Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 24, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
அணுமின் நிலையத்தை முற்றுகையிட போராட்டக்கார்கள் முயற்சி - கூடங்குளத்தில் பதற்றம்! - Top News Top News
[Sunday, 2012-09-09 17:59:16]
News Service

கூடங்குளம் அணுமின் நிலையத்தை முற்றுகையிட போராட்ட குழுவினர் இன்று காலை 11 மணிக்கு ஊர்வலமாக புறப்பட்டனர். இதனால் அணுமின் நிலைய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போராட்டக்கார்கள் எல்லை மீறினால், அவர்களை கைது செய்ய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

  

கூடங்குளம் அணுமின் நிலைய முதல் அணு உலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்பும் பணி தொடங்க உள்ளது. இதை கண்டித்து போராட்ட குழுவினர் இன்று முற்றுகை போராட்டம் அறிவித்திருந்தனர். ஏற்கனவே, இங்குள்ள கிராமங்களில் 144 தடையுத்தரவு அமலில் உள்ளது. இதை மீறி கூட்டம் கூடினால் கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், ராதாபுரம்கூடங்குளம் சாலை, இடிந்தகரை சாலை, வைராவி கிணறு விலக்கு, தாமஸ் மண்டபம் உள்பட பல பகுதிகளில் 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சாலைகளில் மணல் மூட்டைகள் அடுக்கி, தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கிராம எல்லைகள் சீல் வைக்கப்பட்டன. தென்னந்தோப்புக்குள் பதுங்கு குழி அமைத்து அதில் இருந்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். கலவர தடுப்பு வாகனங்கள், தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாகனங்கள், கண்ணீர் புகை குண்டு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன. போராட்ட குழுவினர் கடல் வழியாக ஊடுருவதை தடுக்க கடற்கரை பகுதிகளையும் போலீசார் கண்காணிக்கின்றனர்.

போராட்டக்காரர்கள் அணுமின் நிலைய பகுதிக்குள் வருவதை தடுக்க இரவில் இடிந்தகரை கிராமத்தில் உள்ள எல்லா தெரு விளக்குகளும் எரியவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. முற்றுகை போராட்டத்துக்கு வருபவர்களை தடுக்கும் போது அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க தென்மண்டல ஐஜி ராஜேஷ்தாஸ், நெல்லை சரக டிஐஜி வரதராஜூ, எஸ்பி விஜயேந்திர பிதாரி மற்றும் போலீஸ் அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சேரன்மகாதேவி சப்கலெக்டர் ரோகிணி ராம்தாஸ், ராதாபுரம் தாசில்தார் சுப்பிரமணியன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளும் தீவிர ஆலோசனையில் உள்ளனர்.

போராட்டத்தால் கூடங்குளம் தவிர மற்ற கடலோர கிராமங்களில் கடைகள் மூடப்பட்டன. மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. முற்றுகை போராட்டத்தில் குடும்பத்தோடு பங்கேற்க வரவேண்டும் என்று போராட்ட குழுவினர் இன்று காலை 9.45 மணிக்கு இடிந்தகரை சுனாமி காலனி கோயில் ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்தனர். அதன்பின், ஏராளமான ஆண்களும், பெண்களும் இடிந்தகரை நோக்கி புறப்பட்டனர். இடிந்தகரையில் அனைவரும் கூடியதும் வெள்ளை கொடியுடன் ஊர்வலமாக புறப்பட்டனர்.

அப்போது போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் பேசுகையில், போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும். 10 ஆயிரம் பேர் இங்கு வந்துள்ளனர். எந்த இடத்தில் போலீஸ் தடுக்கிறதோ, அங்கேயே அமர்ந்திருப்போம். முதியவர்கள் உள்பட எல்லோரையும் கைது செய்தால்தான் நாங்கள் கைதாவோம் என்றார்.

வைராவி கிணறு வழியாக ஊர்வலம் செல்ல திட்டமிட்டுள்ளனர். தடையை மீறி அணுமின் நிலையத்தை நோக்கி வருபவர்களை கைது செய்ய கூடங்குளம், வைராவி கிணறு, தாமஸ் மண்டபம் ஆகிய 3 இடங்களிலும் 110க்கும் அதிகமான அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தாமல், கைது செய்ய வேண்டும் என்று போலீசாருக்கு ஐஜி ராஜேஷ்தாஸ் உத்தரவிட்டுள்ளார்.

