Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
June 19, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
வடமாநிலங்களில் மீண்டும் மின்தடை - முடங்கியது ரயில் சேவை!
[Tuesday, 2012-07-31 17:01:20]
News Service

கடுமையான மின் தட்டுபாட்டால் டில்லி உட்பட பல வடமாநிலங்களில் மீண்டும் மின்சாரம் தடைபட்டு இருக்கிறது. இதனால் மெட்ரோ ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

  

தலைநகர் டில்லி, அரியானா, பஞ்சாப், ஜம்மு - காஷ்மீர், ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசத்தின் மேற்குப் பகுதிகளில், நேற்று அதிகாலை இரண்டு மணி முதல் திடீரென இருளில் மூழ்கின. ஒரே நேரத்தில் அனைத்து மாநிலங்களிலும் மின்சாரம் தடைபட்டுப் போனது.

வட மாநிலங்கள் அனைத்திலும், 100க்கு 100 சதவீதம் ரயில்கள் மின்சாரம் மூலமாகவே இயங்குகின்றன. இந்த மின் தடையால், எல்லா ரயில்களும் அந்தந்த இடங்களில் அப்படியே நின்று போயின. கிட்டத்தட்ட அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை போல உருவாகி விட்டதால், மக்கள் மத்தியில் அச்சமும், பீதியும் ஏற்பட்டது. இந்த மின்சார தடை காலை 10 மணிவரை நீடித்தது.

வட மாநிலங்களுக்கு மின்சாரத்தை அளிக்கும், "நார்தன் கிரிட்டில்' ஏற்பட்ட கோளாறு காரணமாகவே மின் தடை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. வட மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்கும், "நார்தன் கிரிட்' எனப்படும் மின் தொகுப்பானது, கூடுதல் பளு தாங்க முடியாமல் போனதே இதற்கு காரணம் என, மத்திய அரசு தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் இன்று மதியம் 1.30 மணிக்கு மேல் டில்லி, உ.பி., அரியானா, அசாம் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட 16 மாநிலங்களில் மீண்டும் மின் தடை ஏற்பட்டது. வடமாநிலங்களில் உள்ள மின்தொகுப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த மின் பிரச்னை ஏற்பட்டுள்ளது. மின்தடை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில் சுமார் 60கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

மின்தடை பிரச்னை காரணமாக 3 மண்டலங்களில் சுமார் 300 ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மெட்ரோ ரயில் சேவையும் நிறுத்தப்பட்டு இருக்கிறது. மின்தடையால் ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ரயிலுக்கு மாற்றாக பிற போக்குவரத்தான பஸ், டாக்ஸி போன்றவற்றை மக்கள் அதிகம் நாட தொடங்கியுள்ளனர். இதனால் டில்லியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மின்தடை காரணமாக மேற்கு வங்க அரசு தனது பணியாளர்களுக்கு அலுவலக நேரம் முடிவதற்கு முன்னதாகவே விடுமுறை அளிப்பதாக அறிவித்துள்ளது. வடமாநிலங்களை ஆட்டிபடைக்கும் மின் தட்டுபாட்டை போக்க உரிய நடவடிக்கை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருவதாகவும், இன்னும் சில மணி நேரங்களில் இப்பிரச்னையும் தீரும் என மத்திய மின்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

கனிமொழிக்காக அன்புமணியிடம் தூது போனார் ஸ்டாலின் - சோனியாவுடன் திமுக எம்.பிக்கள் பேச்சு!
[Wednesday, 2013-06-19 17:18:19]

தமிழ்நாட்டில் இருந்து பாராளுமன்ற மேல்சபைக்கு 6 எம்.பி.க்களை தேர்வு செய்வதற்காக வருகிற 27-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க., தே.மு.தி.க. இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. ஒரு எம்.பி.யை தேர்ந்து எடுக்க 34 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. சட்டசபையில் அ.தி.மு.க.கூட்டணிக்கு 170 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.எனவே அ.தி.மு.க. சார்பில் நிறுத்தப்பட்டுள்ள டாக்டர் மைத்ரேயன்,கே.ஆர்.அர்ஜூனன், த.ரத்தினவேல், இரா.லட்சுமணன் மற்றும் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த டி.ராஜா ஆகிய 5 பேரும் தலா 34 ஓட்டுகள் வாங்கி வெற்றி பெறுவது உறுதி.



