Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 22, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
வேடுவ இனத்தையும் கலந்து எமது தனித்துவத்தை இழிவுபடுத்தியவர்கள் இன்னும் எமது சமூகத்திற்கு தேவையா? - கூட்டமைப்பு வேட்பாளர் பரசுராமன் சிவநேசன்
[Wednesday, 2012-08-15 11:50:37]
News Service

எமது பகுதியில் அபிவிருத்தி என்ற போர்வையில் கடந்த மாகாண சபையில் இருந்தவர்கள் செய்தது தான் என்ன? சிங்கள ஆட்சியாளர்களின் மனங்கள் குளிர்ச்சி அடைவதற்காக எமது உள்ளங்களை காயப்படுத்தி துன்புறுத்தியது தான் இவ்வாறானவர்கள் இன்னமும் அக் கதிரைகளில் அமர்வது தகுதியா? என கிழக்கு மாகாண சபையில் போட்டியிடும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் பரசுராமன் சிவநேசன் தெரிவித்தார்.

  

கிழக்கு மாகாண சபை தேர்தலை முன்னிட்டு மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் தனது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த பின் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பரசுராமன் சிவநேசன் அங்கு மேலும் தெரிவிக்கையில்:

"மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் எம்மை அடக்கி ஆழ்வது என்பது வழமையாகிய நிலையில் மாகாண ஆட்சியிலும் இது தான் நீடிக்கிறது இதனை அனுமதிக்க முடியுமா? எம்மிடம் வாக்குகள் கேட்பவர்கள் எம் இனத்தின் அடிப்படைச் சித்தாந்தத்தை தெரிந்து அறிந்தவர்களாக இருக்க வேண்டும். மாறாக தென் இலங்கையின் சித்தாந்தத்தை எம் இடம் திணிப்பவர்களை அனுமதிக்கக் கூடாது இந் நிலையில் கடந்த கால நிகழ் காலங்களில் நடப்பதனை நன்கு அவதானித்துப் பாருங்கள்.

நாம் ஒரு தனி இனம் எமக்கு என தனியான மொழி கலாச்சாரம் உண்டு எவ்வளவு வறுமையானாலும் நாம் எமது இனத்தை இழந்து நின்றதில்லை. முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் மதுரங்குளம் பனிச்சங்கேணி பகுதிகளில் வேடுவ இனம் இருந்ததாகவும் அவர்களை அழைத்து விழாவும் இருப்பிடமும் வழங்கி தனதாட்சியில் எம் இனத்தை இழிவான நிலைக்கு தள்ளியதை யாரும் மறக்க முடியாது. எமது பாட்டன் முப்பாட்டன் காலத்தில் தமிழர்களின் வாழ்விடம் இன்று வேடுவ இனத்தையும் கலந்து எமது தனித்துவத்தை இழிவுபடுத்தியவர்கள் இன்னும் எமது சமூகத்திற்கு தேவையா?

ஆட்சியில் இருக்கிறோம் அதிகாரத்தில் இருக்கிறோம் என்றவர்கள் வாகரை பேரூந்து சாலை வாழைச்சேனைக்கு மாற்றும் வரையும் அமைதியாய் இருந்து இன்றும் எவ்வித நடவடிக்கையும் இன்றி மந்தமாய் இருப்பது எதற்காக முஸ்லிம் அமைச்சர்களுக்கு பயத்திலா?

வட - கிழக்கில் யுத்தம் ஆரம்பமான நாள் முதல் இன்று வரை எமது பகுதிகளில் இழப்புக்களை ஈடு செய்யும் வகையில் எந்த ஒரு செயற்பாடும் முன் எடுக்காத அரச ஒட்டுக் குழுக்கள் தேர்தல் காலங்களில் வெட்டிப் பேச்சு பேசுவது எதற்காக?

எமது கூட்டமைப்பை பல வகையில் விமர்சிக்கும் தன்மை படைத்தவர்கள் ஒன்றை உணர வேண்டும். எம் இனத்தை அடக்கி வைத்து மானங்கெட்ட பிழைப்பு நடாத்த எம் தலைமை சம்மந்தன் ஜயாவோ! எமது கட்சியோ! எந்த ஒரு சூழ்நிலையிலும் சிந்தித்ததும் இல்லை செயற்படுத்தியதும் இல்லை.

