Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 18, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
நாட்டில் நடக்கும் பல சம்பவங்களால் குழப்பமடைந்த மக்கள் அவற்றுக்குப் பொறுப்பாக நீங்களே உள்ளீர்கள் என சிந்திக்கின்றனர்: ஜனாதிபதி மகிந்தவுக்குக் ஆனந்தசங்கரி கடிதம்
[Monday, 2012-08-13 10:12:16]
News Service

மகர சிறைச்சாலைச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஆணைக்குழு நியமித்தல் குறித்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். கடிதத்தின் முழு வடிவம் கீழே தரப்படுகிறது.

  

மாண்புமிகு மகிந்த ராஜபக்ஷ அவர்கள்
ஜனாதிபதி,
அலரிமாளிகை,
கொழும்பு 3.

மேதகு ஜனாதிபதி அவர்களே!
மகர சிறைச்சாலைச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஆணைக்குழு நியமித்தல்.
வேறு சிலரின் சிந்தனைகளை மகிந்த சிந்தனையாக மாற்றப்படுவது சம்பந்தமாக மீண்டும் ஒரு தடவை தங்களுக்கு நினைவூட்டுவதே இக்கடிதத்தின் நோக்கமாகும். பல பாரதூரமான விடயங்கள் சம்பந்தமான முழு விபரங்கள் கூட மகிந்த சிந்தனையின் பெயரால் மறைக்கப்பட்டு அவை காலப்போக்கில் மறக்கப்பட்டு விடுகின்றன.

இந்த நாட்டில் நடக்கும் பல சம்பவங்களால் குழப்பமடைந்த மக்கள் அவற்றுக்குப் பொறுப்பாக நீங்களே உள்ளீர்கள் என சிந்திக்கும் மனப்பான்மையில் வாழ்கின்றனர். மகர சிறைச்சாலை அதிகாரிகளும் அதேதினம் அதற்கு முன்பு அனுராதபுரச் சிறைச்சாலை அதிகாரிகளாலும் மிருகத்தனமாகத் தாக்கப்பட்ட பலருள் ஒரு மாதத்திற்குமேல் அறிவுதிரும்பாது கடந்த 7ஆந் திகதி மரியதாஸ் டெல்றொக்ஷனின் மரணம் சம்பந்தமாகவே இதில் குறிப்பிட விரும்புகின்றேன்.

தமிழ் அரசியல் கைதிகள் அநேகர் தங்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குப் பதிவு செய்ய போதிய ஆதாரமில்லாதவர்களை விடுவிக்குமாறு கோரி உண்ணாவிரதம் இருப்பது வழக்கம். வழமைக்கு மாறாக அவர்களில் ஒருவர் கூறிய ஆலோசனைக்கு அமைய தாம் நடத்திய உண்ணாவிரத நிகழ்வில் மூன்று சிறைச்சாலை அதிகாரிகளையும் கட்டாயப்படுத்தி சேரவைத்துள்ளனர்.

இந்த சத்தியாக்கிரகத்தில் பலோத்காரமாக அதிகாரிகளை இணைத்துக் கொண்டதை தவறு என நான் ஒத்துக்கொள்கிறேன். இது ஒரு மகாத்மா காந்தியினுடைய கொள்கையுடன் சம்பந்தப்பட்ட விடயம் என்பதால் இந்நிகழ்வை பாரதூரமாக எடுக்காமல் விட்டிருப்பின் பாரிய துன்ப நிகழ்வைத் தடுத்திருக்கமுடியும்.

தங்களோடு இருந்த சக கைதி ஒருவரை அனுராதபுரச் சிறைக்கு மாற்றி மிகமோசமாக தாக்கிய செய்தியை அறிந்து அவரை திரும்ப வவுனியாவுக்கு மாற்றக் கோரியே இந்த உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பிரச்சனையை வவுனியா சிறைச்சாலைப் பொறுப்பதிகாரியின் பொறுப்பில் விட்டிருந்தால் மிக இலகுவாகத் தீர்த்திருக்கமுடியும். ஆயுதமுள்ளவர்கள் தமது வீரத்தை நிராயுதபாணிகளிடம் காண்பிப்பதாலேயே இத்தகைய பிரச்சனைகள் உருவாகுகின்றன.

