Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 26, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
லோக்பால் மசோதா நிறைவேற அனைத்துக் கட்சிகள் ஒத்துழைப்பு தேவை: பிரதமர் மன்மோகன் சிங்கின் சுதந்திர தின உரை
[Wednesday, 2012-08-15 23:45:38]
News Service

அரசியல் வேறுபாடுகளை மறந்து, இறுதி வடிவம் பெற்றுள்ள லோக்பால் மசோதா நிறைவேற அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டார் பிரதமர் மன்மோகன் சிங்.

  

சுதந்திர இந்தியாவின் 66வது சுதந்திரத் திருநாளை ஒட்டி, தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தின உரை நிகழ்த்தினார் பிரதமர் மன்மோகன் சிங். காந்தி நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்திவிட்டு, முப்படைத் தளபதிகளுடன் ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்று, இன்று காலை 7.30 மணி அளவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் பிரதமர் மன்மோகன் சிங். அதன் பின்னர் அவர் உரை நிகழ்த்தினார். அவரது உரையில், லோக்பால் மசோதா, லோக் ஆயுக்தா மசோதா, ஊழலுக்கு எதிரான போராட்டம், அசாம் கலவரம், போலியோ எதிர்ப்பு, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல், செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்புதல் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

பிரதமரின் சுதந்திர தின உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்:

*உலக பொருளாதாரம் தற்போது கடினமான கட்டத்தை கடந்து கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள். நமது நாட்டுக்கு வெளியே நிலவும் சூழலுக்கு நம்மால் பெரிதாக எதுவும் செய்து விடமுடியாது. ஆனால் நமது நாட்டுக்குள் நடக்கும் பிரச்சனைகளை தீர்க்க நாம் முழு முயற்சி எடுக்க வேண்டியது அவசியம். இதனால் பொருளாதாரம் வளர்ச்சியடைவதோடு, வேலை வாய்ப்புகளும் விரைவாக பெருகும்.

*நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகப்படுத்த, புதிய முதலீட்டை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அரசு நிதி மேலாண்மையை மேம்படுத்துவது, சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பது, நாட்டின் எரிபொருள் பாதுகாப்பை மேம்படுத்துவது ஆகியவற்றையும் மேற்கொள்ள வேண்டும்.

*இந்த கடினமான காலகட்டம் நீண்ட காலத்திற்கு நீடிக்காது. கடந்த 8 ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் அபரிமிதமான வெற்றியை எட்டியுள்ளோம் என்ற உண்மையை எண்ணிப்பார்த்து நம்மை நாமே ஊக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த வெற்றியை புதிய துறைகளுக்கும் பரவச் செய்வது அவசியம்.

*தற்போது மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தின் வழியாக நமது நாட்டில் உள்ள 5 குடும்பங்களில் ஒரு குடும்பம் என்ற விகிதத்தில் வேலை வாய்ப்பினை பெற்று வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டில் மட்டும் 8 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு வேலை வாய்ப்பினை அளித்துள்ளோம்.

*2004-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தபோது, அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி அளிப்போம் என்று உறுதி அளித்தது. இதனை நிறைவேற்ற ராஜீவ்காந்தி ஊரக மின்சக்தி திட்டம் துவக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கிராமங்களுக்கு புதிதாக மின்சார வசதி செய்து தரப்பட்டது. இப்போது நமது நாட்டில் உள்ள ஏறத்தாழ அனைத்து கிராமங்களும் மின்சார வசதியைப் பெற்றுள்ளன. நமது அடுத்த இலக்கு நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் அடுத்த 5 ஆண்டுகளில் மின்சார வசதி அளிப்பதும், மின் விநியோகத்தை மேம்படுத்துவதும்தான்.

*6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளில் பெரும்பாலானோர் இன்று பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில், நமது நாட்டில் 51 ஆயிரத்திற்கும் அதிகமான புதிய பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. சுமார் 7 லட்சம் ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் தற்போது கவனம் செலுத்துவோம். கற்பதில் குழந்தைகள் அடையும் பலனை தொடர்ந்து மதிப்பீடு செய்வதற்கான புதிய அமைப்பினை அடுத்த சில மாதங்களில் செயல்படுத்த உள்ளோம். இதில் சமூக மற்றும் பெற்றோர்களின் பங்களிப்பையும் உறுதி செய்வோம்.

