Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
June 20, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
கிழக்கு மாகாணத் தேர்தல் - எம் இனத்தையே விழுங்க விடலாமா? இனப் படுகொலைக்கு உள்ளாகி வரும் தமிழரின் பிரச்சனைக்கு நாம் கேட்கும் தீர்வு என்ன?.
[Monday, 2012-08-13 10:01:43]
News Service

உலகில் வாழும் ஏனைய இன மக்கள் போல் நாமும் எமது வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தில் சுயநிர்ணய அடிப்படையில் காணி காவற்துறை உட்பட்ட அதிகாரங்களோடு கூடிய ஆட்சி முறையில் எமது கல்வி பொருளாதாரம் மொழி கலை பண்பாடுகள் போன்றவற்றை நாமே கையாண்டு கௌரவமாக வாழ வேண்டும் என்பதையே நாங்கள் கேட்கிறோம்..ஆனால் எமக்கு மகிந்த அரசு தர விரும்பும் மகிந்த சிந்தனை என்ற தீர்வு என்ன?.

  

சிறுபான்மையினர் என்று இலங்கையில் யாருமே இல்லை,சிறுபான்மையினர் என்று எவருமே இருக்காமல் அவர்கள் பெரும்பான்மையினரோடு கலந்து கரைந்து இலங்கை ஒரு சிங்களப் பவுத்த நாடாக இருக்க வேண்டும்.அப்படி இருந்தால் பிரச்சனையே இருக்காது என்பது தான் அவரது சிந்தனை,முடிவான தீர்வு.

அதை அவர் நிறைவேற்ற வேண்டுமானால் தமிழர் தாயகம் என்று ஒன்று இருக்கக் கூடாது, தமிழ் மொழி அல்லது அவர்களது மதங்கள் அரச மட்ட அங்கீகாரம் பெறக் கூடாது,எங்கும் சிங்கள மொழி பௌத்த மதம் கோலோச்ச வேண்டும்,அவற்றை எதிர்க்கும் தமிழர் நசுக்கப்பட வேண்டும் அல்லது அழிக்கப்பட வேண்டும்,அதை ஊக்குவிக்கக் கூடிய பொருளாதார பலம் தமிழருக்கு இருக்கக் கூடாது. மகிந்தவின் நிகழ்ச்சி நிரலில் இவை மட்டும் தான் இன்று அதி முக்கியத்துவம் பெற்றுள்ளன.

காணி பறிப்பு சிங்களக் குடியேற்றம் சிங்களமொழி-பௌத்த மதத் திணிப்பு, தமிழர் பொருளாதார வர்த்தக வளங்களை பிடுங்கி சிங்களவருக்கு வழங்கல்,இராணுவ ஆட்சியால் தமிழரை அடக்கி ஒடுக்கல், இவற்றைத்தான் அதி உச்ச வேகத்தில் அவர் செய்து கொண்டிருக்கிறார். தமிழர் மீண்டும் வலிமை பெற்று தன் திட்டத்தை தடுக்க முன் அதை நிறைவேற்றி விட வேண்டுமென்று துடிக்கிறார்.

அவருக்கு இடைஞ்சலாக இருப்பவர் யார்?.ஒன்று சிங்கள எதிர்க் கட்சிகள் அடுத்தது தமிழர் தரப்பு மூன்றாவது சர்வதேசம்.முதலிரண்டு பிரிவினரையும் ஒட்டுக் குழுக்கள் குண்டர்கள் மற்றும் முப்படைகளின் உதவியோடு தனது சர்வாதிகார ஆட்சியால் சமாளிக்கிறார். ஆனால் சர்வதேசம் தான் அவருக்கு இப்போது மிகப் பெரிய சவாலாக உள்ளது.இரு அணிகளாகப் பிரிந்து நிற்கும் சர்வதேச வல்லரசுகளின் பனிப்போர் இப்போது இலங்கையிலேயே மையம் கொண்ண்டுள்ளது.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் கட்டுப்பாடு உலக வல்லாதிக்கத்தைத் தீர்மானிப்பதாகவும் இலங்கை அதன் மையப்புள்ளியாக இருப்பதாலும் இலங்கையைத் தமது கட்டுப்பாட்டில் நட்பு நாடாக வைத்திருப்பதில் வல்லரசுகள் முழுப் பலத்துடன் செயற் படுகின்றன.இலங்கை சீனச் சார்பாக இருப்பதால் இலங்கையை வழிக்குக் கொண்டுவர இலங்கைக்கு எதிராக பாவிக்க மேற்கு நாடுகளுக்கு கிடைத்துள்ள ஆயுதம் இலங்கை அரசு தமிழருக் கெதிராகச் செய்த செய்கின்ற அத்துமீறல்கள் தான். LLRC பரிந்துரைகளை செயற்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மூலம் மகிந்தவின் கழுத்தை நெரிக்கும் மேற்குலகை முற்றாகப் புறம் தள்ளி தனியச் சீன உதவியோடு மகிந்தவால் அதல பாதாளத்தில் விழும் இலங்கைப் பொருளாதாரத்தை மீட்க முடியாது. சர்வதேசத்தோடு முற்றாக அந்நியப்பட முடியாது.

