையாவது கைப்பற்ற வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறது. கனிமொழி, திருச்சி சிவா ஆகிய இருவரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வரும் ஜூலை மாதம் 24-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், கனிமொழியை மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக்க வேண்டும் என்கிற முயற்சியில் தி.மு.க. தலைமை ஈடுபட்டிருக்கிறது.மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணத்தில் கனிமொழி, கடலூர் மற்றும் தூத்துக்குடி தொகுதிகளில் கள ஆய்வுகள் செய்திருந்தார்.



"இந்தியத் தூதரகம் விடுவிக்க முயற்சிக்கவில்லை"- சிறையில் இருந்து மீண்ட காரைக்கால் மீனவர்கள் குற்றச்சாட்டு!
[Saturday, 2013-05-25 07:53:57]

தங்களை விடுவிக்க, இலங்கை அமைச்சர்கள் சிலர் எடுத்த முயற்சியை கூட இந்திய தூதரகம் எடுக்கவில்லை என்று காரைக்கால் திரும்பிய தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 26 மீனவர்கள் நேற்று காரைக்கால் திரும்பினர். அவர்களை உறவினர்கள், சக மீனவர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர். காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ஏப்ரல் 3ம் தேதி 5 படகுகளில் 26 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். எல்லையில் அத்துமீறி நுழைந்ததாக அவர்களை 5ம் தேதி இலங்கை கடற்படை கைது செய்தது. இந்நிலையில், 20ம் தேதி மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. தொடர்ந்து இலங்கை பகுதியில் கடல் சீற்றம் காணப்பட்டதால், மீனவர்களை இந்திய கடற்படை வசம் ஒப்படைப்பதில் சிக்கல் நீடித்தது.



தஞ்சாவூரில் நவீன மயப்படுத்தப்பட்ட விமானப்படைத்தளம் - நாளை மறுநாள் திறப்பு விழா!
[Saturday, 2013-05-25 07:46:42]

தஞ்சையில் ரூ.150 கோடியில் நவீன மயமாக்கப்பட்டுள்ள விமானப்படை தளத்தின் திறப்பு விழா வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி பங்கேற்கிறார். தஞ்சை புதுக்கோட்டை சாலையில் உள்ள விமானப்படை தளத்தில் ரூ.150 கோடியில் 2 ஆண்டுகளாக பல்வேறு நவீனமயமாக்கல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதில் ஒரு பகுதியாக புதிதாக 4 கிமீ நீளமுள்ள 2 விமான ஓடுதளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தென்னிந்திய விமானப்படையை வலுப்படுத்தும் விதமாக இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு கடந்த 4 மாதமாக ஆய்வுகள் மற்றும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது.



மாணவியைக் கடத்த முயன்ற நடிகை சனாகான் தலைமறைவு - கைது செய்ய பொலிஸ் தேடுதல்!
[Saturday, 2013-05-25 07:41:54]

நடிகை சனாகான் 6வது பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் சல்மான்கானுடன் கலந்து கொண்டவர். தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். நடிகர்கள் ரித்திக் ரோஷன், அக்ஷய் குமார் ஆகியோருடன் பல விளம்பர படங்களில் நடித்தவர். 2007ம் ஆண்டு இவர் நடித்த உள்ளாடை விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது ஆபாசமாக இருப்பதாக கூறி மத்திய அரசு அதற்கு தடை விதித்தது. சல்மான் கானின் மென்டல் படத்தில் நடிக்க சனாகான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன் படப்பிடிப்பும் தொடங்கி விட்டது. இதனிடையே, சனா கானின் உறவினரான நாவெட்டுக்கும் (18), சான்பாடாவை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவிக்கும் டுவிட்டர் மூலம் தொடர்பு ஏற்பட்டது. மாணவியை திருமணம் செய்து கொள்வதாக நாவெட் தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்.