அன்றைய தினம் சம்பந்தப்பட்ட அமைச்சரை நான் தொடர்புகொள்ள எடுத்த முயற்சி தோல்வி கண்டது. நான் வவுனியாவை அடைந்தவேளை எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. கலவரம் அடக்கும் குழுவினரால் தடுத்துவைக்கப்ட்டிருந்து மூன்று அதிகாரிகளும் விடுவிக்கப்பட்டனர். அமைதியாக இது நடந்து முடிந்தது என எண்ணி மகிழ்ச்சியடைந்தேன்.

பின்புதான் சகல கைதிகளும் வவுனியாவிலிருந்து முதலில் அனுராதபுரத்திற்கும் பின் அவர்கள் அங்கிருந்து மகர சிறைச்சாலைக்கும் மாற்றப்பட்டதாக அறிந்தேன். மகர சிறைச்சாலையில் நடந்த தாக்குதல் அனுராதபுர சிறைச்சாலையில் நடந்ததைப்பார்க்க கடும்மோசமானதும் மிருகத்தனமானதாகும். இவை மிக அதிர்ச்சி தருவதும் எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாததுமானதாகும்.

யாரோ ஒருவர் பழிக்குப்பழி வாங்க முயற்சித்திருப்பதாக மிகவும் தெளிவாகத் தெரிகிறது. மிகச்சிறிய அல்லது எதுவித பாதிப்புமில்லாமல் தீர்த்திருக்கக் கூடிய பிரச்சனை இறுதியில் பெரும் சோகத்தில் முடிந்தது. இந்த மிருகத்தனமான சம்பவத்தால் முதலில் பாதிக்கப்பட்டவர் ஒரு ஏழைக் குடும்பத்தின் ஒரே மகன் - இவரில்லையெனில் இக்குடும்பத்தினருக்கு இவ்வுலகில் வேறு எதுவுமில்லை.

இரண்டாவதாகப் பாதிக்கப்பட்ட இவ்விளைஞன் ஒரு மாதத்திற்குமேல் நினைவிழந்திருந்த நிலையில் இரும்புச் சங்கிலியால் கட்டிலோடு பிணைக்கப்பட்டிருந்து கடந்த 7ல் மரணித்த மரியதாஸ் டெல்றொக்ஷன் ஆவார். நடந்துமுடிந்த சம்பவங்களில் மிகவும் வெட்கக்கேடான சம்பவம் இதுவாகும். இதேபோல மிருகத்தனமாக தாக்கப்பட்ட எஞ்சியுள்ள முப்பத்தேழுபேருக்கு என்ன நடக்கப் போகின்றது என்பதை யாரும் அறியார்.

இந்த இளைஞன் எதற்காக விசேட வைத்தியத்திற்காக வேறொரு வைத்தியசாலைக்கு மாற்றப்படவில்லை என்பதற்கு விளக்கம் கேட்கின்றனர் மாற்றப்பட்டிருந்தால் அவர் உயிருடனிருந்திருப்பார். ஒரு மாதத்திற்கு மேல் சுயநினைவற்றிருந்த ஒரு நோயாளியை ஏன் கட்டிலுடன் சங்கிலியால் பிணைத்திருந்தனர்? என்பதை அறிய அனைவரும் விரும்புவர்.

இந்த துரதிர்ஷ்டவசமான துன்பநிகழ்வை சூழ்ந்திருந்த மர்மம் என்ன என்பதை அறியவும், பாதிக்கப்பட்ட எஞ்சிய இளைஞர்களுக்குப் போதிய வைத்திய வசதி செய்யப்பட்டதா, படுகிறதா என்பதை கவனிக்கவும், பாதிக்கப்பட்டு உயிரிழந்த இரு குடும்பத்தவருட்பட ஏனைய கைதிகளுக்கும் கணிசமான நஷ்டஈடு வழங்கவும் நீங்கள் ஒரு விசாரணைக் குழுவை நியமிக்கவேண்டும் என வற்புறுத்துகிறேன்.

