Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 19, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
உடல் சுகாதாரத்தை பேணும் மிளகு
[Thursday, 2012-08-02 21:41:40]
News Service

இயற்கை வைத்தியத்தில் ஒன்றான மிளகு முதாதையோர் காலத்தில் தினமும் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருந்தது. தற்போது காலத்தில் சமையலுக்கு மட்டுமே அதிகம் பயன்படுத்துகின்றனர். பாட்டி காலத்தில் தினமும் இரண்டு மிளகுகள் சாப்பிட்டு வந்தனர். அதனால் அவர்களை எந்த நோயும் நெருங்கியதில்லை. தற்போதைய காலத்தில் விஞ்ஞானம் வளர வளர நோய்களும் அதிகரித்து வருகிறது.

  

மிளகு சாப்பிடும் போது வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோக்ளோரிக் அமிலம் வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சரிசெய்கிறது. அதாவது சரியான செரிமானம் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலி, குடல் எரிவாயு போன்றவற்றை தவிர்க்க மிளகு அத்தியாவசியமான ஒன்று. மிளகு சேர்த்த உணவு உடலில் உள்ள வியர்வைகளை வெளியாக்குவதுடன் எளிதில் சிறுநீரை கழிக்கவும் உதவுகிறது. தினம் இரண்டு மிளகு சாப்பிடுவதன் மூலம் வயிறு சம்பந்தமான பிரச்சினை எட்டிப் பார்க்காது.

உடலுக்கு நலன் தரக்கூடியதில் மிளகும் ஒன்று. இது சுவாசக்கோளாறுகளுக்கு நிவாரணத்தை தருகிறது. மேலும் இருமல், மலச்சிக்கல், ஜலதோசம், செரிமானம், இரத்தசோகை, தசை விகாரங்கள், பல் பாதுகாப்பு, பல் சம்பந்தமான நோய்கள் வயிற்றுபோக்கு இதய நோய் போன்றவற்றை குணப்படுத்துவதில் சிறந்து விளங்குகிறது.

மிளகின் வெளிப்புற கருப்பு அடுக்கு கொழுப்பின் காரணமாக உண்டாகும் உயிரணுக்களை முறிப்பதற்கு உதவுகிறது.. எனவே மிளகு கலந்த உணவை சாப்பிட்டு வருவதன் மூலம் எடையை குறைக்கலாம். மிளகு சருமநோயை குணப்படுத்துவதற்கும் பயன்படுகிறது. இது தோலில் காணப்படும் வெண்புள்ளிகளின் நிறமியை அழிக்கிறது. ஆரம்பகட்ட வெண்புள்ளிகளை தடுப்பதற்கு மிளகை பயன்படுத்த வேண்டும். லண்டன் ஆராய்ச்சி ஒன்றின் படி மிளகு வெண்புள்ளிகளை உருவாக்கக்கூடிய நிறமிகளை அழிக்கிறது.

நிறமிகளை அழிக்க ஊதா ஒளி சிகிச்சை முறையை பயன்படுத்துகிறது. புற ஊதா கதிர்கள் காரணமாக தோலில் ஏற்படும் புற்றுநோயை போக்க மிளகு சிறந்த மருந்து. ஆயுர்வேதத்தில் இருமல் மற்றும் சளிக்கு டானிக்குகள் தயாரிக்கும் போது அதனுடன் மிளகு சேர்ப்பது உண்டு. ஏனெனில் மிளகு புரையழற்சி மற்றும் நாசி எரிச்சல் போன்றவற்றிற்கு சிற‌ந்த நிவாரணம் தரக்கூடியது.