தமிழகத்தில் தங்கியுள்ள ஒரு லட்சம் இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை - வலியுறுத்துகிறார் கருணாநிதி!
[Saturday, 2013-05-25 07:34:51]

தமிழகத்தில் தங்கியுள்ள ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட கேள்வி பதில் அறிக்கையிலேயே இதனை வலியுறுத்தியுள்ளார். 2 லட்சத்து 60 ஆயிரம் இந்தியர்களுக்கு அமெரிக்கக் குடியுரிமை வழங்கக் கூடிய முக்கிய மசோதா வுக்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளிக்கப் போவதாக சொல்லப்படுகிறதே என்ற கேள்விக்குப் பதிலளித்துள்ள கருணாநிதி, அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இன்றி 1 கோடியே 10 லட்சம் வெளிநாட்டினர் வாழ்ந்து வருவதாகவும், அவர்களில் 2 லட்சத்து 60 ஆயிரம் பேர் இந்தியர்கள் என்றும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.



சீன உளவாளி திபெத் எல்லையில் சுட்டுக்கொலை - தலாய்லாமாவை கொல்ல வந்தவரா?
[Friday, 2013-05-24 18:17:38]

இமாசலபிரதேச மாநிலம் காங்க்ரா மாவட்டத்தில் திபெத் எல்லைப் பகுதியில் சீன உளவாளி பெம்பா டி செரிங் என்பவரை போலீசார் சுட்டுக் கொன்றனர். அவர் சீன உளவாளிதான் என்பதை திபெத்திய அரசு உறுதி செய்தது. திபெத்தை சீனாவிடம் இருந்து மீட்க போராடி வரும் புத்த துறவி தலாய்லாமா தர்மசாலாவில் அடைக்கலம் புகுந்துள்ளார். அவருக்கு சீனாவிடம் இருந்து மிரட்டல் வந்தது.டிசெரிங் சீன விடுதலை ராணுவத்தைச் சேர்ந்தவர்,தற்போது மக்கள் ஆயுதபடை என்ற இயக்கத்தில் இருக்கிறார். அவர் நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.



நடுவானில் விமானத்தின் கண்ணாடியில் திடீர் விரிசல் - 179 பயணிகள் அருந்தப்பு!
[Friday, 2013-05-24 18:01:05]

இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமான கண்ணாடியில் திடீர் விரிசல் ஏற்பட்டது. நிகழ இருந்த பெரும் விபத்தை தடுக்க உடனடியாக விமானம் கொல்கத்தாவில் தரையிறக்கப்பட்டது. இதனால் 179 பயணிகள் உயிர் தப்பினர். 6இ 205 என்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம்,179 பயணிகளுடன் நேற்று மதியம் பகல் 12.57 மணிக்கு, கொல்கத்தாவில் இருந்து திப்ரூகருக்கு புறப்பட்டது. விமானம் கிட்டத்தட்ட 30,000 அடி உயரத்தைத் தொட்டபோது, முன்புறக் கண்ணாடியில் விரிசல் இருந்ததை விமான ஓட்டிகள் கவனித்தனர்.



இந்தியா முழுவதும் வாட்டியெடுக்கும் வெயில் - நேற்று ஒரே நாளில் மட்டும் ஆந்திராவில் 57 பேர் பலி!
[Friday, 2013-05-24 17:50:48]

அக்னி வெயில் வடமாநில மக்களை வாட்டி வதைக்கிறது. தலைநகர் டெல்லியில் 113.5 டிகிரி வெயில் கொளுத்தியது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் 118 டிகிரியும், ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகரில் அதிகபட்சமாக 120 டிகிரியும் வெயில் பதிவானது. எப்போதும் குளு குளு என இருக்கும் ஜம்மு காஷ்மீரில் கூட 110 டிகிரிக்கு மேல் வெயில் அடித்தது. ஆந்திராவில் பல மாவட்டங்களில் நேற்று 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது. கரீம்நகர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 120 டிகிரி வெயில் கொளுத்தியது. ஆந்திர மாநிலத்தின் ஊட்டி என அழைக்கப்படும் விசாகப்பட்டினம் மன்னியம் மலைவாசஸ்தலத்தில் நேற்று 105 டிகிரி பதிவானது.