பல விடயங்கள் வெளிவருவதோடு உண்மையான குற்றவாளி யார் என்பதை உலகறியவைக்கும். நாட்டின் நற்பெயர் காக்கப்படவேண்டும் ஏனெனில் அண்மையில் இராணுவத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட 42 நாட்டுப்பிரதிநிதிகள் கலந்துகொண்ட மாநாட்டு நிகழ்வின்போதே இத்துக்ககரமான சம்பவம் இடம்பெற்றிருந்தது.

வீ, ஆனந்தசங்கரி

செயலாளர் நாயகம்

தமிழர் விடுதலைக் கூட்டணி

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

மே 18 தமிழின அழிப்பு நினைவு நாள் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் அனுஷ்டிப்பு!Top News
[Saturday, 2013-05-18 21:10:40]

இலங்கைத்தீவில் தமிழர் தேசத்திற்கு எதிராக அரச பயங்கரவாதத்தால் மேற்கொள்ளப்பட்ட கொடிய மனிதப்பேரவலத்தின் உச்சத்தைத் தொட்ட மே 18-2009 நினைவுகளைச் சுமந்தபடி அதன் நான்காவது ஆண்டில் நிற்கின்றோம். ஆயிரக்கணக்கான மக்களை முள்ளிவாய்க்கால் என்ற குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்கவைத்து, சர்வதேச ரீதியாக தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை திட்டமிட்ட ரீதியில் பயன்படுத்தி, சாட்சிகள் அற்ற போரை நடத்தி, ஒரு தேசிய இனத்தின் அழிவை உறுதிப்படுத்துவதில் சிறிலங்கா அரசு கவனம் செலுத்தியிருந்தது. ஆனால் படுகொலை செய்யப்பட்ட மக்களின் ஏக்கங்களையோ அல்லது எமது மக்களின் நீடித்து நிலைக்கக் கூடிய சுதந்திரமான வாழ்வுக்காக இறுதிவரை போராடிய போராளிகளின் கனவுகளையோ மறைக்க முடியாதபடி, உலகத்தின் கண்களுக்கு ஈழத்தமிழர்களின் அடிப்படை அரசியலுரிமைக்கான தேவைகளும் நியாயப்பாடுகளும் வெளிச்சத்திற்கு வந்துகொண்டிருக்கின்றன.



படையினரால் மீட்கப்பட்ட வன்னி மக்களுக்கு உணவுகொடுக்க புலம்பெயர் சமூகம் முன்வரவில்லை - ஜனாதிபதி மகிந்த Top News
[Saturday, 2013-05-18 20:54:42]

"இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது படையினரால் மீட்கப்பட்ட மக்களுக்கு உணவுகொடுக்க புலம்பெயர் சமூகம் வரவில்லை" என்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறுகிறார். இலங்கை அரசாங்கத்தின் நான்காவது போர் வெற்றிவிழா மேடையிலேயே மகிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறினார். கொழும்பு காலி முகத்திடலில் நடந்த அரசாங்கத்தின் போர் வெற்றி விழாவில் சிறப்பு விருந்தினர்கள், அரசியல்வாதிகள், முப்படையினர் மற்றும் பொதுமக்கள் என பெருமளவிலானோர் கலந்துகொண்டனர். "மனிதக் கேடயங்களாக பிடித்து வைக்கப்பட்டிருந்த மக்களை படையினர் மீட்டனர். அவர்களுக்கு உணவுகொடுக்க புலம்பெயர் சமூகத்தினர் வரவில்லை, அரசாங்கமும் படையினரும் தான் உணவுகொடுத்து பராமரித்தார்கள்" என்றார் மகிந்த ராஜபக்ஷ.