*தேசிய பணித்திறன் வளர்ச்சி குழுமம், அடுத்த 5 ஆண்டுகளில் 8 கோடி பேருக்கு பணித்திறன் பயிற்சி அளிப்பதற்கான முக்கிய திட்டத்தை வகுத்துள்ளது. மத்திய அரசின் சிறப்பு முகமை வாயிலாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தேசிய பணித்திறன் வளர்ச்சி ஆணையத்தை உருவாக்கி நாடெங்கிலும் பணித்திறன் மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்துவதையும் அரசு பரிசீலித்து வருகிறது.

*உள்கட்டமைப்பு வளர்ச்சியை விரைவு படுத்த அண்மையில் பல்வேறு புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சாலைகள், விமான நிலையங்கள், ரயில்வே, மின்சக்தி உற்பத்தி, நிலக்கரி உற்பத்தி ஆகிய துறைகளில் மாபெரும் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. தனியார் உதவியுடன் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் முதலீட்டை மேம்படுத்துவதற்காக அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அந்நிய முதலீட்டை ஈர்ப்பதற்காக, சர்வதேச அளவில் நம்பிக்கையை நாம் ஏற்படுத்தவேண்டும்.

*10 ஆண்டுகளுக்கு முன்பு 10 வீடுகளுக்கு மூன்று என்ற விகிதத்தில் நமது கிராமங்கள் வங்கி சேவைகளை பெற்று வந்தன. நம் நாட்டில் கிராமப்புறங்களில் வசிக்கும் குடும்பங்களில் 50 விழுக்காட்டிற்கும் அதிகமானவை இன்று வங்கி கணக்குகளை துவக்கி உள்ளன. வரும் 2 ஆண்டுகளில் அனைத்து குடும்பங்களையும் வங்கிக்கணக்கை துவக்க செய்வதே அரசின் அடுத்த நடவடிக்கையாகும்.

*முதியோர்களுக்கான ஓய்வூதியம், மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, தொழிலாளர்களுக்கான ஊதியம் ஆகியவை நேரடியாக சம்பந்தப்பட்ட மக்களின் வங்கிக்கணக்குகளுக்கு சென்று சேருமாறு அரசு ஒரு அமைப்பை உருவாக்க விரும்புகிறது. இது மக்கள் எளிதாக பணத்தை பெறவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் உதவும். இந்தப் பணிக்கு, சுமார் 20 கோடி மக்கள் பதிவு செய்துள்ள ஆதார் திட்டத்தின் உதவியும் பெறப்படும்.

*நகர்புற பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்களுக்காக ராஜீவ் வீட்டுக்கடன் வசதி திட்டம் விரைவில் துவக்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொருளாதார ரீதியில் நலிந்த மக்கள் பெறும் ரூ.5 லட்சத்திற்கும் குறைவான வீட்டுக்கடன்களுக்கு வட்டியில் சலுகை பெறலாம்.

*அசாம் மாநிலத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் துரதிர்ஷ்டமானவை. அங்குள்ள ஏராளமான மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை எண்ணி வருந்துகிறோம். இவர்களுக்கு நிவாரணம் வழங்க எங்களாலான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். இந்த வன்முறைக்கு பின்புலமாக உள்ள காரணங்களை அறிந்து கொள்ளவும், வருங்காலத்தில் நாட்டின் பிற பகுதிகளில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு அனைத்து முயற்சிகளும் எடுக்கும்.

