Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
June 20, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
நடக்காது என்று மனப்பால் குடித்தவர்களின் முகத்தில் கரிபூசியது டெசோ மாநாடு! - கருணாநிதி
[Monday, 2012-08-13 18:41:41]
News Service

டெசோ மாநாடு சிறப்பாக நடைபெற்றதற்கு நன்றி கூறி திமுக தலைவர் கருணாநிதி டெசோ அறிக்கை ஒன்ற வெளியிட்டுள்ளார். இந்த அறிககையில் அவர் கூறியிருப்பதாவது-

  

நேற்று சென்னையில் மாலையில் நடைபெற்ற டெசோ மாநாடு - அதனை யொட்டி காலையில் நடைபெற்ற ஆய்வரங்கம் ஆகியவை டெசோ மாநாடு நடைபெறவே நடைபெறாது என்று மனப்பால் குடித்தவர்களின் முகத்தில் எல்லாம் கரியை பூசுகின்ற அளவிற்கு டெசோ மாநாடு மிகவும் சிறப்பாகவும் ஈழத் தமிழர்களுக்குப் பயனுள்ள வகையிலும் நடைபெற்று முடிந்துள்ளது.

காலையில் நடைபெற்ற ஆய்வரங்கத்தில் இந்தியாவின் வட மாநிலங்களில் இருந்தும், உலக நாடுகளிலிருந்தும் வந்திருந்த 30க்கு மேற்பட்ட தமிழார்வலர்கள், ஈழத் தமிழர் பிரச்சினைகளில் தொடர்ந்து ஈடுபாடு காட்டி வருவோர், வரைவுத் தீர்மானங்களாக தயாரிக்கப்பட்டிருந்த 11 தீர்மானங்களின் மீது விலாவாரியாக தங்கள் ஆழ்ந்த கருத்துக்களையும், திருத்தங்களையும் எடுத்து வைத்து இறுதி தீர்மானங்களை வடிவமைத்து உருவாக்கியதோடு மட்டுமின்றி, புதிதாக மூன்று தீர்மானங்களையும் முன்மொழிந்து அவையும் விவாதிக்கப்பட்டு மாநாட்டிலே நிறைவேற்றப்பட வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டது.

குறிப்பாக கடைசித் தீர்மானமான டெசோ மாநாட்டிற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று ஆணை பிறப்பித்த தமிழக அ.தி.மு.க. அரசுக்குக் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமென்று கூறி, அந்தத் தீர்மானத்தை முன்மொழிந்ததே லோக் ஜனசக்தி தலைவரும், மத்திய அரசின் முன்னாள் அமைச்சரும், இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ராம் விலாஸ் பாஸ்வான் தான்.

மாநாட்டில் நிகழ்த்தப்பட்ட உரைகளைக் கேட்பதற்காகவும், ஈழத் தமிழர் பிரச்சினையில் நாமனைவரும் ஒன்றுபட்ட உணர்வோடு இருக்கிறோம் என்பதை உலகிற்கு உணர்த்துவதற்காகவும் பல்லாயிரக்கணக்கில் திரண்டு வந்து, ராணுவ வீரர்களைப் போல; எந்தவிதமான அசம்பாவிதத்திற்கும் இடம் கொடுத்து விடாமல் மாநாட்டினை மாபெரும் வெற்றி மாநாடு என்ற சிறப்பினை உருவாக்கித் தந்த அனைவருக்கும் நன்றியை குவிக்கின்றேன்.

டெசோ மாநாட்டிற்கு அனுமதி கொடுக்கக் கூடாது என தொடுத்த வழக்கில் உயர் நீதி மன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் பொது நலன் கருதி, மாநாடு அமைதியான முறையில் நடக்கும் விதமாக தகுந்த நடவடிக்கையை போலீஸ் கமிஷனர் மேற்கொள்ள வேண்டும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்த போதிலும், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், வெளிநாடுகளைச் சேர்ந்த மிக முக்கிய பிரமுகர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களும் கலந்து கொண்ட, அந்த மாநாட்டுப் பந்தலிலோ, அல்லது வெளிப் பகுதிகளிலோ காவல் துறை எவ்விதப் பாதுகாப்புப் பணியையும் மேற்கொள்ளவில்லை.

