Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 19, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
முன்னாள் போராளிகள் வாழ்வில் எப்போது விடிவு எற்படும்?
[Tuesday, 2012-07-24 09:53:53]
News Service

முன்னாள் போராளிகளுக்கான இயல்பு வாழ்வுக்கான வழியினை ஏற்படுத்திக் கொடுக்காமல், ஆயுதம் தூக்கிய ஒரே காரணத்துக்காக மேலும் மேலும் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் இவர்கள் வாழ்வில் எப்போது விடிவு எற்படும்?

  

புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் வாழ்வு இன்றும் விடுதலை இல்லாமல் நாளாந்தம் அச்ச உணர்வுடனேயே நகர்கின்றது. இவர்களின் இயல்பு வாழ்வு விடயத்தில் அரசு அக்கறைகொள்வதாக வெளி உலகுக்கு தெரியப்படுத்தி வருகிறது.

ஆனால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தமது வாழ்வில் நரக வேதனையை அனுபவித்து வருகின்றனர். முன்னாள் போராளிகளை வீதிகளில் சந்திக்கும்போது அவர்களின் முகத்தில் அச்ச உணர்வு பீடித்திருப்பதைப் பார்க்க முடிகிறது.

அவர்களுடன் உரையாடும் போது தமது வாழ்வோடு ஒட்டிய பிரச்சினையைக்கூட வெளியே சொல்லமுடியாத அவலத்தில் இருப்பது தெரிகிறது. அந்தளவுக்கு முன்னாள் போராளிகள் விடயத்தில் துளியளவு அக்கறையும் எடுக்காத அரசு, எப்படி அவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவப் போகின்றது? இப்போது முன்னாள் போராளிகளின் உயிருக்கும் பாதுகாப்பில்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

மூன்று தசாப்த போர் முடிவடைந்து மூன்று வருடங்களாகியும் இன்னும் முன்னாள் போராளிகளின் வாழ்வில் சோதனைகள் தொடர்ந்து கொண்டிருப்பது வேதனை தரும் விடயமாகும்.

இறுதிக்கட்டப் போரில் படையினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்று வெளியே வந்தும் இயல்பு வாழ்வை குலைக்கும் நோக்கில் மர்மநபர்களால் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் அவர்களிடத்தே பெரும் பயப்பீதியை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் தடுப்பு முகாம்களுக்குள் அடைபட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் நாள்களைக் கழித்து வருகின்றனர்.

நட்டாங்கண்டல், வன்னிவிளாங்குளம், பாண்டியன் குளம் போன்ற பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களில் வரும் மர்பநபர்கள் முன்னாள் போராளிகளின் பட்டியல் ஒன்றை வைத்துக்கொண்டு ஊர் மக்களிடம் அவர்களின் இருப்பிடங்களை விசாரிக்கிறார்கள் அவர்களின் இருப்பிடங்களுக்குச் சென்ற மர்ம நபர்கள் அவர்களை விசாரணைக்காக குறித்த பகுதியில் உள்ள பாடசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள்.

அங்கு கடும் தொனியில் அவர்களை விசாரித்தபின் உடல் ரீதியான தாக்குதல்களிலும் மர்மநபர்கள் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் "உங்களை நாங்கள் விசாரித்தது பற்றி ஒருவரிடமும் முறையிடக்கூடாது. அவ்வாறு முறையிட்டால் மீண்டும் தடுப்பு முகாமிற்கு செல்ல நேரிடும்" என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின்னரே முன்னாள் போராளிகள் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் போராளிகளின் மீதான இத்தகைய நடவடிக்கையில் கொழும்பில் இருந்து வந்துள்ள விசேட புலனாய்வுப் பிரிவொன்றே ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்தச் சம்பவமானது முன்னாள் போராளிகளின் இயல்பு வாழ்வில் இடியாக விழுந்துள்ளது.

