Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 19, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
பலவிதமான நோய்களையும் விரட்டியடிக்கும் மணத்தக்காளி கீரை
[Thursday, 2012-08-09 21:40:07]
News Service

மணத்தக்காளி கீரை ஒன்றே போதும் பல நோய்களை விரட்டியடிக்க.. கத்தரி இனத்தைச் சேர்ந்ததாகும், மணத்தக்காளி. அறுபது சென்டிமீட்டர் உயரம் வரை இச்செடி வளரும். இச்செடியின் கீரை, தண்டு, காய், பழம் என அனைத்தும் சிறந்த சத்துணவாகும்; உணவு மருந்தும் ஆகும்.

  

மணத்தக்காளியில் சிவப்பு, கருப்பு என இரு இனங்கள் உண்டு. காய்கள் கருப்பு நிறத்தில் இருக்கும். பழுக்குபோது சிவப்பு, மஞ்சள் ஆகிய நிறங்களில் இருக்கும். மேற்கு ஆப்பிரிக்காவில் தோன்றியது, மணத்தக்காளிக் கீரை, இதன் விஞ்ஞானப் பெயர், சோ(ஸோ)லனம் நைக்ரம் என்பதாகும். இப்போது உலகம் முழுவதும் இது பயிர் செய்யப்படுகிறது.

காரணம், குறைந்த செலவில் சிறந்த உணவாகவும் நோய்களைக் குணப்படுத்தும் மருந்துணவாகவும் இருப்பதால்தான். இந்திய மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது, மணித்தக்காளி. இதயத்துக்கு பலம் ஊட்டும் உயர்ந்தவகை பலவிருத்தி (Tonic) மணித்தக்காளிக் கீரையும், இதன் பழங்களும் பயன்படுகின்றன.

இக்கீரை சத்துணவுப் பொருள்களைச் சரியாக வயிற்றுக்குள் அனுப்பி விடுகிறது. இக்கீரையை உணவாகச் சாப்பிட்டால் அன்றைய தினம் நாம் சாப்பிட்ட உணவுப்பொருள்களை நன்கு செரிமானம் செய்துவிடும். எந்த உறுப்பு எந்தப் பொருளைக் கிரகித்துக் கொள்ள வேண்டுமோ அதற்கு ஏற்ற வகையில் கொண்டுபோய்ச் சேர்க்கிறது. கழிவுப் பொருள்கள், சிறுநீர் முதலியவை உடனே வெளியேறவும் வழி அமைத்துக் கொடுக்கிறது. நோய்களைக் குணமாக்கி உடல் நலத்தைப் புதுப்பித்துக் கொடுக்கிறது.

குத்தலா? எரிச்சலா?

மனம் காரணம் இன்றிச் சில சமயங்களில் படபடக்கும். உடலுக்குள் குத்தலும் எரிச்சலும் இருக்கும். உடம்பில் வலியாகவும் இருக்கும். எதைக் கண்டாலும் இதனால் எரிச்சலும் உண்டாகும். இந்த நேரத்தில் மணத்தக்காளிக் கீரையைப் பருப்புடன் சேர்த்து மசியலாக்கிச் சாப்பிட்டால் உடல் உறுப்புகளும், மனமும் அமைதியடையும், மனத்திற்கு மகிழ்ச்சி உண்டாகும். உள் உறுப்புகளை மணத்தக்காளிக் கீரை பலப்படுத்தியும் விடுகிறது.

சிறுநீரகக் கோளாறு தீர்க்கும் இலைக் காய்கறி!

இக்கீரை உடலில் தோன்றும் வீக்கங்கள், கட்டிகள் முதலியவற்றை எதிர்த்துப் போரிடும். அவற்றைக் குணப்படுத்தியும் விடும். சிறுநீர்க் கோளாறுகளை நீக்கும். சிறிது கசப்புச் சுவையுடையது இக்கீரை. சமைத்து சாப்பிடும் போது கசப்பு குறைவாய் இருக்கும்.

மலச்சிக்கலா?

மணத்தக்காளிப் பழம்பலவிருத்தி(Tonic) போல மதிப்பு மிகுந்த பழமாகும். பேதி மருந்தாக இப்பழத்தைச் சாப்பிடலாம். இந்த வகையில் மிகுந்த பயனைத் தந்து, நன்கு பசி எடுக்கவும் செய்கிறது. வாரத்துக்கு இரு நாள் மட்டுமே மலம் கழிக்கிறவர்கள் இப்பழத்தைச் சாப்பிடலாம். இதனால் கழிவுகள் உடனே வெளியேறும். இக்கீரையிலும் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. அதனால் மலச்சிக்கலை விரைந்து குணமாக்கும்.

