Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
June 20, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
டெசோ மாநாடுதான் ஈழத் தமிழனை காப்பாற்ற நாம் செய்யக்கூடிய ஒரே காரியம்: கலைஞர் தலைமையிலே ஒன்றுபடுங்கள் என்கிறார் அன்பழகன்
[Sunday, 2012-09-02 20:29:29]
News Service

தமிழீழ விடுதலைப் புலிகளை திமுக தனிப்பட்ட முறையில் ஆதரிக்கவில்லை. அதேபோல எங்களை விடுதலைப் புலிகளும் ஆதரிக்கவில்லை. திமுக கொடுத்த பணத்தைக் கூட வாங்காமல் எம்.ஜி.ஆரிடம் பணத்தை வாங்கியவர்கள் புலிகள் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் க. அன்பழகன் கூறியுள்ளார்.

  

கோவையில் நடைபெற்ற டெசோ மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டத்தில் அன்பழகன் பேசியதாவது:

இலங்கையில் போர் நடைபெற்ற போது, பொதுமக்கள் பலபேர் இந்தப் போரில் கொல்லப்படுகிறார்கள் என்று செய்தி வந்தது. அப்போது மக்கள் அழிக்கப்படுகிறார்கள் கொல்லப்படுகிறார்கள் என்று கூக்குரல் எழுப்புகிறார்கள். அப்போது இன்றைய முதல் அமைச்சர் ஜெயலலிதா எந்த நாட்டிலே போர் நடைபெறும்போதும் மக்கள் கொல்லப்படத்தான் செய்வார்கள் என்று சொன்னவர், இப்போது ஏதோ இந்தியாவில் இரு சிங்கள வீரர்களுக்கு பயிற்சி கொடுப்பதாகவும், அந்த இரண்டு பேருக்கு பயிற்சி கொடுப்பதை நிறுத்தவில்லை என்றும் அறிக்கை கொடுக்கிறார். தமிழன் மொத்தமாக கொல்லப்படுகிறபோது, அது போரில் நடப்பது சகஜம் என்று சொன்னவர் ஜெயலலிதா.

இன்னும் ஒருபடி மேலே போய் சொன்னால் ஒரு பிரச்சனை வந்தபோது விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக திமுக இருக்கிறது என்றார்கள். நாம் தனிப்பட்ட முறையிலே விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இல்லை. நாம் கொடுத்த 50,000 ரூபாய் பணத்தைக்கூட அவர்கள் வாங்கிக் கொள்ள மறுத்தார்கள். எம்ஜிஆரிடம் 4 லட்சம் ரூபாய் வாங்கிக்கொண்டார்கள். அப்படி விடுதலைப் புலிகளுக்கு நம்மிடத்திலே சின்ன மாறுபாடு.

சட்டமன்றத்திலே ஜெயலலிதா சொல்கிறார் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை கைது செய்து இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும். அந்த துரோகிகளுக்கு இந்தியாவிலே இடம் இருக்கக் கூடாது. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை கைது செய்து கொண்டு வந்து ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விசாரிக்க வேண்டும் என்றார்.

ஆனால் இப்பொழுது அவெர்களெல்லாம் வைகோவிற்கு வேண்டியவர்கள். கலைஞர் டெசோ என்று சொல்லி ஈழத்தமிழர்களின் பிரச்சினையை குளிர் காய்வதற்கு பயன்படுத்துகிறார் என்று சொல்கிறார்களே. நீங்கள் செய்ததையெல்லாம் பட்டியல் போட்டு காட்ட முடியுமா? கலைஞர் ஒன்றும் செய்யவில்லை என்கிறாரே நெடுமாறன், நீங்கள் என்ன செய்தீர்கள். தினமணியில் ஒரு அரைப்பக்கம் கிடைத்தால் அறிக்கை விடுவீர்கள். அந்த அறிக்கையோடு உங்கள் வேலை முடிந்தது. பொதுமக்களின் உணர்வை திரட்டக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு உண்டா. கலைஞரைத் தவிர இதற்கான பணிகளை செய்யக்கூடிய ஆற்றல் இந்த நாட்டில் எவருக்கும் கிடையாது.

