Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 20, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
தடுப்பு முகாம்களில் இருக்கும் ஈழத்தமிழ்க் கைதிகளை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!
[Wednesday, 2012-08-29 12:56:15]
News Service

கடந்த இருபது நாட்களாக (இதில் 5 நாட்கள் நீரும் அருந்தாது) பூந்தமல்லி தடுப்புவதைமுகாமில் பட்டினிப்போராட்டத்தை மேற்கொண்டு வந்த செந்துாரனை கியூ பிரிவு காவல்துறையினா் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு இழுத்துச் சென்றுள்ளனா். செந்துாரனது எந்த கோரிக்கைகளுக்கும் செவிசாய்க்காமல், அவருக்கு எந்த வாக்குறுதிகளும் வழங்காமல் வழமை போல் ஆட்சியாளர்கள் தான்தோன்றித்தனமாக நடந்து கொண்டுள்ளார்கள்.

  

பூந்தமல்லி சிறப்புமுகாமில் 8 பேரும் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் 38 பேரும் அடைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் பலர் அய்ந்தரை ஆண்டுகள் வரை அடைக்கப்பட்டுள்ளார்கள். இந்த முகாம்கள் 'சிறப்பு முகாம்' எனப் பெயர் சூட்டப்பட்டிருந்தாலும் நடைமுறையில் ஏனைய சிறைகளைவிட மோசமாக உள்ளன. சிறைச்சாலைகள் சிறைத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் கைதிகள் கொஞ்சம் மனிதாபிமானத்துடன் நடத்தப்படுவார்கள். சிறப்பு முகாம்கள் அப்படியல்ல. இரக்கமற்ற ஆனால் ஊழலுக்குப் பெயர் போன கியூபிரிவினர் இந்த முகாம்களுக்குப் பொறுப்பாக இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டைத்தவிர வேறு எந்த மாநிலத்திலும் இவ்வாறான சிறப்பு முகாம்கள் இல்லை. குறிப்பாக எல்லா மாநிலங்களிலும் ஏதிலிகளாகத் திபெத், மியன்மார், பங்களாதேசம் போன்ற ஏழு நாடுகளைச் சேர்ந்தவர்கள் வாழ்கின்றார்கள். இவர்கள், ஏதாவது குற்றச் சாட்டுக்களில் ஈடுபட்டால்கூட வெளிநாட்டவர் சட்டம் அவர்கள் மீது பாய்வதில்லை. இந்நாடுகளைச் சேர்ந்த கொலை, கொள்ளைக் குற்றவாளிகள் கூட இந்திய திருத்தச் சட்டத்திற்குட்பட்டே தண்டனைக்குள்ளாக்கப் படுகின்றார்கள். ஏதிலிகள் மீது மட்டுமே அயல்நாட்டவர் சட்டத்தில் இல்லாத கடுமையான நடைமுறைகளுடன் கியூ பிரிவினரால் இச்சட்டம் பின்பற்றப்படுகின்றது.

தீவிரவாதிகள் மற்றும் இந்திய இறையாண்மைக்கு எதிராகச் செயற்படுபவர்களை கண்காணிப்பதற்காகவும் ஒடுக்குவதற்காகவும் தொடக்கப்பட்ட கியூ பிரிவிற்கு ஏதிலிகளாக வருகின்ற ஈழத்தமிழர்களின் முழு ஆளுகைக்கும் நிருவாகத்திற்கும் எழுதப்படாத அனுமதியும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது.

ஈழத் தமிழர்கள் மீது ஆவணங்களின்றிக் கடல்வழியாகக் கேரளா வழியாக அவுத்திரேலியாவிற்குச் செல்ல முற்பட்டார்கள் என்று ஊழலுக்குப் பெயர் போன கியூ பிரிவு காவல்துறையினர் பொய் வழக்குப் போட்டுள்ளார்கள்.

