Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
June 19, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
சில நோய்களுக்கான அறிகுறிகளும் தப்பிக்கும் வழிகளும்..
[Sunday, 2012-07-22 21:47:35]
News Service

கண்கள் உப்பியிருந்தால்

சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறு நீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.

  

டிப்ஸ்:

உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.

கண் இமைகளில் வலி

அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.

டிப்ஸ்:

போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம்

அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.

டிப்ஸ்:

எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்.

கண்கள் உலர்ந்து போவது

நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச்செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.

டிப்ஸ்:

குறைந்தது எட்டுமணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும் கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற் பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.

தோலில் தடிப்புகள் ஏற்படுதல்

இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள்.

டிப்ஸ்:

அதிகப்படியான மன அழுத்தம் 'ஹார்ட்_அட்டாக்' வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.

முகம் வீக்கமாக இருப்பது

உடலில் தண்ணீர் இழ ப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படு ம்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.

டிப்ஸ்:

ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.

தோல் இளம் மஞ்சளாக மாறுவது

கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும் பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது.

டிப்ஸ்:

அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.

கை கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல்

சீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.

டிப்ஸ்:

விற்றமின் நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண்டும்.

பாதம் மட்டும் மரத்துப் போதல்

நீரிழிவு நோயின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும் செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ வலியையோ கூட உணர்ந்து கொள்ள முடியாது.

டிப்ஸ்:

பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங் கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸி ன் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும் கூட டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள்

தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். இந்த தைராய்டு சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கிறது. இந்த தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாத போது, நம் பாதங்களின் தோல் உலர்ந்துபோகும். பாதங்களை சரி வர பாராமரிக்காமல் இருந்தால் அதிக அளவில் பாதிப்படைந்து விடும்.

டிப்ஸ்:

தைராய்டு பிரச்சினையின் வேறு சில அறிகுறிகள், அதிக சோர்வும் உடல் எடை அதிகமாதலும் இதில் எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்து வரைச் சந்திப்பது அவசியம்.

சிவந்த உள்ளங்கை

கல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம். நோய் வாய்ப்பட்ட கல்லீரலால், நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அதனால் உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக சிகப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை, அதிக சிவப்பான உள்ளங்கைகள்தான் சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்ற பாகங்களைவிட உள்ளங்கையின் தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான்.

டிப்ஸ்:

கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம் சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்தன்மையை மாதம் ஒரு முறையாவது போக்க, ஒரு நாள் பழம் மட்டும் சாப்பிடுங்கள்.

வெளுத்த நகங்கள்

இரத்த சோகை இருக்கிறது. இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும் போது சின்னச் சின்னவேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப்போகும்! ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.

டிப்ஸ்:

இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். ஈரல், கீரைவகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அல்லது டாக்டரின் ஆலோசனையின்படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி_12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.

விரல் முட்டிகளில் வலி

ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டு வலி இருக்கிறது. இதனால் விரல் முட்டிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி அதிகமாக விரல் முட்டிகளில் தான் காணப்படும். அவை வடிவத்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உடனே வர வாய்ப்புண்டு. வயதானவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டுவலி வருவதில்லை. எந்த வயதுக்காரர்களுக்கும் வரலாம்.

டிப்ஸ்:

உடலுக்குத் தேவையான கல்சியம் மற்றும் வைட்டமின் ஙி சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறைக்கலாம். ஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல் பருமனைக் குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கும்.

நகங்களில் குழி விழுதல்

சோரியாஸிஸ் இருக்கிறது. இது ஒரு மோசமான தோல் வியாதி. இதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்களில் குழிகள் வரக்கூடும்.

டிப்ஸ்:

உடனடியாக சரும வியாதி நிபுணரைக் கலந்தாலோசிக்கவும். ஸ்டிரெஸ்ஸைக் குறைத்துக் கொண்டாலே வியாதி அதிகமாவதைத் தடுக்கலாம்.

ஈறுகளில் இரத்தம் வடிதல்.

பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்து விடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.

டிப்ஸ்:

தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.

சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல்

வாய்ப்புண் இருக்கிறது. அதிகமாக ஸ்டி ரெஸ் செய்து கொள்வதாலும் வாய்ப்புண் வரலாம். உட லில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற்றும், இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி-12ன் குறைவினாலும் இப்படி ஏற்படுகிறது.

டிப்ஸ்:

'மல்டி_விட்டமின்' மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் ஸ்டி ரெஸ்ஸைக் குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் இன்பெக்ஷன் குறைந்து வாய்ப்புண் ஆறும்.

வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது.

உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது. உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த டீ ஹை டிரேஷன் ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும் கூட வாய் உலர்ந்து போவதற்கு காரண மாகும்.

டிப்ஸ்:

நிறைய திரவ ஆகாரம் எடுத்துக்கொள்ளவேண்டும். தினமும் குறைந்தது ஒன்றரைலிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன் கூடவே பழங்களையோ பழச்சாறோ அருந்துதலும் நல்ல பலன் தரும்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

உலகிலேயே மிகவும் மெல்லிய ஸ்மார்ட் செல்பேசி வெளியானது! Top News
[Wednesday, 2013-06-19 20:09:15]

உலகின் மிக மெல்லிய ஸ்மார்ட் போனை சீனாவின் ஹூஹாவி அறிமுகப்படுத்தியுள்ளது. நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்தே இதனை ஹூவாவி அறிமுகப்படுத்தியுள்ளது. இது வெறும் 6.18 மில்லிமீற்றர் தடிப்பானது என ஹூஹாவி தெரிவிக்கின்றது. இதுவே உலகின் மிக மெல்லிய ஸ்மார்ட் போன் எனவும் ஹூஹாவி குறிப்பிடுகின்றது. Huawei's Ascend P6 என அழைக்கப்படும் இம்மாதிரி 4.7 அங்குல எல்.சி.டி. திரை. , 1.5GHz quad-core CPU மற்றும் 2GB RAM ஆகியவற்றையும் கொண்டுள்ளது. அண்ட்ரோய்ட் ஜெலி பீன் மூலம் இயங்குகின்றது. இதுமட்டுமன்றி 8 மெகா பிக்ஸல் ரியர் கெமராவைக் கொண்டுள்ளதுடன் 5 மெகா பிக்ஸல் முன் கெமராவையும் கொண்டுள்ளது.



இரப்பையில் சுரக்கும் அமிலத்தில் பிரச்சினையா? இதை முயற்சி செய்து பாருங்கள்!
[Wednesday, 2013-06-19 19:53:47]

பொதுவாக உண்ணும் உணவு செரிமானமாவதற்கு இரைப்பையில் சுரக்கும் அமிலம் தான் உதவியாக உள்ளது. ஆனால் இந்த அமிலமானது அளவுக்கு அதிகமாக சுரக்கும் போது, அவை இரைப்பையை அரிக்க ஆரம்பித்து, வயிற்றில் எரிச்சலை உண்டாக்குகிறது. இவ்வாறு வயிற்றில் ஏற்படும் அதிகப்படியான எரிச்சலைத் தான் அசிடிட்டி (acidity) என்று சொல்வார்கள். இத்தகைய அசிடிட்டி வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமல் இருப்பது, வறுத்த மற்றும் காரமான உணவுகளை அதிகம் சாப்பிடுவது, அதிகமாக புகைப்பிடிப்பது மற்றும் மது அருந்துவது போன்றவை குறிப்பிடத்தக்கவை. மேலும் காலை உணவை தவிர்ப்பது, வெறும் வயிற்றில் நீண்ட நேரம் இருப்பது, கொழுப்பு உள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுவது போன்றவையும் அசிடிட்டியை ஏற்படுத்தக்கூடியவையே. இத்தகைய அசிடிட்டியை சில அறிகுறிகள் கொண்டு அறியலாம்.



