Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 26, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
இலங்கையர்கள் மீதான தாக்குதலால் தமிழகத்துக்கே பாதிப்பு அதிகம்! - தினமலர்
[Thursday, 2012-09-06 19:22:29]
News Service

தமிழகத்துக்கு, இலங்கையில் இருந்து வருபவர்கள் மீது, தமிழ் அமைப்புகள் தாக்குதல் நடத்தி வருவதால், இலங்கையிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. இலங்கையில் இருந்து சிங்களர்கள் மட்டுமல்லாமல், தமிழர்களும் ஏராளமானோர் சுற்றுலா வருகின்றனர். அவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலால், தமிழர்களும் பாதிக்கப்படுகின் றனர்; தமிழகத்துக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

  

இலங்கையிலிருந்து, அதிபர் மற்றும் அமைச்சர்கள் தமிழகம் வருவதற்கு, சில அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. சுற்றுலா வருபவர்களையும், விளையாட்டு வீரர்களையும் கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை. கடந்த வாரம், திருச்சி, கலை காவேரி நுண்கலைக் கல்லூரிக்கு, கலாசார விழாவுக்கு வந்த இலங்கை மாணவர்களை, திருப்பி அனுப்பும்படி, நாம் தமிழர் கட்சி யினர் போராட்டம் நடத்தினர். சில நாட்களுக்கு முன், சென்னை வந்த இலங்கை கால் பந்தாட்ட வீரர்களை, திருப்பியனுப்புமாறு உத்தரவிட்ட தமிழக முதல்வர், நேரு விளையாட்டு மைதான பொறுப்பாளர் தாமசை, "சஸ்பெண்ட்' செய்தார்.

இலங்கையிலிருந்து, கடந்த, 2ம் தேதி, வேளாங்கண்ணி கோவிலுக்கு வந்த, இலங்கை நாட்டவரை, தமிழ் அமைப்புகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தின. திருச்சி விமான நிலையத்துக்கு வந்த போது, ஒரு கும்பலால் அவர்கள் தாக்கப்பட்டனர். "தமிழகத்தில், சிங்களர்களுக்கு சாதகமான சூழல் இல்லாததால், யாரும் செல்ல வேண்டாம்' என்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இலங்கை நாட்டினருக்கு எதிரான தாக்குதலும், போராட்டங்களும் தொடர்ந்து நடப்பதால், இலங்கையிலிருந்து, தமிழகத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து உள்ளது.

இலங்கையிலிருந்து திருச்சிக்கு, ஜனவரி மாதம் வந்த பயணிகளின் எண்ணிக்கை, 4,094. ஜூலை மாதம் இந்த எண்ணிக்கை 2,347 ஆக குறைந்துள்ளது. இந்தியாவிலிருந்து கலாசார ரீதியாகவும், விளையாடவும் இலங்கைக்கு நாள்தோறும் ஏராளமான பயணிகள் செல்கின்றனர். தாக்குதல் நிலை நீடித்தால், இலங்கையில் இருந்து தமிழகம் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும். இவ்வாறு குறைந்தால் பாதிக்கப்படுவது தமிழகம் தான்.

தமிழகத்தில் இருந்து ஜவுளி, நகைகள் போன்ற ஏராளமான பொருட்களை இலங்கை மக்கள் வாங்கிச் செல்கின்றனர். தமிழகம் முழுவதும் பிரபலமான கடைகளில் இலங்கை மக்கள் அதிக அளவில் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். முக்கிய நகரங்களுக்கு இலங்கை பயணிகளும் வந்து செல்கின்றனர். இதனால் அந்த ஊர்களில் ஏராளமானோருக்கு வருமானம் கிடைக்கிறது. சுற்றுலாப் பயணிகளை தடுத்தால், அவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.

