Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 26, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
மலையாள படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்கிறார் ஏ.ஆர்.ரகுமான்
[Thursday, 2012-08-16 20:02:37]
News Service

கோலிவுட், பாலிவுட் படங்களை தாண்டி ஹாலிவுட்டிலும் கால் பதித்து இரண்டு ஆஸ்கர் விருதுகளை தட்டி வந்தவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். சொந்தமாக இசை ஆல்பம் வெளியிட்டு, அதில் பாடல்கள் பாடி நடித்திருக்கிறார். பல இயக்குனர்கள் இவரை தங்களது படங்களில் நடிக்க வைக்க வாய்ப்பு கேட்டும் இவர் மறுத்துவிட்டார்.

  

இந்நிலையில் தற்போது மலையாளப் படம் ஒன்றில் கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன. கேரளாவில் நடிகர் பிஜூ மேனனுடன் இணைந்து தயாரித்து, மலையாள படமொன்றை இயக்குகிறார் ஷஜூன் கரியால். 5 நண்பர்களை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் இப்படத்தின் நாயகன் ஏ.ஆர்.ரகுமானிடம் பணியாற்றியவர்.

ஆகையால், இப்படத்தில் கவுரவ வேடத்தில் நடிப்பது குறித்து ஏ.ஆர்.ரகுமானிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அவர் இன்னும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை எனவும் கூறப்படுகிறது.

முழுக்க முழுக்க காமெடியை மையமாகக் கொண்ட இப்படத்தின் கதை முழுவதும் 2 நாட்களில் நடந்து முடிவது போல் ஸ்கிரிப்ட் அமைக்கப்பட்டுள்ளது.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

சூர்யா ஓ.கே சொல்ற கதையிலதான் கார்த்தி நடிப்பாராம்..
[Sunday, 2013-05-26 13:01:47]

ஒரே வீட்டில் இருந்து இரண்டு பேர் சினிமாத்துறைக்குள் வந்து இரண்டுபேருமே முன்னணி நடிகர்களாகியிருப்பது நடிகர் சிவகுமாரின் வீட்டில்தான். அவரது வாரிசுகளான சூர்யா, கார்த்தி என்ற இரண்டு பேருமே இப்போது பேசப்படும் ஹீரோக்கள். இதில் சூர்யா பெரிய ரேஞ்சுக்கு சென்று விட்ட நிலையில், கார்த்தியும் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் சகுனி, அலெக்ஸ் பாண்டியன் படங்கள் அவருக்கு சறுக்கி விட்டதால் அடுத்தபடியாக ஏற்றுக்கொள்ளும் கதையில் அதிகமான கவனம் செலுத்தி வருகின்றனர். இதுவரை, ஒரு குழுவினர் கார்த்திக்கான கதையை கேட்டு முடிவு செய்தனர். அவர்கள் நல்ல கதை என்று அங்கீகரிப்பதை பின்னர் கார்த்தி கேட்பார். ஆனால், அந்த டைரக்டரிடம் நேரடியாக கேட்க மாட்டார். அவரை கேமராவில் கதை சொல்ல வைத்து, பின்னர் அதை வீடியோவில் போட்டுப்பார்ப்பார் கார்த்தி. அது பிடித்திருக்கும்பட்சத்தில் ஓ.கே சொல்லி விடுவார்.



கவர்ச்சி கறையைப் போக்குவதற்கான தீவிர முயற்சியில் சனாகான்..
[Sunday, 2013-05-26 12:53:54]