தங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி உண்ணாநிலை இருப்பவர்கள் மீது மேலதிக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுப் பொய் வழக்குகள் போடப்படுகின்றன. இந்த முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் வழக்குகள் பெரும்பாலானவை இவ்வாறு புனையப்பட்ட பொய் வழக்குகளே ஆகும். எல்லாவற்றிற்கும் மேலாக கியூ பிரிவு காவத்துறையினர் இந்தக் கைதிகளை விலங்குகளை விட மோசமாக நடத்துகிறார்கள். சுடுமொழிகளால் அவர்களது உள்ளங்களைக் காயப்படுத்தி வருகிறார்கள்.

நீதிமன்றங்கள் இவர்களை வழக்குகளிலிருந்து விடுவித்தாலும் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்ட காலத்திற்கு எதுவித தீர்வும் கிடைப்பதில்லை. அதேபோன்று ஒரு சில வழக்குகளுக்கு நீதிமன்றம் தண்டனை விதித்தால் சிறப்பு முகாம் காலத்தை தண்டனைக் காலமாகக் கருதமுடியாது என்று கியூ பிரிவினர் வாதாடி மீண்டும் அவர்களுக்குச் சிறைத்தண்டனை வாங்கிக் கொடுத்துவிடுகிறார்கள். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஒரு குற்றத்திற்காக கியூ பிரிவினர் ஒரு தண்டனையும் நீதிமன்றம் ஒரு தண்டனையும் வழங்குவதால் ஒரு குற்றத்திற்காக இரண்டு தண்டனையை அனுபவிக்கும் கொடுமையை இந்தச் சிறைக் கைதிகள் சந்திக்கிறார்கள்.

ஒரு சிலரின் வழக்குகளைத் தவிர ஏனையோரின் வழக்குகள் இன்னும் தொடக்கப்படாமலேயே ஆண்டுக்கணக்காக கிடப்பில் உள்ளன. அவர்கள் மீது குற்றங்கள் சுமத்தப்படுவதில்லை. கியூ பிரிவினர் போடுகின்ற வழக்குகளுக்கு நீதிமன்றம் விதிக்கக்கூடிய (குற்றம் உறுதி செய்தால்) அதிக பட்ச தண்டனை ஒரு ஆண்டு காலமாகும்.

ஆனால் வழக்குகள் கியூ பிரிவினரால் இழுத்தடிக்கப்படுவதால் பல ஆண்டுகள் தடுப்பு முகாம்களில் குடும்பத்தையும் பிரிந்து தண்டனை அனுபவிக்கவேண்டியுள்ளது. இதனால் அவர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரமின்றி நிர்க்கதியாக்கப் படுகின்றார்கள். இந்தச் சூழ்நிலை காரணமாக பலர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பல குடும்பங்கள் தற்கொலைக்கு முயன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன.

சிங்களச் சிறைகளில் தமிழ் அரசியல் கைதிகள் என்னென்ன கொடுமைகளை அனுபவிக்கிறார்களோ அந்தக் கொடுமைகளை விட மோசமான கொடுமைகளையும் சித்திரவதைகளையும் வதைகளையும் வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ்நாட்டுச் சிறைகளில் எமது உறவுகள் அனுபவிக்கிறார்கள்.

பொங்கு தமிழர்க்கு இன்னல் விழைத்தால் சங்காரம் நிசமென்று சங்கு முழக்கிய புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாட்டில்தான் இந்தக் கொடுமைகள் அரங்கேறுகின்றன.

முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் தப்பிவந்த விடுதலைப்புலி உறுப்பினர்கள் கடல்வழியாக வேறு நாடுகளுக்குத் தப்பிக்க முயற்சிக்கின்றார்கள் என்ற அடிப்படையிலும் தொடர்புபடுத்தப் படுகின்றார்கள். இவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று ஒருங்கிணைந்து இந்திய இறையாண்மைக்கு எதிராகச் செயற்படுவார்கள் என்ற கற்பனையான வாதம் கியூ பிரிவினரால் முன் வைக்கப்படுகிறது.

இந்த இரண்டு சிறப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் வழக்குகளையே விடுதலைப்புலிகள் அமைப்பை சட்டவிரோத அமைப்பாகத் தடைசெய்வதற்கான காரணங்களாக ஆணையத்தின் முன் வைக்கிறார்கள். இந்தத் தடை நீட்டிப்பிற்காகவே தற்போதும் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் இருக்கின்றது என்பதைக் காட்டுவதற்காக சுழற்சி முறையில் இவ்வாறு வழக்குகள் போடப்படுவதும் பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்படுவதுமான நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. உண்மையான குற்றத்தின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்படவில்லை.