கூடங்குளம் முற்றுகை போராட்டத்தில் அசம்பாவிதம் நடந்தால், அதற்கு எதிர்ப்பாளர்கள்தான் பொறுப்பு என்று போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாருக்கு நெல்லை கலெக்டர் செல்வராஜ் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதுகுறித்து உதயகுமார் கூறுகையில், கலெக்டர் கூறுவதை ஏற்க முடியாது. இங்கு எது நடந்தாலும் அதற்கு அரசுதான் பொறுப்பு என்றார். இதனால் அங்கு பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

நடுவானில் விமானத்தின் கண்ணாடியில் திடீர் விரிசல் - 179 பயணிகள் அருந்தப்பு!
[Friday, 2013-05-24 18:01:05]

இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமான கண்ணாடியில் திடீர் விரிசல் ஏற்பட்டது. நிகழ இருந்த பெரும் விபத்தை தடுக்க உடனடியாக விமானம் கொல்கத்தாவில் தரையிறக்கப்பட்டது. இதனால் 179 பயணிகள் உயிர் தப்பினர். 6இ 205 என்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம்,179 பயணிகளுடன் நேற்று மதியம் பகல் 12.57 மணிக்கு, கொல்கத்தாவில் இருந்து திப்ரூகருக்கு புறப்பட்டது. விமானம் கிட்டத்தட்ட 30,000 அடி உயரத்தைத் தொட்டபோது, முன்புறக் கண்ணாடியில் விரிசல் இருந்ததை விமான ஓட்டிகள் கவனித்தனர்.



இந்தியா முழுவதும் வாட்டியெடுக்கும் வெயில் - நேற்று ஒரே நாளில் மட்டும் ஆந்திராவில் 57 பேர் பலி!
[Friday, 2013-05-24 17:50:48]

அக்னி வெயில் வடமாநில மக்களை வாட்டி வதைக்கிறது. தலைநகர் டெல்லியில் 113.5 டிகிரி வெயில் கொளுத்தியது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் 118 டிகிரியும், ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகரில் அதிகபட்சமாக 120 டிகிரியும் வெயில் பதிவானது. எப்போதும் குளு குளு என இருக்கும் ஜம்மு காஷ்மீரில் கூட 110 டிகிரிக்கு மேல் வெயில் அடித்தது. ஆந்திராவில் பல மாவட்டங்களில் நேற்று 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது. கரீம்நகர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 120 டிகிரி வெயில் கொளுத்தியது. ஆந்திர மாநிலத்தின் ஊட்டி என அழைக்கப்படும் விசாகப்பட்டினம் மன்னியம் மலைவாசஸ்தலத்தில் நேற்று 105 டிகிரி பதிவானது.



சூதாட்டப் புகாரில் சிக்கியுள்ள கிரிக்கெட் வீரர்களுடன் தொடர்பு இல்லை - நடிகை லட்சுமி ராய் அலறல்!
[Friday, 2013-05-24 17:27:57]

சூதாட்ட புகாரில் சிக்கியுள்ள கிரிக்கெட் வீரர்கள் அல்லது மற்ற வீரர்களுடன் என்னை இணைத்துப் பேசுவது தவறு. எனக்கும் அவர்களுக்கும் தொடர்பில்லை. டோனி, ஸ்ரீசாந்த் போன்றவர்களுடன் பேசியே ரொம்ப நாளாகிவிட்டது என திடீர் அறிக்கை விடுத்துள்ளார் லட்சுமி ராய். சூதாட்ட புகாரில் சிக்கிய கிரிக்கெட் வீரர்களுடன் தொடர்புள்ள நடிகைகள் என்ற பட்டியலில் நடிகை லட்சுமிராய் பெயர் பலமாக அடிபடுகிறது. இவர் ஐ.பி.எல் கிரிக்கெட்டில் தூதுவராக இருந்துள்ளார். டோனிக்கு மிக நெருக்கமானவர் என்றும் கிசுகிசுக்கப்பட்டார். இதையெல்லாம் பார்த்து மகா கோபத்துக்குள்ளாகியிருக்கும் லட்சுமி ராய் அளித்துள்ள மறுப்பு செய்தியில், கிரிக்கெட் வீரர்கள் டோனி, ஸ்ரீசாந்துடன் என்னை இணைத்துப் பேச வேண்டாம்.



