Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 19, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்கு வைகோ கண்டனம்!
[Monday, 2012-09-10 19:34:42]
News Service

கூடங்குளத்தில் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது-

  

கூடங்குளம் அணுமின் நிலையம் பேரழிவை ஏற்படுத்தும் என்பதால், அந்தப் பகுதியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள், இடிந்தகரையில், ஓராண்டுக்கும் மேலாக அமைதி வழியில், அறவழியில், பட்டினிப் போராட்டம் நடத்தி வந்தனர். இம்மாதிரி ஒரு போராட்டம், ஒரே இடத்தில், ஓராண்டுக்கும் மேலாக, அறவழியில் நடந்த வரலாறு, இந்தியாவில் வேறு எங்கும் கிடையாது. சாதி, மதம், கட்சி எல்லைகளைக் கடந்து, அம்மக்கள் போராடினர்.

1988 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து, அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி அறிவித்த நாளில் இருந்து, இப்பகுதி வாழ் மக்கள், குறிப்பாக மீனவ சமுதாயத்தினர் போராடி வருகின்றனர். குறிப்பாக ஜப்பானில் புகுஷிமா அணு உலை விபத்து நேர்ந்ததற்குப் பின்னர், உலகத்தில் பல்வேறு நாடுகள் அணு உலைகளை மூட முடிவு செய்து உள்ள நிலையில், இடிந்தகரைப் போராட்டம், மாபெரும் மக்கள் போராட்டம் ஆகியது.

ஆனால், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, அணு உலையை இயக்கியே தீருவோம் என்றதோடு, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், மேலும் அணு உலைகளை அங்கே அமைக்கப் போவதாக அறிவித்தது. தமிழ்நாட்டில் மின்வெட்டால் பாதிக்கப்பட்ட மக்களிடம், கூடங்குளம் அணு உலை மூலமாக மின்சாரம் கிடைக்கும் என்ற பிரச்சாரத்தை, மத்திய அரசும், மாநில அரசும் மேற்கொண்டன. இந்தியாவில், மொத்தம் 21 அணு உலைகள் தருகின்ற மின்சாரம், நாட்டின் மொத்த மின்சார உற்பத்தியில், 2.7. விழுக்காடு மட்டுமே ஆகும். கூடங்குளம் அணு உலையால், தமிழ்நாட்டுக்கு அதிகபட்சம், 250 மெகா வாட் மின்சாரம்தான் கிடைக்கும்.

மின் வாரியத்தைச் சீர்படுத்துவதன் மூலம், இயற்கை எரிவாயு மூலமும், புனல் மின் நிலையங்கள், அனல் மின் நிலையங்கள் மூலம், சூரிய வெப்பத்தின் மூலமும், நமக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ளலாம். கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, இலங்கைக்கு கொண்டு போய்க் கொடுக்க, கடலுக்கு அடியில் கேபிள் அமைக்கும் வேலையும் வேகமாக நடக்கின்றது.

இடிந்தகரையில் நடந்த போராட்டத்தில், மாற்றுத்திறனாளிகளும், கன்னியாஸ்திரீகளும் ஆயிரக்கணக்கான தாய்மார்களும், 365 நாள்கள் தொடர்ந்து, உண்ணாநிலை அறப்போர் நடத்தினர். இத்தனைக்குப் பிறகு, தமிழகத்தின் முதல் அமைச்சர், அணு உலையால் எந்தப் பாதிப்பும் இல்லை என்று செப்டம்பரில் அறிவித்தவர், கடற்கரையோர மக்களின் கொந்தளிப்பைக் கண்டு, அவர்களின் அச்சம் தீரும்வரை, அணு உலையை இயக்க மாட்டோம் என்று உறுதி கொடுத்தார்.

