Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 25, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
குட்டக்குட்ட குனியிறவனும் மடையன் குட்டுறவனும் மடையன்: - அனலை நிதிஸ் ச. குமாரன்
[Sunday, 2012-09-09 09:16:18]
News Service

புறநானுற்றுக் கருத்துக்களை மேடைதோறும் பேசிவரும் கலைஞர் தமிழ்ப் பழமொழிகளை அறிந்திருக்காமல் இருக்க வாய்ப்பில்லை. கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள ஏகாதிபத்திய அரசுகளினால் ஈழத் தமிழினம் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கு மேலான அகிம்சை வழிப் போராட்டங்களும், பின்னர் ஆயுதப் போராட்டமும் ஒன்றரை இலட்சம் தமிழர்களைப் பலியெடுத்தது.

  

ஈழத் தமிழினம் கோரியது சிங்களத் தேசத்தின் பிரதேசங்களை அல்ல. பல்லாயிரம் ஆண்டுகள் தாம் வாழ்ந்த நிலப்பரப்பைத் தாமே ஆளும்அதிகாரத்தை மட்டுமே கேட்டுப் போராடிய போது, சிங்கள ஏகாதிபத்திய அரசுகள் வன்முறையத் திணித்து தமிழர்களை அடக்கி ஒடுக்க முற்பட்டன.

தனது அரசியல் வாழ்க்கையில் தான் மட்டுமே ஈழத் தமிழர்களின் வரலாற்றை அதிகமாக அறிந்து வைத்துள்ளதாகக் கூறும் கலைஞர்,ஈழத் தமிழினம் அடக்கி ஒடுக்கப்படும்போது வெறுமனே வெகுசனப் போராட்டங்களைச் செய்வதன் மூலமாகத் தனது அரசியல் இருப்பை நிலைநிறுத்த எத்தனித்து வந்துள்ளார்.

ஈழத் தமிழினம் அகிம்சை வழிப் போராட்டங்களைச் செய்த போது சிங்கள ஏகாதிபத்திய அரசுகள் வன்முறையைக் கட்டவிழ்த்திவிட்டுத் தமிழினத்தை அடக்கின. இளம் இரத்தங்கள் தமது வயதான தலைமைகளினால் அறவழிப் போராட்டங்கள் மூலமாக வெற்றிகொள்ள முடியாத போராட்டத்தை ஆயுதவழி மூலமாக அடையலாம் என்று எண்ணி ஆயுதங்களை ஏந்தி, கழுத்தில் நஞ்சுக் குப்பிகளை அணிந்து களம் கண்டபோது தமிழினப் போராளிகளைக் கொச்சைப்படுத்தினர் தமிழகத்தில் சில அரசியல் ஆதாயம் தேடும் அரசியல்வாதிகள்.

சிங்களவன் குட்டுகிறான் என்று தெரிந்தும் தமிழினம் என்பது குட்டுவாங்கியே அழியும் இனம் என்கிற தோரணையில் கலைஞரின் இராஜதந்திரக் காய்நகர்த்தல்கள் அமைந்துள்ளன. மானம் ரோசமுள்ள எந்தவொரு மனிதனும் தன்னை நேசிக்கும் இன்னொரு உயிருக்குப் பங்கம் விளைந்தால் களம் காணும் இனம் என்று வாய் கிழியப் பேசும் கலைஞர் உண்மையிலேயே ஈழத் தமிழினம் அழிவதைக் கண்டும் சோரம் போனதன் மூலமாக அவருடைய இராஜதந்திரம் தமிழினத்தின் பாதுகாப்புக்கு எந்தவிதத்திலும் உதவாது என்பதையே எடுத்துக் காட்டுகிறது.

கலைஞரின் இராஜதந்திரம் என்பது உப்புச் சப்பில்லாத தந்திரம் என்பது எவ்வித ஜயத்துக்கும் இடமில்லாமல் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. ஒருவர் புத்திசாலித்தனமாகச் சிந்தித்து அடுத்து நிகழப் போகும் சம்பவங்களை இராஜதந்திர ரீதியில் கையாண்டு வெற்றிகளை அடைவதே உண்மையான இராஜதந்திரம்.ஈழத்தின் வரலாற்றைக் கூறும் கலைஞர் தனது இராஜதந்திரத்தை வைத்து இளைஞர்கள் ஆயுதங்களை ஏந்தும் முன்னர் தமிழீழத் தனியரசை நிறுவ உதவியிருந்தால் அது அவருக்குக் கிடைத்த இராஜதந்திர வெற்றியென்று கூறலாம்.