இலங்கை அரசாங்கத்தின் மீது, இலங்கை ஜனாதிபதி மீது குற்றம் சாட்டுகிற அளவுக்கு ஒரு நிலைமை இருக்கிறபோது அந்த குற்றச்சாட்டை நிலைநாட்டி அதற்குரிய நடவடிக்கை எடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கு தூண்டுதலாக இந்திய அரசு இருக்க வேண்டும். இந்திய அரசாங்கத்தால் தீர்மானம் கொடுக்க வேண்டும் என்று கலைஞர்தான் டெசோ சார்பாக முன்கூட்டியே வலியுறுத்தி, இந்தியப் பிரதமர் ஐக்கிய நாடுகள் மன்றத்திலே கொண்டுவரப்பட்ட அந்த தீர்மானத்தை இந்தியாவும் ஆதரிக்கிறது என்று சொல்லி ஆதரித்து இருக்கிறது.

தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகத்திலே இருந்து கலைஞர் குரல் எழுப்பினால் தவிர வேறு யார் தூண்ட முடியும். டெல்லியிலே ஆட்சியிலே நாங்கள் இருப்பதை உங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. அது வேறு. நாங்கள் ஆட்சியிலே இருக்கக்கூடாது என்று வைகோவோ - மற்றவர்களோ எண்ணக்கூடும்.

ஆனால் நாங்கள் ஆட்சியிலே இருந்ததால்தான் மத்திய அரசை தூண்ட முடிகிறது. அந்த தூண்டுதல் ஆற்றல் எங்களுக்குத்தான் இருக்கிறது. உங்களுக்கு இல்லை, அந்த தூண்டுதலுக்குத்தான் இந்த டெசோ மாநாடு. இந்த டெசோ மாநாட்டிலே போடப்பட்ட தீர்மானங்களை எல்லாம் ஒருமுறை படித்துப்பார்த்தால் எந்த நிலைமையிலே தமிழர்கள் இருக்கிறார்கள் என்று தெரியும்.

இப்படிப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதை செயல்படுத்துவதற்கு நம்முடைய ஐக்கிய நாடுகள் போய் அந்த மனித உரிமைகளை காப்பாற்றக்கூடிய அந்த அமைப்பு இடத்திலே வாதாட வேண்டும். அப்படி செய்தவற்கு டெல்லியிலே நாடாளுமன்றக் குழுவின் தலைவராக இருக்கிற டி.ஆர்.பாலு அவர்களும், கழகத்தின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் அவர்களும் இன்றும் சிலரும் அங்கே ஜெனிவாவிலே அந்த அமைப்பு இருக்கிற இடத்திலே சென்று நம்முடைய தீர்மானங்களை கொடுத்து தொடர்ந்து இதற்கு உரிய கடைமையை செய்ய வேண்டும் என்று வலியுறுத்த இருக்கிறார்கள். இந்திய அரசாங்கமும் இதற்கு குரல் கொடுக்க வேண்டும் எறு நாம் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.

டெசோ மாநாடு ஈழத் தமிழனை காப்பாற்ற நாம் செய்யக்கூடிய ஒரே காரியம். அதை மனதிலே வைத்து இதையெல்லாம் செய்தவற்கு ஒற்றுமை வேண்டும். கலைஞர் தலைமையிலே ஒன்றுபடுங்கள், செயல்படுங்கள் என்று வேண்டுகிறேன் என்றார் அன்பழகன்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

சர்வதேசத்திற்கு அளித்த வாக்குறுதிகளை எந்த அளவு மீற முடியும் என்பதை ஜனாதிபதி மகிந்த நிரூபித்து காட்டிவிட்டார்!
[Thursday, 2013-06-20 08:36:28]

இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு வழங்கிய உறுதிமொழிகளை தம்மால் எந்த அளவு மீற முடியும் என்பதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஏற்கனவே இந்தியாவிடம் காட்டிவிட்டதாக உள்நாட்டு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. 13ம் திருத்தசட்டத்துக்கு எதிரான குரல்கள் உள்நாட்டு அடிப்படைவாத கட்சிகளுக்கு இடையில் வலுப்பெறுகின்றன. ஜனாதிபதிக்கும் இந்த சட்ட மூலத்தில் உடன்பாடு இல்லாத நிலையில் அதன் மீதான திருத்தங்களை அங்கீகரித்துள்ளார். இந்த நிலையில் இந்தியா இலங்கை மீது கடும் அதிருப்தியை கொண்டுள்ளது. இதேவேளை, இலங்கையின் இந்தியாவை மீறிய செயற்பாடுகள் தொடரும் பட்சத்தில், இந்தியாவினால் இலங்கைக்கு எதிராக எதனை வேண்டுமானாலும் மேற்கொள்ள முடியும் என்று அந்த ஊடகம் தெரிவித்துள்ளது. மேற்குலக நாடுகளில் சீனாவை விட இந்தியாவுக்கான ஆதரவு அதிகம். ஏற்கனவே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை வலுவூட்டி வளர்த்த இந்தியா தற்போது மீண்டும் அந்த செயற்பாட்டினை தொடராலாம் என்றும் அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.



புலிகள் சாதிக்க முயற்சித்ததை ஜனநாயக ரீதியில் சாதிக்க கூட்டமைப்பு முயற்சி - லக்ஸ்மன் யாபா அபேவர்தன
[Thursday, 2013-06-20 08:30:54]

தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதத்தினால் சாதிக்க முயற்சித்தத்தை, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனநாயக ரீதியில் அடைந்துக் கொள்ள முயற்சிப்பதாக அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரையில் தமிழ் மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. ஆனால் தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னெடுத்து வரும் செயற்பாடுகள் முழு தமிழ் சமூகத்தையும் பாதிப்பதாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்த நடவடிக்கைகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் இணைய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.



நுவரெலியாவில் பஸ் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியது - 4 பேர் பலி 87 பேர் காயம்!
[Thursday, 2013-06-20 08:28:37]

நுவரெலியா, சீதா எலிய பகுதியில் பஸ்ஸொன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால், குறித்த பஸ்ஸில் பயணித்த பாடசாலை ஆசிரியர் ஒருவர் உட்பட நால்வர் பலியாகியுள்ளதுடன், 87 பேர் காயமடைந்துள்ளனர். பதுளையிலிருந்து நுவரெலியாவுக்கு மாணவர்களை ஏற்றிக்கொண்டு சுற்றுலா வந்த தனியார் பஸ் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.



வட மாகாணசபை தேர்தலுக்கு முன்னர் காணி, பொலிஸ் அதிகாரங்களில் மாற்றமில்லை - நிமல்
[Thursday, 2013-06-20 08:19:58]

செப்டம்பரில் நடைபெறவுள்ள வட மாகாண சபைத்தேர்தலுக்கு முன்னர் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படமாட்டாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இவ்வாறான திருத்தங்கள் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் சமர்ப்பிக்கப்படலாம். சகல அரசியல் கட்சிகளும் ஏற்றுக்கொண்டுள்ளதனால் இரண்டு அல்லது இரண்டிற்கு அதிகமான மாகாண சபைகள் இணைவதை தடுக்கும் திருத்தம் இரண்டுவாரங்களுக்குள் சட்டமாக்கப்படும் என்றும் அரசாங்கம் கூறியுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சரும், சபைத்தலைவருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். இந்த விவகாரங்களில் உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளின் அழுத்தத்திற்கு அரசாங்கம் அடிபணியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கு எதிரான சக்திகளின் அழுத்தம் காரணமாகவே கடந்த மார்ச் மாதம்; நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தது. இதனை நாம் விளங்கிக்கொண்டுள்ளோம்.



