Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 20, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
மால்வேர்களை (Malware) எதிர்கொள்ளும் முறை
[Thursday, 2012-08-02 21:20:56]
News Service

இன்றைய தகவல் தொழில் நுட்பம் பல்வேறு பிரிவுகளில் வளர்ந்து நம் அன்றாட வாழ்க்கைக்கு உதவி செய்து வருகிறது. இதன் வளர்ச்சியின் பரிமாணங்கள் ஒன்றுக் கொன்று தொடர்புடையதாய் பின்னப்பட்டு இருப்பதால் இந்த நெட்வொர்க்கிற்குள் மால் வேர் புரோகிராம் எனப்படும் நமக்குக் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் மிக எளிதாக வழி கண்டு நம் பயன்பாட்டினை முடக்குகின்றன.

  

அமெரிக்காவில் 50 சென்ட் வாங்கிக் கொண்டு அடுத்தவரின் கிரெடிட் கார்ட் தகவல்களைத் தர ஒரு கூட்டம் தலைமறைவாக இயங்குவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மற்றவர்களின் பெர்சனல் தகவல்களைக் கண்டுபிடிக்கப் பயன்படுத்துவது மால்வேர் எனப்படும் புரோகிராம்களே. இவற்றைக் கண்டறிந்து அது நம் கம்ப்யூட்டரை அடைவதைத் தடுப்பதையும் அதன் செயல்பாட்டினை முடக்குவதையும் பல நிறுவனங்கள் தங்கள் நோக்கமாகக் கொண்டு வர்த்தக ரீதியாகவும் செயல்பட்டு வருகின்றன.

இத்தகைய மோசமான மலிசியஸ் புரோகிராம்களின் தன்மையை இங்கு காணலாம். முதலில் இந்த வகை சாப்ட்வேர் பற்றிக் குறிப்பிடுகையில் பயன்படுத்தப்படும் சொற்கள் குறித்துக் காணலாம். மால்வேர் என்பது Malicious Software என்ற சொற்களின் சுருக்கம் ஆகும். கெடுதல் மற்றும் தீங்கு விளைவிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ள சாப்ட்வேர் என்று பொருள்படும். இதனை உருவாக்குபவர்களின் நோக்கம் அடுத்தவரின் கம்ப்யூட்டருக்குள் சென்று அவர்களின் பெர்சனல் தகவல்களை (பேங்க் எண், கிரெடிட் கார்ட் எண், பாஸ்வேர்ட் போன்றவை) கண்டறிவதற்காக உருவாக்கப்படுபவை.

Malcode என்பது Malicious Programming Code என்பதன் சுருக்கமாகும். இதனை Malwares payload என்று குறிப்பிடுவார்கள். மால்வேர் தொகுப்புகளுடன் சண்டையிட்டு அவற்றை அழிக்கும் அல்லது செயல்பாட்டினை முடக்கும் அனைத்து புரோகிராம்களும் ஆண்ட்டி மால்வேர் என அழைக்கப்படுகின்றன. ஆண்ட்டி வைரஸ் மற்றும் ஆண்ட்டி ஸ்பைவேர் அப்ளிகேஷன்கள் அனைத்தும் இந்த வகையைச் சேர்ந்தவை.

மால்வேர் ஒன்றின் முதல் நோக்கம் மீண்டும் மீண்டும் உருவாக்குவதே. கம்ப்யூட்டர் சிஸ்டத்திற்குக் கெடுதல் விளைவிப்பது, டேட்டாவினை அழிப்பது, பெர்சனல் மற்றும் இரகசியத் தகவல்களைத் திருடுவது என்பனவெல்லாம் இரண்டாம் பட்ச நோக்கங்களே. மேற்குறித்த விளக்கங்களை மனதில் கொண்டு மால்வேர் ஒன்றின் பரிமாணங்களைப் பார்க்கலாம்.

1.கம்ப்யூட்டர் வைரஸ்

மால்வேர்களில் இது முதல் வகை. இது கம்ப்யூட்டரைப் பாதித்து என்ன நோக்கத்திற்காக எழுதப்பட்டுள்ளதோ அந்த வேலையைச் செய்திடும். ஆனால் இது பரவுவதற்கு இன்னொரு புரோகிராம் அல்லது பைலின் துணை வேண்டும். பாதிப்பை ஏற்படுத்திய கம்ப்யூட்டரிலிருந்து இன்னொரு பாதிப்படையாத கம்ப்யூட்டருக்குச் செல்ல வேண்டும் என்றால் இயக்கக் கூடிய எக்ஸிகியூட்டபிள் பைல் ஒன்றின் பகுதியாகச் செல்ல வேண்டும்.

வைரஸ் புரோகிராம் ஒன்றில் பொதுவாக மூன்று பகுதிகள் இருக்கும். வைரஸ் பயணம் செய்திடும் புரோகிராம் இயக்கப்படுகையில் வைரஸ் புரோகிராமும் இயங்கி பரவுகிறது. வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்களின் கண்களில் சிக்காத வகையில் பல வகையான மறைப்புகளை வைரஸ் கொண்டிருக்கும்.