குட்டிமணி,ஜெகன் போன்ற ஈழத்தின் மாவீரர்களைச் சிங்களவனுக்குக் காட்டிக்கொடுத்துக் கொலை செய்வித்ததையா கலைஞர் இராஜதந்திரம் என்று கூறுகிறார் என்கிற கேள்வி பல தமிழ் மக்களிடம் இன்றும் பரவலாக இருக்கிறது. காங்கிரஸ் அரசின் செல்வாக்கை வைத்து பல்லாயிரம் தமிழ் மக்களை இறுதிப் போர்க் காலத்தில் காவந்து பண்ணுவதற்குப் பதில், காங்கிரஸ் அரசே நேரடியாகச் சிங்கள அரசுக்கு ஆயுதங்களை வழங்கி அன்று தமிழர்களைக் கொலை செய்ய உதவ ஒத்தாசையாக இருந்த கலைஞரா இன்று தானொரு இராஜதந்திரி என்று கூறுகிறார் என்கிற வினா அனைவர் மனங்களிலும் எழுகிறது.

வாய்ச் சொல்லில் வீரரடி!

தொண்ணூறு வயதிலும் கலைஞரின் வீரப் பேச்சுக்குத் தொய்வே வரவில்லை என்பதே உண்மை. மறதி பிழறாமல் இன்றும் தெட்டத்தெளிவாகப் பேசும் வல்லமையைப் பெற்றதே கலைஞருக்குக் கிடைத்த வெற்றி.கலைஞருக்கு எதிர்மாறான கொள்கையையே விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வைத்துள்ளார்.

பேச்சைக் குறைத்து செய்கையில் அதிக கவனம் வேண்டுமென்பதே பிரபாகரனின் கொள்கை. வாய் இருந்தால் வங்காளம் போய்வரலாம் என்பது தமிழ் மொழியில் பரவலாக இருக்கும் ஒரு உதாரணம். கலைஞருக்குக் கிடைத்த பேச்சு வலிமை என்பது நிச்சயம் இவரை உச்சக் கட்டத்துக்கே கொண்டுபோய் வைத்துள்ளது என்றால் மிகையாகாது.

தனது சுய வளர்ச்சிக்கு ஒரு இனத்தையே அடகு வைப்பது என்பது பாவப்பட்ட செயல். ஏதோ ஈழத் தமிழர்களின் எதிர்காலத்துக்காகவே தான் போராடுவதாகக் கூறும் கலைஞர், மறுகணமே எதிர்மறைவான கருத்தை வெளியிட்டுவருவது ஏமாற்றத்தை அளிக்கும் செயலாக இருக்கிறது. தமிழீழமே ஈழத் தமிழர்களின் தேசியப் பிரச்சினைக்கு ஒரே தீர்வென்று கூறுவதும், பின்னர் அதனைக் கைவிட்டுவிட்டு வேறொன்றைக் கூறுவதும் கலைஞருக்குக் கைவந்த கலை.

இந்திய நடுவண் அரசில் முக்கிய கூட்டணிக் கட்சியாக இருந்துகொண்டு, நடுவண் அரசுக்கு எதிராக ஏதோ வெகுசனப் போராட்டங்கள் மூலமாக தான் மத்திய அரசை நிர்ப்பந்திப்பதாகப் போராட்டங்கள் செய்வது போன்ற வெகுளித் தனமான செயல்களைச் செய்யும் கலைஞர் தமிழர்களை மென்மேலும் முட்டாள்களாக்கவே முனைகிறார் போலும்.

ஏற்கனவே சிங்களவன் குட்டிக்குட்டித் தமிழர்களை முட்டாள்களாக்க முற்பட்டதன் விளைவாகப் புறப்பட்ட காளைகளே ஈழத் தமிழ்ப் போராளிகள். கலைஞர் போன்ற தமிழக அரசியல்வாதிகள் தமிழினத்தைக் குட்டி வைப்பதன் மூலமாக அவர்களை மென்மேலும் முட்டாள்களாக்கலாம் என்று கருதிச் செயற்பட்டால் நிச்சயம் அதற்கான விலையை அவர் வாழும் காலத்திலேயோ அல்லது அவருடைய சந்ததியினரோ கொடுக்க வேண்டிவரும். தமிழினம் ஒன்றும் சோர்ந்த இனம் இல்லை என்பதனைக் காட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை.