பீகாரில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பியது நிதிஷ்குமார் அரசு!
[Wednesday, 2013-06-19 17:08:39]

பீகார் சட்டப்பேரவையில் இன்று நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள கட்சி வெற்றி பெற்றுள்ளது. பாஜவுடனான கூட்டணியை ஐக்கிய ஜனதா தளம் முறித்துக் கொண்ட நிலையில், இன்று பீகார் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பைக் கொண்டு வந்தார் முதல்வர் நிதிஷ் குமார்.நம்பிக்கை வாக்கெடுப்பு துவங்கியதும், பாஜக உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்ததை அடுத்து, 216 வாக்குகள் பெற்று, நிதிஷ்குமார் அரசு வெற்றி பெற்றது.



காஷ்மீர் முதல்வரையும் மத்திய அமைச்சரையும் விரட்டியடித்த பண்டிட்கள்!
[Wednesday, 2013-06-19 07:19:46]

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், சில ஆண்டுகளுக்கு முன் வரை, சகல பெருமையுடன் வாழ்ந்த பண்டிட் சமுதாயத்தினரை, பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் கைகோர்த்த உள்ளூர் சக்திகள் வெளியேற்றி விட்டன. அங்கு, பிராமணர்கள், பண்டிட்டுகள் என, அழைக்கப்படுகின்றனர். அகதிகள் முகாம்களில் வசிக்கும் அவர்கள், தங்களின் வழக்கமான, பூஜை, புனஸ்காரங்களை செய்யத் தவறுவதில்லை. நேற்று முன்தினம், துலாமல்லா என்ற இடத்தில் உள்ள, கிர் பவானி கோவிலில் பூஜை செய்து கொண்டிருந்த போது, அங்கு வந்த, மாநில முதல்வர், உமர் அப்துல்லாவை விரட்டி அடித்தனர்.



"மீண்டெழும் பாண்டியர் வரலாறு' நூலுக்கு தமிழக அரசு தடை - கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்று எழுத்தாளர்கள் கொதிப்பு!
[Wednesday, 2013-06-19 07:14:16]

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் எனக் கூறி, "மீண்டெழும் பாண்டியர் வரலாறு' என்ற புத்தகத்தை, தமிழக அரசு தடை செய்துள்ளது, கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது; தடையை நீக்க வேண்டும்' என, எழுத்தாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செந்தில் மல்லர் என்பவர் எழுதிய, "மீண்டெழும் பாண்டியர் வரலாறு' என்ற புத்தகம், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் எனக் கூறி, அப்புத்தகத்தை வெளியிட, தமிழக அரசு தடை விதித்துள்ளது. இப் புத்தகத்திற்கு தடை செய்திருப்பது, தமிழகத்தில் உள்ள புத்தக பிரியர்களுக்கு, பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.



மன்மோகன்சிங்கின் குடுகுடு அமைச்சரவை!
[Wednesday, 2013-06-19 07:07:49]

எல்லா கட்சிகளும், இளைஞர் அணி, இளைஞர் பாசறை, புதிய உறுப்பினர் சேர்க்கை என "இள ரத்தத்தை' பாய்ச்சிக்கொண்டு இருக்கும் போது, மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசில், வயதானவர்கள் நிறைய இடம் பெற்று, "தள்ளாடி'க் கொண்டு இருக்கிறது. கேபினட் அமைச்சர்களில் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட வயதானவர்களே அதிகம். இணை அமைச்சர்கள் மற்றும் தனிப்பொறுப்பு இணை அமைச்சர்கள் பட்டியலில் மட்டுமே, சற்று வயது குறைவானவர்கள் தென்படுகின்றனர்.கேபினட்டில் அதிக வயதானவராக தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை அமைச்சர் சிஷ்ராம் ஓலா இருக்கிறார். இவரது வயது 86.