வைரஸின் நோக்கம். இது எது வேண்டுமானாலும் இருக்கலாம். கம்ப்யூட்டரின் செயல்பாட்டை முடக்குவது, டேட்டாவைத் திருடுவது, அழிப்பது என எதாக வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த வைரஸ் பைல்களின் சிக்னேச்சர் பைல் கோடினைக் கண்டறிந்துவிட்டால் அவற்றை அழிப்பதற்கான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் உருவாக்குவது மிக எளிது. முன்னணியில் இயங்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் தயாரிப்பு நிறுவனங்கள் இதைத்தான் செய்கின்றன.

2. கம்ப்யூட்டர் வோர்ம் (Computer Worm)

இவை வைரஸ்களைக் காட்டிலும் அதன் கட்டமைப்பில் சற்று நாசுவேலைகள் கொண்டவை. பயன்படுத்துபவர் இயக்காமலேயே தாங்களாகவே இயங்கி செயல்படக் கூடியவை. இந்த மால்வேர்கள் இணையம் வழியாக எளிதாகப் பரவுகின்றன. வோர்ம் மால்வேரில் நான்கு பிரிவுகள் இருக்கும். Penertration Tool என்னும் பிரிவு ஒரு கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் புரோகிராம்களில் மிகவும் பலமற்ற இடத்தைப் பார்த்து அதன் வழியாக நுழைந்துவிடும் செயலை மேற்கொள்ளும்.

Installer என்னும் அடுத்த பிரிவு கம்ப்யூட்டரில் வோர்ம் நுழைந்தவுடன் கெடுதல் விளைவிக்கும் மால்வேரின் பிரிவினை வேகமாக நுழைந்த கம்ப்யூட்டரில் பதிக்கிறது. இந்த பிரிவு வோர்ம் கம்ப்யூட்டரில் அமர்ந்தவுடன் அந்த கம்ப்யூட்டரின் நெட்வொர்க்கில் உள்ள மற்ற கம்ப்யூட்டர்கள் என்ன என்ன என்று கண்டறிகிறது.

இமெயில் முகவரிகள், இன்டர்நெட் தொடர்பில் நாம் மேற்கொள்ளும் பிற தளங்களின் முகவரிகள் ஆகியவை இதில் அடங்கும். Scanner என்னும் பிரிவு புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கம்ப்யூட்டர்கள் வோர்ம் புரோகிராமின் நோக்கத்தைச் செயல்படுத்த உகந்தவையா எனக் கண்டறியும்.

பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டரில் அமர்ந்து கொண்டு கெடுதல்களை ஏற்படுத்தும் பிரிவு. இது எது வேண்டுமானாலும் இருக்கலாம். தொலைவிலிருந்து இந்த கம்ப்யூட்டரைக் கட்டுப்படுத்தும் செயல்பாடாக இருக்கலாம். அல்லது கீ லாக்கர் போன்று கம்ப்யூட்டரில் ஏற்படுத்தும் கீ அழுத்தல்களை அப்படியே காப்பி செய்து அனுப்பும் செயல்பாடாக இருக்கலாம்.

இந்த வகையான வோர்ம்கள்தான் மிக அதிகமான எண்ணிக்கையில் இன்று உலா வருகின்றன. முதன் முதலில் 1988 ஆம் ஆண்டு Morris என்ற பெயரில் முதல் வோர்ம் வந்தது. அண்மையில் அதிகம் பேசப்பட்ட Conficker என்பது இந்த வோர்ம் வகையைச் சேர்ந்ததுதான்.

3. ட்ரோஜன் ஹார்ஸ் (Trojan Horse)

நாம் நம் அன்றாட வாழ்க்கையில் காணும் மிக நல்ல நண்பர்கள் இவர்கள். நல்லவர்கள் போல் நடித்து நம்மிடம் வந்து நம்மையே அழிக்கும் மால்வேர்களே ட்ரோஜன் ஹார்ஸ் என்பவை. கம்ப்யூட்டரில் உள்ள பிரபலமான புரோகிராம்களின் பெயருக்குத் தன் பெயரை மாற்றிக் கொள்ளும். இதனை ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் புரிந்து கொண்டால் உடனே தன்னையே கரப்ட் செய்து கொள்ளும்.

ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் இதன் சிக்னேச்சரை அறிந்து கொள்வதாகத் தெரிந்தால் அது முழுமையாக சிக்னேச்சரை அறியும் முன்பே அதனை வேறு கோடுக்கு மாற்றிவிடும்.

4. பேக் டோர் (The Unknown Backdoor)

மிக மோசமான கெடுதல் புரோகிராம். கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களை ஏமாற்றி, வேறு பரவலாகப் பயன்படுத்தப்படும் புரோகிராம்களின் பெயரால் அவர்களின் அனுமதியுடன் இன்ஸ்டால் செய்யப்பட்டு கம்ப்யூட்டரின் செயல்பாட்டை முடக்குவது இதன் நோக்கம்.

இது நுழைந்துவிட்டால் கம்ப்யூட்டருக்கு ஒரு பின்புற வழி கிடைத்து அதன் மூலம் தொலை தூரத்தில் உள்ள ஒருவன் நம் கம்ப்யூட்டரில் உள்ள தகவல்களை எடுத்துக் கொண்டிருப்பான். SubSeven, NetBus, Deep Throat, Back Orifice, மற்றும் Bionet போன்றவை இவ்வகையில் பிரபலமானவை.