*இந்த ஆண்டில் அக்னி 5 ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்ததற்கும், ரிசாட்-1 செயற்கை கோளை ஏவியதற்கும் நமது நாட்டு விஞ்ஞானிகளையும், தொழில்நுட்ப வல்லுநர்களையும் பாராட்டுகிறேன். செவ்வாய் கிரக ஆய்வுத்திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. நமது விண்கலம் செவ்வாய் கிரகத்தை சுற்றி வந்து முக்கியமான அறிவியல் தகவல்களை சேகரிக்க உள்ளது. இப்பணியானது நம் நாட்டு அறிவியல் தொழில் நுட்ப துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும்.

*முப்படை வீரர்களுக்கான ஊதியம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான அம்சங்களை ஆராய்வதற்காக மத்திய அரசு, ஆணையம் ஒன்றை அமைத்துள்ளது. இந்த ஆணையம் ஓய்வு பெற்ற வீரர்கள், அலுவலர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கான ஓய்வூதியம் தொடர்பான அனைத்து அம்சங்களையும் பரிசீலிக்கும். இந்த ஆணையத்தின் பரிந்துரைகள் கிடைத்தவுடன் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும்.

*அரசு பணிகளையும், நிர்வாகத்தையும், வெளிப்படையாகவும், பொறுப்புணர்வோடும் நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று கடந்த சுதந்திர தினத்தன்று உறுதி அளித்தோம். இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளோம் என்று சொல்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். லோக்பால், லோக் அயுக்தா மசோதாவை மக்களவை நிறைவேற்றியுள்ளது. மாநிலங்களவையிலும் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் உதவி செய்யும் என்று நம்புகிறோம். பொது கொள்முதல் மசோதாவிற்கு அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

சீனாவுடனான பிரச்சினைக்கு உடனடித் தீர்வு கிடைக்காது - பாதுகாப்பு அமைச்சர் அந்தோனி!
[Sunday, 2013-05-26 08:09:16]

சீனா உடனான பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு கிடைத்து அதிசயம் நடக்கும் என தான் எதிர்பார்க்கவில்லை என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி தெரிவித்துள்ளார். கேரளாவில் எழிமலா என்ற இடத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில இதனை அவர் தெரிவித்தார். இந்தியா சீனா இரு நாடுகளிடையே ஒத்துழைப்பும் போட்டியும் உள்ளது என்றும் அண்டை நாடுகளாக உள்ள இரு நாடுகளும் இணைந்து பணியாற்றும் என்றும் ஏ.கே. அந்தோனி தெரிவித்துள்ளார். இரு நாடுகளிடையே நிலவும் பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலம் தீ்ர்க்க முயற்சி எடுத்து வருவதாகவும் ஏ.கே. அந்தோனி கூறினார். அதற்கு இரு நாடுகளும் போதிய கால அவகாசம் எடுத்துக் கொள்வது இயற்கையே என்றும் அவர் குறிப்பிட்டார்.



ஏழுமலையானிடம் 50 ஆயிரம் கோடி ரூபா மதிப்புள்ள 11 டன் தங்க ஆபரணங்கள் - படங்களை இணையத்தில் வெளியிட முடிவு!
[Sunday, 2013-05-26 07:37:44]

திருப்பதி ஏழுமலையான் கோயில் நகை, ஆபரணங்களின் படங்களை இணைய தளத்தில் வெளியிட தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமிக்காக 11 டன் தங்க நகைகள், 5 ஆயிரம் ஆபரணங்கள் உள்ளன. இதில் மூலவருக்கும், உற்சவருக்கும் தினமும் பல்வேறு அலங்காரம் செய்யப்படுகிறது. சிறப்பு உற்சவ நாட்களில் சுவாமிக்கு வைர கிரீடங்கள் அணிவிக்கப்படுகிறது. இதற்காக 19ம் நூற்றாண்டில் பல்லவ ராணி, கிருஷ்ண தேவராயர், வெங்கடகிரி ஜமீன்தாரர்கள் விலை உயர்ந்த வைரம், வைடூரியங்கள் பொருத்திய ஆபரணங்களை வழங்கினர். இவை பாதுகாப்பாகவும், கணக்கு சரியாகவும் உள்ளதா என பல ஆண்டுகளாக பக்தர்கள் மத்தியில் சந்தேகம் இருந்து வந்தது.