தமிழ் சினிமாவில் சிலம்பாட்டம், பயணம், ஆயிரம் விளக்கு போன்ற படங்களில் நடித்தவர் சனாகான். அவரது நடிப்பில் தற்போது நடிகையின் டைரி என்ற படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் நடித்துள்ள சனாகான், சற்று தூக்கலாக கிளாமரையும் வெளிப்படுத்தியுள்ளார். அதோடு, படத்தின் போஸ்டர்களும் கிளாமர் படம் போன்றே ஒட்டப்பட்டிருப்பதால், சிலர் அவரை கிளாமர் நடிகை என்றே முத்திரை குத்தி விட்டார்களாம். இதே கதையில் தி டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் நடித்த வித்யாபாலனுக்கு விருது கிடைத்தது போல் தனக்கும் கிடைக்கும் என்ற நப்பாசையில் இருந்த சனாகான், இந்த மாதிரி வார்த்தைகளை காதில் கேட்டு நொந்து விட்டாராம். சில்க் கவர்ச்சிகரமாகவும் நடித்தவர். அதனால் அவரைப்போன்றுதான் நான் அந்த கதையில் நடிக்க முடியும். அதைத்தான் செய்தேன். அதை வைத்து கிளாமர் நடிகை என்று முத்திரை குத்துவது ரொம்ப தவறு என்று தன்னைப்பார்த்து அப்படி விமர்சித்தவர்களிடம் சாடி வருகிறார் சனாகான். மேலும், தன் மீது விழுந்துள்ள இந்த கவர்ச்சி கறையைப் போக்க உடனடியாக குடும்பப்பாங்கான கதைகளில் நடிக்க வேண்டும் என்றும் சில இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார் சனாகான்.



சித்தார்த் என்னை நிஜகாதலியாக தான் பார்த்தார் - ஹன்சிகா
[Sunday, 2013-05-26 12:44:30]

ஏற்கனவே தெலுங்கில் சித்தார்த்துடன் பல படங்களில் டூயட் பாடியவர் ஹன்சிகா. நடித்த படங்கள் வெற்றி பெற்றதால், தொடர்ந்து இணைந்து நடித்த அவர்கள், சில படங்களில் அதிக நெருக்கம் காட்டியும் நடித்தனர். இதனால் ஆந்திராவில் ரொமாண்டிக் ஜோடி என்றும் பெயர் பெற்றார்கள். பின்னர் தமிழில் இருந்து வாய்ப்புகள் சென்றதால் தெலுங்கு படங்களை தள்ளிவைத்து விட்டு தமிழில் முழுநேர நடிகையானார் ஹன்சிகா. இதனால் தொடர்ந்து அவரால் சித்தார்த்துடன் இணைய முடியவில்லை. ஆனால், தற்போது சித்தார்த்தும் தமிழுக்கு வந்து விட்டதால், தீயா வேலை செய்யனும் குமாரு படத்தில் மீண்டும் அவர்கள் இணைந்தனர். தங்களுக்கிடையிலான கெமிஸ்ட்ரி நன்றாக அமையும் என்பதை இந்த படத்திலும் மேலும் நிரூபித்திருக்கிறார்களாம்.



சிந்து சமவெளி மாதிரி படங்களில் இனி நடிக்க மாட்டேன்: அமலாபால் சபதம்
[Sunday, 2013-05-26 12:12:50]

கொலிவுட்டில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமான அமலாபால் தற்போது, தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக காணப்படுகிறார். அறிமுகமான படத்தில் மாமனார், மருமகள் கள்ளக்காதலை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இதில் கணவனுக்கு துரோகம் செய்து அவன் தந்தையுடன் கள்ளத் தொடர்பு வைத்துள்ள கதாபாத்திரத்தில் அமலாபால் நடித்திருந்தார். அந்த படத்தில் நடித்தது பெரிய தவறு என்றும் இனிமேல் அது மாதிரியான படங்களில் நடிக்க மாட்டேன் என்று அமலாபால் கூறினார். இதுகுறித்து அமலாபால் கூறுகையில், சினிமாவுக்கு வந்த புதிதில் எனக்கு அனுபவம் இல்லை. கதை முழுவதையும் கேட்காமல் என் கதாபாத்திரத்தை மட்டுமே தெரிந்து கொண்டு நடித்தேன். அப்படி நான் நடித்த படம் தான் சிந்து சமவெளி. இதற்காக நிறைய விமர்சனங்கள் வந்தன வருத்தப்பட்டேன். ஆனால் இனிமேல் சர்ச்சைகளில் சிக்க மாட்டேன்.