5. அட்வேர் / ஸ்பை வேர் (Adware/Spyware)

பயன்படுத்துபவரின் அனுமதியின்றி பாப் அப் விளம்பரங்களை உருவாக்கித் தருவதுதான் அட்வேர். இலவச சாப்ட்வேர் ஒன்றின் உதவியாலேயே இவை இன்ஸ்டால் செய்யப்படுகின்றன. இவை பெரும்பாலும் நம் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் இடை இடையே வருவதனால் எரிச்சலைத் தருவதாகவே அமைகின்றன.

ஸ்பைவேர் என்பது நமக்குத் தெரியாமலேயே நம் கம்ப்யூட்டரிலிருந்து தகவல்களைத் திருடும் ஒரு மால்வேர் ஆகும். பல இலவச சாப்ட்வேர் தொகுப்புகள் இது போன்ற ஒரு ஸ்பைவேர் தொகுப்பினை தங்கள் புரோகிராமின் பே லோட் ஆக வைத்துக் கொண்டிருக்கின்றன.

6. ரூட்கிட்ஸ் (Rootkits)

இந்த வகை மால்வேர் புரோகிராம்கள் தனியாக ஒரு புரோகிராமினை நம் கம்ப்யூட்டருக்குள் வைத்து கெடுப்பதற்குப் பதிலாக நம் கம்ப்யூட்டரில் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் வேண்டத்தகாத மாற்றங்களை ஏற்படுத்தி நம்மை முடக்குகின்றன. இதில் பலவகை இருந்தாலும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இது தாக்கும் இட அடிப்படையில் இவை வகை பிரிக்கப்பட்டு அழைக்கப்படுகின்றன. Usermode, Kernelmode மற்றும் Firmware rootkits என்பதே இதன் வகைகளாகும். இதில் யூசர் மோட் கம்ப்யூட்டரில் பைல், சிஸ்டம் டிரைவ், நெட்வொர்க் போர்ட் ஆகியவற்றை மாற்றி பிரச்சினை ஏற்படுத்தும்.

7.கர்னல் மோட் ரூட்கிட் ( Kernelmode rootkit )

இவை ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலேயே மாறுதல்களை ஏற்படுத்துவதால் இதனால் ஏற்படும் அழிவினை சரி செய்தல் சிறிது கடினம்.

8. பைர்ம்வெர்வ் ரூட்கிட் ( Firmware rootkit)

ஒரு நிறுவனத்திற்கென தயாரிக்கப்பட்ட புரோகிராம்களில் மால்வேர் புரோகிராமின் கோட் வரிகள் பதிக் கப்படுதலை இது குறிக்கிறது. நிறுவன புரோகிராம் முடிக்கப்பட்டு கம்ப்யூட்டர் நிறுத்தப்படுகையில் அந்த புரோகிராமில் மால்வேர் புரோகிராமின் தீங்கு விளைவிக்கும் புரோகிராம் வரிகள் அதில் எழுதப்பட்டு பின் கெடுதலை விளைவிக்கின்றன.

9. மலிசியஸ் மொபைல் கோட் (Malicious mobile code)

ஒரு மால்வேர் புரோகிராமினை கம்ப்யூட்டர் ஒன்றில் பதிய வைத்திட இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது ரிமோட் சர்வர்களிலிருந்து தனிப்பட்ட கம்ப்யூட்டர்களுக்குத் தாவுகிறது. பெரும்பாலும் நெட்வொர்க் வழியாக கிடைக்கிறது. லோக்கல் கம்ப்யூட்டருக்குள் இறங்கிய பின்னரே இன்ஸ்டால் செய்யப்பட்டு தன் வேலையைக் காட்டுகிறது. இது ஏறத்தாழ ஒரு ட்ரோஜன் வைரஸ் போல செயல்படும்.

10. ஒருமுக பயமுறுத்தல் (Blended threat)

ஒரு மால்வேர் சில வேளைகளில் ஒரு முக பயமுறுத்தல் புரோகிராமாக மாறுகிறது. கம்ப்யூட்டரில் ஏற்படுத்தும் இழப்பு அதிகமாகிறது. கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராமில் பலவீனமான இடத்தின் வழியே மால்வேர் புரோகிராம்கள் நுழைகின்றன. இந்த வகை மால்வேர்கள் உள்ளே நுழைந்த பின்னர் இத்தகைய பலவீனமான இடங்களை உருவாக்குகின்றன. தாங்கள் பெருகுவதற்கும் புதுப்புது வழிகளைக் கையாள்கின்றன.

எப்படி எதிர்கொள்வது?

இந்த மால்வேர் புரோகிராம்கள் தோன்றுவதும் தொல்லை கொடுப்பதும் கம்ப்யூட்டர் உள்ளவரை இருந்து கொண்டு தான் இருக்கும். குறிப்பாக இதன் மூலம் பெரும் அளவில் பணம் ஈட்டலாம் என்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் நிச்சயமாய் இதற்கென பல கோஷ்டிகள் இயங்கிக் கொண்டு தான் இருப்பார்கள். உருவாகும் அனைத்து ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளும் இந்த மால்வேர் குறியீடுகளை அறிந்த பின்னரே அமைக்கப்பட முடியும் என்பதால் அவற்றிற்கு எந்தக் காலத்திலும் இவற்றினால் நூறு சதவிகித பாதுகாப்பினை நமக்குத் தர முடியாது.