இந்தியாவின் கண்மூடித்தனமான புலி எதிர்ப்புக்கு இந்த அப்பாவி இளைஞர்கள் பலிக்கடாக்களாக்கப் பட்டுள்ளார்கள்.

விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிப்புக்கு இந்த இரண்டு தமிழக முதலமைச்சர்களும் இந்திய மத்திய அரசுக்குப் பச்சைக் கொடி காட்டி வந்தார்கள் என்பது வெட்கப் படவேண்டிய வரலாறாகும்!

கலைஞர் கருணாநிதி ஆட்சிக் காலத்திலும் சரி செல்வி ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும் காலத்திலும் சரி பூந்தமல்லி, செங்கல்பட்டு சித்திரைவதை முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழ்க் கைதிகளை விடுவிக்க மறுத்து விட்டார்கள்.

இந்த முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழ்க் கைதிகளை விடுவிக்குமாறு ஆர்ப்பாட்டங்கள் தொடர் உண்ணா நோன்புகள் மேற்கொண்டு வரும் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி, டே 17 இயக்கம், பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேசிய பொதுவுடமைக் கட்சி போன்றவற்றுக்கு எமது பாராட்டுதல்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

திபேத்திய ஏதிலிகளுக்கு ஒரு சட்டம் ஈழத்தமிழர்களுக்கு இன்னொரு சட்டம் என்பதை இனிமேலும் ஏற்க முடியாது. இந்தியாவில் 1959 ஆம் ஆண்டுக்குப் பின்னர் 150,000 திபேத்திய மக்கள் அரசியல் புகலிடம் அடைந்துள்ளார்கள். தங்களுக்கு என ஒரு புகலிட அரசை அமைத்துள்ள திபேத்தியர்களுக்கு இந்தியாவில் ஏதிலிகளுக்கான சகல உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன. கருநாடக மாநிலம் 1960 இல் மைசூரில் 3,000 ஏக்கர் (12 ச.கிமீ) காணியை ஒதுக்கிக் கொடுத்துள்ளது.

மேற்கு வங்காளம், இமாலயப் பிரதேசம் போன்ற மாநிலங்களும் காணி ஒதுக்கிக் கொடுத்துள்ளன. அதில் அவர்களுக்குச் சிறப்புப் பள்ளிக் கூடங்கள், பவுத்த விகாரைகள், இலவசக் கல்வி, மருத்துவ மனைகள், வங்கிகள், சொந்த வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. பல்கலைக் கழகங்களில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்தியா திபேத்தியர்களுக்கு வழங்கும் உதவிகளை தமிழ் அகதிகளுக்கு வழங்குவதில்லை. அவர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறது.

இதனை எழுதிக் கொண்டிருக்கும் போது செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 7 இலங்கைத் தமிழ் ஏதிலிகளை விடுதலை செய்ய தமிழக அரசு த்தரவிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி வந்திருக்கிறது. ஆனால் இது போதாது. செந்தூரன் உட்பட ஏனைய கைதிகளும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.

ஈழத்தமிழர்கள் சம உரிமையோடு இலங்கைத் தீவில் வாழ வழி செய்ய வேண்டும் என முன் எப்போதையும் விட மிகக் கடுமையாக வலியுறுத்தியும் அக்கறை காட்டியும் வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வரலாற்றுப் பழிக்கு ஆளாகக் கூடாது என்பதே எமது பெருவிருப்பு ஆகும்.

தலைவர்

தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் (கனடா)

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களுக்கான நான்காம் ஆண்டு நினைவேந்தல், மயிலாடுதுறை - உலக தமிழர் பாதுகாப்பு இயக்கம்!Top News
[Monday, 2013-05-20 21:10:53]

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை போர்க்குற்றநாள் நினைவேந்தல் நிகழ்வு நேற்றுமுன்தினம் மயிலாடு துறையில் இடம்பெற்றது (18 05 2013). இதில் ஏராளமான தமிழின உணர்வாளர்கள் கலந்துகொண்டதோடு படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு அஞ்சலிகளையும் செலுத்தியுள்ளனர்.