தமிழ் பற்று, தமிழர்களுக்காக குரல் கொடுப்பது போன்ற ரீதியில் தமிழ் அமைப்புகளை சேர்ந்த சிலர், மனித உரிமைக்கு மீறிய செயல்களில் ஈடுபடுவதை நாகை மாவட்ட மீனவர்கள் கண்டித்துள்ளனர். மீனவர்கள் கூறியதாவது:

கடலில் மீன்பிடிக்க செல்லும் போது, எப்போது, இலங்கை கடற்படையால் இழுத்துச் செல்லப்படுவோமோ என்று தெரியாத நிலையில் கவலையிலும், குழப்பத்திலும் செல்கிறோம். தமிழக மீனவர்களின் பாதுகாப்பு இன்றளவும் கேள்விக்குறியாக தொடர்கிறது. இந்நிலையில், எந்தவித அரசு பொறுப்புகளும் இல்லாத அப்பாவி சிங்கள மக்கள், தங்களின் புனித பயணத்திற்காக தமிழகம் வரும்போது, மனிதாபிமானமற்ற முறையில், அவர்களை தாக்கும் செயல் தமிழக மீனவர்களுக்கு மேலும் சிக்கலை உருவாக்கும்.

வேளாங்கண்ணிக்கு யாத்திரையாக வந்தவர்களில் தமிழர்களும் உண்டு. ஏன் இவர்கள் அதனை புரிந்து கொள்ளவில்லை. கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கையில் இருந்து, தமிழகத்திற்கு வந்த மீனவ கூட்டமைப்பில் இடம் பெற்றிருந்த சிங்கள மீனவர்கள், தமிழக மீனவர்களுக்கும், எங்களுக்கும் எவ்வித மோதலும் இல்லை. சிங்கள அரசின் மனிதாபிமானமற்ற செயலை கண்டிக்கிறோம் என்றனர்.

இவற்றையெல்லாம் அறியாத தமிழக அமைப்புகள், அரசியல் ரீதியான தீர்வு காண முயல வேண்டும். அல்லது, இலங்கைக்கு சென்று போராட வேண்டும். அதைவிடுத்து, இதுபோன்ற செயல்களால் தமிழக மீனவர்களுக்கு தொடர் தொல்லை தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு மீனவர்கள் கூறினர்.

"வர்த்தகம், சுற்றுலாவிற்காக தமிழகம் செல்ல வேண்டாம்' என, இலங்கை அரசு அறிவித்துள்ளதால், தமிழகத்தில், ஜவுளி, உணவுப் பொருட்கள் ஏற்றுமதியில் பெரும் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இலங்கையில் இருந்து தமிழகம் வரும் பொதுமக்கள், இங்கு சுற்றுலாத்தலங்களுக்கு செல்வதுடன், அதிகளவில் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். சென்னையின் முக்கிய வர்த்தகப் பகுதியான தி.நகருக்கு தினசரி பலர் வந்து துணிகளை வாங்கிச் செல்கின்றனர். சுற்றுலாவுக்காக வருபவர்கள் தவிர, துணி வர்த்தகர்கள் பலரும் இங்கு வந்து செல்கின்றனர்.

இதுகுறித்து, தி.நகரைச் சேர்ந்த ஜவுளி வர்த்தகர் கூறும்போது, ""தினசரி இலங்கையில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர். ஊர்களுக்கு செல்லும்போது சேலைகள், குழந்தைகளுக்கான துணிகளை மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர். தற்போது இலங்கை அரசின் இந்த அறிவிப்பால், அவர்கள் வருவது நிற்கும் பட்சத்தில் 10 சதவீதம் அளவிற்கு மேல் வர்த்தக இழப்பு ஏற்படும்,'' என்றார். இது தவிர இலங்கையைச் சேர்ந்த ஜவுளி வர்த்தகர்கள், ஜவுளி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், நேரடியாக, கோவை, திருப்பூர் பகுதிகளுக்கு சென்று பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். வர்த்தகர்கள் வருகை நின்றால், 150 கோடி ரூபாய்க்கும் மேல் வர்த்தக இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. ஜவுளிக்கு அடுத்தபடியாக, உணவுப் பொருட்கள் வர்த்தகமும் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் இருந்து சர்க்கரை, அரிசி உள்ளிட்ட பொருட்கள் அதிகளவில் இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போதுள்ள சூழலில், உணவுப் பொருட்கள் வர்த்தகம் பெருமளவில் பாதிக்கலாம். இதனால், சர்க்கரை நிறுவனங்கள், அவர்களை நம்பியுள்ள விவசாயிகளுக்கு, வர்த்தக வாய்ப்பு குறையும் நிலை உள்ளது. மேலும், தமிழகம் வழியாக இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து வரும் உணவுப் பொருட்களும் வர்த்தக வாய்ப்பினை இழப்பதாகவும் கூறப்படுகிறது.

