Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 21, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
டெசோவுக்கு போக மாட்டோம்! - மிகுந்த மனவருத்தத்துடன் மனோகணேசன் அறிவுப்பு!
[Thursday, 2012-08-09 23:09:04]
News Service

திராவிட முன்னேற்ற கழகத்தினால் சென்னையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, டெசோ மாநாட்டில் கலந்து கொள்வதற்காக விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுக்கொண்டு அந்த மாநாட்டில் கலந்துகொள்வது இல்லை என்ற முடிவை, மிகுந்த மனவருத்தத்துடன் ஜனநாயக மக்கள் முன்னணி எடுத்துள்ளது என முன்னணியின் ஊடக செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  

ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல்குழு கூட்டம், முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையில் இன்று கொழும்பில் கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.

அரசியல்குழு உறுப்பினர்களுடன், கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிக்கும் முகமாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவதது:

தமிழக அமைப்புகளின் எல்லாவித நடவடிக்கைககளும் இலங்கையில் தமிழரை கொடும் ஆட்சிக்கு உள்ளாக்கி இருக்கும் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்கின்றன என்பதை நாம் அறிவோம். எனவே தமிழக மற்றும் இந்திய அரசியல் கட்சிகளின் இலங்கை தொடர்பான நடவடிக்கைககளை விமர்சனம் செய்வது இல்லை என்பது நமது கட்சி தொடர்ந்து கடைபிடிக்கும் நிலைப்பாடு ஆகும்.

மேலும் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தொடர்பிலும், உலகத் தமிழ் அரசியல் பரப்பில் திராவிட முன்னேற்ற கழகம் வகிக்கும் பாத்திரம் தொடர்பிலும் நாம் நல்லெண்ணங்களை கொண்டுள்ளோம்.

எனினும் போர் நடைபெற்ற காலத்தில் ஆட்சியிலிருந்த திமுக அரசின் நடவடிக்கைகள் தொடர்பிலும், தற்போதைய போருக்கு பிந்திய இந்த காலகட்டத்தில் நடைபெற உள்ள இந்த மாநாட்டின் பயன்பாடு குறித்தும் பாரிய முரண்பாடுகள் எழுந்துள்ளன. இவைபற்றி நாம் விரிவான பகிரங்க விவாதங்களை நடத்த விரும்பவில்லை. எனினும் இவை தொடர்பில் எமது அரசியல்குழுவில் விரிவாகவும், கவனமாகவும் ஆய்வு செய்த நிலையில் மிகுந்த மன வருத்தத்துடன் எமது இந்த முடிவை நாம் எடுத்துள்ளோம்.

அதேவேளையில், இலங்கை தமிழர்களது தேசிய பிரச்சினை தொடர்பில் தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் கூட்டாக ஒரு தேசிய மாநாட்டை நடத்த வேண்டும் என்பதை நாம் வலியுறுத்துகிறோம். அதன்மூலம், தமிழகம் தனது ஒருமித்த குரலின் மூலமாக இலங்கை அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும், இலங்கை தமிழ் உடன்பிறப்புகளுக்கு ஆதரவாகவும், இந்தியாவின் மனசாட்சியையும், உலகத்தின் மனசாட்சியையும் தட்டி எழுப்ப வேண்டும்.

அந்த ஒரு செயல்பாட்டில் தமிழகத்தின் மாணவர், இளைஞர் மற்றும் சமூக அமைப்புகளும் உள்வாங்கப்பட வேண்டும். இத்தகைய ஒரு அனைத்து கட்சிகளின், அமைப்புகளின் மாநாடு தமிழகத்தில் ஏற்பாடு செய்யப்படுமானால் அதில் நமது கட்சி உட்பட அனைத்து இலங்கை தமிழ் கட்சிகளும் மகிழ்ச்சியுடன் பங்கு பற்றும் சூழல் ஏற்படும் என நாம் அறிவிக்க விரும்புகிறோம்.

இலங்கையில் வாழுகின்ற தமிழர்களின் வாழ்வுரிமைகள் தொடர்பில், இலங்கையின் தமிழ் அரசியல் கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் உலகின் எந்த ஒரு மேடைக்கும் சென்று உரையாடல்களை மேற்கொள்வதற்கும், தமிழக மற்றும் எந்த ஒரு உலக அரசியல் அமைப்புகளுடனும் இணைந்து நமது மக்களின் நலன் கருதி இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னேடுப்பதற்கும் உள்ள உரிமையை நாம் முழுமையாக வலியுறுத்துகிறோம்.

