Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
June 18, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
வதந்தி தகவல்களை நீக்க ஃபேஸ்புக், கூகுள், டுவிட்டர் சம்மதம்!
[Thursday, 2012-08-23 06:58:24]
News Service

இந்திய அரசின் பரிந்துரையின்கீழ், வதந்தியைப் பரப்பும் தகவல்களை நீக்க சமூக இணையதளமான ஃபேஸ்புக், கூகுள், டுவிட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் சம்மதம் தெரிவித்துள்ளன."வன்முறைகளை உருவாக்கும் வகையில் செய்திகளை தொடர்ந்து பரப்புவோரின் அக்கவுண்ட் முடக்கப்படும்' என்றும் ஃபேஸ்புக் எச்சரித்துள்ளது.

  

அசாமில் நடந்த வன்முறையைத் தொடர்ந்து சென்னை மற்றும் பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் வாழும் வட கிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கப்படுவதாக இணையதளம் மற்றும் செல்போனில் வதந்திகள் பரவின. இதைத் தொடர்ந்து இதுபோன்ற வதந்திகளைப் பரப்பி வரும் 250-க்கும் மேற்பட்ட இணையதளங்களை அரசு தடை செய்தது. மேலும், ஃபேஸ்புக், கூகுள் மற்றும் டுவிட்டர் உள்ளிட்ட சமூக இணையதளங்களிடம் இதுபோன்ற வதந்திகளை தடை செய்ய வேண்டுமென்று இந்திய அரசு கேட்டுக் கொண்டது.

இது தொடர்பாக ஃபேஸ்புக் நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறியது: சமூக அமைதியைக் கெடுக்கும் விதத்திலான செய்திகள், படங்கள், பேச்சுகள் ஆகியன பதிவேற்றம் செய்யப்பட்டதெனில் அது நீக்கப்படும். இது தொடர்பாக ஏற்கெனவே பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியா மற்றும் அமெரிக்காவில் உள்ள ஃபேஸ்புக் ஊழியர்கள் வன்முறையைத் தூண்டக் கூடிய செய்திகள் பதிவேற்றம் செய்யப்படுகின்றனவா என்று 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

2010-ம் ஆண்டு லண்டனில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து ஃபேஸ்புக்கில் பரப்பும் விஷமமான செய்திகளை விழிப்புடன் ஃபேஸ்புக் நிறுவனம் கண்காணித்து வருகிறது. இந்த விஷயத்தில் இந்திய அரசுடன் இணைந்து ஃபேஸ்புக் நிறுவனம் செயல்படும் என்று தெரிவித்தார்.

இந்தியாவில் சுமார் 5 கோடி பேர் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துகின்றனர். யாரும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று ஃபேஸ்புக் பயன்படுத்துவோரை அந் நிறுவனம் கேட்டுக் கொண்டது.

இதேபோல் கூகுள், டுவிட்டர் ஆகிய இணைய தளங்களும் தங்கள் இணையதளங்களில் பரப்பப்படும் வன்முறைகளை உண்டாக்கும் வதந்திகளைத் தடுப்பதாக உத்தரவாதம் அளித்துள்ளன.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

இருகால்களும் செயலிழந்த பெண் கடலில் சுழியோடிச் சாதனை!
[Tuesday, 2013-06-18 07:34:15]

இரு கால்களையும் இழந்த பெண், சக்கர நாற்காலியை தானே வடிவமைத்து, அதன் மூலம் கடலில் சுழியோடி சாதனை படைத்துள்ளார். பிரிட்டனைச் சேர்ந்தவர், சூ ஆஸ்டின். 16 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட மர்ம காய்ச்சலால், இவரது இரு கால்களும் செயல் இழந்தன. எனினும், நம்பிக்கையை கை விடாத ஆஸ்டின், தான் கற்றிருந்த நீச்சல் மீது, அலாதியான காதல் கொண்டிருந்தார். இதனால், மீண்டும் முன் போலவே நீந்த வேண்டும் என, ஆசைப்பட்டார். இதையடுத்து, தனக்கு வேண்டிய சக்கர நாற்காலியை தானே, பிரத்யேகமான முறையில் வடிவமைத்தார். இதன் மூலம், மீண்டும் நீச்சல் பழகிய ஆஸ்டின், கடலிலும் நீந்தி சாதனை படைத்துள்ளார்.