இதே போல், இலங்கையை பொறுத்த மட்டில், அங்கு, இந்தியாவில் இருந்து குறிப்பாக தமிழக துறைமுகங்களில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் வாகனங்கள் தான் அதிகளவில் ஓடிக் கொண்டிருக்கின்றன. அசோக் லேலண்ட் லாரிகள், பஸ்கள் மற்றும் ஹூண்டய், மாருதி கார்கள், டி.வி.எஸ்., உள்ளிட்ட நிறுவனங்களின் வாகனங்கள் அதிகளவில் அங்கு பயன்படுத்தப்படுகின்றன. இலங்கை அரசின் அறிவிப்பால், தமிழகம் வழியாக நடக்கும் இந்த வர்த்தகங்கள் 190 கோடி ரூபாய் அளவிற்கு குறையும் என்று கூறப்படுகிறது.

மேலும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறையும் என்பதால், சிறு வர்த்தகர்களும் பாதிக்கப்பட உள்ளனர். வர்த்தக இழப்பு என்பது கடைக்கோடி தொழிலாளர்கள் வரை பாதிக்கும் சூழல் உள்ளது. இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை விட ஐந்து மடங்கு இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பதை கருத்தில் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பு.

- தினமலர்

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

சீனாவுடனான பிரச்சினைக்கு உடனடித் தீர்வு கிடைக்காது - பாதுகாப்பு அமைச்சர் அந்தோனி!
[Sunday, 2013-05-26 08:09:16]

சீனா உடனான பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு கிடைத்து அதிசயம் நடக்கும் என தான் எதிர்பார்க்கவில்லை என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி தெரிவித்துள்ளார். கேரளாவில் எழிமலா என்ற இடத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில இதனை அவர் தெரிவித்தார். இந்தியா சீனா இரு நாடுகளிடையே ஒத்துழைப்பும் போட்டியும் உள்ளது என்றும் அண்டை நாடுகளாக உள்ள இரு நாடுகளும் இணைந்து பணியாற்றும் என்றும் ஏ.கே. அந்தோனி தெரிவித்துள்ளார். இரு நாடுகளிடையே நிலவும் பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலம் தீ்ர்க்க முயற்சி எடுத்து வருவதாகவும் ஏ.கே. அந்தோனி கூறினார். அதற்கு இரு நாடுகளும் போதிய கால அவகாசம் எடுத்துக் கொள்வது இயற்கையே என்றும் அவர் குறிப்பிட்டார்.



ஏழுமலையானிடம் 50 ஆயிரம் கோடி ரூபா மதிப்புள்ள 11 டன் தங்க ஆபரணங்கள் - படங்களை இணையத்தில் வெளியிட முடிவு!
[Sunday, 2013-05-26 07:37:44]

திருப்பதி ஏழுமலையான் கோயில் நகை, ஆபரணங்களின் படங்களை இணைய தளத்தில் வெளியிட தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமிக்காக 11 டன் தங்க நகைகள், 5 ஆயிரம் ஆபரணங்கள் உள்ளன. இதில் மூலவருக்கும், உற்சவருக்கும் தினமும் பல்வேறு அலங்காரம் செய்யப்படுகிறது. சிறப்பு உற்சவ நாட்களில் சுவாமிக்கு வைர கிரீடங்கள் அணிவிக்கப்படுகிறது. இதற்காக 19ம் நூற்றாண்டில் பல்லவ ராணி, கிருஷ்ண தேவராயர், வெங்கடகிரி ஜமீன்தாரர்கள் விலை உயர்ந்த வைரம், வைடூரியங்கள் பொருத்திய ஆபரணங்களை வழங்கினர். இவை பாதுகாப்பாகவும், கணக்கு சரியாகவும் உள்ளதா என பல ஆண்டுகளாக பக்தர்கள் மத்தியில் சந்தேகம் இருந்து வந்தது.