காவல் துறை பாதுகாப்பே இல்லாதது கண்டு மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்கள், குறிப்பாக வெளி நாட்டிலிருந்து வந்திருந்தவர்கள் ஆச்சரியமும், அதிர்ச்சியும் தெரிவித்தார்கள்.

காவல் துறையினர் வாயிலாகவே அ.தி.மு.க. பிரமுகரை விட்டு நீதி மன்றத்திலே தடை பெறுவதற்கு மூன்று முறை முயன்று மூக்கறுபட்டவர்களுக்கு காவல் துறையின் மீது பழிபோட்டு தப்பித்துக் கொள்ள முடியாமல் போய் விட்டது என்பதை தமிழக மக்கள் தெளிவாகவே உணர்ந்து கொண்டார்கள்.

தடைக்கற்கள் உண்டெனினும், தடந்தோள்கள் உண்டு என்று நான் நேற்று முன்தினம் குறிப்பிட்டபடி, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் எப்போதுமே விரோதப் போக்கினைக் கடைப்பிடித்து வரும் அ.தி.மு.க. வும், அ.தி.மு.க. ஆட்சியாளர்களும் தொடர்ந்து நமக்கு ஏற்படுத்திய தடைகளையெல்லாம் கடந்து காவல் துறையின் எவ்விதப் பாதுகாப்புமின்றி டெசோ மாநாடு வெற்றிகரமாக நடைபெற ஒத்துழைத்த டெசோ இயக்கத்துக் கண்மணிகள் ஒவ்வொருவருக்கும், சிறப்பாகவும் குறிப்பாகவும் காலத்தே வழங்கப்பட்ட நீதியின் காவலர்களுக்கும் ஆயிரம் ஆயிரம் முறை நன்றி சொல்லி அகம் மிக மகிழ்கிறேன் என்று கூறியுள்ளார்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

புதிய தமிழகமும் ஆதரவு - கனிமொழியின் வெற்றி உறுதியாகிறது!
[Thursday, 2013-06-20 17:00:56]

வரும் மாநிலங்களவைத் தேர்தலில் திமுகவுக்கு புதிய தமிழகம் கட்சி தனது ஆதரவை அளிக்கும் என்று கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். சென்னையில் இன்று திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய கிருஷ்ணசாமி, பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மாநிலங்களவைத் தேர்தலில், திமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் கனிமொழிக்கு புதிய தமிழகம் கட்சி தனது ஆதரவை அளிக்கும் என்றார்.மேலும், அதிமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு போதுமான ஆதரவு உள்ளது. எனவே, எங்கள் கட்சியின் வாக்குகள் வீணாகக் கூடது என்பதற்காக திமுகவுக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.



இலங்கைத் தமிழ் தம்பதிகளை கடத்தியவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது!
[Thursday, 2013-06-20 17:00:04]

லண்டனைச் சேர்ந்த இலங்கைத் தமிழ்த் தம்பதியரை கடத்திய 8 குற்றவாளிகளை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைத செய்ய சென்னை காவல் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். லண்டனில் இருந்து இலங்கை சென்று அங்கிருந்து சென்னை வந்த கணபதிபிள்ளை தவராஜா, அவரது மனைவி ஆகியோரை மர்ம கும்பல் ஒன்று கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டியது. கும்பலை பிடிக்க சென்னை காவல்துறை ஆணையாளர் எஸ் ஜார்ஜ் உத்தரவின் பேரில், காவல்துறையினர் தம்பதியரை மீட்டு குற்றவாளிகளை கைது செய்தனர்.



இமயமலை சுனாமி: சேற்றில் புதைந்து 1000 பேருக்கு மேல் பலி; சேறு, குப்பைகளால் மூடப்பட்ட கேதார்நாத்; 40 அடி உயர சிவன் சிலையின் மார்பளவுக்கு வெள்ளம்!
[Thursday, 2013-06-20 07:05:57]

உத்தரகாண்டில் மழை வெள்ளத்தால் யாத்திரிகர்களுக்கு பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. வெள்ளம், நிலச்சரிவால் சேற்றில் கூட்டம் கூட்டமாக புதைந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், அரியானா மாநிலங்களில் பருவமழையின் போது வழக்கமாக பெய்யும் மழையின் அளவை விட, கடந்த 3 நாட்களில் மூன்று மடங்கு அதிகமாக பெய்ததால் ஆறுகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏராளமான பகுதிகள் மழை வெள்ளத்தில் சிக்கியுள்ளன. ஆங்காங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.மழை காரணமாக வீடுகள் இடிந்துள்ளன.



