Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 23, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
திக்குமுக்காடும் திருத்தணி: கவலையில் பேரரசு
[Sunday, 2012-09-02 10:54:10]
News Service

பேரரசு இயக்கி உள்ள படம் "திருத்தணி". பரத், சுனேனா நடித்துள்ளனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட படம் வெளிவருவதற்கு திணறிக் கொண்டிருக்கிறது. காரணம் படப்பிடிப்பு நடந்தபோதே இயக்குனர் பேரரசுக்கும், தயாரிப்பாளருக்கும் மோதல் ஏற்பட்டது.

  

பேரரசு தானே இசை அமைப்பாளர் என்ற சொல்லி அதற்கு ஒரு சம்பளம் பெற்றுக் கொண்டார். தன் மனைவியை பாடகியாக்கி அதற்கு தனி சம்பளம் பெற்றுக் கொண்டார். படத்தை பிரமாண்டமாக எடுக்கிறேன் என்று சொல்லி பட்ஜெட்டை பல மடங்கு எகிற வைத்துவிட்டார். அதனால் பெரும் பொருளாதார சிக்கலுக்கு ஆளான தயாரிப்பாளர் படத்தை கைவிட்டுவிட்டார் என்று கூறப்படுகிறது. பேரரசுக்கும் இதை விட்டால் வேறு படம் இல்லை என்பதால் அவரே சில நண்பர்களிடம் கடன் வாங்கி படத்தை முடித்துள்ளார். ஹீரோ பரத், ஹீரோயின் சுனேனா, மற்றும் சில முக்கிய தொழில்நுட்ப கலைஞர்கள் தங்கள் சம்பளத்தின் ஒரு பகுதியை விட்டுக் கொடுத்துள்ளனர். இதானல் இப்போது படம் முடிந்து விட்டது. ஆனாலும் வெளியீட்டிற்கும், விளம்பரத்திற்கு ஒரு தொகை தேவைப்படுமே அதை எப்படி சமாளிப்பது என்ற கவலையில் இருக்கிறார் பேரரசு.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

பூனை குறுக்கே பாய்ந்ததால் அலறிய வித்யாபாலன்..
[Thursday, 2013-05-23 20:46:44]

தி தர்ட்டி பிக்சர், கஹானி போன்ற வித்தியாசமான கதையம்சம் உடைய படங்களில் நடித்த, வித்யா பாலன், ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். குறிப்பாக, தினமும் வீட்டை விட்டு வெளியே புறப்படும்போது, எதிரில், யாராவது வருகிறார்களா, என்பதை கவனித்தப் பிறகே வெளியேறுவார். அப்படிப்பட்ட வித்யா பாலன், சமீபத்தில் தன் கணவர் சித்தார்த்துடன், ஆஷிகி என்றொரு படத்தின் சிறப்புக் காட்சியை பார்க்க சென்ற போது, ஒரு பூனை, தியேட்டர் வாசலில், அவருக்கு குறுக்கே பாய்ந்து விட்டதாம். இதனால் அலறிய அவர், சகுனம் சரியில்லை என, கூறி, வீட்டுக்கு திரும்ப முடிவு செய்தார். கணவர், சமாதானப்படுத்தியதால், ஒரு வழியாக, தியேட்டருக்கு சென்றார். இருப்பினும், யாரிடமாவது வாய் கொடுத்தால், அது வம்பில் முடியக்கூடும் என, நினைத்து, படம் முடிந்து, வீட்டிற்கு வந்து சேரும் வரை, யாரிடமும், வாய் திறக்கவே இல்லையாம்.



தாய்லாந்தில் விஸ்வரூபம் 2 படப்பிடிப்பு...
[Thursday, 2013-05-23 19:27:31]

கமல்ஹசான் தயாரித்து இயக்கி நாயகனாக நடித்த விஸ்வரூபம் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. அண்மையில் இந்தப் படம் 100வது நாளை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கமல்ஹாசன் ஏற்கெனவே அறிவித்தப் படி விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். கமல்ஹாசன், ஆன்ட்ரியா, பூஜா குமார், ராகுல் போஸ், சேகர் கபூர் ஆகியோர் முதல் பாகத்தில் எந்த கதாபாத்திரங்களில் நடித்தார்களோ, அதே கதாபாத்திரங்களில் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்கள். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் ஆண்ட்ரியாவுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. விஸ்வரூபம் படத்தில் இல்லாத காதல் மற்றும் சென்டிமென்ட் விஸ்வரூபம் 2 வில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் விஸ்வரூபம் 2 திரைக்கதை இந்தியாவில் நடைபெறுவது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பாகத்தை இந்த வாரம் தாய்லாந்து நாட்டில் கமல்ஹாசன் ஆரம்பிக்க உள்ளதாக கோடம்பாக்க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தவிர ஐரோப்பிய நாடுகளிலும் சில காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளார்.