ஸ்ரீலங்கா மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அனைத்து தமிழ் குடும்பங்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் - ஒன்ரோறியோ என்.டி.பி கட்சித் தலைவர்!
[Saturday, 2013-05-18 20:45:00]

தமிழினப் படுகொலை நாள் நடக்கவுள்ள தமிழர் நினைவு நாளுக்கு ஒன்ரோறியோ முதல்வர் காத்லீன் வ்ய்ன், அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து ஒன்ரோறியோ என்.டி.பி கட்சித் தலைவர் அண்ட்ரியா ஹோர்வேத், ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். தமிழர் நினைவு தினத்தை முன்னிட்டு ஒன்ரோறியோ என்.டி.பி கட்சித் தலைவர் அண்ட்ரியா ஹோர்வேத் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது ,



யுத்த வெற்றிவிழா கொண்டாட்டத்தின் போது கடலுக்குள் மூழ்கிய கடற்படை படகு!
[Saturday, 2013-05-18 20:43:50]

தமிழின அழிப்பினை வெற்றிவிழாவாகக் கொண்டாடிய போது கடற்படைக்குச் சொந்தமான படகொன்று கடலில் மூழ்கியுள்ளதாக தெரியவந்திருக்கின்றது. இந்தச் சம்பவத்தினை கடற்படை ஊடகப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய உறுதிப்படுத்தியிருக்கின்றார். காலி முகத்திடல் கடற்பரப்பில் இன்று காலை இடம்பெற்ற யுத்த வெற்றிவிழாவின் போது குறித்த சிறிய ரக படகு மூழ்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். படகில் இருவர் பயணித்ததாகவும் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும் ஒருவர் தப்பித்துக் கொண்டதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.



தமிழர்களின் காணிகளை இராணுவம் அபகரிப்பது குறித்து இந்தியா இலங்கைக்கு எச்சரிக்கை!
[Saturday, 2013-05-18 20:39:38]

இந்திய மத்திய அரசாங்கம் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பின் முன்னணி ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. வட மாகாணத்தில் உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் படையினர் காணிகளை அபகரித்து செல்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்திய இலங்கை வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் போது இந்த விடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது. வட மாகாண தமிழ் மக்களின் காணிகளை படையினர் சுவீகரிப்பதானது பொருத்தமாகாது என இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையானது உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளுக்கு புறம்பானது என குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான நடவடிக்கைகள் நல்லிணக்க முனைப்புக்களுக்கும் பாதகத்தை ஏற்படுத்தும் என அமைச்சர் குர்ஷித் சுட்டிக்காட்டியுள்ளார்.



தமிழர் படுகொலை நினைவு தினத்தில் உங்களுடன் நானும் இணைந்து கொள்கிறேன் - ஒன்ராறியோ முதல்வர் காத்லீன்!
[Saturday, 2013-05-18 20:38:22]

சமீப காலமாகவே தமிழர்களுடன் கை கோர்த்து செயல்படுவதையே பெரும்பான்மையான கனடிய அரசியல் கட்சிகள் விரும்புகின்றன என்பதும் கனடாவில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக தமிழினம் மாறி என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே. வருடம் முழுவதும் பல நிகழ்வுகளும், விழாக்களும் நம்மவர்களிடையே நடத்தப்பட்டு வந்த போதிலும் கூட பிரதான உணர்வு ரீதியான நிகழ்வாக நம்மவர்கள் அனைவராலும் கருதப்படுவது இனவழிப்பு நினைவுநாள் தொடர்பான் நிகழ்வுதான்.



