Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
June 19, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
டெசோ மாநாடு - கருணாநிதிக்கு ஈழத்திலிருந்து ஒரு அகதியின் கடிதம்... சூனியர் விகடன்
[Monday, 2012-08-13 21:59:31]
News Service

மதிப்பிற்குரிய கருணாநிதி அவர்கட்கு,
எங்கள் மீது தாங்கள் கொண்டிருக்கும் பேரன்பு எங்களைச் சிலிர்க்க வைக்கிறது. எங்கள் துன்பத்திலும், துயரத்திலும் நீங்கள் காட்டும் அக்கறையின் தீவிரம் எம்மை வியக்கவைக்கிறது.

  

எப்படி உங்களால் மட்டும் இது முடிகிறது? தள்ளாத வயதிலும் தார்மீக உணர்வோடு தமிழீழம் காணப் புறப்பட்டிருக்கும் புதிய புறநானூறு வீரத்தலைவனே!

தங்களுக்கு நிகர் தாங்களே தான்.

கந்தக வெடிப்பில் உடல் சிதற, செங்கழுநீர் வன்னி மண்ணில் காட்டாறாக ஓட, எம்மவர் உயிர்கள் இடம்பெயர்ந்து பறக்க - இந்த அவலங்கள் கண்டு துடிதுடித்தெழுந்து நீங்கள் சுழற்றிய வாளின் வீச்சு கண்டு திகைத்துத்தான் போய்விட்டோம் ஒரு போது.

உலகத்தமிழரின் தலைவனாக முடி தரித்து, செங்கோல் ஏந்தி அரியாசனத்தில் வீற்றிருக்க தங்களை விட்டால் யாருக்கு தகுதி இங்கு உண்டு.

காலைச் சிற்றுண்டிக்கும் மதியபோசனத்திற்கும் இடையே நீங்கள் இருந்த "சாகும்வரை உண்ணாவிரதம்" சரித்திரத்தில் 'பிளாட்டினம்' எழுத்தில் பொறிக்கப்பட வேண்டியது. எமது வரலாற்றாசிரியர்களின் எழுது கோலை "சாணை" கொண்டு தீட்டி கூர்மையாக வைத்திருக்க வேண்டும். உங்களின் வரலாறு 'கூர்'மையாகப் பதிவு செய்யப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். முனை மழுங்கிய எழுத்தாணிகள் தங்கள் பிளாட்டினக் காலவரலாற்றைச் சேதப்படுத்தி விடக் கூடாதல்லவா? தமிழின உணர்வாளர்களுக்கு ஒரு முன்னோடி தாங்கள். திராவிட பாரம்பரியத்தின் பெருமையினையும் தமிழின் தொன்மையையும் உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய முன்னோடிகளில் இன்றுவரை உயிரோடிருப்பவர் நீங்கள் மட்டும் தான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய எம் மொழியின் தொன்மைச்; சிறப்புக்களை, அம்மொழியின் மூத்த குடிகளின் சீரார்ந்த வாழ்வின் பண்பாடுகளை உங்கள் எழுத்து மூலமும் பேச்சுக்கள் மூலமும் முரசறைந்து நிறுவியவர் தாங்கள். தமிழுக்குள்ளே அதன் முறையான பிரயோகங்களிலே எத்துணை அழகும் இனிமையும் இருக்கிறது என்று எடுத்துக் காட்டியவர் தாங்கள்.

தமிழ் கொஞ்சும்;

தமிழ் ஆனந்தம் பாடும்;

தமிழ் காதல் செய்யும்;

தமிழ் கோபப்படும்;

தமிழ் இரங்கும்;;

பொங்கும், நெருப்பாய் மாறும், சுவாலையாய் எரிக்கும், எரிமலையாய் வெடிக்கும், தீமையைப் பொசுக்கும்.

இவற்றைத் தங்களின் தமிழ் பிரயோகங்களிலிருந்து நாமறிந்தது. தமிழின் பெயரால் கம்பனை, இளங்கோவை, பாரதியை நாமறிந்ததை விட கருணாநிதியை நாம் அறிந்தது அதிகம்.

தந்தையின் கையைப் பிடித்து தளர் நடையில் ஆரம்பப்பள்ளி சென்று 'அ,ஆ' எழுதிப் பழகும் காலத்திலே இலங்கை வானொலியில் 'மனோகாரா' திரைப்படத்தின் வசனங்களைக் கேட்டவன் நான். அப்போது ஏதும் புரியாத போதும் தமிழின் மீது தீராக் காதல் கொண்ட எந்தையும் தாயும் மனோகரா திரை வசனத்தைச் சிம்மக் குரலோனின் கர்ச்சனையில்; கேட்டு அதை சிலாகித்துப் பேசும் போது "கருணாநிதி" எனும் பெயரை காதுகளில் வாங்கியவன் நான்.

காலவேகத்தில், விபரம் அறியும் வயதின்போது 'நானும்' என்னைப் பெற்றவர்கள் போல் மெய்மறந்து நின்றது உண்டு; தங்கள் வசனங்களைக் கேட்டு.

வெளிப்படையாகச் சொல்வதானால் தங்களது தமிழைக் கேட்டே தமிழ் மீது 'காதல்' கொண்டவன் நான்.

தமிழுக்கும் தமிழருக்கும் ஒரே தலைவன் 'கருணாநிதி' தான் என என்னளவில் நம்பவும், மற்றவர்க்கு நம்பிக்கையூட்டவும் என்னை முனையச் செய்தது தங்களது தமிழ் தான். தங்கள் மீது கொண்ட பற்றினால் தங்கள் கண்களை அலங்கரிக்கும்(?) விழிக்கண்ணாடி போன்றதொன்றை தந்தையைச் சிரமப்படுத்தி அங்காடிகளில் அலையவிட்டு வாங்கி வைத்திருந்தவன் நான்.

பெரியவனாகி திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்றபோதும் - அந்தக் கண்ணாடி மட்டும் புது மெருகு மாறாமல் என் பொக்கிசப்பெட்டியில், பெறுமதியான பேழையொன்றில் தனி சாம்ராஜ்யத்தையே நடாத்திக்கொண்டிருந்தது.