நவீன காலத்து சினிமாவை ரசிகர்களுக்கு கொடுப்பேன் : ஸ்ரீப்ரியா உறுதிமொழி
[Thursday, 2013-05-23 19:21:01]

25 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் சினிமாவில் கொடிகட்டிப்பறந்த நடிகைகளுள் ஸ்ரீப்ரியாவும் குறிப்பிடத்தக்கவர். இவரும் ஸ்ரீதேவியும் சம காலத்து நடிகைகள். அந்த சமயத்தில் சிவாஜி, ரஜினி, கமல் உள்பட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்த ஸ்ரீப்ரியா, கவர்ச்சி கதாநாயகியாகவும் திகழ்ந்தவர். அதனால் அவருக்கென்று ஒரு ரசிகர் வட்டமும் இருந்தது. அப்படி பிசியாக நடித்து வந்தவர், படவாய்ப்புகள் குறைந்தபோது நானே வருவேன், சாந்தி முகூர்த்தம் ஆகிய படங்களையும இயக்கினார். அதன்பிறகு சினிமா விட்டு விலகியிருந்த ஸ்ரீப்ரியா, சின்னத்திரைகளில் முகம் காட்டி வந்தவர், இப்போது மீண்டும் சினிமாவுக்கு வருகிறார். ஆனால் நடிகையாக அல்ல, இயக்குனராக. தானே கதை உருவாக்கி ரிஸ்க் எடுக்காமல், மலையாளத்தில் வெளியான 22 பீமேல் கோட்டயம் என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்யப்போகிறாராம். பகத்பாசில், ரீமா கல்லிங்கல் நடித்த இப்படம் அங்கு வெற்றி பெற்றதோடு, ரீமா கல்லிங்களுக்கு சிறந்த நடிகைக்கான விருதினை பெற்றுத்தந்தது.



அஜித்தின் கடமை உணர்ச்சிக்கு அளவேயில்லை
[Thursday, 2013-05-23 19:16:53]

இயக்குனர் விஷ்ணுவர்த்தன் தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தில் அஜித் தற்போது நடித்துக் கொண்டிருக்கின்றார். படப்பிடிப்பிற்காக அஜித் டெல்லியிலிருந்து குலுமனாலி புறப்பட்டுச் சென்றார். இப்படத்தில் நடிக்கும் நயன்தாரா, டாப்சியும் அங்கு சென்றார்கள். எல்லோருக்கும் மலையின் அழகை ரசிக்கும் ஆர்வமும் இருந்தது. நீண்ட தூரம் பயணம் செய்ததால் படப்பிடிப்பு தளத்தில் அஜித்துக்கு திடீர் முதுகுவலி ஏற்பட்டு காய்ச்சலிலும் அவதிப்பட்டார். ஆனால் படப்பிடிப்பை தள்ளி வைக்க முடியாத சூழலில் இயக்குனர் இருந்தார். உடனடியாக படப்பிடிப்பை தொடங்க வேண்டிய கட்டாயமும் இருந்தது. படப்பிடிப்பு தன்னால் பாதிக்கப்படக் கூடாது என்று அஜித் முடிவுசெய்து காய்ச்சல் மற்றும் முதுகுவலியை பொருட்படுத்தாமல் நடித்தார். கிளைமாக்சும் மேலும் சில காட்சிகளும் அங்கு படமாக்கப்பட்டன. அனைத்தையும் முடித்து கொடுத்தார். அஜித்தின் தொழில் ஈடுபாட்டை படப்பிடிப்பு குழுவினர் வியந்து பாராட்டினர். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. 'வலை' என்ற பெயரை வைக்க பரிசீலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



நயன்தாராவும், டாப்சியும் நெருங்கிய தோழிகளாகிவிட்டனர்..
[Thursday, 2013-05-23 19:08:31]