வரலாறு காணாத மழையால் வடமாநிலங்கள் தவிப்பு - 131 பேர் பலி!
[Wednesday, 2013-06-19 07:02:48]

தீவிரமடைந்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக வடமாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கு ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம், நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு போன்றவற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 131 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளம் காரணமாக புனித தலங்களில் மொத்தம் 73,000 பேர் சிக்கியுள்ளனர். 500-க்கும் மேற்பட்ட யாத்ரீகர்களைக் காணவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக உத்தரகண்ட், இமாசலப்பிரதேசம், ஹரியாணா உள்ளிட்ட வடமாநிலங்களில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது.



ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கோளாறு - ஓடுபாதையில் கண்டுபிடிக்கப்பட்டதால் 182 பயணிகளும் தப்பினர்!
[Wednesday, 2013-06-19 06:48:41]

சென்னையில் இருந்து கொழும்பு செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 182 பயணிகளுடன் நேற்று மாலை 5.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார். உடனே விமானத்தை அங்கேயே நிறுத்திய விமானி, விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தெரிவித்தார். இதையடுத்து விமானத்தை இயக்க வேண்டாம். புறப்பட்ட இடத்திலேயே நிறுத்தும்படி கட்டுப்பாட்டு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.



வெள்ளத்தில் சிக்கிய இமாச்சல பிரதேச முதல்வர் 60 மணிநேரப் போராட்டத்தின் பின்னர் ஹெலி மூலம் மீட்பு!
[Tuesday, 2013-06-18 19:01:41]

வெள்ளத்தில் சிக்கிய இமாச்சல பிரதேச மாநில முதல்வர் வீரபத்திரசிங் 60 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டார். இவருடன் தவித்த 10 பேரும் பத்திரமாக மீட்டு கொண்டு வரப்பட்டனர். வட மாநிலங்களில் தற்போது பருவ மழை வெளுத்து வாங்கி வருகிறது. பஞ்சாப், அரியானா, குஜராத், உத்தர்கண்ட், டில்லி, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் கடும் மழை பெய்தது. இதில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 60 க்கும் மேற்பட்டோர் பலியாயினர். தொடர்ந்து இங்கு மீட்பு பணிகள் நடந்து வருகிறது. கங்கை, யமுனா நதியில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.



வெலிங்டன் இராணுவ முகாமை முற்றுகையிட்ட 400 பேர் கைது!
[Tuesday, 2013-06-18 18:56:45]

ஊட்டி வெலிங்டன் ராணுவ முகாமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய 15க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 400 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சட்டக்கல்லூரி மற்றும் கல்லூரி மாணவிகள் 15 பேரும் அடங்குவர்.இந்நிலையில், இதன் அடுத்தக் கட்டப் போராட்டம் குறித்து அனைத்துக் கட்சிக் குழுவுடன் கூடி விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இது குறித்து, பெரியார் தி.க.வின் ராமகிருஷ்ணன் கூறுகையில்,காங்கிரஸ் கட்சி அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்.



இறந்துபோன அர்ச்சகர் மறுநாள் உயிருடன் எழுந்தார் - இராமநாதபுரத்தில் பரபரப்பு!
[Tuesday, 2013-06-18 18:42:29]

ராமநாதபுரம் அருகே இறந்து போனதாகக் கருதப்பட்ட ஒருவர் உயிர் பிழைத்து மீண்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் சிருங்கேரி சங்கரமடம் வடக்கு தெருவில் வசித்து வருபவர் ரமணா ஐயர் என்பவரின் மகன் ரவி சாஸ்திரி(45).இவர், தேவிப்பட்டனம் திலகேஸ்வர சுவாமி கோயிலில் அர்ச்சகராக உள்ளார். கடந்த 13 ம் தேதி இதயக் கோளாறு காரணமாக இவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். இந்நிலையில் இதயக் கோளாறு காரணமாக 16ம் தேதி உயிரிழந்தார் என்று அறிவிக்கப்பட்டது.