ஆண் - பெண் உடலுறவு திருமணத்துக்குச் சமமே - பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு!
[Thursday, 2013-06-20 06:56:16]

இருபத்தியோரு வயதான ஆணும், பதினெட்டு வயதான பெண்ணும் உடலுறவு கொண்டால் அவர்கள் திருமணமானவர்களாக கருதப்படுவர் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ் கர்ணன், அளித்திருக்கும் தீர்ப்பு தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. இந்தத் தீர்ப்பு திருமணம் செய்துகொள்வதாகக் கூறி உடலுறவு கொண்டு பின்னர் ஏமாற்றும் ஆண்களுக்கு ஒரு எச்சரிக்கை என்று ஒரு சிலரும், திருமணத்திற்கு முன்னரே உடலுறவு கொள்ள இந்த தீர்ப்பு தூண்டக்கூடும் என்று ஒரு சிலரும், உடலுறவையே திருமணமாக்குவது என்பது தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாகும் என்று வேறு சிலரும் வாதிடுகின்றனர்.



இலங்கைப் படையினர் விரைவில் திருப்பி அனுப்பப்படுவர் என்கிறார் மத்திய அமைச்சர் நாராயணசாமி!
[Thursday, 2013-06-20 06:48:29]

குன்னூரில் ராணுவப் பயிற்சி பெறும், இரண்டு இலங்கை ராணுவ அதிகாரிகள், விரைவில் திருப்பி அனுப்பி வைக்கப்படுவர் என, மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறினார். சென்னை விமான நிலையத்தில் நேற்று அவர் கூறியதாவது: குன்னூரில் ராணுவப் பயிற்சி பெறும் இரண்டு இலங்கை அதிகாரிகளை, திருப்பி அனுப்புமாறு, ராணுவ அமைச்சர் மற்றும் செயலரிடம் கூறியுள்ளோம். விரைவில், இரு அதிகாரிகளும் திருப்பி அனுப்பப்படுவர். பா.ஜ.க சார்பில், பிரதமர் வேட்பாளராக, நரேந்திர மோடியை நிறுத்த அதிக வாய்ப்புள்ளது. அதேபோல், காங்கிரஸ் சார்பில், பிரதமர் வேட்பாளராக, ராகுலை நிறுத்த அதிக வாய்ப்புள்ளது.



இன்று உலக அகதிகள் தினம்: ஒரு ஈழ அகதியின் உரிமைக்குரல்!
[Thursday, 2013-06-20 06:39:50]

உலகில் போர், வன்முறை, வறுமை, வேலை இழப்பு போன்றவற்றால் உடமைகள், உரிமைகள், உறவுகள், இருப்பிடம் என அனைத்தையும் இழந்தவர்கள், அகதிகளாக உருவெடுக்கின்றனர். இவ்வாறு பாதிக்கப்பட்டு, அச்சுறுத்தலில் வாழ்ந்துவரும், ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்தும் விதமாக, ஜூன் 20ம் தேதி, உலக அகதிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இவர்களுக்கு உள்ள உரிமைகளை, திரும்ப அவர்களுக்கு வழங்கவேண்டும். அவர்களும் சமூகத்தில் மற்றவர்களைப் போல நடத்தப்பட வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது.



