Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
June 18, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
கால் வலியிலிருந்து நிவாரணம் பெற இலகு வழி..
[Monday, 2012-07-30 22:28:37]
News Service

இன்றைய காலகட்டத்தில் உடலில் பல வலிகள் வருகின்றன. அதற்கு முக்கிய காரணம், நல்ல ஊட்டச்சத்துக்கள் இருக்கும் உணவுகளை உண்ணாமல் இருப்பதே ஆகும். அவ்வாறு உண்ணாமல் இருப்பதால் உடலைத் தாங்குகின்ற கால்கள் வலுவிழந்து, சோர்வடைந்து வலிகள் ஏற்படுகின்றன. மேலும் பெண்களுக்கே இத்தகைய வலிகள் அதிகம் வருகின்றன.

  

அதற்கு காரணம், அவர்கள் அணியும் செருப்புகள். ஏனெனில் செருப்புகள் அணியும் போது அதிகமான உயரம் கொண்ட செருப்புகளை அணிவதால் இடுப்பு வலிகளோடு, கால் வலிகளும் வருகின்றன. ஆகவே அத்தகைய கால் வலி மற்றும் கால்களில் அலுப்பு போன்றவற்றை நீக்க ஈஸியான சில வழிகள் இருக்கின்றன. அது என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்

* ஒரு வாளியில் வெழவெதுப்பான நீரை எடுத்துக் கொண்டு, அதில் சிறிது உப்பை போட்டு, கால்களை நீரில் மூழ்கி இருக்குமாறு 15-20 நிமிடம் வைக்கவும். இதனால் கால்களானது வலி இல்லாமல் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஒரு வேளை நிறைய நேரம் தண்ணீரில் கால்களை வைக்க நேரம் இல்லாமல் இருப்பவர்கள், குளிக்கும் போது ஒரு வாளியில் வெதுவெதுப்பான தண்ணீரை விட்டு, உட்கார்ந்து கொண்டு கால்களை மட்டும் வாளியில் விட்டுக் கொள்ளலாம். இதனால் கண்டிப்பாக கால் வலியானது போகும்.

*சுளுக்கு எடுக்க தெரிந்திருந்தால், விரல்களை வைத்து கால்களை சுளுக்கு எடுப்பது போல் 15-20 நிமிடம் தேய்த்து இழுத்து விடவும். இதனால் உடனடியாக கால் வலியானது போய்விடும். அது தெரியவில்லை என்றால், கால்களை நன்கு மடக்கி நீட்ட வேண்டும். இது ஒரு சிறந்த உடற்பயிற்சி. தண்ணீரை குடிக்கும் போதெல்லாம், இந்த உடற்பயிற்சியை செய்தால் கால் வலியானது வராமல் இருப்பதோடு, கால்களும் சோர்வடையாமல் இருக்கும்.

* ஒரு டேபிள் ஸ்பூன் காட்-லிவர் எண்ணெயை ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் உடன் கலந்து, படுக்கும் முன்பு குடிக்க வேண்டும். இவ்வாறு குடித்தால் கால் வலி போவதோடு, உடலில் இருக்கும் சோர்வும் குறையும்.

* தேன் மற்றும் எலுமிச்சை சாற்றை, ஒரு கப் வெதுவெதுப்பான நீருடன் குடிக்க வேண்டும். அது விரைவில் கால் வலி மற்றும் கால் சோர்வை குணப்படுத்தும்.

* உண்ணும் உணவில் அதிகமான அளவு கால்சியம், புரோட்டீன் மற்றும் வைட்டமின் ஈ போன்றவற்றை சேர்த்து உண்ண வேண்டும். அதிலும் இதனை சரியான அளவு உண்டு வந்தால், கால் வலி வராமல் இருக்கும்.

* முழங்கால்களில் வலி ஏற்படும் போது, அந்த இடத்தில் ஐஸ்களை வைத்து 10-15 நிமிடம் ஒத்தடம் தர வேண்டும். இவ்வாறு கொடுத்து வந்தால் எந்த வலியும் ஈஸியாக குணமாகும்.