அனிருத்தின் கதாநாயகன் கனவை கலைத்த ரஜினி..!
[Sunday, 2013-05-26 12:04:18]

விஜய், முருகதாஸ் இணையப்போகும் படத்திற்கு அனிருத் இசைமைப்பாளராகிவிட்டார் என்ற செய்தி கோடம்பாக்கத்தில் சில பேருக்கு பெருங்காயத்தையும், சில பேருக்கு வெல்லத்தையும் கரைத்துக் கொடுத்திருக்கிறது. பெருங்காய பார்ட்டிகளை விடுங்கள்.. வெல்லக்கட்டி மனசுக்காரர்களை பார்ப்போம். முதலில் அனிருத்தை அழைத்து பாராட்டியவர் ரஜினிதானாம். "உன் வளர்ச்சிக்கு என்னோட ஆசிர்வாதங்கள்" என்றவர், அதற்கப்புறம் சொன்னதுதான் அனிருத் கைகட்டி வாய்பொத்தி கேட்க வேண்டிய விஷயம். "இப்படியே இசையிலே கவனம் செலுத்தி இன்னும் இன்னும்னு பெரிய படங்கள் செய்யணும். அவ்வளவு ஏன்? நீ என் படத்திற்கு இசையமைக்கிற நேரமும் வந்து கொண்டேயிருக்கு. (பிளான் பண்ணிட்டாரோ) இந்த நேரத்தில் நானே ஹீரோவா நடிக்கிறேன்னு இறங்கி வாழ்க்கைய ஸ்பாயில் பண்ணிக்காதே. இறைவன் காட்ற ரூட்டுல சந்தோஷமா போகணும். நீயே இன்னொரு பாதையை டிசைட் பண்ணி, கிடைச்சிருக்கிறதையும் விட்ற கூடாது. யோசி" என்றாராம்.



தீபிகா படுகோனேயின் முடிவால் அதிர்ச்சியடைந்துள்ள தென்னிந்திய நடிகைகள்..
[Sunday, 2013-05-26 11:54:50]

இந்தியில் நீண்டகாலமாகவே கைத்ரீனா கைப், கரீனா கபூர் போன்ற நடிகைகளின் ஆதிக்கம்தான் இருந்து வந்தது. அதையடுத்து சில இளவட்ட நடிகைகள் வந்தும் அவர்களை ஆட்டவோ அசைக்கவோ முடியவில்லை. ஆனால், அதன்பிறகு என்ட்ரி கொடுத்த தீபிகா படுகோனே, சில ஆண்டுகளிலேயே மேற்படி நடிகைகளை பின்தள்ளி விட்டார். இதனால் தற்போது பாலிவுட்டில் தீபிகாவின் கொடிதான் பறந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், தற்போது ஷாரூக்கானுடன் அவர் நடித்து வரும் சென்னை எக்ஸ்பிரஸ் படம் அதிக எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கிறதாம்.



சிங்கம் 2 இசை வெளியீட்டு விழாவில் சூர்யாவுடன் இணையவுள்ள மேலும் 2 சிங்கங்கள்..
[Sunday, 2013-05-26 11:47:39]

சிங்கம் படத்தை சூர்யாவைக்கொண்டு இயக்கி மெகா ஹிட்டாக கொடுத்த டைரக்டர் ஹரி, மீண்டும் அதே சூர்யாவை வைத்து சிங்கம்-2 படத்தை தற்போது இயக்கியுள்ளார். முந்தைய பாகத்தில் நடித்த அனுஷ்காவுடன் இப்படத்தில் ஹன்சிகா, சந்தானம் போன்றவர்களும் இந்த இரண்டாம் பதிப்பில் இடம்பெற்றிருக்கிறார்கள். இப்படத்தின் ஆடியோ விழா ஜூன் மாதம் 2-ந்தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள டிரேட் சென்டரில் நடைபெற உள்ளது. இந்த ஆடியோ விழாவில், இந்தி சிங்கம் படத்தில் நாயகனாக நடித்த அஜய்தேவ்கன், அப்படத்தின் இயக்குனர் ரோஹித் ஷெட்டி, ஆகியோருடன் கன்னட சிங்கம் படத்தில் நடித்த நான் ஈ சுதீப் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். ஆக, சிங்கம்-2 இசை விழா களை கட்டும் என்று தெரிகிறது.



பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரிப்பு : பாஜக மீது பழி போடும் நடிகை நக்மா
[Saturday, 2013-05-25 18:25:04]

அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் உறுப்பினரான நக்மா ம.பியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு வந்திருந்தார். செய்தியாளர்களிடையே பேசிய அவர் கூறியதாவது. 2004 முதல் 2012ம் ஆண்டு காலகட்டத்தில் மொத்தம் 27,104 பாலியல் வன்கொடுமை குற்றங்கள் மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. தினசரி சராசரியாக 9 பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். மாநிலத்தினை ஆளும் பாஜக அரசு இதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுத்தாக தெரியவில்லை. மலைவாழ், பழங்குடியின பகுதியில் வசிக்கும் 37,000 பெண்கள் இந்த கால கட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 60 சதவிகித பெண் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளனர். 73 சதவிகித பெண்கள் ரத்த சோகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் மாநில அரசு காகித அளவிலேயே பெண்களின் பாதுகாப்பிற்காக திட்டங்களை அறிவிக்கிறது என்று குற்றம் சாட்டினார் நக்மா.



திரையுலகின் தில்லு முல்லு பவர் ஸ்டார் பணம் இன்றி தவிப்பு - வீடுகள் விற்பனை!
[Saturday, 2013-05-25 18:20:14]

பவர்ஸ்டார் என்றாலே பல பிரச்சனைகளுக்கு சொந்த்க்காரர்கள் தான். ஏன் எனில், கோலிவுட் திரையுலகின் தில்லு முல்லு பவர் ஸ்டார் சீனிவாசன் பல நிதி மோசடி பிரச்சனைகளில் சிக்கி சிறைவாசம் சென்றுள்ளார். அதே போல் டோலிவுட்டின் பவர்ஸ்டார் பவன் கல்யானுக்கும் மாபெரும் நிதி சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். தெலுங்கில் பிரபல நடிகராக இருப்பவர் பவர்ஸ்டார் பவன் கல்யாண். ஆந்திராவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலிலும் இருக்கிறார். பவன் கல்யாணுக்கு திடீர் நிதி நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதனால் தனது வீடுகளை விற்க முடிவு செய்துள்ளார்.



கேன்ஸ் திரைப்பட விழாவில் வித்யாபாலனுக்கு தவளைக்கறி விருந்து..
[Saturday, 2013-05-25 18:16:25]

66வது கேன்ஸ் திரைப்படவிழா தற்போது பிரான்ஸி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் பாலிவுட் கனவுநாயகி வித்யாபாலன் நடுவர்களில் ஒருவராக கலந்துகொண்டு சிறப்பித்துவருகிறார். நேற்று மதியம் இந்த விழாவில் கலந்து கொண்ட அனைத்து நடுவர்களுக்கு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்தில் அனைவருக்கு தவளைக்கறி பரிமாறப்பட்டது. வித்யாபாலனுக்கு தவளை பரிமாறப்பட்டதால் அவர் அதிர்ச்சியடைந்தார். தவளைக்கறியோடு சிக்கன் பிரெஸ்ட்,விக்டோரியோ ஒயிட் அண்ட் பைன் ஆப்பிள் கலந்த ரம், ரோஸ்டட் கோகனட் ஐஸ்கிரீம், மற்றும் லாலிபாப் சாக்லேட் ரம் ஆகியவை பரிமாறப்பட்டது. இதில் தவளை தவிற மற்ற அனைத்து வகைகளையும் வித்யாபாலன் ருசித்து சாப்பிட்டார்.