தாங்கள் வைத்துள்ள பேச்சு வலிமையைக் கொண்டு அனைவரையும் ஏமாற்றி தமது சுய காரியங்களைச் செய்து முடிக்கலாம் என்று எவரேனும் கருதுவார்களேயானால் நிச்சயம் அவர்கள் தோல்வியிலேயே தமது பயணத்தை முடிக்க வேண்டிவரும். சிங்களத்துக்கு எதிராக ஒரு புறம் பேசிவிட்டு, பின்னர் ஆளும் அ.தி.மு.க. அரசு ஏதேனும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான செயற்பாடுகளைச் செய்துவிட்டால் பழைய புராணங்களை ஓதி ஈழத் தமிழர்களுக்கு எதிரான ஏதேனும் செயற்பாடுகளைச் செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ள கலைஞர் தெளிவில்லாத ஒரு இராஜதந்திரவாதி என்பதனை நிருபித்துவருகிறார் என்பதே மறுக்க முடியாத உண்மை.

தமிழர்களின் எதிர்காலமே தனது கரிசனையாம்:

அனைத்துத் துன்பங்களையும் ஈழத் தமிழினம் மீது கொடுத்த பின்னர் தற்போது ஓய்ந்து இருக்கிறது சிங்களம்.சிங்களவர்கள் கோபம் அடையும் வண்ணம் ஏதாவது செயற்பாடுகளைச் செய்தால் அது மீதமுள்ள ஈழத் தமிழர்களையும் அழித்துவிடும் என்று புதுவிதமான கருத்தைத் தெரிவித்துள்ளார் கலைஞர்.ஏதோ இதுவரை காலமும் ஈழத் தமிழர்களைச் சிங்களம் கொஞ்சிக் குலாவி வந்தது போலவும் இனிவரும் காலங்களில் மட்டும் சிங்களம் தமிழினத்துக்கு எதிராக செயற்பாடுகளைச் செய்யநேரிடும் என்பது போலவும் கலைஞரின் கருத்துக்கள் அமைந்துள்ளன.

அப்பாவித் தமிழ்ச் சிறார்களை பதுங்கு குழிகளுக்குள் செல்லும் முன்னர் குண்டு மழை பொழிந்து கொன்றதும்,பெண்களைப் பல்வேறுவிதமான சித்திரைவதைகளைச் செய்து கொன்றதும், முதியோர்கள் ஓரமாக ஒதுங்கியிருந்த வேளையில் பீரங்கிக் குண்டுத் தாக்குதல்கள் மூலமாக அழித்ததையெல்லாம் அறிந்த கலைஞர் தற்போது மறந்துவிட்டார் போலும்.

சிறிலங்காவிலிருந்து சென்ற கால்பந்து வீரர்களை அ.தி.மு.க. அரசு அண்மையில் திருப்பி அனுப்பியது. அவர்களை விளையாட அனுமதித்த அதிகாரி ஒருவரையும் தாற்காலிகப் பணி நீக்கம் செய்தது. அதன் தொடர்ச்சியாக வேளாங்கண்ணி, பூண்டி மாதா கோயில்களுக்குச் சென்ற சிங்கள சுற்றுலாப் பயணிகள் மீது பரவலாகத் தாக்குதல்கள் நடைபெற்றன. இவைகள் அனைத்தும் அ.தி.மு.க. அரசின் அடாவடித்தனம் என்று புதுவித விளக்கத்தைக் கொடுத்துள்ளார் கலைஞர். ஈழத் தமிழர்கள் மீது மிகுந்த அக்கறையோடு இருப்பதைப்போலக் காட்ட வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க. அரசு கால்பந்து வீரர்களை நாட்டைவிட்டு வெளியேற்றிய காரணமாகத்தான் சிறிலங்காவிலிருந்து சென்ற பயணிகள் மீது தாக்குதல்கள் நடைபெற்றன என்றும் கூறியுள்ளார் கலைஞர்.

கலைஞர் மேலும் கூறுகையில், "இலங்கைத் தமிழர்களுக்கும் இங்குள்ள தமிழர்களுக்கும் உள்ள உறவு என்பது தொப்புழ்க் கொடி உறவு. அப்படியிருக்கையில், இலங்கைச் சுற்றுலாப் பயணிகளைத் தாக்குவது என்பது இரண்டு நாடுகளுக்கும் உள்ள உறவைக் கெடுக்கக் கூடிய ஒன்றாகும். இலங்கையில் இன்னும் லட்சக்கணக்கான தமிழர்கள் வாழ்கின்றனர். இப்போது உள்ள சூழலில் அவர்கள் வாழ்வதற்கேகூடச் சிரமப்படுகின்றனர். அவர்களை மேலும் கொடிய துன்பங்களுக்கு ஆட்படுத்தும் நிலையை நாம் ஏற்படுத்தக் கூடாது. இந்தியா வரும் இலங்கைப் பயணிகளுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் கூறியுள்ளனர்."

"இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலைக்கு எதிரான தீர்மானம் ஐ.நா. மன்றத்தின் ஜெனீவா மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.அதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 14-ம் தேதி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை தலைமையில் தொழில்நுட்பக் குழு ஒன்று, இலங்கை சென்று போரில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கிறது.மறு குடியமர்த்த மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும், இடம்பெயர்ந்து வாழும் மக்களின் பிரச்னைகளையும் ஆய்வு செய்து இலங்கை அரசுக்கு ஆலோசனைகள் வழங்குகின்றனர். இந்த நேரத்தில் தேவையில்லாமல் ஒரு பிரச்னையை நாமே உருவாக்குவது என்பது அங்குள்ள தமிழர்களுக்கு மேலும் இன்னலை ஏற்படுத்தும். மறுவாழ்வுப் பணியில் குந்தகம் ஏற்படுத்தும் செயலாகவும் அமையும்."

"யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற உயர்ந்த மரபு வழியில் நாம் வந்தவர்கள். எந்தத் தேசிய இனத்துக்கும் எதிரானவர்கள் இல்லை. எனவே இலங்கையில் இருந்து சுற்றுலா, ஆன்மிகம், கலாசார பரிமாற்றம் மற்றும் தொழில் காரணங்களுக்காக இந்தியாவுக்கு, தமிழகத்துக்கு வருகிறவர்கள் மீது தாக்குதல் தொடுப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. தமிழ் மக்கள் எந்த வகையிலான எதிர்மறை உணர்ச்சிகளுக்கும் இடம் கொடுக்காமல் அமைதி காக்க வேண்டும். இது இலங்கையில் வாழும் தமிழர்களின் பாதுகாப்புக்காகவும்,நலனுக்காகவும் விடுக்கும் வேண்டுகோளாகும்" என்று கலைஞர் கூறியுள்ளார்.

தொப்புழ்க் கொடி உறவைப் பற்றிப் பேசும் கலைஞர் ஈழத் தமிழினம் இந்தியாவின் கரைகளைச் சென்றடைந்த போது அவர்களுக்கு அளித்த வரவேற்புக்கள் என்னவென்பது உலகறிந்த உண்மை. ஈழத் தமிழ் அகதிகள் என்றால் புலிப் பயங்கரவாதிகள் என்கிற பாணியில் நடத்திய இந்திய மற்றும் தமிழக அரசுகள் இன்று சிங்களப் பயணிகளுக்கும் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கும் ஏதோ சில அசம்பாவிதம் நடந்துவிட்ட உடனையே சிங்கள அரசுக்குப் பயந்து பேசுவது போன்ற நிலையே கலைஞரின் பேச்சில் தெரிகிறது. ஈழத்தில் தமிழினத்தை அழித்த ஒரு இனத்தின் மீது தமிழகத்தில் இடம்பெறும் சம்பவங்கள் நிச்சயம் சிறிலங்கா அரசுக்கு ஒரு எச்சரிக்கையாகவே அமையும். தமிழன் என்றால் நாதியற்றவன் என்றே சிங்களம் இதுநாள் வரை கருதி வந்துள்ளது.

தமிழகத்தில் சமீபத்தில் இடம்பெறும் சிங்களத்துக்கு எதிரான சம்பவங்கள் நிச்சயம் ஈழத் தமிழர்களின் விடுதலையைத் துரிதப்படுத்துமே தவிர கலைஞர் கூறும் தீங்கு இடம்பெற சாத்தியமில்லை. ஈழத் தமிழினம் இதுவரை காலமும் சந்தித்த துயரமான சம்பவங்களுக்கு நிகர் இனிவருவதாகக் கூறும் துயரம் ஒன்றும் புதியனவாக இருக்கப் போவதில்லை. குட்டக்குட்ட குனியிறவனும் மடையன் குட்டுறவனும் மடையன் என்கிற கருத்து சிங்களத்துக்கு எவ்வகையில் பொருந்துமோ அந்தவகையில் கலைஞருக்கும் சாலப் பொருந்தும்.