இருமல் மற்றும் சளி உள்ளவர்கள் மிளகை சாப்பிட்டு வர எளிதில் குணமாகும். நோய்தொற்று பூச்சி போன்றவைகளினால் ஏற்படும் விஷக்கடி போன்றவற்றை தடுக்க மிளகு பயன்படுகிறது. மேலும் மிளகு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

ஆக்சிஜனேற்றியாக செயல்படும் மிளகு புற்றுநோய் இதயநோய் கல்லீரல் போன்றவற்றில் ஏற்படும் ஆரம்பகட்ட பிரச்சினையை எதிர்த்து செயல்படும். மிளகு உடலில் பல்வேறு பாகங்களுக்கு மூலிகைகள் மூலம் நன்மைகள் புரிகின்றது. காது வலி மற்றும் காது சம்பந்தமான பிரச்சினைகள் பூச்சி கடித்தல், குடலிறக்கம், வலி நிவாரணம் கக்குவான் இருமல், ஆஸ்துமா, சுவாசபிரச்சினைகளை போக்க மிளகு நல்ல நாட்டு மருந்து..

மேலும் பல் வலி பல் சிதைவு போன்றவற்றிற்கும் பயன்படுத்தலாம். முன் காலத்தில் கண் சம்பந்தமான பிரச்சினைகளுக்கும் மிளகு மருத்துவத்தை தான் பயன்படுத்தி வந்தனர். முடிந்த மட்டும் மிளகு பொடியை வீட்டிலே தயார் செய்யுங்கள். கடைகளில் கிடைக்கும் செயற்கை மிளகு தூள்கள் 3 மாதங்களுக்கு மட்டுமே புத்துணர்ச்சியை தக்க வைத்துக்கொள்ள கூடியது.

வீட்டிலே தயார் செய்யும் பொடி கால வரையறையின்றி பயன்படுத்தலாம் மிளகு பொடியும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஒரு சிட்டிகை அளவு மிளகு பொடி சேர்த்து சமைத்தால் சுவை மற்றும் செரிமானம் கிடைக்கிறது. உடல் நலத்தில் ஒட்டு மொத்த சுகாதாரத்திற்கும் மிளகு நல்லது. அல்சர் உள்ளவர்கள் மிளகு அதிகம் சேர்த்து கொள்ள கூடாது.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

கணினி வன்றட்டின் (Hard Disk) நிலையை அறிவதற்கு உதவும் மென்பொருள்!
[Sunday, 2013-05-19 08:28:30]

நம் கம்ப்யூட்டரின் ஹார்ட் ட்ரைவில், பைலை சேவ் செய்கையில், அல்லது புதிய புரோகிராம் ஒன்றை இன்ஸ்டால் செய்கையில், டிஸ்க்கில் உள்ள ட்ரைவில் இடம் பற்றாக்குறையாக உள்ளது என்ற செய்தி நமக்கு அச்சத்தைத் தரலாம். அப்படி என்ன நான் அதிகக் கோப்புகளை உருவாக்கி, அல்லது புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து, ஹார்ட் டிஸ்க்கின் இடத்தைப் பயன்படுத்தி விட்டேன் என ஆச்சரியப்படலாம். உடனே ட்ரைவின் ஒவ்வொரு பகுதியாகச் சென்று, எங்கு அதிக இடம் பயன்படுத்தப்பட்டு உள்ளது எனத் தேடித் தேடிப் பார்க்கலாம். உங்களின் இந்த நேரத்தில் உதவத்தான் WinDirStat என்ற புரோகிராம் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.



கறுப்பான சருமமா? பப்பாளி, ஆரேஞ்சு இருக்க கவலை எதற்கு?
[Saturday, 2013-05-18 19:52:16]

கருப்பான சருமம் கொண்ட பெண்கள் கோடை காலத்தில் தைரியமாய் வெளியே சுற்றலாம். ஏனெனில் அவர்களுக்கு வெப்பத்தினால் ஏற்படக்கூடிய கொப்புளங்கள், கோடைகால சரும பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. கருப்பான பெண்கள் களையாக மாற வழிகள்...

* முகத்திற்கு பேஷியல் போடும் முன்பு முகத்தில் உள்ள அழுக்குகளை துடைத்து எடுக்கவேண்டும். காய்ச்சாத பாலை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு சிறிதளவு பஞ்சில் நனைத்து முகத்தை துடைக்கவேண்டும்.