அதனால் தமிழர் பிரச்சனைக்கு ஏதோ ஒரு தீர்வைக் கொடுத்து அதை அவர்கள் ஏற்றுக்கொண்டு விட்டதாகவும் காட்டி தமிழர் பிரச்சனை தீர்ந்து விட்டது என்று மேற்குலகைச் சமாளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் மகிந்தவுக்கு ஏற்ப்பட்டுள்ளது. அவர் என்ன தீர்வை இப்போது சிந்திக்கிறார்?. 13வது திருத்தத்தில் உள்ள காணி பொலிஸ் அதிகாரங்களையும் பிடுங்கி வடக்கு கிழக்கையும் பிரித்து ஒன்றுமே இல்லாத மாகாண சபையைத் தான் தீர்வாகக் கொடுக்க விரும்புகிறார்.

நீதிமன்றத் தீர்ப்பின் படி அதை எல்லா மாகாண சபைகளையும் ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும். அதற்கான அவரது திட்டம்தான் மாகாணசபைத் தேர்தல்கள்.கிழக்கு மாகாண சபையை அரச சார்பான ஒன்றாக அமைத்து அங்கே வடகிழக்கு இணைப்பு வேண்டாம் காணி பொலிஸ் அதிகாரம் வேண்டாம் என்ற தீர்மானங்களை எடுப்பித்து; 13 ம் திருத்தச் சட்டத்திலிருந்து காணி பொலிஸ் அதிகாரங்களை நீக்கிவிட்டு வடக்குத் தேர்தலையும் தனியாக நடத்தி தமிழ் மக்கள் அரசிற்கு ஆதரவாகவே இருக்கிறார்கள் தமிழ் மக்களின் பிரச்சனையைத் தீர்த்து விட்டதாக உலகிற்குக் காட்டுவதே மகிந்தரின் திட்டமாகும்.

கிழக்குமாகாண சபையோடு சேர்த்து தான் சொன்னபடி காணி காவற்துறை அதிகாரம் வேண்டாம் என்று சொல்ல மறுத்த வடமத்திய மாகாண சபையையும், முரண்டுபண்ணும் சப்ரகமூவா மாகாணசபையையும் கலைத்து தேர்தலை நடத்துவதன் உள்நோக்கம் நீதிமன்ற ஆணைக்கிணங்க அனைத்து மாகாணசபைகளின் ஒப்புதலோடு 13 ம் திருத்தச் சட்டத்தில் உள்ள காணி பொலிஸ் அதிகாரத்தை பிடுங்கியபின் வட மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாகும்.

அத்துடன் LLRC பரிந்துரைகளை நிறைவேற்றுவதாகவும் அதற்குத் திட்டம் தயார் எனவும் அதற்கு 3 வருடக் காலக் கெடு தேவை என்றும் கேட்டுள்ளார். அந்த 3 வருடத்துள் தான் நினைக்கும் சிங்களப் பவுத்த ஸ்ரீலங்காத் திட்டத்தை நிறைவேற்றி விடலாம் என்றும் அவர் நம்புகிறார்.எனவே கிழக்கு மாகாணத் தேர்தலில் மகிந்த வென்றால் அதாவது கூட்டமைப்பு தோற்றால் தமிழரின் எதிர்காலம் சூனியமாகி விடும்.கிழக்கு மாகாணத் தேர்தல் எம்மை விழுங்க வருகின்ற பூதம் . தமிழினத்தின் அனைத்துச் செயற்பாடுகளும் முடக்கப்பட்டு இன ஒழிப்பு முழுமை செய்யப்படும். தமிழினத்தின் வாழ்வா சாவா என்ற நிலையைத் தீர்மானிக்கும் தேர்தலாக இந்த கிழக்கு மாகாணத் தேர்தல் அமைவதால் இதை ஒரு சாதாரண மாகாண சபைத் தேர்தலாகப் பார்க்காமல் எமது உயிர்நாடியாகப் பார்த்து நாம் செயற்பட்டேயாக வேண்டும்.