எனது குழந்தைகளுக்குக் கூட அந்தக் விழிக்கண்ணாடியையும், தங்களது புகைப்படத்தையும், சந்தர்ப்பம் கிடைக்கும் போது வர்ணத்தொலைக்காட்சியில் (இலவசமாகக் கிடைத்தது அல்ல) வரும் தங்கள் பிரதிமைகளையும் காட்டி திரைப்படங்களையும் காட்டி கருணாநிதி புகழ்பாட தவறியவனல்ல நான்.

அந்த கறுப்புக்கண்ணாடி போர் இடப்பெயர்வுகளின் போது தொலைந்து போனது என் பொக்கிசங்களைப் போலவே; எனதும் என் இனத்தினதும் கனவுகள் போலவே...!!

எனது பொக்கிசங்கள் தொலைந்ததற்கும், எம் கனவுகள் அழிந்ததற்கும் இன்றுவரை இரத்தக் கண்ணீர் வடிக்கின்றேன் - விழிக்கண்ணாடி தொலைத்ததற்கு அல்ல. தொலைந்தவற்றை இன்றும் தேடுகின்றேன். "கறுப்புக்" கண்ணாடியையும் கூட. என்ன முரண்நகையாகத் தெரிகிறதா?

ஒருவேளை எனது தேடுதல் வேட்டையின் போது அந்தக் கண்ணாடி கண்டுபிடிக்கப்பட்டால்......... மீண்டும் பாதுகாக்க மாட்டேன். மாறாக என் காலில் போட்டு மிதித்து உடைப்பேன். உடைந்த அந்தத் துகள்களை ஒரு பொலித்தீன் பையிலிட்டு எனது வீட்டு வரவேற்பறையில் வைப்பேன், துரோகச்சின்னமாக.

ஒரு தேசிய இனத்தின் உரிமைக் கோரிக்கையை நிர்மூலமாக்கிய துரோகத்தின் அடையாளம் அது.

நம்பிய ஈழத் தமிழ் மக்களின் முதுகில் குத்தி குப்புறச் சாய்த்த சுயநல வெறியின் அடையாளம்! 'காப்பாற்றுங்கள்' என அவலக் குரலெடுத்துக் கதறி அபயம் கேட்டு நீட்டிய கைகளை குறுகத் தறித்தெறிந்த அரசியற் துரோகத்தின் அடையாளம்!

அண்ணாவை விட, ராஜாஜியை விட, காமராஜரை விட உண்மையில் தாங்கள் பெரும் புத்திசாலி தான்.

பாவம் அவர்கள் பிழைக்கத் தெரியாதவர்கள். வங்கி இருப்பில் சேமிப்பேதும் இல்லாமல் செத்துத் தொலைத்தவர்கள் அவர்கள். கருணாநிதியின் சாதுரியம் அவர்களுக்கு இருந்திருந்தால் அவர்களது சந்ததியினர் இன்று "கோடி"களில் புரண்டிருப்பார்கள்; தங்களது சந்ததியினரைப் போலவே.

8ஆம் வகுப்புக் கல்வியையே இடைநடுவில் முறித்துக் கொண்டு, தற்குறியாக இரயில் (அல்லது பேரூந்து) கட்டணத்தை மட்டுமே சட்டைப்பையில் கொண்டு, 'பெரியாரின்' முகாமுக்குத் தொண்டனாக வந்து, - இன்று பல்லாயிரம் கோடி ரூபா மோசடி ஊழலில் பெயர் அடிபடும் அளவுக்கு உயர்ந்து விட்ட உங்கள் "தமிழ்ப்பணி" அவர்களுக்குக் கைகூடி வரவில்லை. உண்மையிலேயே தாங்கள் மேதாவி தான்.

நீங்கள் கொண்ட இலட்சியத்தை அடைந்து விட்டீர்கள் இனியுமென்ன நாடகம்? இனியும் ஏன் வேசங்கள்? உலகளந்த பெருமாளுக்கும், உலக நாயகனுக்கும் ஆகக்கூடியது பத்து அவதாரங்கள் தான். ஆனால் தங்களுக்கு....

எத்தனை முகங்கள்?

மாநில அரசியலில், மத்திய அரசியலில், குடும்ப அரசியலில், வர்த்தக அரசியலில், புலம்பெயர் ஈழத்தவர் அரசியலில், சினிமா அரசியலில், சுயமரியாதை அரசியலில், ஆன்மீக அரசியலில், சிறை அரசியலில், ஊழல் அரசியலில், ஊடக அரசியலில் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். போயின் பக்கங்களும் போதாது; எனது ஞாபகசக்தியும் போதாது. இவ்வாறு ஒவ்வொரு அரசியலிலும் ஒன்றுக்கு மேற்பட்ட முரண்பாடான, முரண்நகையுள்ள அவதாரங்கள் அவற்றுக்கு பூசிய அரிதாரங்கள்.

இந்த அரிதாரங்கள் நாட்பட்டு, கலைந்து வழிந்து நாற்றமும் வீசத் தொடங்கியதின் பின்பும், மீண்டும் நீங்கள் கதாயுதத்துடன் மேடையேற இந்தத் தள்ளதா வயதிலும் நினைப்பது தான் சற்றும் இரசிக்க முடியாமல் உள்ளது.

'உங்கள் அவதாரம் கலைந்து போனது ஈழத்தமிழனின் குருதியிலே' என்பதை நாமுணர்ந்து பல காலமாகி விட்டது.

'உங்கள் கூத்து மேடை சரிந்து போனது எங்களது சாவிலே' என்பதைத் தாங்கள் உணர இன்னும் வெகுகாலம் பிடிக்குமோ?

"விடுதலைப் புலிகளை ஆதரிக்கமாட்டேன், ஆனால் தமிழீழம் மலர்ந்தால் மகிழ்ச்சியடைவேன்" என்று தாங்கள் கூறியபோது, அதிலுள்ள முரண்நகையை தங்கள் மீது கொண்டிருந்த அபிமானம், எம் புலனுணர்வுக்கு மறைத்து விட்டது.

தமிழ்ச்செல்வனின் சாவிற்கு நீங்கள் வரைந்த கவியாஞ்சலி, அதற்கு நாம் இசைப்பாடல் வடிவத்தை ரி.எல்.மகாராஜன் குரலில் வழங்கி, பட்டிதொட்டி எல்லாம் ஒலிக்கச் செய்து மெய்யுருகிக் கண்ணீர் விட்டோமே... அப்பொழுதும் நாம் தங்களின் முடைநாற்ற அரிதாரப்பூச்சுக்களைக் கண்டுபிடிக்கவில்லை நாம்.

