Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
June 18, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
பூந்தமல்லி முகாமை முற்றுகையிட முயன்ற வைகோ உள்ளிட்ட 500 பேர் கைது! Top News Top News
[Tuesday, 2012-08-21 18:40:00]
News Service

செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி உள்பட அனைத்து முகாம்களிலும் உள்ள இலங்கை தமிழர்களை விடுதலை செய்யக் கோரி முற்றுகைப் போராட்டம் நடத்த முயனற் வைகோ உள்ளிட்ட 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  

பூந்தமல்லி முகாமில் செந்தூரன் கடந்த 6-ந்தேதி முதல் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.அவரது உயிரை காப்பாற்றக்கோரியும், முகாம்களில் இருக்கும் இலங்கை தமிழர்களை விடுதலை செய்யக் கோரியும் ம.தி.மு.க. சார்பில் இன்று காலை முற்றுகை போராட்டம் நடந்தது. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இதில் கலந்து கொள்வதற்காக குமணன் சாவடி வந்தார்.

போராட்டத்தை விளக்கி வைகோ பேசினார். அங்கு நடந்த ஆர்ப்பாட்டத்தில் ராஜபக்சேவை கண்டித்தும், அகதிகள் முகாமை மூட வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். தொண்டர்கள் மத்தியில் வைகோ பேசினார். அவர் கூறியதாவது:-

பூந்தமல்லி அகதி முகாமில் செந்தூரன் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரது உயிரை காப்பாற்ற வேண்டும். அவரை கடந்த வருடம் ஜுன் மாதம் 18-ந்தேதி உரிய ஆவணம் இல்லாமல் வந்ததாக செங்கல்பட்டு முகாமில் அடைத்தனர். பின்னர் கேரள அரசிடம் ஒப்படைக்கப்பட்டார். அங்கு 2 மாதம் ஜெயிலில் இருந்தார். அவர் மீது ஆஸ்திரேலியாவுக்கு தப்ப முயன்றதாக அங்கு வழக்கு போடப்பட்டது. ஆனால் அங்குள்ள கோர்ட்டு அவரை விடுதலை செய்தது.

ஆனால் தமிழக போலீசார் செந்தூரனை கேரள போலீசார் உதவியுடன் கைது செய்து செங்கல்பட்டு முகாமில் அடைத்தது. அங்கு அவர் தன்னை விடுதலை செய்யக்கோரி சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கினார். அதிகாரிகளும், கியூ பிரிவு போலீசாரும் உத்தரவாதம் அளித்ததால் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார். ஆனால் சொன்னபடி அதிகாரிகள் நடந்து கொள்ளவில்லை.

இதற்கிடையே செந்தூரன் உள்பட 5 பேரை பூந்தமல்லி முகாமுக்கு மாற்றி விட்டனர். இங்கு அவர் 6-ந்தேதி முதல் உண்ணாவிரதத்தை தொடங்கினார். அவரது உயிரை காப்பாற்ற வேண்டும், அகதி முகாம்களை மூட வேண்டும். இதற்காக போராட்டத்தில் ஈடுபடுகிறோம்.இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் பூந்தமல்லி முகாம் நோக்கி முற்றுகை போராட்டம் நடத்துவதற்காக வைகோ தொண்டர்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு சென்றார். அவர் மேடையில் இருந்து இறங்கியதும் அங்கு தயாராக இருந்த போலீசார் வைகோ வையும், நிர்வாகிகளையும் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர்.

இந்த போராட்டத்தில் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட செயலாளர்கள் செங்குட்டுவன், பாலவாக்கம் சோமு, வேளச்சேரி மணிமாறன், இளைஞர் அணி துணை செயலாளர் பூவை கந்தன், நகர செயலாளர் சங்கர் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதற்கிடையே வைகோ கைது செய்யப்பட்டதை கண்டித்து தொண்டர்கள் பூந்தமல்லி- ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. இருபுறமும் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டன.போலீசார் அவற்றை வேறு பாதையில் திருப்பி விட்டனர்.