தேசிய இனப்பிரச்சினைக்கு ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காண்பது தொடர்பில் தமது நிலைப்பாடுகளை தமிழ் கட்சிகள் அறிவித்துவிட்ட நிலையிலும், இந்நாட்டின் சிங்கள பெளத்த இன-மதவாத கட்சிகளே, தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்விற்கு தடையாக இருக்கின்றன. இந்த கட்சிகளே தமிழ் மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் எதிரான இன-மத தாக்குதல்களுக்கு பின்னணியிலும் இருக்கின்றன. இந்த இன-மதவாத அமைப்புகளை இலங்கை அரசாங்கமே தட்டி கொடுத்து வளர்க்கின்றது.

உள்நாட்டில் தீர்வுகள் இல்லை என்ற நிலையிலேயே, நாம் வெளிநாடுகளின் கவனத்திற்கு எமது பிரச்சினைகளை கொண்டு செல்கிறோம். எனவே தமிழ் அரசியல் கட்சிகள் வெளிநாடுகளுக்கு சென்று, எமது பிரச்சினைகள் தொடர்பில் உரையாட கூடாது என்ற இந்த இன-மதவாத அமைப்புகளின் கருத்துகளை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம் என தெரிவித்தார் அவர்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

மனித உரிமைக்கும் சுதந்திரத்திற்கும் ஸ்ரீலங்காவில் இன்னும் இடமில்லை - மனித உரிமை ஆர்வலர் குழு தெரிவிப்பு!
[Monday, 2013-05-20 22:34:42]

இலங்கையில் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியுடன் யுத்தம் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் அந்நாட்டில் அடிப்படை மனித உரிமைகளுக்கும் சுதந்திரத்துக்கும் மரியாதை மென்மேலும் குறைந்துகொண்டு போவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம், அரச படைகளும் விடுதலைப் புலிகளும் செய்ததாகக் குற்றம்சாட்டப்படும் போர்க்குற்றங்களை விசாரிக்கவோ சட்ட நவடிக்கை எடுக்கவோ அர்த்தமுள்ள நடவடிக்கை ஒன்றையும் இதுவரையில் எடுக்கவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது.



மே18 நான்காம் ஆண்டு நினைவேந்தல், மயிலாடுதுறையில் நடைபெற்றது. Top News
[Monday, 2013-05-20 21:10:53]

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை போர்க்குற்றநாள் நினைவேந்தல் நிகழ்வு நேற்றுமுன்தினம் மயிலாடு துறையில் இடம்பெற்றது (18 05 2013). இதில் ஏராளமான தமிழின உணர்வாளர்கள் கலந்துகொண்டதோடு படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு அஞ்சலிகளையும் செலுத்தியுள்ளனர்.



நெதர்லாந் நாட்டில் இடம்பெற்ற தமிழினவழிப்பின் 4ம் அண்டு நினைவு நாள். Top News
[Monday, 2013-05-20 20:22:03]

சிங்கள பேரினவாதம் 60 ஆண்டுகளாக தமிழிழ மக்கள் மீது திட்டமிட்ட தமிழினவழிப்பை மேற்கொள்கின்றது. சிங்கள பேரினவாதம் செய்த தமிழினவழிப்பின் உச்சக்கட்டமே 18. வைகாசி 2009ம் ஆண்டாகும். வைகாசி 18ம் திகதியை உலகெங்கும் வாழ்கின்ற தமிழீழ உறவுகள் ஓர் துயரநாளாகவும் தமிழீழ மண்ணை மீட்டெடுக்க வேண்டுமென உறுதியெடுக்கின்ற நாளாகவும் எழுச்சிப்பூர்வமாக நினைவுகூர்ந்து வருகின்றார்கள்.



லயன் எயார் விமானம் தொடர்பில் கிளம்பியது புதிய சந்தேகம் - சுட்டு வீழ்த்தப்பட்டதா? கடத்தப்பட்டதா என குழப்பம்!
[Monday, 2013-05-20 19:51:45]