* முக்கியமாக எப்போது தூங்கும் போதும் கால்களுக்கு அடியில் குஷன் அல்லது தலையணை வைத்து தூங்க வேண்டும். அதனால் கால்கள் வலிக்காமல் இருப்பதோடு, மெதுமெதுப்பான இடத்தில் கால்களை வைத்து தூங்குவதால் தூக்கமும் நன்றாக வரும்.

ஆகவே எப்போதெல்லாம் கால்கள் வலிக்கின்றதோ, அப்போதெல்லாம் நன்றாக ஓய்வு எடுத்தால் கால்கள் வலிக்காது. அதிலும் முதலில் ஹீல்ஸ் போடுவதை முக்கியமாக தவிர்க்க வேண்டும். மேலும் ஆரோக்கியமாக உணவுகளை, உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் உணவுகளை உண்டால் கால்கள் வலிக்காமல் இருக்கும்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

Leonid Rogozov என்பவர் தான் தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்து கொண்ட முதல் மருத்துவர். Top News
[Monday, 2013-06-17 22:22:48]

1961 ஆம் ஆண்டு 27 வயதான Leonid Rogozov க்கு கடும் வயிற்று வலியும் காய்ச்சலும் வந்தது.அவரே தன்னை பரிசோதித்து பார்த்த போது அவருக்கு குடல் அழற்சி நோய் இருப்பதை கண்டு பிடித்தார். குடல் அழற்சி நோய் மோசமாக இருப்பதால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் இல்லை என்றால் குடல் வால் வெடித்து, உயிருக்கே ஆபத்தை உண்டாக்கும்.அதனால் அவரே அவருக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிவெடுத்தார்.



ஏழே நாட்களில் முகப் பொலிவை பேண என்ன செய்ய வேண்டும்?
[Monday, 2013-06-17 21:06:00]

அனைவருக்குமே நன்கு வெள்ளையாகவும், அழகாகவும் மாற வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக கடைகளில் விற்கும் நிறைய அழகுப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். ஆனால் எந்த பலனும் இருக்காது. அவ்வாறு பாக்கெட்டில் இருக்கும் பணத்தை செலவழித்து, கெமிக்கல் கலந்த அழகுப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவதை விட, ஒருசில இயற்கை முறைகளை பின்பற்றினால், சருமம் அழகாக இருப்பதோடு, ஆரோக்கியமானதாகவும் இருக்கும். என்ன இயற்கை முறைகள் என்று கேட்கலாம். அது வேறொன்றும் இல்லை, முகத்தை கழுவுதல், ஃபேஸ் பேக் போடுதல், நிறைய தண்ணீர் குடித்தல், ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுதல், உடற்பயிற்சிகளை பின்பற்றுதல் என்று பல உள்ளன.



புரியாத புதிராக இருக்கும் சில மருத்துவக் கேள்விகளுக்கான விடைகள்!
[Monday, 2013-06-17 20:38:50]

பெப்டிக் அல்சர் என்பது என்ன?

சாப்பிட்டு வயிறு காலியானவுடன் வலி ஏற்படும். இதற்கு பெப்டிக் அல்சர் என்று பெயர். இந்த பிரச்னைக்கு எண்டோஸ்கோபி பரிசோதனை செய்து பார்த்து உணவு முறையில் மாற்றம் செய்து மருந்து எடுத்துக்கொண்டால் சரியாகிவிடும்.



உயிர்கொல்லி புற்றுநோயின் வகைகளும் அவற்றின் அறிகுறிகளும்!
[Monday, 2013-06-17 16:09:24]