நீர்க்கோவை குணமாகும்! ]

நீர்க்கோவை நோய் மகிச்சிறந்த முறையில் குணமாக இக்கீரை பயன்படுகிறது. இக்கீரையைக் கசாயமாய் அருந்தலாம். அல்லது பருப்பு சேர்த்து மசியல், பொரியல் என்று சாப்பிடலாம். கீரையையும், இளந்தண்டுகளையும் சாறாக மாற்றி ஒரு வேளைக்கு ஆறு மில்லி வீதம் அருந்தலாம். மேற்கண்ட மூன்று முறைகளுள் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினாலும் நீர்க்கோவை நோய் விரைந்து குணமாகும்.

வயிற்று வலி குணமாகும்!

ஒரு கைப்பிடி அளவு சுத்தம் செய்யப்பட்ட இக்கீரையை சாறாக மாற்றி பிடித்த பழ இரசப் பானம் ஒன்றுடன் இந்தக் கீரைச் சாற்றையும் சேர்த்து அருதினால் வயிற்றுப் பொருமல், பெருங்குடல் வீக்கம், வயிற்றுப் புண், வயிற்று வலி, குடல் புண், நாக்குப் புண், மூல வியாதி முதலியவற்றை விரைந்து குணமாக்கும்.

இக்கீரையை பச்சையாக மென்றும் சாப்பிடலாம். மேற்கண்ட வயிறு சம்பந்தமான அனைத்துக் கோளாறுகளும் குணமாக இக்கீரையுடன் பாசிப் பருப்பு, வெங்காயம் முதலிய சேர்த்து கூட்டாகச் செய்தும் சாப்பிடலாம்.

நல்ல தூக்கம் இல்லையா?

இக்கீரையை உண்டால் உடலுக்கு அழகு கூடும். இதயத்திற்கு வலிமை அதிகரிக்கும். வயிற்றுப் போக்கு, காய்ச்சல், குடல்புண் முதலியவற்றிற்கு உணவு மருந்தாகவும் இக்கீரை பயன்படுகிறது. இரவு நேரங்களில் இக்கீரையை உணவுடன் உண்டால் களைப்பு நீங்கும். இத்துடன் நன்கு தூக்கத்தையும் கொடுக்கவல்ல தூக்க மாத்திரையாகவும் செயல்படும்.

மஞ்சள் காமாலையை இக்கீரையின் சாறு குணமாக்குகிறது. இதே சாறு கல்லீரலில் ஏற்படும் வீக்கத்தையும் கணிக்கிறது. கல்லீரல் கோளாறுகள் அனைத்தையும் இக்கீரைச்சாறு குணமாக்கும்.

காய்ச்சலுக்கும் மருந்து..

எல்லா வகையான காய்ச்சல்களையும் இக்கீரை தணிக்கும். உலர்ந்த மணத்தக்காளிக் கீரையை (அல்லது கீரைப் பொடி என்றால் ஒரு தேக்கரண்டி) தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். உடனே வடிகட்டி, சூட்டுடன் அருந்த வேண்டும்.

இது உடனே செயல்பட்டு நோயாளியை நன்கு வியர்க்கச் செய்துவிடும். வியிர்வை வெளியேறுவதால் காய்ச்சலின் தீவிரம் குறையும். காய்ச்சல் குணமாகும்வரை இக்கீரையைச் சமையல் செய்து உண்ண வேண்டும். மணத்தக்காளிப் பழமும் விரைந்து இதுபோல் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.

கீரையைப் போலவே பழமும் சக்திவாய்ந்த மருந்தாகும். ஆஸ்துமா நோயாளிகள் சளியுடன் கர்புர் என்று சிரமத்துடன் மூச்சு விட்டுக்கொண்டு இருப்பார்கள். இவர்களும் காசநோயாளிகளும் இப்பழங்களைத் தினமும் சாப்பிடுவது நல்லது. மணத்தக்காளியின் காயும், பழமும் மிளகு அளவேதான் இருக்கும்.

நன்கு பசி எடுத்துச் சாப்பிடவும் இப்பழம் உதவுகிறது. புதுமணத்தம்பதிகள் உடனே குழந்தை பெற்றுக்கொள்ள இப்பழம் போதும். இப்பழம் உடனே கருத்தரிக்கச் செய்யும். உருவான கரு வலிமை பெறவும் இப்பழம் பயன்படுகிறது. பிரசவம் எளிதாக நடைபெறவும் பயன்படுகிறது.

தேமல், வீக்கங்கள், பருக்கள், கொப்புளங்கள் குணமாக இக்கீரைச் சாற்றைத் தடவலாம். உடலில் வலி உள்ள இடங்களிலும் வலிநீக்கும் மருந்து போல இக்கீரைச் சாற்றைத் தேய்த்து உடல் வலி நீங்கப் பெறலாம்.

நாள்பட்ட நோய் வியாதிகள் குணமாக இக்கீரைச் சாற்றை மோர், தயிர், பால், தேங்காய் தண்ணீர், இளநீர் போன்ற ஏதாவது ஒன்றில் சேர்த்துத் தினமும் அருந்தி வரவேண்டும்.