நெதர்லாந் நாட்டில் இடம்பெற்ற தமிழினவழிப்பின் 4ம் அண்டு நினைவு நாள். Top News
[Monday, 2013-05-20 20:22:03]

சிங்கள பேரினவாதம் 60 ஆண்டுகளாக தமிழிழ மக்கள் மீது திட்டமிட்ட தமிழினவழிப்பை மேற்கொள்கின்றது. சிங்கள பேரினவாதம் செய்த தமிழினவழிப்பின் உச்சக்கட்டமே 18. வைகாசி 2009ம் ஆண்டாகும். வைகாசி 18ம் திகதியை உலகெங்கும் வாழ்கின்ற தமிழீழ உறவுகள் ஓர் துயரநாளாகவும் தமிழீழ மண்ணை மீட்டெடுக்க வேண்டுமென உறுதியெடுக்கின்ற நாளாகவும் எழுச்சிப்பூர்வமாக நினைவுகூர்ந்து வருகின்றார்கள்.



லயன் எயார் விமானம் தொடர்பில் கிளம்பியது புதிய சந்தேகம் - சுட்டு வீழ்த்தப்பட்டதா? கடத்தப்பட்டதா என குழப்பம்!
[Monday, 2013-05-20 19:51:45]

இரணைதீவுக் கடலில் 1998ம் ஆண்டில் வீழ்ந்த லயன் எயர் விமானம், சுட்டு வீழ்த்தப்பட்டதா அல்லது கடத்தப்பட்டதா என்ற சந்தேகம், அதில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடம் எழுந்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது. இரணைதீவுக் கடலில் இந்த மாதம் 4ம் நாள் தீவிரவாத புலனாய்வுப் பிரிவின் வழிகாட்டலில், லயன் எயர் விமானத்தின் சிதைவுகளை சிறிலங்கா கடற்படையினர் மீட்டனர். கடலில் 25 அடி ஆழத்தில் இருந்த சுழியோடிகளால் விமானத்தின் இரண்டு இறக்கைகள், மூன்று சக்கரங்கள் உள்ளிட்ட பல பாகங்கள் மீட்கப்பட்டன. இரண்டு நாட்கள் நீடித்த இந்த மீட்புப் பணியின் போது, பெண் ஒருவரின் தேசிய அடையாள அட்டை, செயற்கைப் பல், மற்றும் மனித எலும்புகள் சிலவும் மீட்கப்பட்டதாக கூறப்பட்டது.



வேலைநிறுத்த போராட்டத்தின் போது ஏதாவது ஒரு காரியாலயம் மூடப்பட்டால் நான் பதவி துறப்பேன்: பிரதியமைச்சர்
[Monday, 2013-05-20 19:04:39]

மின்சார கட்டண அதிகரிப்பிற்கு எதிராக எதிர்க்கட்சிகளினால் முன்னெடுக்கப்படும் வேலைநிறுத்த போராட்டத்தின் போது ஏதாவது ஒரு காரியாலயம் மூடப்பட்டால் நான் பதவிதுறப்பேன் என்று பிரதியமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். அரசாங்க காரியாலயங்கள் அல்லது எந்தவொரு தனியார் காரியாலயமும் நாளை செவ்வாய்க்கிழமை மூடப்பட்டால் நான் பதவிதுறப்பேன். என்று பெருந்தோட்ட கைத்தொழில் பிரதியமைச்சர் ஏர்ல் குணசேகர தெரிவித்துள்ளார். கம்பளை ரத்னாசார விஹாரையில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு சவால் விடுத்தார்.