பாமக இடம்பெறும் அணியில் விடுதலைச் சிறுத்தைகள் இருக்காது - திருமாவளவன் திட்டவட்டம்!
[Sunday, 2013-05-26 07:31:32]

பாமக இடம்பெறும் அணியில் விடுதலைச் சிறுத்தைகள் இடம்பெறுவது என்பது சாத்தியமில்லாதது என்று அக் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். மாநிலங்களவைத் தேர்தலில் பாமகவின் ஆதரவை கேட்டுப் பெறுவதற்கான முயற்சியில் திமுக ஈடுபட்டுள்ளது.சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பா.ம.க. நிறுவனர் ராமதாசை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி இருவரும் வெள்ளிக்கிழமை சந்தித்து உடல்நலம் விசாரித்துள்ளனர். மாநிலங்களவைத் தேர்தலுக்கு பா.ம.க.வின் ஆதரவை திமுக கேட்டுள்ளதுடன், பா.ம.க.வும் திமுகவை ஆதரிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.



நக்சல்களின் தாக்குதலில் முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட 21 பேர் பலி - வி.சி.சுக்லாவுக்கு காயம், மாநில காங்கிரஸ் தலைவர் கடத்தல்!
[Sunday, 2013-05-26 07:13:53]

சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று மாலை நக்சலைட்கள் நடத்திய தாக்குதலில் முன்னாள் மாநில உள்துறை அமைச்சர் உள்ளிட்ட 21 பேர் கொல்லப்பட்டதுடன் முன்னாள் மத்திய அமைச்சர் வி.சி.சுக்லா உள்ளிட்ட பலர் படுகாயமடைந்தார். இந்தச் சம்பவம் மத்திய அரசை பெரிதும் அதிரச்சியடைய வைத்துள்ளது. சத்தீஸ்கரின் ஜக்தால்பூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிமாற்ற யாத்திரை சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு விட்டு காங்கிரஸ் தலைவர்கள் ஜக்தால்பூருக்கு வாகனங்களில் திரும்பிக் கொண்டிருந்தனர். கீடம் காட்டி என்ற வனப்பகுதியை அடுத்த தர்பா காட்டி கிராமத்தில் மாலை 5.30 மணியளவில் அவர்களது வாகனங்கள் சென்றபோது, ஆயுதம் தாங்கிய சுமார் 100-150 மாவோயிஸ்ட்டுகள் அவர்களை வழிமறித்தனர்.



அறுபது ஆண்டுகளில் யாரும் பெறாத இடத்தைப் பெற்றார் டிஎம்எஸ் - கருணாநிதி இரங்கல்!
[Saturday, 2013-05-25 18:52:59]

சென்னையில் இன்று காலமான பிரபல பின்னணிப் பாடகர் டி.எம்.செளந்தரராஜனுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:- 1950ஆம் ஆண்டில் சேலம் மாடர்ன் தியேட்டரில் மந்திரிகுமாரி திரைப்படத்திற்கு நான் திரைக்கதை-வசனம் எழுதிய காலத்திலிருந்து, நண்பர் டி.எம்.எஸ். அவர்களுடன் எனக்கு நல்ல நட்பு உண்டு. திரை இசை, மக்கள் இசை! அதன் அறுபது ஆண்டு கால வரலாற்றில் வேறு எந்தப் பாடகரும் பெறாத இடத்தை டி.எம்.எஸ். பெற்றிருக்கிறார். தியாகராஜ பாகவதரைப் பின்பற்றிப் பாடத் தொடங்கியவர்; இசை அமைப்பாளர் ஜி. ராமநாதனால் சிறந்த பின்னணிப் பாடகராக உருவாக்கப்பட்டவர்.