காஷ்மீரில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் - 4 இந்தியப்படையினர் பலி!
[Friday, 2013-05-24 17:20:51]

ஜம்மு- காஷ்மீர் பிராந்தியத்தில் ஆயுததாரிகள் மறைந்திருந்து நடத்திய தாக்குதலில் இந்தியப் படையினர் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். கிளர்ச்சிப் போராளிகளுக்கு எதிராக படை நடவடிக்கையைத் தொடங்கியுள்ள துருப்பினரை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாக இந்திய இராணுவப் பேச்சாளர் லெப்.கர்ணல் அன்கூர் வஷிஸ்ட் கூறினார். புல்வாமா மாவட்டத்தில் ஸ்ரீநகரிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் புச்சூ என்ற கிராமத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபடுவதற்காக சென்று கொண்டிருந்த படையினரே தாக்குதலில் சிக்கியுள்ளனர்.



அவுஸ்ரேலியாவுக்கு தப்ப முயன்ற 5 இலங்கை அகதிகள் கைது - பணம் வாங்கி ஏமாற்றிய மூவருக்கு பொலிஸ் வலைவீச்சு!
[Friday, 2013-05-24 08:03:10]

இலங்கை அகதிகளை, அவுஸ்ரேலியா அழைத்துச் செல்வதாக கூறி, ஐந்து லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு ஏமாற்றிய, மூன்று பேரை போலீசார் தேடுகின்றனர். கோவை, குனியமுத்தூர் அருகே வசிக்கும் அய்யப்பன் என்பவர் வீட்டுக்கு, நேற்று முன்தினம் ஐந்து இலங்கை அகதிகள் உட்பட ஏழு பேர் வந்தனர். குனியமுத்தூர் போலீசார், அய்யப்பன் வீட்டில் தங்கியிருந்தவர்களை சுற்றி வளைத்தனர்; இருவர் தப்பியோடினர். பிடிபட்ட ஐந்து பேரிடம் நடத்திய விசாரணையில், தர்மபுரி மாவட்ட அகதிகள் முகாமைச் சேர்ந்த சங்கர், ரத்தினராஜ், ஹுசூர் முகாமை சேர்ந்த காந்தகுமார், திருச்சி முகாமை சேர்ந்த நாகதீபன் மற்றும் மதுரை முகாமை சேர்ந்த ரமணன், தப்பியோடியவர்கள் தயா மற்றும் முரளி என தெரிந்தது.



கணவர் வெப்கேமிராவில் பார்த்துக் கொண்டிருக்க தூக்குப் போட்டுத் தற்கொலை செய்த பெண்!
[Friday, 2013-05-24 07:59:32]

காதல் திருமணம் செய்த இளம் பெண்,வரதட்சணை பிரச்னையால் , பெற்றோர் வீட்டில் இருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை ஆன்லைன் வாயிலாக கணவன் பார்த்து அதிர்ச்சியடைந்தார். மும்பை புறநகர் பகுதியான ஜுகூ பகுதியைச் சேர்ந்தவர் ஷோபனா ஸ்ருதி (25),இவரும், சுவப்னில் சுர்வி என்பவரும், காதலித்து வீட்டிற்கு தெரியாமல் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். கணவனின் பெற்றோர் இவர்கள் திருமணத்தை ஏற்றுக் கொண்டாலும், வரதட்சணை அதிகமாக கேட்டதால் கணவனும் மனைவியும் சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்தனர்.



"சோனியாவைப் போல நான் இல்லை" - ராகுலின் எச்சரிக்கையால் மிரண்டு போயுள்ள காங்கிரஸ் தலைவர்கள்!
[Friday, 2013-05-24 07:54:13]

காங்கிரஸ் தலைவர் சோனியா மென்மையானவர்; நான் அப்படிப்பட்டவன் அல்ல. கட்சியில் ஒழுங்கீனத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது' என, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் எச்சரித்துள்ளார்.டில்லி மாநில காங்கிரஸ் தலைவர்களுடன், ராகுல், நேற்று ஆலோசனை நடத்தினார்.இந்த ஆலோசனையின் போது, எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட, ஒன்றிய செயலர்கள், கவுன்சிலர்கள் என, அனைவரையும் தனித்தனியே அழைத்து ராகுல் பேசினார்.அப்போது, ராகுல் பேசியதாக, தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது:



துப்பாக்கியால் சுட்டு மிரட்டிய தொழிலதிபரை சிறையிலடைக்க முடியாமல் திணறும் பொலிஸ்!
[Friday, 2013-05-24 07:47:48]