எவ்வளவு தான் நவீன மருத்துவ கண்டுபிடிப்புகள் இருந்தாலும், புற்றுநோய் ஒரு உயிர்கொல்லி நோயாகவே உள்ளது. ஏனெனில் உலகில் உள்ள நோய்களிலேயே புற்றுநோயின் தாக்கத்தினால் தான் அதிக அளவு உயிரிழப்பானது ஏற்படுகிறது. இத்தகைய உயிரிழப்புக்களை தடுப்பதற்கு ஒரே வழியென்றால், ஆரம்பத்திலேயே புற்றுநோயின் அறிகுறிகளை அறிந்து, அதற்கேற்றாற் போல் சிகிச்சைகளை மேற்கொண்டால், அதிலிருந்து தப்பிக்க முடியும். மேலும் புற்றுநோயில் நிறைய வகைகள் உள்ளன. இவை அனைத்துமே ஒரே மாதிரியான அறிகுறிகளை கொண்டிருக்காது. ஒவ்வொரு புற்றுநோயும் ஒவ்வொருவிதமான அறிகுறிகளைக் கொண்டிருக்கும். வேண்டுமெனில் ஒருசில பொதுவான அறிகுறிகளான சோர்வு, காய்ச்சல், குறைவான இரத்தம் மற்றும் எடை குறைவு போன்றவை உள்ளன.



மின்னல் வேகத்தில் கண்களைத் தாக்கும் கணினி!
[Monday, 2013-06-17 15:41:32]

இன்றைய பறக்கும் யுகத்தில் கணினி பக்கத்தில் அமர்ந்தபடி தான் எல்லா வேலைகளும் செய்து முடிக்கப்படுகின்றன. தொழில் நுட்ப வளர்ச்சிக்கு இது உற்சாகத்தை அளிக்கக்கூடியது என்றாலும் உடல்நலத்துக்கு கேடு என்கிறது மருத்துவ ஆய்வு. கணினி முன் அமர்ந்து பணி செய்வபர்களில் ஆண்கள் தான் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீங்களும் அந்த வரிசையில் உள்ளவர்கள் என்றால் இதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். கணினி முன் அதிகநேரம் அமருபவர்களுக்கு முதல் பாதிப்பு ஏற்படும் பகுதி கண்தான். ஆகையால் அதில் இருந்து தப்பித்துக் கொளள சில வழிகள்....



ஜெட் என்ஜினில் இயங்கும் வேகம் கூடிய துவிச்சக்கர வண்டி தயாரிப்பு!Top News
[Monday, 2013-06-17 15:36:02]

இங்கிலாந்தைச் சேர்ந்த, பல கின்னஸ் சாதனைகளுக்கு சொந்தக்காரரான கொலின் புர்சி ஜெட் என்ஜினுடன் கூடிய சைக்கிளொன்றைத் தயாரித்துள்ளார். வீட்டில் தயாரித்த ஜெட் என்ஜினை அவர் தனது சைக்கிளுக்கு பொருத்தியுள்ளார். இதன்மூலம் மணித்தியாலத்திற்கு 50 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க முடியுமென அவர் தெரிவிக்கின்றார். பார்ப்பதற்கு மிகவும் ஆபத்தானதாக இச் சைக்கிள் தோன்றுகின்றது. தற்போது 32 வயதான கொலின் இச் சைக்கிளுக்கு 'நோரா' எனப் பெயரிட்டுள்ளார். இவர் இதற்கு முன்னரும் பல கண்டுபிடிப்புகளை இணையத்தின் ஊடாக அறிமுகப்படுத்தியுள்ளார். தற்போது இவர் தனது புதிய சைக்களில் தொடர்பான காணொளியை யுடியூப்பில் வெளியிட்டுள்ளார்.



மைக்ரோசொப்ட் மற்றும் பேஸ்புக்கிடமிருந்து தனிநபர் தகவல்களை அமெரிக்க அரசு கோருவது உறுதியாகியது!
[Sunday, 2013-06-16 15:07:25]

வெள்ளி இரவு உலகின் மிகப்பெரிய இணைய நிறுவனங்களான Facebook மற்றும் Microsoft ஆகியவை அமெரிக்க அரசு தனிநபரின் விடயம் தொடர்பாக தம்மிடையே விடுத்த கோரிக்கை தொடர்பாக தகவல்களை வெளியிட்டுள்ளது இதன் அடிப்படையில் 2012 ஆம் ஆண்டு இறுதி 6 மாதங்களில் மட்டுமே அமெரிக்க அரச உளவு நிறுவனங்கள் இநத உரிமை மீறல் செயற்பாடு இருந்தது என இவை தெரிவித்துள்ளன.