ஐபிஎல் சூதாட்டத்தில் கிறிஸ் கெய்ல் மீதும் சந்தேகம்!
[Saturday, 2013-05-25 18:42:17]

நாட்டை உலுக்கி எடுத்து வரும் ஐபிஎல் பிக்ஸிங் விவகாரத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் புயலாக வர்ணிக்கப்படும் கிறிஸ் கெய்ல் பெயரும் அடிபடுகிறது. பிக்ஸிங் விவகாரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 3 வீரர்கள் சிறைக்குப் போனார்கள். பிறகு நாட்டின் பல நகரங்களிலும் பல புக்கிகள் தொடர்ந்தும் சிக்கி வருகின்றனர். பாலிவுட் நடிகர் வின்துவும் சிக்கப் போய் இப்போ சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகி குருநாத் மெய்யப்பன் சிறைக்குப் போயிருக்கிறார். அத்துடன் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின் 8 வீரர்கள் சிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்த நிலையில் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர் கிறிஸ் கெய்ல் பெயரும் பிக்ஸிங் விவகாரத்தில் அடிபடுகிறது.



ஆந்திராவில் அனலாய் கொதிக்கும் வெயில் - நேற்று மட்டும் 293 பேர் பலி!
[Saturday, 2013-05-25 18:20:26]

ஆந்திராவில் கடந்த சில நாட்களாக அனல் காற்றுடன் வெயில் கொளுத்துகிறது. நேற்று மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 115 டிகிரிக்கும் அதிகமாக வெயில் பதிவானது. கம்மம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 122 டிகிரி வெயில் கொளுத்தியது. நெருப்பு மழை கொட்டுவது போல் அனல் காற்று வீசியது. இரவு 10 மணி ஆன போதிலும் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை. அனல் காற்று மற்றும் வெயிலின் வெப்பத்துக்கு ஆந்திராவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 293 பேர் பலியானார்கள். இவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள், கூலித் தொழிலாளர்கள், குழந்தைகள் ஆவார்கள்.



மணிப்பூரில் பேச்சுக்கு வந்த போராளிக் குழுத் தலைவர் சுட்டுக்கொலை!
[Saturday, 2013-05-25 17:58:50]

மணிப்பூர் மாநிலத்தைப் பிரிக்க வேண்டும் என்று குகி தேசிய முன்னணி உள்ளிட்ட பல போராளி இயக்கங்கள் போராடி வருகின்றன. தற்போது அந்த இயக்கங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதற்காக நியமிக்கப்பட்ட சிறப்பு முகாம்களில் தீவிரவாத இயக்க தலைவர்கள் தங்கியிருக்கின்றனர். அமைதி பேச்சுவார்த்தைக்காக, சேனாபதி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தங்கியிருந்த குகி தேசிய முன்னணி தலைவர் சீகோபாவ் கிப்கன் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அந்த முகாமின் கமாண்டராகவும் அவர் செயல்பட்டு வந்தார்.



எல்லையில் பாகிஸ்தான் படையினர் சுட்டதில் இந்திய பிரிகேடியர் படுகாயம் - மற்றொரு வீரர் கண்ணிவெடிக்குப் பலி!
[Saturday, 2013-05-25 17:52:00]

இந்திய எல்லையான காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பிரிகேடியர் ஒருவரும், 2 வீரர்களும் காயமடைந்தனர். எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் துத்மாரி கலி என்ற இடத்தில், பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறிய ரக ஆயுதங்களைக் கொண்டு இந்திய எல்லையைக் குறி வைத்து தாக்குதல் நடத்தினர். இதில் மூன்று பேர் காயமடைந்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் எல்லைப் பகுதியான பூஞ்சில் நேரிட்ட கண்ணிவெடித் தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார்.



மருத்துவமனையில் ராமதாசை சந்தித்து நலம் விசாரித்தார் கனிமொழி - பாமகவுடன் கூட்டணிக்கு திமுக புதுவியூகம்!
[Saturday, 2013-05-25 08:05:35]

மாநிலங்களவைத் தேர்தலில் தி.மு.க. எப்படியாவது ஓரிடத்தையாவது கைப்பற்ற வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறது. கனிமொழி, திருச்சி சிவா ஆகிய இருவரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வரும் ஜூலை மாதம் 24-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், கனிமொழியை மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக்க வேண்டும் என்கிற முயற்சியில் தி.மு.க. தலைமை ஈடுபட்டிருக்கிறது.மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணத்தில் கனிமொழி, கடலூர் மற்றும் தூத்துக்குடி தொகுதிகளில் கள ஆய்வுகள் செய்திருந்தார்.