காலை உணவு அருந்தி விட்டு, அண்ணா சிலையடியில் திடீரென நீங்கள் மேற்கொண்ட சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம், ஏற்கனவே எம் இதய வாயிலருகில் வீற்றிருந்த உங்களை இதய கர்ப்பக்கிரகத்துக்குள்ளே உங்களை குடியமரச் செய்தது. "அந்தப்புரம்" உட்பட தங்களது சகல பரிவாரங்களும் குளிரூட்டி பொருத்திய சொகுசு பெருவாகனத்துடன் தங்கள் சாவைக் காணக் கால்கடுக்கக் காத்திருக்கும் செய்தி எம்மை உருக வைத்தது.

. எறிகணைகளுக்கும், விமானக்குண்டுகளுக்கும், சீறிவரும் கனரகத் துப்பாக்கிச் சன்னங்களுக்கும் அஞ்சி குழந்தை குட்டிகளோடு எம்முடன் இடம்பெயர்ந்து கூடவே வந்த ஆட்டுக்குட்டி, நாய் போன்றவற்றையும் அருகிலே வைத்துக் கொண்டு பதுங்கு குழிக்குள் நாமிருந்த வேளை; காற்றிலே கலந்து வந்த செய்தி தான் தாங்கள் எடுத்த உண்ணாவிரத அவதாரம்.

சக்தியிழந்து செயலற்றிருந்த மின்கலங்களுக்கு பற்களால் கடித்தும், கற்களால் தட்டியும் அவற்றின் உருளை வடிவத்துக்கு நவீன சிற்பங்களைப் போல வினோதமான நெளிந்த வடிவங்கள் கொடுத்து, சற்று உசுப்பி அவை மூலம் வானொலியில் வரும் தங்கள் செய்திக்காக செவிமடுத்துக் காத்திருந்தவேளை "ஏதாவது நடக்கும்" "நல்ல செய்தி வரும்" "எம்மை காப்பார் உலகத் தமிழர் தலைவர்" என நம்பிக்கையுடன் நாம் காத்திருந்த வேளை....

வந்ததையா நற்செய்தி! காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையே நடந்த மிகத் தீவிரமான சாகும் வரையான உண்ணாவிரதப் போருக்கு மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் உருவிலே வந்தது தீர்வொன்று.

"கனரக ஆயுதப்பாவனை நிறுத்தம்" "போர் நிறுத்தம்" "இனி ஈழத்தமிழர் வாழ்வில் விடிவு"

தமிழக முதலமைச்சரின் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம் வெற்றிகரமாக நிறைவு

பலவீனமான மின்கலத்தால் முனுமுனுப்பாகக் கேட்ட வானொலியின் அறிப்பில் கூட திடீரென சக்தி கூடியதான உணர்வு எமக்கு "வெற்றி....வெற்றி..... தமிழர் தலைவன் கருணாநிதி எம்மைக் காப்பாற்றி விட்டார்."

குதூகலத்துடன் கூவியபடி குஞ்சு குருமான்களுடன் பதுங்குகுழியிலிருந்து பாய்ந்து வெளியே வந்தோம்.

ஆடவேண்டும்...... பாடவேண்டும்...... மனம் மகிழ்ச்சியில் துள்ள ஒருவரை ஒருவர் அணைத்துக் கொள்ள......

வந்ததையா எறிகணைகள்.....

கொள்ளை கொண்டு போனதையா எம்மவர் உயிர்களை.

தொடர்ந்தும் இந்திய வனொலியில் "கருணாநிதி ஈழத்தமிழரைக் காத்து அருள்பாலிக்க வந்த தேவதை. வெற்றி வாகை சூடி ஈழத்தமிழர் தலையிலே முடி சூட வந்த கருணைக்கடல்."

இப்படியாக......... இப்படியாக......... தொடர் புகழாரங்கள்!

நாம் கண்ணீரில் மிதந்தோம், இந்த நயவஞ்சகத்தை எதிர்த்துக் கருணாநிதி எனும் வீரத்தலைவன் தன் போர்க்;கலத்தைத் தூக்கப் போகிறார் என்று பலரும் எதிர்பார்த்தோம்.

அன்றைய தினம் மட்டும் காவு கொள்ளப்பட்ட உயிர்களின் எண்ணிக்கை நூற்றுக்கு மேலாகும்.

ஆனால் அவ்வளவு தான்.

நம்பிக்கை கானல் நீரானது. கருணாநிதியின் முடிவு - மத்திய அரசின் முடிவைச் சார்ந்ததே என்றானது. ஆவியே வெந்து போனது.

எம்மால் என்ன செய்ய முடியும்?

கருணாநிதி நினைத்திருந்தால்; மத்திய அரசில் அவரது கட்சிக்கிருந்த பலத்தைக் கொண்டு ஈழத்தமிழரைக் காத்திருக்கலாம்.

அவர் தம் வாழ்வியல் உரிமைக்கான அரசியல் வேணவாவைப் பேணி இருக்கலாம். எம்மைக் காக்கும் கவசமாக தமிழ் நாட்டையே மாற்றி இருக்கலாம்.

எனினும் நாம் நம்பிக்கை இழக்கவில்லை. தமிழகம் தொப்புள் கொடி உறவு. கருணாநிதி அதன் முதலமைச்சர். அவரது தலைமையில் எம்மை மீட்க தமிழகம் திரளும். எம்மைக் காத்து அணைத்து ஆறுதல் சொல்ல ஓடோடி வருவார் உலகத் தமிழர் தலைவன் என இன்னும் நம்பினோம். அவரது மௌனம், எம்மைக் காக்கும் இராஜதந்திரமாக இருக்கலாம் எனும் ஒர் நப்பாசை.

"ஓடினோம்.. ஓடினோம், வாழ்க்கையின் ஒரத்துக்கே ஒடினோம்." அந்த ஓரம் தான் முள்ளி வாய்க்கால் கடல் - ஒரம். பாராசக்தியின் பார்வதிக்காவது நியாயம் கேட்க குணசேகரன் என்ற அண்ணன் இருந்தான். அவன் பக்கம் பக்கமாக வசனம் பேச நீதிமன்றமும் இருந்தது. கேட்க நீதியரசரும் இருந்தார்.