இதன் காரணமாகவே முன்னாள் போராளிகள் ஒவ்வொருவரின் மனதிலும் இந்த நாட்டை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்ற துடிப்பு காணப்படுகிறது. அச்ச உணர்வு பீடித்திருக்கும் இடங்களில் வாழ்வதற்கு எவருக்குத்தான் துணிவு வரும். இயல்பு வாழ்வில் தங்களை இணைத்துக்கொள்ள விரும்பும் முன்னாள் போராளிகள் போர் மேகம் இல்லாத சூழலில் வாழ விரும்புகின்றார்கள்.

இவர்கள் விடயத்தில் அரசு முழுக்கவனம் எடுத்து இப்படிப்பட்ட அச்சம் நிறைந்த சூழலினை இல்லாமல் செய்து நிம்மதியாக வாழ வழியை ஏற்படுத்திக் கொடுக்குமா? முன்னாள் போராளிகளுக்கான இயல்பு வாழ்வுக்கான வழியினை ஏற்படுத்திக்கொடுக்காமல் மீண்டும் அவர்கள் மீது ஏற்படுத்தப்படும் வன்முறைகளைக் கண்டும் காணாமல் இருப்பது அவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறுவதற்கான உந்துதலை ஏற்படுத்தி விடுகிறது.

ஆயுதம் தூக்கிய ஒரே காரணத்துக்காக மேலும் மேலும் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் முன்னாள் போராளிகளின் வாழ்வில் எப்போது விடிவு எற்படும் என அவர்களின் பெற்றோர்கள் கேட்டவண்ணம் இருக்கின்றனர்.

பயம் கொள்வது ஒரு மனிதனின் வாழ்வினை இல்லாமல் செய்துவிடும் அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்று அறிஞர்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். அவர்கள் படித்ததில் வைத்து சொன்னார்களோ அல்லது அனுபவத்தில்தான் சொன்னார்களோ அது எமக்குத் தெரியாது. ஆனால் அதுதான் உண்மை முன்னாள் போராளிகளின் வாழ்வில் இப்போது பயம் பீடித்திருக்கிறது.

இந்தப் பயத்தினை இவர்களிடமிருந்து இல்லாமல் செய்வதற்கு எவர்தான் முன்வருவார்களோ என்று பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். தமது புனர்வாழ்வு முகாம் அடையாள அட்டையை படையினர் எதற்காக திருப்பி வாங்குகின்றனர் என்று கூட தெரியாத நிலைமையில் கண்டிப்பாக இவர்கள் பயம் கொள்வது நியாயமானதாகும்.

தமிழர்கள் வாழும் பகுதிகள் எல்லாம் படையினர் அகலக்கால் விரித்து இருக்கின்றனர். தடுக்கிவிழும் இடமெல்லாம் படையினரின் முகாம்கள்தான் இருக்கின்றன. இப்படியாக இருந்தும் முன்னாள் போராளிகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது. இனந்தெரியாதவர்கள் கூட தங்களை அச்சுறுத்துவதாக முன்னாள் போராளிகள் தெரிவிக்கின்றனர்.

இறுதிக்கட்டப் போரில் பல முன்னாள் போராளிகள் படையினரால் சித்திரவதைகள் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வீடியோ காட்சிகளை சனல்4 வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட வீடியோ காட்சிகளை பார்த்த முன்னாள் போராளிகள் தமக்கும் ஏதாவது இடம்பெற்றுவிடுமோ என்று அஞ்சியிருக்கும் போது மர்மநபர்கள் அவர்களை அச்சுறுத்துவது அவர்கள் மத்தியில் பயப்பீதியை மேலும் அதிகப்படுத்தியிருக்கிறது.

இந்த பயப் பீதியானது எதிர்வரும் காலங்களில் அவர்கள் உள நோய்த்தாக்கத்திற்கு உள்ளாவதை தடுக்க முடியாத நிலமையாக மாறிவிடும். போர்க்குற்றச் சாட்டுக்களின் விசாரணைகள் முடிவுறாத சூழலில் மீண்டும் முன்னாள் போராளிகளை மர்ம நபர்கள் அச்சுறுத்தி வருவது தொடர்பான இந்தக் குற்றச்சாட்டும் படையினர் மீதே வந்து விழப்போகிறது.