இவ் ஆய்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்:

nithiskumaaran@yahoo.com

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

அறுவை சிகிச்சையின் போது பெண்ணின் வயிற்றுக்குள் ஊசியை வைத்து தைத்த வைத்தியர் - கிண்ணியாவில் சம்பவம்
[Saturday, 2013-05-25 18:59:57]

கிழக்கு மாகாணத்தில் கிண்ணியா பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது அப்பெண்ணின் வயிற்றுக்குள் ஊசியினை வைத்து தைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் குறித்த பெண்ணுக்கு ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக கடந்த 22 ஆம் திகதி வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். அப்பெண்ணின் வயிற்றுப் பகுதியை எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது வயிற்றுகுள் ஊசி இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் மீண்டும் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்துவதற்காக அப்பெண் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



சார்க் நாடுகளின் திரைப்பட விழா இ்ம்மாதம் 26ஆம் திகதி ஆரம்பம்..
[Saturday, 2013-05-25 18:49:27]

இலங்கையிலுள்ள தெற்காசிய நாடுகளின் கலாசார மத்திய நிலையம் ஏற்பாடு செய்துள்ள சார்க் நாடுகளின் திரைப்பட விழா இம்மாதம் 26ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்தில் நடைபெறவுள்ளது. ஆப்கானிஸ்தான் தவிர்ந்த ஏனைய நாடுகள் இந்த திரைப்பட விழாவுக்காக சினிமா திரைப்படங்களையும் விவரணத்திரைப்படங்களையும் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விழாவின் போது தெரிவு செய்யப்படும் சிறந்த திரைப்படங்கள் விவரணப்படங்கள் மற்றும் சிறந்த நடிகர் நடிகைகளுக்கு விருதுகளும் வழங்கப்படவுள்ளன. கடந்த ஆண்டில் இலங்கை திரைப்படம் ஒன்றே மேற்படி விழாவின் போது சிறந்த திரைப்படமாக தெரிவு செய்யப்பட்டது.



வராலற்று சிறப்பினைச் பதிவு செய்த தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு மாநாடு !Top News
[Saturday, 2013-05-25 17:43:54]

ஈழவிடுதலைப் போராட்டத்தில் பெரும் வராலற்று சிறப்பினைச் பதிவதாக தமிழீழ சுதந்திர சாசன முரசறைவும் அதனையொட்டிய இடம்பெற்றிருந்த மாநாடும் அமைந்திருந்ததென மாநாட்டின் செயற்குழு தனது உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தமிழீழ சுதந்திர சாசன மாநாட்டு செயற்குழுத் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது : அடிமை ஒழிப்புக்குக் குரல் கொடுத்த பெருமகன் திரு. 'தாடுஸ் ஸ்டீவன்சன்' அவர்களின் பிறப்பிடமாகிய அமெரிக்காவின் பென்சில்வேனிய மாநிலத்தின் லாங்காஸ்டர் நகரில் தமிழீழசுதந்திர சாசனம் மே-18மம் நாள் சனிக்கிழமை (18-05-2013) உணர்வெழுச்சியுடன் முரசறையப்பட்டது.



கைதிகளுக்கு இம்முறை பொதுமன்னிப்பு இல்லை - சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர்!
[Saturday, 2013-05-25 17:39:43]

இம்முறை வெசாக் பண்டிகையின் போது சிறைக் கைதிகள் எவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படவில்லையென புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஜி.எஸ்.விதானகே தெரிவித்துள்ளார். சிறு குற்றங்களை புரிந்து தற்போது சிறையில் உள்ள குற்றவாளிகள் சிலரின் பெயரை நீதி அமைச்சுக்கு பரிந்துரை செய்தபோதிலும் அதற்கான அனுமதி தமக்கு கிடைக்கவில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



கொழும்பு துறைமுக தீ விபத்து தொடர்பில் 13 பேரிடம் வாக்கு மூலம்!
[Saturday, 2013-05-25 17:31:37]

கொழும்புத் துறைமுக களஞ்சியசாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து தொடர்பில் இதுவரையிலும் 13 பேரிடம் வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரசாயன பகுப்பாய்வு நடவடிக்கைகளும் இன்று இடம்பெற்றன. கொழும்பு துறைமுக களஞ்சியசாலையில் நேற்று 24 ஆம் திகதி ஏற்பட்ட திடீர் தீ விபத்தையடுத்து களஞ்சியசாலை தொகுதியை பொலிஸார் பொறுப்பேற்றதுடன் விசாரணைகளையும் துரிதப்படுத்தினர். இந்நிலையிலேயே இதுவரையிலும் 13 பேரிடம் வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.