எனினும் எமக்கு...?

"தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா.... செந்நீரால்;;' காத்தோம்..... கருகத் திருவுளமோ..."

ஏக்கத்துடன் வங்கக்கடலின் வானம் தொடு எல்லையை, அந்த நீண்ட விளிம்பைப் பார்த்திருந்தோம். ஏமாற்றம்! எம்மைக் காக்க எவரும் வரவில்லை. எம் குரல் கேட்கவும் எந்த நீதிமன்றமும் தயாராக இருக்கவில்லை.

356 என்ற சட்டப் பிரிவின் மீதான பயமா இது?

கலைஞரே! உங்களது சிலவருட பதவி நாற்காலிகளைப் பாதுகாப்பதற்காக ஒரு தேசிய இனத்தின் அழிவுக்குத் துணை போக உங்களால் எப்படி முடிந்தது?

அன்று பதவிகளைத் தூக்கி எறிந்து இந்திய அரசுக்குப் பாடம் புகட்டி எம்மைக் காத்திருந்தால் இன்று நீர் அல்லவோ உலகத் தமிழர் தலைவர். இப்படி அவமானகரமான தோல்விகளையும் இனத்துரோகி என்ற அவப்பெயரையும் சந்திக்க நேர்ந்திராது அல்லவா!

ஆட்சிக் கதிரையை மட்டுமல்ல, எதிர்க்கட்சித் தலைவர் என்ற தகுதி நிலையையே இழக்க வேண்டிய அவலநிலை வந்திராது அல்லவா?

தமிழ் நாட்டு அரசியல் வரலாற்றிலேயே அறிஞர் அண்ணாவினால் உருவாக்கப்பட்ட தி.மு.க என்ற புரட்சிக்கட்சி, இத்துணை தாழ் நிலைக்கு என்றுமே சென்றதில்லை.

'தானாடாது விட்டாலும் தன் தசை ஆடுமாமே..' வன்னிமண்ணின் இடப்பெயர்வு அவலங்கள் காணொளி இறுவெட்டுக்களாகத் தமிழ்நாட்டை அடைந்த போது தமிழகமே பொங்கி எழுந்ததாமே!

அப்போதும் கூட உங்கள் கண்ணில் கூட ஈரக்கசிவு ஏற்பட்டதாமே..?

அப்போதும் கூடத் தங்கள் கபட மூளை அந்த உணர்வெழுச்சிகளை உங்கள் குடும்ப, அரசியல் நலன்களுக்கான முதலீடுகளாக்கிக் கொண்ட சாமர்த்தியம் வேறு எவருக்கு வரும்?

கல்விச்சமூகம், சினிமாத்துறை, தொழில்துறைகள் எனப் பல்வேறு தரப்பட்டத் தமிழ்நாட்டு உறவுகளின் உண்மையான அக்கறையைக் கையாள, அவர்களின் பிரதிநிதியாக மீண்டும் ஒரு அரிதாரப்பூச்சு.

பதவி விலகல் கடித நாடகங்கள்.

கொட்டும் மழையில் மனிதச் சங்கிலிப் போராட்ட நாடகங்கள்.

இப்படி எத்தனை..... எத்தனை..?

முத்துக்குமாரன் முதலானோரின் அக்கினிச் சங்கமங்கள் கூட உங்கள் அரசியல் கபட நாடகத்துக்கு உரமாக்கப்பட்டன. இத்தனை போராட்டங்களும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு விடிவினைப் பெற்றுத்தருவதற்குப் பதிலாக மத்திய அரசில் கருணாநிதியின் அரசியல் சார்ந்த சலுகைகளையே வென்றுகொடுத்தன. சில வருடங்கள் ஆட்சியையும் தாக்குப்பிடித்துத் தக்க வைக்க முடிந்தது.

தங்கள் நாடகங்கள் முடியுமுன்னே பூசிய அரிதாரப்பூச்சுக்கள் உங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி இன்று சொறிந்து கொண்டிருக்கும் நிலையில் நீங்கள்.

கட்டபொம்மனுக்கு எட்டப்பன்! பண்டாரவன்னியனுக்குக் காக்கை வன்னியன்! ஈழத்தமிழருக்குக் கருணாநிதியா..?

எம்மை வீழ்த்தும் கூட்டுச்சதிக் கூட்டாளிகளில் தாங்களும் ஒருவன் என்பதை நாம் நன்கு அறிவோம்.

எனினும் அந்தச் சதி அம்பலமானதைப் பூசி மெழுக, நீங்கள் சொன்ன காரணங்கள் இருக்கிறதே; அப்பப்பா... பொய்யின் மொழிப்புலவர் தாங்கள்.

கனிமொழியைச் சிறைக்கூண்டுக்குள் சந்தித்தபோது நா தழுதழுத்ததாமே, கண்ணரும் கசிந்ததாமே.

ஊழல் செய்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாக்களைக் கபளீகரம் செய்த குற்றச்சாட்டில் அடைக்கப்பட்ட கனிமொழியின் தந்தைக்கு மகளிருந்த கம்பிக்கூண்டு கண்ணீரை வரவழைத்தது என்றால்.....

இங்கே இந்த மண்ணிலே வாழும் உரிமையைக் கேட்டதால் கொத்துக் கொத்தாக மடிந்து போன பிள்ளைகளின் தாய் தந்தையரின் கண்களில் என்ன வரும்..?

இதை உணராதவர் போல், ஒன்றுமே தெரியாதவர் போல், ஈழத்தமிழர் வீழ்ச்சிக்குச் சகோதர இயக்க மோதல்களே காரணம் என நாம் எப்போதோ மறந்து போனவற்றை இன்று ஞாபகம் வைத்துப் பேசும் முன்னாள்; முதல்வர் கருணாநிதி - அந்தச் சோற்றுக்குள்ளே தன் துரோகம் எனும் முழுப்பூசனியை மறைக்க நினைப்பது தான் வேடிக்கையானது.

இந்த நிலையில் மீண்டும் சில நாடகங்களின் அறிவிப்புகள்.

"தமிழீழம்

"டெசோ

என்ன இவை....? வரலாற்று நாடகங்களா..?

இருபத்தோராம் நூற்றாண்டில் மட்டுமல்ல் இனி வரப்போகும் சில நூற்றாண்டுகளுக்கும் இதுவே பெரும் நகைச்சுவையாக இருக்க முடியும்.