ஆனால், அந்த உறுதிக்கு மாறாக, அணு உலையை இயக்குவதற்கு அனுமதி அளித்தார். மக்களின் போராட்டத்தை நசுக்கி விடலாம் என்று கருதி, மத்திய அரசு, அணு உலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்பும் வேலையைத் தொடங்கியது. இவர்களது நோக்கம் எல்லாம், இங்கே கிடைக்கும் புளுடோனியத்தை, அணுகுண்டுக்குப் பயன்படுத்துவதற்காகத் தான். எனவே, நேற்றைய தினம், இடிந்தகரை, கூடங்குளம், வைராவிக்குளம், கூட்டப்புளி பகுதிகளைச் சேர்ந்த மக்கள், அணு உலையைத் திறக்கக்கூடாது என்று அமைதிவழியில் அறப்போர் நடத்தினர்.

இன்று, அவர்களை, காவல்துறையினர் அச்சுறுத்தி மிரட்டி, போராட்டத்தை ஒடுக்கி விடலாம் என்று, தடியடி நடத்தி, கண்ணீர்ப்புகை வீசினர். இதில் மீனவர்கள் பலர் காயம் அடைந்து உள்ளனர். கூடங்குளத்தில் தெருவில் போவோர் வருவோரையெல்லாம், போலீசார் கடுமையாகத் தாக்கி உள்ளனர். கடற்கரை நெடுகிலும் பதற்றம் ஏற்பட்டதற்கு, காவல்துறையின் நடவடிக்கைகளே முழுக்காரணம் ஆகும் என்பதால், மதிமுக சார்பில் பலத்த கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு அரசு, கூடங்குளம் அணுமின் நிலையத்தை இயக்க அனுமதிக்கக் கூடாது. அப்பகுதி வாழ் மக்கள் மீது போடப்பட்டு உள்ள அனைத்து வழக்குகளையும், காவல்துறை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது, காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் திருச்செந்தூருக்கு அருகில் ஒரு மீனவர் பலியான செய்தி, மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் மீது காவல்துறை ஏவிய அடக்குமுறையைக் கண்டித்து, நாளை மதிமுக அறப்போராட்டம் நடத்தும்.

ஆங்காங்கு உள்ள தமிழ் உணர்வாளர்களும், ஒருமித்த கருத்து உடைய இயக்கங்களைச் சேர்ந்தவர்களும், இப்போராட்டத்தில் பங்கு ஏற்பர். நாளை சென்னையில் நடைபெறும் அறப்போராட்டத்தில், மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில், மல்லை சத்யா, வேளச்சேரி மணிமாறன், டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், பாலவாக்கம் சோமு, ந.மனோகரன், சீமா பசீர் உள்ளிட்டோர் பங்கு ஏற்பர். கரூரில், காலை 11 மணிக்கு நடைபெறும் அறப்போர் ஆர்ப்பாட்டம், வைகோ தலைமையில் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

இந்திய இராணுவத்துக்குள் பாகிஸ்தான் உளவுப்பிரிவு ஊடுருவல் - முக்கிய தகவல்களை வழங்கிய அதிகாரி கைது!
[Sunday, 2013-05-19 10:03:23]

பாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐ-க்கு இந்திய ராணுவத்தின் முக்கிய தகவல்களை அளித்த குற்றச்சாட்டுக்காக ராணுவப் பணியாளர் பி.கே.சின்ஹா (43) கைது செய்யப்பட்டார். சின்ஹா, தென்மேற்குப் பகுதி படைப்பிரிவில் ராணுவ வீரர்களுக்கு ஆயுதங்கள் உள்ளிட்ட பொருள்கள் சப்ளை செய்யும் பிரிவில் எழுத்தராகப் பணி புரிந்து வருகிறார். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சின்ஹா, இந்திய ராணுவத்தின் நடமாட்டம் உள்ளிட்ட முக்கியமான தகவல்கள் மற்றும் ஆவணங்களை நேபாளத்தில் செயல்படும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ பிரிவிடம் அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 15-ம் தேதி அலுவலக ரகசியச் சட்டத்தின் கீழ் சின்ஹா கைது செய்யப்பட்டார்.