இரணைதீவுக் கடலில் 1998ம் ஆண்டில் வீழ்ந்த லயன் எயர் விமானம், சுட்டு வீழ்த்தப்பட்டதா அல்லது கடத்தப்பட்டதா என்ற சந்தேகம், அதில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடம் எழுந்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது. இரணைதீவுக் கடலில் இந்த மாதம் 4ம் நாள் தீவிரவாத புலனாய்வுப் பிரிவின் வழிகாட்டலில், லயன் எயர் விமானத்தின் சிதைவுகளை சிறிலங்கா கடற்படையினர் மீட்டனர். கடலில் 25 அடி ஆழத்தில் இருந்த சுழியோடிகளால் விமானத்தின் இரண்டு இறக்கைகள், மூன்று சக்கரங்கள் உள்ளிட்ட பல பாகங்கள் மீட்கப்பட்டன. இரண்டு நாட்கள் நீடித்த இந்த மீட்புப் பணியின் போது, பெண் ஒருவரின் தேசிய அடையாள அட்டை, செயற்கைப் பல், மற்றும் மனித எலும்புகள் சிலவும் மீட்கப்பட்டதாக கூறப்பட்டது.



வேலைநிறுத்த போராட்டத்தின் போது ஏதாவது ஒரு காரியாலயம் மூடப்பட்டால் நான் பதவி துறப்பேன்: பிரதியமைச்சர்
[Monday, 2013-05-20 19:04:39]

மின்சார கட்டண அதிகரிப்பிற்கு எதிராக எதிர்க்கட்சிகளினால் முன்னெடுக்கப்படும் வேலைநிறுத்த போராட்டத்தின் போது ஏதாவது ஒரு காரியாலயம் மூடப்பட்டால் நான் பதவிதுறப்பேன் என்று பிரதியமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். அரசாங்க காரியாலயங்கள் அல்லது எந்தவொரு தனியார் காரியாலயமும் நாளை செவ்வாய்க்கிழமை மூடப்பட்டால் நான் பதவிதுறப்பேன். என்று பெருந்தோட்ட கைத்தொழில் பிரதியமைச்சர் ஏர்ல் குணசேகர தெரிவித்துள்ளார். கம்பளை ரத்னாசார விஹாரையில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு சவால் விடுத்தார்.



ஆட்கொணர்வு மனுவை மீளப்பெறுமாறு காணாமல்போனவர்களின் உறவினர்களுக்கு படையினர் அச்சுறுத்தல்!
[Monday, 2013-05-20 19:00:15]

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து, பின்னர் காணாமற்போனவர்கள் தொடர்பில் வவுனியா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை திரும்பப் பெறுமாறு மனுதாரர்களுக்கு இனந்தெரியாத நபர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகள் 2009 ம் ஆண்டு மே 18ம் திகதி இராணுவத்தினரின் அறிவித்தலுக்கு அமைய சரணடைந்திருந்தனர். இதன் பின்னர் சரணடைந்தவர்கள் அவர்களது உறவினர்களின் கண்ணெதிரே படையினரால் பஸ்களில் ஏற்றிச் செல்லப்பட்டனர். எனினும் அதன் பின்னர் அவர்களது நிலை என்னவென்று தெரியா நிலையில் அவர்களது உறவினர்கள் உள்ளனர்.



மக்கள் எழுச்சியைக் கண்டு ராஜபக்ஷ ரெஜிமென்ட் பயந்துவிட்டது - ரணில்!
[Monday, 2013-05-20 18:42:18]

ராஜபக்ஷ ரெஜிமென்ட் கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் எழுச்சியைக் கண்டு பயந்துள்ள நிலையில் நாளை இடம்பெறவுள்ள தேசிய தொழிற்சங்க போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,



காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் தற்போதைக்கு வழங்கப்படத் தேவையில்லை - டக்ளஸ்!
[Monday, 2013-05-20 18:27:33]

தற்போதைக்கு மாகாணசபைகளுக்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படத் தேவையில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வட மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படவுள்ள நிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஆங்கில ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின் இரண்டு பிரதான இன சமூகங்களுக்கு இடையில் சரியான புரிந்துணர்வு எட்டப்படும் வரையில் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்குவது தொடர்பிலான தீர்மானத்தை சற்றே ஒத்தி வைக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். வட மாகாணசபைக்கு காணி காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டால் சிங்கள மக்கள் அது குறித்து கவனம் செலுத்துவர், இந்த அதிகாரங்கள் வழங்கப்படாவிட்டால் தமிழ் மக்கள் அது குறித்து கவனம் செலுத்துவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



மீண்டும் த.தே.ம.மு உறுப்பினர்களை விசாரணைக்கு அழைத்தது குற்றத்தடுப்பு பொலிஸ்!
[Monday, 2013-05-20 18:17:34]

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் பொதுச் செயலாளர் உட் பட்ட 4பேர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் இன்று மீளவும் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பதாக கட்சியின் யாழ்.வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 18ம் திகதி மன்னாரில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு நாள் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த சமயம் முன்னணியின் பொதுச்செயலாளர் செ.கஜேந்திரன், சட்டத்தரணி வி.மணிவண்ணன் மற்றும் இளைஞரணி தலைவர் எஸ்.சத்தியசீலன் உட்பட 15பேர் கைதுசெய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் நள்ளிரவு விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் முன்னணியின் உபதலைவர் சி.கஜேந்திரகுமார், மற்றும் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ்.வசந்தரூபன் ஆகியோர் இன்று காலை 9மணிக்கு பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.