தமிழர் விடயத்தில் இலங்கை அரசு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமந்து வருகிறது, இனியும் சுமக்கப்போகிறது என்பது இப்பொழுது இடம்பெறும் சம்பவங்களில் இருந்து தெரிகிறது. முன்னாள் போராளிகள் புனர்வாழ்வுபெற்று வெளியே வந்து இயல்பு வாழ்வுக்கு திரும்பிக் கொண்டிருக்கும் போது இப்படிப்பட்ட அச்சுறுத்தும் செயற்பாடுகள் அவர்களின் குடும்பங்களுக்கு மீண்டும் மீளமுடியாத சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

வன்னிப் பகுதியில் இடம்பெறும் தீய சம்பவங்கள் முழுமையாக வெளியுலகுக்கு தெரியாமல் அங்கேயே அடங்கிப் போகின்றன. மீளக்குடியமர்ந்த மக்கள் தமது வாழ்வினை நகர்த்த முடியாமல் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் மீளக்குடியமர்ந்த முன்னாள் போராளிகளின் குடும்பங்களின் நிலை அதைவிட பரிதாபகரமானது.

இரவு நேரங்களில் தெருவிலே வாகனச் சத்தம் கேட்டு அவர்களின் தூக்கம் கலைந்த நாள்களை எண்ண முடியாது. புதிய முகங்களைப் பார்க்கின்ற போதும் அவர்களிடம் ஒரு பயப்பீதி ஏற்படுகின்றது. ஒவ்வொரு நாளும் நரக வாழ்வினை நகர்த்திச் செல்லும் முன்னாள் போராளிகளில் சிலர் இறுதியில் தற்கொலையையும் தெரிவு செய்துள்ளனர்.

இப்படியாக இவர்கள் வாழ்வில் சோதனை அதிகரித்துக்கொண்டே செல்கிறதேயொழிய குறைவதற்கு வாய்ப்பேதும் இல்லாமல் இருக்கிறது. முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்துக்கு பெரும் தொகையான நிதியை அரசு ஒதுக்குகிறது. ஆனால் அந்த நிதியால் பேராளிகள் பெற்ற பயன் என்ன என்பது இன்னும் தெரியவரவில்லை இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வெளிநாடுகளில் இருந்தும் நிதி கிடைக்கின்றன. அவற்றாலும் கிடைக்கும் பயன் என்ன என்பது தெரியவரவில்லை.

முன்னர் போரினை காரணம் காட்டி வெளிநாடுகளில் இருந்து நிதியினை வசூலித்த இலங்கை அரசு, இப்பொழுது முன்னாள் போராளிகளின் பெயரில் வெளிநாடுகளிடம் இருந்து நிதியினை வசூல் செய்கிறது. இலங்கை அரசுக்கு என்றைக்குமே வெளிநாடுகளிடமிருந்து நிதியினைப் பெறுவதற்கு தமிழர்கள்தான் தேவைப்படுகின்றனர். ஆனால் அந்த நிதி தமிழர்களுக்கு ஒரு போதுமே உதவப்போவதில்லை என்பது கடந்த கால அனுபவங்களில் இருந்து தெரிகிறது. பகடைக் காய்களாக தமிழர்களைப் பயன்படுத்தும் சிங்கள அரசு அந்த மக்களின் அத்தியாவசிய தேவைகளில் சிறுதுளி அளவைக் கூட நிறைவேற்றப் பின்னடிக்கிறது.

முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தில் எந்தவிதமான முன்னேற்றத்தையும் ஏற்படுத்தாமல் இருக்கும் இலங்கை அரசு அவர்களை அச்சுறுத்துபவர்களையாவது தடுக்கும் வழியினை ஏற்படுத்திக்கொடுக்குமா என்பது கேள்விக்குறியே. போர் இடம்பெற்ற காலப்பகுதியில் வன்னி மண் பாதுகாப்புள்ள ஒரு சுதந்திரமான இடமாக இருந்தது.

போர் முடிவடைந்து மூன்றாண்டுகள் கடந்தும் வன்னி மண் பழைய நிலைக்கு வரமுடியாமல் தவிக்கிறது. அழுத்தங்கள் பிரயோகிக்கும் இடத்தில் விடுதலைக்கான தேடல் இருக்கும். இதுதான் உலக வரலாறு. அந்த அழுத்தங்களில் ஏற்படும் மனக்காயங்கள் எந்த மருந்தினைப் போட்டாலும் ஆறாது. கூடிக்கொண்டே செல்லும் அழுத்தங்களில் இருந்து ஒன்று மட்டுமே தெரிகிறது. அதாவது இலங்கையில் தமிழர்கள் ஒரு போதுமே நிம்மதியாக வாழமுடியாது என்பதுமட்டும் தெளிவாகத் தெரிகிறது. ஆயுதம் தூக்கி போராடிய காலங்களில் இருந்த துணிவு பாதுகாப்பு இப்போது இல்லாமல் இருக்கிறது. மீண்டும் அதே நிலைமையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் போலும். போரினால் சுகபோகம் அனுபவித்த தலைமைக்கு என்றைக்குமே அமைதியைப் பிடிக்காது.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

மனித எலும்புக்கூடுகள் குருநாகல் மலையில் மீட்பு!
[Sunday, 2013-05-19 21:43:37]

குருநாகல், யதிஸ்ஸா மலைப் பகுயிலிருந்து மனித எலும்புக்கூடுகள் இரண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளன.பொலிஸருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின்படி இவ் மனித எலும்புக் கூடுகள் இரண்டும் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. எலும்புக் கூடுகளில் ஒன்று ஆண் எனவும் மற்றையது பெண் எனவும் சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.



ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண சீனா அழுத்தம் கொடுக்க வேண்டும் - கூட்டமைப்பு!
[Sunday, 2013-05-19 21:00:04]

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண சீனா, இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு யதார்த்தமான முறையில் தீர்வு காண்பதற்கும், அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதற்கும் அரசாங்கம் மெய்யாகவே முனைப்புகாட்ட, சீனா அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளின் அழுத்தங்களை ஈடு செய்வதற்கு இலங்கை அரசாங்கம் சீனாவின் உதவியை நாடி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.



பிரபாகரனின் படம் ஜெயலலிதாவுக்கு ஓட்டுக் கேட்கும்போது பிடித்தது, இப்போது பிடிக்கவில்லையா? சீமான் கேள்வி!
[Sunday, 2013-05-19 20:52:15]

கடலூரில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்துக்கு போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதையடுத்து சிறிய அளவுக் கூட்டமாக உள்ளரங்கில் ஒரு திருமண மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது. இதனால், பொதுக்கூட்டத்துக்காகப் போடப்பட்ட மேடைகளை கட்சியினர் பிரித்து எடுத்தனர். மேடை கலைக்கப்பட்டு பேனர்கள் எடுக்கப்பட்டது. இந்நிலையில் உள்ளரங்குக் கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், கடந்த தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஓட்டுக் கேட்டு பல்வேறு கூட்டங்களை நடத்தினேன். அந்தக் கூட்டங்கள் நடந்த மேடைகளில் எல்லாம் பிரபாகரன் படத்தைப் போட்டிருந்தோம். அப்போது பிடித்தது, இப்போது பிடிக்கவில்லையா? இதுபோல் 2 ஆயிரத்துக்கும் அதிகமான கூட்டங்களில் நான் பேசியிருக்கிறேன். அந்தக் கூட்டங்களில் எல்லாம் பிரபாகரன் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அப்போதெல்லாம் என்ன கலவரமா வெடித்தது?