மறியலின்போது பூந்த மல்லி புதுச்சத்திரத்தைச் சேர்ந்த ம.தி.மு.க. கிளை செயலாளர் செல்லக்கனி உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் காப்பாற்றி கைது செய்தனர்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

வெள்ளத்தில் சிக்கிய இமாச்சல பிரதேச முதல்வர் 60 மணிநேரப் போராட்டத்தின் பின்னர் ஹெலி மூலம் மீட்பு!
[Tuesday, 2013-06-18 19:01:41]

வெள்ளத்தில் சிக்கிய இமாச்சல பிரதேச மாநில முதல்வர் வீரபத்திரசிங் 60 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டார். இவருடன் தவித்த 10 பேரும் பத்திரமாக மீட்டு கொண்டு வரப்பட்டனர். வட மாநிலங்களில் தற்போது பருவ மழை வெளுத்து வாங்கி வருகிறது. பஞ்சாப், அரியானா, குஜராத், உத்தர்கண்ட், டில்லி, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் கடும் மழை பெய்தது. இதில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 60 க்கும் மேற்பட்டோர் பலியாயினர். தொடர்ந்து இங்கு மீட்பு பணிகள் நடந்து வருகிறது. கங்கை, யமுனா நதியில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.



வெலிங்டன் இராணுவ முகாமை முற்றுகையிட்ட 400 பேர் கைது!
[Tuesday, 2013-06-18 18:56:45]

ஊட்டி வெலிங்டன் ராணுவ முகாமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய 15க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 400 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சட்டக்கல்லூரி மற்றும் கல்லூரி மாணவிகள் 15 பேரும் அடங்குவர்.இந்நிலையில், இதன் அடுத்தக் கட்டப் போராட்டம் குறித்து அனைத்துக் கட்சிக் குழுவுடன் கூடி விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இது குறித்து, பெரியார் தி.க.வின் ராமகிருஷ்ணன் கூறுகையில்,காங்கிரஸ் கட்சி அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்.



இறந்துபோன அர்ச்சகர் மறுநாள் உயிருடன் எழுந்தார் - இராமநாதபுரத்தில் பரபரப்பு!
[Tuesday, 2013-06-18 18:42:29]

ராமநாதபுரம் அருகே இறந்து போனதாகக் கருதப்பட்ட ஒருவர் உயிர் பிழைத்து மீண்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் சிருங்கேரி சங்கரமடம் வடக்கு தெருவில் வசித்து வருபவர் ரமணா ஐயர் என்பவரின் மகன் ரவி சாஸ்திரி(45).இவர், தேவிப்பட்டனம் திலகேஸ்வர சுவாமி கோயிலில் அர்ச்சகராக உள்ளார். கடந்த 13 ம் தேதி இதயக் கோளாறு காரணமாக இவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். இந்நிலையில் இதயக் கோளாறு காரணமாக 16ம் தேதி உயிரிழந்தார் என்று அறிவிக்கப்பட்டது.



காங்கிரசின் ஆதரவை நாடுகிறது தேமுதிக - எம்எல்ஏக்களை ஞானதேசிகனிடம் தூது அனுப்பினார் விஜயகாந்த்!
[Tuesday, 2013-06-18 18:38:18]

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வருகிற 27 ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேமுதிக சார்பில் ஏ.ஆர் இளங்கோவன் வேட்பாளராக நிறூத்தப்பட்டுள்ளார்.இந் நிலையில் இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனை சத்தியமூர்த்தி பவனில் தே.மு.தி.கவை சேர்ந்த அனகை முருகேசன், பாஸ்கர், அருண் சுப்பிரமணியன், முத்துக்குமார், மனோகர் ஆகிய 5 எம்.எல்.ஏக்கள் சந்தித்து மாநிலங்கள தேர்தலில் தங்கள் வேட்பாளருக்கு ஆதரவு தரும்படி கோரிக்கை வைத்தனர்.அவர்களிடம் மேலிடத்தில் கேட்டு முடிவைத் தெரிவி்ப்பதாக ஞானதேசிகன் கூறி உள்ளதாக கூறப்பட்டுகிறது.