தமிழர்களுக்கு எந்த காலத்திலும் நியாமான தீர்வு கிடைக்கக்கூடாது என்பதில் அரசு தீவிரம் - சித்தார்த்தன்
[Thursday, 2013-06-20 08:18:14]

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு மத்திய அரசாங்கத்தின் தலையீடற்ற சமஷ்டி தீர்வே தேவை. எவ்வாறாயினும் தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வு எந்தக் காலத்திலும் கிடைக்கக்கூடாது என்பதில் அரசாங்கம் தீவிரமாகச் செயற்படுகின்றது என்று புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். நேற்று புதன்கிழமை, யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்று ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது, '1987ஆம் ஆண்டில் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்ட போது அதில் ஒன்றும் இல்லை என்று அதனை நிராகரித்த தமிழர் தரப்பு, இன்று 13இல் எந்தவிதமான மாற்றமும் செய்ய வேண்டாம். அதற்கான அழுத்தத்தை இந்தியா வழங்க வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் காய் நகர்த்தல்களை மேற்கொண்டுள்ளது' என்று குறிப்பிட்டார்.



13 ஆம் திருத்தச் சட்டச் சர்ச்சைகள் குறித்துப் பேசுவாராம் - சிவசங்கர் மேனன் கொழும்பு வருகின்றார்:
[Thursday, 2013-06-20 08:10:19]

இந்தியத் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் இந்தியாவினது மூத்த இராஜ தந்திரியுமான சிவ்சங்கர் மேனன் இந்திய அரசின் ஏற்பாட்டில் முக்கிய பயணமொன்றை மேற்கொண்டு ஜூலை 7ஆம் திகதி கொழும்பு வரவுள்ளார். முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பயணத்தின் போது மேனன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்திப்பாரென இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..



கொழும்பு துறைமுக களஞ்சியசாலை தீ விபத்து - பணிப்பாளர்கள் இருவருக்கு விளக்கமறியல்
[Thursday, 2013-06-20 08:10:00]

60 கோடி ரூபாய் நட்டத்தை ஏற்படுத்திய கொழும்பு துறைமுக களஞ்சியசாலை தீ விபத்து தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பணிப்பாளர்கள் இருவரையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பணிப்பாளர்கள் இருவருரையும் கொழும்பு மேலதிக நீதவான் சந்திம பெர்னாண்டோ முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்திய போதே அவ்விருரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். விரைவாக தீ பற்றக்கூடிய இராசாயன பொருட்களை அனுமதியின்றி களஞ்சியப்படுத்தியிருந்தனர் என்ற குற்றச்சாட்டு இவ்விருவருக்கும் எதிராக சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.



நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோவிடம் விசாரணை நடத்த முடியாது : சட்டத்தரணி
[Thursday, 2013-06-20 07:43:21]

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோவிடம் விசாரணைகள் நடத்த முடியாது என்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த அரச தரப்பு சட்டத்தரணி சமிந்த அத்துகோரள நீதவானின் கவனத்திற்கு கொண்டுவந்தார். 2010 ஆம் ஆண்டு காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட தொடர்பான வழக்கு ஹோமாகம நீதவான் வை.ஆர்.பீ நெலும்தெனிய முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார். பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவின் கோரிக்கைக்கு அமைவாக அவர் சார்பில் நீதிமன்றில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி உபுல் குமார பெரும, நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோவை விசாரணைக்கு அழைக்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.



ஊடகங்களை ஒடுக்கும் நோக்கிலேயே புதிய ஒழுக்க விதிகள் இலங்கை அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது: - மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு
[Thursday, 2013-06-20 07:33:13]

இலங்கையிலுள்ள ஊடகவியலாளர்கள் ஏற்கனவே அழுத்தங்களுக்குள்ளாகியுள்ள நிலையில் அரசினால் புதிதாகக் கொண்டு வரப்படும் ஊடக ஒழுக்க விதிகள் பேச்சுச் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் விடுப்பதாகவே அமையும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியாவுக்கான இயக்குநர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.