சுமாத்ரா காட்டுத் தீயால் புகைமூட்டத்தில் சிக்கிய சிங்கப்பூர், மலேசியா - பாடசாலைகளுக்கு விடுமுறை!
[Tuesday, 2013-06-18 07:30:29]

சுமத்ரா காடுகளில் ஏற்பட்ட தீயால், சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் புகை சூழ்ந்துள்ளது. இதனால், பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின், சுமத்ரா தீவில் உள்ள காடுகளில், தீ பிடித்துள்ளது. இதனால், இரவு பகலாக காட்டு தீ எரிந்து கொண்டிருக்கிறது. இந்த தீயினால் ஏற்பட்ட புகை, சிங்கப்பூரை சூழ்ந்துள்ளது. இந்த புகை மண்டலம், மலேசியாவிலும் பரவி வருகிறது. கடும் புகை மண்டலத்தால், மக்கள் கண் எரிச்சல் மற்றும் நெஞ்செரிச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பலர் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு தயங்குகின்றனர். நேற்று பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. காட்டு தீ தொடர்ந்து எரிவதால் ஏற்படும் புகையினால், சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் போக்குவரத்து மற்றும் வர்த்தகம் பாதிக்கப்படும், என அஞ்சப்படுகிறது.



பாலியல் பலாத்காரம் செய்த தந்தையின் தலையை சீவியெறிந்தார் மகள்!
[Tuesday, 2013-06-18 07:25:10]

பப்புவா நியூ கினியா நாட்டை சேர்ந்த இளம் பெண், தன்னை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையின், தலையை துண்டித்துள்ளார். இந்தோனேசியாவுக்கு அருகில் உள்ள தீவு பப்புவா நியூ கினியா. இங்குள்ள ஒரு கிராமத்தில், மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் வெளியே சென்றிருந்த நேரத்தில், தனது மூத்த மகளை, தந்தை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். மீண்டும் இந்த முயற்சியில் ஈடுபட முயன்ற தந்தையின் தலையை, 18 வயது மகள், அரிவாளால் வெட்டினார். இதில் தந்தை பலியானார். இந்த சம்பவத்தை அறிந்த போலீசார், இளம் பெண்ணை கைது செய்ய முயன்றனர்.ஆனால், கொடுர தந்தையை தீர்த்து கட்டிய மகளை கைது செய்ய, அந்த கிராமத்தினர் அனுமதி மறுத்து விட்டனர். கிராம பெரியவர்களும், பாதிரியாரும் கேட்டு கொண்டதற்கிணங்க, அந்த பெண் கைது செய்யப்படவில்லை.



உலகின் அதிவேக கணினியைக் கண்டுபிடித்து சாதனை படைத்தது சீனா!
[Tuesday, 2013-06-18 07:23:05]

உலகின் அதிவேக கணினியைக் கண்டுபிடித்து சீனா சாதனை படைத்துள்ளது. சீனாவின் பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் அரிய முயற்சியில் டியானே-2 என்ற அதிவேக கணினி கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கம்ப்யூட்டர் விநாடிக்கு 54.9 குவாடிரில்லியன் வேகத்தில் செயல்படும் ஆற்றல் கொண்டது என சீனாவின் தேசிய தொழில்நுட்பப் பாதுகாப்புப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஜூன் 2011 வரை சீனாவின் டியானே-1ஏ கணினி அதிவேக ஆற்றல் கொண்டதாக வளங்கியது. அதையடுத்து கண்டுபிடிக்கப்பட்ட ஜப்பானின் கே கணினி அதிவேக ஆற்றல் கொண்டதாக இருந்தது.