மதுரையை சேர்ந்த தொழிலதிபர் விஜயகர் (50). கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு அபார்ட்மென்டில் வசிக்கிறார். நேற்று முன்தினம் இவர் திடீரென வீட்டை உள்பக்கமாக பூட்டி கொண்டு துப்பாக்கியை காட்டி வெளியே இருந்தவர்களை மிரட்டினார். 14 மணி நேர போராட்டத்துக்கு பிறகு, தப்ப முயன்ற அவரை போலீசார் மடக்கினர். விஜயகரை போலீசார் கைது செய்து 7 பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்தனர். பின்னர் பெருங்களத்தூரில் உள்ள எழும்பூர் 21வது மாஜிஸ்திரேட் வீட்டில் நேற்று காலை ஆஜர்படுத்தினர். புழல் சிறையில் அடைக்க கொண்டு சென்றபோது, அங்கு விஜயகரை சோதித்த மருத்துவர்கள் அவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததால், சிறையில் அடைக்க மறுத்தனர். பின்னர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு விஜயகரை அழைத்து வந்தனர்.



இராணுவம் எந்நேரமும் போருக்குத் தயாராக இருக்க வேண்டும்! - பிரதமர் மன்மோகன்சிங்
[Friday, 2013-05-24 07:42:17]

முறைகேடுகளை தடுக்க ராணுவ தளவாடங்கள் கொள்முதலை வெளிப்படையாக மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். அரியானாவின் குர்கான் நகரில் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்டும் விழா நேற்று நடந்தது. அடிக்கல் நாட்டி பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது: ராணுவ தளவாடங்கள் வாங்குவதில் முறைகேடு நடப்பதாக புகார்கள் வருகிறது. இதை தடுக்க தளவாடங்கள் வாங்குவதற்காக நடைமுறையில் மாற்றம் செய்ய வேண்டும். வெளிப்படையான முறையில் ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் வாங்க புதிய நடைமுறை வகுக்கப்படுகிறது. இதை அமல்செய்யும்போது, முறைகேடுகள் நடப்பதை தடுக்க முடியும்.



பாமகவுக்காக திருமாவளவனை கழற்றிவிட முனைகிறதா திமுக?
[Thursday, 2013-05-23 19:34:22]

பாமக இடம்பெறும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம் பெறாது என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ள நிலையில், இரண்டு திராவிட கட்சிகளுடனும் பாமக கூட்டணி அமைக்காது என அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின்போது, திமுக.கூட்டணியில் பாமகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இணைந்திருந்தது. அதன்பிறகு கடந்த 2012ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்லில் அதிமுகவுடன் பா.ம.க. கூட்டணி அமைத்துக் கொண்டது. அதிலிருந்து பாமகவுக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் பனிப்போர் தொடங்கியது.



ஐபிஎல் சூதாட்டத்தில் தமிழ் நடிகைகளுக்கும் தொடர்பு - மெய்யப்பனே அனுப்பினாராம்!
[Thursday, 2013-05-23 19:21:29]

ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளருமான சீனிவாசன், அவரது மருமகன் குருநாத் மெய்யப்பன் ஆகியோரது சென்னை வீடுகளில் மும்பை போலீசார் சோதனை மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்பாட் பிக்ஸிங் விவகாரத்தில் ஸ்ரீசாந்த், சாண்டிலா, சவான் ஆகிய வீரர்கள் சிக்கினர். சென்னை, கோயம்புத்தூர், மும்பை, கொல்கத்தா என நாடு முழுவதும் பல நகரங்களில் பிக்சிங் தரகர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் முன்னணி தமிழ் நடிகைகளுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், அவர்களும் விசாரிக்கப்படவுள்ளனர்.



நோ பால் போடாத ஸ்ரீசாந்தை கேவலமாகத் திட்டிய புக்கிகள் - வெளிவரும் புதிய தகவல்கள்!
[Thursday, 2013-05-23 19:13:41]

ஐபிஎல் போட்டியில் ஒரு ஓவரின் கடைசிப் பந்தில் நோ பால் போடாதது தொடர்பாக ஸ்ரீசாந்த்தை சூதாட்ட புக்கிகள் அசிங்கம் அசிங்கமாக திட்டிய கதை அம்பலத்திற்கு வந்துள்ளது. மே 9ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையிலான ஐபிஎல் போட்டியின்போது நடந்த பிக்ஸிங் தொடர்பாகவே இந்த வாய்ச்சண்டை நடந்ததாம். இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சாளராக செயல்பட்ட ஸ்ரீசாந்த் சூதாட்ட புக்கிகளுக்கு சிக்னல் காட்டி விட்டு தனது 2வது ஓவரை வீசினார். அதில் அவர் 13 ரன்களை விட்டுக் கொடுத்தார். மொத்தம் இரண்டு ஓவர்கள் வீசிய ஸ்ரீசாந்த் 18 ரன்கள் கொடுத்தார். 2வது ஓவரில் அவர்14 ரன்கள் விட்டுத் தர வேண்டும் என்பது புக்கிகள் பிறப்பித்த உத்தரவாகும். இருப்பினும் 13 ரன்கள்தான் கொடுத்தார் ஸ்ரீசாந்த்.