ஆட்கொணர்வு மனுவை மீளப்பெறுமாறு காணாமல்போனவர்களின் உறவினர்களுக்கு படையினர் அச்சுறுத்தல்!
[Monday, 2013-05-20 19:00:15]

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து, பின்னர் காணாமற்போனவர்கள் தொடர்பில் வவுனியா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை திரும்பப் பெறுமாறு மனுதாரர்களுக்கு இனந்தெரியாத நபர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகள் 2009 ம் ஆண்டு மே 18ம் திகதி இராணுவத்தினரின் அறிவித்தலுக்கு அமைய சரணடைந்திருந்தனர். இதன் பின்னர் சரணடைந்தவர்கள் அவர்களது உறவினர்களின் கண்ணெதிரே படையினரால் பஸ்களில் ஏற்றிச் செல்லப்பட்டனர். எனினும் அதன் பின்னர் அவர்களது நிலை என்னவென்று தெரியா நிலையில் அவர்களது உறவினர்கள் உள்ளனர்.



மக்கள் எழுச்சியைக் கண்டு ராஜபக்ஷ ரெஜிமென்ட் பயந்துவிட்டது - ரணில்!
[Monday, 2013-05-20 18:42:18]

ராஜபக்ஷ ரெஜிமென்ட் கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் எழுச்சியைக் கண்டு பயந்துள்ள நிலையில் நாளை இடம்பெறவுள்ள தேசிய தொழிற்சங்க போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,



காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் தற்போதைக்கு வழங்கப்படத் தேவையில்லை - டக்ளஸ்!
[Monday, 2013-05-20 18:27:33]

தற்போதைக்கு மாகாணசபைகளுக்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படத் தேவையில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வட மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படவுள்ள நிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஆங்கில ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின் இரண்டு பிரதான இன சமூகங்களுக்கு இடையில் சரியான புரிந்துணர்வு எட்டப்படும் வரையில் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்குவது தொடர்பிலான தீர்மானத்தை சற்றே ஒத்தி வைக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். வட மாகாணசபைக்கு காணி காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டால் சிங்கள மக்கள் அது குறித்து கவனம் செலுத்துவர், இந்த அதிகாரங்கள் வழங்கப்படாவிட்டால் தமிழ் மக்கள் அது குறித்து கவனம் செலுத்துவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



மீண்டும் த.தே.ம.மு உறுப்பினர்களை விசாரணைக்கு அழைத்தது குற்றத்தடுப்பு பொலிஸ்!
[Monday, 2013-05-20 18:17:34]

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் பொதுச் செயலாளர் உட் பட்ட 4பேர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் இன்று மீளவும் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பதாக கட்சியின் யாழ்.வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 18ம் திகதி மன்னாரில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு நாள் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த சமயம் முன்னணியின் பொதுச்செயலாளர் செ.கஜேந்திரன், சட்டத்தரணி வி.மணிவண்ணன் மற்றும் இளைஞரணி தலைவர் எஸ்.சத்தியசீலன் உட்பட 15பேர் கைதுசெய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் நள்ளிரவு விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் முன்னணியின் உபதலைவர் சி.கஜேந்திரகுமார், மற்றும் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ்.வசந்தரூபன் ஆகியோர் இன்று காலை 9மணிக்கு பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.



இராணுவத்தினால் காணி சுவீகரிப்பு - தடுக்குமாறு நாமல் எம்.பிக்கு கடிதம்!
[Monday, 2013-05-20 18:13:18]

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான காணியினை அரசாங்க அதிபர் குழுவினர் சுவீகரிக்க முயற்சிப்பதாகவும் இதனை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு, இலங்கை போக்குவரத்து சபை கிளிநொச்சிசாலை ஊழியர்கள் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 12 ஏக்கர் காணியில், முதற்கட்டமாக வனவள திணைக்களத்திற்கும், சிறுவர் பூங்காவிற்கும், இராணுவத்தினரின் புனித பூமிக்குமாக எமது காணி சுவீகரிக்கப்பட்டது.