ஆப்பரேட்டிங் சிஸ்டம் அமைப்பவர்களும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் அமைப்பவர்களும் தங்களுடைய கட்டமைப்பை எந்த இடத்திலும் பலவீனமாக இல்லாமல் அமைத்தால் தான் இந்த மால்வேர்களிடமிருந்து தப்பிக்க முடியும். எனவே கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர் அனைவரும் தங்களுடைய கம்ப்யூட்டரை இத்தகைய தாக்குதல்களிலிருந்து தப்பிக்கும் வழி குறித்து எந்த நேரமும் கவனமாய் இருந்து அதற்கான வழிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

முகத்திற்கு பொலிவு தரும் வித்தை பூசணிக்காயிடம் உண்டு - அறிவீர்களா?
[Monday, 2013-05-20 21:27:44]

பூசணிக்காயில் வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளன. அதிலும் இதில் உள்ள ஆல்பா மற்றும் பீட்டா கரோட்டீன், ரெட்டினோயிக் ஆசிட் போன்றவை, சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கவும், பழுப்பு நிற சருமத்தை பொலிவாக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும்.

* பூசணிக்காயின் கூழை எடுத்து, தினமும் முகத்தில் தேய்த்து 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் பொலிவாக இருக்கும்.



நீங்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள் இருக்க கவலை எதற்கு?
[Monday, 2013-05-20 19:14:03]

உங்கள் பரம்பரையில் யாரேனும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனரா? அல்லது நீங்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? கவலை வேண்டாம். ஏனெனில் பெரும்பாலானோருக்கு புற்றுநோயால் இறப்பு ஏற்படுவதற்கு காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை தான். ஆம், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களானாலும் சரி, புற்றுநோய் வராமல் இருப்பதற்கும் சரி, ஆரோக்கியமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கம், தினந்தோறும் உடற்பயிற்சி போன்றவற்றை பின்பற்றினால், நிச்சயம் புற்றுநோயின் ஆபத்தில் இருந்து தப்பிக்கலாம். அந்த வகையில் ஒருசில உணவுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் சிறந்ததாக உள்ளன. நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மூலம், உடலில் எந்த ஒரு நோய் வந்தாலும், எளிதில் குணமாக்கலாம். மேலும் குடிப்பழக்கம் மற்றும் புகைப்பிடித்தல் இருந்தால், புற்றுநோய் இன்னும் தீவிரமாகத் தான் இருக்கும். ஆனால் அத்தகையவற்றையும் ஒருசில உணவுகள் மூலம் கட்டுப்படுத்தலாம். இப்போது அத்தகைய புற்றுநோயை உண்டாக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போமா!



அதிவேகம் மற்றும் அதிக தூரத்திற்கு சமிக்ஞையை கொண்டு செல்லும் WiFi Router!
[Monday, 2013-05-20 15:29:49]

வைஃபை ரவுட்டரின் பிரச்சினை கீழே மாட்டினா மாடி ரூம்ல சிக்னலே வராது அதனால் அடிக்கடி ரவுட்டரை மாற்றி கொண்டே இருப்பார்கள் டெக்கீஸ். அது போக ஏற்கனவே ஸ்பீடு பத்தாது இதுல ரவுட்டர் கவரேஜ் வேற சொதப்பினா எப்படி இருக்கும்? இதற்க்கு ஆப்பு வைக்கும் போல ஒரு நிகழ்வு அதான் உலகத்தின் அதி வேக அதிக பேன்ட்வித் கொண்ட ஒரு வைஃபை ர்வுட்டரை ஜெர்மனியின் ஃபிரான்ஹோஃபர் இன்ஸ்டிட்யூட் கண்டு பிடித்திருக்கிறார்கள் இந்த ரவுட்டர் 1 கிலோ மீட்டர் வரை கவரேஜ் செய்வது மட்டுமில்லாமல் இதன் வேகம் 40 கிகாபைட்ஸ். இதன் மூலம் இரண்டு மணி நேரம் ஓடக்கூடிய திரைப்படத்தை 1 நொடி ஆமாமுங்கோ - வெறும் ஒரு நொடியில் டவுன்லோட் செய்யலாம்.



8வது பிறந்த தினத்தை கொண்டாடுகின்றது யூ டியூப் - புதிய மென்பொருளும் அறிமுகம்!
[Monday, 2013-05-20 15:17:18]

முதற்தர வீடியோ பகிரும் தளமாகக் காணப்படும் YouTube தளத்திலிருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன. இவற்றின் வரிசையில் தற்போது Visual Youtube Downloader எனும் ஒரு புதிய மென்பொருளும் இணைந்துள்ளது. இலகுவான பயனர் இடைமுகம் மற்றும் விரைவான செயற்பாட்டினைக் கொண்ட இம்மென்பொருளானது உயர் தரம் வாய்ந்த வீடியோக்களை தரவிறக்கம் செய்ய பயன்படுத்தக்கூடியதாகக் காணப்படுவதனால் ஏனைய மென்பொருட்களிளை விடவும் சிறந்ததாக இருக்கின்றது.