Lenovo அறிமுகப்படுத்தும் IdeaPad Yoga 11S ஹைப்பிரிட் மடிக்கணனிகள்!Top News
[Saturday, 2013-05-18 13:43:48]

முன்னணி கணினி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான Lenovo ஆனது IdeaPad Yoga 11S எனும் புத்தம் புதிய ஹைப்பிட் மடிக்கணனியினை அறிமுகப்படுத்தியுள்ளது. 11.6 அங்குல அளவுடையதும் 1366 x 768 Pixel Resolution உடையதுமான திரையினைக் கொண்டுள்ள இக்கணினியானது i3,i5 மற்றும் i7 Processor களை கொண்ட மூன்று பதிப்புக்களாக உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் பிரதான நினைவகமாக 4GB RAM இணைக் கொண்டுள்ளதுடன் சேமிப்பு நினைவகமாக 128GB Solid State Disk (SSD) இணையும் உள்ளடக்கியுள்ளன.



விதைகளின் ராஜாவான பாதாமை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!
[Saturday, 2013-05-18 13:09:52]

நட்ஸ்களின் ராஜாவாக விளங்கும் பாதாமில் நிறைய நன்மைகள் உள்ளங்கியுள்ளன. இந்த சூப்பர் நட்ஸ் உடல், சருமம் மற்றும் முடி என பலவற்றிற்கு ஆரோக்கியத்தை தருவதில் சிறந்ததாக உள்ளது. அதிலும் இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் உடலை வலுவுடனும், எந்த ஒரு நோயும் அண்டாமல் பாதுகாக்கிறது. குறிப்பாக பாதாமில் வைட்டமின் பி2, வைட்டமின் ஈ, பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து, மாங்கனீசு, புரோட்டீன், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் காப்பர் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு நிறைந்திருப்பதால், இது இதயத்தை ஆரோக்கியத்துடன் வைப்பதில் பெரிதும் துணையாக உள்ளது. இவ்வாறு பாதாமின் நன்மைகளைப் பற்றி சொன்னால் சொல்லிக் கொண்டே போகலாம். ஏனெனில் அதன் நன்மைக்கு எல்லையே இல்லை. இப்போது அந்த பாதாமை தினமும் சாப்பிடுவதால், உடலில் உண்டாகும் 15 நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.



ஞாபகம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்!
[Saturday, 2013-05-18 12:51:52]

"வீட்டுக்கு வரும்போது தேங்காய் எண்ணை வாங்கிக் கொண்டு வரச் சொல்லி எத்தனை தடவை சொன்னாலும் இந்த மனிசன் மறந்து போட்டு வந்து நிற்கிறார்" என அம்மாவிடம் பேச்சு வாங்கும் அப்பாவைப் பார்க்க பாவமாக இருக்கும். ஞாபகம் என்பது எவ்வளவு அவசியம் என்பதை பரீட்சை எழுதும் மாணவர்கள் நன்கு உணர்ந்திருப்பார்கள். வினாத்தாள் கையிலிருக்கும் போது நினைவுக்கு வராத விடைகள் பரீட்சை மண்டபத்திற்கு வெளியே வந்ததும் ஞாபகத்திற்கு வரும்போது "அடடே" என்று சொல்வதைத் தவிர என்ன செய்ய முடியும். இப்படியான நினைவுகள் என்பன நீண்ட காலத்திற்கு சேமிக்கப்பட்ட தகவல்கள் என விஞ்ஞானிகள் வரையறை செய்வார்கள். கண், காது, மூக்கு, நாக்கு, உடல் தொடுகை போன்ற பல்வேறு புலன்கள் மூலம் கிடைக்கும் தகவல்கள் மூளைகள் மூலம் கிடைக்கும் தகவல்கள் மூளையில் சேமிக்கப்படும் போது அது ஞாபகத்திற்கு அடித்தளமாகிறது.



