Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 23, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
சிங்களப் படையினருக்கு இராணுவத்திற்கு பயிற்சி - செப்டெம்பர் 4ம் திகதி தமிழகம் முழுவதும் சிறுத்தைகளின் சீற்றம்!
[Thursday, 2012-08-30 07:00:18]
News Service

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
சிங்களப் படையினருக்கு இந்திய அரசு தமிழகத்திலோ அல்லது இந்தியாவின் பிற பகுதிகளிலோ பயிற்சி அளிக்கக் கூடாது என்று தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் கட்சி சாராத அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

  

ஆனால் இந்திய அரசு தமிழக மக்களின் உணர்வுகளை ஒரு பொருட்டாக மதிக்காமல் சிங்களப் படையினருக்கு இராணுவத்திற்கு பயிற்சி அளித்து வருகிறது.

எதிர்ப்பு, கண்டனம் எழும்போதெல்லாம் தமிழகத்தில் பயிற்சி அளிப்பதை நிறுத்தி பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதை இந்திய அரசு வாடிக்கையாகக் கொண்டுள்ளது. தற்போது தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள இராணுவப் பயிற்சிப் பள்ளியில் 2 சிங்களப் படை அதிகாரிகளுக்கு இந்திய அரசு பயிற்சி அளித்து வருகிறது.

இதனைக் கண்டித்து ஆளுங்கட்சி எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் அழுத்தமாகக் குரல் எழுப்பிவரும் நிலையிலும் இந்திய இராணுவத் துறை இணையமைச்சர் பல்லம் ராஜு அவர்கள் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப் போல, "சிங்களப் படையினருக்கு தொடர்ந்து பயிற்சி அளிப்போம். ஏனெனில் இலங்கை இந்தியாவின் நட்பு நாடு" என்று கூறியிருக்கிறார்.

அமைச்சரின் இந்த ஆணவம் மிகுந்த பேச்சு இனமானமுள்ள ஒவ்வொரு தமிழரையும் கடுமையாகக் காயப்படுத்துகிறது. தமிழினத்தின் உணர்வுகளை அவமதித்து இழிவுபடுத்தியுள்ள அமைச்சரின் இத்தகைய போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

அமைச்சரைக் கண்டித்து ஆங்காங்கே விடுதலைச் சிறுத்தைகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கோவையில் அமைச்சரின் உருவ பொம்மையை எரித்து தமது கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் செப்டம்பர் 4ஆம் நாள் தமிழகம் தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டங்களை விடுதலைச் சிறுத்தைகள் நடத்துகிறது. இந்திய அரசு சிங்களப் படையினருக்கு பயிற்சி அளிக்க மாட்டோம் என்கிற வாக்குறுதியை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த அறப்போராட்டங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் அருகே நடைபெறுகின்றன என்று அறிவிக்கப்படுகிறது.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

இந்தியாவில் பத்து கோடி மக்கள் ஒன்றாகக் கூடும் திருவிழா திரிவேணி சங்கமம்! - உத்திரபிரதேச மாநில அரசு பாதுகாப்பு ஏற்பாடு.
[Monday, 2013-01-14 10:31:29]

இந்தியாவில் , அலகபாத் நகரில் நடக்கும் , கும்ப மேளா , பனிரெண்டு ஆண்டுகளிற்கு ஒரு முறை நடப்பது. இதுதான் உலகில் அதிக பக்தர்கள் கூடும் திருவிழா . இந்த ஆண்டு பத்து கோடி பேர் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது. மூன்று நதிகளின் சங்கமம் ஆகும் இடத்தில , கங்கா , யமுனா , வேதங்களில் கூறப்படும் சரஸ்வதி என்று மூன்று நதிகள் இணையும் இடத்தின் இந்த விழா நடைபெறுகிறது . இதற்க்கு திரிவேணி சங்கமம் என்றும் கூறுவார்கள். உத்திரபிரதேசத்தில் நடக்கும் இந்த மத திருவிழா சிறப்பாக நடைபெற , மாநில அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.



இமயமலையில் கடும் பூகம்பம் ஏற்ப்படலாம் - சிங்கப்பூர் விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
[Monday, 2012-12-31 12:25:14]

இமயமலை பகுதியில், கடும் பூகம்பம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக, விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இது, ரிக்டர் அளவில், 8.0 முதல் 8.5 வரை பதிவாகும் என்றும் தெரிவித்துள்ளனர். சிங்கப்பூரை சேர்ந்த, நன்யாங் தொழில் நுட்ப பல்கலை கழக விஞ்ஞானிகள், பவுல் டாப்பொன்னியர் என்பவர் தலைமையில், இமயமலை பகுதியில் ஆய்வு நடத்தினர். இவர்களுடன், நேபாளம் மற்றும் பிரான்ஸ் நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளும் பங்கேற்றனர்.



சென்னை - தர்மபுரியில் நடைபெற்ற கலவரம், மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்ற வேண்டும் - தலைவர் திருமாவளவன் Top News
[Tuesday, 2012-11-20 12:07:47]

சென்னை - தர்மபுரியில் நடைபெற்ற கலவரம் சம்பந்தமான விசாரணையை மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்ற வேண்டும் என்றுக் கோரி விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் சென்னையில் நேற்று (20.11.2012) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பேசிய தலைவர் திருமாவளவன். தர்மபுரியில் கலவரம் தொடர்ந்து 6 மணி நேரம் நடந்திருக்கிறது. காவல்துறை அதிகாரிகளோ, அரசு அதிகாரிகளோ தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பணத்துக்காக காதல் செய்து ஏமாற்றுகிறார்கள் என்று சொல்லுவது அப்பட்டமான பொய். காதல் என்பது ஒருவருடைய தனிப்பட்ட விருப்பம். அது எந்த சாதியாளராக இருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட விருப்பத்தில் தலையிட உரிமை கிடையாது.



உதயக்குமாரை போலீஸார் என்கவுண்டர் மூலம் போட்டுத் தள்ளப் போகிறார்கள்: - கூடங்குளத்தைச் சுற்றி வரும் திகில் பீதி!
[Monday, 2012-09-17 22:49:43]

அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், கூடங்குளம் போராட்டததை முனைப்புடன் நடத்தி வருபவருமான உதயக்குமாரை போலீஸார் என்கவுண்டர் மூலம் போட்டுத் தள்ளப் போகிறார்கள் என்று பரவி வரும் தகவலால் கூடங்குளம், இடிந்தகரை உள்ளிட்ட பகுதிகளில் பரபரப்பு நிலவுகிறது.


TamilsGuid-191012-2013
Suresh-remax-2013-01-01
AJRwindows22.05.13
INNSYS-20120930
TDE_Computers2011
Canada Kanthasamy Kovil
Ramans2011
RoyaShades-l2011(04-12-11)
Mahesan supramaniyam 031109
NIRO-DANCE-100213
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com