Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 22, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
ஒரு சிற்றூழியரைக் கூட நியமிக்க அதிகாரமில்லை என்று புலம்பிக்கொண்டு திரிந்த முன்னாள் முதலமைச்சர் எதற்காக இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றார்? யோகேஸ்வரன் Top News
[Thursday, 2012-08-16 23:02:37]
News Service

ஒரு சிற்றூழியரைக் கூட நியமிக்க அதிகாரமில்லை என புலம்பிக்கொண்டு திரிந்த முன்னாள் முதலமைச்சர் எதற்காக இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றார் என்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

  

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து வாகரை பிரதேசத்திலுள்ள கதிரவெளியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தொடர்ந்து உரையாற்றுகையில்:

கிழக்கு மாகாண சபையின் எங்களது கையில் வைத்திருப்பதற்காகவும் அதிகாரத்தை பலப்படுத்துவதற்காகவும் மக்களுக்கு நாங்கள் சேவையாற்றி வருவதற்காகவும் இந்த தேர்தலிலே எங்களது தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிடுகிறது.

இங்கே ஒரு கேள்வி வைக்கப்படுகின்றது வடக்கு கிழக்கு இணைப்பு கோருகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏன் கிழக்கு மாகாண சபையில் போட்டியிடுகின்றது. அது வடக்கு கிழக்கு இணைப்பை கேட்டுக் கொண்டிருகின்றது. ஏன் அவர்கள் தனியாக கிழக்கு மாகாண சபையில் போட்டியிட வேண்டும். நியாயமான கேள்வி.

நாங்கள் கடந்த முறை போட்டி போடாத படியினால்தான் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிள்ளையான் முதலமைச்சரானார். ஆனால் அந்த வகையிலே நாங்கள் எல்லோரும் தமிழ் மக்கள் தமிழ் முதலமைச்சர் வரவேண்டும் என்ற ஆவாவில் அவருக்கு வாக்களித்து முதலமைச்சராக்கினார்கள்.

ஆனால் நடந்தது என்ன என்றால் அவர் முதலமைச்சர் என்ற பதவியை ஜனாதிபதி அவர்கள் அவரிடம் கையளிக்கும் போது அதற்கான பத்திரத்தை வாசிக்காமல் பார்த்து விட்டு அவரிடமே கையளித்துவிட்டார். ஏனெனில் அவர் ஓர் தலையாட்டு பொம்மை.

முதலமைச்சர் அவர்கள் பதவியேற்றதுடன் இந்துவாக இருந்தால் அல்லது கிறிஸ்தவராக இருந்தால் தமது மதத் தலைவரிடம் ஆசீர்வாதம் பெற வேண்டும். ஆனால் இவர் முதலாவதாக தலதாமாளிகை பௌத்த பிக்குவின் காலில்தான் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். நீங்கள் தலைமை தாங்குகின்ற உங்களது அசீர்வாதம் பெற்ற இந்த அரசாங்கத்தின் விசுவாசியாக இருப்பேன் என்று உறுதியளித்தார். இவர்தான் கிழக்கு மாகாண சபையிலே வந்த முதலமைச்சர் பிள்ளையான்.

வடக்கு கிழக்கு இணைப்பே இவ்வாறான கிழக்கு மாகாண சபையை அரசாங்கம் திட்டமிட்டு பிரிப்பதற்கு கிழக்கு மாகாண சபையில் அதிகாரம் செலுத்திய ஒரு முதலமைச்சர் ஒரு பொம்மையாக இருந்ததால் எங்கள் மக்களை நியாயமான முறையிலும் நீதியான முறையிலும் வழி நடத்தக் கூடியவராக இல்லாமையால் தமக்குரிய அதிகாரத்தை தாமே பெற்று மக்களை வழிப்படுத்த முடியாத படியினால் அவர் இங்கு பலவிதத்திலும் பெரும்பாண்மை இனத்தை வலுப்படுத்தும் ஒருவராக செயற்பட்ட படியினால் இந்த கிழக்கு மாகாணத்தை காப்பாற்றவேண்டிய பொறுப்பு இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு வந்துள்ளது. இதன் காரணமாகவே நாங்கள் வடக்கு கிழக்கு மாகாண இணைந்த மாகாணத்தை கோரி நிற்கின்றோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதன் காரணம் முதலமைச்சர் பிள்ளையான் கிழக்கு மாகாணம் மாத்திரத்தை தனிமைப்படுத்தி தனது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக் கொள்ளையிலே அறிவித்தார் வடக்கு கிழக்கு இணைப்பை பகிரங்கமாக வெறுக்கின்றேன் கிழக்கு மாகாணம் தனியாக இருக்க வேண்டுமென்று கோரிய காரணத்தினால் அவர் முதலமைச்சராக வரக்கூடிய தகுதியில்லாத நிலையில் இந்த கிழக்கு மாகாண சபையின் அதிகாரத்தை தற்காலிகமாக தக்கவைத்து இந்த வடக்கு கிழக்கு இணைப்பை ஏற்படுத்துவதற்காக நாங்கள் தற்காலிக ஏற்படாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த தேர்தலில் போட்டியிடுகின்றது.