நறுமணப் பூச்சுக்களை பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை!
[Sunday, 2013-06-16 12:30:32]

ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். ஆடை மட்டுமல்ல. பெர்ஃப்யூமும் இதில் அடங்கும். பேக்கிங்கைப் பார்த்து பெர்ஃப்யூமை செலக்ட் செய்யக் கூடாது. பெர்ஃப்யூம் தயாரித்த கம்பெனி தரமான கம்பெனியா என்று முதலில் கவனிக்க வேண்டும். எக்ஸ்பயரி ஆகும் தேதியையும் முதலில் கவனிக்க வேண்டும். பெர்ஃப்யூமை முகர்ந்து பார்க்கும் போது, பெர்ஃபியூம் பாட்டில் மூடியிலேயே சிறிது அடித்து பார்க்க வேண்டும். நிறைய பெர்ஃபியூமை அடித்து ஸ்மெல் செய்து பார்க்கக் கூடாது. தேவைப்பட்டால் 2 அல்லது 3 தடவை மட்டுமே பீய்ச்சியடித்து டெஸ்ட் ஸ்மெல் செய்து பிறகு தேர்ந்தெடுக்கலாம்.



வாடிக்கையாளர்களை தன்வசப்படுத்தியது Windows 8.1!Top News
[Sunday, 2013-06-16 12:19:54]

விண்டோஸ் 8 பதிப்பு வெளியானவுடன், அதன் முற்றிலும் புதிய தொடுதிரை இயக்கத்தினை அனைவரும் ஆச்சரியத்துடன் பாராட்டினாலும், ஸ்டார்ட் பட்டன் இயக்கம் இல்லாதது, பழைய டெஸ்க்டாப் முறை, தேவைப்படுவோருக்குத் தரப்படாதது எனப் பல குமுறல்களை வாடிக்கையாளர்கள், உலகெங்கும் வெளிப்படுத்தினர். விண்டோஸ் 8 சிஸ்டம் உரிம விற்பனை எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததற்கு இவையும் ஒரு காரணம் எனவும் பரவலாகப் பேச்சு எழுந்தது. பழைய, பழகிப்போன விஷயங்கள் கட்டாயம் வேண்டும் என எதிர்பார்ப்புகள் வெளிப்பட்டதால், முதலில் பிடிவாதமாக இருந்த மைக்ரோசாப்ட் பின்னர், அவற்றை மீண்டும் தரும் சிந்தனைப் போக்கினைக் கடைப்பிடித்தது. இறுதியில் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு களுக்கேற்ப விண்டோஸ் 8 வளைக்கப்பட்டு, தற்போது விண்டோஸ் 8.1 பதிப்பு வெளியாகியுள்ளது. இதில் புதியதாக வந்துள்ள சிறப்பம்சங்களை இங்கு காணலாம்.



தூக்கத்தை பறிகொடுத்துவிட்டு தவிக்கின்றீர்களா? கட்டாயம் இவற்றைப் படியுங்கள்!
[Sunday, 2013-06-16 12:10:58]

தூக்கம் உடலின் செயல்பாட்டிற்கும் மிகவும் அவசியமான ஒன்று. அதனால் ஒருவருக்கு போதுமான அளவு தூக்கம் என்பது அவசியமான ஒன்று. எதுவுமே அளவாக இருந்தால் தான் நமக்கு நன்மை. அதே போல் தான் தூக்கமும். தூக்கமின்மையும் சரி, அதிகமான தூக்கமும் சரி, இரண்டுமே நமக்கு பெரிய பிரச்சனை தான். தொடர்ச்சியாக பல இரவுகள் போதிய தூக்கம் இல்லாமல் தவிக்கும் பலரை போலவே, அதிகமாக தூக்கம் வரும் பிரச்சனை உள்ளவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். அந்த பட்டியலில் நீங்களும் உள்ளீர்களா? அப்படியானால் அதிகமாக தூக்கம் வருவதற்கான காரணங்களையும் அதனை குணப்படுத்தும் வழிகளையும் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள். இன்சோம்னியா எனப்படும் போதிய தூக்கமின்மை, இது ஒரு பொதுவான பிரச்சனையே.



