Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 22, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
தமிழ் அரசியல் கைதிகளை கொலை செய்யும் சதிமுயற்சியை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும்: யோகேஸ்வரன் , சிறிதரன் ஜனாதிபதியிடம் கோரிக்கை!
[Thursday, 2012-08-09 22:37:30]
News Service

நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டு துன்புறுத்தப்படும் தமிழ் அரசியல் கைதிகளை ஜனாதிபதி மனிதாபிமான அடிப்படையில் விரைவாக விடுதலை செய்ய முன்வர வேண்டும். அத்தோடு சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகளை கொலை செய்யும் சதிமுயற்சியை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மற்றும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

  

தமது வேண்டுகோளை ஜனாதிபதிக்கும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சருக்கும் அனுப்புகின்றனர்.

அது தொடர்பாக அவர்களும் இருவரும் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரியவருவதாவது:

கடந்த காலங்களில் மக்கள் விடுதலை முன்னனியின் கிழச்சிக்குழு இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட போது ஜே.ஆர். அரசு அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தது. ஆனால் எமது இளைஞர்களை அரசியல் கைதி என்ற நிலையில் நீண்டகாலமாக சிறையில் அடைத்து வைத்திருந்த இவ்வரசாங்கம் ஏன் இவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய முடியாது இந்நாட்டில் சிங்களவர்களுக்கு ஒரு சட்டம் தமிழர்களுக்கு ஒரு சட்டம் என்ற வகையில் தான் தொடர்ந்து வரும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்நடவடிக்கை நீக்கப்பட வேண்டும் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த தமிழ் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

தமிழ் அரசியல் கைதிகளை பராமரிக்கும் சாதாரண நடைமுறையைக் கூட இவ்வரசாங்கம் நடைமுறைப்படுத்துவதற்கு முடியாத கேவலமான நிலையில் உள்ளதை எண்ணி நாங்கள் கவலை அடைகின்றோம்.

ஒவ்வொரு தடவையும் முறையாக சிறைச்சாலையில் எமது தமிழ் இளைஞர்களை தாக்குவதற்கு தெரிந்த இவ்வரசாங்கம் இவர்களுக்கு முறையாக சிசிக்சை அளிக்க தெரியாததை இட்டு பெரும் சந்தேகம் தோன்றியுள்ளது. தமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலையில் வைத்து கொலை செய்யும் நடவடிக்கையில் அரசாங்கம் இறங்கியுள்ளதா? என தமிழ் மக்கள் சந்தேகம் கொள்கின்றனர்.

நிமரூபனின் கொலையை அடுத்து தில்ரூஷனின் கொலை அடுத்த பின் யார்? யாரை? கொல்லப் போகின்றார்கள் என்று பிள்ளைகளை சிறைக் கூடங்களில் வைத்து விட்டு தொடர்ந்து கண்ணீரை வடித்துக் கொண்டிருக்கும் உறவுகள் கேள்வி எழுப்புகின்றனர் மன வேதனையுடன் துடிக்கின்றனர்.

யுத்தம் முடிந்தது என சர்வதேசத்திற்கு கூறி கொள்ளும் இவ்வரசு ஏன் இன்னும் எங்களை பல வகையிலும் பலிவாங்கிக் கொண்டிருக்கின்றது என மக்கள் கவலையடைந்த வண்ணம் உள்ளனர்.

எனவே இவ்வரசாங்கம் அரசியல் கைதிகளின் விடுதலையை சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக விரைவில் துரிதப்படுத்தப்பட வேண்டும். அல்லது ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தின் நிமிர்த்தம் பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்;.

இன்று ஐக்கிய நாடுகள் சபையில் சிறுபான்மை மக்களை எதுவித குறையும் இன்றி வழி ளநடத்துகின்றேன் என்ற போக்கில் தமிழ் பேசிய தாங்கள் சொந்த நாட்டிலே சிறுபான்மை இன மக்களின் உரிமையை பறித்து அவர்களை அடிமையாக வைத்திருப்பது நியாயமானதா? என கேட்க விரும்புகின்றோம்.