பகலவனில் நடிக்க மறுத்த விஜய் - பட வாய்ப்பு ஜெயம் ரவிக்கு போனது...
[Saturday, 2013-05-25 18:09:42]

சினிமாவில் ஒரு நடிகர் மறுத்த கதையில் இன்னொரு நடிகர் நடிப்பது ஒன்றும் புதிய விடயமல்ல. அந்தவகையில் விஜய்க்காக சீமான் எழுதிய கதைதான் பகலவன். இதில் முதலில் நடிப்பதாகச் சொன்ன விஜய், பின்னர் தன்னை வைத்து முருகதாஸ், கெளதம்மேனன் என சில முன்னணி இயக்குனர்கள் படமெடுக்க முன்வந்ததால் சீமான் படத்தில் நடிக்க மறுத்தார். அதனால், பல மாதங்களாக அவருக்காகக் காத்திருந்த சீமான், பின்னர் ஜீவா உட்பட்ட சில நடிகர்களிடம் அந்தக் கதையைச் சொல்லி நடிக்கக் கேட்டார். விஜய் நடிக்க மறுத்த கதை என்பதால் அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்நிலையில், சமீபத்தில் பகலவன் கதையைக் கேட்டு ஜெயம் ரவி தான் நடிப்பதாக ஒப்புதல் தெரிவித்துள்ளாராம். தற்போது சமுத்திரக்கனியின் 'நிமிர்ந்து நில்' மற்றும் 'பூலோகம்' படங்களில் நடித்து வரும் ஜெயம் ரவி, அப்படங்களை முடித்ததும் சீமான் படத்தில் நடிக்கிறாராம்.



ஒரே நைட்டில் நடக்கிற கதைகள் தமிழிலேயே தாராளமாக உண்டு! - மீரா கதிரவனின் கதை..
[Saturday, 2013-05-25 18:07:54]

ஒரே நாளில் நடக்கிற கதை, ஒரு மணி நேரத்தில் நடக்கிற கதை மாதி‌ரி ஒரே நைட்டில் நடக்கிற கதைகள் தமிழிலேயே தாராளமாக உண்டு. இன்றைய தேதியில் விடியும்முன் என்றொரு படம் ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை வைத்து தயாராகி வருகிறது. மீரா கதிரவனின் விழித்திரு படமும் ஒரு நைட் கதைதான். அவள் பெயர் தமிழரசியில் எந்த ஆச்ச‌ரியத்தையும் ஏற்படுத்தாதவர் விழித்திரு குறித்து சொல்லும் ஒவ்வொன்றுமே ஆச்ச‌ரியமானவை.



பிரியாணியின் முன்னோட்டம் வெளிவந்துவிட்டது... Top News
[Saturday, 2013-05-25 18:02:14]


சிறுமி கடத்தல் வழக்கில் சிக்கிய மெண்டல் பட நடிகை சனாகான் தலைமறைவு!
[Saturday, 2013-05-25 17:55:45]

சல்மான் கானின் மெண்டல் படத்தில் நடித்து வரும் நடிகை சனா கான், தற்போது தலைமறைவாகியுள்ளதாக போலீஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளது. தனது உறவினர் ஒருவரின் திருமணத்துக்காக 15 வயதுச் சிறுமியை வலுக்கட்டாயமாகக் கடத்த முயன்றார் என்று சனாகான் மீது கடத்தல் வழக்கு பதியப் பட்டது. இந்நிலையில், அவர் தலைமறைவாகியுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.