காங்கிரசின் ஆதரவை நாடுகிறது தேமுதிக - எம்எல்ஏக்களை ஞானதேசிகனிடம் தூது அனுப்பினார் விஜயகாந்த்!
[Tuesday, 2013-06-18 18:38:18]

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வருகிற 27 ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேமுதிக சார்பில் ஏ.ஆர் இளங்கோவன் வேட்பாளராக நிறூத்தப்பட்டுள்ளார்.இந் நிலையில் இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனை சத்தியமூர்த்தி பவனில் தே.மு.தி.கவை சேர்ந்த அனகை முருகேசன், பாஸ்கர், அருண் சுப்பிரமணியன், முத்துக்குமார், மனோகர் ஆகிய 5 எம்.எல்.ஏக்கள் சந்தித்து மாநிலங்கள தேர்தலில் தங்கள் வேட்பாளருக்கு ஆதரவு தரும்படி கோரிக்கை வைத்தனர்.அவர்களிடம் மேலிடத்தில் கேட்டு முடிவைத் தெரிவி்ப்பதாக ஞானதேசிகன் கூறி உள்ளதாக கூறப்பட்டுகிறது.



சஞ்சய் தத் ஒருமாத சிறைவாசம் நிறைவு - இனிமேல் தான் உண்மையான சோதனை!
[Tuesday, 2013-06-18 18:36:52]

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், சிறையில் அடைக்கப்பட்டு, ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, கோர்ட் உத்தரவின் படி, இனி அவருக்கு வீட்டிலிருந்து உணவு, மின் விசிறி, படுக்கை ஆகியவை வழங்கப்பட மாட்டாது. மாதம் ஒரு முறை அவரது உறவினர்கள் மட்டுமே அவரை சிறையில் சந்திக்க முடியும்.மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களின் போது, ஆயுதம் வைத்திருந்த குற்றத்திற்காக, நடிகர் சஞ்சய் தத்துக்கு, ஐந்தாண்டு சிறை தண்டனை வழங்கி, மும்பை, "தடா' கோர்ட் தீர்ப்பளித்தது. ஏற்கனவே, ஒன்றரை ஆண்டு சிறை வாசத்தை முடித்து விட்டதால், கடந்த மாதம் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட சஞ்சய், மேலும், மூன்றரை ஆண்டு சிறையில் இருக்க கட்டாயம் ஏற்பட்டுள்ளது.



இலங்கை தமிழர்கள் அமைதியாக வாழ்வதற்கு அனைத்து முயற்சிகளையும் இந்தியா மேற்கொள்கிறது! - கருணாநிதிக்கு மன்மோகன் கடிதம்
[Tuesday, 2013-06-18 07:09:19]

இலங்கை தமிழர்கள் அமைதியாக வாழ்வதற்கான வழிவகைகள் காணப்படும். இந்த இலக்கை அடைவதற்கான எல்லா முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம் என்று திமுக தலைவர் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.இலங்கை தமிழர்களின் உரிமைகள், வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் விஷயத்தில் தலையிட வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு அதிகாரத்தை பெற்றுத்தரும் 13வது அரசியல் சட்ட திருத்தத்தை ரத்து செய்யும் முயற்சியை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு திமுக தலைவர் கருணாநிதி கடந்த 9ம் தேதி எழுதிய கடிதத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதற்கு பிரதமர் மன்மோகன் சிங் பதில் அனுப்பியுள்ளார்.