இராணுவத்தினால் காணி சுவீகரிப்பு - தடுக்குமாறு நாமல் எம்.பிக்கு கடிதம்!
[Monday, 2013-05-20 18:13:18]

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான காணியினை அரசாங்க அதிபர் குழுவினர் சுவீகரிக்க முயற்சிப்பதாகவும் இதனை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு, இலங்கை போக்குவரத்து சபை கிளிநொச்சிசாலை ஊழியர்கள் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 12 ஏக்கர் காணியில், முதற்கட்டமாக வனவள திணைக்களத்திற்கும், சிறுவர் பூங்காவிற்கும், இராணுவத்தினரின் புனித பூமிக்குமாக எமது காணி சுவீகரிக்கப்பட்டது.



வடக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியிடம் கோரவில்லை: தயா மாஸ்டர்
[Monday, 2013-05-20 17:51:40]

தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் எந்தவொரு கட்சியையும் அணுகவில்லை என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்குமாறு எந்தவொரு அரசியல் கட்சியிடமும் கோரவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் தேர்தலில் போட்டியிட தயா மாஸ்டர் சந்தர்ப்பம் கோரியதாகவும் அதனை நிராகரித்ததாகவும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தார். எனினும், இவ்வாறான எந்தவொரு கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



வவுனியாவில் 7 வயதுச் சிறுமி மீது பாலியல் வல்லுறவு - நீதி கோரி பாரிய ஆர்ப்பாட்டம்!Top News
[Monday, 2013-05-20 15:33:34]

வவுனியா நெடுங்கேணி சேனைப்பிலவில் 7 வயது சிறுமியொருவரைப் பாலியல் பலாத்காரம் செய்தவரை உடன் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனக்கோரி திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருக்கின்றது. சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் பேரில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு சிறுவர்களுக்கும் பெண்களுக்கும் எதிராக நடத்தப்படுகின்ற சித்திரவதைகள் வன்முறைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கின்றனர்.



பாராளுமன்றத்திற்கு செல்வது போன்று அடிக்கடி 4ம் மாடிக்கும் செல்கின்றோம் - அரியநேந்திரன் எம்.பி!
[Monday, 2013-05-20 15:21:41]

எப்போதும் தமிழ் மக்களுக்கு சுதந்திரமான அரசியல் தீர்வு விடுதலை கிடைக்கின்றதோ அது வரையும் எமது பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன் தெரிவித்தார். முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து பிரார்த்தனை செய்யும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கணடவாறு கூறினார். தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,



கோவையில் நடைபெற்ற மே 18 போர்க்குற்றநாள் நிகழ்வில் பெருமளவு ஈழ விடுதலை ஆதரவாளா்கள் பங்கேற்ப்பு. Top News
[Monday, 2013-05-20 10:26:35]

கோவையில் நேற்றையதினம் (18 05 2013) முள்ளிவாய்க்கால் இனப்படுகொல போர்க்குற்றநாள் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஏற்ப்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெருமளவான தமிழீழ விடுதலை ஆதரவாளா்களும் செயற்ப்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர்.



ஜனாதிபதி மஹிந்த சீனாவுக்கு ஆறாவது தடவையாக விஜயம்!
[Monday, 2013-05-20 09:16:57]

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வரும் புதன்கிழமை சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வரும் 22ம் நாள் தொடக்கம் 26ம் நாள் வரை சீனாவில் பயணம் மேற்கொள்ள ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார். எனினும் இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னமும் வெளியாகவில்லை. ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்ற பின்னர், சீனாவுக்கு மேற்கொள்ளவிருக்கும் ஆறாவது பயணம் இதுவாகும். அண்மையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர், சிறிலங்கா அதிபர் நடத்தவுள்ள முதல் சந்திப்பு இதுவாகும்.