"இந்தியத் தூதரகம் விடுவிக்க முயற்சிக்கவில்லை"- சிறையில் இருந்து மீண்ட காரைக்கால் மீனவர்கள் குற்றச்சாட்டு!
[Saturday, 2013-05-25 07:53:57]

தங்களை விடுவிக்க, இலங்கை அமைச்சர்கள் சிலர் எடுத்த முயற்சியை கூட இந்திய தூதரகம் எடுக்கவில்லை என்று காரைக்கால் திரும்பிய தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 26 மீனவர்கள் நேற்று காரைக்கால் திரும்பினர். அவர்களை உறவினர்கள், சக மீனவர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர். காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ஏப்ரல் 3ம் தேதி 5 படகுகளில் 26 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். எல்லையில் அத்துமீறி நுழைந்ததாக அவர்களை 5ம் தேதி இலங்கை கடற்படை கைது செய்தது. இந்நிலையில், 20ம் தேதி மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. தொடர்ந்து இலங்கை பகுதியில் கடல் சீற்றம் காணப்பட்டதால், மீனவர்களை இந்திய கடற்படை வசம் ஒப்படைப்பதில் சிக்கல் நீடித்தது.



தஞ்சாவூரில் நவீன மயப்படுத்தப்பட்ட விமானப்படைத்தளம் - நாளை மறுநாள் திறப்பு விழா!
[Saturday, 2013-05-25 07:46:42]

தஞ்சையில் ரூ.150 கோடியில் நவீன மயமாக்கப்பட்டுள்ள விமானப்படை தளத்தின் திறப்பு விழா வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி பங்கேற்கிறார். தஞ்சை புதுக்கோட்டை சாலையில் உள்ள விமானப்படை தளத்தில் ரூ.150 கோடியில் 2 ஆண்டுகளாக பல்வேறு நவீனமயமாக்கல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதில் ஒரு பகுதியாக புதிதாக 4 கிமீ நீளமுள்ள 2 விமான ஓடுதளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தென்னிந்திய விமானப்படையை வலுப்படுத்தும் விதமாக இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு கடந்த 4 மாதமாக ஆய்வுகள் மற்றும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது.



மாணவியைக் கடத்த முயன்ற நடிகை சனாகான் தலைமறைவு - கைது செய்ய பொலிஸ் தேடுதல்!
[Saturday, 2013-05-25 07:41:54]

நடிகை சனாகான் 6வது பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் சல்மான்கானுடன் கலந்து கொண்டவர். தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். நடிகர்கள் ரித்திக் ரோஷன், அக்ஷய் குமார் ஆகியோருடன் பல விளம்பர படங்களில் நடித்தவர். 2007ம் ஆண்டு இவர் நடித்த உள்ளாடை விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது ஆபாசமாக இருப்பதாக கூறி மத்திய அரசு அதற்கு தடை விதித்தது. சல்மான் கானின் மென்டல் படத்தில் நடிக்க சனாகான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன் படப்பிடிப்பும் தொடங்கி விட்டது. இதனிடையே, சனா கானின் உறவினரான நாவெட்டுக்கும் (18), சான்பாடாவை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவிக்கும் டுவிட்டர் மூலம் தொடர்பு ஏற்பட்டது. மாணவியை திருமணம் செய்து கொள்வதாக நாவெட் தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்.



தமிழகத்தில் தங்கியுள்ள ஒரு லட்சம் இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை - வலியுறுத்துகிறார் கருணாநிதி!
[Saturday, 2013-05-25 07:34:51]

தமிழகத்தில் தங்கியுள்ள ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட கேள்வி பதில் அறிக்கையிலேயே இதனை வலியுறுத்தியுள்ளார். 2 லட்சத்து 60 ஆயிரம் இந்தியர்களுக்கு அமெரிக்கக் குடியுரிமை வழங்கக் கூடிய முக்கிய மசோதா வுக்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளிக்கப் போவதாக சொல்லப்படுகிறதே என்ற கேள்விக்குப் பதிலளித்துள்ள கருணாநிதி, அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இன்றி 1 கோடியே 10 லட்சம் வெளிநாட்டினர் வாழ்ந்து வருவதாகவும், அவர்களில் 2 லட்சத்து 60 ஆயிரம் பேர் இந்தியர்கள் என்றும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.