கூகுளின் புதிய தொழில்நுட்பம் - பறக்கும் பலூன்கள் மூலம் இணைய இணைப்பு!Top News
[Saturday, 2013-06-15 21:37:14]

பிற்காலத்தில் எங்கேனும் இயற்கைப் பேரழிவுகள் ஏற்பட்டு தகவல் தொடர்புகள் கிடைக்க இயலாத நிலையில் ஆகாய மார்க்கமாக மீட்புப் பணிகளில் ஈடுபட உதவக்கூடும் வகையில் ஒரு புதிய முயற்சியில் இறங்கி உள்ளது கூகுள் நிறுவனம். அத்துடன் இதன் மூலம் இன்டர்நெட் பயன்பாட்டை அனைத்து மக்களும் எப்போதும் பெறும் விதத்தில் செய்ல்படப் போகும் ஒரு புதிய முயற்சி என்றும் கூகுள் நிறுவனம் இதைக் குறிப்பிடுகிறது. அதாவது ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட 30 பலூன்களில் இணையதள தொடர்புகளை அளிக்ககூடிய கருவிகள் பொருத்தப்பட்டு விண்வெளியில் பறக்கவிடப்படுள்ளது. அவற்றின் பாதை தரையிலிருந்து கட்டுப்படுத்தப்படும். இதன் மூலம் இதுவரை எந்த வசதிகளுமில்லாத தொலைதூரப் பகுதிகளில் வசிப்பவர்கள் கூட இனி இணையதள வசதிகளைப் பெறமுடியுமாம்.



மருந்துகளை வாங்கும்போது அவதானிக்க வேண்டிய விடயங்கள்!
[Saturday, 2013-06-15 13:56:20]

மருந்து மாத்திரைகளை வாங்கும் போது முதலில் நிதானத்துடன் செயல்படவேண்டும் ஒரு போதும் அவசரம் காட்டக்கூடாது பொருமையுடன் வாங்கவேண்டும்.. மருந்துகளை வாங்கும் போது உரிமம் பெற்ற சில்லறை மருந்து கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும். மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்து சீட்டின் அடிப்படையில் அதில் குறிப்பிட்டுள்ள மருந்துகளை மட்டுமே கவனமாக வாங்க வேண்டும். வாங்கிய மருந்து மாத்திரைகளுக்கு கடைக்காரர்களிடமிருந்து விற்பனை ரசீது கேட்டு பெறவும். இது போலி மருந்துகளிடமிருந்து உங்களுக்கு கிடைக்கும் உத்திரவாதமாகும். மருந்துகளை வாங்கும் போது அதன் தொகுதி எண், உற்பத்தி எண், காலாவதியாகும் தேதி ஆகியவற்றை பார்த்து வாங்க வேண்டும்.



அதீத பயத்தால் அவதிப்படுபவரா நீங்கள்? கட்டாயம் இவற்றைப் படியுங்கள்!
[Saturday, 2013-06-15 13:25:06]

பொதுவாக அதீத பயம் அல்லது அமைதி இன்மையால் பதற்றம் ஏற்படும். பதற்றம் சில நிமிடங்கள் மட்டுமே இருக்கும், ஆனால் இத்தகைய நிமிடங்கள் நரக வேதனையாகும், இதனை விளக்க வார்த்தைகளை இல்லை. கீழ்கண்ட அறிகுறிகளால் இதனை கண்டறியலாம்:



கர்ப்ப காலத்தில் துளசி சாப்பிட்டால் சுகப்பிரசவம் உண்டாகும்!
[Saturday, 2013-06-15 12:46:05]

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் சாப்பிடும் உணவுதான் கருவின் வளர்ச்சி, பிரசவத்துக்கு பிறகு தாயின் உடல் நலனில் முக்கிய பங்கு வகிக்கிறது. கர்ப்ப காலத்தில் அவ்வப்போது துளசி இலைகளை மென்று சாப்பிடுவது வலியின்றி பிரசவம் ஏற்படும் என்று ஆயுர்வேதம் கூறியுள்ளது. கர்ப்ப காலத்தின் முதல் 3 மாதங்கள், 7வது மாதத்தில் இருந்து கடைசி 3 மாதங்களில் கர்ப்பிணி தனது உணவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்கிறது ஆயுர்வேதம். இந்த காலங்களில் அதிக திரவ உணவுகள், பழங்கள் நல்லது. கரு வளர இவை அதிக பயனளிக்கும்.