அஜீத் நடிக்கும் புதிய படத்தில், ஆர்யா, நயன்தாரா, டாப்சி என, ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இதனால், படப்பிடிப்பு தளத்தில், ஒரே ஜாலியும், அரட்டையுமாக, எப்போதும், உற்சாகம் களை கட்டுகிறது. இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள், இமாச்சல பிரதேசத்தில் உள்ள, அடர்ந்த மலைப் பகுதியில், ஜில் ஜில் சீதோஷ்ண நிலையில், படமாகின்றன. இதற்காக, நட்சத்திர குழு, அங்கு முகாமிட்டுள்ளது. இந்த படத்தில் நடித்ததன் மூலம், நயன்தாராவும், டாப்சியும், ரொம்பவும் நெருங்கிய தோழிகளாகி விட்டார்களாம். நேரம் கிடைக்கும்போதெல்லாம், இந்த தோழிகள், அரட்டை அடிக்க தயங்குவது இல்லை. படப்பிடிப்பு இல்லாத நேரங்களில், நயன்தாராவும், டாப்சியும், மலைப் பிராந்தியத்தில், ஜாலியாக, 'பைக் ரைடிங் செய்தார்களாம்.



மரியானில் தனுஷ் உயிர பணயம் வச்சு நடிச்சாராம்...
[Thursday, 2013-05-23 19:01:59]

துள்ளுவதோ இளமை படத்தில் நடிக்க வந்தவர் தனுஷ். மீசை முளைக்காத பையனாக வந்தவர், இப்போது சிறகு முளைத்த நடிகராகி விட்டார். எந்த மாதிரி கதை என்றாலும் புகுந்து விளையாடுகிறார். விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களே சிறந்த நடிகர் என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறார் தனுஷ்.ஆனால் அப்படிப்பட்ட தனுஷ் மரியான் படத்தில் நடிக்கத் தொடங்கியதில் இருந்து படப்பிடிப்பு முடியுற வரைக்கும் திகிலோடுதான் நடித்துக்கொண்டிருந்தாராம். முதலில் எனக்கு நீச்சலே தெரியாது. அப்படிப்பட்ட நான் நடுக்கடலுக்குள் சென்று மீன் பிடிக்க வேண்டும். இந்த அனுபவம் எப்படி இருக்கும் நீங்களே நினைத்துப்பாருங்கள் என்கிறார். அடுத்து, நபீபியா பாலைவனத்தில் சுடும் மணலில் காலில் செருப்பே போடாமல் நடித்தேன். அப்போதெல்லாம் இந்த பரத்பாலாகிட்ட இப்படி வந்து சிக்கிக்கிட்டோமே என்று பீல் பண்ணினேன். இதற்கெல்லாம் மேலாக சிறுத்தையுடன் கூண்டுக்குள் அடைத்துப்போட்டு படமாக்கியது ரொம்ப கொடுமையான அனுபவம். எப்ப சிறுத்தைக்கு இரையாகப்போறோமோன்னு பயந்து நடுங்கிக்கிட்டே நடிச்சேன். இப்படியெல்லாம் உயிர பணயம் வச்சி ஒரு படத்துல நடிக்குனுமான்னு முதல்முறையா என்னை நானே கேட்டுக்கிட்டே நடிச்சேன்.



மீண்டும் இணையும் சித்தார்த் - சமந்தா!
[Thursday, 2013-05-23 18:58:18]

சித்தார்த் - சமந்தா காதல் விவகாரம் கத்தரிக்காய் முற்றி கடைத்தெருவுக்கு வந்த கதையாகி விட்டபோதும், இன்னமும் நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டுமே என்று கீறல் விழுந்த ரெக்கார்டாய் மறுத்து வருகிறார்கள் அவர்கள். மேலும், இந்த அளவுக்கு பிரச்னை பூதாகரமாக வெடித்தபோதிலும், அவர்கள் இருவரும் ரொம்ப கேசுவலாக இருக்கிறார்கள். அடிக்கடி ஐதராபாத் ஒட்டல்களில் சந்தித்துக்கொள்வது. தாங்கள் நடித்த படங்களின் ரஷ் பார்க்க அழைப்பது என்று மீட்டிங் போட்டுதான் வருகிறார்கள். இந்த நிலையில், சித்தார்த் தமிழில் நடித்துள்ள தீயா வேலை செய்யனும் குமாரு படம் தெலுங்கிலும் ரிலீசாகிறது. தற்போது சமந்தாவின் மார்க்கெட் தெலுங்கில் உச்சத்தில் இருப்பதால், அவரையும் இப்படத்தில் இணைத்தால் படத்தின் வெற்றிக்கு பெரிய பலமாக இருக்கும் என்று நினைத்த சித்தார்த், அப்படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க சமந்தாவிடம் கேட்டாராம். அதற்கு, மறுபேச்சின்றி சம்மதம் சொன்ன சமந்தா, விரைவில் அப்படத்தில் நடிக்கிறாராம்.