புதிய வகை "டெஸ்ட் டியூப் பேபி" சிகிச்சை முறையை கண்டுபிடித்தனர் பிரிட்டிஷ் விஞ்ஞானிகள்!
[Friday, 2013-05-17 22:26:56]

இயற்கையாக பிள்ளை பெற்றுக் கொள்வதில் பிரச்சினை உள்ள ஜோடிகளில் ஆணின் விந்தையும் பெண்ணின் முட்டையையும் உடலுக்கு வெளியில் சேர்த்து கருவை உருவாக்கும் ஐ வி எஃப் சிகிச்சை முறையில், வெற்றி வாய்ப்பை கணிசமான அளவில் அதிகரிக்கக்கூடியது என தாம் நம்பும் தொழில்நுட்பம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளதாக பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த வகையில் கரு உருவாக்கப்படுகின்ற பிள்ளையைத்தான் டெஸ்ட் டியூப் பேபி என்று சொல்வார்கள்.



சொந்த பந்தத்தில் இருந்த மணமக்கள் தேர்வு காலப்போக்கில் மாறியது - திருமணப் பொருத்தம் பற்றி சில தகவல்கள்!
[Friday, 2013-05-17 22:03:59]

திருமணத்திற்கு மணமக்கள் தேர்வு செய்வது முன்பெல்லாம் உள்ளூரில் சொந்த பந்தத்தில் என்றுதான் இருந்தது. காலப்போக்கில் இந்த நிலை மாறி கல்வி, வேலைவாய்ப்பு என்று நாட்டின் பல பகுதிக்கும் இளைஞர்கள் செல்லும் நிலை ஏற்பட்டு விட்டதால் மணமக்கள் தேர்வு செய்ய அங்கங்கேயுள்ள திருமணத் தகவல் நிலையங்களை நாட வேண்டிய அவசியம் பெற்றோர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. மணமக்களின் பெற்றோர்கள் புதிதாக அறிமுகம் ஆவதால் அவர்களைப் பற்றியும் மணமகன் அல்லது மணமகள் பற்றியும் முழுமையாக தீர விசாரித்திடுவது மிகவும் முக்கியம்!



உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கும் சில முறையற்ற பழக்கங்கள்!
[Friday, 2013-05-17 17:22:45]

பெரும்பாலும் மன அழுத்தத்தை அதிகரிப்பதில் பழக்கவழக்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிலும் நம்மை ரிலாக்ஸ் செய்ய வைக்கும் என்று நினைத்து செய்யும் பழக்கவழக்கங்கள் தான் அதிக அளவில் மன அழுத்தத்தை தூண்டிவிடுகின்றன. உதாரணமாக, தொலைக்காட்சி பார்த்தால், மன அழுத்தம் குறையும் என்று மனதை ரிலாக்ஸ் செய்ய டிவியைப் பார்ப்போம். ஆனால் உண்மையில் அவை தான், மன அழுத்தத்தை அதிகரிக்கின்றன. அதிலும் இன்றைய அவசர உலகில் அனைத்தும் அவசரமாக நடப்பதால், வாழ்க்கையே ஒருவித அவசரத்தில் ஓடுகிறது. இதனால் மன அழுத்தம் மட்டுமின்றி, வேறு பல உடல்நல பிரச்சனைகளும் உண்டாகின்றன. எனவே மனதை அழுத்தமின்றி வைப்பதற்கு, ரிலாக்ஸ் செய்ய மேற்கொள்ளும் தவறான செயல்களை மேற்கொள்ளாமல் இருப்பதே, மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான சிறந்த வழியாகும். இப்போது மன அழுத்தம் குறையும் என்று நினைத்து செய்யும் தவறான பழக்கவழக்கங்கள் என்னவென்று பார்த்து, அவற்றை தவிர்த்து, மன அழுத்தத்தைக் குறைப்போம்.



கரு முட்டை மூலம் உயிர்ப் பிரதியாக்கம் - அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை!
[Friday, 2013-05-17 14:24:50]

மனிதக் கரு முட்டை ஒன்றை உயிர்ப் பிரதியாக்கம் மூலம் அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கிறார்கள். இதுவரை பிரிட்டிஷ் ஆய்வாளர்கள்தான் டோலி என்ற செம்மறி ஆட்டுக்குட்டியை 1996ஆம் ஆண்டில் உருவாக்கியிருந்தனர். அன்று முதல் அதே இனப்பெருக்க உயிர்ப் பிரதியாக்க வழிமுறைகளை பயன்படுத்தி மனித கலங்களை உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சித்து வந்தனர். மரபணுக்கூறுகள் (டி என் ஏ) அகற்றப்பட்ட ஒரு முட்டையினுள் வயதுக்கு வந்த ஒருவரின் கலத்தில் உள்ள பதார்த்தங்களை மாற்றீடு செய்ததாக ''ஒரேகொன்னை'' சேர்ந்த விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.