திருப்பதியைத் திணறடிக்கும் இலட்சக்கணக்கான பக்தர்கள் - கூட்டநெரிசலில் பெண்கள், குழந்தைகள் மயக்கம்!
[Sunday, 2013-05-19 08:26:30]

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஒரே நாளில் லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நெரிசலில் சிக்கிய குழந்தைகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆந்திரா, தமிழகம், கர்நாடகா மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். ஏழுமலையானை தரிசிக்க மலைப்பாதை வழியாக நடந்து வரும் பக்தர்கள் நேற்று அதிகளவில் குவிந்தனர். பக்தர்களின் வருகை நேற்று அதிகமாக இருந்ததால் வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகளும் நிரம்பியது. இதனால் நாராயணகிரி தோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கைக்குழந்தைகளுடன் தரிசனத்துக்காக காத்திருந்தனர்.



குடிநீர் உற்பத்தியாளர்களின் போராட்டம் திடீரென வாபஸ் - சென்னை வாசிகள் நிம்மதிப் பெருமூச்சு!
[Sunday, 2013-05-19 08:23:44]

கேன் குடிநீர் உற்பத்தியாளர் போராட்டம் திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது. இன்று முதல் குடிநீர் கேன் விற்பனை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 309 சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை கேன்களில் நிரப்பி விற்கும் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் தண்ணீர் சரியாக சுத்திகரிக்காமல் விநியோகம் செய்யப்படுவதாக நிறைய புகார்கள் வந்தன. இதை தொடர்ந்து, பசுமை தீர்ப்பாயம் உத்தரவின்படி மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தண்ணீர் கேன் நிறுவனங்களுக்கு சீல் வைத்தனர். கடந்த 4 நாட்களில் மட்டும் சுமார் 121 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு பேக்கேஜ் குடிநீர் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.



கடலூர் கூட்டத்தில் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் - பொலிசார் விசாரணை!
[Sunday, 2013-05-19 08:19:39]

காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக் கடலூர் நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூரில் நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த கருத்தரங்கில் காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக் பேசினார். அவர் தனது உரையில் இலங்கையில் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்ட நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த செயல் மக்கள் திரள்வதை பார்த்து அரசுக்கு பயமா என்று எண்ண தோன்றுகிறது. ஜனநாயக அமைப்புகளை கட்டுப்படுத்துவது இந்தியாவின் ஜனநாயகமற்ற முகத்தை காட்டுகிறது. தமிழீழத்துக்கான தமிழக மக்களின் போராட்டம் தனித்து நிற்கவில்லை. நம்முடைய வலிகள் ஒரே மாதிரியானவை.



நாய், நரி, பன்றிக்கு கூட நாட்டை ஆளும் ஆசை வரும்போது, தமிழனுக்கு அந்த ஆசை வரக்கூடாதா? - கடலூரில் சீமான் ஆவேசம்!
[Sunday, 2013-05-19 08:15:08]

கடலூரில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்துக்கு நேற்று தடை விதிக்கப்பட்டது. எனினும், நேற்று காலை நடந்த கருத்தரங்கில் கட்சியின் தலைவர் சீமான் பேசியதாவது: நம் மாநாடு, பொதுக்கூட்டம் மீது தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கையானது நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்பதை காட்டுகிறது. நாய், நரி, பன்றிக்கு கூட நாட்டை ஆள ஆசை வரலாம். ஆனால், தமிழனுக்கு அந்த ஆசை வரக்கூடாது என நினைக்கின்றனர். ஆறு மாதம் கழித்து பார்ப்போம், நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதை. அப்போது அவர்கள் உணர்வார்கள். நாங்கள் இல்லா மல் எந்தக் கட்சியும் தேர்தலில் வெற்றி பெற முடியாது. தமிழீழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார்.