இரவு நேரங்களில் இசையமைப்பதை நிறுத்தினார் ஏ.ஆர்.ரஹ்மான்
[Thursday, 2013-05-23 18:53:26]

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை பார்க்க வேண்டுமென்றால் இரவு நேரங்களில்தான் முடியும் என்பார்கள். காரணம், இரவு நேரத்தில் இடையூறுகள் அதிகமாக இருக்காது என்பதால் அந்த சமயத்தில்தான் கம்போஸிங் மற்றும் இசைக்கோர்ப்பு பணிகளை நடத்துவார் அவர். இப்படி பத்து முதல் பதினைந்து ஆண்டுகள் வரை செயல்பட்டு வந்த ரஹ்மான், ஹாலிவுட்டுக்கு சென்றபோது எல்லாமே மாறிவிட்டது. நேரம் கிடைக்கிறபோதெல்லாம் இசையமைக்கத் தொடங்கினாராம். அதன்காரணமாக, இப்போது மீண்டும் சென்னையில் குடியேறியிருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், முன்பு மாதிரி இரவு நேரங்களில் இசையமைக்காமல் பகல் நேரங்களில் இசையமைக்கத் தொடங்கி விட்டார். இதுபற்றி அவர் கூறும்போது, ஆரம்ப காலங்களில் அந்த நேரத்தை நான் தேர்வு செய்தேன். எனக்கு அந்த அமைதி அப்போது தேவைப்பட்டது. அதோடு, இரவு தூக்கமின்றி இசையமைப்பது கடினமாகவும் தெரியவில்லை. ஆனால், இப்போது நிறைய ஓய்வு தேவைப்படுகிறது.



என்னோட மார்க்கெட் கடுகளவும் குறையவில்லை - த்ரிஷா பெருமிதம்
[Thursday, 2013-05-23 18:48:50]

மங்காத்தாவுக்கு பிறகு த்ரிஷாவின் மார்க்கெட் சரிந்து, அவரது மவுசு இறங்கி விட்டதாக பொதுவாக பேச்சுகள் நிலவுகிறது. ஆனால் அவரோ, எனக்கான மார்க்கெட்டும், மவுசும் இன்னமும் அப்படியேத்தான் உள்ளது என்கிறார். முன்பு நான் செல்லும் இடங்களில் என்னை எப்படி சூழ்ந்து கொண்டார்களோ அதே மாதிரி இப்போதும் நான் பப்ளிக்கில் செல்வதைப்பார்த்தால் என்னை ரசிகர்கள் மொய்த்துக்கொள்கிறார்கள்.ஆக எனக்கான கிரேஸ் கடுகளவும் குறையவில்லை என்று சொல்லி உணர்ச்சி வசப்படுகிறார் த்ரிஷா. ஆனால் முன்னணி நாயகன்களுடன் நடிக்கும் வாய்ப்புகள் இல்லையே? என்றால், என்னதான் நடிகைகள் சிறப்பாக நடித்தாலும் குறிப்பிட்ட சில வருடங்களோடு அவர்களை ஓரங்கட்டி விடுவது சினிமா உலகில் தொடர்ந்து நடந்து வருகிறது.அப்படித்தான் நானும் ஓரங்கட்டப்பட்டுள்ளேன் என்றாலும், என் திறமை மீது நம்பிக்கை வைத்து இப்போதும் நல்ல படங்கள் வந்து கொண்டிருக்கின்றன.அதிலும் இரண்டு படங்களில் என்னை மையமாக வைத்தே கதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆக, இப்போது நான் ஹீரோக்களுக்கு இணையான நடிகையாகி விட்டேன். அதனால் இது எனக்கு வீழ்ச்சி அல்ல, வளர்ச்சிதான் என்கிறார் த்ரிஷா.