துல்லியமாக இலக்கு வைக்க பயன்படும் ஸ்மார்ட் ரைபிள்ஸ்!Top News
[Friday, 2013-05-17 13:19:08]

ஸ்மார்ட் ரைஃபில்ஸ் - இந்த அதி நவீன துப்பாக்கி மூலம் வைக்கப்படும் டார்கெட்டை துல்லியமாக நீங்கள் மட்டுமல்ல உங்கள் அருகில் இருக்கும் இன்னொருவரும் கணிக்க முடியும், இதன் வீடியோ டார்கெட் லென்ஸ் மூலம் அதன் மூலம் அந்த டார்கெட்டை கரெக்டாய் சுட முடியும் மற்றும் அதை உடனே வீடியோவாக வெப் தளத்திர்க்கும் சேர்க்கவும் முடியும். இப்படி உங்கள் துப்பாக்கியின் டார்க்கெட்டை இன்னொருவரும் பார்த்து அஸிஸ்ட் செய்வதனால் தவறு செய்ய வாய்ப்பில்லை.



LED விளக்குகள் கண்பார்வையை பறிக்கும் - ஆய்வில் தகவல்! Top News
[Thursday, 2013-05-16 18:17:38]

தற்போது மிக அதிகமாக பயன்படுத்திவரும் எல்இடி விளக்குகளால் மனிதர்களின் கண் பார்வைக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று ஸ்பெயின் நாட்டு ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பல ஆண்டுகளாக விலை குறைவான குண்டு பல்புகளைத்தான் மக்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால், இவை வெப்பத்தை அதிகளவில் உமிழ்வதாகவும், மின்சாரத்தை அதிகளவில் உறிஞ்சுவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு மாற்றாக எல்இடி எனப்படும், 'லைட் எமிட்டிங் டையோடு' விளக்குகள் அறிமுகம் ஆனது. இவை குண்டு பல்புகள் பயன்படுத்தும் மின்சாரத்தில் 5ல் ஒரு பகுதியை மட்டுமே பயன்படுத்துவதாகவும், சுற்றுச்சூழலுக்கு மிக சிறப்பானது என்றும் கூறப்பட்டது. இதனால், ஐரோப்பிய யூனியனில் பல ஆண்டுகளுக்கு முன்பே குண்டு பல்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுவிட்டது. இந்தியாவில் 2009ம் ஆண்டில் 100 வாட்ஸ் குண்டு பல்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது.



நடிகர் தனுஷுக்கு 3 படத்தில் இருந்த நோய் உங்களுக்கு இருக்கா? எப்படி கண்டுபிடிப்பது? இதை படியுங்கள்...
[Thursday, 2013-05-16 18:12:08]

"பைபோலார் டிஸ்ஆர்டர்" எனப்படும் இருமுனையப் பிறழ்வைப் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்? இது ஒரு விதமான மன அழுத்தமே. ஆனால் சற்று ஆபத்தானது. இதனை பற்றி சமீபத்தில் வந்த ஒரு தமிழ் படத்தில் கூட நாம் பார்த்திருப்போம். அது தான் நடிகர் தனுஷ் நடித்த "மூணு" திரைப்படம். இந்த படத்தில் தனுஷ் கூட இருமுனையப் பிறழ்வால் தான் பாதிக்கப்பட்டிருப்பார். இருமுனையப் பிறழ்வு என்பது அதிகப்படியான வெறி மற்றும் சோர்வு கோளாறான ஓர் மனநோய் ஆகும். இது பெயருக்கு ஏற்றது போல் இருமுனையப் பிறழ்வால் பாதிக்கப்பட்ட ஒருவரின் மனநிலையானது அதீத அளவில் ஊசலாடும். இது பல வாரங்கள் அல்லது மாதங்கள், ஏன் அதற்கும் மேலாக கூட நீடிக்கும். நூற்றில் ஒருவர் வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் இருமுனையப் பிறழ்வால் பாதிக்கப்படுவர். இது பொதுவாக டீன் ஏஜில் (விடலைப் பருவத்தில்) அல்லது அதற்கு பிறகு தான் ஆரம்பிக்கும். ஆனால் இது நாற்பது வயதிற்கு மேல் வருவது அபூர்வமே. இது ஆண் பெண் என்ற பேதமில்லாமல் இருவருக்கும் வரும் பொதுவான பாதிப்பாகும். இப்போது இந்த இருமுனையப் பிறழ்வு இருப்பதை உறுதி செய்யும் சில அறிகுறிகளை பார்க்கலாமா!