உண்ணாவிரத நாடகத்தைப் போல் ஒரு ரெசோ மாநாட்டு நாடகம். உச்சக்கட்டக் காட்சியாக தமிழீழத் தீர்மானம். பரபரப்பாக ஒத்திகை பார்க்கப்பட்ட இந்த நாடகம் எதை இலக்காகக் கொண்டது என்பதை யார் அறியாவிட்டாலும் ஈழத்தமிழர் நாம் அறிவோம். அதனால் நாம் பரபரப்படையவில்லை..... சிலிர்க்கவில்லை. வேடிக்கை மட்டுமே பார்த்தோம்.

"உண்ணாவிரத" நாடகத்தில் வந்தது போலவே உச்சக்கட்டக் காட்சி. மத்திய அமைச்சர் சிதம்பரம் வருகை!"

அதே நாடகத்தில் வந்தது போலவே இறுதி முடிவு..... பிசுபிசுப்பு.....! தாங்கள் தமிழீழம் என்று முணுமுணுக்கும் போதே எமக்குப் புல்லரிப்பை ஊட்டவில்லை. மிகப்பெரும் கோமாளித்தனமாகவே தெரிந்தது.

முடிவு எப்படியிருக்கும் என்று புரிந்ததால் மயிர்க் கூச்செறிவு எதுவுமில்லை.

அதிலும் உச்சக்கட்ட நகைச்சுவை என்னவென்றால்;; ஈழத்தமிழர் மீள்குடியேற்றம், வாழ்வாதாரம் பற்றித் தாங்கள் பேசுவது! அக்கறை காட்டுவது! அது மட்டுமல்ல உங்களது நேர்மையை நிரூபிக்க எமது தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களையும் அழைத்திருப்பதாகச் சொன்னது.

உங்களுக்கு ஒன்று தெரியுமா கலைஞரே...? உங்களை விடப் பெரிய நடிகர்கள்; எமது அரசியற் தலைவர்கள். அவர்கள் எம்மைக் கைவிட்டு நீண்ட காலமாகிவிட்டது தெரியுமா...?

உங்களது மாநாட்டில் அவர்கள் பங்குபற்றுவது இருதரப்புக்கும் அவரவர் தரப்பு மக்களை ஏமாற்ற உதவக்கூடுமே தவிர எமது வாழ்வில் எந்த விடிவையும் கொண்டு வந்துவிடப் போவதில்லை.

நாமும் கட்டப்பட்டு கடலில் தான் போடப்பட்டுள்ளோம்..... எம்மால் கட்டுமரங்களாக மிதக்க முடியவில்லை. எந்தக் கட்டுமரங்களும் எம்மை கரைசேர்க்க வரவில்லை.

இதுவரை காலமும் இடம்பெயர்ந்து அல்லலுறும் எமக்காக தங்கள் 'கஜானா' விலிருந்து ஒரு ரூபாய் கூட கொடுக்க மனம் வராதவர் நீங்கள். தமிழைச் செம்மொழியாக்கி விட்டுத் தமிழனைக் கொன்றொழித்தவர் நீங்கள். உண்மையில் நீங்கள் எங்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இதய சுத்தியுடன் வாருங்கள். எமது காயங்கள் ஆற்றமுடியாதவையானாலும் எம்மைத் தேற்றலாம். உங்கள் உண்மையான மனமாற்றம் எமது இனத்தின் மீளெழுச்சிக்கு, ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு உதவுமேயாக இருந்தால் - கடந்தகாலத்தை மறக்க முடியாவிடினும் கூட மன்னிக்கவாவது செய்யும் மனிதத்துவம் இன்னும் எங்களிடம் இருக்கிறது.

தயவுசெய்து எம்மைப் பகடைகளாக்கி விளையாடாதீர்கள்.

ஏனெனில் நாம் மனிதர்கள்.

எங்கள் வாழ்வுரிமைக் கோசத்தை உங்கள் மூலதனமாக்காதீர்கள்.

ஏனெனில் அது எமது இனத்தின் இருப்பு.

சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால்......

எம்மை வாழ விடுங்கள்.

இவ்வண்ணம்

ஈழத்தமிழ் அகதி.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

எமது விளைநிலங்களை எம்மிடமே தாருங்கள்! வெலிஓயா பிரதேச செயலரிடம் மகஜர் கையளிப்பு!Top News
[Wednesday, 2013-06-19 21:00:36]

முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் ரவிகரன் தலைமையிலான பிரஜைகள் குழுவினரும், தமது வயல்நிலங்களை இழந்து தவிக்கும் கொக்கிளாய் கிழக்கு, கொக்கிளாய் மேற்கு, கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய் வடக்கு, கொக்குத்தொடுவாய் மத்தி, கொக்குத்தொடுவாய் தெற்கு ஆகிய கரைத்துறைப்பற்று பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களைச்சேர்ந்த மக்களின் பிரமுகர்களும், இணைந்து, வயல்நிலங்களின் காவல் தெய்வமான கோட்டைக்கேணி பிள்ளையார் கோவில் இறை வழிபாட்டின் பின்னர், வெலிஓயா பிரதேச செயலர் தீபல் நிஸாந்த திரிமன்னவிடம் இன்று காலை 11.00 மணியளவில் மகஜரை கையளித்ததோடு, மகஜரின் பிரதி ஒன்றை மகாவலி திட்ட அதிகார சபையின் வெலிஓயாவுக்கான இணைப்பதிகாரியிடமும் கையளித்தனர்.



வவுனியா வைத்திய சாலையில் தாதியர்கள் பணி பகிஷ்கரிப்பு! Top News
[Wednesday, 2013-06-19 20:52:13]

அரசாங்க தாதிமார் சங்கத்தை சேர்ந்த தாதிய உத்தியோகத்தர்கள் பல அம்ச கோரிக்கைகளை முன் வைத்து வவுனியா வைத்திய சாலை முன்றலில் சுலோக அட்டைகளை தாங்கியவாறு ஒரு மணி நேர பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். அரசே ஒரு வாரத்திற்கான வேலை நாட்களை ஐந்து நாட்களாக மாற்று ,ஆபத்து கொடுப்பனவு அனைத்து தாதிய உத்தியோகத்தர்களுக்கும் வழங்க வேண்டும்,மேலதிக நேர கொடுப்பனவு என்பன அதிகரிக்கப் பட வேண்டும் ,அரசே 1979 ல் வெளி வந்த சுற்றறிக்கை ரத்து செய்யப்பட வேண்டும் ,பட்டதாரி தாதிய உத்தியோகத்தர் களுக்கு நியமனத்தை வழங்கு ,சேவை மூப்பு அடிப்படையின் அடிப்படையின் படி மூத்த தாதியர்களுக்கு பதவி உயர்வுகளை வழங்கு என்பவற்றை முதலான கோரிக்கைகளை முன் வைத்து இப்போராட்டம் நடை பெற்றது.