யுவனின் கனவு பலித்தது : கமல் படத்திற்கு இசை..
[Saturday, 2013-05-25 17:52:30]

சரத்குமார் நடித்த அரவிந்தன் படத்தில் இசையமைப்பாளரானவர் யுவன்ஷங்கர்ராஜா. அதையடுத்து தொடர்ந்து ஹிட் கொடுத்து வந்தவர், தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். இருப்பினும் தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள பிரியாணி படத்தோடு 100 படங்களுக்கு இசையமைத்து விட்ட யுவன், ரஜினி-கமல் நடித்த ஒரு படத்துக்குகூட இசையமைக்கவில்லை. அதனால், அவருக்கு அது ஒரு மனக்குறையாகவே இருந்து வந்ததாம். இந்த நிலையில், தற்போது லிங்குசாமி தயாரிப்பில் கமல் இயக்கி நடிக்கும் படத்துக்கு யுவன்தான் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியிருக்கிறார். லிங்குசாமி கம்பெனி படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வரும் யுவன்ஷங்கரை புக் பண்ணிவிட்டதாக அவர் கமலிடம் சொன்னபோது, யுவன் நல்ல இசையமைப்பாளர்தானே. அவருடன் பணியாற்றுவதில் எனக்கும் ரொம்ப சந்தோசம் என்று சொன்னாராம் கமல்.



கிரிக்கெட் சூதாட்டத்தில் ஸ்ரீசாந்துடன் நெருங்கி பழகிய நடிகைகள்: - போலீஸ் விசாரணை.
[Saturday, 2013-05-25 17:49:51]

கிரிக்கெட் சூதாட்டத்தில் கைதான ஸ்ரீசாந்துடன் நெருங்கி பழகிய நடிகைகள் விவரங்களை போலீசார் சேகரிக்கிறார்கள். அவர்களிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது. ஸ்ரீசாந்துடன் அதிக நெருக்கம் வைத்திருந்தவர் இந்தி நடிகை சுர்வின் சாவ்லா. இருவரும் ரியாலிட்டி ஷோ ஒன்றில் ஜோடியாக நடனம் ஆடினர். அதன் பிறகு அடிக்கடி சந்தித்து பேசினார்கள். இருவரும் காதலிப்பதாகவும் கிசுகிசுக்கள் வெளியானது. எனவே சுர்வின் சாவ்லாவிடம் போலீசார் விசாரணை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



பாரதிராஜாவின் புதுமை புரட்சி சின்னத்திரை சீரியலிலும் ஆரம்பம்..
[Saturday, 2013-05-25 17:30:30]
சினிமாவில் சமூக அக்கறையுடன் படங்கள் இயக்கி வருபவர் பாரதிராஜா. அவர் இயக்கிய சில படங்களுக்குக்காக தேசிய விருதுகளும் பெற்றுள்ளார். அதில் சிவாஜிகணேசன்-ராதா நடித்த முதல் மரியாதையும் ஒன்று. இப்படத்தில் இளையராஜாவின் இசையில் உருவான பாடல்கள் பட்டிதொட்டியெல்லாம் பட்டையக்கிளப்பியது. அந்த அளவுக்கு பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்து கூட்டணி கொடிகட்டிப்பறந்த பொற்காலம் அது. அந்த பாரதிராஜா தற்போது அன்னக்கொடி என்றொரு படத்தை இயக்கியிருந்தபோதும், அதற்கு முன்பு தெற்கத்தி பொண்ணு என்றொரு தொடரை கலைஞர் டி.விக்காக இயக்கி வந்தவர், இப்போது முதல்மரியாதை என்ற பெயரிலேயே ஒரு நெடுந்தொடரை இயக்கப்போகிறாராம். குடும்ப உறவுகள் பற்றிய செண்டிமென்டான தொடர் என்பதால், இதற்காக கிழக்குச்சீமையிலே படம் போன்று 7 பாடல்களையும் உருவாக்கியுள்ளாராம் பாரதிராஜா. அதோடு நில்லாமல் அந்த பாடல்களை ஆடியோ விழா நடத்தி சினிமா பாணியில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளார். பாரதிராஜா செய்யப்போகும் இந்த புதுமை சின்னத்திரை வட்டாரத்தை பரபரப்பாக்கியுள்ளது.