Gmail தரும் புத்தம் புதிய வசதி - மின்னஞ்சல் மூலமும் இனி பணம் அனுப்பலாம்!Top News
[Thursday, 2013-05-16 15:27:51]

ஜிமெயிலின் வாலட் சர்வீஸ் அனைவரும் அறிந்ததே. இப்போது ஜிமெயிலின் வாலட் இன்னுமொரு புது வசதியை செய்திருக்கிறது. அதாவது இனி உங்களது தெரிந்த / தெரியாத நண்பர்களுக்கும் பணம் ஜஸ்ட் ஒரு ஈமெயிலிலே அனுப்ப முடியும். அதாவது கம்போஸ் பட்டனை அழுத்தும் போது கீழே டாலர் சிம்பல் வரும் அதன் மூலம் எவ்வளவு அனுப்ப வேண்டுமோ அவ்வளவு அனுப்பினால் உங்கள் கிரடிட் கார்ட் அல்லது வங்கி கணக்கில் (ஏற்கனவே படத்தில் காட்டியிருப்பது போல் உள்ள ரெஜிஸ்ட்டர் செய்த வங்கி கணக்கு) இருந்து கழித்து கொள்வார்கள் அது போக இதற்க்கு சர்வீஸ் சார்ஜ் இல்லை.



மலேரியா நோய்க்காவி நுளம்புகளே மனித மணத்தால் அதிகம் கவரப்படுகின்றன - ஆய்வில் தகவல்!
[Thursday, 2013-05-16 15:16:31]

மலேரியா நோய்க் கிருமிகளை காவி வருகின்ற நுளம்புகள் (கொசுக்கள்) மிகவும் அதிகமாக மனித உடலின் மணத்தினால் கவரப்படுவதாக அது குறித்து ஆராயும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். மலேரியா நோய்க் கிருமியைக் காவி வரும் நுளம்பு, அந்தக் கிருமி இல்லாமல் வரும் நுளம்பைவிட மூன்று மடங்கு அதிகமாக மனித வியர்வை மணத்தினால் கவரப்படுவதாக அவர்கள் கூறுகிறார்கள். அதனால், இந்த கிருமிகளை காவி வருகின்ற நுளம்பினால் மனிதன் கடிபடும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகமாக இருப்பதாக நெதர்லாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இவ்வாறு நோய்க்கிருமிகளை காவிவரும் அந்த நுளம்புகள் அதிகம் கவரப்படுவதற்கு, அந்த நோய்க்கிருமிகளின் உயிர் வாழ்வதற்கான மற்றும் இனப்பெருக்கம் செய்வதற்கான முயற்சியும் காரணமாக இருக்கலாம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.



பெண்களின் கண்களில் ஏற்படும் பிரச்சினைகளும் அவற்றிற்கான தீர்வுகளும்!
[Wednesday, 2013-05-15 22:22:07]