புத்த பகவானின் 2600 வருடத்தை சிறப்பாக கொண்டாட முற்படும் தாங்கள் பௌத்த தர்மத்திற்கு எதிராக ஒரு சிறுபான்மை இன தமிழினத்தை பல்முனை தாக்குதல் மூலம் கொன்றழிப்பது நியாயமானதா? இதையா பௌத்த தர்மம் கூறுகின்றது எனவும் கேட்க விரும்புகின்றோம்.

இந்நாட்டின் இவ்வாறான இந்த நிலை ஏன் என எங்களுக்கு புரியவில்லை. இவ்வாறான நிலை தொடருமாக இருந்தால் மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் தமிழ் மக்கள் யாவரையும் இணைத்து சாத்வீக போராட்டங்களில் குதிக்க வேண்டிய நிலை உருவாகும். இறைமைபற்றி சர்வதேசத்திற்கு எடுத்துக்கூறும் தாங்கள் ஜனநாய நாட்டிலே ஒரு சிறுபான்மை இனத்திற்குரிய இறைமைகளை பாதிக்கும் வகையில் செயற்பட்டு வருவது பொறுத்தமானதாக உள்ளதா?

குறிப்பாக வவுனியா சிறைச்சாலையில் இருந்து கடந்த மாதம் அநுராதபுரத்துக்கு மாற்றப்பட்டு பின்னர் அங்கு வைத்து சிறைச்சாலை அதிகாரிகளால் தாக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதி ஒருவர் மரணமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது இது எங்களுக்கு வேதனையை தருகின்றது.

தொடர்ந்து ஒவ்வொரு தமிழ் அரசியல் கைதிகள் கொலை செய்யப்படுவார்களே என்ற சந்தேகம் ஏற்படுகின்றது. வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சகிச்சை பெற்று வந்த தில்ரூஷன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என அறிகின்றோம்.

அதாவது இத்தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்து கோமா நிலையில் ராமக வைத்தியசாலையில் இந்த இளைஞர் சிகிச்சை பெற்று வந்த வேளையிலேயே உயிரிழந்துள்ளமையானது தமிழ் சமூகத்தின் மத்தியில் பாரிய அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது. இவ்வாறாக எம் சமூகத்தில் இருந்து கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகளை விடுதலைக்கு முன்னர் கொலை செய்து வீடுவார்களா இந்த அரசாங்கம் என்கின்ற கவலையில் பெற்றோர்கள் உறவுகள் துடிக்கின்றனர்.

தில்ரூஷன் தொடர்ந்து யார்? யார்? என கேள்வி தொடர்கின்றன. ஒரு பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்ற வகையில் சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் தாக்கப்படுவதும் கொலை செய்யப்படுவதும் உடனடியாக நிறுத்த வேண்டும்.

அத்தோடு இவ்வரசியல் கைதிகளை எதுவித தாமதமும் இன்றி வழக்கின் மூலமோ அல்லது மனிதாபிமான அடிப்படையிலோ விடுதலை செய்ய வேண்டும் என தங்களை வேண்டிக் கொள்கின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

உரிமைகளுக்காக குரல் கொடுக்காதுவிடின் சீனிக்காகவும், பாணுக்காகவும் காத்துக்கிடக்கும் நிலை உருவாகும் - ரணில்!
[Tuesday, 2013-05-21 21:23:41]

சிறிமாவோ ஆட்சிக்காலத்தைப் போன்று நாட்டு மக்களை ஒருவேளை உணவிற்காக வரிசையில் நிறுத்தும் முயற்சிலேயே தற்போதைய அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. பொதுமக்கள் நிலமையை புரிந்து கொண்டு உரிமக்காக குரல்கொடுக்காவிடின் பாணுக்காகவும் சினிக்காகவும் காத்துக்கிடக்கும் நிலையே உருவாகும். என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஜக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தொழிச்சங்கங்கள் ஒன்றிணைந்து நடத்தும் தேசிய அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கண்டு அரசாங்கம் பயந்து போய் உள்ளது. ஆகவே தற்போது நாட்டில் காணப்படுகின்ற மக்கள் எழுச்சி 2014 ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறியாகும்.இதனை இலக்காகக் கொண்டே நாம் செயற்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.