அடுத்த தேர்தலில் விருதுநகரில் மதிமுக போட்டியிடும் என்கிறார் வைகோ!
[Saturday, 2013-05-18 19:55:45]

அடுத்தாண்டு நடைபெற உள்ள பார்லிமென்ட் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் ம.தி.மு.க. போட்டியிடும் என அதன் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். விருதுநகரில் நடைபெற்ற தேர்தல் நிதியளிப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட மதிமுக பொது செயலாளர் வரும் செப்டம்பர்15-ம் தேதி ம.தி.மு.க. மாநாடு விருதுநகரி்ல் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார். கடந்த பார்லிமென்ட் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட வைகோ, காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூரிடம் தோல்வி கண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



2011 ஐபிஎல் போட்டியின் போது ஸ்ரீசாந்த்துக்கு சூதாட்டக்காரர்களுடன் தொடர்பு? - புதிதாக எழும் சர்ச்சை!
[Saturday, 2013-05-18 19:50:57]

ஐ.பி.எல். போட்டியில் கிரிக்கெட் சூதாட்ட புகாரில் சிக்கி கைதான வீரர் ஸ்ரீசாந்த் மீது மேலும் பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. 2011 ஐ.பி.எல். போட்டியின்போதும், இவருக்கு சூதாட்ட தரகர்களுடன் தொடர்பு இருந்திருக்குமோ என்ற சந்தேகம் இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கு எழுந்துள்ளது. 2011-ல் ஸ்ரீசாந்த் கொச்சி அணிக்காக விளையாடினார். அப்போது கொச்சி மைதானத்தில் நடந்த போட்டியில் கொச்சியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் கொச்சி அணி டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்தது. 161 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து ஆடிய பெங்களூர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.



மனைவி மீது சந்தேகப்பட்டு இடுப்பில் பூட்டு மாட்டிய கணவனுக்கு 10 ஆண்டுச் சிறைத்தண்டனை!
[Saturday, 2013-05-18 19:46:28]

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற 40 வயது பெண்ணை, அவரது உறவினர்கள் கடந்த ஆண்டு இந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். வயிற்றில் இருந்த விஷத்தை எனிமா தந்து வெளியேற்ற முயன்ற டாக்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். விஷம் வெளியேற்றப்பட வேண்டிய உறுப்பில் கனமான இரும்பு பூட்டு மாட்டி பூட்டப்பட்டிருந்தது. இதுதொடர்பாக, அந்த பெண்ணிடம் டாக்டர்கள் விசாரித்தபோது அவர், 16 வயதில் எனக்கு திருமணம் நடந்தது. ஆரம்பத்தில் என்னிடம் அன்பாக நடந்து வந்த என் கணவர், நாளடைவில் என் நடத்தையில் சந்தேகப்படத் தொடங்கினார்.



காஷ்மீர் போராட்டமும், தமிழர்களின் போராட்டமும் ஒரே மாதிரியானவை! - காஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவர் யாசின் மாலிக்
[Saturday, 2013-05-18 19:42:35]

காஷ்மீரில் நடைபெறும் விடுதலைப் போராட்டமும் தமிழ்மண்ணில் நடைபெறும் போராட்டமும் ஒரே மாதிரியானவை என்று கூறினார் பிரிவினைவாதத் தலைவரும் ஜம்மு கஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவருமான யாசின் மாலிக். கடலூரில் இன்று பிற்பகல் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் உள்ளரங்குக் கூட்டத்தில் பேசிய அவர், "இன விடுதலைக்கான போராட்டங்கள் அவ்வளவு எளிதாக வெற்றி பெறுவதில்லை. அதுபோல், அடக்குமுறைகள் மூலம் இன விடுதலைக்கான போராட்டங்கள் ஒடுக்கப்பட்டதுமில்லை. காஷ்மீரில் நடைபெறும் போராட்டமும், தமிழர்களின் போராட்டமும் ஒரே மாதிரியானதுதான்.