ஒரு சிற்றூழியரை கூட நியமிக்கும் அதிகாரம் எனக்கில்லை கிழக்கு மாகாண சபையிலே ஆளுநனரின் ஆதிகாரம் தான் அதிகமாகவுள்ளதாக அடிக்கடி கூறிக்கொண்டு திரியும் பிள்ளையான் ஏன் இந்த தேர்தலில் போட்டியிட வேண்டும்?

பிள்ளையானின் ஆட்சிக்காலத்தில் வாகரைப் பிரதேசதம் ஜனாதிபதியின் கையிலே ஈடுவைக்கப்பட்டது. உலகத்திலே ஆதிவாசி மக்கள் அழிக்கப்படுகின்றார்கள் இவர்களை பாதுகாக்க வேண்டுமென்று ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் எடுத்தது. அதற்காக பெருந்தொகை நிதிகளை வழங்கக் கூடிய சூழ்நிலை இருப்பதாக நாட்டின் ஜனாதிபதி அறிந்து ஆதிவாசி மக்கள் எங்கிருக்கின்றார்கள் என்பதை யோசித்தனர்.

எமக்குத் தெரிந்தவரை மகியங்கனையைத்தான் வசிக்கிறார்கள். ஆனால் இங்கிருந்த முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் திரவியம் அவர்களும் சேர்ந்து இந்த அதிவாசி மக்கள் தான் வாகரைப் பிரதேச மக்கள் என்று ஜனாதிபதிக்கு கூறியதன் நிமிர்த்தம் சென்றவருடம் சல்லித்தீவிலே ஆதிவாசிகள் நிகழ்வு நடைபெற்றது.

அதிவாசிகள் என்று வாகரைப் பிரதேச மக்களை பிரகடனப்படுத்துகின்ற அந்த நிகழ்வுக்கு முன்னாடி ஜனாதிபதி செயலகத்தால் வந்து பிரதேச செயலகத்திலே எங்களது பதிவுகளை மாற்றும் நடவடிக்கைகள் ஆரம்பமாகின.

இந்த பதிவுகளிலே இலங்கைத் தமிழர் என்றுதான் எங்களுக்கு இருக்கின்றது. ஆனால் அந்தப் பதிவுகளை எவ்வாறு மாற்றச் செய்தார்கள் என்றால் இந்த ஆதிவாசி மக்களுக்கு நாங்கள் வீடு கட்டிக் கொடுப்போம் கிணறுகள் கட்டிக் கொடுப்போம் மலசலகூடங்கள் கட்டிக் கொடுப்போம் இவர்கள் இலங்கைத் தமிழர்கள் என்பதை வெட்டிவிட்டு வேடர்கள் என்று குறிக்க வேண்டும் என்றார்கள்.

இதற்கு நடவடிக்கை எடுத்தார்கள். நாற்பத்தி ஏழு பேர் வாகரைப் பிரதேசத்திலே தாங்கள் இலங்கைத் தமிழர் என்பதை வெட்டி நாங்கள் வேடர் என்று குறித்தார்கள். இதை அறிந்த நான் பிரதேச செயலாளருடன் தொடர்புகொண்டு உடனடியாக நிறுத்தினேன். வாகரைப் பிரதேச மக்களை எவரையும் அங்கே நீங்கள் ஆதிவாதி மக்கள் என்று பிரகடனப்படுத்த முற்படும் போது நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.

ஜனாதிபதியின் இருந்து ஒரு தொகைப் பணத்தை பெற்றுக் கொள்வதற்காக இவர்கள் இருவரும் எங்களது வாகரைப் பிரதேச மக்களை வேடர்கள் என்று பெயர்மாற்ற முற்பட்டு இருக்கின்றார்கள். எங்கள் மக்கள் பூர்வீகமாக நாங்கள் இலங்கையிலே எல்லோரும் ஆதிவாசிகளாக இருந்துதான் வளர்ந்து வந்தவர்கள். எங்களுக்கு சீல் குத்த வேண்டிய அவசியம் இல்லை.