வாழ்க்கையில் விரக்தி - சென்னையில் தாய்,மனைவி,மகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்த இலங்கைத் தமிழரால் பரபரப்பு!
[Tuesday, 2013-05-21 20:17:06]

சென்னையில் டிராவல்ஸ் நிறுவனம் வைத்திருந்த இலங்கைத் தமிழர் தனது தாய், மனைவி மற்றும் மகளின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தானும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இலங்கையின் உள்நாட்டு போர் காரணமாக இலங்கைத் தமிழரான சுந்தரேசன் என்பவர் தனது தாயுடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் வந்து குடியேறினார்.



எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்த வேலை நிறுத்த போராட்டம் படு தோல்வி!
[Tuesday, 2013-05-21 20:02:19]

இலங்கையின் இரும்புத் தொழிச் சங்கம் என ஒருகாலத்தில் பேசப்பட்ட ஜேவீபீ தொழிற் சங்கமும், அதிக உறுப்பினர்களைக் கொண்டதாக கணிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கமும் ஏற்பாடு செய்திருந்த வேலை நிறுத்த போராட்டம் படு தோல்வியடைந்துள்ளது. வேலை நிறுத்த போராட்டம் நடந்தது என்பதற்கான அடையாளத்தையே இலங்கையில் காண முடியவில்லை எனக் கூறப்படுகிறது. கொழும்பில் தனியார் வர்த்தக நிலையங்கள் கூட அதாவது கோட்டை புறக்கோட்டை கடைகள் எல்லாம் இயங்கியது. வெளி மாவட்டங்களிலும் சகலதும் இயங்கியதாக தெரியவருகின்றது. அரசாங்கம் அச்சுறுத்தி அரச ஊழியா்களை வேலைக்கு வர வைத்தது என்று கூறினாலும் தனியார் நிறுவனங்கள் கடைகளுக்கு என்ன நடந்தது? ஒன்று கூட மூடப்படவில்லை என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.



விடுதலைக்கான இன்றைய கனவும் நாளைய வெற்றியும்: - முரசறையப்பட்ட தமிழீழ சுதந்திர சாசனத்தின் உள்ளடக்கம் வெளிவந்தது ! Top News Top News
[Tuesday, 2013-05-21 19:57:07]

2009ம் ஆண்டுக்கு பின்னரான ஈழவிடுதலைப் போராட்டத்தின் விடுதலைப்பாதையின் பெரும் இராஜதந்திர முன்னகர்வாக மே-18 முள்ளிவாய்க்கால் நான்காம் ஆண்டு கூட்டுநினைவேந்தல் நாளில் உலகத் தமிழர்களின் முரசறைவாக அமைந்த தமிழீழ சுதந்திர சாசனத்தின் உள்ளடக்கம் வெளிவந்துள்ளது. தமிழீழத் தாயக மக்கள் மக்கள் உட்பட 1 இலட்சத்துக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்மக்கள் பங்கெடுத்த உருவாக்கியிருந்த தமிழீழ சுதந்திர சாசனத்தின் உள்ளடக்கத்தின் விபரம் :



ஈழத்தமிழர்கள் உயிரிழக்கக் காரணமானவருக்கு வரவேற்பு கொடுப்பது தேசத்திற்கு பெருமை தரக்கூடியதா? சீமான் கேள்வி!
[Tuesday, 2013-05-21 19:36:12]

இலங்கையில் தமிழ் மக்கள் உயிரிழக்கக் காரணமானவரை அழைத்து, இரத்தின கம்பள வரவேற்பு கொடுப்பது தேசத்திற்கு பெருமை தரக்கூடியதா? என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். நாம் தமிழர் கட்சி கூட்டத்துக்கு யாசின் மாலிக்கை அழைத்தமை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,



கனேடிய சட்டங்களுக்கு அமைவாக தமிழ் மக்களின் சுதந்திர போராட்டத்துக்கு கரங்கோர்த்து நிற்பேன் - ராதிகா
[Tuesday, 2013-05-21 19:28:40]

கனேடிய சட்டங்களுக்கு அமைவாக தமிழ் மக்களின் சுதந்திர போராட்டத்துக்கு கரங்கோர்த்து நிற்பேன் என கனேடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் தெரிவித்துள்ளார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் கனேடிய மண்ணில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த மே-18 முள்ளிவாய்க்கால் துக்க நாள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.