போக்குவரத்து பொலிசார் வண்டியின் மீட்டரைப் பார்க்காமலே வேகத்தை கணிப்பது எப்படி என்று தெரியுமா?
[Sunday, 2013-05-19 21:32:57]

நம் வண்டியின் ஸ்பீடோ மீட்டரைப் பார்க்காமலேயே போக்குவரத்து காவல்துறையினர் அதிக வேகம் என்று அபராதம் கட்டச் சொல்வது எப்படி? நாம் போகும் வேகத்தை தூரத்திலிருந்தே அவர்கள் எப்படிக் கணிக்கின்றனர்? இந்த இடத்தில்தான் டாப்ளர் எஃபெக்ட் என்ற ஒப்பற்ற அறிவியல் அடிப்படை உதவுகிறது. அந்த அடிப்படையை ஆராய்ந்து உலகுக்குத் தந்தவர் ஆஸ்திரிய அறிவியல் மேதை கிறிஸ் டியன் டாப்ளர். ஆஸ்திரியாவின் சால்ஸ்பர்க் நகரில் 1803ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி பிறந்தவர் டாப்ளர். இவர் தந்தை, கல் உடைக்கும் தொழிலாளி. இளவயதில் நோஞ்சான் குழந்தையாக இருந்ததால், தந்தையின் தொழிலிலிருந்து தப்பித்தார் டாப்ளர். பள்ளிக் கல்வியை முடித்து, வியன்னாவிலும் சால்ஸ்பர்கிலும் வானியல் மற்றும் கணிதத்தைக் கற்றுத் தேர்ந்தார். பின் பிராகா பல்தொழில் நுட்பக் கல்லூரியில் பணியாற்றினார்.



குறைந்த விலையில் Asus அறிமுகப்படுத்தும் புதிய லேப்டொப்!Top News
[Sunday, 2013-05-19 12:31:10]

முதற்தர கணனி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான Asus நிறுவனமானது கணனி வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாப்பானதாகக் கருதப்படும் Ubuntu இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட மடிக்கணினிகளை அறிமுகப்படுத்துகின்றது. Asus 1015E எனும் பெயர் கொண்ட இக்கணனிகள் 1.1 GHz வேகத்தில் செயலாற்றவல்ல Intel Celeron dual-core processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியவற்றினைக் கொண்டு காணப்படுவதுடன் 10.1 அங்குல அளவு மற்றும் 1366 x 768 Pixel Resolution உடைய திரையினைக் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.



உடல் உபாதைகளை சரிசெய்யும் சில விசித்திரமான இயற்கை வைத்தியங்கள்!
[Sunday, 2013-05-19 11:46:29]

உடலில் பிரச்சனைகள் ஏற்படும் போது, அதனை குணப்படுத்துவதற்கு சிறந்த வழியென்றால் அது இயற்கை வைத்தியங்கள் தான். பணத்தை செலவழித்து மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதை விட, இயற்கை வைத்தியங்களை பின்பற்றினால், உடலில் உள்ள பிரச்சனைகள் நீங்குவதோடு, வேறு எந்த பிரச்சனையும் உடலைத் தாக்காமலும் தடுக்கும். ஆனால் கெமிக்கல் கலந்த மருந்து மாத்திரைகளை பின்பற்றினால், அது சில நேரங்களில் பக்க விளைவுகளை ஏற்படுத்தி, நிலைமையை இன்னும் மோசமாக்கச் செய்யும். இயற்கை வைத்தியம் என்றதும் வேறு ஏதோ ஒன்று என்று எண்ண வேண்டாம்.



கணினி வன்றட்டின் (Hard Disk) நிலையை அறிவதற்கு உதவும் மென்பொருள்!
[Sunday, 2013-05-19 08:28:30]

நம் கம்ப்யூட்டரின் ஹார்ட் ட்ரைவில், பைலை சேவ் செய்கையில், அல்லது புதிய புரோகிராம் ஒன்றை இன்ஸ்டால் செய்கையில், டிஸ்க்கில் உள்ள ட்ரைவில் இடம் பற்றாக்குறையாக உள்ளது என்ற செய்தி நமக்கு அச்சத்தைத் தரலாம். அப்படி என்ன நான் அதிகக் கோப்புகளை உருவாக்கி, அல்லது புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து, ஹார்ட் டிஸ்க்கின் இடத்தைப் பயன்படுத்தி விட்டேன் என ஆச்சரியப்படலாம். உடனே ட்ரைவின் ஒவ்வொரு பகுதியாகச் சென்று, எங்கு அதிக இடம் பயன்படுத்தப்பட்டு உள்ளது எனத் தேடித் தேடிப் பார்க்கலாம். உங்களின் இந்த நேரத்தில் உதவத்தான் WinDirStat என்ற புரோகிராம் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.