சஞ்சய் தத் ஒருமாத சிறைவாசம் நிறைவு - இனிமேல் தான் உண்மையான சோதனை!
[Tuesday, 2013-06-18 18:36:52]

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், சிறையில் அடைக்கப்பட்டு, ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, கோர்ட் உத்தரவின் படி, இனி அவருக்கு வீட்டிலிருந்து உணவு, மின் விசிறி, படுக்கை ஆகியவை வழங்கப்பட மாட்டாது. மாதம் ஒரு முறை அவரது உறவினர்கள் மட்டுமே அவரை சிறையில் சந்திக்க முடியும்.மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களின் போது, ஆயுதம் வைத்திருந்த குற்றத்திற்காக, நடிகர் சஞ்சய் தத்துக்கு, ஐந்தாண்டு சிறை தண்டனை வழங்கி, மும்பை, "தடா' கோர்ட் தீர்ப்பளித்தது. ஏற்கனவே, ஒன்றரை ஆண்டு சிறை வாசத்தை முடித்து விட்டதால், கடந்த மாதம் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட சஞ்சய், மேலும், மூன்றரை ஆண்டு சிறையில் இருக்க கட்டாயம் ஏற்பட்டுள்ளது.



இலங்கை தமிழர்கள் அமைதியாக வாழ்வதற்கு அனைத்து முயற்சிகளையும் இந்தியா மேற்கொள்கிறது! - கருணாநிதிக்கு மன்மோகன் கடிதம்
[Tuesday, 2013-06-18 07:09:19]

இலங்கை தமிழர்கள் அமைதியாக வாழ்வதற்கான வழிவகைகள் காணப்படும். இந்த இலக்கை அடைவதற்கான எல்லா முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம் என்று திமுக தலைவர் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.இலங்கை தமிழர்களின் உரிமைகள், வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் விஷயத்தில் தலையிட வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு அதிகாரத்தை பெற்றுத்தரும் 13வது அரசியல் சட்ட திருத்தத்தை ரத்து செய்யும் முயற்சியை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு திமுக தலைவர் கருணாநிதி கடந்த 9ம் தேதி எழுதிய கடிதத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதற்கு பிரதமர் மன்மோகன் சிங் பதில் அனுப்பியுள்ளார்.



சுதர்சன நாச்சியப்பன் உள்ளிட்ட 8 பேருக்கு மத்திய அமைச்சர் பதவி!
[Tuesday, 2013-06-18 07:01:22]

மத்திய அமைச்சரவை நேற்று மாற்றியமைக்கப்பட்டது. புதிதாக 8 அமைச்சர்கள் பதவியேற்றனர். தமிழகத்தை சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன் இணை அமைச்சரானார். ஜனாதிபதி மாளிகையில் நேற்று மாலையில் நடந்த நிகழ்ச்சியில் ஆஸ்கர் பெர்னாண்டஸ், கிரிஜா வியாஸ், தமிழகத்தை சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன் உட்பட 8 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.புதிய அமைச்சர்களில் ஆஸ்கர் பெர்னாண்டஸ், கிரிஜா வியாஸ், சிஸ்ராம் ஓலா, கே.எஸ்.ராவ் ஆகியோர் கேபினட் அமைச்சர்கள். சுதர்சன நாச்சியப்பன், ஜே.டி. சீலம், மாணிக்ராவ் காவிட், சந்தோஷ் சவுத்ரி ஆகியோர் இணை அமைச்சர்கள்.