இன்று தமிழீழ சுதந்திர சாசனம் முரசறைவு : ஈழவிடுதலைப் போராட்டத்தில் வரலாற்று முன்னகர்வு!Top NewsTop News
[Saturday, 2013-05-18 20:35:53]

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெரும் முன்னகர்வாக தமிழீழ சுதந்திர சாசனம் முள்ளிவாய்க்கால் பெருவலியினை கூட்டு நினைவு கொள்ளும் மே-18ம் நாளாகிய இன்று முரசறையப்படுகின்றது. இந்த முரசறைவுக்கான மாநாடு கடந்த 15ம் நாள் முதல் அமெரிக்காவின் பென்சிலவேனியா பெருநகரில் இடம்பெற்று வரும் நிலையில் இன்று சனிக்கிழமை அமெரிக்க நேரம் மதியம் 12 மணிக்கு தமிழீழ சுதந்திர சாசனம் முரசறையப்படவிருக்கின்றது.



விடுதலைப் புலிகளுக்கு யார் அஞ்சலி செலுத்தினாலும் கைதுசெய்யப்படுவர் - வன்னி இராணுவ கட்டளைத் தளபதி
[Saturday, 2013-05-18 20:22:29]

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்தும் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்படுவர் என்று வன்னி மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி பொனிபஸ் பெரேரா தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஒரே ஒரு இராணுவமே உள்ளது. இலங்கையர்கள் யாரும் யாருக்கு வேண்டுமானாலும் தமது ஆதரவை வெளிப்படுத்தும் உரிமை இருக்கிறது. ஆனால் விடுதலைப் புலிகள் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான அமைப்பு. இந்த அமைப்புக்கு ஆதரவாக ஏற்பாடு செய்கின்ற எந்த நிகழ்வுகளுக்கு எதிராகவும் இராணுவம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



முள்ளிவாய்க்காலில் உயிர்நீர்த்த உறவுகளுக்கு கண்ணீர் மல்க வவுனியாவில் நினைவு பிரார்த்தனை!Top News
[Saturday, 2013-05-18 20:08:27]

இறுதியுத்தத்தின் போது முள்ளிவாய்க்கால் உயிர் நீத்த பொதுமக்களின் 4 ஆம் ஆண்டு நினைவு தினமும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனைக் கூட்டமும் இன்றுகாலை 10 மணிக்கு வவுனியா கலாசார மண்டபத்தில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. இன்று காலை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் அகவணக்கத்துடன் ஆரம்பமானது. இந்நிகழ்வில் உயிர் நீத்த மக்களுக்கான நினைவுச் சுடர் ஏற்றலையும் மலர் அஞ்சலியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, தமிழர் விடுதலைக்கூட்டணியின் பொதுச் செயலாளர் வீ. ஆனந்தசங்கரி, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஐக்கிய சோசலிச முன்னணியின் தலைவர் சிறிதுங்க வீரசூரிய, பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சிறீதரன், சரவணபவன், வினோ ரோதநாதலிங்கம், சிவசக்தி ஆனந்தன்,



சொந்தங்களுக்காக கண்ணீர் சிந்தும் உரிமையும் இல்லையா? கஜேந்திரன் கைதுக்கு கூட்டமைப்பு கண்டனம்!
[Saturday, 2013-05-18 19:55:44]

யுத்தத்தில் உயிர்நீத்த தம் சொந்தங்களை நினைவு கூர்ந்து கண்ணீர்மல்க அமைதியாக அனுஸ்டிக்கப்பட்ட இரங்கல் கூட்டத்தில் வைத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இக்கைதினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது என அதன் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக தமிழ்மிரரிடம் கூறுகையில்...



தமிழ்த் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் கஜேந்திரன் கைது!
[Saturday, 2013-05-18 19:43:06]

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் உட்பட அந்தக் கட்சியின் சில உறுப்பினர்கள் மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன. மன்னாரில் அந்தக் கட்சியின் சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவுநிகழ்வு ஒன்றை நடத்தியபோதே இவர்கள் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. கஜேந்திரனுடன், அவர்களது கட்சியின் தேசிய அமைப்பாளரான மணிவண்ணன் என்னும் சட்டத்தரணியும் வேறு சுமார் 10 பேரும் கைது செய்யப்பட்டதாக கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.