கறுப்பான சருமமா? பப்பாளி, ஆரேஞ்சு இருக்க கவலை எதற்கு?
[Saturday, 2013-05-18 19:52:16]

கருப்பான சருமம் கொண்ட பெண்கள் கோடை காலத்தில் தைரியமாய் வெளியே சுற்றலாம். ஏனெனில் அவர்களுக்கு வெப்பத்தினால் ஏற்படக்கூடிய கொப்புளங்கள், கோடைகால சரும பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. கருப்பான பெண்கள் களையாக மாற வழிகள்...

* முகத்திற்கு பேஷியல் போடும் முன்பு முகத்தில் உள்ள அழுக்குகளை துடைத்து எடுக்கவேண்டும். காய்ச்சாத பாலை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு சிறிதளவு பஞ்சில் நனைத்து முகத்தை துடைக்கவேண்டும்.



Lenovo அறிமுகப்படுத்தும் IdeaPad Yoga 11S ஹைப்பிரிட் மடிக்கணனிகள்!Top News
[Saturday, 2013-05-18 13:43:48]

முன்னணி கணினி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான Lenovo ஆனது IdeaPad Yoga 11S எனும் புத்தம் புதிய ஹைப்பிட் மடிக்கணனியினை அறிமுகப்படுத்தியுள்ளது. 11.6 அங்குல அளவுடையதும் 1366 x 768 Pixel Resolution உடையதுமான திரையினைக் கொண்டுள்ள இக்கணினியானது i3,i5 மற்றும் i7 Processor களை கொண்ட மூன்று பதிப்புக்களாக உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் பிரதான நினைவகமாக 4GB RAM இணைக் கொண்டுள்ளதுடன் சேமிப்பு நினைவகமாக 128GB Solid State Disk (SSD) இணையும் உள்ளடக்கியுள்ளன.



விதைகளின் ராஜாவான பாதாமை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!
[Saturday, 2013-05-18 13:09:52]

நட்ஸ்களின் ராஜாவாக விளங்கும் பாதாமில் நிறைய நன்மைகள் உள்ளங்கியுள்ளன. இந்த சூப்பர் நட்ஸ் உடல், சருமம் மற்றும் முடி என பலவற்றிற்கு ஆரோக்கியத்தை தருவதில் சிறந்ததாக உள்ளது. அதிலும் இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் உடலை வலுவுடனும், எந்த ஒரு நோயும் அண்டாமல் பாதுகாக்கிறது. குறிப்பாக பாதாமில் வைட்டமின் பி2, வைட்டமின் ஈ, பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து, மாங்கனீசு, புரோட்டீன், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் காப்பர் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு நிறைந்திருப்பதால், இது இதயத்தை ஆரோக்கியத்துடன் வைப்பதில் பெரிதும் துணையாக உள்ளது. இவ்வாறு பாதாமின் நன்மைகளைப் பற்றி சொன்னால் சொல்லிக் கொண்டே போகலாம். ஏனெனில் அதன் நன்மைக்கு எல்லையே இல்லை. இப்போது அந்த பாதாமை தினமும் சாப்பிடுவதால், உடலில் உண்டாகும் 15 நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.



ஞாபகம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்!
[Saturday, 2013-05-18 12:51:52]

"வீட்டுக்கு வரும்போது தேங்காய் எண்ணை வாங்கிக் கொண்டு வரச் சொல்லி எத்தனை தடவை சொன்னாலும் இந்த மனிசன் மறந்து போட்டு வந்து நிற்கிறார்" என அம்மாவிடம் பேச்சு வாங்கும் அப்பாவைப் பார்க்க பாவமாக இருக்கும். ஞாபகம் என்பது எவ்வளவு அவசியம் என்பதை பரீட்சை எழுதும் மாணவர்கள் நன்கு உணர்ந்திருப்பார்கள். வினாத்தாள் கையிலிருக்கும் போது நினைவுக்கு வராத விடைகள் பரீட்சை மண்டபத்திற்கு வெளியே வந்ததும் ஞாபகத்திற்கு வரும்போது "அடடே" என்று சொல்வதைத் தவிர என்ன செய்ய முடியும். இப்படியான நினைவுகள் என்பன நீண்ட காலத்திற்கு சேமிக்கப்பட்ட தகவல்கள் என விஞ்ஞானிகள் வரையறை செய்வார்கள். கண், காது, மூக்கு, நாக்கு, உடல் தொடுகை போன்ற பல்வேறு புலன்கள் மூலம் கிடைக்கும் தகவல்கள் மூளைகள் மூலம் கிடைக்கும் தகவல்கள் மூளையில் சேமிக்கப்படும் போது அது ஞாபகத்திற்கு அடித்தளமாகிறது.



புதிய வகை "டெஸ்ட் டியூப் பேபி" சிகிச்சை முறையை கண்டுபிடித்தனர் பிரிட்டிஷ் விஞ்ஞானிகள்!
[Friday, 2013-05-17 22:26:56]

இயற்கையாக பிள்ளை பெற்றுக் கொள்வதில் பிரச்சினை உள்ள ஜோடிகளில் ஆணின் விந்தையும் பெண்ணின் முட்டையையும் உடலுக்கு வெளியில் சேர்த்து கருவை உருவாக்கும் ஐ வி எஃப் சிகிச்சை முறையில், வெற்றி வாய்ப்பை கணிசமான அளவில் அதிகரிக்கக்கூடியது என தாம் நம்பும் தொழில்நுட்பம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளதாக பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த வகையில் கரு உருவாக்கப்படுகின்ற பிள்ளையைத்தான் டெஸ்ட் டியூப் பேபி என்று சொல்வார்கள்.