ஆந்திராவில் வறுத்தெடுக்கும் வெயிலுக்கு நேற்று ஒரே நாளில் 22பேர் பலி!
[Thursday, 2013-05-23 18:38:19]

ஆந்திராவில் அக்னி வெயில் சுட்டெரிக்கிறது. பல மாவட்டங்களில் 104 டிகிரியை கடந்து வெயில் வாட்டி வதைக்கிறது. அதிகபட்சமாக கரீம் நகர் மாவட்டத்தில் 116 டிகிரி வெயில் கொளுத்தியது. ராம் குண்டாவில் 114.8 டிகிரியும், வரங்கல், ஓங்கோல் மாவட்டத்தில் 113 டிகிரியும் வெயில் பதிவானது. கடும் வெயிலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் நேற்று ஒரே நாளில் 22 பேர் பலியாகி உள்ளனர். வரங்கல் மாவட்டத்தில் 7 பேரும், ஆதிலாபாத்தில் 6 பேரும், கரீம் நகரில் 6 பேரும், கிழக்கு கோதாவரியில் 3 பேரும் பலியாகி உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் 48 வயது மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



13 வயதுக்குட்பட்டவர்கள் பேஸ் புக் கணக்கு தொடங்குவதை தடை செய்ய வேண்டும் - மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட் உத்தரவு!
[Thursday, 2013-05-23 18:34:53]

13 வயதுக்குட்பட்டவர்கள் பேஸ் புக் கணக்கு தொடங்குவதை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 18 வயதுக்குட்பட்ட மைனர்கள் பேஸ் புக் போன்ற தளங்களில் கணக்கு தொடங்குவது இந்திய மெஜாரட்டி சட்டம், இந்திய ஒப்பந்த சட்டம், தகவல் மற்றும் தொழில் நுட்ப சட்டத்தை மீறுவதாக உள்ளது. எனவே 18 வயதுக்குட்பட்டவர்கள் பேஸ் புக் போன்ற தளங்களில் கணக்கு தொடங்குவதை தடை செய்ய வேண்டும் என பா.ஜ.க. மூத்த தலைவர் கே.என்.கோவிந்தாச்சாரியா டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.



காந்தியை அடைத்திருந்த எரவாடா சிறைக்கு இரவாடு இரவாக மாற்றப்பட்டார் சஞ்சய் தத்!
[Thursday, 2013-05-23 08:03:28]

மும்பை ஆர்தர் ரோடு சிறையில் இருந்து இரவோடு இரவாக புனே எரவாடா சிறைக்கு நடிகர் சஞ்சய் தத் மாற்றப்பட்டார்.மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் பிரபல நடிகர் சஞ்சய் தத்துக்கு சிறப்பு தடா நீதிமன்றம் 6 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதை கடந்த மார்ச் 21ம் தேதி உறுதி செய்த உச்ச நீதிமன்றம், தண்டனையை 5 ஆண்டுகளாக குறைத்தது. மேலும், அதன் உத்தரவுபடி கடந்த 16ம் தேதி சிறப்பு தடா நீதிமன்றத்தில் சஞ்சய் தத் சரண் அடைந்தார். பின்னர் அவர், மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு, மும்பை தாக்குதல் வழக்கு தீவிரவாதியான அஜ்மல் கசாப் அடைக்கப்பட்டு இருந்த பாதுகாப்பு மிக்க அண்டா சிறையில் அடைக்கப்பட்டார்.