யாழ்.மக்கள் இராணுவத்தினரை விரும்புகின்றனர் - லலித் வீரதுங்க!
[Wednesday, 2013-06-19 20:26:48]

யாழ்ப்பாணத்திலுள்ள காணிகள் பொது மக்களுக்கு திருப்பி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆயுதபடைகளை அங்கு தொடர்ந்தும் இருக்குமாறு யாழ்ப்பாண மக்கள் மனப்பூர்வமாக கேட்பதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்தார். பல நிலங்கள் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளன, அரசாங்கத்துக்கு தேவையான நிலங்களை அரசாங்கம் வைத்துக்கொள்ளும். உயர் பாதுகாப்பு வலயம் 60 சதவீதத்தால் குறைந்துவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். டுவிட்டரில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



13 பிளஸ் எனக்கூறியது அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் தீர்வையே : இந்தியாவிற்கு இலங்கை புது விளக்கம்!
[Wednesday, 2013-06-19 18:53:08]

"13 + என நாம் சொன்னது அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் பொதுவான தீர்வு" இதுவும் மகிந்த சிந்தனையின் ஒரு துளி இலங்கையின் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் மிகவும் விரிவுப்படுத்தப்பட்ட பொதுவான தீர்வையை 13 பிளஸ் என இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு அறிவித்திருந்தாக இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு புதிய விளக்கம் அளித்துள்ளது. அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதி ஒருவர் ஊடாக இலங்கை அரசாங்கம் இதனை இந்திய அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது. 13வது அரசியல் அமைப்புத் திருத்தமானது அரசியல் கட்சிகளின் உரிய இணக்கங்கள் இன்றியே ஜே.ஆர். ஜயவர்தன அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.



விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புக்களை தடைசெய்யுமாறு ஆஸி. பிரதமரிடம் இலங்கை வேண்டுகோள்! Top News
[Wednesday, 2013-06-19 18:46:02]

அவுஸ்திரேலியாவில் இயங்கும் விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகளை தடைசெய்யுமாறு அந்நாட்டுப் பிரதமர் ஜுலியா கில்லார்ட்டிடம், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாமல் ராஜபக்ச,லொஹான் ரத்வத்த, திலங்க சுமதிபால, வசந்த சேனநாயக்க ஆகிய ஆளும்கட்சியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவுக்குத் தலைமையேற்று அவுஸ்திரேலியா சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், இன்று அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பிரதமர் ஜுலியா கில்லார்ட், வெளிவிவகார அமைச்சர் றொபேட் கார் ஆகியோரை சந்தித்துப் பேசினார். இதன்போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதுடன், வரும் நவம்பரில் கொழும்பில் கொமன்வெல்த் உச்சி மாநாட்டை நடத்துவதற்கான அவுஸ்திரேலியாவின் உதவியையும் கோரியுள்ளார்.



மாகாண இணைப்பை தடுக்கும் 19ஆவது திருத்தத்தை ஒத்தி வைக்க அரசு தீர்மானம்!
[Wednesday, 2013-06-19 18:39:57]

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் ஒன்றுக்கு மேற்பட்ட மாகாணங்கள் ஒன்றிணைவதை தடுக்கும் நோக்கில் கொண்டுவர தீர்மானித்திருந்த 19 ஆவது திருத்தச் சட்டமூலத்தை அரசாங்கம் பிற்போட்டுள்ளதாக தெரியவருகின்றது. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான 19 ஆவது திருத்தச் சட்டம் அவசர சட்டமூலமாக செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல கடந்த வாரம் தெரிவித்திருந்தபோதிலும் அதனை தற்போது பிற்போட்டுள்ளதாகவே அறிய முடிகின்றது. அந்த வகையில் நேற்று பிற்பகல் பாராளுமன்றக்கட்டட தொகுதியில் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் 19 ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டுவருவது தொடர்பில் எந்த விடயமும் ஆராயப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மண்டபத்தில் இலங்கைத்தமிழர் மாரடைப்பால் மரணம் - மனைவி புதல்விகளை சந்திக்க தடை!
[Wednesday, 2013-06-19 18:21:05]

இலங்கையிலிருந்து சென்று தமிழகம் மண்டபம் முகாமில் உள்ள தனது மனைவி மற்றும் புதல்விகளை சந்திக்க சென்ற இலங்கைத் தமிழர் அந்த முகாமிற்கு அருகாமையில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், மரணமானார். இவரது மனைவி கடந்த 2011ம் ஆண்டு கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய உற்சவத்திற்காக கச்சதீவு சென்றிருந்தார். கச்சதீவில் இருந்து அவர் தமது இரண்டு புதல்விகளுடன் சட்டவிரோதமான முறையில் தமிழகத்தைச் சென்றடைந்த வேளையில் கியு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.பிரயாண ஆவணங்கள் எதுவுமே அற்ற நிலையில் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.



லண்டனில் ஆர்பாட்டம் நடத்திய ஈழத்தமிழர்கள் மீது சிங்கள வெறியர்களின் தாக்குதலை கண்டிக்கிறோம்: - பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு
[Wednesday, 2013-06-19 18:11:39]

லண்டனில் ஸ்ரீலங்கா துடுபெடுத்தாட் அணியைப் புறக்கணிக்குமாறு வலியுறுத்தியும் மற்றும் ஸ்ரீலங்காவில் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் தமிழர்கள் மீதான இன அழிப்புக்கு எதிராக சர்வதேச விசாரணை வேண்டியும் நேற்று லண்டன் வாழ் ஈழதமிழர்களால் லண்டன் ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியாவிற்கும், சிறிலங்காவுக்கும் இடையில் துடுபெடுத்தாட்ட போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது மைதானத்துக்கு முன்பாக அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் நிகழ்த்தப்பட்டது.