சுதர்சன நாச்சியப்பன் உள்ளிட்ட 8 பேருக்கு மத்திய அமைச்சர் பதவி!
[Tuesday, 2013-06-18 07:01:22]

மத்திய அமைச்சரவை நேற்று மாற்றியமைக்கப்பட்டது. புதிதாக 8 அமைச்சர்கள் பதவியேற்றனர். தமிழகத்தை சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன் இணை அமைச்சரானார். ஜனாதிபதி மாளிகையில் நேற்று மாலையில் நடந்த நிகழ்ச்சியில் ஆஸ்கர் பெர்னாண்டஸ், கிரிஜா வியாஸ், தமிழகத்தை சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன் உட்பட 8 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.புதிய அமைச்சர்களில் ஆஸ்கர் பெர்னாண்டஸ், கிரிஜா வியாஸ், சிஸ்ராம் ஓலா, கே.எஸ்.ராவ் ஆகியோர் கேபினட் அமைச்சர்கள். சுதர்சன நாச்சியப்பன், ஜே.டி. சீலம், மாணிக்ராவ் காவிட், சந்தோஷ் சவுத்ரி ஆகியோர் இணை அமைச்சர்கள்.



இலங்கைப் படையினருக்கு பயிற்சி அளிப்பதற்கு எதிராக இன்று போராட்டம் - வெலிங்டனில் இராணுவத்தினர், பொலிசார் குவிப்பு!
[Tuesday, 2013-06-18 06:56:58]

இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதை எதிர்த்து குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமை பல்வேறு அரசியல் கட்சிகள் இன்று முற்றுகையிடப்போவதாக அறிவித்துள்ளன. இதையடுத்து, ராணுவம் மற்றும் போலீசாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த வெலிங்டன் கன்டோன்மென்ட் பகுதியில் ராணுவ முகாம், ராணுவ பயிற்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் கடந்த 27ம் தேதி முதல் இலங்கை ராணுவ அதிகாரிகள் விங் கமாண்டர் எம்.எஸ். பண்டார தசநாயக, மேஜர் சி.எஸ்.ஹரிஷ்சந்திரா ஹெட்டியராச்சிகே ஆகியோருக்கு இந்திய ராணுவத்தினர் பயிற்சி அளித்து வருகின்றனர்.



வற்றிய மேட்டூர் அணைக்குள் தெரியும் கோவிலுக்குள் புராதன காலப் புதையல்?
[Tuesday, 2013-06-18 06:51:04]

மேட்டூர் அணை கட்டப்பட்ட போது மேச்சேரி அருகே இருந்த சோழப்பாடி வீரபத்திரன் கோயில் நீரில் மூழ்கியது. இதனால் அப்பகுதியில் வசித்த மக்கள், அங்கிருந்த கோயில் சிலைகளை எடுத்து சென்று, தற்போது தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சோழப்பாடியில் வைத்து புதிய கோயில்களை கட்டினர். மேட்டூர் நீர்தேக்கம் தற்போது வறண்டுள்ள நிலையில், கடந்த 80 ஆண்டுகளாக நீரில் மூழ்கியிருந்த இந்த கோயில் வெளியே தெரிகிறது. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயில் சுட்ட செங்கற்கள் மற்றும் சுண்ணாம்பு கலவையால், நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் முன் மண்டபம், நுழைவு வாயில், உள் மண்டபம், மூலஸ்தானம் ஆகிய நான்கு நிலைகளோடு அமைக்கப்பட்டுள்ளது.