மணத்தக்காளிக் காயை வற்றல் போடலாம். வற்றலிலும் மருத்துவக் குணங்கள் சிதையாமல் இருக்கிறது. காசநோய், ஆஸ்துமாகாரர்கள் தொந்தரவு இன்றி இரவில் அயர்ந்து தூங்க வற்றல் குழம்பு உதவும்.

தினமும் சாப்பிடலாமா?

மனத்திற்கு மகிழ்ச்சியைத் தந்து உடலில் உள்ள நோய்களையும் குணப்படுத்தும் இக்கீரையைத் தினமும் உணவில் உண்ணலாம்.

100 கிராம் கீரையில் ஈரப்பதம் 82.1%, புரதம் 5.9%, கொழுப்பு 1%, தாது உப்புகள் 2.1%, மாவுச்சத்து 8.9% உள்ளன. நோயைக் குணமாக்கி உடலின் கட்டுமானப் பகுதியைப் பார்த்துக் கொள்ள 410 மில்லி கிராம் கல்சியமும், மூளை வளர்ச்சி, மனத்திற்கு சுறுசுறுப்பு ஆகிய அளிக்க 70 மில்லி கிராம் எரியம் (Phosphorus), நோய் எதிர்ப்புச் சக்தி அளிக்கும் 11 மில்லி கிராம் வைட்டமின் சியும் இக்கீரையில் உள்ளன.

மகிழ்ச்சி வேண்டுமா?

மேலும், தசைகளுக்குப் பலம் சேர்ப்பதற்கும் கண்பார்வை தெளிவாய்த் தெரிவதற்கும் ரிபோஃபிலவின் என்னும் வைட்டமின் பி2ம், தலைவலி, தோல் நோய் முதலியவற்றைக் குணப்படுத்தி மனநலவளத்தை அதிகரிக்கும் 'பி' குரூப்பைச் சேர்த்த வைட்டமின் நியாஸினும் உள்ளன. பழத்தில் உள்ள ஒரு வித காடிப்பொருள் செரிமானச் சக்தியைத் துரிதப்படுத்திப் பசியின்மையைப் போக்கிவிடுகிறது.

நெஞ்சவலி இனி இல்லை! இக்கீரையையும், பழத்தின் விதைகளையும் உலர வைத்துப் பொடியாக்க வேண்டும். அவற்றைத் தலா அரைக் கரண்டி வீதம் காலையும் மாலையும் உட்கொண்டால் நெஞ்சுவலி குணமாகும். காய்ச்சல் நேரத்திலும் நாள்பட்ட புண்கள் இருந்தாலும் இதுபோல் உட்கொள்ள வேண்டும். இப்பொடியைத் தேன் கலந்தும் சாப்பிடலாம்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

கறுப்பான சருமமா? பப்பாளி, ஆரேஞ்சு இருக்க கவலை எதற்கு?
[Saturday, 2013-05-18 19:52:16]

கருப்பான சருமம் கொண்ட பெண்கள் கோடை காலத்தில் தைரியமாய் வெளியே சுற்றலாம். ஏனெனில் அவர்களுக்கு வெப்பத்தினால் ஏற்படக்கூடிய கொப்புளங்கள், கோடைகால சரும பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. கருப்பான பெண்கள் களையாக மாற வழிகள்...

* முகத்திற்கு பேஷியல் போடும் முன்பு முகத்தில் உள்ள அழுக்குகளை துடைத்து எடுக்கவேண்டும். காய்ச்சாத பாலை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு சிறிதளவு பஞ்சில் நனைத்து முகத்தை துடைக்கவேண்டும்.



Lenovo அறிமுகப்படுத்தும் IdeaPad Yoga 11S ஹைப்பிரிட் மடிக்கணனிகள்!Top News
[Saturday, 2013-05-18 13:43:48]

முன்னணி கணினி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான Lenovo ஆனது IdeaPad Yoga 11S எனும் புத்தம் புதிய ஹைப்பிட் மடிக்கணனியினை அறிமுகப்படுத்தியுள்ளது. 11.6 அங்குல அளவுடையதும் 1366 x 768 Pixel Resolution உடையதுமான திரையினைக் கொண்டுள்ள இக்கணினியானது i3,i5 மற்றும் i7 Processor களை கொண்ட மூன்று பதிப்புக்களாக உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் பிரதான நினைவகமாக 4GB RAM இணைக் கொண்டுள்ளதுடன் சேமிப்பு நினைவகமாக 128GB Solid State Disk (SSD) இணையும் உள்ளடக்கியுள்ளன.