எமது விளைநிலங்களை எம்மிடமே தாருங்கள்! வெலிஓயா பிரதேச செயலரிடம் மகஜர் கையளிப்பு!Top News
[Wednesday, 2013-06-19 21:00:36]

முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் ரவிகரன் தலைமையிலான பிரஜைகள் குழுவினரும், தமது வயல்நிலங்களை இழந்து தவிக்கும் கொக்கிளாய் கிழக்கு, கொக்கிளாய் மேற்கு, கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய் வடக்கு, கொக்குத்தொடுவாய் மத்தி, கொக்குத்தொடுவாய் தெற்கு ஆகிய கரைத்துறைப்பற்று பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களைச்சேர்ந்த மக்களின் பிரமுகர்களும், இணைந்து, வயல்நிலங்களின் காவல் தெய்வமான கோட்டைக்கேணி பிள்ளையார் கோவில் இறை வழிபாட்டின் பின்னர், வெலிஓயா பிரதேச செயலர் தீபல் நிஸாந்த திரிமன்னவிடம் இன்று காலை 11.00 மணியளவில் மகஜரை கையளித்ததோடு, மகஜரின் பிரதி ஒன்றை மகாவலி திட்ட அதிகார சபையின் வெலிஓயாவுக்கான இணைப்பதிகாரியிடமும் கையளித்தனர்.



வவுனியா வைத்திய சாலையில் தாதியர்கள் பணி பகிஷ்கரிப்பு! Top News
[Wednesday, 2013-06-19 20:52:13]

அரசாங்க தாதிமார் சங்கத்தை சேர்ந்த தாதிய உத்தியோகத்தர்கள் பல அம்ச கோரிக்கைகளை முன் வைத்து வவுனியா வைத்திய சாலை முன்றலில் சுலோக அட்டைகளை தாங்கியவாறு ஒரு மணி நேர பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். அரசே ஒரு வாரத்திற்கான வேலை நாட்களை ஐந்து நாட்களாக மாற்று ,ஆபத்து கொடுப்பனவு அனைத்து தாதிய உத்தியோகத்தர்களுக்கும் வழங்க வேண்டும்,மேலதிக நேர கொடுப்பனவு என்பன அதிகரிக்கப் பட வேண்டும் ,அரசே 1979 ல் வெளி வந்த சுற்றறிக்கை ரத்து செய்யப்பட வேண்டும் ,பட்டதாரி தாதிய உத்தியோகத்தர் களுக்கு நியமனத்தை வழங்கு ,சேவை மூப்பு அடிப்படையின் அடிப்படையின் படி மூத்த தாதியர்களுக்கு பதவி உயர்வுகளை வழங்கு என்பவற்றை முதலான கோரிக்கைகளை முன் வைத்து இப்போராட்டம் நடை பெற்றது.



யாழ்.மக்கள் இராணுவத்தினரை விரும்புகின்றனர் - லலித் வீரதுங்க!
[Wednesday, 2013-06-19 20:26:48]

யாழ்ப்பாணத்திலுள்ள காணிகள் பொது மக்களுக்கு திருப்பி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆயுதபடைகளை அங்கு தொடர்ந்தும் இருக்குமாறு யாழ்ப்பாண மக்கள் மனப்பூர்வமாக கேட்பதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்தார். பல நிலங்கள் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளன, அரசாங்கத்துக்கு தேவையான நிலங்களை அரசாங்கம் வைத்துக்கொள்ளும். உயர் பாதுகாப்பு வலயம் 60 சதவீதத்தால் குறைந்துவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். டுவிட்டரில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



13 பிளஸ் எனக்கூறியது அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் தீர்வையே : இந்தியாவிற்கு இலங்கை புது விளக்கம்!
[Wednesday, 2013-06-19 18:53:08]