பாமக இடம்பெறும் அணியில் விடுதலைச் சிறுத்தைகள் இருக்காது - திருமாவளவன் திட்டவட்டம்!
[Sunday, 2013-05-26 07:31:32]

பாமக இடம்பெறும் அணியில் விடுதலைச் சிறுத்தைகள் இடம்பெறுவது என்பது சாத்தியமில்லாதது என்று அக் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். மாநிலங்களவைத் தேர்தலில் பாமகவின் ஆதரவை கேட்டுப் பெறுவதற்கான முயற்சியில் திமுக ஈடுபட்டுள்ளது.சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பா.ம.க. நிறுவனர் ராமதாசை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி இருவரும் வெள்ளிக்கிழமை சந்தித்து உடல்நலம் விசாரித்துள்ளனர். மாநிலங்களவைத் தேர்தலுக்கு பா.ம.க.வின் ஆதரவை திமுக கேட்டுள்ளதுடன், பா.ம.க.வும் திமுகவை ஆதரிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.



நக்சல்களின் தாக்குதலில் முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட 21 பேர் பலி - வி.சி.சுக்லாவுக்கு காயம், மாநில காங்கிரஸ் தலைவர் கடத்தல்!
[Sunday, 2013-05-26 07:13:53]

சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று மாலை நக்சலைட்கள் நடத்திய தாக்குதலில் முன்னாள் மாநில உள்துறை அமைச்சர் உள்ளிட்ட 21 பேர் கொல்லப்பட்டதுடன் முன்னாள் மத்திய அமைச்சர் வி.சி.சுக்லா உள்ளிட்ட பலர் படுகாயமடைந்தார். இந்தச் சம்பவம் மத்திய அரசை பெரிதும் அதிரச்சியடைய வைத்துள்ளது. சத்தீஸ்கரின் ஜக்தால்பூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிமாற்ற யாத்திரை சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு விட்டு காங்கிரஸ் தலைவர்கள் ஜக்தால்பூருக்கு வாகனங்களில் திரும்பிக் கொண்டிருந்தனர். கீடம் காட்டி என்ற வனப்பகுதியை அடுத்த தர்பா காட்டி கிராமத்தில் மாலை 5.30 மணியளவில் அவர்களது வாகனங்கள் சென்றபோது, ஆயுதம் தாங்கிய சுமார் 100-150 மாவோயிஸ்ட்டுகள் அவர்களை வழிமறித்தனர்.



அறுபது ஆண்டுகளில் யாரும் பெறாத இடத்தைப் பெற்றார் டிஎம்எஸ் - கருணாநிதி இரங்கல்!
[Saturday, 2013-05-25 18:52:59]

சென்னையில் இன்று காலமான பிரபல பின்னணிப் பாடகர் டி.எம்.செளந்தரராஜனுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:- 1950ஆம் ஆண்டில் சேலம் மாடர்ன் தியேட்டரில் மந்திரிகுமாரி திரைப்படத்திற்கு நான் திரைக்கதை-வசனம் எழுதிய காலத்திலிருந்து, நண்பர் டி.எம்.எஸ். அவர்களுடன் எனக்கு நல்ல நட்பு உண்டு. திரை இசை, மக்கள் இசை! அதன் அறுபது ஆண்டு கால வரலாற்றில் வேறு எந்தப் பாடகரும் பெறாத இடத்தை டி.எம்.எஸ். பெற்றிருக்கிறார். தியாகராஜ பாகவதரைப் பின்பற்றிப் பாடத் தொடங்கியவர்; இசை அமைப்பாளர் ஜி. ராமநாதனால் சிறந்த பின்னணிப் பாடகராக உருவாக்கப்பட்டவர்.