மக்களின் ஒருமித்த எதிர்ப்பைக் கண்டு அரசு பயந்துள்ளது - கே. டி. லால்காந்த
[Tuesday, 2013-05-21 19:16:53]

வேலை நிறுத்தத்திற்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்ட செயற்பாடுகள் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளன. நாம் அரசாங்கத்திற்கு எதைக் கூற விரும்பினோமோ அந்த விடயத்தை இன்று வெற்றிகரமாக செய்து காட்டியுள்ளோம் என தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தலைவர் கே.டி. லால்காந்த தெரிவித்தார். நிப்போன் ஹோட்டலில் இன்று செவ்வாய்க்கிழமை தொழிற்சங்க ஒருங்கிணைப்பிற்கான இணைப்புக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



வட மாகாணசபை தேர்தல் தமிழீழத்திற்கு வழி வகுக்கும் - பொதுபல சேனா
[Tuesday, 2013-05-21 17:12:15]

வட மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டிய அவசியமில்லை. முதலில் அங்கு சிங்கள மக்களை பதிவுசெய்து குடியேற்ற வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். பொதுபல சேனாவின் தலைமையலுவலகமான சம்புத்தத்வ ஜயந்தியில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்; வடக்குத் தேர்தல் தேவையில்லை. அதனை நடத்துவதற்கு பொதுபல சேனா ஒருபோதும் அனுமதிக்காது. முதலில் அங்கு பெரும்பான்மை இனத்தவர்களாகிய சிங்கள மக்களை பதிவு செய்து குடியமர்த்த வேண்டும்.



சிறைக் கைதிகளுடன் தொலைபேசி பேச்சு எதற்கு? 4ம் மாடியில் வைத்து சிவசக்தி ஆனந்தனிம் விசாரணை!
[Tuesday, 2013-05-21 16:10:58]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கொழும்பில் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (21) காலை நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். வவுனியா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதிகள் அவருக்கு எடுத்த தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பாகவே அவர் மீது குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர். குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்கு வருமாறு வவுனியா பொலிஸ் நிலையம் ஊடாக அழைப்பாணை அனுப்பப்பட்டதையடுத்தே சிவசத்தி ஆனந்தன் இன்று (21) காலை 10.00 மணிக்கு கொழும்பிலுள்ள பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குச் சென்றிருந்தார்.



முஸ்லிம் மக்களை ஒடுக்குமுறைக்கு உட்படுத்துவதில் இலங்கை மும்முரம் - அமெரிக்கா!
[Tuesday, 2013-05-21 16:04:56]

இலங்கையில் முஸ்லிம் மக்கள் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. 2012ம் ஆண்டுக்கான அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் சர்வதேச மதச் சுதந்திர அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கிறிஸ்தவ தேவாயலங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக விசாரணை நடாத்தி தண்டனை விதிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



தனிநபர் பிரேரணை மூலம் 13ம் திருத்தத்தை நீக்க நடவடிக்கை!
[Tuesday, 2013-05-21 16:00:03]

13ம் திருத்தச் சட்டம் மற்றும் மாகாண சபை முறையை இரத்து செய்யுமாறு கோரி பாராளுமன்றில் தனிநபர் பிரேரணை ஒன்றை முன்வைக்கவுள்ளதாக ஹெல உறுமய கட்சியின் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். குறித்த பிரேரணை இந்த வாரம் பாராளுமன்றில் சமர்பிக்கப்படும் என அவர் தெரிவித்தார். 13ம் திருத்தச் சட்டமும் மாகாண சபை முறையும் பாராளுமன்ற முறைக்கு மாறானவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவில் மாநிலம் ஒன்று அதிகாரத்தை மீறி செயற்பட்டால் அம்மாநிலத்தின் அதிகாரத்தை மத்திய அரசு பொறுப்பேற்க முடியும்.