அஞ்சலிக்கு எதிராக தீவிரமாக செயற்படும் அமலா பால்..
[Friday, 2013-05-24 18:42:37]

சித்தியுடன் ஏற்பட்ட மனக் கசப்பு காரணமாக, முழுநேர தெலுங்கு நடிகையாகி விட்டார், அஞ்சலி. கோலிவுட்டிலிருந்து, பட விஷயமாக யாராவது பேசினாலும், தெலுங்கில், நான் ரொம்ப பிசி. அப்புறம் பார்க்கலாம் என, போனை, கட் பண்ணி விடுகிறாராம்.தெலுங்கில் ஏற்கனவே, சமந்தா, அமலா பால், கைகள் ஓங்கியிருப்பதால், அவர்களை வீழ்த்தி விட்டு, முன்னணி நடிகையாகி விட வேண்டும் என, முண்டியடித்து வருகிறார். அஞ்சலியின் இந்த அதிரடி முயற்சி காரணமாக, அமலா பால் பேசி வைத்திருந்த, ஒரு படம், அஞ்சலிக்கு வந்து விட்டதாம். அதனால், இதுவரை சத்தமில்லாமல் நடித்து வந்த அமலா, அஞ்சலிக்கு எதிரான நடவடிக்கைகளில், தீவிரமாக இறங்கியுள்ளதோடு, பட வாய்ப்புகளை கைப்பற்றுவதற்காக, சம்பளம், கிளாமர் போன்ற விஷயங்களில், தாராளம் காட்டவும் முடிவு செய்துள்ளாராம்.



ஐ படத்தில் பாடிபில்டராக நடிக்கும் விக்ரம்
[Friday, 2013-05-24 18:38:05]

உடல் எடையை ஏற்றியும், இறக்கியும் ஷங்கரின் 'ஐ' படத்தில் விக்ரம் நடித்துள்ளார். படத்தின் சில காட்சிகளில் பாடிபில்டராக விக்ரம் வருகிறார். தமிழ் நாடு பாடிபில்டிங் சாம்பியன் காமராஜ் வில்லனாகவும், முன்னாள் மிஸ்டர் இந்தியா அரசு நடுவராகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. ஐ படத்தின் நாயகன் வேடத்துக்காக விக்ரம் கடுமையாக உடற்பயிற்சிகளை செய்து உழைத்துள்ளார். தற்போது நியூசிலாந்தில் நடக்கும் படப்பிடிப்பில் இருக்கிறார். படத்தில் 'பாடிபில்டிங்' சம்பந்தப்பட்ட காட்சிகளை இயக்குனர் ஷங்கர் வைத்துள்ளார். முக்கியமான பாடிபில்டர்ஸ் படத்தில் வருகிறார்கள் என்கிறது பட வட்டாரம்.



'தீயா வேலை செய்யணும் குமாரு'விற்கு யு சான்றிதழ்..
[Friday, 2013-05-24 18:01:51]

கொலிவுட்டில் சித்தார்த், ஹன்சிகா மொத்வானி நடித்த தீயா வேலை செய்யணும் குமாரு படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. இப்படத்தில் சந்தானம் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். மத கஜ ராஜா திரைப்படத்துக்குப் பின்பு சுந்தர்.சி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இயக்குனர் சுந்தர்.சி-யின் மனைவி குஷ்பூ சுந்தர் இப்படத்தை தயாரித்து இருக்கிறார். எங்கேயும் எப்போதும் படத்தின் இசையமைப்பாளர் சத்யா இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்றுவிட்டன. தீயா வேலை செய்யணும் குமாரு யூன் 14ம் திகதி வெளியாகிறது. இதனிடையே படம் தணிக்கைக் குழுவின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது. முழுப்படத்தையும் பார்த்த தணிக்கைக் குழு அதிகாரிகள் படத்திற்கு 'யு' சான்றிதழ் அளித்துள்ளனர். படத்தை யுடிவி நிறுவனம் விநியோகம் செய்யவிருக்கிறது.


Ramans2011
RoyaShades-l2011(04-12-11)
TamilsGuid-191012-2013
AJRwindows22.05.13
Canada Kanthasamy Kovil
INNSYS-20120930
Suresh-remax-2013-01-01
TDE_Computers2011
NIRO-DANCE-100213
Mahesan supramaniyam 031109
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com