ஊழலுக்கு பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலக வேண்டும் -கருத்துக்கணிப்பில் தகவல்!
[Thursday, 2013-05-23 07:57:31]

ஊழலுக்கு பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள் விரும்புவதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவி ஏற்று நான்கு ஆண்டுகள் நிறைவு செய்வதையொட்டி நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் இத்தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் 12 நகரங்களில் 18 வயது நிரம்பிய வாக்காளர் உரிமை பெற்ற 2 லட்சம் பேரிடம் இருந்து கருத்துக்கணிப்பு பெறப்பட்டுள்ளது. இவர்களில் 61 சதவீதம் பேர் மன்மோகன் சிங் பிரதமராக நீடிக்ககூடாது என்று கருத்து கூறியுள்ளனர், மன்மோகன் சிங் பிரதமராக நீடிக்க வேண்டும் என்று 37 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.



சென்னையில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய நபர் 14 மணிநேர போராட்டத்தின் பின் பிடிபட்டார் - இலங்கைப் படங்களில் நடித்தவராம்!
[Thursday, 2013-05-23 07:43:49]

கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அபார்ட்மென்ட்டில் துப்பாக்கியால் சுட்டு மிரட்டிய நபரை 14 மணி நேர பரபரப்புக்கு பின் போலீசார் பிடித்தனர். சினிமா பாணியில் நடந்த இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சப்தமாலிகா என்ற 4 அடுக்கு அபார்ட்மென்ட்டில், விஜயகர்(50) என்பவர் 5 ஆண்டுகளுக்கு முன் வாடகைக்கு வந்தார். 2 ஆண்டுகளாக ஒழுங்காக வாடகை கொடுத்தார். பின்னர் கடந்த 3 ஆண்டுகளாக வாடகை தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனால் உரிமையாளர் நீதிமன்றம் மூலம் வீட்டை காலி செய்ய நடவடிக்கை எடுத்தார்.



நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் அஸ்தி எங்கே? - பதிலளிக்கும் படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
[Thursday, 2013-05-23 07:30:31]

நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் அஸ்தி எங்கு இருக்கிறது என்பதை தெரிவிக்கும்படி மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியை சேர்ந்தவர் பிரசாந்த் பாலிவால். டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள பொதுநலன் வழக்கில் இவர் கூறியிருப்பதாவது: சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோசின் அஸ்தி, ஜெர்மனியில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வரும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதை இந்தியா கொண்டு வந்த பிறகு பொது மக்கள் அஞ்சலிக்காக பொது இடத்தில் வைக்க வேண்டும்.



பிணைப் பணம் செலுத்தாததால், 19 ஆண்டுகளை சிறையில் கழித்த தாயை மீட்ட மகன்!
[Thursday, 2013-05-23 07:22:24]

இந்தியாவில் பிணை வழங்கப்பட்ட ஒரு பெண் கைதி, சிறையிலிருந்து 19 ஆண்டுகளுக்குப் பின்னரே விடுதலை செய்யப்பட்டது குறித்து நீதிபதிகள் கவலை தெரிவித்துள்ளனர். வட இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட விஜய் குமாரி என்ற பெண், கர்ப்பமாயிருந்த நிலையில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார். தான் குற்றமற்றவர், தவறாகக் குற்றம் சாட்டப்பட்டவர் என்று கூறியிருந்தார். அவரது கணவர் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மேல் முறையீடு செய்திருந்தார்.



உலகின் அதிவேக ஏவுகணையான பிரமோசை வெற்றிகரமாக ஏவியது இந்தியா!
[Wednesday, 2013-05-22 18:32:06]

உலகின் அதிவேக ஏவுகணையான பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை இந்தியா இன்று மீண்டும் வெற்றிகரமாக பரிசோதனை செய்தது. கோவா கடற்பகுதியில் ஐஎன்எஸ் தர்காஷ் போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை, 290 கி.மீ. தூரம் பறந்து சென்று, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கியது. இந்தியா-ரஷ்யா கூட்டுத் தயாரிப்பான பிரமோஸ் ஏவுகணையானது, 300 கிலோ எடை கொண்டது. ஒலியை விட 2.8 மடங்கு வேகத்துடன் பறக்கும். இன்று ஏவுகணை செலுத்தப்பட்ட அதிநவீன போர்க்கப்பலான ஐஎன்எஸ் தர்காஷ், கடந்த ஆண்டு கப்பல் படையில் சேர்க்கப்பட்டது.


AJRwindows22.05.13
TamilsGuid-191012-2013
RoyaShades-l2011(04-12-11)
TDE_Computers2011
Ramans2011
INNSYS-20120930
Canada Kanthasamy Kovil
Mahesan supramaniyam 031109
NIRO-DANCE-100213
Suresh-remax-2013-01-01
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com