பொதுபலசேனாவிலுள்ளவர்களை உடன் அங்கொடைக்கு அனுப்பவேண்டும்: - விக்கிரமபாகு கருணாரட்ன
[Saturday, 2013-05-18 13:37:57]

பொதுபலசேனாவிலுள்ளவர்களை உடன் அங்கொடைக்கு அனுப்பவேண்டும். இல்லையேல் ,இலங்கை ஆங்கிலேயரின் நாடு என்றும் கூட இன்னும் சில நாட்களில் சொல்லுவார்கள் என்று நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார். "இலங்கை பெளத்த நாடு. அதை ஏற்க முடியாதவர்கள் இங்கு வாழத்தேவையில்லை என பொதுபலசேனாவினர் இனவாதத்தைக் கக்குகின்றனர். வரலாறு தெரியாது அவர்கள் வாய்க்கு வந்ததையெல்லாம் வைத்துக்கொண்டு வீர வசனம் பேசுகின்றனர்.



வவுனியாவில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிப்பு!Top News
[Saturday, 2013-05-18 13:34:14]

முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர் நீத்த மக்களின் ஆண்டு நினைவாக 2010ம் ஆண்டு மே மாதம் 16ம் திகதி திறந்து வைக்கப்பட்ட வவுனியா சம்மளங்குளம் நினைவுத்தூபி நேற்றிரவு இனம் தெரியாத தமிழ்த் தேசியத்திற்கு எதிரான குழுக்களால் இடித்தழிக்ககப்பட்டுள்ளதாக வவுனியா நகரசபை பதில் தலைவர் எம்.எம்.ரதன் தெரிவித்துள்ளார். சம்பவம் அறிந்த இன்று காலை நேரடியாக அதனை வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் மற்றும் நானும் சென்று பார்வையிட்டோம். இச்சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவித்தார்.



புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான கண்காணிப்பு பிரிவில் ஆட்குறைப்பு செய்கின்றது அவுஸ்திரேலியா!
[Saturday, 2013-05-18 13:31:16]

அவுஸ்திரேலியாவின் புகலிடக் கோரிக்கையாளர் கண்காணிப்பு பிரிவில் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. அவுஸ்திரேலியாவின் மத்திய காவல்துறைப் பிரிவினர் புகலிடக் கோரிக்கையாளர் நடவடிக்கைகள் குறித்து கண்காணித்து வருகின்றனர். புகலிடக் கோரிக்கையாளர்களின் நடவடிக்கைகள் குறித்து ஜகர்த்தாவில் கடமையாற்றி வந்த அவுஸ்திரேலிய மத்திய காவல்துறை உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 40 வீதமான காவல்துறையினர் அவுஸ்திரேலியாவிற்கு மீள அழைக்கப்படுவர்.



வடக்கு, கிழக்கு வாழ் மக்களின் இதயம் எனக்கு நன்கு தெரியும் - ஜனாதிபதி!
[Saturday, 2013-05-18 13:22:26]

வடக்கு கிழக்கு மக்கள் தேர்தலொன்றில் பொன்னம்பலத்தை தோல்வியடையச்செய்து கொப்பேகடுவையை வெற்றிப்பெறச்செய்தவர்கள். அங்குள்ள மக்களின் இதயத்தைப்பற்றி எனக்கு நன்கு தெரியும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மீட்டெடுக்கப்பட்ட தாய்நாட்டிலிருந்து ஒரு அங்குலத்தையேனும் அபகரிப்பதற்கோ இன்றேல் நாட்டை பிரிப்பதற்கோ ஒருபோதும் நான் இடமளிக்கமாட்டேன் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூர்ந்து நடைபெற்ற வைபவத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



கனடிய கொன்சவ்வேட்டிவ் மத்திய அரசில் தமிழ் கனடிய சமூகத்திற்கு ஆதரவாக பல நண்பர்களும் ஆதரவாளர்களும் இருக்கிறார்கள், அதில் நானும் ஒருவன் - பிரட் பட் எம்.பி.
[Saturday, 2013-05-18 11:24:16]