"13 + என நாம் சொன்னது அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் பொதுவான தீர்வு" இதுவும் மகிந்த சிந்தனையின் ஒரு துளி இலங்கையின் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் மிகவும் விரிவுப்படுத்தப்பட்ட பொதுவான தீர்வையை 13 பிளஸ் என இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு அறிவித்திருந்தாக இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு புதிய விளக்கம் அளித்துள்ளது. அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதி ஒருவர் ஊடாக இலங்கை அரசாங்கம் இதனை இந்திய அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது. 13வது அரசியல் அமைப்புத் திருத்தமானது அரசியல் கட்சிகளின் உரிய இணக்கங்கள் இன்றியே ஜே.ஆர். ஜயவர்தன அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.



விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புக்களை தடைசெய்யுமாறு ஆஸி. பிரதமரிடம் இலங்கை வேண்டுகோள்! Top News
[Wednesday, 2013-06-19 18:46:02]

அவுஸ்திரேலியாவில் இயங்கும் விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகளை தடைசெய்யுமாறு அந்நாட்டுப் பிரதமர் ஜுலியா கில்லார்ட்டிடம், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாமல் ராஜபக்ச,லொஹான் ரத்வத்த, திலங்க சுமதிபால, வசந்த சேனநாயக்க ஆகிய ஆளும்கட்சியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவுக்குத் தலைமையேற்று அவுஸ்திரேலியா சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், இன்று அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பிரதமர் ஜுலியா கில்லார்ட், வெளிவிவகார அமைச்சர் றொபேட் கார் ஆகியோரை சந்தித்துப் பேசினார். இதன்போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதுடன், வரும் நவம்பரில் கொழும்பில் கொமன்வெல்த் உச்சி மாநாட்டை நடத்துவதற்கான அவுஸ்திரேலியாவின் உதவியையும் கோரியுள்ளார்.



மாகாண இணைப்பை தடுக்கும் 19ஆவது திருத்தத்தை ஒத்தி வைக்க அரசு தீர்மானம்!
[Wednesday, 2013-06-19 18:39:57]

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் ஒன்றுக்கு மேற்பட்ட மாகாணங்கள் ஒன்றிணைவதை தடுக்கும் நோக்கில் கொண்டுவர தீர்மானித்திருந்த 19 ஆவது திருத்தச் சட்டமூலத்தை அரசாங்கம் பிற்போட்டுள்ளதாக தெரியவருகின்றது. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான 19 ஆவது திருத்தச் சட்டம் அவசர சட்டமூலமாக செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல கடந்த வாரம் தெரிவித்திருந்தபோதிலும் அதனை தற்போது பிற்போட்டுள்ளதாகவே அறிய முடிகின்றது. அந்த வகையில் நேற்று பிற்பகல் பாராளுமன்றக்கட்டட தொகுதியில் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் 19 ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டுவருவது தொடர்பில் எந்த விடயமும் ஆராயப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மண்டபத்தில் இலங்கைத்தமிழர் மாரடைப்பால் மரணம் - மனைவி புதல்விகளை சந்திக்க தடை!
[Wednesday, 2013-06-19 18:21:05]

இலங்கையிலிருந்து சென்று தமிழகம் மண்டபம் முகாமில் உள்ள தனது மனைவி மற்றும் புதல்விகளை சந்திக்க சென்ற இலங்கைத் தமிழர் அந்த முகாமிற்கு அருகாமையில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், மரணமானார். இவரது மனைவி கடந்த 2011ம் ஆண்டு கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய உற்சவத்திற்காக கச்சதீவு சென்றிருந்தார். கச்சதீவில் இருந்து அவர் தமது இரண்டு புதல்விகளுடன் சட்டவிரோதமான முறையில் தமிழகத்தைச் சென்றடைந்த வேளையில் கியு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.பிரயாண ஆவணங்கள் எதுவுமே அற்ற நிலையில் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.