ஐபிஎல் சூதாட்டத்தில் கிறிஸ் கெய்ல் மீதும் சந்தேகம்!
[Saturday, 2013-05-25 18:42:17]

நாட்டை உலுக்கி எடுத்து வரும் ஐபிஎல் பிக்ஸிங் விவகாரத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் புயலாக வர்ணிக்கப்படும் கிறிஸ் கெய்ல் பெயரும் அடிபடுகிறது. பிக்ஸிங் விவகாரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 3 வீரர்கள் சிறைக்குப் போனார்கள். பிறகு நாட்டின் பல நகரங்களிலும் பல புக்கிகள் தொடர்ந்தும் சிக்கி வருகின்றனர். பாலிவுட் நடிகர் வின்துவும் சிக்கப் போய் இப்போ சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகி குருநாத் மெய்யப்பன் சிறைக்குப் போயிருக்கிறார். அத்துடன் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின் 8 வீரர்கள் சிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்த நிலையில் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர் கிறிஸ் கெய்ல் பெயரும் பிக்ஸிங் விவகாரத்தில் அடிபடுகிறது.



ஆந்திராவில் அனலாய் கொதிக்கும் வெயில் - நேற்று மட்டும் 293 பேர் பலி!
[Saturday, 2013-05-25 18:20:26]

ஆந்திராவில் கடந்த சில நாட்களாக அனல் காற்றுடன் வெயில் கொளுத்துகிறது. நேற்று மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 115 டிகிரிக்கும் அதிகமாக வெயில் பதிவானது. கம்மம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 122 டிகிரி வெயில் கொளுத்தியது. நெருப்பு மழை கொட்டுவது போல் அனல் காற்று வீசியது. இரவு 10 மணி ஆன போதிலும் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை. அனல் காற்று மற்றும் வெயிலின் வெப்பத்துக்கு ஆந்திராவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 293 பேர் பலியானார்கள். இவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள், கூலித் தொழிலாளர்கள், குழந்தைகள் ஆவார்கள்.



மணிப்பூரில் பேச்சுக்கு வந்த போராளிக் குழுத் தலைவர் சுட்டுக்கொலை!
[Saturday, 2013-05-25 17:58:50]

மணிப்பூர் மாநிலத்தைப் பிரிக்க வேண்டும் என்று குகி தேசிய முன்னணி உள்ளிட்ட பல போராளி இயக்கங்கள் போராடி வருகின்றன. தற்போது அந்த இயக்கங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதற்காக நியமிக்கப்பட்ட சிறப்பு முகாம்களில் தீவிரவாத இயக்க தலைவர்கள் தங்கியிருக்கின்றனர். அமைதி பேச்சுவார்த்தைக்காக, சேனாபதி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தங்கியிருந்த குகி தேசிய முன்னணி தலைவர் சீகோபாவ் கிப்கன் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அந்த முகாமின் கமாண்டராகவும் அவர் செயல்பட்டு வந்தார்.



எல்லையில் பாகிஸ்தான் படையினர் சுட்டதில் இந்திய பிரிகேடியர் படுகாயம் - மற்றொரு வீரர் கண்ணிவெடிக்குப் பலி!
[Saturday, 2013-05-25 17:52:00]

இந்திய எல்லையான காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பிரிகேடியர் ஒருவரும், 2 வீரர்களும் காயமடைந்தனர். எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் துத்மாரி கலி என்ற இடத்தில், பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறிய ரக ஆயுதங்களைக் கொண்டு இந்திய எல்லையைக் குறி வைத்து தாக்குதல் நடத்தினர். இதில் மூன்று பேர் காயமடைந்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் எல்லைப் பகுதியான பூஞ்சில் நேரிட்ட கண்ணிவெடித் தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார்.