மலையாள படத்திலிருந்து ஸ்ரீசாந்த நடித்த காட்சிகள் நீக்கம்
[Thursday, 2013-05-23 18:42:06]

கிரிக்கெட் சூதாட்ட புகாரில் சிக்கி சிறைக்கு சென்றுள்ள ஸ்ரீசாந்த், மலையாளப் திரைப்படம் ஒன்றில் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிரபல மலையாள கவிஞரும் இசையமைப்பாளருமான கைதப்ரம் தாமோதரன் நம்பூதிரி இயக்கத்தில் உருவாகும் 'மழவில்லினட்டம் வரே' (வானவில்லின் நுனி வரை) என்ற படத்திலே நடித்திருந்தார். 'ஸ்பாட் பிக்சிங்' சூதாட்ட சர்ச்சையில் ஸ்ரீசாந்தின் பெயர் இடம் பெற்றவுடன் அவர் நடித்த காட்சிகளை நீக்கி விட்டதாக படத்தின் இயக்குநர் நேற்று அறிவித்துள்ளார். இதுகுறித்து கைதப்ரம் தாமோதரன் நம்பூதிரி கூறுகையில், ஸ்ரீசாந்த் இந்தியாவின் சிறந்த வேகப் பந்து வீச்சாளர். அவர் எனது நல்ல நண்பர்களுள் ஒருவர். எனவே, எனது படத்தில் அவரை கவுரவ கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தேன். தற்போது, வரும் செய்திகளை கருத்தில் கொண்டு அவர் நடித்த காட்சிகளை நீக்கி விட்டோம். பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவர் இந்தியாவிற்கு வரும் போது அவரது வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படுகிறது. இதை சுற்றித்தான் படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. இந்திய அணியின் வீரர்களில் ஒருவராக கவுரவ கதாபாத்திரத்தில் ஸ்ரீசாந்த் நடித்திருந்தார்.



கேன்ஸ் திரைப்பட விழா பற்றி வித்யா பாலனின் பேட்டி
[Wednesday, 2013-05-22 18:37:18]

'குரு', 'பா', 'ஹே பேபி' போன்ற இந்தி படங்களில் நடித்த வித்யாபாலன், சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தியில் எடுக்கப்பட்ட 'தி டர்ட்டி பிக்சர்ஸ்' படம் மூலம் பிரபலமானார். இப்படத்திற்காக மத்திய அரசின் தேசிய விருதும் பெற்றார். தொடர்ந்து கஹானி என்ற படத்தில் நடித்து இந்தி சினிமாவின் முன்னணி நடிகையாக உயர்ந்தவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. சித்தார்த் ராய் கபூரை திருமணம் செய்து கொண்டவர் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியா சார்பில் பங்கேற்றுள்ள நடிகை வித்யாபாலன் அங்கு நடுவர் குழுவில் இடம்பெற்றுள்ளார். அவர் நமக்கு அளித்த சிறப்பு பேட்டி..!



'தனது கதாபாத்திரத்தை உயிர் துடிப்போடு செய்திருக்கிறார்' : தனுஷுக்கு ஸ்ரீதேவியின் பாராட்டு
[Wednesday, 2013-05-22 18:29:15]

முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள இந்தி படம் ராஞ்சனா. சோனம் கபூர் ஹீரோயின். முஸ்லிம் பெண்ணுக்கும், இந்து வாலிபனுக்கும் இடையே மலரும் காதல் பற்றிய கதை. ஆனந்த் எல்.ராய் இயக்கி உள்ளார். இப்படத்தின் சில காட்சிகளை சமீபத்தில் ஸ்ரீதேவி பார்த்தார். பின்னர் அவர் டுவிட்டர் பக்கத்தில் அதுபற்றி கூறும்போது :-



ஐந்தாம் வகுப்பு பாட புத்தகத்தில் இடம்பெற்ற சினிமா நடிகையின் படம்
[Wednesday, 2013-05-22 17:55:42]