விதைகளின் ராஜாவான பாதாமை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!
[Saturday, 2013-05-18 13:09:52]

நட்ஸ்களின் ராஜாவாக விளங்கும் பாதாமில் நிறைய நன்மைகள் உள்ளங்கியுள்ளன. இந்த சூப்பர் நட்ஸ் உடல், சருமம் மற்றும் முடி என பலவற்றிற்கு ஆரோக்கியத்தை தருவதில் சிறந்ததாக உள்ளது. அதிலும் இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் உடலை வலுவுடனும், எந்த ஒரு நோயும் அண்டாமல் பாதுகாக்கிறது. குறிப்பாக பாதாமில் வைட்டமின் பி2, வைட்டமின் ஈ, பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து, மாங்கனீசு, புரோட்டீன், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் காப்பர் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு நிறைந்திருப்பதால், இது இதயத்தை ஆரோக்கியத்துடன் வைப்பதில் பெரிதும் துணையாக உள்ளது. இவ்வாறு பாதாமின் நன்மைகளைப் பற்றி சொன்னால் சொல்லிக் கொண்டே போகலாம். ஏனெனில் அதன் நன்மைக்கு எல்லையே இல்லை. இப்போது அந்த பாதாமை தினமும் சாப்பிடுவதால், உடலில் உண்டாகும் 15 நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.



ஞாபகம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்!
[Saturday, 2013-05-18 12:51:52]

"வீட்டுக்கு வரும்போது தேங்காய் எண்ணை வாங்கிக் கொண்டு வரச் சொல்லி எத்தனை தடவை சொன்னாலும் இந்த மனிசன் மறந்து போட்டு வந்து நிற்கிறார்" என அம்மாவிடம் பேச்சு வாங்கும் அப்பாவைப் பார்க்க பாவமாக இருக்கும். ஞாபகம் என்பது எவ்வளவு அவசியம் என்பதை பரீட்சை எழுதும் மாணவர்கள் நன்கு உணர்ந்திருப்பார்கள். வினாத்தாள் கையிலிருக்கும் போது நினைவுக்கு வராத விடைகள் பரீட்சை மண்டபத்திற்கு வெளியே வந்ததும் ஞாபகத்திற்கு வரும்போது "அடடே" என்று சொல்வதைத் தவிர என்ன செய்ய முடியும். இப்படியான நினைவுகள் என்பன நீண்ட காலத்திற்கு சேமிக்கப்பட்ட தகவல்கள் என விஞ்ஞானிகள் வரையறை செய்வார்கள். கண், காது, மூக்கு, நாக்கு, உடல் தொடுகை போன்ற பல்வேறு புலன்கள் மூலம் கிடைக்கும் தகவல்கள் மூளைகள் மூலம் கிடைக்கும் தகவல்கள் மூளையில் சேமிக்கப்படும் போது அது ஞாபகத்திற்கு அடித்தளமாகிறது.



புதிய வகை "டெஸ்ட் டியூப் பேபி" சிகிச்சை முறையை கண்டுபிடித்தனர் பிரிட்டிஷ் விஞ்ஞானிகள்!
[Friday, 2013-05-17 22:26:56]

இயற்கையாக பிள்ளை பெற்றுக் கொள்வதில் பிரச்சினை உள்ள ஜோடிகளில் ஆணின் விந்தையும் பெண்ணின் முட்டையையும் உடலுக்கு வெளியில் சேர்த்து கருவை உருவாக்கும் ஐ வி எஃப் சிகிச்சை முறையில், வெற்றி வாய்ப்பை கணிசமான அளவில் அதிகரிக்கக்கூடியது என தாம் நம்பும் தொழில்நுட்பம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளதாக பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த வகையில் கரு உருவாக்கப்படுகின்ற பிள்ளையைத்தான் டெஸ்ட் டியூப் பேபி என்று சொல்வார்கள்.



சொந்த பந்தத்தில் இருந்த மணமக்கள் தேர்வு காலப்போக்கில் மாறியது - திருமணப் பொருத்தம் பற்றி சில தகவல்கள்!
[Friday, 2013-05-17 22:03:59]

திருமணத்திற்கு மணமக்கள் தேர்வு செய்வது முன்பெல்லாம் உள்ளூரில் சொந்த பந்தத்தில் என்றுதான் இருந்தது. காலப்போக்கில் இந்த நிலை மாறி கல்வி, வேலைவாய்ப்பு என்று நாட்டின் பல பகுதிக்கும் இளைஞர்கள் செல்லும் நிலை ஏற்பட்டு விட்டதால் மணமக்கள் தேர்வு செய்ய அங்கங்கேயுள்ள திருமணத் தகவல் நிலையங்களை நாட வேண்டிய அவசியம் பெற்றோர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. மணமக்களின் பெற்றோர்கள் புதிதாக அறிமுகம் ஆவதால் அவர்களைப் பற்றியும் மணமகன் அல்லது மணமகள் பற்றியும் முழுமையாக தீர விசாரித்திடுவது மிகவும் முக்கியம்!



உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கும் சில முறையற்ற பழக்கங்கள்!
[Friday, 2013-05-17 17:22:45]

பெரும்பாலும் மன அழுத்தத்தை அதிகரிப்பதில் பழக்கவழக்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிலும் நம்மை ரிலாக்ஸ் செய்ய வைக்கும் என்று நினைத்து செய்யும் பழக்கவழக்கங்கள் தான் அதிக அளவில் மன அழுத்தத்தை தூண்டிவிடுகின்றன. உதாரணமாக, தொலைக்காட்சி பார்த்தால், மன அழுத்தம் குறையும் என்று மனதை ரிலாக்ஸ் செய்ய டிவியைப் பார்ப்போம். ஆனால் உண்மையில் அவை தான், மன அழுத்தத்தை அதிகரிக்கின்றன. அதிலும் இன்றைய அவசர உலகில் அனைத்தும் அவசரமாக நடப்பதால், வாழ்க்கையே ஒருவித அவசரத்தில் ஓடுகிறது. இதனால் மன அழுத்தம் மட்டுமின்றி, வேறு பல உடல்நல பிரச்சனைகளும் உண்டாகின்றன. எனவே மனதை அழுத்தமின்றி வைப்பதற்கு, ரிலாக்ஸ் செய்ய மேற்கொள்ளும் தவறான செயல்களை மேற்கொள்ளாமல் இருப்பதே, மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான சிறந்த வழியாகும். இப்போது மன அழுத்தம் குறையும் என்று நினைத்து செய்யும் தவறான பழக்கவழக்கங்கள் என்னவென்று பார்த்து, அவற்றை தவிர்த்து, மன அழுத்தத்தைக் குறைப்போம்.



கரு முட்டை மூலம் உயிர்ப் பிரதியாக்கம் - அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை!
[Friday, 2013-05-17 14:24:50]

மனிதக் கரு முட்டை ஒன்றை உயிர்ப் பிரதியாக்கம் மூலம் அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கிறார்கள். இதுவரை பிரிட்டிஷ் ஆய்வாளர்கள்தான் டோலி என்ற செம்மறி ஆட்டுக்குட்டியை 1996ஆம் ஆண்டில் உருவாக்கியிருந்தனர். அன்று முதல் அதே இனப்பெருக்க உயிர்ப் பிரதியாக்க வழிமுறைகளை பயன்படுத்தி மனித கலங்களை உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சித்து வந்தனர். மரபணுக்கூறுகள் (டி என் ஏ) அகற்றப்பட்ட ஒரு முட்டையினுள் வயதுக்கு வந்த ஒருவரின் கலத்தில் உள்ள பதார்த்தங்களை மாற்றீடு செய்ததாக ''ஒரேகொன்னை'' சேர்ந்த விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.



துல்லியமாக இலக்கு வைக்க பயன்படும் ஸ்மார்ட் ரைபிள்ஸ்!Top News
[Friday, 2013-05-17 13:19:08]

ஸ்மார்ட் ரைஃபில்ஸ் - இந்த அதி நவீன துப்பாக்கி மூலம் வைக்கப்படும் டார்கெட்டை துல்லியமாக நீங்கள் மட்டுமல்ல உங்கள் அருகில் இருக்கும் இன்னொருவரும் கணிக்க முடியும், இதன் வீடியோ டார்கெட் லென்ஸ் மூலம் அதன் மூலம் அந்த டார்கெட்டை கரெக்டாய் சுட முடியும் மற்றும் அதை உடனே வீடியோவாக வெப் தளத்திர்க்கும் சேர்க்கவும் முடியும். இப்படி உங்கள் துப்பாக்கியின் டார்க்கெட்டை இன்னொருவரும் பார்த்து அஸிஸ்ட் செய்வதனால் தவறு செய்ய வாய்ப்பில்லை.



LED விளக்குகள் கண்பார்வையை பறிக்கும் - ஆய்வில் தகவல்! Top News
[Thursday, 2013-05-16 18:17:38]

தற்போது மிக அதிகமாக பயன்படுத்திவரும் எல்இடி விளக்குகளால் மனிதர்களின் கண் பார்வைக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று ஸ்பெயின் நாட்டு ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பல ஆண்டுகளாக விலை குறைவான குண்டு பல்புகளைத்தான் மக்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால், இவை வெப்பத்தை அதிகளவில் உமிழ்வதாகவும், மின்சாரத்தை அதிகளவில் உறிஞ்சுவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு மாற்றாக எல்இடி எனப்படும், 'லைட் எமிட்டிங் டையோடு' விளக்குகள் அறிமுகம் ஆனது. இவை குண்டு பல்புகள் பயன்படுத்தும் மின்சாரத்தில் 5ல் ஒரு பகுதியை மட்டுமே பயன்படுத்துவதாகவும், சுற்றுச்சூழலுக்கு மிக சிறப்பானது என்றும் கூறப்பட்டது. இதனால், ஐரோப்பிய யூனியனில் பல ஆண்டுகளுக்கு முன்பே குண்டு பல்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுவிட்டது. இந்தியாவில் 2009ம் ஆண்டில் 100 வாட்ஸ் குண்டு பல்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது.