இலங்கை கடற்படை அட்டூழியத்தால், தொழிலுக்கு முழுக்குப் போட்டு விட்டு 200 படகுகளை அரசிடம் ஒப்படைக்க மீனவர்கள் முடிவு!
[Thursday, 2013-06-20 06:32:39]

இலங்கை கடற்படையினர், ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களை கைது செய்து சிறையில் அடைப்பது, வலைகளை வெட்டி மீன்களை கடலில் மூழ்கடிப்பது போன்ற அட்டூழியங்கள் நீடிப்பதால், விசைப்படகுகளை தமிழக அரசிடம் ஒப்படைத்து, மாற்று தொழிலுக்கு நிதி வழங்க, 200 மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரத்தில் 770, மண்டபத்தில் 570, பாம்பனில் 100 உட்பட 1,650 விசைப்படகுகள் உள்ளன. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் மீன்பிடி தொழிலை நம்பி உள்ளன. ராமேஸ்வரம் மீனவர்கள் கரையில் இருந்து 12 நாட்டிக்கல் மைல் (22 கிலோ மீட்டர் ) தூரத்திற்குள் மட்டுமே மீன்பிடிக்க வேண்டும் என, நிபந்தனை உள்ளது.



உத்தர்காண்ட் வெள்ளத்தில் ஆயிரக்கணக்கானோர் பலி - சுஷ்மா சுவராஜ் அதிர்ச்சித் தகவல்!
[Wednesday, 2013-06-19 18:01:36]

இமயமலையை ஒட்டி அமைந்துள்ள இமாச்சல் பிரதேசம், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பருவமழை பெய்து வருகிறது. இதில் உத்தரகாண்ட் மாநிலத்தின் கேதர்நாத், பத்ரிநாத், ஜொஷிமாத் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கடுமையான மழை கொட்டி வருகிறது. இந்த பேய் மழையினால் நிலச்சரிவும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு 100-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். உத்தரகாண்டில் ஏற்பட்ட சேதம் குறித்து பாரதீய ஜனதா கட்சியின் மக்களவை எதிர்கட்சித்தலைவர் சுஷ்மா சுவராஜ், மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவுடன் நேற்றிரவு டெலிபோனில் தொடர்புகொண்டு பேசினார். அதுகுறித்து சுஷ்மா கூறியிருப்பதாவது-



இலங்கைக்குப் படையெடுக்கும் போராட்டத்தைக் கைவிட்டனர் இராமேஸ்வரம் மீனவர்கள்!
[Wednesday, 2013-06-19 17:54:20]

இலங்கை நோக்கி 1,000 படகுகளில் வெள்ளைக்கொடி கட்டி செல்லும் போராட்டத்தை, ராமேஸ்வரம் மீனவர்கள் வாபஸ் பெற்றனர். இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 57 பேரை விடுவிக்க கோரி, ஜூன் 22ல் ராமேஸ்வரத்தில் இருந்து 1,000 படகுகளில் வெள்ளைக்கொடி கட்டி, இலங்கைக்கு செல்லும் போராட்டத்தை மீனவர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். இந்நிலையில் ராமநாதபுரம் கலெக்டர் நந்தகுமார் தலைமையில், மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது. "விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக, கலெக்டர் உறுதி அளித்ததை அடுத்து, போராட்டத்தை வாபஸ் பெற்றதாக' மீனவர் சங்க தலைவர் போஸ் தெரிவித்தார்.



இலங்கைக் கடற்படையை கண்டித்து செப்ரெம்பரில் மாநாடு - பாஜக அறிவிப்பு!
[Wednesday, 2013-06-19 17:51:16]

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்கி வருவதைக் கண்டித்து, மீனவர்களுக்கு ஆதரவாக தமிழக கடற்கரையோர மாவட்டங்களில் வரும் செப்டம்பரில் பாஜக மாநாடு நடத்தவுள்ளது என்று கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். வேலூரில் பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது: சேது சமுத்திர திட்டம் தமிழகத்துக்கு தேவையான திட்டம்தான். துரதிருஷ்டவசமாக அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.



கனிமொழிக்காக அன்புமணியிடம் தூது போனார் ஸ்டாலின் - சோனியாவுடன் திமுக எம்.பிக்கள் பேச்சு!
[Wednesday, 2013-06-19 17:18:19]

தமிழ்நாட்டில் இருந்து பாராளுமன்ற மேல்சபைக்கு 6 எம்.பி.க்களை தேர்வு செய்வதற்காக வருகிற 27-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க., தே.மு.தி.க. இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. ஒரு எம்.பி.யை தேர்ந்து எடுக்க 34 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. சட்டசபையில் அ.தி.மு.க.கூட்டணிக்கு 170 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.எனவே அ.தி.மு.க. சார்பில் நிறுத்தப்பட்டுள்ள டாக்டர் மைத்ரேயன்,கே.ஆர்.அர்ஜூனன், த.ரத்தினவேல், இரா.லட்சுமணன் மற்றும் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த டி.ராஜா ஆகிய 5 பேரும் தலா 34 ஓட்டுகள் வாங்கி வெற்றி பெறுவது உறுதி.