எங்கள் மக்கள் இப்போது கொத்துக் குலைகளோடும் அம்பு வில்லுகளோடும் திரியவில்லை. அவர்கள் வளர்ச்சி கண்டு "மடி கணனியுடனும்"; "ஐ பாட்" கொண்டு திரிகிறார்கள். நாங்கள் பல விதத்தில. முன்னேறி நிற்கின்றோம். எங்களை இன்னும் கீழ் நிலைமைக்கு கொண்டு செல்ல ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக பிள்ளiயானும் பிரதியமைச்சர் கருணாவும் இருக்கும் போதுதான் மட்டக்களப்பு மாவட்டத்தின் மாவட்ட செயலகத்தில் பெரும்பாண்மை இனத்தைச் சேர்ந்த சிற்றுழியர்கள் நியமிக்கப்பட்டார்கள் இதை நாங்கள் தட்டிக்கேட்டோம் பிள்ளையானோ கருணாவோ தட்டிக் கேட்கவில்லை அமைதியாக இருந்தார்கள். நிர்வாக சேவை என்றால் நாங்கள் பிரதேச செயலாளர் அரசாங்க அதிபர் இவர்களுக்கான நேர்முகப்பரீட்சை நடைபெற்றது. அதிலே முற்றுமுழுதாக சிங்கள மக்களையே தெரிவு செய்தார்கள். அதற்கு எதிராக குரல் கொடுத்ததன் காரணமாக இன்று ஒன்பது தமிழர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள் இன்னும் நாற்பத்தேழு பேர் தெரிவு செய்யப்பட இருகின்றார்கள்.

பிள்ளையானின் ஆட்சிக் காலத்தில்தான் மட்டக்களப்பு மாவட்டத்திலே சிங்கள குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன. குறிப்பாக வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலே இருபத்தி ஐயாயிரம் ஏக்கர் காணிகளை சிங்கள ஊர்காவல் படைகளுக்கு இந்த அரசாங்கம் வழங்கியுள்ளது. ஆளுநர் அனுமதியளித்துள்ளார்;. அதற்கு கையொப்பமிட்டது முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் மாகாண விவசாய அமைச்சர் துரையப்பா நவரெட்ணராஜா கம்பிகள் கொடுத்து வேலிகள் அமைக்க நடவடிக்கையெடுத்தார்.

எமது வாகரைப் பிரதேசத்திலே கிருமிச்சைப் பகுதியிலே 1200 ஏக்கர் நிலம் கடற் படையினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதை தடுப்பதற்கும் இவர்கள் இருவரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலத்தில் கடற்படையினரின் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப் போகின்றார்கள் இதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தையும் சிங்கள மயமாக்கப் போகிறார்கள் இதற்கு நம்மவர்கள் துணை போகிறார்கள்.

அண்மையில் வாகரைப் பிரதேசத்தில் பிள்ளையான் யோகேஸ்வரன் எம்.பி. ஆயுதம் தூக்கியவரா? போராடியவரா? என்ன கணக்கிலே அவர் தமிழ் தேசியம் பற்றி பேசி வருகின்றார் என்று கூறியுள்ளார். உண்மையிலேயே நான் ஆயுதம் தூக்கி போராடவில்லை. ஆனால் தர்மத்தில் வழியில் போராடியவன் நீங்கள் ஆயுதம் தூக்கி போராடியதன் பயன்தான் என்ன? நீங்கள் மட்டும் ஆடம்பரமாக வாழ்கை நடத்துகிறீர்கள்!

உங்கள் தேவைக்காக பலாஷ்காரமாக வீடு வீடாக அடித்து இழுத்துச் சென்ற இளைஞர் யுவதிகள் மரணக் குழியல் இருக்கின்றார்கள். கணவனை இழந்த இளம் விதவைகளும் தமது பிள்ளைகளை இழந்த பெற்றோருகள் இன்னும் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் இதை உருவாக்கியவர்கள் கருணாவும் பிள்ளையானும்! இவர்கள் இருவரும் எந்த முகத்தோடு எமது மக்கள் மதியில் வாக்க கேட்டுவர முடியும்?

வாகரைப் பிரதேசத்திலே வீதிகளில் கிடந்த சடலங்களை நாங்கள் கண்டோம் கருணாவும் பிள்ளையானும் வந்து பார்க்கவில்லை. இந்த நிலையை உருவாகியது யார்? பிள்ளை கொடுக்கவில்லை என்று எத்தனை குடும்பத்தை அடித்து ஊரைவிட்டு விரட்டினார்கள்? இதையெல்லாம் வன்னியிலிருந்து வந்த பிரபாகரனின் குழுக்கள் யாரும் செய்யவில்லை. இங்கிருந்த கருணாவும் பிள்ளையானும் இதையெல்லாம் செய்துவிட்டு எந்த முகத்தோடு எங்கள் முன் வாக்கு கேட்டு வருவார்கள்?

