Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 19, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
கிழக்கு மாகாணத்தில் நேர்மையானதும் நியாயமானதுமான தேர்தல் நடைபெற ஆவன செய்யவும்: - ஜனாதிபதி மஹிந்தவுக்கு சம்பந்தன் கடிதம்
[Thursday, 2012-09-06 11:21:33]
News Service

நீதியானதும், நியாயமானதுமான தேர்தலொன்றை கிழக்கு மாகாணத்தில் நடத்துவதற்கும், சட்டவிரோதமான வகையில் தேர்தல் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுத்து நிறுத்துவதற்கும் உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  

இத்தகைய சூழ்நிலை ஒரு நாட்டுக்கு உகந்ததல்ல. சர்வதேச கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கும் ஒரு நாட்டின் மீதான அழுத்தத்தையும் இது இறுக்கப்படுத்த ஏதுவாகிவிடும்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்ட மைப்பின் பின்னணியில் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றுவரும் சம்பவங்களைப் பட்டியலிட்டு ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ள சம்பந்தன், நாட்டின் தலைவர் என்ற ரீதியிலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்ட மைப்பின் தலைவர் என்ற ரீதியிலும் இந்த விடயங்களைக் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு:

(அ) ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு எதிரான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும், ஆதரவாளர்களும் தாக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் பயணித்த வாகனங்களும் தாக்கப்பட்டுள்ளன.

(ஆ) ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை எதிர்க்கும் அரசியல் கட்சிகளுக்காகத் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோர். தம்மைப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக் கொண்ட குறிப்பிட்ட சிலரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதேவேளை, தேர்தல்களுக்குப் பின்னர் மோசமான பின்விளைவுகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்றும் இவர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளார்கள்.

(இ) "நீலப்படையினர்' என அடையாளம் காணப்பட்டுள்ள குறிப்பிட்ட சிலர் வாக்காளர்களின் அடையாள அட்டைகளைக் கேட்டுப் பெற்றுள்ளனர். அவற்றைப் பரிசீலனை செய்துள்ளனர். பின்னர் ஆளுங்கட்சிக்கு ஆதரவளிக்காவிட்டால் பாரதூரமான பின்விளைவுகளைச் சந்திக்கநேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

(ஈ) ஆளுங்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பட்டியலில் இடம்பெற்று பல்வேறு மாவட்டங்களில் பலர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். குறிப்பிட்ட இந்த மாவட்டங்களிலேயே பல்வேறு அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அல்லது பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இல்லையேல் செயற்படத் தொடங்கியுள்ளன.

(உ) தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரசு அலுவலக வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதிகாரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். சிலவேளைகளில் அரச கூட்டுத்தாபனங்களைச் சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகள் கூட அவர்களின் சுதந்திரமான சம்மதமின்றி தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

இத்தகைய நடவடிக்கைகள், சுதந்திரமானதும் நேர்மையானதுமான தேர்தல்கள் இடம்பெறுமா என்ற விடயத்தில் கேள்விகளை எழுப்பியுள்ளன.

அறிந்த விடயங்கள் வருமாறு:

(i) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு எதிராக வாக்களிக்க முன்வருவோரின் மனோதிடத்தைக் குழப்பியடித்து திசைமாறச் செய்வதற்கான காரியங்கள் நடைபெறலாம்.

(ii) வாக்குப் பதிவு மாற்றியமைக்கப்படலாம்.

(iii) கணக்கெடுப்பு மாற்றியமைக்கப்படலாம்.

அரசமைப்பின் 17ஆவது திருத்தம்,

(அ) தேர்தல் ஆணையம்

(ஆ) அரச சேவைகள் ஆணைக்குழு

(இ) பொலிஸ் சேவை ஆணைக்குழு ஆகியவை சுதந்திரமாகவும். நேர்மையாகவும் தொடர்ந்து செய்யப்படும் என்பதற்கு குந்தகமாகவே உள்ளது.

இந்த அமைப்புகள் நேர்மையான ஜனநாயக முன்னெடுப்புகளை தடம் புரளச் செய்யவும், சட்டபூர்வமான தேர்தல் தீர்ப்பை திரிபுபடுத்துவதற்கும் பயன்படுத்தக்கூடும் என்ற அச்சமும் தலைதூக்கியுள்ளது.

இத்தகைய சூழ்நிலை ஒரு நாட்டுக்கு உகந்ததல்ல. சர்வதேச கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கும் ஒரு நாட்டின் மீதான அழுத்தத்தையும் இது இறுக்கப்படுத்த ஏதுவாகிவிடும்.