சூதாட்டப் புகாரில் சிக்கியுள்ள கிரிக்கெட் வீரர்களுடன் தொடர்பு இல்லை - நடிகை லட்சுமி ராய் அலறல்!
[Friday, 2013-05-24 17:27:57]

சூதாட்ட புகாரில் சிக்கியுள்ள கிரிக்கெட் வீரர்கள் அல்லது மற்ற வீரர்களுடன் என்னை இணைத்துப் பேசுவது தவறு. எனக்கும் அவர்களுக்கும் தொடர்பில்லை. டோனி, ஸ்ரீசாந்த் போன்றவர்களுடன் பேசியே ரொம்ப நாளாகிவிட்டது என திடீர் அறிக்கை விடுத்துள்ளார் லட்சுமி ராய். சூதாட்ட புகாரில் சிக்கிய கிரிக்கெட் வீரர்களுடன் தொடர்புள்ள நடிகைகள் என்ற பட்டியலில் நடிகை லட்சுமிராய் பெயர் பலமாக அடிபடுகிறது. இவர் ஐ.பி.எல் கிரிக்கெட்டில் தூதுவராக இருந்துள்ளார். டோனிக்கு மிக நெருக்கமானவர் என்றும் கிசுகிசுக்கப்பட்டார். இதையெல்லாம் பார்த்து மகா கோபத்துக்குள்ளாகியிருக்கும் லட்சுமி ராய் அளித்துள்ள மறுப்பு செய்தியில், கிரிக்கெட் வீரர்கள் டோனி, ஸ்ரீசாந்துடன் என்னை இணைத்துப் பேச வேண்டாம்.



காஷ்மீரில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் - 4 இந்தியப்படையினர் பலி!
[Friday, 2013-05-24 17:20:51]

ஜம்மு- காஷ்மீர் பிராந்தியத்தில் ஆயுததாரிகள் மறைந்திருந்து நடத்திய தாக்குதலில் இந்தியப் படையினர் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். கிளர்ச்சிப் போராளிகளுக்கு எதிராக படை நடவடிக்கையைத் தொடங்கியுள்ள துருப்பினரை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாக இந்திய இராணுவப் பேச்சாளர் லெப்.கர்ணல் அன்கூர் வஷிஸ்ட் கூறினார். புல்வாமா மாவட்டத்தில் ஸ்ரீநகரிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் புச்சூ என்ற கிராமத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபடுவதற்காக சென்று கொண்டிருந்த படையினரே தாக்குதலில் சிக்கியுள்ளனர்.



அவுஸ்ரேலியாவுக்கு தப்ப முயன்ற 5 இலங்கை அகதிகள் கைது - பணம் வாங்கி ஏமாற்றிய மூவருக்கு பொலிஸ் வலைவீச்சு!
[Friday, 2013-05-24 08:03:10]

இலங்கை அகதிகளை, அவுஸ்ரேலியா அழைத்துச் செல்வதாக கூறி, ஐந்து லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு ஏமாற்றிய, மூன்று பேரை போலீசார் தேடுகின்றனர். கோவை, குனியமுத்தூர் அருகே வசிக்கும் அய்யப்பன் என்பவர் வீட்டுக்கு, நேற்று முன்தினம் ஐந்து இலங்கை அகதிகள் உட்பட ஏழு பேர் வந்தனர். குனியமுத்தூர் போலீசார், அய்யப்பன் வீட்டில் தங்கியிருந்தவர்களை சுற்றி வளைத்தனர்; இருவர் தப்பியோடினர். பிடிபட்ட ஐந்து பேரிடம் நடத்திய விசாரணையில், தர்மபுரி மாவட்ட அகதிகள் முகாமைச் சேர்ந்த சங்கர், ரத்தினராஜ், ஹுசூர் முகாமை சேர்ந்த காந்தகுமார், திருச்சி முகாமை சேர்ந்த நாகதீபன் மற்றும் மதுரை முகாமை சேர்ந்த ரமணன், தப்பியோடியவர்கள் தயா மற்றும் முரளி என தெரிந்தது.