ஜி-20 மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களை உளவு பார்த்தது பிரிட்டன்! - முன்னாள் சிஐஏ பணியாளர் பரபரப்புத் தகவல்.
[Tuesday, 2013-06-18 07:15:03]

பிரிட்டனில் 2009-ம் ஆண்டு நடைபெற்ற ஜி20 மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களின் செயல்பாடுகளை பிரிட்டன் உளவுத்துறை ரகசியமாக கண்காணித்துள்ளது இப்போது தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் ரகசிய உளவு வேலைகள் குறித்த தகவல்களை வெளியிட்ட அமெரிக்க உளவு அமைப்பான் சிஐஏவின் முன்னாள் பணியாளர் எட்வர்ட் ஸ்னோடென் இத்தகவலையும் தெரிவித்துள்ளார்.அம்மாநாட்டில் பங்கேற்ற அப்போதைய ரஷிய அதிபர் திமித்ரி மெத்வதேவ், மாஸ்கோவில் உள்ள தலைவர்களுடன் செயற்கைக்கோள் தொலைபேசியில் பேசியதை இடைமறித்துக் கேட்க அமெரிக்க உளவுத் துறையும் முயற்சி மேற்கொண்டுள்ளது.



நடுவானில் இயந்திரக் கோளாறு - முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ் சென்ற விமானம் அவசரமாகத் தரையிறக்கம்!
[Monday, 2013-06-17 18:20:29]

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் பிலடெல்பியாவில் இருந்து டல்லாஸ் நகருக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார். நடுவானில் சென்றபோது விமானத்தின் என்ஜினில் இருந்து வித்தியாசமான நெடி வீசியது. இதனால் என்ஜினில் கோளாறு ஏற்பட்டிருக்கும் என சந்தேகம் அடைந்த விமானி இதுகுறித்து விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். அதை தொடர்ந்து கென்டக்கியில் உள்ள லூயிஸ்வில்லே விமான நிலையத்தில் உடனே தரை இறக்கும்படி உத்தரவிடப்பட்டது. அதை தொடர்ந்து புஷ் பயணம் செய்த விமானம் அங்கு அவசரமாக தரை இறக்கப்பட்டது. இதனால் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.



ஊழல், அவதூறு குற்றச்சாட்டுகளால் பதவி விலகினார் செக் பிரதமர்!
[Monday, 2013-06-17 18:11:24]

உறவினர் ஒருவரின் ஊழல் மற்றும் அவதூறு மோசடிகளால் எழுந்த பிரச்சினைகளில் செக் குடியரசு பிரதமர் பெடர் நேகாஸ் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அந்நாட்டு அரசியல் அமைப்பின்படி, அரசின் அனைத்து அமைச்சர்களும் பதவி இழக்கக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.மாற்று அரசு அமைப்பதில் ஆளும் கட்சி, எதிர்க் கட்சி மற்றும் அந்நாட்டு அதிபர் ஆகியோரிடையே குதிரை பேரத்திற்கும் இது வழிவகுக்கும். பிரதமரின் உறவினரும், அவரது அலுவலக நிர்வாகியுமான ஜனா நக்யோவா பாராளுமன்ற உறுப்பினர்களிடையே பணத்தைப் பெற்றுக்கொண்டு மக்களிடையே உளவு பார்க்கும் வேளையில் ஈடுபட்டிருந்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.