இலங்கையில் சட்டமோ நீதிபரிபாலனமோ தேர்தல்களோ சுதந்திரமாக இயங்கும் நிலை அங்கு இல்லை. ஏதோ பெயரளவில் அவை நடக்கத் தான் செய்கின்றன. அவை அரசின் வசதிக்கும் நன்மைக்கும் ஆகவே நடத்தப்ப்படுவது வழமையே.அரசின் நிகழ்ச்சி நிரலிற்கேற்ப நடைபெறும் தேர்தல்களுக்குள் எதிர்க் கட்சிகளும் செயற்பட்டேயாக வேண்டிய நிர்ப்பந்தம் உளளது. சென்ற வருடத்தின் முன்பே நடைபெற வேண்டிய வட மாகாண சபைத் தேர்தலை அரச வசதிக்கேற்ப நடத்த முடியாமையால் அதை நடத்தாமல் நிறுத்தி வைத்துக் கொண்டு தேர்தல் அடுத்த வருடம் நடைபெற வேண்டிய கிழக்கு மாகாண சபையை வேண்டுமென்றே கலைத்து விட்டு மகிந்த அங்கு தேர்தலை நடத்துகிறார். வேறுவழியின்றி எதிர்க் கட்சிகளும் அதில் பங்கு பற்றவேண்டிய நிர்ப்பந்தத்தில் த.தே.கூ.ம் அதில் போட்டியிடுகின்றது.

தமிழர் தரப்பிற்கும் சாதகமான பக்கங்களும் உள்ளன. முஸ்லிம் மக்களது பள்ளிவாசல்களும் அரச ஆதரவுப் பௌத்தர்களால் தாக்கப் படுவதாலும் அவர்களதும் காணிகளும் பறிக்கப் படுவதாலும் கணிசமான முஸ்லிம் மக்களும் அரசை எதிர்க்கிறார்கள்.அதனால் முஸ்லிம் காங்கிரஸ் தனியாகப் போட்டியிட நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளது.அதனால் நான்கு முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.இந்த நான்கு முனைப் போட்டியில் தனிப் பெரும் கட்சியாக த.தே.கூ.வரக்கூடிய வாய்ப்பு நிட்சயம் என்பதால் இரண்டு போனஸ் ஆசனங்களும் கிடைக்கும்.ஆனால் அதற்கு தமிழர் நிறையவே செயற்பட வேண்டி உள்ளது. அவர்களிடம் குறிப்பாக நிதி வழம் இல்லை.

தமிழரில் பலர் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிக்கும் வசதி நிலைகூட இல்லாமல் தேர்தல் பற்றி நினைக்கவும் முடியாத நிலையில் உள்ளார்கள்.அவர்களுக்கு இத்தேர்தலின் முக்கியத்துவத்தைச் சொல்லி விளங்கப்படுத்தி வாக்களிக்கச் செய்ய வேண்டும்.அங்கு ஆள்பலம் இருப்பினும் நிதிபலம் இன்மையால் இயங்க முடியாத நிலைதான் காணப்படுகிறது.

புலம் பெயர் தமிழராகிய நாம் எம்மாலான அனைத்து வளங்களையும் பயன்படுத்த வேண்டிய தருணம் இது.மிகப் பெரும் ஆள், அம்பு, பண, படை பலம் உள்ள அரச தரப்போடு கூட்டமைப்பு மோத வேண்டி உள்ளது.அவர்களுக்கான வசதிகளை நாம் செய்து கொடுத்தால் அவர்களை நிட்சயம் பெரு வெற்றி பெறச் செய்யலாம். த.தே.கூ. கணிசமான ஆசனங்களைப் பெற்றால் பலமான தரப்பென்று முஸ்லிம் காங்கிரசும் இணைந்து ஆட்சி அமைக்க முன்வரும்.தவறினால் UNP போன்ற சிறு கட்சி ஒன்றை இணைத்தே ஆட்சி அமைக்கலாம்.தமிழர் சார்பான ஆட்சி அமையக் கூடிய நிலையில் முஸ்லிம் காங்கிரசும் ஒத்துழைக்க முன்வரும்.