டெல்லியின் ஸ்பிரிங் டேல்ஸ் என்ற பள்ளியில் ஐந்தாம் வகுப்பினருக்கான சுற்றுச்சூழல் பாடத்திட்டத்தில், நடிகையும், பாடகியும், முன்னாள் உலக அழகியுமான பிரியங்கா சோப்ராவின் வாழ்க்கையையொத்த பாடம் இடம்பெற்றுள்ளது. அதில், பிரியங்காவின் குடும்ப படங்கள், மற்றும் 2000-ஆம் ஆண்டில் அவர் உலக அழகி பட்டம் பெற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அச்சிடப்பட்டுள்ளன. சமீபத்தில் இந்தப் பள்ளிக்கு சென்ற பிரியங்கா சோப்ரா, தன்னுடைய வாழ்க்கையையொத்த பாடம் இடம்பெற்றிருப்பதை கண்டு வியந்து போனார். ராணுவத்தில் பணிபுரிவோரின் குழந்தைகள் சிறுவயதில் பல இடங்களில் வசிக்கும் சூழ்நிலை ஏற்படுவதை குறித்த பாடமும், பிரியங்காவின் வாழ்க்கையை ஒத்து காணப்படுகிறது. பிரியங்காவின் தந்தை ராணுவத்தில் பணிபுரிந்ததால் அடிக்கடி வேறு ஊர்களுக்கு மாற்றலாக நேரிடும். எனவே, பிரியங்கா தனது சிறுவயதில், இந்தியாவில் பரேலி, லக்னோ, மும்பை ஆகிய இடங்களிலும், அமெரிக்காவில் நியூட்டன், மசாசுசெட்ஸ், அயோவா போன்ற இடங்களிலும் தனது வாழ்நாளைக் கழித்துள்ளார். இத்தகைய வாழ்க்கை முறையை குறிக்கும் பாடத்தில்தான் பிரியங்காவின் குடும்ப புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.



விஸ்வரூபம் 100வது நாளை எட்டியது: கமலுக்கு பெயின்டிங் பரிசு
[Wednesday, 2013-05-22 17:51:02]

விஸ்வரூபம் படம் 100 நாட்கள் கடந்துள்ளதை குறிக்கும் வகையில் அவருக்கு ஒரு பெயின்டிங் பரிசளித்துள்ளார் பிரபல ஓவியர் ஏபி ஸ்ரீதர். கமல்ஹாஸன் நடித்து தயாரித்து இயக்கிய படம் விஸ்வரூபம். நேற்று முன்தினம் இந்தப் படம் சத்யம் மற்றும் பிவிஆரில் நூறாவது நாளைத் தொட்டது. இந்த சிறப்பு நிகழ்வையொட்டி, கமலுக்கு அவரின் விஸ்வரூப கெட்டப்பை ஓவியமாக வரைந்து பரிசாக அளித்தார் பிரபல ஓவியர் ஏபி ஸ்ரீதர்.



சமூக சேவையில் ஆர்வம் காட்டும் குஷ்பு
[Wednesday, 2013-05-22 17:42:21]

சினிமாவுக்கு வெளியே குஷ்பு வேறு மாதிரியாக தெரிகிறார். அதாவது, நல்ல குடும்ப நிர்வாகி, நல்லதொரு தயாரிப்பாளர். அதையும் தாண்டி எதையும் தில்லாக நேருக்கு நேர் பேசும் அரசியல்வாதி என்றெல்லாம் தன்னை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக, கற்பு பிரச்னையில் தனது கருத்தை கடைசி வரை தைரியாக சொன்னவர் குஷ்பு. அதேபோல் கட்சி விசயங்களிலும் மனசில் பட்டதை சொல்லி வருகிறார். இதனால் அரசியல் வட்டாரங்களில் சமீபகாலமாக பேசப்படும் பிரபலமாகி விட்டார் குஷ்பு. இப்படிப்பட்ட குஷ்பு, சமீபகாலமாக சமூக அக்கறையிலும் மிகுந்தவராகி வருகிறார். குறிப்பாக, தன் கண்ணெதிரே நடக்கும் பொறுப்பற்ற செயல்கள், அரசு அதிகாரிகள் மெத்தனப்போக்கு, சாலைப் போக்குவரத்து, போதையில் வண்டி ஓட்டி விட்டு வருவது போன்ற செயல்களையும் சாடி வருகிறார். மனதில் தோன்றுவதை தனது டுவிட்டரில் அரங்கேற்றி வருகிறார் அப்படி தன் கண்ணில் படுவதை செல்போனில் படம் பிடித்தும் டுவிட்டரில் இடம்பெறச் செய்கிறார்.