சீன உளவாளி திபெத் எல்லையில் சுட்டுக்கொலை - தலாய்லாமாவை கொல்ல வந்தவரா?
[Friday, 2013-05-24 18:17:38]

இமாசலபிரதேச மாநிலம் காங்க்ரா மாவட்டத்தில் திபெத் எல்லைப் பகுதியில் சீன உளவாளி பெம்பா டி செரிங் என்பவரை போலீசார் சுட்டுக் கொன்றனர். அவர் சீன உளவாளிதான் என்பதை திபெத்திய அரசு உறுதி செய்தது. திபெத்தை சீனாவிடம் இருந்து மீட்க போராடி வரும் புத்த துறவி தலாய்லாமா தர்மசாலாவில் அடைக்கலம் புகுந்துள்ளார். அவருக்கு சீனாவிடம் இருந்து மிரட்டல் வந்தது.டிசெரிங் சீன விடுதலை ராணுவத்தைச் சேர்ந்தவர்,தற்போது மக்கள் ஆயுதபடை என்ற இயக்கத்தில் இருக்கிறார். அவர் நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.



நடுவானில் விமானத்தின் கண்ணாடியில் திடீர் விரிசல் - 179 பயணிகள் அருந்தப்பு!
[Friday, 2013-05-24 18:01:05]

இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமான கண்ணாடியில் திடீர் விரிசல் ஏற்பட்டது. நிகழ இருந்த பெரும் விபத்தை தடுக்க உடனடியாக விமானம் கொல்கத்தாவில் தரையிறக்கப்பட்டது. இதனால் 179 பயணிகள் உயிர் தப்பினர். 6இ 205 என்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம்,179 பயணிகளுடன் நேற்று மதியம் பகல் 12.57 மணிக்கு, கொல்கத்தாவில் இருந்து திப்ரூகருக்கு புறப்பட்டது. விமானம் கிட்டத்தட்ட 30,000 அடி உயரத்தைத் தொட்டபோது, முன்புறக் கண்ணாடியில் விரிசல் இருந்ததை விமான ஓட்டிகள் கவனித்தனர்.



இந்தியா முழுவதும் வாட்டியெடுக்கும் வெயில் - நேற்று ஒரே நாளில் மட்டும் ஆந்திராவில் 57 பேர் பலி!
[Friday, 2013-05-24 17:50:48]

அக்னி வெயில் வடமாநில மக்களை வாட்டி வதைக்கிறது. தலைநகர் டெல்லியில் 113.5 டிகிரி வெயில் கொளுத்தியது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் 118 டிகிரியும், ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகரில் அதிகபட்சமாக 120 டிகிரியும் வெயில் பதிவானது. எப்போதும் குளு குளு என இருக்கும் ஜம்மு காஷ்மீரில் கூட 110 டிகிரிக்கு மேல் வெயில் அடித்தது. ஆந்திராவில் பல மாவட்டங்களில் நேற்று 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது. கரீம்நகர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 120 டிகிரி வெயில் கொளுத்தியது. ஆந்திர மாநிலத்தின் ஊட்டி என அழைக்கப்படும் விசாகப்பட்டினம் மன்னியம் மலைவாசஸ்தலத்தில் நேற்று 105 டிகிரி பதிவானது.