கணவர் வெப்கேமிராவில் பார்த்துக் கொண்டிருக்க தூக்குப் போட்டுத் தற்கொலை செய்த பெண்!
[Friday, 2013-05-24 07:59:32]

காதல் திருமணம் செய்த இளம் பெண்,வரதட்சணை பிரச்னையால் , பெற்றோர் வீட்டில் இருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை ஆன்லைன் வாயிலாக கணவன் பார்த்து அதிர்ச்சியடைந்தார். மும்பை புறநகர் பகுதியான ஜுகூ பகுதியைச் சேர்ந்தவர் ஷோபனா ஸ்ருதி (25),இவரும், சுவப்னில் சுர்வி என்பவரும், காதலித்து வீட்டிற்கு தெரியாமல் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். கணவனின் பெற்றோர் இவர்கள் திருமணத்தை ஏற்றுக் கொண்டாலும், வரதட்சணை அதிகமாக கேட்டதால் கணவனும் மனைவியும் சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்தனர்.



"சோனியாவைப் போல நான் இல்லை" - ராகுலின் எச்சரிக்கையால் மிரண்டு போயுள்ள காங்கிரஸ் தலைவர்கள்!
[Friday, 2013-05-24 07:54:13]

காங்கிரஸ் தலைவர் சோனியா மென்மையானவர்; நான் அப்படிப்பட்டவன் அல்ல. கட்சியில் ஒழுங்கீனத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது' என, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் எச்சரித்துள்ளார்.டில்லி மாநில காங்கிரஸ் தலைவர்களுடன், ராகுல், நேற்று ஆலோசனை நடத்தினார்.இந்த ஆலோசனையின் போது, எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட, ஒன்றிய செயலர்கள், கவுன்சிலர்கள் என, அனைவரையும் தனித்தனியே அழைத்து ராகுல் பேசினார்.அப்போது, ராகுல் பேசியதாக, தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது:



துப்பாக்கியால் சுட்டு மிரட்டிய தொழிலதிபரை சிறையிலடைக்க முடியாமல் திணறும் பொலிஸ்!
[Friday, 2013-05-24 07:47:48]

மதுரையை சேர்ந்த தொழிலதிபர் விஜயகர் (50). கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு அபார்ட்மென்டில் வசிக்கிறார். நேற்று முன்தினம் இவர் திடீரென வீட்டை உள்பக்கமாக பூட்டி கொண்டு துப்பாக்கியை காட்டி வெளியே இருந்தவர்களை மிரட்டினார். 14 மணி நேர போராட்டத்துக்கு பிறகு, தப்ப முயன்ற அவரை போலீசார் மடக்கினர். விஜயகரை போலீசார் கைது செய்து 7 பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்தனர். பின்னர் பெருங்களத்தூரில் உள்ள எழும்பூர் 21வது மாஜிஸ்திரேட் வீட்டில் நேற்று காலை ஆஜர்படுத்தினர். புழல் சிறையில் அடைக்க கொண்டு சென்றபோது, அங்கு விஜயகரை சோதித்த மருத்துவர்கள் அவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததால், சிறையில் அடைக்க மறுத்தனர். பின்னர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு விஜயகரை அழைத்து வந்தனர்.



இராணுவம் எந்நேரமும் போருக்குத் தயாராக இருக்க வேண்டும்! - பிரதமர் மன்மோகன்சிங்
[Friday, 2013-05-24 07:42:17]

முறைகேடுகளை தடுக்க ராணுவ தளவாடங்கள் கொள்முதலை வெளிப்படையாக மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். அரியானாவின் குர்கான் நகரில் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்டும் விழா நேற்று நடந்தது. அடிக்கல் நாட்டி பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது: ராணுவ தளவாடங்கள் வாங்குவதில் முறைகேடு நடப்பதாக புகார்கள் வருகிறது. இதை தடுக்க தளவாடங்கள் வாங்குவதற்காக நடைமுறையில் மாற்றம் செய்ய வேண்டும். வெளிப்படையான முறையில் ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் வாங்க புதிய நடைமுறை வகுக்கப்படுகிறது. இதை அமல்செய்யும்போது, முறைகேடுகள் நடப்பதை தடுக்க முடியும்.


NIRO-DANCE-100213
TDE_Computers2011
Canada Kanthasamy Kovil
RoyaShades-l2011(04-12-11)
Suresh-remax-2013-01-01
Mahesan supramaniyam 031109
INNSYS-20120930
Ramans2011
AJRwindows22.05.13
TamilsGuid-191012-2013
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com