Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 25, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
ஈரானில் அணிசேரா மாநாடு - அமெரிக்கா எதிர்ப்பு!
[Saturday, 2012-08-18 09:22:55]
News Service

அணிசாரா நாடுகளின் மாநாடு ஈரானில் நடத்தப்படுவது குறித்து அமெரிக்கா அதிருப்தி தெரிவித்துள்ளது.அணிசாரா நாடுகளின் 16-வது மாநாடு ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஆகஸ்ட் 26 முதல் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது.

  

இதில் ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன், இந்திய பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி உள்பட ஏராளமான தலைவர்கள் பங்கேற்கின்றனர். ஈரான் பல்வேறு விஷயங்களில் அமெரிக்காவுக்கு, ஐரோப்பிய நாடுகளுக்கும் எதிராக செயல்பட்டு வருகிறது.

எனவே தனக்கு வேண்டாத நாட்டில் அணிசாரா நாடுகளின் மாநாடு நடத்தப்படுவது அமெரிக்காவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தனது அதிருப்தியை பகிரங்கமாகவும் அமெரிக்கா வெளிப்படுத்தியுள்ளது. வாஷிங்டனில் வியாழக்கிழமை பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நுலாண்ட் இது தொடர்பாகக் கூறியது:

அணிசாரா நாடுகள் இயக்கத்தில் அமெரிக்கா உறுப்பினராக இல்லை. அதே நேரத்தில் ஈரானில் இந்த இயக்க மாநாடு நடத்தப்படுகிறது என்பதுதான் அமெரிக்காவுக்கு கவலை தரும் விஷயமாக உள்ளது. ஏனெனில் அந்த நாடு சர்வதேச சட்டதிட்டங்களுக்கு உள்பட்டு நடந்து கொள்வது இல்லை. ஐ.நா.வின் வேண்டுகோள்களையும் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. அண்டை நாடுகளை அச்சுறுத்தும் வகையிலேயே எப்போதும் நடந்து கொள்கிறது. எனவே அணிசாரா இயக்க மாநாடு நடத்தப்படும் இடம் சரியானது இல்லை என்பதே எங்கள் கருத்து என்றார் விக்டோரியா.

ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், ஈரான் செல்வதை தாங்கள் விரும்பவில்லை என்பதை மறைமுகமாகச் சுட்டிக் காட்டிய அவர், "ஈரான் செல்வது என்று பான் கி மூன் முடிவு எடுத்தால், அது மிகவும் கவலை ஏற்படுத்துவதாகவே இருக்கும்' என்றார்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

ஜப்பானில் அணு ஆய்வு கூடத்தில் கதிரியக்க கசிவு - பலருக்குப் பாதிப்பு!
[Saturday, 2013-05-25 18:59:02]

ஜப்பானின் அணு ஆய்வுக்கூடம் ஒன்றில் பரிசோதனையின்போது, கதிரியிக்கக் கசிவு ஏற்பட்டுள்ளது. அப்போது, சோதனைக் கூடத்தில் இருந்த நான்கு பேர் இந்தத் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது. இதுமட்டுமின்றி, அங்கிருந்த 55 பேருக்கும் இதன் பாதிப்புகள் இருக்கலாம் என்றும் கருதப்படுகின்றது.டோக்கியோவின் வடமேற்குப் பகுதியில், 110 கி.மீ. தூரத்தில் உள்ள டோகைமுராவில் உள்ள ஆய்வுக்கூடத்தில் வியாழக்கிழமை பரிசோதனையின்போது, கதிரியக்கக் கசிவு ஏற்பட்டதாகவும், அப்போது வெளியிலும் இந்தக் கசிவு பரவியதாகவும் ஜப்பானின் அணுசக்தி மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.