அத்துடன், ஜனநாயக முன்னெடுப்புகளில் ஒரு நாடு கொண்டுள்ள நம்பிக்கையையும் ஈடுகட்ட முடியாதவாறு சிதைத்துவிடும். இத்தகைய சூழ்நிலையில், இந்நாட்டின் தலைமையையும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைமையையும் இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு நான் வலியுறுத்துகின்றேன்.

கிழக்கு மாகாணத்தில் நேர்மையானதும் நியாயமானதுமான தேர்தல்களே நடைபெறவேண்டும். இது இத்தலைமையின் கடமை என்பதை இத்தருணத்தில் குறிப்பிடுகின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

ஸ்ரீலங்கா அரசிற்கு எதிராக அணி திரட்டுகின்றார் அமைச்சர் டக்ளஸ்!
[Sunday, 2013-05-19 11:29:30]

13வது அரசியலமைப்பு திருத்த சட்டத்தை ஒழிக்கும் நடவடிக்கைக்கு எதிராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான குழுவொன்று ஒன்றிணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 13வது திருத்தத்திற்கு அமைய காணி, காவல்துறை அதிகாரங்கள் மாகாணசபைகளிடமே தொடர்ந்து இருப்பதையும், 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்தவும் இந்த அணி உருவாக்கப்பட்டுள்ளது. டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையிலான இந்த அணியில் ஆளும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 31 பேர் இடம்பெற்றுள்ளனர்.



ஸ்ரீலங்காவிற்கு எதிரான ஐ.நா தீர்மானத்தின் பின்னரான நிலைமைகள் குறித்து அமெரிக்கா கவனம்!
[Sunday, 2013-05-19 11:15:16]

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னரான நிலைமைகள் குறித்து அமெரிக்கா கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துமாறு கோரி இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்தத் தீர்மானத்தில் குறிப்பிட்பட்ட பரிந்துரைகளை அரசாங்கம் பின்பற்றுகின்றதா? இல்லையா? என்பது குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்ட எஸ்.கஜேந்திரன் உள்ளிட்ட 15 பேர் விடுதலை!
[Sunday, 2013-05-19 09:00:35]

கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உட்பட 15 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.பி.லக்சிறி விஜியசிங்க தெரிவித்தார். முள்ளிவாய்க்காலில் இறந்த தமிழ் உறவுகளை நினைவுகூரும் முகமாக மன்னார் பெரியகடை பொதுமண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட அஞ்சலி கூட்ட நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன் உள்ளிட்ட 9 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் கைது செய்யப்பட்டனர். இதன் போது செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் ஜோசப் பெணாண்டோவும் கைது செய்யப்பட்டார்.



இன்னொரு இனத்தை அழித்து விழா கொண்டாடுவதுதான் வெற்றி விழாவா?: முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் அரியநேந்திரன் Top News
[Sunday, 2013-05-19 08:32:44]

தமிழ் மக்களுக்கு சுதந்திரமான அரசியல் தீர்வு விடுதலை எப்போது கிடைக்கின்றதோ, அது வரையும் எமது பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுகளை நினைவு கூர்ந்து பிராத்தனை செய்யும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மட்டக்களப்பிலுள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு செல்லுவது போல அடிக்கடி 4ம் மாடிக்கும் செல்கின்றனர். ஒரு மாதத்திற்கு இரண்டு தடவைகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு செல்வது போன்று மாதத்திற்கு ஒரு தடவையாவது 4ம் மாடிக்கு செல்ல வேண்டியுள்ளது.



நோர்வேயில் எழுச்சியுற நடைபெற்ற இன அழிப்பு நாள் நினைவேந்தல் நிகழ்வு Top News
[Sunday, 2013-05-19 07:45:25]

18.05.2013 மாலை 1700 மணிக்கு இன அழிப்பு நாள் நினைவேந்தல் பேரணி ஒஸ்லோ மத்திய தொடரூந்து நிலைத்தின் அருகாமையிலுள்ள சதுக்கத்தில் இருந்து ஆரம்பமாகி நோர்வே பாராளமன்றத்தை சென்றடைந்தது. பாராளமன்றத்தின் முற்பகுதியில் முள்ளிவாய்கால் பெரும் நெருப்பில் கொண்ட கொள்கைக்காக பெரும் புயலை எதிர்கொண்டு வீரகளமாடிய வேங்கைகளுக்கும் அவர்களின் கேடயமாய் நின்று மானப்போர் புரிந்த மக்களுக்கும் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. ஈழத்தமிழ் அவையினர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பேரணியில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கரம்கோர்த்து தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.