லண்டனில் ஆர்பாட்டம் நடத்திய ஈழத்தமிழர்கள் மீது சிங்கள வெறியர்களின் தாக்குதலை கண்டிக்கிறோம்: - பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு
[Wednesday, 2013-06-19 18:11:39]

லண்டனில் ஸ்ரீலங்கா துடுபெடுத்தாட் அணியைப் புறக்கணிக்குமாறு வலியுறுத்தியும் மற்றும் ஸ்ரீலங்காவில் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் தமிழர்கள் மீதான இன அழிப்புக்கு எதிராக சர்வதேச விசாரணை வேண்டியும் நேற்று லண்டன் வாழ் ஈழதமிழர்களால் லண்டன் ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியாவிற்கும், சிறிலங்காவுக்கும் இடையில் துடுபெடுத்தாட்ட போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது மைதானத்துக்கு முன்பாக அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் நிகழ்த்தப்பட்டது.



ஊடகவியலாளர சிவராமை கடத்தியவர்களை அடையாளம் காட்ட முடியும் - முச்சக்கர வண்டி சாரதி சாட்சியம்!
[Wednesday, 2013-06-19 18:11:18]

கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரான தர்மரட்ணம் சிவராமைக் கடத்திய நபர்களை தன்னால் அடையாளம் காட்ட முடியும் என முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார். கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சிவராம் கொலை வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, அங்கு சாட்சியமளித்த கொழும்பு பாமன்கடை பகுதியைச் சேர்ந்த ரஞ்சன் பிரியந்த என்னும் முச்சக்கர வண்டி சாரதியே இவ்வாறு கூறியுள்ளார். சிவராம் கடத்தப்பட்ட போது தான் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்துக்கு அருகே தனது வண்டியுடன் நின்றிருந்ததாகக் அவர் கூறினார்.



புகலிடம் கோருவோருக்கு நிபந்தனைகளுடன் தற்காலிகமான விஸா! - ஆசியில் அவதிப்படும் அகதிக் கொரிக்கையாளா்கள்
[Wednesday, 2013-06-19 18:00:22]

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருவோருக்கு மூன்று நிபந்தனைகளுடன் தற்காலிகமான விஸா வழங்கப்படுவதனால் தமிழர்களுக்கு உயிரிருந்தும் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவில் இருக்கும் பாதிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். புகலிட கோரிக்கையாளர்கள் தொழில் செய்ய முடியாது, குடும்பத்தை அவுஸ்திரேலியாவுக்கு எடுக்க முடியாது மற்றும் பணம் அனுப்பமுடியாது ஆகிய மூன்று நிபந்தனைகளுடனேயே தற்காலிக விஸா வழங்கப்படுகின்றது.



விரிவுரையாளரை தாக்கிய மாணவனை வைத்தியசாலையில் வைத்து கைதுசெய்த பொலிஸார்! Top News
[Wednesday, 2013-06-19 17:53:56]

நாவல திறந்த பல்கலைக்கழக சட்டபீட வளாகத்தில் பெண் விரிவுரையாளரான யசோதரா கதிர்காமத்தம்பியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய மாணவனை பொலிஸார் வைத்தியசாலையில் வைத்து கைதுசெய்துள்ளனர். இன்று புதன்கிழமை யசோதரா கதிர்காமத்தம்பி என்ற பெண் விரிவுரையாளர் குறித்த மாணவனால் தாக்கப்பட்ட நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் தாக்குதலை மேற்கொண்ட மாணவன் பல்கலைக்கழக வளாகத்தில் கூரிய ஆயுதத்துடன் நடமாடியதையடுத்து ஒருவகை மருந்தை உட்கொண்ட நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து குறித்த மாணவன் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைபெற்ற வேளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


TDE_Computers2011
Suresh-remax-2013-01-01
Ramans2011
INNSYS-20120930
Mahesan supramaniyam 031109
NIRO-DANCE-100213
RoyaShades-l2011(04-12-11)
AJRwindows22.05.13
TamilsGuid-191012-2013
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com