இலங்கைப் படையினருக்கு பயிற்சி அளிப்பதற்கு எதிராக இன்று போராட்டம் - வெலிங்டனில் இராணுவத்தினர், பொலிசார் குவிப்பு!
[Tuesday, 2013-06-18 06:56:58]

இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதை எதிர்த்து குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமை பல்வேறு அரசியல் கட்சிகள் இன்று முற்றுகையிடப்போவதாக அறிவித்துள்ளன. இதையடுத்து, ராணுவம் மற்றும் போலீசாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த வெலிங்டன் கன்டோன்மென்ட் பகுதியில் ராணுவ முகாம், ராணுவ பயிற்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் கடந்த 27ம் தேதி முதல் இலங்கை ராணுவ அதிகாரிகள் விங் கமாண்டர் எம்.எஸ். பண்டார தசநாயக, மேஜர் சி.எஸ்.ஹரிஷ்சந்திரா ஹெட்டியராச்சிகே ஆகியோருக்கு இந்திய ராணுவத்தினர் பயிற்சி அளித்து வருகின்றனர்.



வற்றிய மேட்டூர் அணைக்குள் தெரியும் கோவிலுக்குள் புராதன காலப் புதையல்?
[Tuesday, 2013-06-18 06:51:04]

மேட்டூர் அணை கட்டப்பட்ட போது மேச்சேரி அருகே இருந்த சோழப்பாடி வீரபத்திரன் கோயில் நீரில் மூழ்கியது. இதனால் அப்பகுதியில் வசித்த மக்கள், அங்கிருந்த கோயில் சிலைகளை எடுத்து சென்று, தற்போது தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சோழப்பாடியில் வைத்து புதிய கோயில்களை கட்டினர். மேட்டூர் நீர்தேக்கம் தற்போது வறண்டுள்ள நிலையில், கடந்த 80 ஆண்டுகளாக நீரில் மூழ்கியிருந்த இந்த கோயில் வெளியே தெரிகிறது. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயில் சுட்ட செங்கற்கள் மற்றும் சுண்ணாம்பு கலவையால், நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் முன் மண்டபம், நுழைவு வாயில், உள் மண்டபம், மூலஸ்தானம் ஆகிய நான்கு நிலைகளோடு அமைக்கப்பட்டுள்ளது.



சர்ச்சையில் சிக்கினார் ஷாருக்கான் - குழந்தையின் பாலினத்தை சட்டவிரோதமாக அறிந்தாரா?
[Tuesday, 2013-06-18 06:44:03]

பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மீது, மகாராஷ்டிரா மாநில கதிரியக்கவியல் நிபுணர்கள் சங்கத்தின் சார்பில், மாநில சுகாதாரத் துறை அமைச்சரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான், அண்மையில், தான் மூன்றுவது முறையாக தந்தையாகப் போவதாகக் கூறி, மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். ஷாருக் கான் மற்றும் அவரது மனைவி கவுரி ஆகியோர், வாடகைத் தாய் உதவியுடன், தங்களின் மூன்றாவது குழந்தையை பெற்றெடுக்கப் போவதாக, ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. அந்தக் குழந்தை, ஜூலை மாதம், முதல் வாரத்தில் பிறக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. அப்போது, தான் ஒரு ஆண் குழந்தைக்கு தந்தை ஆகப் போவதாக ஷாருக் கான், தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.



சுதர்சன நாச்சியப்பனுக்கும் அமைச்சர் பதவி?
[Monday, 2013-06-17 17:42:18]

மத்திய மந்திரிசபை மாற்றம் இன்றுமாலை நடைபெற உள்ளது.ரெயில்வே, நெடுஞ்சாலை, வீட்டுவசதி, ஊரக மேம்பாடு ஆகிய இலாகாக்களுக்கு புதிய மந்திரிகள் இன்று பொறுப்பு ஏற்க உள்ளனர். சிலரது இலாகா மாற்றம் செய்யப்பட உள்ளது. 10 முதல் 12 பேர் மத்திய மந்திரி சபையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் 8 பேர் புதுமுகங்கள். சிஸ்ராம்ஓலா, ஜெ.டி. சீலம், சுதர்சன நாச்சியப்பன், சந்தோஷ் சவுத்திரி ஆகியோரும் மந்திரி சபையில் சேர்த்துக் கொள்ளப்பட உள்ளனர்.