கருவிழி முத்தம் கண்ணை குருடாக்கும் - அதிர்ச்சி தகவல்!Top News
[Saturday, 2013-06-15 12:33:15]

தற்போது பெரும்பாலான காதலர்கள் தங்களது கண்களுக்குள் ஒவ்வொருவர் மாற்றி மாற்றி நக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. ரொமான்ஸுக்காக செய்யும் இந்த 'கிஸ்ஸிங்' மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். கண்களின் கருவிழிகளை நக்கும் இவ் வினோத பழக்க வழக்கமானது 'Oculolinctus' என அழைக்கப்படுகின்றது. இவ்வாறு செய்வதன் மூலம் பாலியல் ரீதியிலாக உச்சத்தை அடைவதாக நம்பப்படுகின்றது.அதிலும் ஜப்பானில் இந்த பழக்க வழக்கம் ஒருவித காதல் கலாசாரமாகவே மாறியுள்ளது.பெரும்பான்மையான இளம் வயது காதலர்களிடையே இது மிகவும் பிரபலமானது.



Shenzhou 10 விண்கலம் விண்ணில் இணைந்தது!
[Friday, 2013-06-14 21:55:52]

இரு நாள்களுக்கு முன் விண்ணில் செலுத்தப்பட்ட சீனாவின் ஷென்ஃஜூ 10 (Shenzhou 10) விண்கலம் வெற்றிகரமாக டியன்காங் (Tiangong-1) விண்வெளி நிலையத்தோடு இணைக்கப்பட்டது. விண்கலத்தில் சென்றுள்ள 3 வீரர்கள் கண்காணிப்பு பணிகளையும், இணைப்புப் பணிகளையும் மேற்கொண்டு தகவல்களை தொடர்பு மையத்திற்கு அனுப்பவுள்ளனர். பின்னர் டியன்காங்கினுள் சென்று ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப சோதனைகளை நிகழ்த்த இருக்கின்றனர். 15 நாட்கள் விண்ணில் தங்கியிருக்கப்போகும் விண்வெளி வீரர்கள் பூமியிலுள்ள மாணவர்களுக்கு இந்த நுணுக்கங்கள் குறித்து உரை நிகழ்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டிற்குள் சீனா விண்வெளியில் அமைக்க எண்ணும் நிரந்தர நிலையத்திற்கு இது முன்னோட்டமாக கருதப்படுகிறது.



ஆழ்கடல் மீனினமான திமிங்கள் மூச்சடக்குவது எப்படி? கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்!
[Friday, 2013-06-14 21:45:31]

திமிங்கலம் போன்ற கடல்வாழ் பாலூட்டி விலங்குகள் நீருக்கடியியில் ஒரு மணி நேரம் வரை மூச்சை அடக்கிக்கொள்ள முடியும் அளவுக்கு அவை தமது உடலில் பிராணவாயுவை எவ்வாறு சேமிக்கின்றன என்று கண்டுபிடித்துவிட்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சுற்றாடலுக்கு ஏற்ப பிராணிகளில் உடலில் மாற்றங்களை ஏற்படுத்தும் பரிணாம வளர்ச்சியின் சிறப்பான உதாரணமாக கடல்வாழ் பாலூட்டி விலங்குகள் சுவாசிக்காமல் ஒரு மணி நேரம் வரையில் நீருக்கடியில் இருப்பது கருதப்படுகிறது. இவ்வகையான பிராணிகளின் உடலில் உள்ள மயோகுளோபின் என்ற புரதத்தை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.