வெளிநாட்டு பட நிறுவனங்களுக்கு இந்தியாவில் படப்பிடிப்பு நடத்த சிரஞ்சீவி அழைப்பு!
[Wednesday, 2013-05-22 17:39:09]

வெளிநாட்டு பட நிறுவனங்கள் இந்தியாவில் படப்பிடிப்பு நடத்த வரவேண்டும் என்று மத்திய அமைச்சரும், நடிகருமான சிரஞ்சீவி அழைப்பு விடுத்துள்ளார். பிரான்சில் நடைபெற்று வரும் கேன்ஸ் படவிழாவில் சிரஞ்சீவி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், இந்தியா சினிமா வளர்ச்சியடைந்துள்ளது. நவீன தொழில்நுட்பங்களில் படங்கள் எடுக்கப்படுகின்றன. உலக தரத்தில் இந்திய படங்கள் தயாராகின்றன. இந்தியப் படங்கள் எடுப்பவர்கள் சர்வதேச அளவில் பேசப்படுகிறார்கள். வருடத்துக்கு 365 நாட்களும் இந்தியாவில் சினிமா படப்பிடிப்புகள் நடக்கின்றன. இந்திய தட்ப வெப்பநிலை அதற்கு உகந்ததாக உள்ளது. சில நாடுகளில் பனியும், சில நாடுகளில் மழையும் இருக்கும். அங்கு தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த முடியாது. ஆனால் இந்தியாவில் அப்படி அல்ல. எப்போது வேண்டுமானாலும் படப்பிடிப்பை நடத்தலாம். படப்பிடிப்புக்கு ஏற்ற இடங்களும் உள்ளன. ஆஸ்கர் விருதை வென்ற லைப் ஆப் பை படம் இந்தியாவில்தான் எடுக்கப்பட்டது. எனவே வெளிநாட்டவர்கள் இந்தியாவில் படப்பிடிப்புகள் நடத்த முன்வர வேண்டும். கேன்ஸ் படவிழாவில் இந்திய படங்கள் அதிகம் பங்கேற்பது வளர்ச்சியை கூட்டுகிறது, என்றார்.



சில்க் ஸ்மிதாவை ரோல் மாடலாக கொண்டு வாழ்வில் சாதிக்கப்போகிறேன்! - சனாகானின் சபதம்
[Wednesday, 2013-05-22 17:34:45]

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையில் உருவாகியுள்ள நடிகையின் டைரி படத்தில் நடித்திருப்பவர் சனாகான். அதற்கு முன்பே பல படங்களில் நடித்திருந்தபோதும், இப்போதுதான் சனாகான் என்ற பெயரை ரசிகர்கள் உச்சரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதற்கு காரணம் சில்க்ஸ்மிதா. அவரது கதாபாத்திரத்தில் நடிப்பதால் சனா மீதும் வெளிச்சம் பாய்ந்திருக்கிறது. அதனால், தனது மார்க்கெட்டு சூடுபிடித்திருக்கும் இந்த நேரத்தை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் சனாகான், சில்க்கைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் அவரது கதையில் நடிக்க வேண்டும் என்றதும் அவரது முக்கியமான படங்களையெல்லாம் பார்த்தேன். அப்போதுதான் கவர்ச்சி நடிகையாக அறிமுகமாகி எந்தமாதிரி கேரக்டர்களில் எல்லாம் அவர் நடித்திருக்கிறார் என்பது புரிந்தது.