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்காக பிரான்ஸ் அரசினால் வழங்கப்பட்ட நிதியை வைத்து போடப்பட்டிருக்கும் மட்டக்களப்பு - திருமலை நெடுஞ்சாலை இவர்களின் சொந்த பணத்திலா போடப்பட்டது கூறிக்கொண்டு திரிகிறார்கள். நாட்டினை அபிவிருத்தி செய்வது அரசாங்கத்தின் கடமை அதை நிறைவேற்ற வேண்டும். முப்பது வருடமாக எதையும் செய்யவில்லை ஆகவே அவர்கள் அபிவிருத்தி செய்ய வேண்டும்.

கருணா அம்மானிடமும் பிள்ளையானிடமும் கேட்கின்றேன் யுத்தத்தின் பின் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு எத்தனை வீடுகள் கட்டிக்கொடுத்துள்ளீர்கள்? இந்த பிரதேசங்களில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாட்டு அரசாங்கங்களினால் கட்டப்பட்ட வீடுகளே இங்குள்ளன.

25 ஆயிரம் வீடுகளுக்கு மேல் கட்டிக்கொடுக்கப்படவில்லை மீள்குடியேற்ற பிரதியமைச்சர் கருணா அம்மான் இருந்து என்ன பயன்? நாங்கள் எதிர்கட்சியில் இருக்கிறோம் எங்களால் ஒன்றுமே செய்ய முடியாது. வெளிநாட்டிலிருந்து வரும் நிதிகளை கூட அரசாங்கத்தினுடாகவே வழங்க வேண்டும். இதை பெற்றுத் தருகின்ற தகைமை கருணா அம்மானுக்கும் பிள்ளையானுக்கும் உள்ளது ஆனால் அவர்கள் அதை நடைமுறைப்படுத்த வில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்திலே மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு 25 ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்பட வேண்டிய 745 மில்லியன் ரூபா நிதி இன்னும் கொடுக்கப்படவில்லை. இதைக்கூட வழங்காமல் அதை செய்கிறோம் இதை செய்கிறோம் என்று மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

நான் பாராளுமன்ற உறுப்பினராக வந்த போது என்னையும் அரசுடன் இணையுமாறு பேரம் பேசினார்கள் நானும் இணைந்திருந்தால் கருணா பிள்ளையானை விட பெரிய அமைச்சர்களாக இருந்திருப்போம். எனக்கு இந்து கலாசார அமைச்சு பெற்றிருப்பேன் சாராயக் கடைக்கு அனுமதி வழங்கியும் வேலைவாய்ப்புகளுக்கு பணம் பெற்றும் கோடி கோடியாக உழைத்திருக்கலாம்.

ஏன் இந்த அரசாங்கத்தின் பிச்சையை நாங்கள் ஏற்கவில்லை எமது மக்கள் இத்தனை வருட காலமாக பட்ட துன்பங்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஒரு தீர்வைப் பெற்றுத் தருவார்கள் என்ற நம்பிக்கையில் எமது மக்கள் எங்களுக்கு வாக்களித்தர்கள் இவர்களுக்கு நாங்கள் துரோகம் செய்ய மாட்டோம். என்றுமே மக்களோடு மக்களாக நின்று செயற்படுவோம்.

கருணாவாலோ பிள்ளையானாலோ அரசாங்கத்தை விமர்சிக்க முடியுமா? அல்லது எமது மக்களுக்காக எதையும் தட்டிக் கேட்க முடியுமா? அப்படி அவர்கள் ஏதாவது செய்தால் நாட்டை மீட்டவர் என்னு மகுடம் சூட்டிய பொன்சேகாவை ஜனாதிபதி கூட்டுக்குள் போட்டது போல் இவர்கள் இருவரையும் தள்ளிவிடுவார்.

இந்திய அரசாங்கத்தினால் வாகரைப் பிரதேச மீனவர்களுக்கு வழங்கப்பட்ட 17 படகுகள் இன்று யாரிடம் உள்ளது? மீனவ சங்கத்திடமா? இல்லை கிழக்கு மாகாண பிள்ளையானும் ஜெயமும் தங்களுக்கு விரும்பியவர்களிடம் வழங்கிவிட்டு அதிலிருந்து நிதி வசூலிக்கிறார்கள். பால்சேனை படகு 2 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாவிற்கு விற்கப்பட்டிருக்கிறது.