அதனால் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை உருவாகும்.தொடர்ந்து வடமாகாண சபைத் தேர்தல் வந்தாலும் வலுவாக வெற்றி பெறலாம்.அதன் மூலம் மகிந்தவின் கனவுகளை நிர்மூலமாக்கலாம்.சர்வதேசத்திற்கும் பலமான ஒற்றுமையான தமிழரோடு சேர்ந்து மகிந்தவை வழிக்குக் கொண்டுவர வழி பிறக்கும். தமிழர் விடிவிற்கும் வழி பிறக்கும்.தமிழர் இப்போது தூங்கி விட்டால் கோட்டை விட்டால் பின்னர் எப்போதும் மீள முடியாது.தமிழர் சரித்திரத்தில் இந்தக் கிழக்கு மாகாணத் தேர்தல் ஒரு மிகப் பெரும் திருப்புமுனை. விழித்தெழுவோம். வேற்றுமை மறப்போம். விமர்சனம் தவிர்ப்போம். நமக்காகச் சிந்திக்காமல் நம் மக்களுக்காய்ச் சிந்திப்போம். பொது எதிரியை வெல்ல எம்பகையை மறப்போம்.உலகுக்கே உதாரணமாய்த் திகழ்வோம். சாதனை படைப்போம்.

-(வின் மகாலிங்கம்)-

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

தமிழர்களுக்கு எந்த காலத்திலும் நியாமான தீர்வு கிடைக்கக்கூடாது என்பதில் அரசு தீவிரம் - சித்தார்த்தன்
[Thursday, 2013-06-20 08:18:14]

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு மத்திய அரசாங்கத்தின் தலையீடற்ற சமஷ்டி தீர்வே தேவை. எவ்வாறாயினும் தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வு எந்தக் காலத்திலும் கிடைக்கக்கூடாது என்பதில் அரசாங்கம் தீவிரமாகச் செயற்படுகின்றது என்று புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். நேற்று புதன்கிழமை, யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்று ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது, '1987ஆம் ஆண்டில் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்ட போது அதில் ஒன்றும் இல்லை என்று அதனை நிராகரித்த தமிழர் தரப்பு, இன்று 13இல் எந்தவிதமான மாற்றமும் செய்ய வேண்டாம். அதற்கான அழுத்தத்தை இந்தியா வழங்க வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் காய் நகர்த்தல்களை மேற்கொண்டுள்ளது' என்று குறிப்பிட்டார்.



கொழும்பு துறைமுக களஞ்சியசாலை தீ விபத்து - பணிப்பாளர்கள் இருவருக்கு விளக்கமறியல்
[Thursday, 2013-06-20 08:10:00]

60 கோடி ரூபாய் நட்டத்தை ஏற்படுத்திய கொழும்பு துறைமுக களஞ்சியசாலை தீ விபத்து தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பணிப்பாளர்கள் இருவரையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பணிப்பாளர்கள் இருவருரையும் கொழும்பு மேலதிக நீதவான் சந்திம பெர்னாண்டோ முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்திய போதே அவ்விருரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். விரைவாக தீ பற்றக்கூடிய இராசாயன பொருட்களை அனுமதியின்றி களஞ்சியப்படுத்தியிருந்தனர் என்ற குற்றச்சாட்டு இவ்விருவருக்கும் எதிராக சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.



நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோவிடம் விசாரணை நடத்த முடியாது : சட்டத்தரணி
[Thursday, 2013-06-20 07:43:21]

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோவிடம் விசாரணைகள் நடத்த முடியாது என்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த அரச தரப்பு சட்டத்தரணி சமிந்த அத்துகோரள நீதவானின் கவனத்திற்கு கொண்டுவந்தார். 2010 ஆம் ஆண்டு காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட தொடர்பான வழக்கு ஹோமாகம நீதவான் வை.ஆர்.பீ நெலும்தெனிய முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார். பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவின் கோரிக்கைக்கு அமைவாக அவர் சார்பில் நீதிமன்றில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி உபுல் குமார பெரும, நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோவை விசாரணைக்கு அழைக்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.