வயிற்றில் குழந்தையுடன் வேலைக்கு செல்பவரா நீங்கள்? கட்டாயம் அறிந்திருக்க வேண்டியவை!
[Friday, 2013-06-14 16:56:56]

கர்ப்பமாக இருக்கும் போது உடலுக்கு நிறைய சத்துக்களானது தேவைப்படும். அதற்கு சரியான நேரத்தில் உணவுகளை சாப்பிட்டு வர வேண்டும். இல்லையெனில் அவ்வப்போது லேசாக எதையேனும் சாப்பிட வேண்டும். இவ்வாறு அவ்வப்போது சிறு இடைவெளி சாப்பிடுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, கர்ப்பமாக இருக்கும் போது செரிமான மண்டலமானது மெதுவாக இயங்கும். மற்றொன்று, கர்ப்பத்தின் போது வயிறு பெரியதாவதால், ஒரே நேரத்தில் முழு உணவையும் சாப்பிட முடியாது. அதிலும் வீட்டில் இருக்கும் பெண்கள் என்றால் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஏனெனில் அவர்கள் எப்போதும் வீட்டிலேயே இருப்பதால், வீட்டில் இருக்கும் பெரியோர் அவ்வப்போது எதையேனும் சாப்பிடக் கொடுப்பார்கள். இதனால் உடலில் சத்துக்களானது நன்றாக இருக்கும். ஆனால் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு நிறைய பிரச்சனைகள் எழக்கூடும்.



உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு உதவும் புதிய முறை - முயன்று பாருங்கள்!
[Friday, 2013-06-14 12:51:55]

தங்களது உடல்நலத்தைப் பேணிப் பாதுகாப்பதில் சிலருக்கு அதீத ஆர்வம் இருக்கும். உடல் மெலிந்து காணப்படவேண்டும் என்பதற்காக எந்த வழிமுறைகளை வேண்டுமானாலும் பின்பற்றுவார்கள். அத்தகைய ஆர்வலர்களுக்கு மத்தியில் இப்போது ஒரு வித்தியாசமான உணவுமுறை வரவேற்பைப் பெற்றுள்ளது. வாரத்தின் ஏழு நாட்களில் முதல் ஐந்து நாட்களுக்கு எந்த மாதிரியான உணவு வகைகளையும் உண்ணலாம், ஆனால், கடைசி இரண்டு நாட்களும் 600 கலோரிக்கு மேற்பட்டு உண்ணக்கூடாது என்பதே அந்தப் புதிய முறையாகும். இங்கிலாந்து மக்களிடையே அதிகமாகக் காணப்படும் இந்த உணவுமுறை தற்போது அமெரிக்காவிலும் பரவத் தொடங்கியுள்ளது.



எதிர்காலத்தில் சைக்கிள்களிலும் பறக்கலாம்!Top News
[Friday, 2013-06-14 12:44:34]

ஏற்கனவே பைக்-லே பறக்குறான் பறக்குறான்னு சொல்லி சொல்லி அது இப்ப உண்மையாகி போச்சு. ஆமாம் இப்போது நிஜமாகவே வந்து விட்டது பறக்கும் ஹெலிகாப்டர் பைக். மூன்று செக்கஸ்லோவாக்கிய கம்பெனிகள் இணைந்து இதை உருவாக்கி வெற்றிகரமாக ஐந்து நிமிட டெஸ்டை சாதித்தும் காட்டியுள்ளனர். இந்த் பைக்கின் எடை 95 கிலோ இதில் முன்பும் பின்பு இரண்டு பேட்டரி புரப்பல்லர் இருக்கும் அதனால் பெட்ரோல் செலவும் கிடையாது. பேட்டரி தீர்ந்து போச்சுனா அப்படியே தரையிறக்கி வழக்கம் போல ஜனங்களோடு ஜனங்களாய் நீச்சல் அடிக்க வேண்டும் அம்புடுதேன்.


Suresh-remax-2013-01-01
TamilsGuid-191012-2013
NIRO-DANCE-100213
TDE_Computers2011
INNSYS-20120930
Ramans2011
RoyaShades-l2011(04-12-11)
AJRwindows22.05.13
Mahesan supramaniyam 031109
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com