அன்றும் இன்றும் பல அரச சார்பற்ற கூட்டுத் தாபனங்கள் கோறளைப்பற்று வடக்கில் ஆயுத அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தமது ஆதிக்கத்தை செலுத்துகின்றன. இவற்றால் எமது பாரியளவான வளங்களும் நிதிகளும் சுரண்டப்படுவது பற்றி நாம் சிந்திப்பது காலத்தின் தேவை.

வாகரை பல நோக்கு கூட்டுறவு சங்கம் யாருக்காக? மக்களாகிய எமக்காக? இன்று அடி மட்டத்தில் மிகவும் வலிமையான இவ் அமைப்பை கள்ளரும் காவாலிகளும் தலைமை தாங்கும் நிலை. இது தற்போது தலைவராயுள்ளவர் பிள்ளையான் கருணா போன்றவர்களிடம் இருந்து மக்களை ஏமாற்றி பல மில்லியன் பணத்தை திருடி கடந்த பாராளுமன்ற பொது தேர்தலில் முஸ்லிம் வேட்பாளருக்கு வாக்கு சேர்ப்பதற்காய் அண்ணனையும் தேர்தலில் களமிறக்கி எம் இனத்தை அடகு வைத்தவர்கள்.

இப்படிப்பட்டவர்iளை எமது பகுதியில் நிருவகிக்க வைப்பது என்பது இன்னும் பல ஆயிரம் ரூபாய்களுக்கு ஆபத்து. உங்களைப் போன்ற துடிப்புள்ள நடு நிலை இளைஞர்கள் உட்செல்வது இன்றைய நாட்களின் தேவை. இவைகளை களை எடுக்க கூட்டமைப்பை ஆட்சிப் பீடம் ஏற்றுவது மிக மிக பிரதானம்.

எமது பகுதி மீனவ சங்கங்களுக்கு மீள்குடியேற்ற காலங்களில் வெளிநாட்டு அமைப்புகளினூடாக வழங்கப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் வாகனங்கள் எங்கே? ஆயுதத்தையும் அரசியல் பலத்தையும் காட்டி சுயமாக தானும் தன் குடும்பமும் அபகரித்து சுயநலத்துடன் வாழும் மாகாண சபை உறுப்பினர்கள் எமது பகுதியில் அடுத்த முறை அனுமதித்தால் எமது நிலை தான் என்ன?

அரச ஊழியர்கள் கடமையை சரிவர செய்ய வேண்டும் என கூறும் அரசியல் தலைமைகள் வாகரைப் பகுதிக்கான போக்குவரத்தை சரியாக நடைமுறைப்படுத்த மாகாண ஆட்சியில் நடைமுறைப்படுத்தினார்களா இல்லை. மாகாண சபைக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி வேலை செய்ய தெரியாதவர்கள் தான் கடந்த ஆட்சியில் இருந்தனர்.

பின்தங்கிய பகுதி பின்தங்கிய பகுதி என வரிக்கு வரி கூறும் முன்னாள் முதலமைச்சர் வாகரை மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் என்ன செய்தார்? மாறாக குளங்கள் கொங்கிறீற் வீதி கட்டடங்கள் அமைப்பதாக கூறி தமது கட்சி ஆதரவாளர்களால் திட்டங்கள் நடைமுறைப்படுத்தாமல் எதுவும் சரிவர செய்யமுடியாமல் இன்றும் பின்தங்கிய பகுதியானது தான் மிச்சம்.

இவ்வாறாக தொடர்ச்சியாக தென்னிலங்கை சிங்கள அரசுகளாலும் அரச ஆதரவு குழுக்களாலும் ஏமாற்றப்பட்டு ஒடுங்கிக் கிடந்த நாட்கள் இறந்த காலமாய் இருக்கட்டும். நிகழ் காலம் தமிழ் சமூகத்தின் உரிமை வென்று ஒடுக்கு முறைகளுக்கு முற்றுப் புள்ளி இட்டு எம் சமூகத்தின் நேர்மையாளர்கள் இளைஞர்கள் எம் இனத்தை தாங்கி நடாத்த மாகாண சபை ஆட்சியை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றுவதற்று வீட்டிற்கு வாக்களிப்பது எம் ஒவ்வொருவரினதும் இன்றைய தேவையாகும்..