வடக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியிடம் கோரவில்லை: தயா மாஸ்டர்
[Monday, 2013-05-20 17:51:40]

தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் எந்தவொரு கட்சியையும் அணுகவில்லை என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்குமாறு எந்தவொரு அரசியல் கட்சியிடமும் கோரவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் தேர்தலில் போட்டியிட தயா மாஸ்டர் சந்தர்ப்பம் கோரியதாகவும் அதனை நிராகரித்ததாகவும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தார். எனினும், இவ்வாறான எந்தவொரு கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



வவுனியாவில் 7 வயதுச் சிறுமி மீது பாலியல் வல்லுறவு - நீதி கோரி பாரிய ஆர்ப்பாட்டம்!Top News
[Monday, 2013-05-20 15:33:34]

வவுனியா நெடுங்கேணி சேனைப்பிலவில் 7 வயது சிறுமியொருவரைப் பாலியல் பலாத்காரம் செய்தவரை உடன் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனக்கோரி திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருக்கின்றது. சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் பேரில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு சிறுவர்களுக்கும் பெண்களுக்கும் எதிராக நடத்தப்படுகின்ற சித்திரவதைகள் வன்முறைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கின்றனர்.



பாராளுமன்றத்திற்கு செல்வது போன்று அடிக்கடி 4ம் மாடிக்கும் செல்கின்றோம் - அரியநேந்திரன் எம்.பி!
[Monday, 2013-05-20 15:21:41]

எப்போதும் தமிழ் மக்களுக்கு சுதந்திரமான அரசியல் தீர்வு விடுதலை கிடைக்கின்றதோ அது வரையும் எமது பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன் தெரிவித்தார். முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து பிரார்த்தனை செய்யும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கணடவாறு கூறினார். தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,



கோவையில் நடைபெற்ற மே 18 போர்க்குற்றநாள் நிகழ்வில் பெருமளவு ஈழ விடுதலை ஆதரவாளா்கள் பங்கேற்ப்பு. Top News
[Monday, 2013-05-20 10:26:35]

கோவையில் நேற்றையதினம் (18 05 2013) முள்ளிவாய்க்கால் இனப்படுகொல போர்க்குற்றநாள் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஏற்ப்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெருமளவான தமிழீழ விடுதலை ஆதரவாளா்களும் செயற்ப்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர்.



ஜனாதிபதி மஹிந்த சீனாவுக்கு ஆறாவது தடவையாக விஜயம்!
[Monday, 2013-05-20 09:16:57]

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வரும் புதன்கிழமை சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வரும் 22ம் நாள் தொடக்கம் 26ம் நாள் வரை சீனாவில் பயணம் மேற்கொள்ள ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார். எனினும் இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னமும் வெளியாகவில்லை. ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்ற பின்னர், சீனாவுக்கு மேற்கொள்ளவிருக்கும் ஆறாவது பயணம் இதுவாகும். அண்மையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர், சிறிலங்கா அதிபர் நடத்தவுள்ள முதல் சந்திப்பு இதுவாகும்.



கனடாவில் நாடு கடந்த தமிழீழ அரசின் சார்பில் நடைபெற்ற தமிழீழ தேசிய துக்க நாள் நிகழ்வு Top News
[Monday, 2013-05-20 09:15:07]

"ஈழத் தமிழ் மக்களுக்கான தீர்வு சுதந்திர இறைமை உடைய தமிழீழ அரசே"
- தமிழீழ சுதந்திர சாசன முரசறைவில் பிரதமர் உருத்திரகுமாரன் வலியுறுத்தினார்.

"தமிழீழ மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கி அமைய விருக்கும் தமிழீழ அரசு ஜனநாயக விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும். சுதந்திர இறைமை உடைய அரசே தமிழ் மக்களுக்கு அவசியம். மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளுக்கு சட்டமியற்றி, அதனை அமுல்படுத்தும் உரிமை இருக்கும். சட்டத்தின்முன் தமிழீழ மக்கள் அனைவருமே சரிசமமாக நடாத்தப்படுவார்கள். தமிழீழ அரசாங்கம் மதசார்பற்றதாக இருக்கும். தமிழ், முஸ்லீம் மக்களது தனித்துவம் பேணப்படும்.



கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையில் இம்மாத இறுதிக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம்: - சிவாஜிலிங்கம்
[Monday, 2013-05-20 09:12:26]

தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிக்களுக்கிடையில் இந்த மாத இறுதிக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும். இதற்கான முன்னேற்பாடுகள் இடம் பெற்று வருகின்றன. இதற்கான பொறுப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று ரெலோவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.