நேற்றைய தினம் சுவிஸில் நடைபெற்ற மே-18 முள்ளிவாய்க்கால் செந்நெருப்புநாள் நிகழ்வு! Top News
[Sunday, 2013-05-19 07:38:28]

விடுதலைக்காகப் போராடிய தமிழினத்தை உலக நாடுகள் பலவற்றின் துணையோடு இனப்படுகொலை செய்த, இந்தக்காலத்தின் அதியுச்ச இனப்பேரழிப்பு நடந்த தமிழீழத்தில், இறுதிவரை மண்டியிடாது போராடிய மாவீரர்களுக்கும், மக்களுக்குமான நான்காம் ஆண்டு நினைவு எழுச்சி நிகழ்வான மே-18 முள்ளிவாய்க்கால் செந்நெருப்புநாள், நேற்று சூரிச் மாநிலத்தில் அமைந்துள்ள Helvetia Platz திடலில் நடைபெற்றது. இதில் சுவிஸ் வாழ் தமிழ்மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டிருந்தனர். சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற வணக்க நிகழ்வானது பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகி, சுவிஸ் மற்றும் தமிமீழத் தேசியக்கொடிகள் ஏற்றப்பட்டதனைத் தொடர்ந்து, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன், மலரஞ்சலி செலுத்தப்பட்டது.



'புலிகளின் தலைவர் பிரபாகரன் எரித்திரியாவில் இருப்பது பேய் கதை' - இராணுவப்பேச்சாளர் ருவான்
[Sunday, 2013-05-19 07:25:25]

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற யுத்தத்தில் நந்திக்கடல் களப்பில் பலியாகிவிட்டார். அதனை அவருடைய சகாக்களே உறுதிப்படுத்திவிட்டனர். இந்நிலையில், பிரபாகரன் எரித்திரியாவில் இருப்பது என்பதை இலங்கை படைத்தரப்பு முற்றாக மறுத்துள்ளதுடன். பிரபாகரன் எரித்திரியாவில் இருப்பது என்பது ஒரு பேய்கதையாகும் என்றும் இராணுவம் அறிவித்துள்ளது.



லண்டனில நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கெடுப்பு Top News
[Sunday, 2013-05-19 07:22:29]

பிரித்தானிய தமிழர் பேரவையினால் லண்டனில் நேற்றையதினம் 18-05-13 சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொண்டு எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் மகா நாட்டில் கலந்து கொள்வது என்ற பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனின் முடிவுக்கு தமது கண்டனத்தையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியிருக்கிரார்கள்.



இறந்த உறவுகளுக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் விட முடியவில்லை - மாவை சேனாதிராசா
[Sunday, 2013-05-19 07:17:29]

இறந்தவர்களுக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் விட முடியாத அளவிற்கு இராணுவ அடக்குமுறையை இந்த அரசாங்கம் பிரயோகித்து வருகின்றது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் போது உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் மே 18 நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



மே 18 தமிழின அழிப்பு நினைவு நாள் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் அனுஷ்டிப்பு!Top News
[Saturday, 2013-05-18 21:10:40]

இலங்கைத்தீவில் தமிழர் தேசத்திற்கு எதிராக அரச பயங்கரவாதத்தால் மேற்கொள்ளப்பட்ட கொடிய மனிதப்பேரவலத்தின் உச்சத்தைத் தொட்ட மே 18-2009 நினைவுகளைச் சுமந்தபடி அதன் நான்காவது ஆண்டில் நிற்கின்றோம். ஆயிரக்கணக்கான மக்களை முள்ளிவாய்க்கால் என்ற குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்கவைத்து, சர்வதேச ரீதியாக தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை திட்டமிட்ட ரீதியில் பயன்படுத்தி, சாட்சிகள் அற்ற போரை நடத்தி, ஒரு தேசிய இனத்தின் அழிவை உறுதிப்படுத்துவதில் சிறிலங்கா அரசு கவனம் செலுத்தியிருந்தது. ஆனால் படுகொலை செய்யப்பட்ட மக்களின் ஏக்கங்களையோ அல்லது எமது மக்களின் நீடித்து நிலைக்கக் கூடிய சுதந்திரமான வாழ்வுக்காக இறுதிவரை போராடிய போராளிகளின் கனவுகளையோ மறைக்க முடியாதபடி, உலகத்தின் கண்களுக்கு ஈழத்தமிழர்களின் அடிப்படை அரசியலுரிமைக்கான தேவைகளும் நியாயப்பாடுகளும் வெளிச்சத்திற்கு வந்துகொண்டிருக்கின்றன.