கர்ப்பம் தரித்துள்ள காலத்தில் சுத்தம் அவசியம்!
[Wednesday, 2013-06-19 16:04:56]

கர்ப்ப காலத்தில் முதலில் கடைபிடிக்க வேண்டியது சுத்தம். சாப்பிடும்போது கைகளை நன்கு சோப்பு போட்டு கழுகி விட்டு பின்னர் சாப்பிட வேண்டும். உடலை சுத்தமுடன் வைத்துக்கொள்ள தினமும் குளிப்பது அவசியம்.. அதிக சூடான தண்ணீரையும் அதிகக் குளிர்ந்த நீரையும் குளிப்பதற்கு பயன்படுத்தக்கூடாது. கர்ப்பகால இறுதியில் கர்ப்பிணி பெண்களுக்கு முலைகளில் ஏற்படும் சுரப்பு நீர் காய்ந்து பெருக்குகளாக முலைக்காம்பில் இருக்குமாயின் நன்கு தேய்த்து அகற்றி விடுதல் நல்லது.



பல சிக்கல்களை தவிர்க்க உதவும் லிச்சி பழம்!
[Wednesday, 2013-06-19 15:57:39]

லிச்சி பழத்திலிருந்து கிடைக்கும் கலோரி 76. புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, கால்ஷியம், மாவுச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு, தையாமின், ரிபோப்ளோவின்,நியாசின், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. மலச்சிக்கலை கட்டுப்படுத்தி குடலின் தசைநார்களை சீராக இயங்க வைக்கும் நார்ப்பொருள் 0.5 கிராமும், எலும்பு, பல் பலம் பெற உதவும் கால்சியம் 10 மில்லிகிராமும், பாஸ்பரஸ் 35 மிகி, இரும்பு சத்து 0.7 மிகி உள்ளது என்கிறார்கள் உணவுச் சத்து நிபுணர்கள். இதயமும், ஈரலும் உடலின் பிரதான பாகங்கள். இந்த இரண்டு உடல் உறுப்புகளையும் ஆரோக்கியமாக வைப்பதில் லிச்சிக்கு முதலிடம். பொதுவாக லிச்சி மரத்தின் பழம், விதை, பூ, வேர்ப்பட்டை ஆகிய அனைத்துக்கும் மருத்துவ பயன்பாடு அதிகம்.



மின்னில் இயங்கும் கார்களுக்கு மின்சாரம் வழங்கும் சாலைகள்!
[Wednesday, 2013-06-19 15:44:40]

சமீப காலமாக மின்சார கார் வந்து கொண்டே இருக்கிறது. இரண்டு நாளுக்கு முன்பு கூட மின்சார பைக் பற்றி பாத்தோம். இது நடை முறை அளவு சாத்தியத்துக்கு மிக பெரிய அளவில் வராத காரணம் இதில் இருக்கும் சார்ஜ் விஷயம் தான். இந்த சார்ஜுக்காக நாம் சில மணி நேரம் வெயிட் செய்ய வேண்டியதிருப்பதால்தான் இது இன்னும் முழுவதுமாய் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் இந்த பிரச்சினையை போக்கும் வண்ணம் ஸ்வீடனை சேர்ந்த டெஸ்லாஸ் என்னும் நிறுவனம், வோல்வோ மற்றும் ஆல்ஸ்தாமும்டன் இனைந்து ஸ்வீடன் ஹைவேயில் அதி அழுத்த மின்சார கேபிளை ரோட்டிலேயே சேர்ந்து பதித்துள்ளனர். இதன் மூலம் 750 வோல்ட் (மூன்று ஃபேஸ்) கரெண்ட் வண்டி ஒடும் போதே சார்ஜ் ஆகும்.



உலகின் அதி வேக சுப்பர் கணினியை உருவாக்குகின்றது சீனா!Top News
[Tuesday, 2013-06-18 21:01:44]