தேன்மதுர தமிழ் இசையால் கோடிக்கணக்கான இதயங்களை கட்டிப்போட்ட மதுரக் குரல் இன்று ஓய்ந்தது! Top News
[Saturday, 2013-05-25 17:26:59]

பிரபல தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகர் டி. எம். சௌந்தரராஜன் அவர்கள் சென்னையில் காலமானார். இருதயக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் பின்னர் வீடு திரும்பியிருந்தார். ஆயினும் இன்று சனிக்கிழமை சற்று நேரம் முன்னதாக அவர் தனது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 91. தென்னிந்திய திரையுலகில் அரை நூற்றாண்டுக்கும் அதிகமாக பின்னணி பாடி வந்த இவர், பட்டினத்தார் உட்பட சில திரைப்படங்களிலும் நடித்திருந்தார். 1923 ஆம் ஆண்டு மதுரையில் சௌராஸ்டிர குடும்பத்தில் பிறந்த இவரது தகப்பனார் பெயர் மீனாட்சி ஐயங்கார். 1950 ஆம் ஆண்டும் கிருஷ்ண விஜயம் என்னும் படத்தில் 'ராதே என்னை விட்டுப் போகாதடி'' என்னும் பாடலுடன் இவர் அறிமுகமானார். தமிழ் தவிர தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளிலுமாக 10, 000 பாடல்களுக்கும் அதிகமாக அவர் பாடியிருக்கிறார்.



கிளி.வட்டக்கச்சி இந்து மயானத்திற்கு எரிகொட்டகை கையளிப்பு! Top News
[Saturday, 2013-05-25 17:19:40]

வட்டக்கச்சி மம்மில் இந்து மயானத்திற்கு இராமநாதபுரத்தைச் சேர்ந்த அமரர் இராஜேஸ்வரி வேலுப்பிள்ளை ஞாபகார்த்தமாக அவரின் குடும்பத்தவரால் எரிகொட்டகை அமைத்து வழங்கப்பட்டது. அமரர் இராஜேஸ்வரி வேலுப்பிள்ளை அவர்களது நிதிப் பங்களிப்பில் வட்டக்கச்சி அறிவொளி சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் இவ் எரிகொட்டகை அமைக்கப்பட்டு, வட்டக்கச்சி கிராம முன்னேற்ற சங்கங்களிடம் கையளிக்கும் நிகழ்வு கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் வி.சுவிஸ்கரன் தலைமையில் மம்மில் இந்து மயானத்தில் இடம்பெற்றது.



இலங்கையை சேர்ந்த தமிழ்ப் பணிப்பெண் ஜோர்தானில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம்! Top News
[Saturday, 2013-05-25 17:15:20]

ஜோர்தானில் இலங்கைப் பணிப்பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவரது பெற்றோர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசத்தில் கறுவாக்கேணியை சேர்ந்த 21 வயதான நாகேந்திரன் காந்திமதி என்ற பெண் ஜோர்தானில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இம்மாதம் 19-ம் திகதி அவரது குடும்பத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 6-ம் திகதி உயிரிழந்ததாகக் கூறப்படும் குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில் தமக்கு இரண்டு வாரங்களுக்குப் பின்னரே அறிவிக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் பிபிசி தமிழோசையிடம் கூறுகின்றனர். கடந்த 2010-ம் ஆண்டு ஜூலை 22ம் திகதி இவர் வீட்டுப் பணிப்பெண்ணாக ஜோர்தான் சென்றுள்ளார்.



இளம் பெண்ணை மிரட்டி பல தடவை பாலியல் வல்லுறவு - படத் தயாரிப்பாளர் கைது!
[Saturday, 2013-05-25 14:30:48]

யுவதியொருவரை தொடர்ச்சியாக மிரட்டி வல்லுறவுக்குட்படுத்தி வந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளரொருவரை நாரஹெம்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த யுவதி அதுருகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதானவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. யுவதி சினிமாவில் நடிப்பதற்காக தயாரிப்பாளரிடம் வந்துள்ளதாகவும் அவருக்கு வாய்ப்பு தருவதாகக் கூறி அவரை நிர்வாணமாக படமெடுத்து பின்னர் அதனை வெளியிடப்போவதாக மிரட்டியே குறித்த நபர் தொடர்ச்சியாக வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார்.