பீகாரில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பியது நிதிஷ்குமார் அரசு!
[Wednesday, 2013-06-19 17:08:39]

பீகார் சட்டப்பேரவையில் இன்று நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள கட்சி வெற்றி பெற்றுள்ளது. பாஜவுடனான கூட்டணியை ஐக்கிய ஜனதா தளம் முறித்துக் கொண்ட நிலையில், இன்று பீகார் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பைக் கொண்டு வந்தார் முதல்வர் நிதிஷ் குமார்.நம்பிக்கை வாக்கெடுப்பு துவங்கியதும், பாஜக உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்ததை அடுத்து, 216 வாக்குகள் பெற்று, நிதிஷ்குமார் அரசு வெற்றி பெற்றது.



காஷ்மீர் முதல்வரையும் மத்திய அமைச்சரையும் விரட்டியடித்த பண்டிட்கள்!
[Wednesday, 2013-06-19 07:19:46]

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், சில ஆண்டுகளுக்கு முன் வரை, சகல பெருமையுடன் வாழ்ந்த பண்டிட் சமுதாயத்தினரை, பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் கைகோர்த்த உள்ளூர் சக்திகள் வெளியேற்றி விட்டன. அங்கு, பிராமணர்கள், பண்டிட்டுகள் என, அழைக்கப்படுகின்றனர். அகதிகள் முகாம்களில் வசிக்கும் அவர்கள், தங்களின் வழக்கமான, பூஜை, புனஸ்காரங்களை செய்யத் தவறுவதில்லை. நேற்று முன்தினம், துலாமல்லா என்ற இடத்தில் உள்ள, கிர் பவானி கோவிலில் பூஜை செய்து கொண்டிருந்த போது, அங்கு வந்த, மாநில முதல்வர், உமர் அப்துல்லாவை விரட்டி அடித்தனர்.



"மீண்டெழும் பாண்டியர் வரலாறு' நூலுக்கு தமிழக அரசு தடை - கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்று எழுத்தாளர்கள் கொதிப்பு!
[Wednesday, 2013-06-19 07:14:16]

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் எனக் கூறி, "மீண்டெழும் பாண்டியர் வரலாறு' என்ற புத்தகத்தை, தமிழக அரசு தடை செய்துள்ளது, கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது; தடையை நீக்க வேண்டும்' என, எழுத்தாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செந்தில் மல்லர் என்பவர் எழுதிய, "மீண்டெழும் பாண்டியர் வரலாறு' என்ற புத்தகம், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் எனக் கூறி, அப்புத்தகத்தை வெளியிட, தமிழக அரசு தடை விதித்துள்ளது. இப் புத்தகத்திற்கு தடை செய்திருப்பது, தமிழகத்தில் உள்ள புத்தக பிரியர்களுக்கு, பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.



மன்மோகன்சிங்கின் குடுகுடு அமைச்சரவை!
[Wednesday, 2013-06-19 07:07:49]

எல்லா கட்சிகளும், இளைஞர் அணி, இளைஞர் பாசறை, புதிய உறுப்பினர் சேர்க்கை என "இள ரத்தத்தை' பாய்ச்சிக்கொண்டு இருக்கும் போது, மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசில், வயதானவர்கள் நிறைய இடம் பெற்று, "தள்ளாடி'க் கொண்டு இருக்கிறது. கேபினட் அமைச்சர்களில் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட வயதானவர்களே அதிகம். இணை அமைச்சர்கள் மற்றும் தனிப்பொறுப்பு இணை அமைச்சர்கள் பட்டியலில் மட்டுமே, சற்று வயது குறைவானவர்கள் தென்படுகின்றனர்.கேபினட்டில் அதிக வயதானவராக தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை அமைச்சர் சிஷ்ராம் ஓலா இருக்கிறார். இவரது வயது 86.