இம்முறை நடைபெறும் கிழக்கு மாகாண சபை தேர்தல் தமிழ் மக்களின் நியாயபூர்வ தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு காத்துக் கொண்டிருக்கும் தேர்தல். வெளிநாட்டு அரசாங்கங்கள் இன்று முடிவுக்காக காத்துக் கொண்டிருக்கின்றன. தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட மனித உரிமை மீறல்களை நிருபிப்பதற்கும் தீர்பை நிருபிப்பதற்கும் வழங்குவதற்குமான தேர்தல்.

கிழக்கு மாகாணத்திலும் மனித உரிமை மீறல்கள் நடந்த வாகரைப் பிரதேசத்திலும் மக்கள் அங்குமிங்கும் ஓடித் திரிந்தார்கள் அந்த வேளை குண்டுகள் இங்கு கொண்டு விள வில்லையா? இங்கு பலர் இறக்க வில்லையா? பலர் அங்கவினர்களாக வில்லையா? இதை யார் செய்தார்கள்? இவை நடக்கவில்லையா? இவ்வாறானதொரு சம்பவமே நடக்கவில்லை என பிள்ளையானால் கூறமுடியுமா? நீங்கள் மறந்தாலும் மக்கள் மறக்க மாட்டார்கள்.

இன்று வெற்றிலைக்கு புள்ளடியிடுங்கள் என்று சொல்லும் அத்தனை பேரும் தமிழினத்திற்கு துரோகம் செய்தவர்கள் எமது மக்கள் சரியாக சிந்திக்க வேண்டும் நாம் இத்தனை காலம் அனுபவித்த துன்பத்திற்கு பலனை பெற்றுத்தரும் காலம் கனிந்து வருகிறது. இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரை அமோக வெற்றிபெறச் செய்வதன் மூலம் எமது மக்களுக்கு துரோகம் செய்தவர்களை விரட்டியடிக்க வேண்டும் என்றார்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

எதிர்வரும் 28ம் திகதி முல்லைத்தீவிற்கு செல்கின்றார் பஷில் ராஜபக்ஷ!
[Wednesday, 2013-05-22 20:01:12]

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ எதிர்வரும் 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதன்போது, முல்லைத்தீவு மல்லாவி பகுதி மற்றும் கிளிநொச்சி பாண்டியன் குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் குடிநீர் திட்டத்தினை திறந்துவைக்கவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பின் யாழ். பிராந்திய முகாமையாளர் பாலசுப்பிரமணியம் தவேந்திரகுமார் கூறினார்.



இராணுவத்தினரின் காணி சுபீகரிப்பு குறித்து ஐ.நா அதிகாரிகளுக்கு ஹத்துருசிங்க விளக்கம்!Top News
[Wednesday, 2013-05-22 19:59:38]

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் தேவைக்காக சில காணிகள் இனங்காணப்பட்டுள்ளன. இராணுவம் பொறுப்பேற்கவுள்ளதாக கூறப்படும் காணிகளின் அளவை சிலர் வேண்டுமென்றே அதிகரித்துச் சொல்வதாக யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு விளக்கமளித்துள்ளார். ஐ.நா.வின் மனிதாபிமான ஒத்திசைவாக்க அலுவலகத்தின் உயரதிகாரிகளான அக்னெஸ் அஸகென்பே மற்றும் மார்க் பிரளோபா ஆகியோருக்கு யாழ். வலிகாமம் வடக்கிலுள்ள நிலங்களை இராணுவம் பொறுப்பேற்பது தொடர்பான பிரச்சினை குறித்து விளக்கமளிக்கும் போதே யாழ். கட்டளைத் தளபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது, இராணுவம் பொதுமக்களின் காணிகளை பொறுப்பேற்பதாக கூறுவதை அவர் மறுத்துள்ளார். பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் என்பவற்றின் அபிவிருத்திக்காக காணிகள் பொறுப்பேற்கப்படுவதாகவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.



உடனடியாக 13வது திருத்தம் இரத்துச் செய்யப்பட வேண்டும் - ஹெல உறுமய!
[Wednesday, 2013-05-22 19:52:56]

13 ஆவது திருத்தச் சட்டத்தை அரசாங்கம் உடனடியாக இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஹெல உறுமய தெரிவித்துள்ளது. கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஹெல உறுமயவின் விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் இதற்கான தனிநபர் பிரேரணையின் நகல் வெளியிடப்பட்டது.