நடிகர் தனுஷுக்கு 3 படத்தில் இருந்த நோய் உங்களுக்கு இருக்கா? எப்படி கண்டுபிடிப்பது? இதை படியுங்கள்...
[Thursday, 2013-05-16 18:12:08]

"பைபோலார் டிஸ்ஆர்டர்" எனப்படும் இருமுனையப் பிறழ்வைப் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்? இது ஒரு விதமான மன அழுத்தமே. ஆனால் சற்று ஆபத்தானது. இதனை பற்றி சமீபத்தில் வந்த ஒரு தமிழ் படத்தில் கூட நாம் பார்த்திருப்போம். அது தான் நடிகர் தனுஷ் நடித்த "மூணு" திரைப்படம். இந்த படத்தில் தனுஷ் கூட இருமுனையப் பிறழ்வால் தான் பாதிக்கப்பட்டிருப்பார். இருமுனையப் பிறழ்வு என்பது அதிகப்படியான வெறி மற்றும் சோர்வு கோளாறான ஓர் மனநோய் ஆகும். இது பெயருக்கு ஏற்றது போல் இருமுனையப் பிறழ்வால் பாதிக்கப்பட்ட ஒருவரின் மனநிலையானது அதீத அளவில் ஊசலாடும். இது பல வாரங்கள் அல்லது மாதங்கள், ஏன் அதற்கும் மேலாக கூட நீடிக்கும். நூற்றில் ஒருவர் வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் இருமுனையப் பிறழ்வால் பாதிக்கப்படுவர். இது பொதுவாக டீன் ஏஜில் (விடலைப் பருவத்தில்) அல்லது அதற்கு பிறகு தான் ஆரம்பிக்கும். ஆனால் இது நாற்பது வயதிற்கு மேல் வருவது அபூர்வமே. இது ஆண் பெண் என்ற பேதமில்லாமல் இருவருக்கும் வரும் பொதுவான பாதிப்பாகும். இப்போது இந்த இருமுனையப் பிறழ்வு இருப்பதை உறுதி செய்யும் சில அறிகுறிகளை பார்க்கலாமா!



Gmail தரும் புத்தம் புதிய வசதி - மின்னஞ்சல் மூலமும் இனி பணம் அனுப்பலாம்!Top News
[Thursday, 2013-05-16 15:27:51]

ஜிமெயிலின் வாலட் சர்வீஸ் அனைவரும் அறிந்ததே. இப்போது ஜிமெயிலின் வாலட் இன்னுமொரு புது வசதியை செய்திருக்கிறது. அதாவது இனி உங்களது தெரிந்த / தெரியாத நண்பர்களுக்கும் பணம் ஜஸ்ட் ஒரு ஈமெயிலிலே அனுப்ப முடியும். அதாவது கம்போஸ் பட்டனை அழுத்தும் போது கீழே டாலர் சிம்பல் வரும் அதன் மூலம் எவ்வளவு அனுப்ப வேண்டுமோ அவ்வளவு அனுப்பினால் உங்கள் கிரடிட் கார்ட் அல்லது வங்கி கணக்கில் (ஏற்கனவே படத்தில் காட்டியிருப்பது போல் உள்ள ரெஜிஸ்ட்டர் செய்த வங்கி கணக்கு) இருந்து கழித்து கொள்வார்கள் அது போக இதற்க்கு சர்வீஸ் சார்ஜ் இல்லை.



மலேரியா நோய்க்காவி நுளம்புகளே மனித மணத்தால் அதிகம் கவரப்படுகின்றன - ஆய்வில் தகவல்!
[Thursday, 2013-05-16 15:16:31]

மலேரியா நோய்க் கிருமிகளை காவி வருகின்ற நுளம்புகள் (கொசுக்கள்) மிகவும் அதிகமாக மனித உடலின் மணத்தினால் கவரப்படுவதாக அது குறித்து ஆராயும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். மலேரியா நோய்க் கிருமியைக் காவி வரும் நுளம்பு, அந்தக் கிருமி இல்லாமல் வரும் நுளம்பைவிட மூன்று மடங்கு அதிகமாக மனித வியர்வை மணத்தினால் கவரப்படுவதாக அவர்கள் கூறுகிறார்கள். அதனால், இந்த கிருமிகளை காவி வருகின்ற நுளம்பினால் மனிதன் கடிபடும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகமாக இருப்பதாக நெதர்லாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இவ்வாறு நோய்க்கிருமிகளை காவிவரும் அந்த நுளம்புகள் அதிகம் கவரப்படுவதற்கு, அந்த நோய்க்கிருமிகளின் உயிர் வாழ்வதற்கான மற்றும் இனப்பெருக்கம் செய்வதற்கான முயற்சியும் காரணமாக இருக்கலாம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.