கேன்ஸ் திரைப்படவிழாவில் 2 மில்லியன் யூரோ பெறுமதியான வைர நெக்லஸ் திருட்டு!
[Saturday, 2013-05-25 18:40:09]

உலகில் உள்ள முன்னணி திரை நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ள கேன்ஸ் திரைப்பட விழாவில் இரண்டாவது முறையாக ரூ.14 கோடி மதிப்பிலான வைர நகை திருடு போயுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. உலகில் உள்ள திரை நட்சத்திரங்கள் கொண்டாடும் இந்த விழாவில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த நகைக்கடை நிறுவனம் ஒன்று, நகைக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. வைரம் பதித்த பிளாட்டினம், தங்க ஆபரணங்களை அணிந்த அழகிகளின் அணிவகுப்பும் நடைபெற்றது. நிகழ்ச்சியில், டைட்டானிக் கதாநாயகன் லியானார்டோ டி காப்ரியோ, ஷாரோன் ஸ்டோன், பாரிஸ் ஹில்டன் போன்ற ஹாலிவுட் முன்னணி நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர்.



அமெரிக்க நீதிபதியாகப் பொறுப்பேற்கும் ஸ்ரீகாந்த் சீனிவாசனுக்கு ஒபாமா பாராட்டு!
[Saturday, 2013-05-25 18:33:51]

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளி பிரபல வக்கீல் ஸ்ரீகாந்த் சீனிவாசன். சண்டிகாரில் பிறந்த 46 வயதாகும் இவரை கொலம்பியா மாவட்ட சர்குயூட் கோர்ட்டு நீதிபதியாக ஜனாதிபதி ஒபாமா நியமித்தார். இதற்கு நீதித்துறை செனட்சபை கமிட்டி விவாதித்து 97-0 என்ற ஓட்டெடுப்பில் எதிர்ப்பு ஏதுமின்றி ஒருமனதாக ஒப்புதல் அளித்தது. ஸ்ரீகாந்த் சீனிவாசன் நீதிபதியாகும் இந்த கோர்ட்டு அமெரிக்காவின் 2-வது பெரிய கோர்ட்டு ஆகும். எனவே இது இந்தியருக்கு கிடைத்த பெருமை என பல்வேறு தரப்பினரும் பாராட்டி வாழ்த்தும் தெரிவித்தனர்.



பாகிஸ்தானில் பாடசாலை வாகனத்தில் காஸ் சிலிண்டர் வெடித்து 17 குழந்தைகள் பலி!
[Saturday, 2013-05-25 18:28:16]

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து 200 கி.மீட்டர் தூரத்தில் உள்ள குஜராத் நகரில் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு பள்ளி வாகனம் சென்றுக் கொண்டிருந்தது. வாகனத்தின் எரிபொருளாக வைக்கப்பட்டிருந்த கியாஸ் சிலிண்டரில் திடீர் கசிவு ஏற்பட்டு வெடித்து சிதறியது. இதில் வாகனத்தில் தீ பிடித்தது. தீயை கண்ட குழந்தைகள் பயத்தில் கூச்சலிட்டனர். வாகனத்தின் கதவை திறந்து குழந்தைகளை வெளியேற்றுவதற்குள் ராட்சத பந்து போல எழுந்த தீப்பிழம்பில் குழந்தைகளின் சீருடை பற்றி எரியத் தொடங்கியது.



உணவு கொடுத்த பராமரிப்பாளரை கடித்துக் குதறிக் கொன்றது புலி!
[Saturday, 2013-05-25 18:13:32]

வட இங்கிலாந்தில் உள்ள சவுத் லேக்ஸ் வனவிலங்கு காப்பகத்தில் அழியும் நிலையில் உள்ள சைபீரியா மற்றும் சுமாத்ரா பகுதியை சேர்ந்த புலிகள் இயற்கை சூழலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் புலிகளுக்கு இறைச்சி போடுவது, பராமரிப்பது போன்ற பணிகளில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றிரவு, இங்கு பணியாற்றும் சாரா மெக்லே (24) என்ற பெண் ஒரு புலிக்கு இறைச்சி போட்டுக் கொண்டிருந்தார். சற்றும் எதிர்பாராத வேளையில் அவர் மீது பாய்ந்த புலி, அந்த பெண்ணின் தொண்டையை கவ்வியது. கவ்விய வேகத்தில் அவரை இழுத்துக் கொண்டு வனப்பகுதியை நோக்கி விரைந்த புலியை காப்பக ஊழியர்கள் கூச்சலிட்டபடியே பின் தொடர்ந்து விரட்டினார்கள்.