சிங்களவர்களின் காணிகளையும் அரசு அபகரிக்கின்றது: விக்கிரமபாகு குற்றச்சாட்டு!
[Wednesday, 2013-05-22 19:47:58]

தமிழ் மக்களின் காணிகளை சுவீகரிக்கும் அரசு அங்கு சிங்களவர்களை குடியமர்த்துவதாக சிங்கள மக்கள் நினைக்கின்றனர். ஆனால் சிங்கள மக்களின் காணிகளை சுவீகரித்து ஒட்டுமொத்த நாட்டினையுமே வெளிநாடுகளுக்கு அரசாங்கம் விற்பனை செய்கின்றதென நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். கொழும்பு பான்ஸ் பிளேஸில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை கட்டியெழுப்பும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



வட மாகாணசபை தேர்தல் நடாத்தப்படாவிட்டால் நாடு இரண்டாகும்: சிறிதுங்க ஜயசூரிய
[Wednesday, 2013-05-22 19:42:31]

வட மாகாண சபைத் தேர்தல் இடம்பெற்றால் இலங்கை ஒருநாடாக இருக்கும் அதேநேரம் தேர்தல் இடம்பெறாது போனால் நாடு இரண்டாக பிளவுபட வழி சமைக்கும் என சேஷலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார். கொழும்பு பான்ஸ் பிளேஸில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை கட்டியெழுப்பும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



இந்திய வீடுகள் அமைக்கும் பணி மட்டக்களப்பில் ஆரம்பம் - இந்திய உயர்ஸ்தானிகர் ஆரம்பித்து வைத்தார்!Top News
[Wednesday, 2013-05-22 19:36:00]

கிழக்கு மாகாணத்தில் இந்திய உதவியுடனான வீடமைப்பு திட்ட வேலைகள் இன்று புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று கிராமங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா ஆகியோர் வீட்டுத் திட்டங்களுக்கான வேலைகளை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தனர். மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேச செயலக நிர்வாக பிரிவிலுள்ள மூன்று கிராமங்களில் நடைபெற்ற இது தொடர்பான நிகழ்வுகளின் போது, சிங்கள கிராமமான மங்களாகம கிராமத்திலே முதலாவது வைபவம் இடம்பெற்றது.



செங்கலடி இரட்டைக் கொலை சந்தேக நபர்களுக்கு 29 ஆந் திகதிவரை விளக்கமறியல்!
[Wednesday, 2013-05-22 19:28:24]

செங்கலடி நகரில் நள்ளிரவில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட செங்கலடி மத்திய கல்லூரி மாணவர்கள் நான்கு பேருக்குமான விளக்கமறியல் காலம் எதிர்வரும் 29 ஆந் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் இன்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டபோது நீதிபதி ஏ.எம்.எம்.றியாழ் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார். பிரபல வர்த்தகர் சிவகுரு ரகு மற்றும் அவரது மனைவி சுந்தரமூர்த்தி விப்ரா ஆகியோர் படுக்கையறையில் கோரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தனர். இக்கொலை தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் செங்கலடி மத்திய கல்லூரியைச் சேர்ந்த நான்கு மாணவர்களை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்தனர்.



இவ்வருட இறுதிக்குள் 340 முன்னாள் போராளிகள் விடுவிக்கப்படுவர் - சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவிப்பு!
[Wednesday, 2013-05-22 16:53:25]

தற்போது புனர்வாழ்வு பெற்றுவருகின்ற முன்னாள் போராளிகள் 340 பேரையும் இந்த வருட இறுதிக்குள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.சமூகமயப்படுத்தல் செயற்பாடுகளை துரிதப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக, வவுனியா மருதமடுவில் இயங்கிவந்த புனர்வாழ்வு முகாம் மூடப்பட்டுள்ளது. அதன்படி இந்த முகாமில் புனர்வாழ்வு பெற்றுவந்த 100 முன்னாள் போராளிகளும் பூந்தோட்டம், சேனதுறை மற்றும் கந்தக்காடு ஆகிய புனர்வாழ்வு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.



தமிழர்களை கொன்ற நினைவு நாளுக்காக தமிழர்களிடம் 10ரூபா அறவிடும் வடமாகாணசபை!
[Wednesday, 2013-05-22 16:48:53]

தேசிய போர் வீரர்கள்' தினத்தை முன்னிட்டு இலங்கை அரசால் வெளியிடப்பட்டுள்ள நினைவு முத்திரையை வடக்கு மாகாண சபை ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் வாங்க வேண்டும் என வற்புறுத்தி விற்பனை செய்யப்படுவதாக மாகாண ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 2009க்குப் பின்னர் இலங்கை அரசால் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 18 ஆம் திகதி போர் வெற்றிவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இதற்காக 5 ரூபா பெறுமதியான நினைவு முத்திரையும் வெளியிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.