வைர மோதிரத்தை திருடிவிட்டார் ரஷ்ய அதிபர் புதின் - அமெரிக்க தொழிலதிபரின் குற்றச்சாட்டினால் பரபரப்பு!
[Monday, 2013-06-17 18:05:15]

அமெரிக்காவின் நியூ இங்கிலாந்தில் உள்ள பாட்ரியாட்ஸ் அமெரிக்கன் கால் பந்து அணியின் உரிமையாளர் ராபர்ட் கிராப்ட் (72). இவர் அமெரிக்காவில் விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் மிகப்பெரிய தொழில் அதிபர் ஆவார். இவர் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மீது திடுக்கிடும் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். கடந்த 2005-ம் ஆண்டில் செயின்ட் பீட்டர்ஸ் பர்க்கில் நடந்த விழாவில் புதின் கலந்து கொண்டார். அதில் நானும் பங்கேற்றேன். அப்போது நான் அணிந்திருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள வைர மோதிரத்தை கழற்றி நான் அவரிடம் காட்டினேன்.



ஜப்பானிய விஞ்ஞானி தயாரித்துள்ள மனித வடிவிலான புதிய ரோபோ!
[Monday, 2013-06-17 17:59:57]

எந்திரன் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னைப்போன்று உருவமுள்ள எந்திர மனிதனை தயாரித்து இருப்பார். அது மனிதர்களை போன்றே சாகச நிகழ்ச்சிகளை மேற்கொள்ளும். அதுபோன்று புதுவிதமான மனித வடிவிலான ரோபோவை ஜப்பான் விஞ்ஞானி தயாரித்துள்ளார். அவரது பெயர் ஹிரோஷி இஷிகுரோ. இவர் ஒசாகா பல்கலைக்கழகத்தில் இன்டலி ஜென்ட் ரொபாடிக் ஆய்வக இயக்குனராக உள்ளார். இவர் தான் உருவாக்கியுள்ள எந்திர மனிதனை ஆண் போன்றும், பெண் போன்றும் உருவ மாற்றம் செய்யும் வகையில் வடிவமைத்துள்ளார்.



15ம் மாடியில் இருந்து விழுந்தவர் உயிர் தப்பிய அதிசயம்!
[Monday, 2013-06-17 17:54:51]

நியூசிலாந்தில் பிரிட்டனை சேர்ந்த டாம் ஸ்டில்வெல் (20) என்பவர் நேற்று அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 15 மாடியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் வேலைபார்த்த வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டனர். இதனையடுத்து அவர் பக்கத்து வீட்டின் பால்கனி வழியாக அருகில் உள்ள கட்டிடத்தில் குதித்து கீழே இறங்க முயற்சி செய்து இருக்கிறார். ஆனால், 15-வது மாடியிலிருந்து குதித்த அவர் எதிர்பாராதவிதமாக தரையில் விழுந்தார். அதிக உயரத்தில் இருந்து கீழே விழுந்த அவருக்கு தோள்பட்டை, முதுகு, மணிகட்டுகளில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உள்காயங்களும் ஏற்பட்டன.



நெல்சன் மண்டேலா உடல்நிலையில் முன்னேற்றம்!
[Monday, 2013-06-17 07:23:45]

தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா (வயது 94) சில நாட்களாக நுரையீரல் தொற்று நோயால் அவதிப்பட்டு வருகிறார். கடந்த 8-ந் தேதி அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது. இதைத்தொடர்ந்து அவர் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள பிரிடோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த நிலையில் அவரது உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு அதிபர் ஜேக்கப் ஜுமா நேற்று தெரிவித்தார்.



அணுஉலைத் தொழில்நுட்பத்தை வேறு நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள ஜப்பானியர்கள் எதிர்ப்பு!
[Monday, 2013-06-17 07:17:43]

ஜப்பானின் அணு உலை தொழில்நுட்பம், தொழில் நுட்பக் கலைஞர்கள் போன்ற ஒத்துழைப்பை உலக நாடுகளுக்கு வழங்குவது என பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹாலண்டேவுடனான ஒப்பந்தத்தில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உறுதி அளித்திருந்தார்.பிரதமரின் இந்த முடிவுக்கு மக்களின் கருத்து எப்படி இருக்கிறது என்பதை அறிய சமீபத்தில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.இந்த கருத்துக்கணிப்பில் சுமார் 60 சதவீதம் ஜப்பானிய மக்கள் பிரதமரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வெறும் 24சதவீதம் பேர் மட்டுமே இதனை வரவேற்றுள்ளனர்.