வரலாறு காணாத மழையால் வடமாநிலங்கள் தவிப்பு - 131 பேர் பலி!
[Wednesday, 2013-06-19 07:02:48]

தீவிரமடைந்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக வடமாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கு ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம், நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு போன்றவற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 131 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளம் காரணமாக புனித தலங்களில் மொத்தம் 73,000 பேர் சிக்கியுள்ளனர். 500-க்கும் மேற்பட்ட யாத்ரீகர்களைக் காணவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக உத்தரகண்ட், இமாசலப்பிரதேசம், ஹரியாணா உள்ளிட்ட வடமாநிலங்களில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது.



ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கோளாறு - ஓடுபாதையில் கண்டுபிடிக்கப்பட்டதால் 182 பயணிகளும் தப்பினர்!
[Wednesday, 2013-06-19 06:48:41]

சென்னையில் இருந்து கொழும்பு செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 182 பயணிகளுடன் நேற்று மாலை 5.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார். உடனே விமானத்தை அங்கேயே நிறுத்திய விமானி, விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தெரிவித்தார். இதையடுத்து விமானத்தை இயக்க வேண்டாம். புறப்பட்ட இடத்திலேயே நிறுத்தும்படி கட்டுப்பாட்டு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.



வெள்ளத்தில் சிக்கிய இமாச்சல பிரதேச முதல்வர் 60 மணிநேரப் போராட்டத்தின் பின்னர் ஹெலி மூலம் மீட்பு!
[Tuesday, 2013-06-18 19:01:41]

வெள்ளத்தில் சிக்கிய இமாச்சல பிரதேச மாநில முதல்வர் வீரபத்திரசிங் 60 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டார். இவருடன் தவித்த 10 பேரும் பத்திரமாக மீட்டு கொண்டு வரப்பட்டனர். வட மாநிலங்களில் தற்போது பருவ மழை வெளுத்து வாங்கி வருகிறது. பஞ்சாப், அரியானா, குஜராத், உத்தர்கண்ட், டில்லி, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் கடும் மழை பெய்தது. இதில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 60 க்கும் மேற்பட்டோர் பலியாயினர். தொடர்ந்து இங்கு மீட்பு பணிகள் நடந்து வருகிறது. கங்கை, யமுனா நதியில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.



வெலிங்டன் இராணுவ முகாமை முற்றுகையிட்ட 400 பேர் கைது!
[Tuesday, 2013-06-18 18:56:45]

ஊட்டி வெலிங்டன் ராணுவ முகாமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய 15க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 400 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சட்டக்கல்லூரி மற்றும் கல்லூரி மாணவிகள் 15 பேரும் அடங்குவர்.இந்நிலையில், இதன் அடுத்தக் கட்டப் போராட்டம் குறித்து அனைத்துக் கட்சிக் குழுவுடன் கூடி விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இது குறித்து, பெரியார் தி.க.வின் ராமகிருஷ்ணன் கூறுகையில்,காங்கிரஸ் கட்சி அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்.



இறந்துபோன அர்ச்சகர் மறுநாள் உயிருடன் எழுந்தார் - இராமநாதபுரத்தில் பரபரப்பு!
[Tuesday, 2013-06-18 18:42:29]

ராமநாதபுரம் அருகே இறந்து போனதாகக் கருதப்பட்ட ஒருவர் உயிர் பிழைத்து மீண்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் சிருங்கேரி சங்கரமடம் வடக்கு தெருவில் வசித்து வருபவர் ரமணா ஐயர் என்பவரின் மகன் ரவி சாஸ்திரி(45).இவர், தேவிப்பட்டனம் திலகேஸ்வர சுவாமி கோயிலில் அர்ச்சகராக உள்ளார். கடந்த 13 ம் தேதி இதயக் கோளாறு காரணமாக இவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். இந்நிலையில் இதயக் கோளாறு காரணமாக 16ம் தேதி உயிரிழந்தார் என்று அறிவிக்கப்பட்டது.


INNSYS-20120930
NIRO-DANCE-100213
TamilsGuid-191012-2013
TDE_Computers2011
Suresh-remax-2013-01-01
RoyaShades-l2011(04-12-11)
Mahesan supramaniyam 031109
AJRwindows22.05.13
Ramans2011
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com