முக்கோண பாதையில் 3 கோள்கள் - இலங்கையர்கள் பார்வையிடலாம்!
[Saturday, 2013-05-25 14:27:24]

சூரியனை சுற்றியுள்ள கோள்களில் மூன்று கோள்கள் முக்கோண பாதையில் தற்போது சுற்றிவருவதை வானத்தில் பார்க்கலாம் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்தார். இரவில் வானத்தில் தெட்டத்தெளிவாக தெரிகின்ற சனி, கோள்மண்டத்தில் மிகப்பெரிய கோளான வியாழன் மற்றும் சூரியனுக்கு மிகவும் அண்மையில் இருக்கின்ற புதன் ஆகிய கோள்களே முக்கோண பாதையில் சுற்றிவருகின்றன. இலங்கையின் வடமேல் வானத்திலேயே இதனை பார்க்க முடியும் என்று தெரிவித்துள்ள பேராசிரியர் சந்தன ஜயரத்ன இது போன்றதொரு நிகழ்வை 2021 ஆம் ஆண்டே பார்க்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



23வது ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் திங்களன்று ஆரம்பம்!
[Saturday, 2013-05-25 14:21:40]

ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 23 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் ஹூன் மாதம் 14 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இந்த 23 ஆவது கூட்டத்தொடரின் அமர்வுகளின் போது நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஆராயப்படவுள்ளதுடன் பல்வேறு நாடுகள் தொடர்பில் பிரேரணைகளும் முன்வைக்கப்படவுள்ளன. 47 உறுப்பு நாடுகள் இந்தக் கூட்டத்தொடரில் கலந்துகொள்ளவுள்ளதுடன் மேலும் பலநாடுகளும் அவதானிப்பு நாடுகளாகவும் கலந்துகொள்ளவுள்ளன.



ஈழத்தமிழருக்கு ஆதரவான கட்சி விரைவில் புதுடில்லியில் உதயமாகும் - தா.பாண்டியன்!
[Saturday, 2013-05-25 14:13:19]

புதுடில்லியில் விரைவில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான ஆட்சி நிச்சயம் அமையும். எதிர்வரும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் அது வெளிப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை சென்னையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவுதின நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையிலேயே பாண்டியன் இதனைத் தெரிவித்தார். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவுமிக்க ஆட்சியொன்று புதுடில்லியில் வெகுவிரைவில் அமையும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. அதன் மூலம் ஈழத் தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வினை விரைவாக எட்டுவதற்கான அழுத்தத்தை இலங்கை அரசுக்கு கொடுக்க முடியும் என்றும் பாண்டியன் தனது உரையில் குறிப்பிட்டார்.



13வது திருத்தச் சட்டம் தொடர்பில் கருத்துக் கூறுவதற்கு கோத்தபாயவிற்கு அதிகாரமில்லை - வாசுதேவ நாணயக்கார!
[Saturday, 2013-05-25 14:04:31]

13வது திருத்தச் சட்டம் தொடர்பில் கருத்துக்களை தெரிவிப்பதற்கு பாதுகாப்பு செயலாலர் கோத்தபாய ராஜபக்சவிற்கு அதிகாரமோ உரிமையோ கிடையாது என்று மொழி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஜாதிக ஹெல உறுமயவினால் முன் வைக்கப்படவுள்ள தனி நபர் பிரேரணை செல்லுபடியற்றதாகும். எனவே, அரசு மேற்படி பிரேரனைக்கு அங்கீகாரம் வழங்காது என்று மொழி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.



மட்டக்களப்பு நுழைவாயிலில் வைக்கப்படும் புத்தர் சிலை இனங்களுக்கிடையே மனக்கசப்பை ஏற்படுத்தும் - யோகேஸ்வரன் எம்.பி பிரதமருக்கு கடிதம்!
[Saturday, 2013-05-25 13:57:56]

மட்டக்களப்பு நகரின் வடக்கு நுழைவாயில் நெடுஞ்சாலையோரத்தில் புத்தர் சிலை நிறுவுவதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியானது இனங்களுக்கிடையில் மனக்கசப்பை ஏற்படுத்தும் செயலாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். புத்தர் சிலையை நிறுவுதல் தொடர்பில் பிரதமர் தி.மு ஜயரட்னவிற்கு எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,



கல்லுடன் கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்பு: முல்லைத்தீவில் சம்பவம்!
[Saturday, 2013-05-25 09:56:07]