படைப் புலனாய்வாளர்களினால் முல்லைத்தீவு வாக்காளர் பட்டியல் சேகரிப்பு!
[Tuesday, 2013-05-21 15:52:52]

2013 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியலை தயாரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள 2012 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் பட்டியல் முல்லைத்தீவு மாவட்டக் கிராம சேவகர்களிடம் இருந்து படைப் புலனாய்வாளர்கள் பெற்று வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது நாடளாவிய ரீதியில் 2013 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியல் தயாரிப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இதற்கான 2012 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் ஒவ்வொரு கிராம சேவையாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரக் கிராம சேவகர் பிரிவுகள் மற்றும் நகரப் பகுதிக் கிராம சேவகர் பிரிவுகளில் இவ்வாறு வழங்கப்பட்ட வாக்காளர் பெயர்ப் பட்டியலை இராணுவ முகாம்களில் இருந்து வந்து தம்மைப் புலனாய்வாளர்கள் என அறிமுகப்படுத்துபவர்கள் பெற்றுச் செல்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.



கனகராயன்குளத்தில் 18 வயதுடைய பெண் மீது பாலியல் துஸ்பிரயோகம்:
[Tuesday, 2013-05-21 15:43:44]

வவுனியா கனகராயன்குளத்தில் விசேட தேவையுடைய பெண் மீது பாலியல் துன்புறுத்தல் இடம்பெற்றுள்ளதாக சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜெ. ஜெயக்கெனடி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
கனகராயன்குளம் வடக்கு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட கிராமத்திலேயே வீட்டில் தனியாக விசேட தேவைக்குரிய 18 வயதுடைய பெண் இருந்த சமயம் மீது இச் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவித்தார்.



கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்க மன்மோகன் சிங்கிற்கு கடிதம் அனுப்பினார் தமிழக முதல்வர்!
[Tuesday, 2013-05-21 15:42:57]

கச்சதீவை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதலமைச்சர் ஜெயலலிதா திங்கட்கிழமை அனுப்பிவைத்துள்ள அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கச்சதீவை இலங்கையிடம் இருந்து மீண்டும் இந்தியாவுக்கு மீட்பது தொடர்பாக கடந்த 3-5-2013 அன்று தமிழக சட்டசபையில் கொண்டு வந்து ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பற்றி உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். அந்த தீர்மான நகலை இந்த கடிதத்துடன் இணைத்துள்ளேன்.



ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இந்தியாவிற்கு தோல்வி - ஏற்றுக்கொண்டார் இந்திய உயர்ஸ்தானிகர்! Top News
[Tuesday, 2013-05-21 15:36:16]

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இந்தியா தோல்வி கண்டுள்ளது எனவும் இதனை தான் ஒப்புக்கொள்வதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரிடம் ஒப்புக் கொண்டுள்ளார். நேற்று கொழும்பு ஹலதாரி ஹோட்டலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் இந்திய உயர் ஸ்தானிகரக்கு விசேட விருந்துபசாரமொன்று வழங்கப்பட்டது. அதில் இரு தரப்பினருக்குமிடையெ இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்திய உயர்ஸ்தானிகர் மேற்கண்டவாறு குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.



இந்திய இராணுவத்தை விரட்டவே புலிகளுக்கு பிரேமதாஸ ஆயுதங்களை வழங்கினார் - சஜித் விளக்கம்!
[Tuesday, 2013-05-21 09:49:06]

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸா ஆயுதங்களை கொடுத்தது ஏன்? என்று ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியின் மகனுமான சஜித் பிரேமதாஸ தெளிவுப்படுத்தியுள்ளார். யுத்தம் நிறைவடைந்து 4 ஆண்டுகள் பூர்த்தியடைந்ததை கொண்டாடும் வகையில் காலி முகத்திடலில் சனிக்கிழமை நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் ஜனாதிபதி புலிகளுக்கு ஆயுதம் கொடுத்தார். அத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலமாக நாட்டைபிரிப்பதற்கு முயன்றனர் என்று குற்றஞ்சாட்டினார்.