முள்ளிவாய்க்கால் நினைவு பொதுக்கூட்டத்துக்கு தமிழக அரசு தடை - மீறி கூட்டம் நடத்துகிறார் சீமான்!
[Saturday, 2013-05-18 19:36:07]

இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு வந்ததை ஒட்டி முள்ளிவாய்க்கால் நினைவு தினம் என்ற பொருளில் கடலூரில் பொதுக்கூட்டம் நடத்த நாம் தமிழர் இயக்கத்துக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால் நீதிமன்றம் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில் தமிழக பொலிசார் கூட்டத்தை தடுக்க முயல்வதாகத் தெரிவித்துள்ள நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் தடையை மீறி பொதுக்கூட்டம் நடத்த தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் இயக்கம் பொதுக்கூட்டமும் பேரணியும் நடத்த ஏற்பாடு செய்திருந்த நிலையில், இவற்றுக்கு எதிராக தமிழக பொலிசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவு கோரியிருந்தது.



"எனது மகளின் மரணத்துக்கு நீதி வழங்குங்கள்" - நீதிபதியிடம் கதறி அழுத டில்லி மாணவியின் தாய்!
[Saturday, 2013-05-18 06:36:07]

தில்லியில், ஓடும் பேருந்தில் துணை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் சாகேத் விரைவு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை அவரது தாய் சாட்சியம் அளித்தார். அப்போது, "எனது மகளின் மரணத்துக்கு நீதி வழங்குங்கள்' என்று நீதிபதியிடம் கண்ணீர் மல்க அவர் கை கூப்பி வேண்டிக் கொண்டார். தில்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி ஓடும் பேருந்தில் துணை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். 13 நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு சிங்கப்பூரில் அவர் உயிரிழந்தார்.தில்லி சாகேத் விரைவு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தினமும் விசாரிக்கப்பட்டு வருகிறது. அதில் மாணவியின் தாய் வெள்ளிக்கிழமை அளித்த சாட்சியம் வருமாறு:



100 மி.லீ குடிநீர் பாக்கெட் 7 ரூபா - தண்ணீர் தட்டுப்பாட்டால் தவிக்கும் சென்னை!
[Saturday, 2013-05-18 06:07:26]

பாட்டில், கேன் மற்றும் பாக்கெட்டுகளில் பொதிக்கப்பட்ட குடிநீரை தயாரிக்கும் நிறுவனங்கள், ஸ்டிரைக் அறிவித்து உற்பத்தியை நிறுத்தி உள்ளதால், சென்னை குடிமையங்களில், ஒரு பாக்கெட் குடிநீர் ஏழு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கேன் குடிநீர் பயன்படுத்தி பழக்கப்பட்ட சென்னைவாசிகள், ஸ்டிரைக்கினால் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டால், கேன்களைதேடி அல்லல்பட்டனர்.மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் தருவதாக கூறி, தமிழகத்தின் நகர்ப்புறங்களில், 900க்கும் மேற்பட்ட குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.சென்னை, காஞ்சிபும் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும், இந்த தொழிலில், 309 நிறுவனங்கள் செயல்படுகின்றன.



முள்ளிவாய்க்காலில் தமிழர்களைக் கொன்று குவிக்க துணைபோன காங்கிரஸ் தலைமையகத்துக்கு பூட்டுப்போட முயன்றவர்கள் கைது!
[Saturday, 2013-05-18 05:56:49]

சென்னை, சத்தியமூர்த்தி பவனுக்கு, பூட்டு போடும் முற்றுகை போராட்டம் நடத்திய, இந்து மக்கள் கட்சியினர், 4 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கை, முள்ளிவாய்க்கால் பகுதியில், 2 லட்சம் தமிழர்களை கொன்று குவிக்கக் காரணமான, காங்கிரஸ் கட்சியை, தமிழகத்தை விட்டு வெளியேறும்படி கோரி, சத்தியமூர்த்தி பவனுக்கு பூட்டு போடும் முற்றுகை போராட்டமும் நடத்தப்படும் என, இந்து மக்கள் கட்சியினர் அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று, சத்தியமூர்த்தி பவன் அருகே, இந்து மக்கள் கட்சியினர் திரண்டனர். அவர்கள் அனைவரும், கையில் கொடியுடனும், பூட்டுக்களுடனும் ஓடி வந்து கோஷமிட்டனர்.