ஜூன் மாதம் வெளியிடப்பட்ட உலகின் முதல் 500 அதிவேக சூப்பர் கம்ப்யூட்டரகளின் பட்டியலில் முதலிடத்தை சீனா பெற்றுள்ளதுடன் அதன் வேகம் ஏனைய எந்த ஒரு சூப்பர் கம்ப்யூட்டரை விடவும் 2 மடங்கு அதிகம் என்றும் கூறப்படுகின்றது. டியான்ஹே-2 எனப் பெயரிடப்பட்ட இந்த சூப்பர் கம்ப்யூட்டர் அதிகாரப் பூர்வமாக உலகின் நமபர் 1 அதிவேக கணிணி என திங்கட்கிழமை பிரகடனப் படுத்தப் பட்டது. மேலும் இதற்கு முன் நம்பர் 1 இல் இருந்த அமெரிக்காவின் டைட்டன் ஐயும் இது மிஞ்சி விட்டது. உலகளவில் மிகச் சிறந்த கம்ப்யூட்டர் விஞ்ஞானிகளைக் கொண்ட ஓர் குழு ஒவ்வொரு வருடமும் இரண்டு தடவை டாப் 500 அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்களின் விபரங்களை வெளியிட்டு வருகின்றனர்.



எடையை அதிகரிக்கும் தைரோயிட் பிரச்சினை - தீர்வு காண இதோ சில வழிகள்!
[Tuesday, 2013-06-18 20:49:41]

இன்றைய காலத்தில் தைராய்டு இல்லாதவர்களை பார்ப்பதே கடினம். அந்த அளவில் தைராய்டானது நிறைய மக்களுக்கு உள்ளது. அதிலும் தைராய்டு வந்தாலே, உடல் எடையில் மாற்றங்கள் நிகழும். இவ்வாறு ஹைப்போ தைராய்டு இருந்து, உடல் எடை அதிகரித்தால், அதனை குறைப்பது என்பது மிகவும் கஷ்டம். அத்தகையவர்கள் உடல் எடை குறைய வேண்டுமென்று குறைவாக சாப்பிட்டாலும், உடல் எடை நிச்சயம் அதிகரிக்கும். தைராய்டு நோயாளிகளுக்கு ஏற்படும் பெரும் பிரச்சனைகளில் ஒன்று தான் எடை அதிகரித்தல். இதற்கு முக்கிய காரணம், தைராய்டு பற்றாக்குறையே. உடல் எடை அதிகரிப்பதற்கு உடலில் கொழுப்புக்கள் தங்குவதனால் மட்டும் ஏற்படுவதில்லை. உடலில் தண்ணீர் மற்றும் உப்பு அதிக அளவில் இருந்தாலும், உடல் பருமன் அடையும். எனவே தைராய்டு நோயாளிகள் சரியான டயட்டை மேற்கொண்டால், உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைக்கலாம். அதற்கு டயட்டில் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.



சந்தையில் களமிறங்கியுள்ள HTC T328D Desire VC ஸ்மார்ட்போனில் புதிய பல வசதிகள் அறிமுகம்! Top News
[Tuesday, 2013-06-18 19:34:09]

ஹெச்.டி.சி நிறுவனம் புதிய HTC T328D Desire VC என்ற ஸ்மார்ட்போனை சந்தையில் களமிறக்கியுள்ளது. இதன் ஆட்டோ ஃபோக்கஸ், எல்.இ.டி. பிளாஷ் கொண்டு 5 எம்பி திறன் கொண்ட கேமரா உள்ளிட்ட அம்சங்கள் மக்கள் மனதைக் கவரும் வண்ணம் உள்ளது. ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேக கோர்டெக்ஸ் A 5 ப்ராசஸர், ஆண்ட்ராய்ட் பதிப்பு 4 சிஸ்டம், ஏ-ஜி.பி.எஸ். சப்போர்ட் ஆகியவற்றை சில முக்கிய வசதிகளாகக் குறிப்பிடலாம்.



அனைவராலும் கழித்து விடப்படும் வாழைத்தண்டின் மருத்துவக் குணங்கள்!
[Tuesday, 2013-06-18 16:16:47]

அதிக நீர்ச்சத்து- நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. கொழுப்பைக் குறைக்கும். வயிற்றுப் புண்களைச் குணப்படுத்தும். சிறுநீர் எரிச்சலைப் போக்கும். ஊளைச் சதையைக் கரைத்து, உடல் பருமனைக் குறைக்கும். பெண்களின் மாவிடாய் கோளாறு- ரத்த அழுத்தத்துக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது, சிறுநீரகத்தில் தோன்றும் கற்களைக் கரைக்கும். அதிக உடல் பருமன் கொண்டவர்கள், தொப்பை உள்ளவர்கள் அடிக்கடி வாழைத்தண்டை உணவில் சேர்த்துக் கொண்டால் நலம்.