மாகாணசபை முறைமை அவசியமா? இல்லையா? - சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த அரசு திட்டம்!
[Sunday, 2013-05-19 20:44:48]

வடக்குத் தேர்தலுக்கு எதிராக பத்து லட்சம் கையொப்பங்கள் திரட்டப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வடக்குத் தேர்தல் நடத்துவதனை தடுக்குமாறு கோரி தேசிய சுதந்திர முண்ணனி இந்தக் கோரிக்கையை முன்வைக்கவுள்ளது. வடக்குத் தேர்தல்களை ரத்துச் செய்யுமாறு கோரி பத்து லட்சம் கையொப்பங்கள் திரட்டப்பட்டு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. பொதுமக்களின் கையொப்பங்கள் திரட்டும் நடவடிக்கை நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது. கொழும்பில் நடைபெறவுள்ள இந்த ஆரம்ப நிகழ்வில் கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச கலந்து கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. வடமாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாக காணி,மற்றும் காவல்துறை அதிகாரங்கள் ரத்துச் செய்யப்படவுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.



தனித் தமிழீழத்தினை வென்றடைவதற்கான தெளிவான நிகழ்ச்சி நிரலை முன்நிறுத்திய பிரதமர் உருத்திரகுமாரனின் மே 18 உரை!Top News
[Sunday, 2013-05-19 20:39:54]

முள்ளிவாய்க்கால் பெருவலியின் கூட்டுநினைவின் 4ம் ஆண்டினை உலகத் தமிழனம் நினைவேந்தியிருக்கும் இவ்வேளை, தமிழீத்தினை வென்றடைவதற்கான தமிழர் தரப்பின் நிகழ்ச்சி நிரலினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உரத்திரகுமாரன், தனது மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் உரையில் தெளிவாக முன்னிறுத்தியுள்ளார். உலகத் தமிழினம் நோக்கிய தனதுரையின் தமிழீழ சுதந்திர சாசன முரசறைவுப் பெருநிகழ்வில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் வழங்கியிருந்தார்.



இலங்கை, சிங்கள பெளத்தர்களின் நாடு எனக் கூறுபவர்கள் இந்நாட்டின் வரலாறு தெரியாதவர்கள் - சுரேஷ் எம்.பி
[Sunday, 2013-05-19 20:39:12]

இலங்கை சிங்கள பெளத்தர்களின் நாடு எனக் கூறுபவர்கள் இந்நாட்டின் வரலாறு தெரியாதவர்கள். விஜயன் வருகைக்குப் பின்னரே இலங்கையில் பெளத்த மதம் பரவியதாக மகாவம்சம் தெரிவிக்கின்றது. இப்படியிருக்க இது சிங்கள பெளத்தர்களின் நாடு என எப்படி கூற முடியும்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். விஜயனின் வருகைக்கு முன்னர் இங்கு நாகர்கள் வாழ்ந்துள்ளனர். அவர்கள் தமிழ் பேசுபவர்கள், சிவ வழிபாடு செய்பவர்கள், தமிழ் பண்டைய மொழி. இதற்கு நீண்ட வரலாறு உண்டு. சிங்கள மொழி நான்காம் நூற்றாண்டில் தோன்றியதாக கூறப்படுகின்றது.



மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதி ஓ.ஏ.ராமையா காலமானார்.
[Sunday, 2013-05-19 20:30:51]

மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதி ஓ.ஏ.ராமையா காலமானார். சுகவீனமுற்றிருந்த அவர், தனது 76-வது வயதில் நேற்றிரவு காலமானார். ஓ.ஏ.ராமையா நாவலபிட்டி, பூண்டுலோயாவில் உள்ள தோட்டமொன்றில் 1938ம் ஆண்டில் பிறந்தார். ஹட்டனில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது பூதவுடல், நாளை ஹட்டன் நகரசபை மண்டபத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர், மாலை நாவலபிட்டிக்கு தகனக் கிரியைக்காக கொண்டுசெல்லப்படவுள்ளது. செங்கொடிச் சங்கத்தின் செயலாளர் ஓ.ஏ.ராமையா, 1950களின் இறுதியில் தனது தொழிற்சங்க வாழ்க்கையைத் தொடங்கினார். இலங்கை பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் செயலாளராகவும் பணியாற்றிய அவர், மலையக தொழிற்சங்க அரசியலில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பங்களிப்புச் செய்துள்ளார்.



படையினரின் பிரசன்னம் வட மாகாணசபைத் தேர்தலின்போது அதிகரிக்கும் - சுட்டிக்காட்டியது கபே!
[Sunday, 2013-05-19 15:02:46]

எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலின் போது படையினரின் பிரசன்னம் அதிகரிக்கும் என தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்கள் அச்சம் வெளியிட்டுள்ளன. தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வடக்கில் இராணுவத்தின் பிரசன்னம் உயர்வடையக் கூடிய சாத்தியம் அதிகரித்துள்ளதாக கபே என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது, தேர்தல் நடாத்தப்படுவதற்கு முன்னதாக கருத்துச் சுதந்திரம், ஊடக சுதந்திரம் மற்றும் சுதந்திரமாக நடமாடக் கூடிய உரிமைகள் முழுமையாக உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். சுதந்திரமாக சென்று பிரச்சாரங்களை மேற்கொள்வதில் தொடர்ந்தும் தடைகள் நீடிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.



யேர்மனியில் எழுச்சியுட​ன் நடைபெற்ற தமிழ் இனவழிப்பு நாள் - 2013!Top News
[Sunday, 2013-05-19 14:58:17]

ஒட்டுமொத்த உலகச் சதியுடன், சிறீலங்கா பயங்கரவாத அரசாங்கம் தமிழீழத்தில் நடாத்திய இனவழிப்பு நாளான மே-18 இன் நினைவுநாள் நேற்று யேர்மனியின் டுசில்டோர்ப் நகரில் எழுச்சியுடன் நடைபெற்றது. பிற்பகல் 14:00 மணியளவில் டுசில்டோர்ப் தொடரூந்து நிலையத்தின் முன்பாக ஆரம்பித்த மக்களின் பேரணி , கோட்டொலிகள் , பதாதைகள் அடங்கலாக நகர நிகழ்வுத் திடலை நோக்கி நகர ஆரம்பித்தது. முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்புக் கொடூரங்களை நினைவுபடுத்திய பதாதைகளை மக்கள் ஏந்தியிருந்தனர். வீதியின் இருமருங்கிலும் நின்ற யேர்மனிய மற்றும் வெளிநாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையில் துண்டுப்பிரசுரங்கள் விநியோக்கிக்கப் பட்டன. எமது மண்ணில் நடைபெற்ற தமிழின அழிப்பினை நினைவுபடுத்தும் வகையில், அதற்கு நியாயம் கோரும் வகையிலும் எழுப்பப்பட்ட கோட்டொலிகள் வெளிநாட்டவர்களின் கவனத்தை ஈர்த்தன.



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அத்திவாரம் தமிழரசுக் கட்சியே - மாவை சேனாதிராஜா எம்.பி!
[Sunday, 2013-05-19 14:58:10]

'தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து அதன் அத்திவாரமாக தமிழரசுக்கட்சி திகழ்கிறது' என்று தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். நல்லூர் பிரதேச சபையின் நிதியில் அமைக்கப்பட்ட 'யாழ்ப்பாணம் வரவேற்கிறது' வளைவு திறப்பு விழா, இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறுகையில்,



யுத்த வெற்றிக் கொண்டாட்டத்தின்போது கடலில் மூழ்கிய கடற்படை வீரரின் சடலம் மீட்பு!
[Sunday, 2013-05-19 14:53:27]