சர்ச்சையில் சிக்கினார் ஷாருக்கான் - குழந்தையின் பாலினத்தை சட்டவிரோதமாக அறிந்தாரா?
[Tuesday, 2013-06-18 06:44:03]

பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மீது, மகாராஷ்டிரா மாநில கதிரியக்கவியல் நிபுணர்கள் சங்கத்தின் சார்பில், மாநில சுகாதாரத் துறை அமைச்சரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான், அண்மையில், தான் மூன்றுவது முறையாக தந்தையாகப் போவதாகக் கூறி, மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். ஷாருக் கான் மற்றும் அவரது மனைவி கவுரி ஆகியோர், வாடகைத் தாய் உதவியுடன், தங்களின் மூன்றாவது குழந்தையை பெற்றெடுக்கப் போவதாக, ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. அந்தக் குழந்தை, ஜூலை மாதம், முதல் வாரத்தில் பிறக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. அப்போது, தான் ஒரு ஆண் குழந்தைக்கு தந்தை ஆகப் போவதாக ஷாருக் கான், தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.



சுதர்சன நாச்சியப்பனுக்கும் அமைச்சர் பதவி?
[Monday, 2013-06-17 17:42:18]

மத்திய மந்திரிசபை மாற்றம் இன்றுமாலை நடைபெற உள்ளது.ரெயில்வே, நெடுஞ்சாலை, வீட்டுவசதி, ஊரக மேம்பாடு ஆகிய இலாகாக்களுக்கு புதிய மந்திரிகள் இன்று பொறுப்பு ஏற்க உள்ளனர். சிலரது இலாகா மாற்றம் செய்யப்பட உள்ளது. 10 முதல் 12 பேர் மத்திய மந்திரி சபையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் 8 பேர் புதுமுகங்கள். சிஸ்ராம்ஓலா, ஜெ.டி. சீலம், சுதர்சன நாச்சியப்பன், சந்தோஷ் சவுத்திரி ஆகியோரும் மந்திரி சபையில் சேர்த்துக் கொள்ளப்பட உள்ளனர்.



உத்தர்கண்ட் மாநிலத்தில் பெருவெள்ளத்துக்கு 60 பேர் பலி - ஹர்பஜன்சிங் உள்ளிட்ட 30 ஆயிரம் யாத்திரீகர்களும் சிக்கினர்!
[Monday, 2013-06-17 17:34:32]

உத்தர்கண்ட் மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 60 பேர் பலியாகிருப்பதாக அஞ்சப்படுகிறது. மேலும் பலர் தங்களின் வீடுகளை இழந்தும், யாத்திரையாக சென்ற பக்தர்கள் பலர் தங்கள் ஊருக்கு திரும்ப முடியாமல் 30 ஆயிரம் பேர் ஆங்காங்கே தவித்தும் வருகின்றனர். இந்த யாத்ரீகர்களில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் உள்ளார். இவர்கள் கடந்த 2 நாட்களாக உணவு, குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர்.இவர்களை மீட்கும் பணிக்கு பாதுகாப்பு மற்றும் ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.



மாநிலங்களவைத் தேர்தலில் டி.ராஜாவுக்கு அதிமுக திடீர் ஆதரவு!
[Monday, 2013-06-17 17:27:27]

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் இந்தியக் கம்யூனிஸ்ட் வேட்பாளர் டி.ராஜாவுக்கு அதிமுக ஆதரவு அளிப்பதை அடுத்து, தங்கள் தரப்பில் இருந்து ஒரு வேட்பாளரை வாபஸ் பெற அதிமுக முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிபிஐ தேசியச் செயலர் டி.ராஜாவுக்கு அதிமுக ஆதரவு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும், டி.ராஜா உள்ளிட்டோர் இன்று காலை முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து பேசியபிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இதனிடையே அதிமுகவின் ஐந்தாவது வேட்பாளராக கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்ட தங்கமுத்து தனது வேட்பு மனுவை வாபஸ் பெறுவார் என்று கூறப்படுகிறது.


TamilsGuid-191012-2013
INNSYS-20120930
Ramans2011
RoyaShades-l2011(04-12-11)
Suresh-remax-2013-01-01
AJRwindows22.05.13
TDE_Computers2011
NIRO-DANCE-100213
Mahesan supramaniyam 031109
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com