கறையான் அரித்துத் தின்ற 4 இலட்சம் யுவான் நோட்டுகள்!
[Monday, 2013-06-17 07:15:06]

சீனாவின் குவாங்டாங் மாகாணம் ஷுண்டே பகுதியில் வசிக்கும் பெண்ணுக்கு அவரது பிள்ளைகள் 6 மாதங்களுக்கு முன் 4 லட்சம் யுவான் அளித்தார்கள். அந்த பணத்தை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு, மர டிராயரில் வைத்தார். பின்னர், அது பற்றி அவர் மறந்தே போனார். 6 மாதங்கள் கழித்து வீட்டில் சில பராமரிப்பு பணிகளை செய்வதற்காக அந்த பணத்தை எடுக்க முயற்சி செய்தபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. எல்லா கரன்சி நோட்டுகளையும் கறையான்கள் அரித்திருந்தன. கறையான் தின்றது போக எஞ்சிய, துண்டு துண்டாக கிடந்த கரன்சி நோட்டுகளை வங்கி ஊழியர்கள் ஒன்று சேர்த்தனர். கிழிந்து போன அந்த கரன்சிக்கு பதிலாக ரூ.31.89 லட்சத்தை கொடுத்தனர்.



அமெரிக்காவுடன் நேரடியாகப் பேச வடகொரியா விருப்பம்!
[Monday, 2013-06-17 07:06:49]

அமெரிக்காவுடன் பேச்சு நடத்த வடகொரியா விருப்பம் தெரிவித்துள்ளது. அணு சக்தி மறறும் பாதுகாப்பு தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சு நடத்த விரும்புவதாக வடகொரியாவின் தேசிய பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இருதரப்பிலும் பேச்சு நடத்தினால் கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றம் தணியும் என்றும், பிராந்திய அளவிலான பாதுகாப்பு மேம்படும் என்றும் வடகொரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தென்கொரியாவுடன் வடகொரியா பேச்சுவார்த்தைக் கூட்டத்தை நடத்தியது. இதில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



பிரமாண்ட விண்வெளி ஓடம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது!
[Monday, 2013-06-17 07:01:49]

ஐரோப்பிய விண்வெளி அமைப்பு உருவாக்கிய பிரமாண்டமான விண்வெளி ஓடம், சர்வதேச விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைந்தது. சர்வதேச விண்வெளி நிலையத்துக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிக் கொண்டு, ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் என்ற விண்வெளி ஓடம் சமீபத்தில் பூமியில் இருந்து புறப்பட்டது. இது சனிக்கிழமை விண்வெளி நிலையத்தை எட்டி, அதனுடன் இணைந்தது. இத்தகவலை ஐரோப்பிய விண்வெளி அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.



ஈராக்கில் தொடர் கார் குண்டுவெடிப்புகளில் 32 பேர் பலி!
[Sunday, 2013-06-16 20:22:39]

ஈராக்கின் தெற்குப் பகுதியில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்புகளில் 32 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பாக்தாத்தின் தெற்குப் பகுதியில் உள்ள 5 நகரங்களில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் இன்று நடந்தது. வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட 7 வாகனங்களை வெடிக்க வைத்து பயங்கரவாதிகள் இத்தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இத்தாக்குதலுக்கு எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், அல்-காய்தா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய சன்னி பிரிவு பயங்கரவாதிகள், ஷியா பிரிவினரை குறிவைத்து இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.