பெண் என்றால் கண்களுக்கு மைதீட்டவேண்டும். கண்களுக்கு மைபோடுவது நல்லது என்று பெரியவர்கள் கூறியிருக்கிறார்கள். நமது கண் இமைகளிலே எண்ணெய் உற்பத்தியாகிறது. Meibomian என்ற சுரப்பி கண் இமைகளில் ஆயிலை உற்பத்தி செய்கிறது. நாம் அடிக்கடி கண்களை சிமிட்டிக்கொண்டே இருக்கிறோமே, அது சிரமமின்றி வழுவழுப்பாக இயங்கவும், கண்ணீரை பலப்படுத்தவும் அந்த ஆயில் அவசியமாகிறது. கண்மையால் கண்களுக்கு அழகு கிடைக்கும் என்பது உண்மை. ஆனால் மையால் கண்களுக்கு ஆரோக்கியம் கிடைப்பதாக இதுவரை எந்த ஆய்வும் கூறவில்லை. 'பெண்கள் எதற்கெடுத்தாலும் அழுவார்கள். அது அவர்கள் பலகீனம்' என்று சொல்வார்கள். ஒருவிதத்தில் பெண்களின் அழுகை அவர்கள் கண்களுக்கு நல்லது. துக்க அழுகை, விபத்து அழுகை, மிதமான அழுகை போன்ற ஒவ்வொன்றின்தன்மைக்கு ஏற்ப கண்ணீரின் ரசாயனதன்மை மாறும்.



பாதுகாப்பான முறையில் புளூடூத் சாதனங்களை பாவிப்பதற்கான சில வழிமுறைகள்!
[Wednesday, 2013-05-15 22:01:48]

நாம் கம்ப்யூட்டர்கள், பொழுதுபோக்கு சாதனங்கள், டெலிபோன் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது அவை தங்களுக்குள் பல வகைகளில் இணைத்துக் கொள்கின்றன. பலவித வயர்கள், கேபிள்கள், ரேடியோ சிக்னல்கள், இன்ப்ரா ரெட் கதிர்கள் எனப் பல வகைகளில் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது. ஆனால் புளுடூத் சாதனங்களை இணைப்பதில் தனி வழி கொண்டுள்ளது. குறைந்த மின் சக்தி பயன்பாடு, ஒரே நேரத்தில் எட்டு சாதனங்களுடன் தொடர்பு, எந்த வகையிலும் ஒன்றுக்கொன்று குறுக்கிட்டு செயல் இழக்காத நிலை, இணைந்திடும் சாதனங்கள் நேராக இருந்திடத் தேவையற்ற நிலை, 32 அடி வட்டத்தில் புளுடூத் தொழில் நுட்பம் கொண்ட எந்த சாதனத்தையும் கண்டு இணையும் லாகவம் எனப் பல ப்ளஸ் பாய்ண்ட்களை அடுக்கிக் கொண்டு செல்லலாம்.



சீன மருத்துவர்களால் ரொக்கட் தொழில்நுட்பத்தில் செயற்கை இதயம் உருவாக்கம்!Top News
[Wednesday, 2013-05-15 17:26:44]

சீன மருத்துவர்கள் ராக்கெட் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும் செயற்கை இதயத்தை உருவாக்கியுள்ளனர். டியான்ஜின் டொ இன்டர்நேஷனல் கார்டியாவாஸ்குலார் (Tianjin TEDA International Cardiovascular) மருத்துவமனை மருத்துவர்கள் இந்த செயற்கை இதயத்தை உருவாக்கியுள்ளனர். இந்த செயற்கை இதயம் செம்மறியாடு ஒன்றிற்கு 2 மாதங்களுக்கு முன்பு பொருத்தப்பட்ட நிலையில் அந்த ஆடு 62 நாட்களாக நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது. இதனால் மற்ற கண்டுபிடிப்புகளுடன் ஒப்பிடுகையில் இந்த செயற்கை இதயம் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. இந்த செயற்கை இதயம் சிறியதாகவும், எடை குறைந்ததாகவும், அதிக பாதுகாப்புடனும் உருவாக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.