சீனாவில் தொடர்ந்து கொட்டும் மழை - 5 இலட்சம் மக்கள் வெள்ளத்தில் தவிப்பு!
[Saturday, 2013-05-25 08:32:00]

சீனாவில் புயல் மழையால் 5 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.சீனாவின் தென் பகுதி குவாங்டாங் பகுதியில் கடந்த ஞாயிற்றுகிழமை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையின் வேகம் அதிகரித்து பலத்த காற்றுடன் கூடிய புயல் மழையாக மாறியது. இதனால் இந்த பகுதியில் உள்ள சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த கனமழையால் குவாங்டாங்கை சுற்றியுள்ள 8 நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் மோசமாக பழுதடைந்தது. பாலங்கள் இடிந்து விழுந்தது. சில இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.



வன்முறைகளால் ஆறாவது நாளாக இன்றும் பற்றியெரியும் ஸ்டொக்ஹோமின் புறநகர்ப்பகுதி!
[Saturday, 2013-05-25 08:29:14]

சுவீடன் தலைநகர் ஸ்டொக்ஹோமில் வெளிநாட்டுக் குடியேறிகள் செறிவாக வாழும் புறநகர்ப் பகுதிகளில் ஆறாவது இரவாக இன்றும் வன்முறைகள் நடந்துவருகின்றன. அதில் இரண்டு பள்ளிக்கூடங்களும், மாவட்ட காவல்துறை நிலையமொன்றும் ஏராளமான கார்களும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. இந்த வன்முறைகள் பல இடங்களுக்கும் பரவியுள்ளது. தொழில் வாய்ப்புகள் இல்லாமையை காரணங்காட்டியே, இளைஞர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.இந்த வன்முறைகளைத் தடுக்கும் பொருட்டு உள்ளூர் சமூகத் தலைவர்களுடன் பேசிவருவதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.



ஆப்கானிஸ்தானில் இந்தியத் தூதரகம் அருகே அடுத்தடுத்து மூன்று குண்டுகள் வெடிப்பு!
[Saturday, 2013-05-25 08:15:23]

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இந்தியத் தூதரகம் அமைந்துள்ள பகுதியில் நேற்று அடுத்தடுத்து மூன்று குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. காபூலில் உளவு அமைப்பான என்.டி.எஸ் சார்பில் நடத்தப்படும் மருத்துவமனை, ஆப்கன் பொது பாதுகாப்புப் படை, இந்தியத் தூதரகம் அமைந்துள்ள பகுதியில், நேற்று மாலை 4 மணியளவில் (உள்ளூர் நேரம்) அடுத்தடுத்து இரு வெடிகுண்டுகள் வெடித்தன. இந்த குண்டுவெடிப்பால், இந்தியத் தூதரகக் கட்டடத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. அங்கு அனைவரும் பாதுகாப்புடன் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



ஆளில்லா விமானத் தாக்குதல்கள் அவசியமே - நியாயப்படுத்துகிறார் ஒபாமா!
[Saturday, 2013-05-25 07:25:43]

பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் ஆளில்லா விமானத் தாக்குதல் அவசியம்; மேலும் அது சட்டப்பூர்வமானதே என அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்தார். அமெரிக்க தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் பயங்கரவாதத்துக்கு எதிரான கருத்தரங்கில் ஒபாமா வெள்ளிக்கிழமை பேசியதாவது: இன்றைய சூழலில் பயங்கரவாதம் என்பது உலகை அச்சுறுத்தும் முக்கிய காரணியாக உள்ளது. குறிப்பாக, அமெரிக்காவைக் குறிவைத்து பல பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அதனால் தற்காப்புக்காக நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.