உத்தர்கண்ட் மாநிலத்தில் பெருவெள்ளத்துக்கு 60 பேர் பலி - ஹர்பஜன்சிங் உள்ளிட்ட 30 ஆயிரம் யாத்திரீகர்களும் சிக்கினர்!
[Monday, 2013-06-17 17:34:32]

உத்தர்கண்ட் மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 60 பேர் பலியாகிருப்பதாக அஞ்சப்படுகிறது. மேலும் பலர் தங்களின் வீடுகளை இழந்தும், யாத்திரையாக சென்ற பக்தர்கள் பலர் தங்கள் ஊருக்கு திரும்ப முடியாமல் 30 ஆயிரம் பேர் ஆங்காங்கே தவித்தும் வருகின்றனர். இந்த யாத்ரீகர்களில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் உள்ளார். இவர்கள் கடந்த 2 நாட்களாக உணவு, குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர்.இவர்களை மீட்கும் பணிக்கு பாதுகாப்பு மற்றும் ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.



மாநிலங்களவைத் தேர்தலில் டி.ராஜாவுக்கு அதிமுக திடீர் ஆதரவு!
[Monday, 2013-06-17 17:27:27]

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் இந்தியக் கம்யூனிஸ்ட் வேட்பாளர் டி.ராஜாவுக்கு அதிமுக ஆதரவு அளிப்பதை அடுத்து, தங்கள் தரப்பில் இருந்து ஒரு வேட்பாளரை வாபஸ் பெற அதிமுக முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிபிஐ தேசியச் செயலர் டி.ராஜாவுக்கு அதிமுக ஆதரவு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும், டி.ராஜா உள்ளிட்டோர் இன்று காலை முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து பேசியபிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இதனிடையே அதிமுகவின் ஐந்தாவது வேட்பாளராக கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்ட தங்கமுத்து தனது வேட்பு மனுவை வாபஸ் பெறுவார் என்று கூறப்படுகிறது.



இலங்கைக் கடற்படையின் தாக்குதல்கள் - மீண்டும் மன்மோகனுக்கு கடிதம் அனுப்பினார் ஜெயலலிதா!
[Monday, 2013-06-17 17:20:13]

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தி வரும் தாக்குதல் மற்றும் அவ்வப்போது சிறை பிடித்துச் செல்லும் சம்பவங்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து இன்று அவர் எழுதியுள்ள கடிதத்தில், இந்திய கடல் பகுதிதயில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், கைது செய்து சிறை வைப்பதும் தொடர்கதையாகி வருகிறது.



தமிழக அமைச்சர்கள் இருவர் அதிரடியாக பதவிநீக்கம்!
[Monday, 2013-06-17 17:14:41]

தமிழக அமைச்சரவை இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவையில் இருந்து செல்லப்பாண்டியன் மற்றும் முகம்மது ஜான் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் பதிலாக எஸ்.பி.சண்முகநாதன் மற்றும் அப்துல் ரஹீம் புதிய அமைச்சர்களாக மாற்றப்பட்டுள்ளனர். எஸ்.பி.சண்முகநாதன் சுற்றுலாத்துறை அமைச்சராகவும், அப்துல் ரஹீம் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.



தன் மரணத்துக்கு சில தினங்கள் முன்பு - மனதை கரையவைத்த அமரர் மணிவண்ணனின் இறுதி செவ்வி!
[Monday, 2013-06-17 11:24:29]

தன் மரணத்துக்கு சில தினங்கள் முன்பு ஒரு பண்பலை வானொலியில் தன் குரு பாரதிராஜாவுக்கு செலுத்திய மரியாதை இது.இன்றைக்கு மணிவண்ணன் என்கிற ஒரு திரைப்பட இயக்குநர் என்கிற அடையாளம் தந்தது, எனது குருநாதர், என் ஆசான், நான் இப்போதும் போற்றும் இயக்குநர் பாரதிராஜாதான். அவர் இல்லாமல் இருந்திருந்தால், என் வாழ்க்கை எங்கேயோ திசைமாறிப் போயிருக்கும்.