கனடாவில் நாடு கடந்த தமிழீழ அரசின் சார்பில் நடைபெற்ற தமிழீழ தேசிய துக்க நாள் நிகழ்வு Top News
[Monday, 2013-05-20 09:15:07]

"ஈழத் தமிழ் மக்களுக்கான தீர்வு சுதந்திர இறைமை உடைய தமிழீழ அரசே"
- தமிழீழ சுதந்திர சாசன முரசறைவில் பிரதமர் உருத்திரகுமாரன் வலியுறுத்தினார்.

"தமிழீழ மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கி அமைய விருக்கும் தமிழீழ அரசு ஜனநாயக விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும். சுதந்திர இறைமை உடைய அரசே தமிழ் மக்களுக்கு அவசியம். மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளுக்கு சட்டமியற்றி, அதனை அமுல்படுத்தும் உரிமை இருக்கும். சட்டத்தின்முன் தமிழீழ மக்கள் அனைவருமே சரிசமமாக நடாத்தப்படுவார்கள். தமிழீழ அரசாங்கம் மதசார்பற்றதாக இருக்கும். தமிழ், முஸ்லீம் மக்களது தனித்துவம் பேணப்படும்.



கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையில் இம்மாத இறுதிக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம்: - சிவாஜிலிங்கம்
[Monday, 2013-05-20 09:12:26]

தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிக்களுக்கிடையில் இந்த மாத இறுதிக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும். இதற்கான முன்னேற்பாடுகள் இடம் பெற்று வருகின்றன. இதற்கான பொறுப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று ரெலோவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.



கனடாவின் நகர்வுகள் குறித்து உன்னிப்பாக கண்காணிக்கப்படும் என்கிறது இலங்கை அரசு!
[Monday, 2013-05-20 09:11:55]

கனடாவின் நகர்வுகள் தொடர்பில் உன்னிப்பாக கண்காணிக்கப்படும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை தடுத்து நிறுத்தும் நோக்கில் கனடா நடவடிக்கைகளை மேற்கொள்கின்றதா என்பது குறித்து கவனிக்கப்பட உள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகள் நடத்தப்படுவது குறித்து கனடாவும் பஹாமாஸூம் அண்மையில் நடாத்திய பேச்சுவார்த்தைகள் குறித்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. நாட்டின் உண்மையான நிலைமைகள் குறித்து அந்தந்த நாடுகளுக்கு தெளிவுபடுத்துமாறு வெளிநாடுகளுக்கான இலங்கைத் தூதுரக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.



அரசின் யுத்த வெற்றிவிழா ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் இரத்தக் கண்ணீரால் எழுதப்பட்ட ஒரு துக்க தினம். - ஜனா
[Monday, 2013-05-20 09:06:05]

யுத்த வெற்றிவிழா இலங்கை அரசைப் பொறுத்தவரை கொண்டாட்ட நிகழ்வாக இருக்கும். ஆனால் ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் இரத்தக் கண்ணீரால் எழுத்தப்பட்ட ஒரு துக்க தினம் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவிக்கிறார். யுத்த வெற்றிக் கொண்டாட்டம் நடைபெறுவது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.



இலங்கை நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து நோர்வே அரசு அதிர்ச்சி!
[Monday, 2013-05-20 08:52:13]

இலங்கை நீதிமன்றின் தீர்ப்புகள் தமக்கு அதிர்ச்சியளிப்பதாக நோர்வே அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கைக்கான நோர்வே தூதரக அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர முடியும் என கொழும்பு நீதிமன்றம் அண்மையில் அறிவித்திருந்தது. கொழும்பு மேலதிக நீதவான் அமாலி ரணவீர இந்த உத்தரவினை பிறப்பித்திருந்தார். முன்னணி தன்னார்வ தொண்டு நிறுவனமான சகவாழ்வு மன்றத்தின் தலைவர் குமார் ரூபசிங்கவினால் நோர்வே தூதரக அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. உறுதிமொழி அளிக்கப்பட்டதனைப் போன்று நிதி உதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நோர்வேயின் முன்னாள் தூதுவர் ஹில்டே ஹரால்ஸ்டட் மற்றும் இரண்டு அதிகாரிகள் 98.5 மில்லியன் ரூபாவினை வழங்கத் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


Mahesan supramaniyam 031109
INNSYS-20120930
Ramans2011
TDE_Computers2011
Suresh-remax-2013-01-01
RoyaShades-l2011(04-12-11)
Canada Kanthasamy Kovil
TamilsGuid-191012-2013
NIRO-DANCE-100213
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com