எம் உறவுகள் இதை நன்கு உணர்ந்துள்ளது. கடந்த கால பாலை வன நாட்களை வசந்த காலமாக்க உங்கள் ஒரே தெரிவு வீடாகட்டும் என்றார்."

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

எதிர்வரும் 28ம் திகதி முல்லைத்தீவிற்கு செல்கின்றார் பஷில் ராஜபக்ஷ!
[Wednesday, 2013-05-22 20:01:12]

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ எதிர்வரும் 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதன்போது, முல்லைத்தீவு மல்லாவி பகுதி மற்றும் கிளிநொச்சி பாண்டியன் குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் குடிநீர் திட்டத்தினை திறந்துவைக்கவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பின் யாழ். பிராந்திய முகாமையாளர் பாலசுப்பிரமணியம் தவேந்திரகுமார் கூறினார்.



இராணுவத்தினரின் காணி சுபீகரிப்பு குறித்து ஐ.நா அதிகாரிகளுக்கு ஹத்துருசிங்க விளக்கம்!Top News
[Wednesday, 2013-05-22 19:59:38]

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் தேவைக்காக சில காணிகள் இனங்காணப்பட்டுள்ளன. இராணுவம் பொறுப்பேற்கவுள்ளதாக கூறப்படும் காணிகளின் அளவை சிலர் வேண்டுமென்றே அதிகரித்துச் சொல்வதாக யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு விளக்கமளித்துள்ளார். ஐ.நா.வின் மனிதாபிமான ஒத்திசைவாக்க அலுவலகத்தின் உயரதிகாரிகளான அக்னெஸ் அஸகென்பே மற்றும் மார்க் பிரளோபா ஆகியோருக்கு யாழ். வலிகாமம் வடக்கிலுள்ள நிலங்களை இராணுவம் பொறுப்பேற்பது தொடர்பான பிரச்சினை குறித்து விளக்கமளிக்கும் போதே யாழ். கட்டளைத் தளபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது, இராணுவம் பொதுமக்களின் காணிகளை பொறுப்பேற்பதாக கூறுவதை அவர் மறுத்துள்ளார். பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் என்பவற்றின் அபிவிருத்திக்காக காணிகள் பொறுப்பேற்கப்படுவதாகவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.



உடனடியாக 13வது திருத்தம் இரத்துச் செய்யப்பட வேண்டும் - ஹெல உறுமய!
[Wednesday, 2013-05-22 19:52:56]

13 ஆவது திருத்தச் சட்டத்தை அரசாங்கம் உடனடியாக இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஹெல உறுமய தெரிவித்துள்ளது. கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஹெல உறுமயவின் விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் இதற்கான தனிநபர் பிரேரணையின் நகல் வெளியிடப்பட்டது.



சிங்களவர்களின் காணிகளையும் அரசு அபகரிக்கின்றது: விக்கிரமபாகு குற்றச்சாட்டு!
[Wednesday, 2013-05-22 19:47:58]

தமிழ் மக்களின் காணிகளை சுவீகரிக்கும் அரசு அங்கு சிங்களவர்களை குடியமர்த்துவதாக சிங்கள மக்கள் நினைக்கின்றனர். ஆனால் சிங்கள மக்களின் காணிகளை சுவீகரித்து ஒட்டுமொத்த நாட்டினையுமே வெளிநாடுகளுக்கு அரசாங்கம் விற்பனை செய்கின்றதென நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். கொழும்பு பான்ஸ் பிளேஸில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை கட்டியெழுப்பும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



வட மாகாணசபை தேர்தல் நடாத்தப்படாவிட்டால் நாடு இரண்டாகும்: சிறிதுங்க ஜயசூரிய
[Wednesday, 2013-05-22 19:42:31]

வட மாகாண சபைத் தேர்தல் இடம்பெற்றால் இலங்கை ஒருநாடாக இருக்கும் அதேநேரம் தேர்தல் இடம்பெறாது போனால் நாடு இரண்டாக பிளவுபட வழி சமைக்கும் என சேஷலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார். கொழும்பு பான்ஸ் பிளேஸில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை கட்டியெழுப்பும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