சொந்த பந்தத்தில் இருந்த மணமக்கள் தேர்வு காலப்போக்கில் மாறியது - திருமணப் பொருத்தம் பற்றி சில தகவல்கள்!
[Friday, 2013-05-17 22:03:59]

திருமணத்திற்கு மணமக்கள் தேர்வு செய்வது முன்பெல்லாம் உள்ளூரில் சொந்த பந்தத்தில் என்றுதான் இருந்தது. காலப்போக்கில் இந்த நிலை மாறி கல்வி, வேலைவாய்ப்பு என்று நாட்டின் பல பகுதிக்கும் இளைஞர்கள் செல்லும் நிலை ஏற்பட்டு விட்டதால் மணமக்கள் தேர்வு செய்ய அங்கங்கேயுள்ள திருமணத் தகவல் நிலையங்களை நாட வேண்டிய அவசியம் பெற்றோர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. மணமக்களின் பெற்றோர்கள் புதிதாக அறிமுகம் ஆவதால் அவர்களைப் பற்றியும் மணமகன் அல்லது மணமகள் பற்றியும் முழுமையாக தீர விசாரித்திடுவது மிகவும் முக்கியம்!



உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கும் சில முறையற்ற பழக்கங்கள்!
[Friday, 2013-05-17 17:22:45]

பெரும்பாலும் மன அழுத்தத்தை அதிகரிப்பதில் பழக்கவழக்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிலும் நம்மை ரிலாக்ஸ் செய்ய வைக்கும் என்று நினைத்து செய்யும் பழக்கவழக்கங்கள் தான் அதிக அளவில் மன அழுத்தத்தை தூண்டிவிடுகின்றன. உதாரணமாக, தொலைக்காட்சி பார்த்தால், மன அழுத்தம் குறையும் என்று மனதை ரிலாக்ஸ் செய்ய டிவியைப் பார்ப்போம். ஆனால் உண்மையில் அவை தான், மன அழுத்தத்தை அதிகரிக்கின்றன. அதிலும் இன்றைய அவசர உலகில் அனைத்தும் அவசரமாக நடப்பதால், வாழ்க்கையே ஒருவித அவசரத்தில் ஓடுகிறது. இதனால் மன அழுத்தம் மட்டுமின்றி, வேறு பல உடல்நல பிரச்சனைகளும் உண்டாகின்றன. எனவே மனதை அழுத்தமின்றி வைப்பதற்கு, ரிலாக்ஸ் செய்ய மேற்கொள்ளும் தவறான செயல்களை மேற்கொள்ளாமல் இருப்பதே, மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான சிறந்த வழியாகும். இப்போது மன அழுத்தம் குறையும் என்று நினைத்து செய்யும் தவறான பழக்கவழக்கங்கள் என்னவென்று பார்த்து, அவற்றை தவிர்த்து, மன அழுத்தத்தைக் குறைப்போம்.



கரு முட்டை மூலம் உயிர்ப் பிரதியாக்கம் - அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை!
[Friday, 2013-05-17 14:24:50]

மனிதக் கரு முட்டை ஒன்றை உயிர்ப் பிரதியாக்கம் மூலம் அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கிறார்கள். இதுவரை பிரிட்டிஷ் ஆய்வாளர்கள்தான் டோலி என்ற செம்மறி ஆட்டுக்குட்டியை 1996ஆம் ஆண்டில் உருவாக்கியிருந்தனர். அன்று முதல் அதே இனப்பெருக்க உயிர்ப் பிரதியாக்க வழிமுறைகளை பயன்படுத்தி மனித கலங்களை உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சித்து வந்தனர். மரபணுக்கூறுகள் (டி என் ஏ) அகற்றப்பட்ட ஒரு முட்டையினுள் வயதுக்கு வந்த ஒருவரின் கலத்தில் உள்ள பதார்த்தங்களை மாற்றீடு செய்ததாக ''ஒரேகொன்னை'' சேர்ந்த விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.



துல்லியமாக இலக்கு வைக்க பயன்படும் ஸ்மார்ட் ரைபிள்ஸ்!Top News
[Friday, 2013-05-17 13:19:08]

ஸ்மார்ட் ரைஃபில்ஸ் - இந்த அதி நவீன துப்பாக்கி மூலம் வைக்கப்படும் டார்கெட்டை துல்லியமாக நீங்கள் மட்டுமல்ல உங்கள் அருகில் இருக்கும் இன்னொருவரும் கணிக்க முடியும், இதன் வீடியோ டார்கெட் லென்ஸ் மூலம் அதன் மூலம் அந்த டார்கெட்டை கரெக்டாய் சுட முடியும் மற்றும் அதை உடனே வீடியோவாக வெப் தளத்திர்க்கும் சேர்க்கவும் முடியும். இப்படி உங்கள் துப்பாக்கியின் டார்க்கெட்டை இன்னொருவரும் பார்த்து அஸிஸ்ட் செய்வதனால் தவறு செய்ய வாய்ப்பில்லை.