எமது விளைநிலங்களை எம்மிடமே தாருங்கள்! வெலிஓயா பிரதேச செயலரிடம் மகஜர் கையளிப்பு!Top News
[Wednesday, 2013-06-19 21:00:36]

முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் ரவிகரன் தலைமையிலான பிரஜைகள் குழுவினரும், தமது வயல்நிலங்களை இழந்து தவிக்கும் கொக்கிளாய் கிழக்கு, கொக்கிளாய் மேற்கு, கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய் வடக்கு, கொக்குத்தொடுவாய் மத்தி, கொக்குத்தொடுவாய் தெற்கு ஆகிய கரைத்துறைப்பற்று பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களைச்சேர்ந்த மக்களின் பிரமுகர்களும், இணைந்து, வயல்நிலங்களின் காவல் தெய்வமான கோட்டைக்கேணி பிள்ளையார் கோவில் இறை வழிபாட்டின் பின்னர், வெலிஓயா பிரதேச செயலர் தீபல் நிஸாந்த திரிமன்னவிடம் இன்று காலை 11.00 மணியளவில் மகஜரை கையளித்ததோடு, மகஜரின் பிரதி ஒன்றை மகாவலி திட்ட அதிகார சபையின் வெலிஓயாவுக்கான இணைப்பதிகாரியிடமும் கையளித்தனர்.



வவுனியா வைத்திய சாலையில் தாதியர்கள் பணி பகிஷ்கரிப்பு! Top News
[Wednesday, 2013-06-19 20:52:13]

அரசாங்க தாதிமார் சங்கத்தை சேர்ந்த தாதிய உத்தியோகத்தர்கள் பல அம்ச கோரிக்கைகளை முன் வைத்து வவுனியா வைத்திய சாலை முன்றலில் சுலோக அட்டைகளை தாங்கியவாறு ஒரு மணி நேர பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். அரசே ஒரு வாரத்திற்கான வேலை நாட்களை ஐந்து நாட்களாக மாற்று ,ஆபத்து கொடுப்பனவு அனைத்து தாதிய உத்தியோகத்தர்களுக்கும் வழங்க வேண்டும்,மேலதிக நேர கொடுப்பனவு என்பன அதிகரிக்கப் பட வேண்டும் ,அரசே 1979 ல் வெளி வந்த சுற்றறிக்கை ரத்து செய்யப்பட வேண்டும் ,பட்டதாரி தாதிய உத்தியோகத்தர் களுக்கு நியமனத்தை வழங்கு ,சேவை மூப்பு அடிப்படையின் அடிப்படையின் படி மூத்த தாதியர்களுக்கு பதவி உயர்வுகளை வழங்கு என்பவற்றை முதலான கோரிக்கைகளை முன் வைத்து இப்போராட்டம் நடை பெற்றது.



யாழ்.மக்கள் இராணுவத்தினரை விரும்புகின்றனர் - லலித் வீரதுங்க!
[Wednesday, 2013-06-19 20:26:48]

யாழ்ப்பாணத்திலுள்ள காணிகள் பொது மக்களுக்கு திருப்பி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆயுதபடைகளை அங்கு தொடர்ந்தும் இருக்குமாறு யாழ்ப்பாண மக்கள் மனப்பூர்வமாக கேட்பதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்தார். பல நிலங்கள் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளன, அரசாங்கத்துக்கு தேவையான நிலங்களை அரசாங்கம் வைத்துக்கொள்ளும். உயர் பாதுகாப்பு வலயம் 60 சதவீதத்தால் குறைந்துவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். டுவிட்டரில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



13 பிளஸ் எனக்கூறியது அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் தீர்வையே : இந்தியாவிற்கு இலங்கை புது விளக்கம்!
[Wednesday, 2013-06-19 18:53:08]

"13 + என நாம் சொன்னது அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் பொதுவான தீர்வு" இதுவும் மகிந்த சிந்தனையின் ஒரு துளி இலங்கையின் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் மிகவும் விரிவுப்படுத்தப்பட்ட பொதுவான தீர்வையை 13 பிளஸ் என இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு அறிவித்திருந்தாக இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு புதிய விளக்கம் அளித்துள்ளது. அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதி ஒருவர் ஊடாக இலங்கை அரசாங்கம் இதனை இந்திய அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது. 13வது அரசியல் அமைப்புத் திருத்தமானது அரசியல் கட்சிகளின் உரிய இணக்கங்கள் இன்றியே ஜே.ஆர். ஜயவர்தன அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.



விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புக்களை தடைசெய்யுமாறு ஆஸி. பிரதமரிடம் இலங்கை வேண்டுகோள்! Top News
[Wednesday, 2013-06-19 18:46:02]

அவுஸ்திரேலியாவில் இயங்கும் விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகளை தடைசெய்யுமாறு அந்நாட்டுப் பிரதமர் ஜுலியா கில்லார்ட்டிடம், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாமல் ராஜபக்ச,லொஹான் ரத்வத்த, திலங்க சுமதிபால, வசந்த சேனநாயக்க ஆகிய ஆளும்கட்சியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவுக்குத் தலைமையேற்று அவுஸ்திரேலியா சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், இன்று அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பிரதமர் ஜுலியா கில்லார்ட், வெளிவிவகார அமைச்சர் றொபேட் கார் ஆகியோரை சந்தித்துப் பேசினார். இதன்போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதுடன், வரும் நவம்பரில் கொழும்பில் கொமன்வெல்த் உச்சி மாநாட்டை நடத்துவதற்கான அவுஸ்திரேலியாவின் உதவியையும் கோரியுள்ளார்.



மாகாண இணைப்பை தடுக்கும் 19ஆவது திருத்தத்தை ஒத்தி வைக்க அரசு தீர்மானம்!
[Wednesday, 2013-06-19 18:39:57]

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் ஒன்றுக்கு மேற்பட்ட மாகாணங்கள் ஒன்றிணைவதை தடுக்கும் நோக்கில் கொண்டுவர தீர்மானித்திருந்த 19 ஆவது திருத்தச் சட்டமூலத்தை அரசாங்கம் பிற்போட்டுள்ளதாக தெரியவருகின்றது. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான 19 ஆவது திருத்தச் சட்டம் அவசர சட்டமூலமாக செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல கடந்த வாரம் தெரிவித்திருந்தபோதிலும் அதனை தற்போது பிற்போட்டுள்ளதாகவே அறிய முடிகின்றது. அந்த வகையில் நேற்று பிற்பகல் பாராளுமன்றக்கட்டட தொகுதியில் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் 19 ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டுவருவது தொடர்பில் எந்த விடயமும் ஆராயப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மண்டபத்தில் இலங்கைத்தமிழர் மாரடைப்பால் மரணம் - மனைவி புதல்விகளை சந்திக்க தடை!
[Wednesday, 2013-06-19 18:21:05]

இலங்கையிலிருந்து சென்று தமிழகம் மண்டபம் முகாமில் உள்ள தனது மனைவி மற்றும் புதல்விகளை சந்திக்க சென்ற இலங்கைத் தமிழர் அந்த முகாமிற்கு அருகாமையில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், மரணமானார். இவரது மனைவி கடந்த 2011ம் ஆண்டு கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய உற்சவத்திற்காக கச்சதீவு சென்றிருந்தார். கச்சதீவில் இருந்து அவர் தமது இரண்டு புதல்விகளுடன் சட்டவிரோதமான முறையில் தமிழகத்தைச் சென்றடைந்த வேளையில் கியு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.பிரயாண ஆவணங்கள் எதுவுமே அற்ற நிலையில் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.



லண்டனில் ஆர்பாட்டம் நடத்திய ஈழத்தமிழர்கள் மீது சிங்கள வெறியர்களின் தாக்குதலை கண்டிக்கிறோம்: - பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு
[Wednesday, 2013-06-19 18:11:39]

லண்டனில் ஸ்ரீலங்கா துடுபெடுத்தாட் அணியைப் புறக்கணிக்குமாறு வலியுறுத்தியும் மற்றும் ஸ்ரீலங்காவில் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் தமிழர்கள் மீதான இன அழிப்புக்கு எதிராக சர்வதேச விசாரணை வேண்டியும் நேற்று லண்டன் வாழ் ஈழதமிழர்களால் லண்டன் ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியாவிற்கும், சிறிலங்காவுக்கும் இடையில் துடுபெடுத்தாட்ட போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது மைதானத்துக்கு முன்பாக அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் நிகழ்த்தப்பட்டது.