ஊடகவியலாளர சிவராமை கடத்தியவர்களை அடையாளம் காட்ட முடியும் - முச்சக்கர வண்டி சாரதி சாட்சியம்!
[Wednesday, 2013-06-19 18:11:18]

கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரான தர்மரட்ணம் சிவராமைக் கடத்திய நபர்களை தன்னால் அடையாளம் காட்ட முடியும் என முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார். கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சிவராம் கொலை வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, அங்கு சாட்சியமளித்த கொழும்பு பாமன்கடை பகுதியைச் சேர்ந்த ரஞ்சன் பிரியந்த என்னும் முச்சக்கர வண்டி சாரதியே இவ்வாறு கூறியுள்ளார். சிவராம் கடத்தப்பட்ட போது தான் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்துக்கு அருகே தனது வண்டியுடன் நின்றிருந்ததாகக் அவர் கூறினார்.



புகலிடம் கோருவோருக்கு நிபந்தனைகளுடன் தற்காலிகமான விஸா! - ஆசியில் அவதிப்படும் அகதிக் கொரிக்கையாளா்கள்
[Wednesday, 2013-06-19 18:00:22]

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருவோருக்கு மூன்று நிபந்தனைகளுடன் தற்காலிகமான விஸா வழங்கப்படுவதனால் தமிழர்களுக்கு உயிரிருந்தும் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவில் இருக்கும் பாதிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். புகலிட கோரிக்கையாளர்கள் தொழில் செய்ய முடியாது, குடும்பத்தை அவுஸ்திரேலியாவுக்கு எடுக்க முடியாது மற்றும் பணம் அனுப்பமுடியாது ஆகிய மூன்று நிபந்தனைகளுடனேயே தற்காலிக விஸா வழங்கப்படுகின்றது.



விரிவுரையாளரை தாக்கிய மாணவனை வைத்தியசாலையில் வைத்து கைதுசெய்த பொலிஸார்! Top News
[Wednesday, 2013-06-19 17:53:56]

நாவல திறந்த பல்கலைக்கழக சட்டபீட வளாகத்தில் பெண் விரிவுரையாளரான யசோதரா கதிர்காமத்தம்பியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய மாணவனை பொலிஸார் வைத்தியசாலையில் வைத்து கைதுசெய்துள்ளனர். இன்று புதன்கிழமை யசோதரா கதிர்காமத்தம்பி என்ற பெண் விரிவுரையாளர் குறித்த மாணவனால் தாக்கப்பட்ட நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் தாக்குதலை மேற்கொண்ட மாணவன் பல்கலைக்கழக வளாகத்தில் கூரிய ஆயுதத்துடன் நடமாடியதையடுத்து ஒருவகை மருந்தை உட்கொண்ட நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து குறித்த மாணவன் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைபெற்ற வேளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.



13 இல் திருத்தம் செய்யாவிடின் அரசில் நீடிப்பது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் - விமல் எச்சரிக்கை!
[Wednesday, 2013-06-19 17:50:04]

ஆளும் கட்சியில் தொடர்ந்தும் நீடிப்பதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாகாணசபை சட்டத்தில் திருத்தங்கள் செய்யாது வட மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறு தேர்தல் நடத்தப்பட்டால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். சில தரப்பினர் தூதுவராலயங்களுக்கு அடிமைப்பட்ட அரசியலை முன்னெடுத்து வருகின்றனர். இருப்பினும் பிரிவினைவாதத்திற்கு ஆதரவளிக்கும் மாகாணசபை அதிகாரங்கள் ரத்து செய்யப்பட வேண்டும். மாகாணசபை சட்டங்களில் திருத்தம் செய்யாது தேர்தல் நடத்தப்பட்டால் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்க நேரிடும் என விமல் வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளார்.



சிங்களவர்களால் லண்டனில் தமிழீழ மாணவர்கள் தாக்கப்பட்டமைக்கு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு கண்டனம்!
[Wednesday, 2013-06-19 17:48:32]

தமிழ்த் தேசிய இனத்தின் மீது தொடர்ச்சியான இனவழிப்புப் போரை கட்டவிழ்த்து விட்டுள்ள சிங்கள இனவெறியாளர்களின் ஆட்சியரங்காகவுள்ள சிறிலங்காவினை புறக்கணிக்கக் கோரி, புலம்பெயர் தமிழீழ மாணவர்களினால் கடந்த 17ம் திகதி ஓவல் துடுப்பாட்ட மைதானம் முன்பாக ஒழுங்கு செய்யப்பட்ட அமைதி வழியான கவனயீர்ப்புப் போராட்டம் சிங்கள இனவெறியாளர்களின் காட்டுமிராண்டித்தனமான வன்முறைத் தாக்குதலுக்குள்ளானது. தாயகத்தில் பல்வேறுபட்ட ஒடுக்குமுறைகளுக்குள் அடக்கி ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் எமது தமிழீழ மக்கள் தமது அடிப்படை உரிமைகள் யாவும் மறுக்கப்பட்டு திறந்த வெளிச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.



வடக்கு தேர்தலுக்கு எதிராக குரலெழுப்புபவர்கள் ஜனாதிபதியின் திட்டத்தையே முன்னெடுக்கின்றனர் - அசாத் சாலி
[Wednesday, 2013-06-19 17:42:11]

வடக்குத் தேர்தலுக்கு எதிராக கூக்குரல் போடும் சம்பிக்க, விமல், பொதுபல சேனா, ராவணா பலய மற்றும் ராவய போன்றோர் ஜனாதிபதியின் திட்டத்தையே முன்னெடுக்கின்றனர் என கொழும்பு மாநாகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி தெரிவித்தார். கொழும்பு பான்ஸ் பிளேஸில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற அதிகாரத்தை பகிர்ந்து நாட்டைக் கட்டியெழுப்பும் அமைப்பின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



மனைவியுடன் தகராறு - சயனைட் கடித்த குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதி!
[Wednesday, 2013-06-19 17:38:06]

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சயனைட் கடித்து தற்கொலைக்கு முயற்சித்த ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குருசுமதவடி, ஆணைக்கோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதான குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவராவார். இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது என்று மானிப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரி மல்கம் பேட் தெரிவித்தார். சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் மனைவியிடம் விசாரணை மேற்கொண்டவேளை, கணவருக்கு சயனைட் எவ்வாறு கிடைத்தது என்பது பற்றி தனக்கு தெரியாதென்று கூறியுள்ளார்.