பீரிசை தொலைபேசியில் மிரட்டினார் குர்ஷித்?
[Wednesday, 2013-05-22 16:46:25]

இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தம்மை அச்சுறுத்தும் வகையிலோ, அடக்குகின்ற வகையிலோ உரையாடவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை காலை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுடன், இந்திய வெளிவிவகார அமைச்சர் கல்மான் குர்ஷித் தொலைபேசி மூலம் உரையாடியிருந்தார். இதன்போது, மாகாணசபையின் அதிகாரங்களை நீர்த்துப் போகச் செய்யும் வகையிலான சட்டத்திருத்தங்களை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளக் கூடாது என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரிடம் சல்மான் குர்ஷித் எச்சரித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.



மஹிந்த அரசை கவிழ்க்க சூழ்ச்சி தேவையில்லை - ரணில்!
[Wednesday, 2013-05-22 16:38:06]

இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு சூழ்ச்சிகள் செய்யத் தேவையில்லை எனவும் வாக்கு பலத்தின் ஊடாக அரசாங்கத்தை கவிழ்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வெளிநாட்டு பெண் தூதுவர் ஒருவரை சந்தித்த சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை கவிழ்க்க சூழ்ச்சி செய்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானதென ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். ஜேர்மன் உதவி கிடைக்கும் 'பெட்ரிக் நியூமான் பவுன்டேசன்' என்ற அமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நடத்தும் கருத்தரங்கை அரசாங்கத்தை கவிழ்க்கும் சூழ்ச்சி என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதால் அதில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் இன்று (22) பாராளுமன்றில் தெரிவித்தார்.



புதிய சட்டமூலத்தின் ஊடாக வட மாகாண சபையை திரிபுபடுத்த அரசு முயற்சி - கூட்டமைப்பு!
[Wednesday, 2013-05-22 16:32:34]

அரசாங்கம் வட மாகாண சபையை திரிபுபடுத்த புதிய சட்டமூலம் ஒன்றை நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார். கொழும்பு பான்ஸ் பிளேஸில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை கட்டியெழுப்பும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,



ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் தேவை - சம்பந்தனுக்கு அஸாத் சாலி கடிதம்!
[Wednesday, 2013-05-22 16:27:37]

தமிழ் முஸ்லிம் சமூகங்கள் சில முக்கிய பொதுவான விடயங்களில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது என்று தேசிய ஐக்கிய முன்னணியின் பொது செயலாளர் அஸாத் சாலி தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தனுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,



வேடர்களும் நாகர்களுமே இலங்கையின் ஆதிக்குடிகள் - பொதுபல சேனாவுக்கு இதுதான் பதில்! - மனோ கணேசன்!
[Wednesday, 2013-05-22 16:16:55]

பொதுபல சேனாவின் வண. ஞானசார கலபொட தேரர், இந்த நாடு சிங்கள பெளத்தர்களுக்கு மாத்திரம் உரியது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிறார். இதை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் எல்லோரும் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என்கிறார். இந்த அடிப்படையில் வடக்கில் தமிழர் பெரும்பான்மை அதிகாரத்தின் கீழ் மாகாணசபை ஒன்று உருவாக முடியாது என்கிறார். ஆகவே மாகாணசபை முறைமையை ஒழிக்க வேண்டும் என்கிறார். அனைத்துக்கும் முதலில் இந்த நாட்டின் ஆதிகுடிகள் வேடர்கள், நாகர்கள் என்பதை கலபொட தேரர் ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்த அடிப்படை உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறி, தத்தம் மூதாதையர்கள் வந்த நாடுகளுக்கு திரும்ப வேண்டும்.



மின்கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் போராட்டம்!
[Wednesday, 2013-05-22 10:32:03]

சாதாரண மக்கள் இன்றும் அடக்கி ஒடுக்கப்படுகின்றனர். மக்கள் அவ்வாறு அடக்கி ஒடுக்கப்படுகின்றபோது அதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டிய கடமை தொழிற்சங்கம் என்ற வகையில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களுக்கும் உண்டு. இவ்வாறு யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் ஆர்.இராசகுமாரன் தெரிவித்தார். மின்கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ். பல்கலைக்கழக வாயிலில் நேற்று நடந்த கவனவீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர், பல்கலைக்கழக ஆசிரியர் தொழிற்சங்கம் என்ற ரீதியில் பல்கலைக்கழகத்தில் மட்டுமன்றி நாட்டில் எந்தவொரு மக்களும் அடக்கி ஒடுக்கப்படுகின்ற போது அதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டிய கடமை எமக்கு உண்டு. எதிர்காலத்தில் மக்கள் நசுக்கப்படும் போது அடக்கப்படும்போது அதற்கெதிராக நாம் குரல் கொடுப்போம் என்றார்.