ஊடகவியலாளர சிவராமை கடத்தியவர்களை அடையாளம் காட்ட முடியும் - முச்சக்கர வண்டி சாரதி சாட்சியம்!
[Wednesday, 2013-06-19 18:11:18]

கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரான தர்மரட்ணம் சிவராமைக் கடத்திய நபர்களை தன்னால் அடையாளம் காட்ட முடியும் என முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார். கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சிவராம் கொலை வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, அங்கு சாட்சியமளித்த கொழும்பு பாமன்கடை பகுதியைச் சேர்ந்த ரஞ்சன் பிரியந்த என்னும் முச்சக்கர வண்டி சாரதியே இவ்வாறு கூறியுள்ளார். சிவராம் கடத்தப்பட்ட போது தான் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்துக்கு அருகே தனது வண்டியுடன் நின்றிருந்ததாகக் அவர் கூறினார்.



புகலிடம் கோருவோருக்கு நிபந்தனைகளுடன் தற்காலிகமான விஸா! - ஆசியில் அவதிப்படும் அகதிக் கொரிக்கையாளா்கள்
[Wednesday, 2013-06-19 18:00:22]

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருவோருக்கு மூன்று நிபந்தனைகளுடன் தற்காலிகமான விஸா வழங்கப்படுவதனால் தமிழர்களுக்கு உயிரிருந்தும் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவில் இருக்கும் பாதிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். புகலிட கோரிக்கையாளர்கள் தொழில் செய்ய முடியாது, குடும்பத்தை அவுஸ்திரேலியாவுக்கு எடுக்க முடியாது மற்றும் பணம் அனுப்பமுடியாது ஆகிய மூன்று நிபந்தனைகளுடனேயே தற்காலிக விஸா வழங்கப்படுகின்றது.



விரிவுரையாளரை தாக்கிய மாணவனை வைத்தியசாலையில் வைத்து கைதுசெய்த பொலிஸார்! Top News
[Wednesday, 2013-06-19 17:53:56]

நாவல திறந்த பல்கலைக்கழக சட்டபீட வளாகத்தில் பெண் விரிவுரையாளரான யசோதரா கதிர்காமத்தம்பியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய மாணவனை பொலிஸார் வைத்தியசாலையில் வைத்து கைதுசெய்துள்ளனர். இன்று புதன்கிழமை யசோதரா கதிர்காமத்தம்பி என்ற பெண் விரிவுரையாளர் குறித்த மாணவனால் தாக்கப்பட்ட நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் தாக்குதலை மேற்கொண்ட மாணவன் பல்கலைக்கழக வளாகத்தில் கூரிய ஆயுதத்துடன் நடமாடியதையடுத்து ஒருவகை மருந்தை உட்கொண்ட நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து குறித்த மாணவன் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைபெற்ற வேளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.



13 இல் திருத்தம் செய்யாவிடின் அரசில் நீடிப்பது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் - விமல் எச்சரிக்கை!
[Wednesday, 2013-06-19 17:50:04]

ஆளும் கட்சியில் தொடர்ந்தும் நீடிப்பதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாகாணசபை சட்டத்தில் திருத்தங்கள் செய்யாது வட மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறு தேர்தல் நடத்தப்பட்டால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். சில தரப்பினர் தூதுவராலயங்களுக்கு அடிமைப்பட்ட அரசியலை முன்னெடுத்து வருகின்றனர். இருப்பினும் பிரிவினைவாதத்திற்கு ஆதரவளிக்கும் மாகாணசபை அதிகாரங்கள் ரத்து செய்யப்பட வேண்டும். மாகாணசபை சட்டங்களில் திருத்தம் செய்யாது தேர்தல் நடத்தப்பட்டால் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்க நேரிடும் என விமல் வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளார்.



சிங்களவர்களால் லண்டனில் தமிழீழ மாணவர்கள் தாக்கப்பட்டமைக்கு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு கண்டனம்!
[Wednesday, 2013-06-19 17:48:32]

தமிழ்த் தேசிய இனத்தின் மீது தொடர்ச்சியான இனவழிப்புப் போரை கட்டவிழ்த்து விட்டுள்ள சிங்கள இனவெறியாளர்களின் ஆட்சியரங்காகவுள்ள சிறிலங்காவினை புறக்கணிக்கக் கோரி, புலம்பெயர் தமிழீழ மாணவர்களினால் கடந்த 17ம் திகதி ஓவல் துடுப்பாட்ட மைதானம் முன்பாக ஒழுங்கு செய்யப்பட்ட அமைதி வழியான கவனயீர்ப்புப் போராட்டம் சிங்கள இனவெறியாளர்களின் காட்டுமிராண்டித்தனமான வன்முறைத் தாக்குதலுக்குள்ளானது. தாயகத்தில் பல்வேறுபட்ட ஒடுக்குமுறைகளுக்குள் அடக்கி ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் எமது தமிழீழ மக்கள் தமது அடிப்படை உரிமைகள் யாவும் மறுக்கப்பட்டு திறந்த வெளிச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.