பஸ் விபத்துக்குள்ளானதில் இருவர் பலி, 70 பேர் காயம்!
[Wednesday, 2013-06-19 17:19:14]

நுவரெலியா, ஹாவாஎலிய பகுதியில் பஸ் வண்டியொன்று விபத்திற்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் இருவர் பலியாகியுள்ளதுடன், 70 பேர் காயமடைந்துள்ளனர். பதுளையிலிருந்து நுவரெலியா நோக்கி வந்துகொண்டிருந்த பஸ் வண்டியொன்றே இன்று புதன்கிழமை மாலை 4 மணியளவில் விபத்திற்குள்ளானது. இப்பஸ் வண்டியானது பாதையை விட்டு விலகிச்சென்று பள்ளத்தில் வீழ்ந்துள்ளது. இவ்விபத்தில் நமுணுகல பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் இருவரே பலியாகியுள்ளனர். காயமடைந்தவர்கள் நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



தமது நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்தும் தருணம் இந்தியாவிற்கு வந்துவிட்டது - மனோ கணேசன்!
[Wednesday, 2013-06-19 17:15:59]

இந்திய மத்திய அரசின் கருத்துகள், இந்திய அரசு தலைவர்கள் வழங்கிய உறுதிப்பாடுகள் என மன்மோகன் சிங் சொன்னார், சோனியா சொன்னார் என கூட்டமைப்பு எம்பிக்கள் ஊடகங்கள் மூலமாக சொல்கின்றார்கள். கூட்டமைப்பு எம்பிக்களுடன் ஆளும் இந்திரா காங்கிரஸ் தலைவர், இந்திய பிரதமர், வெளிவிவகார அமைச்சர் ஆகியோரது அழகான படங்களும் ஊடகங்கள் மூலமாக காட்டப்படுகின்றன. ஆனால், இந்திய அரசின் உண்மை நிலைப்பாடுகள் என்ன என்பது பற்றி தமிழ் மக்கள் மத்தியில் ஒரு மயக்க நிலைமை நிலவுகின்றது. இது முடிவுக்கு வரவேண்டும். யுத்தத்தை நடத்தி முடித்த இந்தியா, தேசிய இனப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருமா, இல்லையா என தமிழ் மக்கள் தெரிந்து கொள்ள விரும்புகின்றார்கள்.



சிங்கள ராவயவின் ஊர்வலத்தை தடுத்து நிறுத்தவும் - ஜனாதிபதியிடம் அசாத் சாலி கோரிக்கை!
[Wednesday, 2013-06-19 16:08:46]

மாடுகளை அறுப்பதை நிறுத்தக் கோரி கதிர்காமத்தில் இருந்து கொழும்புக்கு ஊர்வலமாக வரும் சிங்கள ராவய அமைப்பினரை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்-முஸ்லிம் கூட்டமைப்பின் தலைவரான அசாத் சாலி அவர்கள் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைக் கோரியுள்ளார். ஊர்வலமாக வந்த இவர்கள் கடந்த இரவு தங்காலை என்னும் இடத்தில் (ஜனாதிபதியின் பகுதியில்) ஒரு மாட்டிறைச்சிக் கடையை உடைத்து, தீ வைத்ததாகக் குற்றஞ்சாட்டும் அசாத் சாலி அவர்கள், அந்தத் தாக்குதல் நடந்தபோது பொலிஸார் பார்த்துக்கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.



13 ஆவது திருத்த சட்டத்தைத் திருத்துவது இன்னொரு வாக்குறுதி மீறல்: - எம்.ஏ. சுமந்திரன், நா.உ.
[Wednesday, 2013-06-19 10:46:32]

சிறீலங்கா அரசு சிறீலங்கா மக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நிலைமாறாமல் தொடர்ந்தும் தோல்வி கண்டுவருவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி வந்துள்ளது. இலங்கையின் யாப்பில் கொண்டுவரப்படவுள்ள உச்தேச 13 ஆவது சட்டதிருத்தம் - இன்று சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட அதிகாரப்பரவல் மூலம் வழங்கப்பட்டுள்ள ஒரே சலுகை - இந்த வாக்குறுதி மீறல்களுக்கு இன்னொரு எடுத்துக்காட்டு.



இனமானக் கலைஞர் மணிவண்ணனுக்கு கனடிய மண்ணில் நடாத்தப்பட்ட நினைவெழுச்சி வணக்க நிகழ்வு Top News
[Wednesday, 2013-06-19 09:55:44]

ஜூன் 16, 2013, ஞாயிற்றுக் கிழமை 5 மணிக்கு 733 பேர்ச்மௌன்ட் வீதியில் கனடா கந்தசாமி ஆலயத்தில் ஈழ விடுதலையை தன் உயிர் மூச்சு எனக் கொண்ட பன்முக கலைஞன் மணிவண்ணன் ஐயாவின் நினைவஞ்சலி கூட்டம் கனடியத் தமிழர் தேசிய அவையினரால் முன்னெடுக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மக்கள் கலந்து கொண்டு பூவள்ளி தூவி வணங்கி நினைவெழுச்சி உரைகளில் எழுகை பெற்றுச் சென்றனர். இந்த நிகழ்வில் காசி ஆனந்தன் அண்ணாவின் சிறப்புரை நேரடியாக ஒலிபரப்பப்பட்டது. இனமானக் கலைஞர் மணிவண்ணன் அவர்களை நினைத்து உலகெங்கும் வாழும் தமிழர்களால் நடாத்தப்பட்ட நினைவெழுச்சி நிகழ்வுகள் வரிசையில் கனடிய மண்ணில் நடைபெற்ற இந்த நிகழ்வும் மிக சிறப்பாக நடைபெற்றது.


AJRwindows22.05.13
Mahesan supramaniyam 031109
NIRO-DANCE-100213
INNSYS-20120930
Ramans2011
TDE_Computers2011
TamilsGuid-191012-2013
RoyaShades-l2011(04-12-11)
Suresh-remax-2013-01-01
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com