பா.ம.க.நிறுவனர் ராமதாசுக்கு வரும் 20ம் தேதி "பைபாஸ் சர்ஜரி'!
[Saturday, 2013-05-18 05:52:37]

பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு, வரும், 20ம் தேதி, சென்னையில் பைபாஸ் சர்ஜரி நடக்கவுள்ளது. விழுப்புரத்தில் போலீஸ் தடையை மீறி, கடந்த, 30ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின், மேலும் சில வழக்குகளிலும், கைது செய்யப்பட்ட அவர், அனைத்து வழக்குகளிலும் ஜாமின் பெற்று, கடந்த, 11ம் தேதி விடுதலை ஆனார். மூச்சு திணறல் காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில், அன்று இரவே அவர் சேர்க்கப்பட்டார்.



மனைவிக்காக இன்னொரு தாஜ்மகால் கட்டினார் போஸ்ட் மாஸ்டர்!
[Saturday, 2013-05-18 05:49:39]

உத்தர பிரதேசத்தில் மீண்டும் ஒரு காதல் சின்னம் கட்டப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டர்ஒருவர், தன் மனைவியின் நினைவாக, தாஜ்மகாலின் மாதிரியில்,கட்டடம் ஒன்றை கட்டிஉள்ளார். உத்தர பிரதேச மாநிலம், புலந்த்சர் மாவட்டத்தை சேர்ந்தவர், பைசல் ஹசன் கதாரி, 77. தபால் துறையில், போஸ்ட் மாஸ்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி, தஜம்முலி பேகம், 2011ல், மரணம் அடைந்தார்.பைசல் ஹசன் - தஜம்முலி பேகம் தம்பதிக்கு, குழந்தை இல்லை என்றாலும், ஒருவருக்கொருவர், மிகுந்த பாசத்துடன் வாழ்ந்து வந்தனர். அதனால், மனைவி இறந்ததும், அவர் மீது கொண்ட பாசம் காரணமாக, அவரின் உடலை அடக்கம் செய்த இடத்தில், சிறிய அளவிலான, தாஜ்மகால் கட்ட, பைசல் ஹசன்திட்டமிட்டார்.



பெண்களை வைத்து வீரர்களை மடக்கிய சூதாட்டக்காரர்கள் - மன்னிப்புக் கேட்டார் ஸ்ரீசாந்த் தந்தை!
[Friday, 2013-05-17 17:00:05]

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட வீரர்களுக்கு பெண்களை சப்ளை செய்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் சிக்கிய கிரிக்கெட் வீரர்களுக்கு பெண்களையும் புக்கிகள் சப்ளை செய்ததாக டெல்லி போலீசார் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளனர். நடப்பு ஐபிஎல் 6வது கிரிக்கெட் தொடரின் கரும்புள்ளியாக ஸ்பாட் பிக்சிங் விவகாரம் அமைந்திருக்கிறது. டெல்லி போலீஸ் அதிகாரி பத்ரீஷ் தத்தின் மர்ம மரணத்தின் மூலம் அம்பலத்துக்கு வந்த கிரிக்கெட் மோசடியில் அடுத்தடுத்து புது தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.