சூதாட்டப் புகாரில் சிக்கியுள்ள கிரிக்கெட் வீரர்களுடன் தொடர்பு இல்லை - நடிகை லட்சுமி ராய் அலறல்!
[Friday, 2013-05-24 17:27:57]

சூதாட்ட புகாரில் சிக்கியுள்ள கிரிக்கெட் வீரர்கள் அல்லது மற்ற வீரர்களுடன் என்னை இணைத்துப் பேசுவது தவறு. எனக்கும் அவர்களுக்கும் தொடர்பில்லை. டோனி, ஸ்ரீசாந்த் போன்றவர்களுடன் பேசியே ரொம்ப நாளாகிவிட்டது என திடீர் அறிக்கை விடுத்துள்ளார் லட்சுமி ராய். சூதாட்ட புகாரில் சிக்கிய கிரிக்கெட் வீரர்களுடன் தொடர்புள்ள நடிகைகள் என்ற பட்டியலில் நடிகை லட்சுமிராய் பெயர் பலமாக அடிபடுகிறது. இவர் ஐ.பி.எல் கிரிக்கெட்டில் தூதுவராக இருந்துள்ளார். டோனிக்கு மிக நெருக்கமானவர் என்றும் கிசுகிசுக்கப்பட்டார். இதையெல்லாம் பார்த்து மகா கோபத்துக்குள்ளாகியிருக்கும் லட்சுமி ராய் அளித்துள்ள மறுப்பு செய்தியில், கிரிக்கெட் வீரர்கள் டோனி, ஸ்ரீசாந்துடன் என்னை இணைத்துப் பேச வேண்டாம்.



காஷ்மீரில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் - 4 இந்தியப்படையினர் பலி!
[Friday, 2013-05-24 17:20:51]

ஜம்மு- காஷ்மீர் பிராந்தியத்தில் ஆயுததாரிகள் மறைந்திருந்து நடத்திய தாக்குதலில் இந்தியப் படையினர் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். கிளர்ச்சிப் போராளிகளுக்கு எதிராக படை நடவடிக்கையைத் தொடங்கியுள்ள துருப்பினரை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாக இந்திய இராணுவப் பேச்சாளர் லெப்.கர்ணல் அன்கூர் வஷிஸ்ட் கூறினார். புல்வாமா மாவட்டத்தில் ஸ்ரீநகரிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் புச்சூ என்ற கிராமத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபடுவதற்காக சென்று கொண்டிருந்த படையினரே தாக்குதலில் சிக்கியுள்ளனர்.



அவுஸ்ரேலியாவுக்கு தப்ப முயன்ற 5 இலங்கை அகதிகள் கைது - பணம் வாங்கி ஏமாற்றிய மூவருக்கு பொலிஸ் வலைவீச்சு!
[Friday, 2013-05-24 08:03:10]

இலங்கை அகதிகளை, அவுஸ்ரேலியா அழைத்துச் செல்வதாக கூறி, ஐந்து லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு ஏமாற்றிய, மூன்று பேரை போலீசார் தேடுகின்றனர். கோவை, குனியமுத்தூர் அருகே வசிக்கும் அய்யப்பன் என்பவர் வீட்டுக்கு, நேற்று முன்தினம் ஐந்து இலங்கை அகதிகள் உட்பட ஏழு பேர் வந்தனர். குனியமுத்தூர் போலீசார், அய்யப்பன் வீட்டில் தங்கியிருந்தவர்களை சுற்றி வளைத்தனர்; இருவர் தப்பியோடினர். பிடிபட்ட ஐந்து பேரிடம் நடத்திய விசாரணையில், தர்மபுரி மாவட்ட அகதிகள் முகாமைச் சேர்ந்த சங்கர், ரத்தினராஜ், ஹுசூர் முகாமை சேர்ந்த காந்தகுமார், திருச்சி முகாமை சேர்ந்த நாகதீபன் மற்றும் மதுரை முகாமை சேர்ந்த ரமணன், தப்பியோடியவர்கள் தயா மற்றும் முரளி என தெரிந்தது.


TamilsGuid-191012-2013
Mahesan supramaniyam 031109
Canada Kanthasamy Kovil
Suresh-remax-2013-01-01
Ramans2011
RoyaShades-l2011(04-12-11)
NIRO-DANCE-100213
INNSYS-20120930
AJRwindows22.05.13
TDE_Computers2011
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com