படையினரால் மீட்கப்பட்ட வன்னி மக்களுக்கு உணவுகொடுக்க புலம்பெயர் சமூகம் முன்வரவில்லை - ஜனாதிபதி மகிந்த Top News
[Saturday, 2013-05-18 20:54:42]

"இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது படையினரால் மீட்கப்பட்ட மக்களுக்கு உணவுகொடுக்க புலம்பெயர் சமூகம் வரவில்லை" என்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறுகிறார். இலங்கை அரசாங்கத்தின் நான்காவது போர் வெற்றிவிழா மேடையிலேயே மகிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறினார். கொழும்பு காலி முகத்திடலில் நடந்த அரசாங்கத்தின் போர் வெற்றி விழாவில் சிறப்பு விருந்தினர்கள், அரசியல்வாதிகள், முப்படையினர் மற்றும் பொதுமக்கள் என பெருமளவிலானோர் கலந்துகொண்டனர். "மனிதக் கேடயங்களாக பிடித்து வைக்கப்பட்டிருந்த மக்களை படையினர் மீட்டனர். அவர்களுக்கு உணவுகொடுக்க புலம்பெயர் சமூகத்தினர் வரவில்லை, அரசாங்கமும் படையினரும் தான் உணவுகொடுத்து பராமரித்தார்கள்" என்றார் மகிந்த ராஜபக்ஷ.



ஸ்ரீலங்கா மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அனைத்து தமிழ் குடும்பங்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் - ஒன்ரோறியோ என்.டி.பி கட்சித் தலைவர்!
[Saturday, 2013-05-18 20:45:00]

தமிழினப் படுகொலை நாள் நடக்கவுள்ள தமிழர் நினைவு நாளுக்கு ஒன்ரோறியோ முதல்வர் காத்லீன் வ்ய்ன், அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து ஒன்ரோறியோ என்.டி.பி கட்சித் தலைவர் அண்ட்ரியா ஹோர்வேத், ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். தமிழர் நினைவு தினத்தை முன்னிட்டு ஒன்ரோறியோ என்.டி.பி கட்சித் தலைவர் அண்ட்ரியா ஹோர்வேத் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது ,



யுத்த வெற்றிவிழா கொண்டாட்டத்தின் போது கடலுக்குள் மூழ்கிய கடற்படை படகு!
[Saturday, 2013-05-18 20:43:50]

தமிழின அழிப்பினை வெற்றிவிழாவாகக் கொண்டாடிய போது கடற்படைக்குச் சொந்தமான படகொன்று கடலில் மூழ்கியுள்ளதாக தெரியவந்திருக்கின்றது. இந்தச் சம்பவத்தினை கடற்படை ஊடகப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய உறுதிப்படுத்தியிருக்கின்றார். காலி முகத்திடல் கடற்பரப்பில் இன்று காலை இடம்பெற்ற யுத்த வெற்றிவிழாவின் போது குறித்த சிறிய ரக படகு மூழ்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். படகில் இருவர் பயணித்ததாகவும் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும் ஒருவர் தப்பித்துக் கொண்டதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.



தமிழர்களின் காணிகளை இராணுவம் அபகரிப்பது குறித்து இந்தியா இலங்கைக்கு எச்சரிக்கை!
[Saturday, 2013-05-18 20:39:38]

இந்திய மத்திய அரசாங்கம் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பின் முன்னணி ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. வட மாகாணத்தில் உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் படையினர் காணிகளை அபகரித்து செல்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்திய இலங்கை வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் போது இந்த விடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது. வட மாகாண தமிழ் மக்களின் காணிகளை படையினர் சுவீகரிப்பதானது பொருத்தமாகாது என இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையானது உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளுக்கு புறம்பானது என குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான நடவடிக்கைகள் நல்லிணக்க முனைப்புக்களுக்கும் பாதகத்தை ஏற்படுத்தும் என அமைச்சர் குர்ஷித் சுட்டிக்காட்டியுள்ளார்.



தமிழர் படுகொலை நினைவு தினத்தில் உங்களுடன் நானும் இணைந்து கொள்கிறேன் - ஒன்ராறியோ முதல்வர் காத்லீன்!
[Saturday, 2013-05-18 20:38:22]

சமீப காலமாகவே தமிழர்களுடன் கை கோர்த்து செயல்படுவதையே பெரும்பான்மையான கனடிய அரசியல் கட்சிகள் விரும்புகின்றன என்பதும் கனடாவில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக தமிழினம் மாறி என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே. வருடம் முழுவதும் பல நிகழ்வுகளும், விழாக்களும் நம்மவர்களிடையே நடத்தப்பட்டு வந்த போதிலும் கூட பிரதான உணர்வு ரீதியான நிகழ்வாக நம்மவர்கள் அனைவராலும் கருதப்படுவது இனவழிப்பு நினைவுநாள் தொடர்பான் நிகழ்வுதான்.