இந்திய மீனவர்களை விடுவிக்கும்படி இலங்கை அதிகாரிகளிடம் கெஞ்சினார் சல்மான் குர்ஷித்!
[Friday, 2013-05-17 16:47:06]

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று இலங்கையிடம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் வலியுறுத்தியுள்ளார். இலங்கை தூதரக அதிகாரிகளிடம் தொலைபேசி வாயிலாக பேசிய சல்மான் குர்ஷித், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விரைவில் இலங்கை விடுதலை செய்ய வேண்டும். 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த வழக்குகளை விரைந்து முடிக்கவும், அவர்கள் வெளியில் வருவதற்கும் வழி காண வேண்டும்.



8 வயது மாணவனை சுவரில் தலையை மோதிக் கொன்ற ஆசிரியர் கைது!
[Friday, 2013-05-17 16:43:46]

மேற்கு வங்க மாநிலம், 24வது தெற்கு பர்கானா, பசந்தி நகர் பகுதியில் நிர்தேஷ்காளி என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது.நேற்று முன் தினம், இப்பள்ளியில் படிக்கும் 8 வயது மாணவன் வகுப்பறையில் புத்தகப் பையை தூக்கி வீசியதற்காக கோபமடைந்த ஆசிரியர் அந்த மாணவனை அடித்துள்ளார். அவனை பிரம்பால் அடித்தும் ஆவேசம் அடங்காத ஆசிரியர் மாணவனின் தலையை பிடித்து சுவற்றில் மோதினார். இதனால், தலையில் பலத்த காயமடைந்த மாணவனை சிகிச்சைக்காக பெற்றோர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.சிகிச்சை பலனின்றி அந்த மாணவன் இன்று பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவம் தொடர்பாக ஆசிரியரை கைது செய்த போலீசார், 8 வயது மாணவனை இவ்வளவு கொடூரமான முறையில் தண்டித்தது குறித்து விசாரித்து வருகின்றனர்.



வயதுச் சர்ச்சையில் சிக்கினார் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்!
[Friday, 2013-05-17 16:40:20]

பிரதமர் மன்மோகன் சிங்கின் வயது எண்பதா எண்பத்தி இரண்டா என்ற புதிய சர்ச்சை தற்போது தலைதூக்கியுள்ளது.பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் போட்டியிட பிரதமர் மன்மோகன் சிங் அசாம் சட்டசபை செயலாளரிடம் கடந்த புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவில் வயது தொடர்பாக குறிப்பிட்ட அவர், தனக்கு 82 வயதாவதாக கூறியுள்ளார். ஆனால், பிரதமரின் இணைய தளம் மற்றும் பாராளுமன்ற இணைய தளம் ஆகியவற்றில் பிரதமரின் பிறந்த தேதி 26-09-1932 என குறிப்பிடப்பட்டுள்ளது.



தேம்பித் தேம்பி அழுதபடி சிறைக்குச் சென்ற சஞ்சய் தத்!
[Friday, 2013-05-17 16:35:26]

சிறைவாசம் அனுபவிக்கத் தொடங்கியுள்ள நடிகர் சஞ்சய்தத் நேற்று இரவு முழுவதும் தூக்கமின்றி தவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சஞ்சய் தத்தின் தனது சிறைவாசத்தின் முதல் நாள் இரவு அனுபவம் தொடர்பாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்றிரவு 11 மணியளவில் சிறையில் அவருக்கென ஒதுக்கப்பட்ட அறைக்கு சஞ்சய் தத் அழைத்துச் செல்லப்பட்டார். வீட்டில் இருந்து அனுப்பப்பட்ட உணவை சாப்பிட்ட பின்னர், குடிப்பதற்கு அவர் தண்ணீர் கேட்டார். சிறை அதிகாரிகள் ஒரு பாட்டிலில் தண்ணீர் தந்தனர்.


Mahesan supramaniyam 031109
TamilsGuid-191012-2013
Canada Kanthasamy Kovil
NIRO-DANCE-100213
RoyaShades-l2011(04-12-11)
TDE_Computers2011
Ramans2011
INNSYS-20120930
Suresh-remax-2013-01-01
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com