குவைத்தில் இரு தமிழர்களின் தலைகள் கடைசி நேரத்தில் தப்பின - தூக்குத்தண்டனை நிறுத்திவைப்பு!
[Monday, 2013-06-17 07:32:16]

குவைத்தில், இன்று இரண்டு தமிழர்களுக்கு நிறைவேற்றப்பட இருந்த தூக்குத் தண்டனை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுரேஷ் சண்முகசுந்தரம், காளிதாஸ் செல்லையன் ஆகியோரின் தூக்குத் தண்டனைகளே நிறுத்தப்பட்டுள்ளதாக, குவைத்திற்கான இந்திய தூதர் கூறியுள்ளார். இருவரின் தண்டனையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.



புதுடெல்லியில் கொட்டிய பேய்மழை - இந்திராகாந்தி விமான நிலையத்துக்குள் முழங்கால் அளவுக்கு வெள்ளம்!
[Monday, 2013-06-17 07:26:32]

டெல்லியில் நேற்று பலத்த மழை பெய்தது. டெல்லி நகரம் முழுவதும் சராசரியாக 36.6 மில்லி மீட்டர் மழை செய்துள்ளது.ஆனால், புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் அருகே பிற்பகல் 1 மணியிலிருந்து 5.30 மணி வரை சுமார் 4.30 மணி நேரம் அடைமழை ஓயாமல் பெய்தது.இதனால் விமான நிலையம் அருகே பகல் 1 மணி முதல் 2.30 மணி வரை 62.8 மில்லி மீட்டர் மழையும், 2.30 முதல் 5.30மணி வரை 55 மில்லி மீட்டர் மழையும் என 4 1/2 மணி நேரத்தில் 117.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. போதுமான வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் வெளியேற வழியின்றி வெள்ளமாக பெருக்கெடுத்து விமான நிலையத்தின் 3வது நுழைவு வாயில் பகுதியை வெள்ளக்காடாக மாற்றியது.



டி.ராஜாவுடன் போட்டியில்லை என்கிறார் தா.பாண்டியன் - ஆதரிக்கும்படி ஜெயலலிதாவிடம் வேண்டுகோள்!
[Monday, 2013-06-17 06:57:48]

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்சியினருக்குள் கருத்து வேறுபாடு இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறினார். மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட தா.பாண்டியன் விரும்புவதாகவும், அதனால் து.ராஜா, தா.பாண்டியன் ஆகிய இருவரில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே குழப்பம் நிலவியதாகப் பரவலாகப் பேசப்பட்டது.இது தொடர்பாக தா.பாண்டியன் கூறியது:



தமிழக மீனவர்கள் 8 பேரையும் ஜுன் 27 வரை தடுத்து வைக்க மன்னார் நீதிபதி உத்தரவு!
[Monday, 2013-06-17 06:52:19]

கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களையும் ஜூன் 27 வரை சிறையிலடைக்க மன்னார் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். ராமேசுவரத்தைச் சேர்ந்த குணபால், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த சர்புதீன் ஆகிய இருவருக்கும் சொந்தமான விசைப்படகுகளில் 8 மீனவர்கள் கச்சத்தீவு அருகே சனிக்கிழமை கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, இலங்கை கடற்படையினர் இவர்கள் 8 பேரையும் கைது செய்து, தலைமன்னார் கடற்படை முகாமில் வைத்து விசாரித்தனர்.


Mahesan supramaniyam 031109
AJRwindows22.05.13
RoyaShades-l2011(04-12-11)
INNSYS-20120930
Ramans2011
TDE_Computers2011
Suresh-remax-2013-01-01
NIRO-DANCE-100213
TamilsGuid-191012-2013
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com