யுத்த வெற்றி விழா கொண்டாடத்தின் போது காணாமற் போன கடற்படை வீரரது சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. இவரது சடலம் பம்பலப்பிட்டி கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். காலி முகத்திடல் கடற்பரப்பில் நேற்று (18) காலை இடம்பெற்ற யுத்த வெற்றிவிழாவின் போது குறித்த சிறிய ரக படகு மூழ்கியது. படகில் இருவர் பயணித்ததாகவும் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும் ஒருவர் தப்பித்துக் கொண்டதாகவும் கடற்படை தகவல்கள் தெரிவித்தன.



ஸ்ரீலங்கா அரசிற்கு எதிராக அணி திரட்டுகின்றார் அமைச்சர் டக்ளஸ்!
[Sunday, 2013-05-19 11:29:30]

13வது அரசியலமைப்பு திருத்த சட்டத்தை ஒழிக்கும் நடவடிக்கைக்கு எதிராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான குழுவொன்று ஒன்றிணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 13வது திருத்தத்திற்கு அமைய காணி, காவல்துறை அதிகாரங்கள் மாகாணசபைகளிடமே தொடர்ந்து இருப்பதையும், 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்தவும் இந்த அணி உருவாக்கப்பட்டுள்ளது. டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையிலான இந்த அணியில் ஆளும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 31 பேர் இடம்பெற்றுள்ளனர்.



ஸ்ரீலங்காவிற்கு எதிரான ஐ.நா தீர்மானத்தின் பின்னரான நிலைமைகள் குறித்து அமெரிக்கா கவனம்!
[Sunday, 2013-05-19 11:15:16]

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னரான நிலைமைகள் குறித்து அமெரிக்கா கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துமாறு கோரி இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்தத் தீர்மானத்தில் குறிப்பிட்பட்ட பரிந்துரைகளை அரசாங்கம் பின்பற்றுகின்றதா? இல்லையா? என்பது குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்ட எஸ்.கஜேந்திரன் உள்ளிட்ட 15 பேர் விடுதலை!
[Sunday, 2013-05-19 09:00:35]

கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உட்பட 15 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.பி.லக்சிறி விஜியசிங்க தெரிவித்தார். முள்ளிவாய்க்காலில் இறந்த தமிழ் உறவுகளை நினைவுகூரும் முகமாக மன்னார் பெரியகடை பொதுமண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட அஞ்சலி கூட்ட நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன் உள்ளிட்ட 9 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் கைது செய்யப்பட்டனர். இதன் போது செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் ஜோசப் பெணாண்டோவும் கைது செய்யப்பட்டார்.



இன்னொரு இனத்தை அழித்து விழா கொண்டாடுவதுதான் வெற்றி விழாவா?: முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் அரியநேந்திரன் Top News
[Sunday, 2013-05-19 08:32:44]

தமிழ் மக்களுக்கு சுதந்திரமான அரசியல் தீர்வு விடுதலை எப்போது கிடைக்கின்றதோ, அது வரையும் எமது பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுகளை நினைவு கூர்ந்து பிராத்தனை செய்யும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மட்டக்களப்பிலுள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு செல்லுவது போல அடிக்கடி 4ம் மாடிக்கும் செல்கின்றனர். ஒரு மாதத்திற்கு இரண்டு தடவைகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு செல்வது போன்று மாதத்திற்கு ஒரு தடவையாவது 4ம் மாடிக்கு செல்ல வேண்டியுள்ளது.