இராணுவத்தின் காணி அபகரிப்புக்கு எதிரான 1478 ரிட் மனுக்கள் மீதான விசாரணை 27 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!
[Tuesday, 2013-05-21 09:38:00]

யாழ்ப்பாணத்தில் தமக்கு சொந்தமான காணிகளை இழந்துள்ள 1,474 பேர் தாக்கல் செய்துள்ள ரிட் மனுக்கள் மீதான விசாரணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் மே மாதம் 27 ஆம் திகதி வரையிலும் ஒத்திவைத்துள்ளது. தமக்கு சொந்தமான 6381 ஏக்கருக்கு கூடுதலான் பாரம்பரிய தனியார் நிலங்களை சுவீகரிக்க அரசாங்கம் எடுக்கு நடவடிக்கைகளை எதிர்த்தே கடந்த 15 ஆம் திகதி புதன்கிழமை இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நீதியரசர் கே. ஸ்ரீஸ்கந்தராஜா முன்னிலையில் நேற்று ஆராயப்பட்டன. 1474 ரிட் மனுக்களையும் ஏற்கவேண்டும் என்பதற்கான ஆதாரங்களை மே மாதம் 27 ஆம் திகதி முன்வைக்குமாறு பணித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் அன்றைய தினத்திற்கே வழக்கையும் ஒத்திவைத்தது.



நிறைவேற்று அதிகாரம் உள்ளபோது வடக்கு தேர்தல் பற்றி அச்சம் கொள்ளவேண்டியதில்லை! - மல்வத்து பௌத்த பீடம் அரசுக்கு ஆலோசனை!
[Tuesday, 2013-05-21 09:34:47]

இலங்கையில் எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் நடத்தப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாக மாகாணசபைகளுக்கு உள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை ஒழித்துவிடுவதற்கான முஸ்தீபுகள் நடப்பதாக ஆளுந்தரப்பு தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலைமையில், தேர்தலுக்கு முன்னதாக அந்த அதிகாரங்களை ஒழிப்பதில் அரசாங்கம் அக்கறை செலுத்தத் தேவையில்லை என்று நாட்டில் செல்வாக்கு மிக்க மல்வத்து பௌத்த பீடம் அரசாங்கத்துக்கு ஆலோசனை கூறியுள்ளது.



பாடுமீன் சமூக அபிவிருத்திச் சங்கம் பிரான்ஸ் - இலவசபாட வகுப்புக்களை நடாத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
[Tuesday, 2013-05-21 09:30:17]

பிரான்ஸ் நாட்டை தளமாக கொண்டு செயற்படும் பாடுமீன் சமூக அபிவிருத்திச் சங்கம் பின் தங்கிய பகுதிகளில் கல்வி கற்கும் மாணவர்களில கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் இலவசபாட வகுப்புக்களை நடாத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.



13 ஆவது திருத்த சட்டத்தை ரத்துச் செய்யும் அதிகாரம் அரசாங்கத்திற்கு கிடையாது: வாசுதேவ, திஸ்ஸ விதாரண எச்சரிக்கை!
[Tuesday, 2013-05-21 09:27:37]

அரசியல் அமைப்பில் காணப்படுகின்ற 13 ஆவது திருத்தச்சட்டத்தை ரத்துச் செய்யும் தார்மீக அதிகாரம் அரசாங்கத்திற்கோ அதனைச் சார்ந்த பங்காளிக் கட்சிகளுக்கோ கிடையாது. அவ்வாறானதொரு நடவடிக்கை எத்தரப்பில் முன்னெடுக்கப்பட்டாலும் அதனை தோல்வியடையச் செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம் என்று அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார மற்றும் திஸ்ஸ விதாரண ஆகியோர் எச்சரித்துள்ளனர். மாகாணசபை முறைமையை ஒழிப்பதற்கு ஆளும் கட்சியில் உள்ள பெரும்பாலானவர்கள் எதிர்ப்பாகவே உள்ளனர். இந்த நிலையில் 13 ஆவது திருத்தச்சட்டத்தை ரத்துச் செய்வதற்கான பிரேரணையை கொண்டு வந்தாலும் அதனை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் அப்பிரேரணையானது மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவின்றி தோல்வியடையும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.


Ramans2011
INNSYS-20120930
TamilsGuid-191012-2013
Canada Kanthasamy Kovil
Mahesan supramaniyam 031109
TDE_Computers2011
RoyaShades-l2011(04-12-11)
Suresh-remax-2013-01-01
NIRO-DANCE-100213
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com