பெண்களின் கண்களில் ஏற்படும் பிரச்சினைகளும் அவற்றிற்கான தீர்வுகளும்!
[Wednesday, 2013-05-15 22:22:07]

பெண் என்றால் கண்களுக்கு மைதீட்டவேண்டும். கண்களுக்கு மைபோடுவது நல்லது என்று பெரியவர்கள் கூறியிருக்கிறார்கள். நமது கண் இமைகளிலே எண்ணெய் உற்பத்தியாகிறது. Meibomian என்ற சுரப்பி கண் இமைகளில் ஆயிலை உற்பத்தி செய்கிறது. நாம் அடிக்கடி கண்களை சிமிட்டிக்கொண்டே இருக்கிறோமே, அது சிரமமின்றி வழுவழுப்பாக இயங்கவும், கண்ணீரை பலப்படுத்தவும் அந்த ஆயில் அவசியமாகிறது. கண்மையால் கண்களுக்கு அழகு கிடைக்கும் என்பது உண்மை. ஆனால் மையால் கண்களுக்கு ஆரோக்கியம் கிடைப்பதாக இதுவரை எந்த ஆய்வும் கூறவில்லை. 'பெண்கள் எதற்கெடுத்தாலும் அழுவார்கள். அது அவர்கள் பலகீனம்' என்று சொல்வார்கள். ஒருவிதத்தில் பெண்களின் அழுகை அவர்கள் கண்களுக்கு நல்லது. துக்க அழுகை, விபத்து அழுகை, மிதமான அழுகை போன்ற ஒவ்வொன்றின்தன்மைக்கு ஏற்ப கண்ணீரின் ரசாயனதன்மை மாறும்.



பாதுகாப்பான முறையில் புளூடூத் சாதனங்களை பாவிப்பதற்கான சில வழிமுறைகள்!
[Wednesday, 2013-05-15 22:01:48]

நாம் கம்ப்யூட்டர்கள், பொழுதுபோக்கு சாதனங்கள், டெலிபோன் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது அவை தங்களுக்குள் பல வகைகளில் இணைத்துக் கொள்கின்றன. பலவித வயர்கள், கேபிள்கள், ரேடியோ சிக்னல்கள், இன்ப்ரா ரெட் கதிர்கள் எனப் பல வகைகளில் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது. ஆனால் புளுடூத் சாதனங்களை இணைப்பதில் தனி வழி கொண்டுள்ளது. குறைந்த மின் சக்தி பயன்பாடு, ஒரே நேரத்தில் எட்டு சாதனங்களுடன் தொடர்பு, எந்த வகையிலும் ஒன்றுக்கொன்று குறுக்கிட்டு செயல் இழக்காத நிலை, இணைந்திடும் சாதனங்கள் நேராக இருந்திடத் தேவையற்ற நிலை, 32 அடி வட்டத்தில் புளுடூத் தொழில் நுட்பம் கொண்ட எந்த சாதனத்தையும் கண்டு இணையும் லாகவம் எனப் பல ப்ளஸ் பாய்ண்ட்களை அடுக்கிக் கொண்டு செல்லலாம்.



சீன மருத்துவர்களால் ரொக்கட் தொழில்நுட்பத்தில் செயற்கை இதயம் உருவாக்கம்!Top News
[Wednesday, 2013-05-15 17:26:44]

சீன மருத்துவர்கள் ராக்கெட் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும் செயற்கை இதயத்தை உருவாக்கியுள்ளனர். டியான்ஜின் டொ இன்டர்நேஷனல் கார்டியாவாஸ்குலார் (Tianjin TEDA International Cardiovascular) மருத்துவமனை மருத்துவர்கள் இந்த செயற்கை இதயத்தை உருவாக்கியுள்ளனர். இந்த செயற்கை இதயம் செம்மறியாடு ஒன்றிற்கு 2 மாதங்களுக்கு முன்பு பொருத்தப்பட்ட நிலையில் அந்த ஆடு 62 நாட்களாக நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது. இதனால் மற்ற கண்டுபிடிப்புகளுடன் ஒப்பிடுகையில் இந்த செயற்கை இதயம் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. இந்த செயற்கை இதயம் சிறியதாகவும், எடை குறைந்ததாகவும், அதிக பாதுகாப்புடனும் உருவாக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.