ஆன்மீகத்திற்கு மாறிப்போன சிம்பு...
[Wednesday, 2013-05-22 17:31:13]

சிம்புவின் தந்தையான டி.ராஜேந்தர் சிறந்த பக்திமான். மாலை நேரங்களில் அவரது வீட்டுக்கு சென்றால், பூஜை அறை மட்டுமின்றி வீடெங்கும் காட்சி தரும் அனைத்து சாமி உருவப்படங்கள் முன்பும் நின்று மனமுருகி வேண்டுவாராம். அப்படி அவர் வீட்டில் உள்ள மொத்த தெய்வங்களையும் கும்பிட்டு முடிப்பதற்கு ஒரு மணி நேரம் ஆகுமாம். அந்த அளவுக்கு பெரிய பக்திமான் அவர். வெள்ளிக்கிழமைகளில் 6 மணிக்கு மேல் தனது வீட்டில் இருந்து பத்து பைசாகூட வெளியில் விட மாட்டாராம். தொழிலாளிகள் வேலையை முடித்து விட்டு கூலி கேட்டு நின்றால்கூட நாளைக்கு வா என்று அனுப்பி விடுவாராம். அதோடு, மட்டுமின்றி நியூமராலஜியில் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருபவர். இந்த சமயத்தில் இது நடக்கும் என்பதை துள்ளியமாக சொல்லி விடும் ஆற்றல் மிக்கவர், ஆனால், அவரது மகனான சிம்பு அதற்கு நேர்மாறாக இருந்தார். அப்பாவைப்பற்றி இதுவரை ஒரு கிசுகிசுக்கள்கூட எந்த பத்திரிகையிலும் வந்ததில்லை. ஆனால், சிம்புவைப்பற்றிய கிசுகிசுக்கள் வராத பத்திரிகைகளே இல்லை.



ஜி.வி.பிரகாஷ்குமார் - சைந்தவி திருமணத்திற்கு முதல்வர் ஜெயலலிதாவை அழைப்பு
[Wednesday, 2013-05-22 17:28:59]

வெயில் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ்குமார். அதையடுத்து இப்போது பாரதிராஜா, விஜய் போன்றவர்களின் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராகியிருக்கும் அவர் இதுவரை 25 படங்களுக்கு இசையமைத்து விட்டார். இந்த நிலையில், பாடகி சைந்தவியை ஜூன் 27-ந்தேதி சென்னையில் திருமணம் செய்து கொள்கிறார். ஜி.வி.பிரகாஷ், சைந்தவி இருவரும் பள்ளியில் படிக்கிற காலத்தில் இருந்தே நண்பர்களாம். இந்த நிலையில், ஜிவி.யின் இசையில் சைந்தவி பின்னணி பாடி வந்தபோது அவர்களது நட்பு காதலாக மாறியிருக்கிறது. இதுபற்றி இருவரும் வீட்டில் சொன்னபோது, அவர்களது திருமணத்துக்கும் சம்மதம் சொன்னார்களாம். அதையடுத்து, சில மாதங்களுக்கு முன்பு அவர்களது நிச்சயதார்த்தம் சென்னையில் நடைபெற்றது. இந்த நிலையில், அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் திருமணத்துக்கு இப்போது உறவினர் மற்றும் நட்பு வட்டாரங்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதில் ஜி.வி.பிரகாசும், சைந்தவையும் இறங்கியுள்ளனர்.



பின்னணி பாடகர் ஹரிஹரனுக்கு லதா மங்கேஷ்கர் விருது
[Wednesday, 2013-05-22 17:15:51]

ரோஜா, பம்பாய், ஜீன்ஸ், இந்தியன், சிவாஜி, குரு உள்பட பல தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களில் பாடல்கள் பாடியவர் ஹரிஹரன். இவருக்கு லதாமங்கேஷ்கர் தேசிய விருது அறிவிக்கப்பட்டது. மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் நடந்த விழாவில் பின்னணி பாடகர் ஹரிஹரன் இந்த விருதினையும் ரூ.2 லட்சம் ரொக்கப்பரிசையும் பெற்றுக்கொண்டார். அந்த மாநில அமைச்சர்கள் கைலாஷ் விஜய்வராகியா, லட்சுமிகாந்த் சர்மா ஆகியோர் விருதை வழங்கினர். மலையாளம், கன்னடம், மராத்தி, போஜ்புரி, தெலுங்கு, ஆகிய மொழி திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ள ஹரிஹரன் ஏற்கனவே கடந்த 2004ம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதை பெற்றவர் என்பது கூடுதல் தகவல்.


Suresh-remax-2013-01-01
Canada Kanthasamy Kovil
Ramans2011
Mahesan supramaniyam 031109
INNSYS-20120930
TDE_Computers2011
RoyaShades-l2011(04-12-11)
NIRO-DANCE-100213
TamilsGuid-191012-2013
AJRwindows22.05.13
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com