இந்திய வீடுகள் அமைக்கும் பணி மட்டக்களப்பில் ஆரம்பம் - இந்திய உயர்ஸ்தானிகர் ஆரம்பித்து வைத்தார்!Top News
[Wednesday, 2013-05-22 19:36:00]

கிழக்கு மாகாணத்தில் இந்திய உதவியுடனான வீடமைப்பு திட்ட வேலைகள் இன்று புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று கிராமங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா ஆகியோர் வீட்டுத் திட்டங்களுக்கான வேலைகளை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தனர். மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேச செயலக நிர்வாக பிரிவிலுள்ள மூன்று கிராமங்களில் நடைபெற்ற இது தொடர்பான நிகழ்வுகளின் போது, சிங்கள கிராமமான மங்களாகம கிராமத்திலே முதலாவது வைபவம் இடம்பெற்றது.



செங்கலடி இரட்டைக் கொலை சந்தேக நபர்களுக்கு 29 ஆந் திகதிவரை விளக்கமறியல்!
[Wednesday, 2013-05-22 19:28:24]

செங்கலடி நகரில் நள்ளிரவில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட செங்கலடி மத்திய கல்லூரி மாணவர்கள் நான்கு பேருக்குமான விளக்கமறியல் காலம் எதிர்வரும் 29 ஆந் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் இன்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டபோது நீதிபதி ஏ.எம்.எம்.றியாழ் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார். பிரபல வர்த்தகர் சிவகுரு ரகு மற்றும் அவரது மனைவி சுந்தரமூர்த்தி விப்ரா ஆகியோர் படுக்கையறையில் கோரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தனர். இக்கொலை தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் செங்கலடி மத்திய கல்லூரியைச் சேர்ந்த நான்கு மாணவர்களை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்தனர்.



இவ்வருட இறுதிக்குள் 340 முன்னாள் போராளிகள் விடுவிக்கப்படுவர் - சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவிப்பு!
[Wednesday, 2013-05-22 16:53:25]

தற்போது புனர்வாழ்வு பெற்றுவருகின்ற முன்னாள் போராளிகள் 340 பேரையும் இந்த வருட இறுதிக்குள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.சமூகமயப்படுத்தல் செயற்பாடுகளை துரிதப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக, வவுனியா மருதமடுவில் இயங்கிவந்த புனர்வாழ்வு முகாம் மூடப்பட்டுள்ளது. அதன்படி இந்த முகாமில் புனர்வாழ்வு பெற்றுவந்த 100 முன்னாள் போராளிகளும் பூந்தோட்டம், சேனதுறை மற்றும் கந்தக்காடு ஆகிய புனர்வாழ்வு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.



தமிழர்களை கொன்ற நினைவு நாளுக்காக தமிழர்களிடம் 10ரூபா அறவிடும் வடமாகாணசபை!
[Wednesday, 2013-05-22 16:48:53]

தேசிய போர் வீரர்கள்' தினத்தை முன்னிட்டு இலங்கை அரசால் வெளியிடப்பட்டுள்ள நினைவு முத்திரையை வடக்கு மாகாண சபை ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் வாங்க வேண்டும் என வற்புறுத்தி விற்பனை செய்யப்படுவதாக மாகாண ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 2009க்குப் பின்னர் இலங்கை அரசால் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 18 ஆம் திகதி போர் வெற்றிவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இதற்காக 5 ரூபா பெறுமதியான நினைவு முத்திரையும் வெளியிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.



பீரிசை தொலைபேசியில் மிரட்டினார் குர்ஷித்?
[Wednesday, 2013-05-22 16:46:25]

இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தம்மை அச்சுறுத்தும் வகையிலோ, அடக்குகின்ற வகையிலோ உரையாடவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை காலை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுடன், இந்திய வெளிவிவகார அமைச்சர் கல்மான் குர்ஷித் தொலைபேசி மூலம் உரையாடியிருந்தார். இதன்போது, மாகாணசபையின் அதிகாரங்களை நீர்த்துப் போகச் செய்யும் வகையிலான சட்டத்திருத்தங்களை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளக் கூடாது என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரிடம் சல்மான் குர்ஷித் எச்சரித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.