தேன்மதுர தமிழ் இசையால் கோடிக்கணக்கான இதயங்களை கட்டிப்போட்ட மதுரக் குரல் இன்று ஓய்ந்தது! Top News
[Saturday, 2013-05-25 17:26:59]

பிரபல தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகர் டி. எம். சௌந்தரராஜன் அவர்கள் சென்னையில் காலமானார். இருதயக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் பின்னர் வீடு திரும்பியிருந்தார். ஆயினும் இன்று சனிக்கிழமை சற்று நேரம் முன்னதாக அவர் தனது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 91. தென்னிந்திய திரையுலகில் அரை நூற்றாண்டுக்கும் அதிகமாக பின்னணி பாடி வந்த இவர், பட்டினத்தார் உட்பட சில திரைப்படங்களிலும் நடித்திருந்தார். 1923 ஆம் ஆண்டு மதுரையில் சௌராஸ்டிர குடும்பத்தில் பிறந்த இவரது தகப்பனார் பெயர் மீனாட்சி ஐயங்கார். 1950 ஆம் ஆண்டும் கிருஷ்ண விஜயம் என்னும் படத்தில் 'ராதே என்னை விட்டுப் போகாதடி'' என்னும் பாடலுடன் இவர் அறிமுகமானார். தமிழ் தவிர தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளிலுமாக 10, 000 பாடல்களுக்கும் அதிகமாக அவர் பாடியிருக்கிறார்.



மருத்துவமனையில் ராமதாசை சந்தித்து நலம் விசாரித்தார் கனிமொழி - பாமகவுடன் கூட்டணிக்கு திமுக புதுவியூகம்!
[Saturday, 2013-05-25 08:05:35]

மாநிலங்களவைத் தேர்தலில் தி.மு.க. எப்படியாவது ஓரிடத்தையாவது கைப்பற்ற வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறது. கனிமொழி, திருச்சி சிவா ஆகிய இருவரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வரும் ஜூலை மாதம் 24-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், கனிமொழியை மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக்க வேண்டும் என்கிற முயற்சியில் தி.மு.க. தலைமை ஈடுபட்டிருக்கிறது.மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணத்தில் கனிமொழி, கடலூர் மற்றும் தூத்துக்குடி தொகுதிகளில் கள ஆய்வுகள் செய்திருந்தார்.



"இந்தியத் தூதரகம் விடுவிக்க முயற்சிக்கவில்லை"- சிறையில் இருந்து மீண்ட காரைக்கால் மீனவர்கள் குற்றச்சாட்டு!
[Saturday, 2013-05-25 07:53:57]

தங்களை விடுவிக்க, இலங்கை அமைச்சர்கள் சிலர் எடுத்த முயற்சியை கூட இந்திய தூதரகம் எடுக்கவில்லை என்று காரைக்கால் திரும்பிய தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 26 மீனவர்கள் நேற்று காரைக்கால் திரும்பினர். அவர்களை உறவினர்கள், சக மீனவர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர். காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ஏப்ரல் 3ம் தேதி 5 படகுகளில் 26 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். எல்லையில் அத்துமீறி நுழைந்ததாக அவர்களை 5ம் தேதி இலங்கை கடற்படை கைது செய்தது. இந்நிலையில், 20ம் தேதி மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. தொடர்ந்து இலங்கை பகுதியில் கடல் சீற்றம் காணப்பட்டதால், மீனவர்களை இந்திய கடற்படை வசம் ஒப்படைப்பதில் சிக்கல் நீடித்தது.



தஞ்சாவூரில் நவீன மயப்படுத்தப்பட்ட விமானப்படைத்தளம் - நாளை மறுநாள் திறப்பு விழா!
[Saturday, 2013-05-25 07:46:42]

தஞ்சையில் ரூ.150 கோடியில் நவீன மயமாக்கப்பட்டுள்ள விமானப்படை தளத்தின் திறப்பு விழா வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி பங்கேற்கிறார். தஞ்சை புதுக்கோட்டை சாலையில் உள்ள விமானப்படை தளத்தில் ரூ.150 கோடியில் 2 ஆண்டுகளாக பல்வேறு நவீனமயமாக்கல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதில் ஒரு பகுதியாக புதிதாக 4 கிமீ நீளமுள்ள 2 விமான ஓடுதளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தென்னிந்திய விமானப்படையை வலுப்படுத்தும் விதமாக இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு கடந்த 4 மாதமாக ஆய்வுகள் மற்றும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது.