இன்று தமிழீழ சுதந்திர சாசனம் முரசறைவு : ஈழவிடுதலைப் போராட்டத்தில் வரலாற்று முன்னகர்வு!Top NewsTop News
[Saturday, 2013-05-18 20:35:53]

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெரும் முன்னகர்வாக தமிழீழ சுதந்திர சாசனம் முள்ளிவாய்க்கால் பெருவலியினை கூட்டு நினைவு கொள்ளும் மே-18ம் நாளாகிய இன்று முரசறையப்படுகின்றது. இந்த முரசறைவுக்கான மாநாடு கடந்த 15ம் நாள் முதல் அமெரிக்காவின் பென்சிலவேனியா பெருநகரில் இடம்பெற்று வரும் நிலையில் இன்று சனிக்கிழமை அமெரிக்க நேரம் மதியம் 12 மணிக்கு தமிழீழ சுதந்திர சாசனம் முரசறையப்படவிருக்கின்றது.



விடுதலைப் புலிகளுக்கு யார் அஞ்சலி செலுத்தினாலும் கைதுசெய்யப்படுவர் - வன்னி இராணுவ கட்டளைத் தளபதி
[Saturday, 2013-05-18 20:22:29]

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்தும் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்படுவர் என்று வன்னி மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி பொனிபஸ் பெரேரா தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஒரே ஒரு இராணுவமே உள்ளது. இலங்கையர்கள் யாரும் யாருக்கு வேண்டுமானாலும் தமது ஆதரவை வெளிப்படுத்தும் உரிமை இருக்கிறது. ஆனால் விடுதலைப் புலிகள் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான அமைப்பு. இந்த அமைப்புக்கு ஆதரவாக ஏற்பாடு செய்கின்ற எந்த நிகழ்வுகளுக்கு எதிராகவும் இராணுவம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



சொந்தங்களுக்காக கண்ணீர் சிந்தும் உரிமையும் இல்லையா? கஜேந்திரன் கைதுக்கு கூட்டமைப்பு கண்டனம்!
[Saturday, 2013-05-18 19:55:44]

யுத்தத்தில் உயிர்நீத்த தம் சொந்தங்களை நினைவு கூர்ந்து கண்ணீர்மல்க அமைதியாக அனுஸ்டிக்கப்பட்ட இரங்கல் கூட்டத்தில் வைத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இக்கைதினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது என அதன் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக தமிழ்மிரரிடம் கூறுகையில்...



தமிழ்த் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் கஜேந்திரன் கைது!
[Saturday, 2013-05-18 19:43:06]

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் உட்பட அந்தக் கட்சியின் சில உறுப்பினர்கள் மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன. மன்னாரில் அந்தக் கட்சியின் சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவுநிகழ்வு ஒன்றை நடத்தியபோதே இவர்கள் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. கஜேந்திரனுடன், அவர்களது கட்சியின் தேசிய அமைப்பாளரான மணிவண்ணன் என்னும் சட்டத்தரணியும் வேறு சுமார் 10 பேரும் கைது செய்யப்பட்டதாக கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.



பொதுபலசேனாவிலுள்ளவர்களை உடன் அங்கொடைக்கு அனுப்பவேண்டும்: - விக்கிரமபாகு கருணாரட்ன
[Saturday, 2013-05-18 13:37:57]

பொதுபலசேனாவிலுள்ளவர்களை உடன் அங்கொடைக்கு அனுப்பவேண்டும். இல்லையேல் ,இலங்கை ஆங்கிலேயரின் நாடு என்றும் கூட இன்னும் சில நாட்களில் சொல்லுவார்கள் என்று நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார். "இலங்கை பெளத்த நாடு. அதை ஏற்க முடியாதவர்கள் இங்கு வாழத்தேவையில்லை என பொதுபலசேனாவினர் இனவாதத்தைக் கக்குகின்றனர். வரலாறு தெரியாது அவர்கள் வாய்க்கு வந்ததையெல்லாம் வைத்துக்கொண்டு வீர வசனம் பேசுகின்றனர்.


Mahesan supramaniyam 031109
NIRO-DANCE-100213
Canada Kanthasamy Kovil
INNSYS-20120930
TDE_Computers2011
Suresh-remax-2013-01-01
Ramans2011
TamilsGuid-191012-2013
RoyaShades-l2011(04-12-11)
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com