மஹிந்த அரசை கவிழ்க்க சூழ்ச்சி தேவையில்லை - ரணில்!
[Wednesday, 2013-05-22 16:38:06]

இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு சூழ்ச்சிகள் செய்யத் தேவையில்லை எனவும் வாக்கு பலத்தின் ஊடாக அரசாங்கத்தை கவிழ்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வெளிநாட்டு பெண் தூதுவர் ஒருவரை சந்தித்த சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை கவிழ்க்க சூழ்ச்சி செய்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானதென ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். ஜேர்மன் உதவி கிடைக்கும் 'பெட்ரிக் நியூமான் பவுன்டேசன்' என்ற அமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நடத்தும் கருத்தரங்கை அரசாங்கத்தை கவிழ்க்கும் சூழ்ச்சி என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதால் அதில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் இன்று (22) பாராளுமன்றில் தெரிவித்தார்.



புதிய சட்டமூலத்தின் ஊடாக வட மாகாண சபையை திரிபுபடுத்த அரசு முயற்சி - கூட்டமைப்பு!
[Wednesday, 2013-05-22 16:32:34]

அரசாங்கம் வட மாகாண சபையை திரிபுபடுத்த புதிய சட்டமூலம் ஒன்றை நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார். கொழும்பு பான்ஸ் பிளேஸில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை கட்டியெழுப்பும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,



ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் தேவை - சம்பந்தனுக்கு அஸாத் சாலி கடிதம்!
[Wednesday, 2013-05-22 16:27:37]

தமிழ் முஸ்லிம் சமூகங்கள் சில முக்கிய பொதுவான விடயங்களில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது என்று தேசிய ஐக்கிய முன்னணியின் பொது செயலாளர் அஸாத் சாலி தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தனுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,



வேடர்களும் நாகர்களுமே இலங்கையின் ஆதிக்குடிகள் - பொதுபல சேனாவுக்கு இதுதான் பதில்! - மனோ கணேசன்!
[Wednesday, 2013-05-22 16:16:55]

பொதுபல சேனாவின் வண. ஞானசார கலபொட தேரர், இந்த நாடு சிங்கள பெளத்தர்களுக்கு மாத்திரம் உரியது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிறார். இதை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் எல்லோரும் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என்கிறார். இந்த அடிப்படையில் வடக்கில் தமிழர் பெரும்பான்மை அதிகாரத்தின் கீழ் மாகாணசபை ஒன்று உருவாக முடியாது என்கிறார். ஆகவே மாகாணசபை முறைமையை ஒழிக்க வேண்டும் என்கிறார். அனைத்துக்கும் முதலில் இந்த நாட்டின் ஆதிகுடிகள் வேடர்கள், நாகர்கள் என்பதை கலபொட தேரர் ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்த அடிப்படை உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறி, தத்தம் மூதாதையர்கள் வந்த நாடுகளுக்கு திரும்ப வேண்டும்.



மின்கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் போராட்டம்!
[Wednesday, 2013-05-22 10:32:03]

சாதாரண மக்கள் இன்றும் அடக்கி ஒடுக்கப்படுகின்றனர். மக்கள் அவ்வாறு அடக்கி ஒடுக்கப்படுகின்றபோது அதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டிய கடமை தொழிற்சங்கம் என்ற வகையில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களுக்கும் உண்டு. இவ்வாறு யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் ஆர்.இராசகுமாரன் தெரிவித்தார். மின்கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ். பல்கலைக்கழக வாயிலில் நேற்று நடந்த கவனவீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர், பல்கலைக்கழக ஆசிரியர் தொழிற்சங்கம் என்ற ரீதியில் பல்கலைக்கழகத்தில் மட்டுமன்றி நாட்டில் எந்தவொரு மக்களும் அடக்கி ஒடுக்கப்படுகின்ற போது அதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டிய கடமை எமக்கு உண்டு. எதிர்காலத்தில் மக்கள் நசுக்கப்படும் போது அடக்கப்படும்போது அதற்கெதிராக நாம் குரல் கொடுப்போம் என்றார்.