எனக்குள் தமிழ் உணர்வை ஏற்படுத்திய சம்பந்தன் ஐயா, மாவை போன்றோரை எனது குருவாக மதிக்கின்றேன் - முரளிதரன்
[Wednesday, 2013-05-22 10:13:18]

எனக்குள் தமிழ் உணர்வை ஏற்படுத்திய சம்பந்தன் ஐயா மற்றும் மாவை சேனாதிராஜா போன்றோரை எனது குருவாக மதிக்கின்றேன் என பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நேற்று சபையில் தெரிவித்தார். ஜனாதிபதியிடம் தான் விடுத்த வேண்டுகோளின் பேரிலேயே முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தோடு இணைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே பிரதியமைச்சர் முரளிதரன் இதனைத் தெரிவித்தார்.



வடக்கை போன்று கிழக்கிலும் இராணுவ ஆட்சி: முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு
[Wednesday, 2013-05-22 10:02:05]

வடக்கில் நிலவி வரும் இராணுவ ஆட்சி போன்றே இப்போது கிழக்கிலும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டியுள்ளார். ராஜகிரியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.



சங்கீதக் கதிரை விளையாட்டு போல அரசிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் வெளியேற முடியாது - ஹக்கீம்
[Wednesday, 2013-05-22 09:52:01]

சங்கீதக் கதிரை விளையாட்டில் பாடல் நின்றவுடன் கதிரையை நீக்கிவிட்டுச் செல்வது போன்று, அரசை விட்டு வெளியேறும் சித்து விளையாட்டில் எமது கட்சி ஈடுபடமாட்டாது. ஆனால் சில சக்திகள் அவ்வாறுதான் விரும்புகின்றன. இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் குற்றம் சாட்டியுள்ளார். குருநாகல் மாவட்டத்தில் குளியாப்பிட்டி, தம்பதெனிய, நிக்கவரெட்டிய தேர்தல் தொகுதிகளில் உள்ள சில கிராமங்களில் நடைபெற்ற கூட்டங்களின் போதே அவர் இவ்வாறு கூறினார்.



அரசின் ஏதேச்சாதிகார நடவடிக்கைகள் நிறுத்தப்படும் வரை - பொதுநலவாய நாடுகள் மாநாடு இலங்கையில் நடாத்தக் கூடாது: - மங்கள சமரவீர
[Wednesday, 2013-05-22 09:49:34]

பொதுநலவாய நாடுகளின் தலைவர்களது அமர்வுகளுக்கான மாநாடு இலங்கையில் நடாத்தப்படக் கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் ஏதேச்சாதிகார நடவடிக்கைகள் நிறுத்தப்படும் வரையில் அமர்வுகளை நடத்தக் கூடாது என அவர் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.



மாத்தளை மனித புதைகுழி விசாரணைகளில் சந்கேம்: ஐ.நாவின் தலையீட்டை கோருகிறது ஆசிய மனித உரிமை ஆணைக்குழு!
[Wednesday, 2013-05-22 09:41:00]

மாத்தளை பாரிய மனித புதைகுழி விசாரணைகள் குறித்து ஆசிய மனித உரிமை ஆணைக்குழு கேள்வி எழுப்பியுள்ளது. பாரிய மனித புதை குழி தொடர்பான விசாரணைகளில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 154 பேரின் உடல் எச்சங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் விசாரணை நடத்திய சட்ட வைத்திய அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், வழக்கு விசாரணை நடத்தி வரும் நீதவானும் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாரிய மனித புதைகுழி தொடர்பில் சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் இந்த இடமாற்ற உத்தரவுகள் குறித்த தகல்கள் வெளியாகியுள்ளன. இந்த விசாரணைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு தலையீடு செய்ய வேண்டுமென ஆசிய மனித உரிமை ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.


AJRwindows22.05.13
TDE_Computers2011
Ramans2011
Suresh-remax-2013-01-01
NIRO-DANCE-100213
Canada Kanthasamy Kovil
INNSYS-20120930
RoyaShades-l2011(04-12-11)
Mahesan supramaniyam 031109
TamilsGuid-191012-2013
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com