பாகிஸ்தானில் இருந்து லண்டன் சென்ற விமானத்தை நடுவானில் கடத்த முயற்சி - இருவர் கைது!
[Saturday, 2013-05-25 07:22:20]

பாகிஸ்தானில் இருந்து பிரிட்டன் சென்ற விமானத்தில் பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக எழுந்த சந்தேகத்தைத் தொடர்ந்து, அந்த விமானம் வேறு பகுதிக்குத் திருப்பி விடப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்சுக்குச் சொந்தமான பயணிகள் விமானம் 297 பயணிகளுடன் லாகூர் நகரில் இருந்து பிரிட்டனின் மான்செஸ்டர் நகருக்கு நேற்று சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் இருந்த இரு பயணிகள் திடீரென்று பைலட் அறையை நெருங்க முயற்சித்தனர். இதனால் சந்தேகமடைந்த பைலட்டுகள் இது குறித்து மான்செஸ்டரில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.



அமெரிக்காவில் இடிந்து விழுந்தது பாலம் - வாகனங்கள் நீரில் மூழ்கின!
[Friday, 2013-05-24 18:21:57]

அமெரிக்காவின் மௌன்ட் வெர்னன் அருகே உள்ள உள்ளூர் சாலைகளை இணைக்கும் பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில், அவ்வழியாகச் சென்ற வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின. நேற்று இரவு நடந்த இவ்விபத்தில், வாகனத்தில் சென்ற மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிந்து விழுந்த பாலத்தின் இடிபாடுகளுக்குள் வாகனங்கள் சிக்கிக் கொண்டதால், பாதிக்கப்பட்டவர்களை மீட்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. எனினும், மீட்புக் குழுவினர் விரைவாக செயல்பட்டு அவர்களை மீட்டுள்ளனர்.



ரஷ்யாவில் கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
[Friday, 2013-05-24 18:10:52]

ரஷ்யா அருகே இன்று மதியம் கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 8.2 ஆக பதிவாகி இருந்தது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ரஷ்யாவின் கிழக்கே வட பசிபிக் கடலில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. எஸ்ஸோ நகரின் தென்மேற்கில் இருந்து 360 கிமீ தொலைவில் உள்ள இடத்தை மையமாகக் கொண்டு இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 8.2 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கம் ஓகோட்ஸ்க் கடலுக்கு அடியில் ஏற்பட்டது. சுமார் 601.80 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பயங்கர ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி ஏற்படாது என்று அமெரிக்காவைச் சேர்ந்த மேற்கு கடற்கரை மற்றும் அலாஸ்கா சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்திருந்தது.



அதிபர் ஆசாத் பதவி விலகியதும் சிரியா மீது பாரிய போர் தொடுக்கத் தயாராகிறது இஸ்ரேல்!
[Friday, 2013-05-24 18:05:45]

சிரியா உள்நாட்டுப் போரின் முடிவில் அதிபர் ஆசாத் பதவி விலகும் நிலை ஏற்பட்டு அதிருப்தியாளர்கள் ஆட்சிக்கு வந்தால் உடனே ஆச்சரியப்படும் வகையிலான போர் ஒன்றுக்கு தயாராக இருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ச்சியாக அரசியல் குழப்பங்கள் நீடித்தே வருகின்றன. அரபு வசந்தம் என்றழைக்கப்படும் இந்த புரட்சி சிரியாவில் உச்சகட்டம் அடைந்திருப்பதுடன் அப்பிராந்தியத்தில் போர்ச் சூழலை அதிகரித்து வருகிறது. சிரியாதான் பாலஸ்தீன ஆயுத் குழுவினருக்கு ஏராளமான ஆயுதங்களைக் கொடுத்து வருகிறது என்பது இஸ்ரேலின் நீண்டகால குற்றச்சாட்டு.