வடக்கு தேர்தலுக்கு எதிராக குரலெழுப்புபவர்கள் ஜனாதிபதியின் திட்டத்தையே முன்னெடுக்கின்றனர் - அசாத் சாலி
[Wednesday, 2013-06-19 17:42:11]

வடக்குத் தேர்தலுக்கு எதிராக கூக்குரல் போடும் சம்பிக்க, விமல், பொதுபல சேனா, ராவணா பலய மற்றும் ராவய போன்றோர் ஜனாதிபதியின் திட்டத்தையே முன்னெடுக்கின்றனர் என கொழும்பு மாநாகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி தெரிவித்தார். கொழும்பு பான்ஸ் பிளேஸில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற அதிகாரத்தை பகிர்ந்து நாட்டைக் கட்டியெழுப்பும் அமைப்பின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



மனைவியுடன் தகராறு - சயனைட் கடித்த குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதி!
[Wednesday, 2013-06-19 17:38:06]

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சயனைட் கடித்து தற்கொலைக்கு முயற்சித்த ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குருசுமதவடி, ஆணைக்கோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதான குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவராவார். இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது என்று மானிப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரி மல்கம் பேட் தெரிவித்தார். சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் மனைவியிடம் விசாரணை மேற்கொண்டவேளை, கணவருக்கு சயனைட் எவ்வாறு கிடைத்தது என்பது பற்றி தனக்கு தெரியாதென்று கூறியுள்ளார்.



பஸ் விபத்துக்குள்ளானதில் இருவர் பலி, 70 பேர் காயம்!
[Wednesday, 2013-06-19 17:19:14]

நுவரெலியா, ஹாவாஎலிய பகுதியில் பஸ் வண்டியொன்று விபத்திற்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் இருவர் பலியாகியுள்ளதுடன், 70 பேர் காயமடைந்துள்ளனர். பதுளையிலிருந்து நுவரெலியா நோக்கி வந்துகொண்டிருந்த பஸ் வண்டியொன்றே இன்று புதன்கிழமை மாலை 4 மணியளவில் விபத்திற்குள்ளானது. இப்பஸ் வண்டியானது பாதையை விட்டு விலகிச்சென்று பள்ளத்தில் வீழ்ந்துள்ளது. இவ்விபத்தில் நமுணுகல பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் இருவரே பலியாகியுள்ளனர். காயமடைந்தவர்கள் நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



தமது நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்தும் தருணம் இந்தியாவிற்கு வந்துவிட்டது - மனோ கணேசன்!
[Wednesday, 2013-06-19 17:15:59]

இந்திய மத்திய அரசின் கருத்துகள், இந்திய அரசு தலைவர்கள் வழங்கிய உறுதிப்பாடுகள் என மன்மோகன் சிங் சொன்னார், சோனியா சொன்னார் என கூட்டமைப்பு எம்பிக்கள் ஊடகங்கள் மூலமாக சொல்கின்றார்கள். கூட்டமைப்பு எம்பிக்களுடன் ஆளும் இந்திரா காங்கிரஸ் தலைவர், இந்திய பிரதமர், வெளிவிவகார அமைச்சர் ஆகியோரது அழகான படங்களும் ஊடகங்கள் மூலமாக காட்டப்படுகின்றன. ஆனால், இந்திய அரசின் உண்மை நிலைப்பாடுகள் என்ன என்பது பற்றி தமிழ் மக்கள் மத்தியில் ஒரு மயக்க நிலைமை நிலவுகின்றது. இது முடிவுக்கு வரவேண்டும். யுத்தத்தை நடத்தி முடித்த இந்தியா, தேசிய இனப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருமா, இல்லையா என தமிழ் மக்கள் தெரிந்து கொள்ள விரும்புகின்றார்கள்.


NIRO-DANCE-100213
RoyaShades-l2011(04-12-11)
Suresh-remax-2013-01-01
TamilsGuid-191012-2013
Ramans2011
TDE_Computers2011
AJRwindows22.05.13
INNSYS-20120930
Mahesan supramaniyam 031109
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com