மாணவியைக் கடத்த முயன்ற நடிகை சனாகான் தலைமறைவு - கைது செய்ய பொலிஸ் தேடுதல்!
[Saturday, 2013-05-25 07:41:54]

நடிகை சனாகான் 6வது பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் சல்மான்கானுடன் கலந்து கொண்டவர். தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். நடிகர்கள் ரித்திக் ரோஷன், அக்ஷய் குமார் ஆகியோருடன் பல விளம்பர படங்களில் நடித்தவர். 2007ம் ஆண்டு இவர் நடித்த உள்ளாடை விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது ஆபாசமாக இருப்பதாக கூறி மத்திய அரசு அதற்கு தடை விதித்தது. சல்மான் கானின் மென்டல் படத்தில் நடிக்க சனாகான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன் படப்பிடிப்பும் தொடங்கி விட்டது. இதனிடையே, சனா கானின் உறவினரான நாவெட்டுக்கும் (18), சான்பாடாவை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவிக்கும் டுவிட்டர் மூலம் தொடர்பு ஏற்பட்டது. மாணவியை திருமணம் செய்து கொள்வதாக நாவெட் தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்.



தமிழகத்தில் தங்கியுள்ள ஒரு லட்சம் இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை - வலியுறுத்துகிறார் கருணாநிதி!
[Saturday, 2013-05-25 07:34:51]

தமிழகத்தில் தங்கியுள்ள ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட கேள்வி பதில் அறிக்கையிலேயே இதனை வலியுறுத்தியுள்ளார். 2 லட்சத்து 60 ஆயிரம் இந்தியர்களுக்கு அமெரிக்கக் குடியுரிமை வழங்கக் கூடிய முக்கிய மசோதா வுக்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளிக்கப் போவதாக சொல்லப்படுகிறதே என்ற கேள்விக்குப் பதிலளித்துள்ள கருணாநிதி, அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இன்றி 1 கோடியே 10 லட்சம் வெளிநாட்டினர் வாழ்ந்து வருவதாகவும், அவர்களில் 2 லட்சத்து 60 ஆயிரம் பேர் இந்தியர்கள் என்றும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.



சீன உளவாளி திபெத் எல்லையில் சுட்டுக்கொலை - தலாய்லாமாவை கொல்ல வந்தவரா?
[Friday, 2013-05-24 18:17:38]

இமாசலபிரதேச மாநிலம் காங்க்ரா மாவட்டத்தில் திபெத் எல்லைப் பகுதியில் சீன உளவாளி பெம்பா டி செரிங் என்பவரை போலீசார் சுட்டுக் கொன்றனர். அவர் சீன உளவாளிதான் என்பதை திபெத்திய அரசு உறுதி செய்தது. திபெத்தை சீனாவிடம் இருந்து மீட்க போராடி வரும் புத்த துறவி தலாய்லாமா தர்மசாலாவில் அடைக்கலம் புகுந்துள்ளார். அவருக்கு சீனாவிடம் இருந்து மிரட்டல் வந்தது.டிசெரிங் சீன விடுதலை ராணுவத்தைச் சேர்ந்தவர்,தற்போது மக்கள் ஆயுதபடை என்ற இயக்கத்தில் இருக்கிறார். அவர் நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.



நடுவானில் விமானத்தின் கண்ணாடியில் திடீர் விரிசல் - 179 பயணிகள் அருந்தப்பு!
[Friday, 2013-05-24 18:01:05]

இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமான கண்ணாடியில் திடீர் விரிசல் ஏற்பட்டது. நிகழ இருந்த பெரும் விபத்தை தடுக்க உடனடியாக விமானம் கொல்கத்தாவில் தரையிறக்கப்பட்டது. இதனால் 179 பயணிகள் உயிர் தப்பினர். 6இ 205 என்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம்,179 பயணிகளுடன் நேற்று மதியம் பகல் 12.57 மணிக்கு, கொல்கத்தாவில் இருந்து திப்ரூகருக்கு புறப்பட்டது. விமானம் கிட்டத்தட்ட 30,000 அடி உயரத்தைத் தொட்டபோது, முன்புறக் கண்ணாடியில் விரிசல் இருந்ததை விமான ஓட்டிகள் கவனித்தனர்.