கனடாவில் வாழும் தமிழ் கனடிய சமூகம் இலங்கையில் இடம்பெற்ற பல தசாப்தகால உள்நாட்டுப் போர் நிறைவின் நான்காவது ஆண்டு நினைவை அனுஸ்டிக்கும் போது நாமும் அச்சமூகத்துடன் இணைந்து கொள்கிறோம். பல தசாப்த காலமாக போரில் கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த அப்பாவிப் பொதுமக்களை இவ்வாரத்தில் நினைவுகூர்வதுடன் இலங்கையில் வாழும் மக்களுக்கும் ஒரு சுபீட்சமான எதிர்காலம் அமையுமென எதிர்பார்க்கும் காலமாக அமைகிறது.



டென்மார்க்கில் பாராளமன்றம் நோக்கி பேரணியாக சென்ற மக்கள் மனு கையளித்தனர்! Top News
[Saturday, 2013-05-18 08:14:10]

17.05.2013 அன்று டென்மார்க் வெளிவிவகார அமைச்சகத்தின் அலுவகத்தின் முன்பாக பேரணி ஆரம்பமானது. அதனைத்தொடர்ந்து பாராளமன்றம், நோக்கி பெரும் திரளான மக்கள் உணர்வு பூர்வமாக முள்ளிவாய்காலில் இடம்பெற்ற இனவழிப்பில் இறந்த தமிழீழ மக்களின் படங்கள் மற்றும் தமிழீழ தேசிய கொடியை ஏந்தியவண்ணம் தமிழீழம் ஒன்றே இறுதி முடிவு என்ற உணர்வுடன் ஊர்வலமாக பாராளமன்றம், நோக்கி பேரணியாக வந்தடைந்தார்கள்.



லண்டனில் இன்றைய பேரணிக்கான ஏற்பாடுகள் சிறப்பான முறையில் பூர்த்தி:
[Saturday, 2013-05-18 07:59:08]

லண்டனில் இன்று சனிக்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி பேரணி மற்றும் மற்றும் பொதுக்கூட்டம் ஆகியவற்றுக்கான ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக பிரித்தானிய தமிழர் பேரவையினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்றைய தினம் பி.ப 1 மணிக்கு North Carriage Park, Hyde Park (Closest station: Marble Arch) ஆரம்பிக்கும் பேரணி பி.ப 3 மணியளவில் Waterloo Place , (Closest station: Piccadilly Circus) நிறைவுறும். இதனைத் தொடர்ந்து முக்கிய பிரமுகர்கள் உரையாற்றவிருப்பதுடன் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.



மே 18 - தமிழர் இனவழிப்பு நினைவு நாள் - 2013 - தமிழீழ விடுதலைப் புலிகள் விடுத்துள்ள அறிக்கை
[Saturday, 2013-05-18 07:49:51]

இன்று தமிழர் இனவழிப்பு நினைவுநாள். ஆண்டாண்டு காலமாக அன்னியப் படைகளாலும் இனவாத அரசாங்கங்களாலும் எமது இனத்தின்மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகளின் குறியீடாகவும் எமது இனம் எழுச்சி கொள்ள வேண்டியதைச் சுட்டும் முரசறைவாகவும் இந்நாள் அமையப் பெறுகின்றது.



தயா மாஸ்டரின் கோரிக்கையை நிராகரித்தது எதிர்க்கட்சி!
[Saturday, 2013-05-18 07:48:10]

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டரின் கோரிக்கையை ஐக்கிய தேசியக் கட்சி நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வட மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட தயா மாஸ்டர் கோரியதாகவும், அதனை நிராகரித்ததாகவும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த போது இது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சியையும், புலிகளையும் இணைத்து பல்வேறு சேறு பூசல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.


NIRO-DANCE-100213
Suresh-remax-2013-01-01
RoyaShades-l2011(04-12-11)
Canada Kanthasamy Kovil
TDE_Computers2011
TamilsGuid-191012-2013
Mahesan supramaniyam 031109
INNSYS-20120930
Ramans2011
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com