எனக்குள் தமிழ் உணர்வை ஏற்படுத்திய சம்பந்தன் ஐயா, மாவை போன்றோரை எனது குருவாக மதிக்கின்றேன் - முரளிதரன்
[Wednesday, 2013-05-22 10:13:18]

எனக்குள் தமிழ் உணர்வை ஏற்படுத்திய சம்பந்தன் ஐயா மற்றும் மாவை சேனாதிராஜா போன்றோரை எனது குருவாக மதிக்கின்றேன் என பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நேற்று சபையில் தெரிவித்தார். ஜனாதிபதியிடம் தான் விடுத்த வேண்டுகோளின் பேரிலேயே முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தோடு இணைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே பிரதியமைச்சர் முரளிதரன் இதனைத் தெரிவித்தார்.



வடக்கை போன்று கிழக்கிலும் இராணுவ ஆட்சி: முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு
[Wednesday, 2013-05-22 10:02:05]

வடக்கில் நிலவி வரும் இராணுவ ஆட்சி போன்றே இப்போது கிழக்கிலும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டியுள்ளார். ராஜகிரியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.



சங்கீதக் கதிரை விளையாட்டு போல அரசிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் வெளியேற முடியாது - ஹக்கீம்
[Wednesday, 2013-05-22 09:52:01]

சங்கீதக் கதிரை விளையாட்டில் பாடல் நின்றவுடன் கதிரையை நீக்கிவிட்டுச் செல்வது போன்று, அரசை விட்டு வெளியேறும் சித்து விளையாட்டில் எமது கட்சி ஈடுபடமாட்டாது. ஆனால் சில சக்திகள் அவ்வாறுதான் விரும்புகின்றன. இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் குற்றம் சாட்டியுள்ளார். குருநாகல் மாவட்டத்தில் குளியாப்பிட்டி, தம்பதெனிய, நிக்கவரெட்டிய தேர்தல் தொகுதிகளில் உள்ள சில கிராமங்களில் நடைபெற்ற கூட்டங்களின் போதே அவர் இவ்வாறு கூறினார்.



அரசின் ஏதேச்சாதிகார நடவடிக்கைகள் நிறுத்தப்படும் வரை - பொதுநலவாய நாடுகள் மாநாடு இலங்கையில் நடாத்தக் கூடாது: - மங்கள சமரவீர
[Wednesday, 2013-05-22 09:49:34]

பொதுநலவாய நாடுகளின் தலைவர்களது அமர்வுகளுக்கான மாநாடு இலங்கையில் நடாத்தப்படக் கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் ஏதேச்சாதிகார நடவடிக்கைகள் நிறுத்தப்படும் வரையில் அமர்வுகளை நடத்தக் கூடாது என அவர் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.



மாத்தளை மனித புதைகுழி விசாரணைகளில் சந்கேம்: ஐ.நாவின் தலையீட்டை கோருகிறது ஆசிய மனித உரிமை ஆணைக்குழு!
[Wednesday, 2013-05-22 09:41:00]

மாத்தளை பாரிய மனித புதைகுழி விசாரணைகள் குறித்து ஆசிய மனித உரிமை ஆணைக்குழு கேள்வி எழுப்பியுள்ளது. பாரிய மனித புதை குழி தொடர்பான விசாரணைகளில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 154 பேரின் உடல் எச்சங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் விசாரணை நடத்திய சட்ட வைத்திய அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், வழக்கு விசாரணை நடத்தி வரும் நீதவானும் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாரிய மனித புதைகுழி தொடர்பில் சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் இந்த இடமாற்ற உத்தரவுகள் குறித்த தகல்கள் வெளியாகியுள்ளன. இந்த விசாரணைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு தலையீடு செய்ய வேண்டுமென ஆசிய மனித உரிமை ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.


Canada Kanthasamy Kovil
TDE_Computers2011
Suresh-remax-2013-01-01
AJRwindows22.05.13
RoyaShades-l2011(04-12-11)
Ramans2011
TamilsGuid-191012-2013
NIRO-DANCE-100213
INNSYS-20120930
Mahesan supramaniyam 031109
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com