கேம்பிரிட்ஜ் நிகழ்ச்சிக்கு பயணிகள் பஸ்சில் வந்த எலிசபெத் மகாராணி!
[Friday, 2013-05-24 17:33:07]

கேம்பிரிட்ஜ் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்த ராணி இரண்டாம் எலிசபெத், மக்களோடு மக்களாக பஸ்சில் பயணித்தார். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் நகரில் சுமார் 212 மில்லியன் பவுண்ட் செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துவ ஆய்வு மையத்தின் திறப்பு விழாவிற்கு, ராணி இரண்டாம் எலிசபெத் சிறப்பு ரயில் மூலம் வந்திருந்தார். விழா நடக்கும் இடத்திற்கு அவரை அழைத்து செல்ல கார் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அவர் பொதுமக்கள் பயணம் செய்யும் பஸ்சில் செல்ல விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து, விழா நடக்கும் இடத்திற்கு ராணி மக்களோடு மக்களாக பஸ்சில் பயணம் செய்தார். இந்த காட்சியை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பார்த்து மகிழ்ந்தனர்.



பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் விமானத்தில் தீ - அவசரமாகத் தரையிறக்கப்பட்டதால், ஹீத்ரோ விமான நிலைய ஓடுபாதைகள் மூடப்பட்டன!
[Friday, 2013-05-24 16:52:02]

லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானத்தில் தீ பரவியதை அடுத்து, ரன்வேக்கள் மூடப்பட்டுள்ளன.ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்று ஓஸ்லோ புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, விமானத்தின் பின்புறத்தில், தீ விபத்து ஏற்பட்டது. இதனை அறிந்த விமானிகள், உடனடியாக விமானத்தை பத்திரமாக தரையிறக்கினர். அதில் இருந்த 75 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து, விமான நிலையத்தின் இரண்டு ஓடுபாதைகளும் தற்காலிகமாக மூடப்பட்டன.



ஒளிந்துள்ள தீவிரவாதியைத் தேடி லண்டனில் வீடுவீடாகத் தேடுதல்!
[Friday, 2013-05-24 08:49:57]

லண்டனில் ராணுவ வீரரை தலைதுண்டித்து படுகொலை செய்த தீவிரவாதிகளில் ஒருவர் கிரீன்விச் மற்றும் லங்கன்ஷயர் பகுதியில் பதுங்கியுள்ளதாக வந்த தகவலை தொடர்ந்து, அப்பகுதியில் வீடு, வீடாக போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இங்கிலாந்தின் லண்டன் நகரில் உல்விச் சாலை யில் ராணுவ முகாம் உள்ளது. இப்பகுதியில் ராணுவ வீரர் ஒருவர் நேற்று முன்தினம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அப்பகுதிக்கு வந்த 2 தீவிரவாதிகள், அவரை கொடூரமாக தலையை துண்டித்து கொன்றனர்.வீரர் மற்றும் அக்கம் பக்கத்தினரின் அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்த மற்ற வீரர்கள் ஓடிவந்து தீவிரவாதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் போலீஸ்காரரை கொன்ற தீவிரவாதியுடன் மற்றொருவரும் குண்டடிப்பட்டு கீழே விழுந்தார்.



நைஜரில் யுரேனிய சுரங்கம், யுரேனிய ஆலை மீது இரட்டை கார் குண்டுத் தாக்குதல்கள் - 25 பேர் பலி!
[Friday, 2013-05-24 08:38:46]

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் நிகழ்த்தப்பட்ட இரண்டு வெவ்வேறு கார் குண்டுவெடிப்பு சம்பவங்களில் வியாழக்கிழமை 25 பேர் உயிரிழந்தனர். 29 பேர் படுகாயமடைந்தனர். பிரான்ஸுக்கு சொந்தமான யுரேனியப் பதப்படுத்தும் ஆலை ஒன்று நைஜரில் உள்ள அகாதேஸில் உள்ளது. ராணுவ முகாமில் உள்ள இந்த ஆலையின் மீது காரை மோதி வெடி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் தாக்குதல் நடத்தியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதே சமயம் நைஜரின் புறநகர்ப்பகுதியான ஆர்லிட்டில் உள்ள யுரேனியச் சுரங்கம் ஒன்றிலும் மற்றொரு கார் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.



பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட நான்கு அமெரிக்கர்கள் இரகசிய நடவடிக்கைகளில் கொல்லப்பட்டனர் - அமெரிக்கா அறிவிப்பு!
[Friday, 2013-05-24 08:32:21]

அமெரிக்காவுக்கு எதிராக, பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட, நான்கு அமெரிக்கர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்ற தகவலை, அமெரிக்க நீதித்துறை கமிட்டி வெளியிட்டுள்ளது.வெளிநாடுகளில், பயங்கரவாதிகளுக்கு எதிராக, அமெரிக்கா மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கைகள், வெளிப்படையாக இருக்க வேண்டும் என, அதிபர், ஒபாமா, சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.இதையடுத்து, அட்டர்னி ஜெனரல், எரிக் ஹோல்டர், செனட் நீதிக்கமிட்டி தலைவர், பாட்ரிக் லீகேக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான்கு அமெரிக்கர்கள் கொல்லப்பட்ட விதம் குறித்து தகவல் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:



நான்கு பேரைக் கொலை செய்த தமிழர்கள் நால்வருக்கு மலேசியாவில் மரணதண்டனை!
[Friday, 2013-05-24 08:23:36]

மலேசியாவில், பெண் உட்பட, நான்கு பேரை, கொடூரமான முறையில் கொன்ற, தமிழர்கள் நான்கு பேருக்கு, மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள், பத்மனாபன், 44, தில்லை அழகன், 22, மதன், 23, காத்தவராயன், 33. கடந்த, 2010ம் ஆண்டில், அலங்கார பொருட்கள் தயாரிப்பு தொழில் கோடீஸ்வரி, சுசிலாவதி என்பவர், மர்மமான முறையில் மாயமானார்; அவரின் உதவியாளர்கள், மூவரும் மாயமாகினர். இவர்களின் உடலின் பாகங்கள் மற்றும் உடைந்த எலும்புகள், பத்மனாபனின் பண்ணை வீட்டின் நிலத்தில் கண்டெடுக்கப்பட்டன. பத்மனாபனிடம் நடத்திய விசாரணையில் அவர் தான், நான்கு பேரையும் கொலை செய்தது தெரிய வந்தது.



ஆப்கானில் பணியாற்றியதற்காக லண்டனில் கழுத்து அறுக்கப்பட்ட இராணுவ வீரர் - பரபரப்புத் தகவல்கள்!
[Friday, 2013-05-24 08:18:57]

ஆப்கனில் முஸ்லிம்கள் கொல்லப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து, லண்டன் நகரில், அப்பாவி ராணுவ வீரர் ஒருவரை, பயங்கரவாதிகள் இருவர், கழுத்தறுத்து கொன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது. அந்த கொலைகாரர்களுடன் பேச்சு கொடுத்து, அவர்களை தடுத்து நிறுத்திய வீரப்பெண்ணுக்கு, பலரும் பாராட்டு தெரிவித்தனர். பிரிட்டனின் தென் கிழக்கு பகுதியில், ஊல்விச் என்ற இடத்தில், ராணுவ முகாம் உள்ளது. ராணுவத்தில் பணியாற்றும் வீரர் ஒருவர், நேற்று முன்தினம், முழு சீருடையில், முகாம் அருகே, காரில் சென்று கொண்டிருந்தார்.


AJRwindows22.05.13
Ramans2011
INNSYS-20120930
TamilsGuid-191012-2013
Mahesan supramaniyam 031109
TDE_Computers2011
NIRO-DANCE-100213
Canada Kanthasamy Kovil
RoyaShades-l2011(04-12-11)
Suresh-remax-2013-01-01
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com