உலகளாவிய இணையப் பாவனை தொடர்பான சில சுவாரஸ்யமான தகவல்கள்!
[Wednesday, 2013-05-15 15:57:45]

இன்டர்நெட் பயன்படுத்தும் மக்கள் எண்ணிக்கையில், இந்தியா, உலக அளவில், சீனா மற்றும் அமெரிக்காவை அடுத்து, மூன்றாவது இடத்தைக் கொண்டுள்ளது. ஆனால், இணையத்தைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை மிக, மிகக் குறைவாகவே உள்ளது. நூறில் 11 பேர் தான் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இது ஒரு கவலைப்படத்தக்க விஷயமாகும். இந்தியாவில், 1998 ஆம் ஆண்டில், 14 லட்சம் பேர் மட்டுமே இணைய இணைப்பினைக் கொண்டிருந்தனர். 2010 ஆம் ஆண்டில் தான், இது 10 கோடி என்ற எண்ணிக்கையைத் தாண்டியது. அதன்பின், சிறிது வேகமாகவே இந்த எண்ணிக்கை வளர்ந்தது. அண்மைக் காலத்திய கணக்கில், இது 12 கோடியாக இருந்தது. உலகின் மொத்த இன்டர்நெட் பயனாளர் எண்ணிக்கையில்,முதல் பத்து நாடுகளில் இந்தியா இடம் பிடித்தாலும், ஜனத்தொகையுடன் கணக்கிடுகையில், மிகவும் குறைவான விகிதத்திலேயே, இன்டர்நெட் பயனாளர்கள் உள்ளனர்.



மூளையின் செயற்பாடு பதின்ம வயதினரில் எப்படி இருக்கும்? ஆய்வில் இறங்கினர் ஆராய்ச்சியாளர்கள்!
[Wednesday, 2013-05-15 15:55:03]

பதின்பருவ வயதினரின் மூளை செயல்படும் விதத்தை அறிந்துகொள்ளும் ஒரு ஆழ்ந்த ஆய்வை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தொடங்கியிருக்கிறார்கள். 14லிருந்து 24 வயது வரையிலான 300 பேரின் மூளைகளை ஸ்கேன் செய்து பார்ப்பதன் மூலம், அவர்களது தன்னுணர்வான மற்றும் உணர்ச்சிகரமான நடத்தை எப்படி அவர்கள் வயதாகும்போது மாறுகிறது என்பதைக் கட்டுப்படுத்தும் மூளை இயக்க நுட்பங்களை அவர்கள் அடையாளம் காண முற்படுவார்கள். சில பதின்பருவத்தினர் ஏன் அவ்வப்போது 'உம்'மென்று இருக்கிறார்கள், பிறகு அந்த மனோநிலையிலிருந்து எப்படி விடுபடுகிறார்கள் என்பதை விளக்க இந்த ஆய்வு உதவும்.



செல்பேசி பாவனையின் பின்னாடி மறைந்திருக்கும் ஆபத்துக்கள்!
[Wednesday, 2013-05-15 15:52:27]

தற்போது செல்போன் இல்லாத கைகளை பார்க்கவே முடியாது. ஏனேனில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரது கைகளிலும் செல்போன் இருப்பதை காணலாம். இத்தகைய செல்போன் ஆரம்பத்தில் வெறும் தகவல் தொடர்பு சாதனமாக மட்டும் பயன்பட்டுவந்தது. ஆனால் தற்போது செல்போன் வழியாகவே நேரத்தைக் கடத்தும் பல பொழுதுபோக்குகள் வந்துள்ளன. இத்தகைய பொழுது போக்குகளால், எங்கு சென்றாலும், குழந்தைகளை அழைத்துச் செல்கின்றோமோ இல்லையோ, செல்போனை உடன் கொண்டு செல்கின்றனர். இத்தகைய செல்போன் உயிரை வாங்கும் ஒரு எமன் என்று சொல்லலாம். ஏனெனில் இந்த செல்போனால், உடலுக்கு பல பிரச்சனைகள் வருகின்றன. ஏனெனில் இதிலிருந்து வெளிவரும் கதிர்கள் மிகவும் ஆபத்தானவை. உடலுக்கு கொடிய தீங்கை விளைவிக்கக்கூடியவை.



15GB வரை இலவச சேமிப்பு வசதியை அதிகரித்தது கூகுள்!
[Tuesday, 2013-05-14 20:41:34]

ஜிமெயில் மற்றும் கூகுள் ட்ரைவ் போன்ற பிரபல சேவைகளை வழங்கிவரும் கூகிள் நிறுவனம் அதன் இலவச சேமிப்பளவை 15 ஜிபி வரை அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஜிமெயிலில் 15 ஜிபிவரையான அளவுள்ள கோப்புக்களை கூகுள் ட்ரைவுடன் இணைத்து சேமித்துவைக்க முடியும். அதாவது 5GB ஜிமெயிலிலும் 9GB கூகுள் ட்ரைவுடன் சேமிக்க முடியும். தற்போது குறிப்பிட்ட பயனாளருக்கு மட்டுமே விரிவு படுத்தப்பட்டுள்ள இலவச சேமிப்பளவு விரைவில் அனைவருக்கும் கிடைக்குமென தெரிவிக்கின்றது கூகிள் நிறுவனம்.


NIRO-DANCE-100213
TamilsGuid-191012-2013
TDE_Computers2011
RoyaShades-l2011(04-12-11)
Ramans2011
Mahesan supramaniyam 031109
INNSYS-20120930
Canada Kanthasamy Kovil
Suresh-remax-2013-01-01
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com