இந்தியா முழுவதும் வாட்டியெடுக்கும் வெயில் - நேற்று ஒரே நாளில் மட்டும் ஆந்திராவில் 57 பேர் பலி!
[Friday, 2013-05-24 17:50:48]

அக்னி வெயில் வடமாநில மக்களை வாட்டி வதைக்கிறது. தலைநகர் டெல்லியில் 113.5 டிகிரி வெயில் கொளுத்தியது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் 118 டிகிரியும், ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகரில் அதிகபட்சமாக 120 டிகிரியும் வெயில் பதிவானது. எப்போதும் குளு குளு என இருக்கும் ஜம்மு காஷ்மீரில் கூட 110 டிகிரிக்கு மேல் வெயில் அடித்தது. ஆந்திராவில் பல மாவட்டங்களில் நேற்று 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது. கரீம்நகர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 120 டிகிரி வெயில் கொளுத்தியது. ஆந்திர மாநிலத்தின் ஊட்டி என அழைக்கப்படும் விசாகப்பட்டினம் மன்னியம் மலைவாசஸ்தலத்தில் நேற்று 105 டிகிரி பதிவானது.



சூதாட்டப் புகாரில் சிக்கியுள்ள கிரிக்கெட் வீரர்களுடன் தொடர்பு இல்லை - நடிகை லட்சுமி ராய் அலறல்!
[Friday, 2013-05-24 17:27:57]

சூதாட்ட புகாரில் சிக்கியுள்ள கிரிக்கெட் வீரர்கள் அல்லது மற்ற வீரர்களுடன் என்னை இணைத்துப் பேசுவது தவறு. எனக்கும் அவர்களுக்கும் தொடர்பில்லை. டோனி, ஸ்ரீசாந்த் போன்றவர்களுடன் பேசியே ரொம்ப நாளாகிவிட்டது என திடீர் அறிக்கை விடுத்துள்ளார் லட்சுமி ராய். சூதாட்ட புகாரில் சிக்கிய கிரிக்கெட் வீரர்களுடன் தொடர்புள்ள நடிகைகள் என்ற பட்டியலில் நடிகை லட்சுமிராய் பெயர் பலமாக அடிபடுகிறது. இவர் ஐ.பி.எல் கிரிக்கெட்டில் தூதுவராக இருந்துள்ளார். டோனிக்கு மிக நெருக்கமானவர் என்றும் கிசுகிசுக்கப்பட்டார். இதையெல்லாம் பார்த்து மகா கோபத்துக்குள்ளாகியிருக்கும் லட்சுமி ராய் அளித்துள்ள மறுப்பு செய்தியில், கிரிக்கெட் வீரர்கள் டோனி, ஸ்ரீசாந்துடன் என்னை இணைத்துப் பேச வேண்டாம்.



காஷ்மீரில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் - 4 இந்தியப்படையினர் பலி!
[Friday, 2013-05-24 17:20:51]

ஜம்மு- காஷ்மீர் பிராந்தியத்தில் ஆயுததாரிகள் மறைந்திருந்து நடத்திய தாக்குதலில் இந்தியப் படையினர் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். கிளர்ச்சிப் போராளிகளுக்கு எதிராக படை நடவடிக்கையைத் தொடங்கியுள்ள துருப்பினரை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாக இந்திய இராணுவப் பேச்சாளர் லெப்.கர்ணல் அன்கூர் வஷிஸ்ட் கூறினார். புல்வாமா மாவட்டத்தில் ஸ்ரீநகரிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் புச்சூ என்ற கிராமத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபடுவதற்காக சென்று கொண்டிருந்த படையினரே தாக்குதலில் சிக்கியுள்ளனர்.


Suresh-remax-2013-01-01
INNSYS-20120930
RoyaShades-l2011(04-12-11)
AJRwindows22.05.13
Canada Kanthasamy Kovil
NIRO-DANCE-100213
Mahesan supramaniyam 031109
TamilsGuid-191012-2013
Ramans2011
TDE_Computers2011
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com