முல்லைத்தீவு பனிச்சங்குளப் பகுதியில் பாலியல்வல்லுறவுக்கு உள்ளாகியிருக்கலாம் என சந்ததேகிக்கப்படும் நிலையில் கிணற்றில் இருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நிலையில் இச் சடலம் இருப்பதாகவும் சடலத்திலுடன் கல்லுக்கட்டப்பட்டு போடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட சடலம் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



ஆஸிக்கு செல்ல முயற்சித்த 21 இலங்கையர்கள் கேரளாவில் கைது!
[Saturday, 2013-05-25 09:30:44]

சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற 21 இலங்கை அகதிகள் இந்தியாவின் கேரளா மாநிலத்தின் ஏர்ணாகுளம் பிரதேசத்தில் வைத்து நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக கியூ பிரிவு பொலிஸார் மற்றும் கேரளப் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப் பெற்ற தகவலின்படி இந்தச் சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 7 ஆண்கள், 6 பெண்கள் மற்றும் 8 சிறுவர்கள் நியூகொச்சின் பகுதி ஹோட்டல் ஒன்றில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சென்னையிலிருந்து ரயில் மூலமாக கேரளா சென்றுள்ளனர்.



திருகோணமலை நகரசபையுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடு குறித்து அமெரிக்க அதிகாரிகளிடம் விசாரணை செய்யவுள்ள இலங்கை அரசு!
[Saturday, 2013-05-25 09:14:17]

அமெரிக்க தகவல் நிலையத்தை அமைப்பது தொடர்பாக, திருகோணமலை நகரசபையுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடு குறித்து, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுரக அதிகாரிகளிடம் விளக்கம் கோர சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திருகோணமலையில் பொது தகவல் மற்றும் செயற்பாட்டு நிலையத்தை (அமெரிக்கன் கோணர்) அமைப்பதற்கு கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம், திருகோணமலை நகரசபையுடன் கடந்த 22ம் நாள் உடன்பாடு ஒன்றைச் செய்து கொண்டது. இந்த உடன்பாடு குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்குத் தெரியப்படுத்தப்படாதது சிறிலங்கா அரசாங்கத்துக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையிலேயே கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகளிடம் விளக்கம் கோர சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு முடிவு செய்துள்ளது.



வடக்கு தேர்தலினில் பொருத்தமானவர்கள் நிறுத்தப்படவேண்டும்! - குமாரவடிவேல் குருபரன்!
[Saturday, 2013-05-25 08:44:20]

வடக்கு மாகாணசபை தேர்தலில் எவரையும் போட்டியிடக்கூடாதெனவும் பகிஸ்கரிக்கவேண்டுமெனவும் சிவில் சமூகம் வேண்டுகோள் விடுத்திருப்பதாக கூறப்படுவது தவறான தகவலென சிவில் சமூக அமைப்புக்கள் சார்பினில் குரல்தரவல்லவரான சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் தெரிவித்தார்.



ஜனநாயக பண்புகளைக் கொண்ட அரசாங்கம் ஆசியப் பிராந்தியத்திலே இலங்கையில்தான் உள்ளது - ஜனாதிபதி பெருமிதம்!
[Saturday, 2013-05-25 08:27:33]

ஆசியாவிலேயே ஜனநாயக பண்புகளை முழுமையாக பின்பற்றி நிலையான அரசாங்கமொன்றை உருவாக்கியுள்ள நாடு இலங்கைதான் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். மஹரகம இளைஞர் சேவைகள் மன்ற அரங்கில் இரண்டாவது இளைஞர் பாராளுமன்றத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்"டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது:-



3000 கிலோகிராம் இரும்புகள் கோப்பாயில் திருட்டு - நான்குபேர் கைது!
[Saturday, 2013-05-25 08:18:03]

யாழ்ப்பாணம், கோப்பாய் கோண்டாவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 3000 கிலோகிராம் இரும்புகள் திருடப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் நான்குபேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். களவாடப்பட்ட இரும்புகளில் 1800 கிலோகிராம் இரும்புகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார். மீட்கப்பட்ட இரும்புகளில் பாரிய ஆயுதங்களின் உதிரிபாகங்களும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த ஆயுதங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


TDE_Computers2011
NIRO-DANCE-100213
Suresh-remax-2013-01-01
RoyaShades-l2011(04-12-11)
INNSYS-20120930
AJRwindows22.05.13
Canada Kanthasamy Kovil
TamilsGuid-191012-2013
Mahesan supramaniyam 031109
Ramans2011
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com