LED விளக்குகள் கண்பார்வையை பறிக்கும் - ஆய்வில் தகவல்! Top News
[Thursday, 2013-05-16 18:17:38]

தற்போது மிக அதிகமாக பயன்படுத்திவரும் எல்இடி விளக்குகளால் மனிதர்களின் கண் பார்வைக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று ஸ்பெயின் நாட்டு ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பல ஆண்டுகளாக விலை குறைவான குண்டு பல்புகளைத்தான் மக்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால், இவை வெப்பத்தை அதிகளவில் உமிழ்வதாகவும், மின்சாரத்தை அதிகளவில் உறிஞ்சுவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு மாற்றாக எல்இடி எனப்படும், 'லைட் எமிட்டிங் டையோடு' விளக்குகள் அறிமுகம் ஆனது. இவை குண்டு பல்புகள் பயன்படுத்தும் மின்சாரத்தில் 5ல் ஒரு பகுதியை மட்டுமே பயன்படுத்துவதாகவும், சுற்றுச்சூழலுக்கு மிக சிறப்பானது என்றும் கூறப்பட்டது. இதனால், ஐரோப்பிய யூனியனில் பல ஆண்டுகளுக்கு முன்பே குண்டு பல்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுவிட்டது. இந்தியாவில் 2009ம் ஆண்டில் 100 வாட்ஸ் குண்டு பல்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது.



நடிகர் தனுஷுக்கு 3 படத்தில் இருந்த நோய் உங்களுக்கு இருக்கா? எப்படி கண்டுபிடிப்பது? இதை படியுங்கள்...
[Thursday, 2013-05-16 18:12:08]

"பைபோலார் டிஸ்ஆர்டர்" எனப்படும் இருமுனையப் பிறழ்வைப் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்? இது ஒரு விதமான மன அழுத்தமே. ஆனால் சற்று ஆபத்தானது. இதனை பற்றி சமீபத்தில் வந்த ஒரு தமிழ் படத்தில் கூட நாம் பார்த்திருப்போம். அது தான் நடிகர் தனுஷ் நடித்த "மூணு" திரைப்படம். இந்த படத்தில் தனுஷ் கூட இருமுனையப் பிறழ்வால் தான் பாதிக்கப்பட்டிருப்பார். இருமுனையப் பிறழ்வு என்பது அதிகப்படியான வெறி மற்றும் சோர்வு கோளாறான ஓர் மனநோய் ஆகும். இது பெயருக்கு ஏற்றது போல் இருமுனையப் பிறழ்வால் பாதிக்கப்பட்ட ஒருவரின் மனநிலையானது அதீத அளவில் ஊசலாடும். இது பல வாரங்கள் அல்லது மாதங்கள், ஏன் அதற்கும் மேலாக கூட நீடிக்கும். நூற்றில் ஒருவர் வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் இருமுனையப் பிறழ்வால் பாதிக்கப்படுவர். இது பொதுவாக டீன் ஏஜில் (விடலைப் பருவத்தில்) அல்லது அதற்கு பிறகு தான் ஆரம்பிக்கும். ஆனால் இது நாற்பது வயதிற்கு மேல் வருவது அபூர்வமே. இது ஆண் பெண் என்ற பேதமில்லாமல் இருவருக்கும் வரும் பொதுவான பாதிப்பாகும். இப்போது இந்த இருமுனையப் பிறழ்வு இருப்பதை உறுதி செய்யும் சில அறிகுறிகளை பார்க்கலாமா!



Gmail தரும் புத்தம் புதிய வசதி - மின்னஞ்சல் மூலமும் இனி பணம் அனுப்பலாம்!Top News
[Thursday, 2013-05-16 15:27:51]

ஜிமெயிலின் வாலட் சர்வீஸ் அனைவரும் அறிந்ததே. இப்போது ஜிமெயிலின் வாலட் இன்னுமொரு புது வசதியை செய்திருக்கிறது. அதாவது இனி உங்களது தெரிந்த / தெரியாத நண்பர்களுக்கும் பணம் ஜஸ்ட் ஒரு ஈமெயிலிலே அனுப்ப முடியும். அதாவது கம்போஸ் பட்டனை அழுத்தும் போது கீழே டாலர் சிம்பல் வரும் அதன் மூலம் எவ்வளவு அனுப்ப வேண்டுமோ அவ்வளவு அனுப்பினால் உங்கள் கிரடிட் கார்ட் அல்லது வங்கி கணக்கில் (ஏற்கனவே படத்தில் காட்டியிருப்பது போல் உள்ள ரெஜிஸ்ட்டர் செய்த வங்கி கணக்கு) இருந்து கழித்து கொள்வார்கள் அது போக இதற்க்கு சர்வீஸ் சார்ஜ் இல்லை.


TDE_Computers2011
RoyaShades-l2011(04-12-11)
Mahesan supramaniyam 031109
Ramans2011
NIRO-DANCE-100213
Canada Kanthasamy Kovil
Suresh-remax-2013-01-01
INNSYS-20120930
TamilsGuid-191012-2013
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com