உலகளாவிய இணையப் பாவனை தொடர்பான சில சுவாரஸ்யமான தகவல்கள்!
[Wednesday, 2013-05-15 15:57:45]

இன்டர்நெட் பயன்படுத்தும் மக்கள் எண்ணிக்கையில், இந்தியா, உலக அளவில், சீனா மற்றும் அமெரிக்காவை அடுத்து, மூன்றாவது இடத்தைக் கொண்டுள்ளது. ஆனால், இணையத்தைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை மிக, மிகக் குறைவாகவே உள்ளது. நூறில் 11 பேர் தான் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இது ஒரு கவலைப்படத்தக்க விஷயமாகும். இந்தியாவில், 1998 ஆம் ஆண்டில், 14 லட்சம் பேர் மட்டுமே இணைய இணைப்பினைக் கொண்டிருந்தனர். 2010 ஆம் ஆண்டில் தான், இது 10 கோடி என்ற எண்ணிக்கையைத் தாண்டியது. அதன்பின், சிறிது வேகமாகவே இந்த எண்ணிக்கை வளர்ந்தது. அண்மைக் காலத்திய கணக்கில், இது 12 கோடியாக இருந்தது. உலகின் மொத்த இன்டர்நெட் பயனாளர் எண்ணிக்கையில்,முதல் பத்து நாடுகளில் இந்தியா இடம் பிடித்தாலும், ஜனத்தொகையுடன் கணக்கிடுகையில், மிகவும் குறைவான விகிதத்திலேயே, இன்டர்நெட் பயனாளர்கள் உள்ளனர்.



மூளையின் செயற்பாடு பதின்ம வயதினரில் எப்படி இருக்கும்? ஆய்வில் இறங்கினர் ஆராய்ச்சியாளர்கள்!
[Wednesday, 2013-05-15 15:55:03]

பதின்பருவ வயதினரின் மூளை செயல்படும் விதத்தை அறிந்துகொள்ளும் ஒரு ஆழ்ந்த ஆய்வை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தொடங்கியிருக்கிறார்கள். 14லிருந்து 24 வயது வரையிலான 300 பேரின் மூளைகளை ஸ்கேன் செய்து பார்ப்பதன் மூலம், அவர்களது தன்னுணர்வான மற்றும் உணர்ச்சிகரமான நடத்தை எப்படி அவர்கள் வயதாகும்போது மாறுகிறது என்பதைக் கட்டுப்படுத்தும் மூளை இயக்க நுட்பங்களை அவர்கள் அடையாளம் காண முற்படுவார்கள். சில பதின்பருவத்தினர் ஏன் அவ்வப்போது 'உம்'மென்று இருக்கிறார்கள், பிறகு அந்த மனோநிலையிலிருந்து எப்படி விடுபடுகிறார்கள் என்பதை விளக்க இந்த ஆய்வு உதவும்.



செல்பேசி பாவனையின் பின்னாடி மறைந்திருக்கும் ஆபத்துக்கள்!
[Wednesday, 2013-05-15 15:52:27]

தற்போது செல்போன் இல்லாத கைகளை பார்க்கவே முடியாது. ஏனேனில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரது கைகளிலும் செல்போன் இருப்பதை காணலாம். இத்தகைய செல்போன் ஆரம்பத்தில் வெறும் தகவல் தொடர்பு சாதனமாக மட்டும் பயன்பட்டுவந்தது. ஆனால் தற்போது செல்போன் வழியாகவே நேரத்தைக் கடத்தும் பல பொழுதுபோக்குகள் வந்துள்ளன. இத்தகைய பொழுது போக்குகளால், எங்கு சென்றாலும், குழந்தைகளை அழைத்துச் செல்கின்றோமோ இல்லையோ, செல்போனை உடன் கொண்டு செல்கின்றனர். இத்தகைய செல்போன் உயிரை வாங்கும் ஒரு எமன் என்று சொல்லலாம். ஏனெனில் இந்த செல்போனால், உடலுக்கு பல பிரச்சனைகள் வருகின்றன. ஏனெனில் இதிலிருந்து வெளிவரும் கதிர்கள் மிகவும் ஆபத்தானவை. உடலுக்கு கொடிய தீங்கை விளைவிக்கக்கூடியவை.


Mahesan supramaniyam 031109
NIRO-DANCE-100213
Ramans2011
Suresh-remax-2013-01-01
RoyaShades-l2011(04-12-11)
Canada Kanthasamy Kovil
TDE_Computers2011
INNSYS-20120930
TamilsGuid-191012-2013
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com