ஆசிரியையின் லேப்-டாப்பில் ஆபாசப்படம் - சமூக வலைத்தளத்தில் பதிவேற்றினர் 8ம் வகுப்பு மாணவர்கள்!
[Sunday, 2013-06-16 20:17:52]

ரஷ்யாவில், ஆசிரியையின், லேப்-டாப்பில் இருந்து, கேள்வித் தாளை திருட முயன்ற பள்ளி மாணவர்கள், அவரின் ஆபாச படத்தை பார்த்து, அதிர்ச்சி அடைந்தனர். ரஷ்யாவில், பள்ளி ஆசிரியையாக உள்ளவர், நதாலியா மால்கோவா, 34. இவர், தன் ஆண் நண்பரின் லேப்-டாப்பை பயன்படுத்தி வந்தார். இதனிடையே, வகுப்பு நேரத்தில் லேப்-டாப்பை, வகுப்பறையில் வைத்துவிட்டு, கழிப்பறைக்கு சென்றார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அவரது வகுப்பு மாணவர்கள், நதாலியாவின் லேப்-டாப்பில், தேர்வுக்கான வினாத்தாள் இருக்கும் என நினைத்து, சோதனையிட்டனர்.



குண்டு மிரட்டலால் எகிப்து விமானம் பிரிட்டனில் அவசரமாகத் தரையிறக்கம்!
[Sunday, 2013-06-16 19:54:29]

எகிப்து தலைநகர் கெய்ரோவில் இருந்து 300 பயணிகளுடன் நியூயார்க் சென்ற விமானம் வெடிகுண்டு மிரட்டலால் அவசரமாக தரையிறங்கியது. அந்த விமானத்தை தகர்க்கப் போவதாக எழுதப்பட்ட மிரட்டல் கடிதத்தை விமானத்தினுள் ஓர் பயணி கண்டெடுத்தார். உடனடியாக இந்த தகவல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, எகிப்து விமானத்தின் பாதுகாப்பிற்காக பிரிட்டன் விமானப்படை விமானங்கள் விரைந்து வந்தன.



துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் ஆபத்தான நிலையில்!
[Sunday, 2013-06-16 19:47:29]

மலேசியாவின் ஆளுங்கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்று, மலேசியா இந்திய காங்கிரஸ் கட்சி. 1946ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கட்சியை சேர்ந்த தலைவர்களில் ஒருவரான மாணிக்கம் என்பவரை கடந்த வியாழக்கிழமை யாங் பெங்கில் உள்ள அவரது வீட்டின் அருகில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். பட்டு பாகட் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மாணிக்கம் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அண்மைக்காலமாக மலேசியாவில் தமிழர்கள் பலர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



1200 ஆண்டுகளுக்கு முந்திய மகேந்திர பர்வத நகரம் கம்போடியாவில் கண்டுபிடிப்பு! Top News
[Sunday, 2013-06-16 08:57:07]

கம்போடியாவில் 1200 ஆண்டுகளுக்கு முன் இருந்த "மகேந்திர பர்வதம்' என்ற நகரத்தை சர்வதேச தொல்லியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். லண்டனைச் சேர்ந்த தொல்லியல் வளர்ச்சி அறக்கட்டளையின் இயக்குநர் ஜீன் பாப்டிஸ்ட் செவான்ஸ் தலைமையில் சர்வதேச நிபுணர்கள் குழு கம்போடியாவில் ஆய்வில் ஈடுபட்டது. இந்தக் குழுவினர் உலகிலேயே மிகப்பெரிய இந்து கோவில் வளாகம் அமைந்துள்ள கம்போடியாவின் அங்கோர்வாட்டுக்கு 40 கி.மீ. தொலைவில் உள்ள நாம் குலேன் மலைப்பகுதியில் தீவிர ஆராய்ச்சி நடத்தினர்.


NIRO-DANCE-100213
INNSYS-20120930
Mahesan supramaniyam 031109
TDE_Computers2011
RoyaShades-l2011(04-12-11)
Ramans2011
AJRwindows22.05.13
Suresh-remax-2013-01-01
TamilsGuid-191012-2013
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com