கனடாவின் நகர்வுகள் குறித்து உன்னிப்பாக கண்காணிக்கப்படும் என்கிறது இலங்கை அரசு!
[Monday, 2013-05-20 09:11:55]

கனடாவின் நகர்வுகள் தொடர்பில் உன்னிப்பாக கண்காணிக்கப்படும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை தடுத்து நிறுத்தும் நோக்கில் கனடா நடவடிக்கைகளை மேற்கொள்கின்றதா என்பது குறித்து கவனிக்கப்பட உள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகள் நடத்தப்படுவது குறித்து கனடாவும் பஹாமாஸூம் அண்மையில் நடாத்திய பேச்சுவார்த்தைகள் குறித்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. நாட்டின் உண்மையான நிலைமைகள் குறித்து அந்தந்த நாடுகளுக்கு தெளிவுபடுத்துமாறு வெளிநாடுகளுக்கான இலங்கைத் தூதுரக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.



அரசின் யுத்த வெற்றிவிழா ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் இரத்தக் கண்ணீரால் எழுதப்பட்ட ஒரு துக்க தினம். - ஜனா
[Monday, 2013-05-20 09:06:05]

யுத்த வெற்றிவிழா இலங்கை அரசைப் பொறுத்தவரை கொண்டாட்ட நிகழ்வாக இருக்கும். ஆனால் ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் இரத்தக் கண்ணீரால் எழுத்தப்பட்ட ஒரு துக்க தினம் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவிக்கிறார். யுத்த வெற்றிக் கொண்டாட்டம் நடைபெறுவது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.



இலங்கை நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து நோர்வே அரசு அதிர்ச்சி!
[Monday, 2013-05-20 08:52:13]

இலங்கை நீதிமன்றின் தீர்ப்புகள் தமக்கு அதிர்ச்சியளிப்பதாக நோர்வே அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கைக்கான நோர்வே தூதரக அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர முடியும் என கொழும்பு நீதிமன்றம் அண்மையில் அறிவித்திருந்தது. கொழும்பு மேலதிக நீதவான் அமாலி ரணவீர இந்த உத்தரவினை பிறப்பித்திருந்தார். முன்னணி தன்னார்வ தொண்டு நிறுவனமான சகவாழ்வு மன்றத்தின் தலைவர் குமார் ரூபசிங்கவினால் நோர்வே தூதரக அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. உறுதிமொழி அளிக்கப்பட்டதனைப் போன்று நிதி உதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நோர்வேயின் முன்னாள் தூதுவர் ஹில்டே ஹரால்ஸ்டட் மற்றும் இரண்டு அதிகாரிகள் 98.5 மில்லியன் ரூபாவினை வழங்கத் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.



பௌத்த பிக்குகள் பொறுமையுடனும், புத்திசாலித்தனமாகவும் செயற்பட வேண்டும் - பிரதமர்
[Monday, 2013-05-20 08:39:20]

பௌத்த பிக்குகள் மிகவும் பொறுமையுடன் செயற்பட வேண்டுமென பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார். சிலர் வேற்று மதங்களுடன் மோதல்களை ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர். இதனால் நாட்டின் பெரும்பான்மை இனத்திற்கு அதிக அழிவு ஏற்படும். இதனை பௌத்த மாநாயக்கத் தேரர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பௌத்த மதத் தலைவர்கள் பொறுமையுடனும், புத்திசாலித்தனமாகவும் செயற்பட வேண்டும். மக்களின் மனதுகளை வென்றெடுக்கக் கூடிய மதத் தலைவர்கள் இல்லையென்றால், எத்தனை பெரிய விஹாரைகள் அமைத்தாலும் அதில் பயன் கிடையாது என பிரதமர் தெரிவித்துள்ளார். களனியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


INNSYS-20120930
TDE_Computers2011
NIRO-DANCE-100213
Ramans2011
RoyaShades-l2011(04-12-11)
Mahesan supramaniyam 031109
Canada Kanthasamy Kovil
TamilsGuid-191012-2013
Suresh-remax-2013-01-01
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com