நோர்வேயில் எழுச்சியுற நடைபெற்ற இன அழிப்பு நாள் நினைவேந்தல் நிகழ்வு Top News
[Sunday, 2013-05-19 07:45:25]

18.05.2013 மாலை 1700 மணிக்கு இன அழிப்பு நாள் நினைவேந்தல் பேரணி ஒஸ்லோ மத்திய தொடரூந்து நிலைத்தின் அருகாமையிலுள்ள சதுக்கத்தில் இருந்து ஆரம்பமாகி நோர்வே பாராளமன்றத்தை சென்றடைந்தது. பாராளமன்றத்தின் முற்பகுதியில் முள்ளிவாய்கால் பெரும் நெருப்பில் கொண்ட கொள்கைக்காக பெரும் புயலை எதிர்கொண்டு வீரகளமாடிய வேங்கைகளுக்கும் அவர்களின் கேடயமாய் நின்று மானப்போர் புரிந்த மக்களுக்கும் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. ஈழத்தமிழ் அவையினர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பேரணியில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கரம்கோர்த்து தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.



நேற்றைய தினம் சுவிஸில் நடைபெற்ற மே-18 முள்ளிவாய்க்கால் செந்நெருப்புநாள் நிகழ்வு! Top News
[Sunday, 2013-05-19 07:38:28]

விடுதலைக்காகப் போராடிய தமிழினத்தை உலக நாடுகள் பலவற்றின் துணையோடு இனப்படுகொலை செய்த, இந்தக்காலத்தின் அதியுச்ச இனப்பேரழிப்பு நடந்த தமிழீழத்தில், இறுதிவரை மண்டியிடாது போராடிய மாவீரர்களுக்கும், மக்களுக்குமான நான்காம் ஆண்டு நினைவு எழுச்சி நிகழ்வான மே-18 முள்ளிவாய்க்கால் செந்நெருப்புநாள், நேற்று சூரிச் மாநிலத்தில் அமைந்துள்ள Helvetia Platz திடலில் நடைபெற்றது. இதில் சுவிஸ் வாழ் தமிழ்மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டிருந்தனர். சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற வணக்க நிகழ்வானது பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகி, சுவிஸ் மற்றும் தமிமீழத் தேசியக்கொடிகள் ஏற்றப்பட்டதனைத் தொடர்ந்து, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன், மலரஞ்சலி செலுத்தப்பட்டது.



'புலிகளின் தலைவர் பிரபாகரன் எரித்திரியாவில் இருப்பது பேய் கதை' - இராணுவப்பேச்சாளர் ருவான்
[Sunday, 2013-05-19 07:25:25]

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற யுத்தத்தில் நந்திக்கடல் களப்பில் பலியாகிவிட்டார். அதனை அவருடைய சகாக்களே உறுதிப்படுத்திவிட்டனர். இந்நிலையில், பிரபாகரன் எரித்திரியாவில் இருப்பது என்பதை இலங்கை படைத்தரப்பு முற்றாக மறுத்துள்ளதுடன். பிரபாகரன் எரித்திரியாவில் இருப்பது என்பது ஒரு பேய்கதையாகும் என்றும் இராணுவம் அறிவித்துள்ளது.



லண்டனில நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கெடுப்பு Top News
[Sunday, 2013-05-19 07:22:29]

பிரித்தானிய தமிழர் பேரவையினால் லண்டனில் நேற்றையதினம் 18-05-13 சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொண்டு எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் மகா நாட்டில் கலந்து கொள்வது என்ற பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனின் முடிவுக்கு தமது கண்டனத்தையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியிருக்கிரார்கள்.



இறந்த உறவுகளுக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் விட முடியவில்லை - மாவை சேனாதிராசா
[Sunday, 2013-05-19 07:17:29]

இறந்தவர்களுக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் விட முடியாத அளவிற்கு இராணுவ அடக்குமுறையை இந்த அரசாங்கம் பிரயோகித்து வருகின்றது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் போது உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் மே 18 நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


TDE_Computers2011
Suresh-remax-2013-01-01
NIRO-DANCE-100213
RoyaShades-l2011(04-12-11)
TamilsGuid-191012-2013
Mahesan supramaniyam 031109
INNSYS-20120930
Ramans2011
Canada Kanthasamy Kovil
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com