அசுத்தமான வளியை சுவாசிக்கும் பெண்களின் குழந்தைகளுக்கு ஆட்டிஸ நோய் தாக்கும் அபாயம்!
[Tuesday, 2013-06-18 16:10:46]

அதிகளவில் மாசடைந்த வாயுவை சுவாசிக்க நேரிடுகின்ற கர்ப்பிணிப் பெண்களின் குழந்தைகள் ஆட்டிஸம் நோயினால் (மன வளர்ச்சிக் குறைபாடு) பாதிக்கப்படும் அபாயம் பெருமளவில் உள்ளதாக அமெரிக்காவில் நடந்துள்ள ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. இந்தப் பெண்களின் குழந்தைகளுக்கு, வாயு மாசடைதல் அளவு குறைவாகக் காணப்படும் சூழலில் வாழும் பெண்களின் குழந்தைகளைவிட ஆட்டிஸம் ஏற்பட இரண்டு மடங்கு வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.



நூறு சதவீதம் மின்கலத்தில் இயங்கும் அதிவேக மோட்டார் பைக் கண்டுபிடிப்பு!Top News
[Tuesday, 2013-06-18 16:04:33]

பைக் வைத்திருப்பவர்கள் இப்போது அதிகம், காரணம் பெட்ரோல் விலையேற்றத்தைச் சமாளிக்கதான் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.அதே சமயம் சமீபகாலமாக பேட்டரி மூலம் இயங்கும் குட்டி கார்களும், ஹைபிரிட் மூலம் இயங்கும் பெரிய கார்களும் வந்த போது பைக்கை பற்றி யாரும் கண்டு கொள்ளாமல் இருந்த நிலையிலும் வழக்கம் போல் பைக்கள் வந்தன. இதற்கிடையில் இப்போது அமெரிக்காவில் முழுவதும் பேட்டரியால் இயங்க கூடிய பைக்கை (Zero MMX) கண்டுபிடித்து அதை அமெரிக்க ராணுவத்திற்க்கு அளித்துள்ளனர்.



துளசி இலைகளை கொதிக்க வைத்து மூலிகை தேநீராக உட்கொண்டுவந்தால் பிரசவம் எளிதாகும்! - சித்தர்களது ஆயுர்வேத மருத்துவம்..
[Tuesday, 2013-06-18 10:35:56]

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் சாப்பிடும் உணவுதான் கருவின் வளர்ச்சி, பிரசவத்துக்கு பிறகு தாயின் உடல் நலனில் முக்கிய பங்கு வகிக்கிறது. கர்ப்ப காலத்தில் அவ்வப்போது துளசி இலைகளை மென்று சாப்பிடுவது வலியின்றி பிரசவம் ஏற்படும் என்று ஆயுர்வேதம் கூறியுள்ளது. கர்ப்ப காலத்தின் முதல் 3 மாதங்கள், 7வது மாதத்தில் இருந்து கடைசி 3 மாதங்களில் கர்ப்பிணி தனது உணவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்கிறது ஆயுர்வேதம். இந்த காலங்களில் அதிக திரவ உணவுகள், பழங்கள் நல்லது. கரு வளர இவை அதிக பயனளிக்கும்.



நினைவாற்றல் என்றால் என்ன? அதை அதிகரிக்க விஞ்ஞானிகள் சொல்லும் இலகு வழிகள் என்ன..?
[Monday, 2013-06-17 23:18:30]

நினைவாற்றல் என்றால் என்ன? 'ஒரு விஷயத்தை மறக்காமல் இருப்பதுதான் நினை வாற்றல்' என்று பதில் வரும். ஆனால், இது சரியான பதில் இல்லை! மனதில் இருக்கின்ற அறிவில் இருந்து சரியான விவரத்தைச் சரியான நேரத்தில் வெளிப்படுத்தும் திறமைதான் நினைவாற்றல் என்கிறார் கள் விஞ்ஞானிகள்! இதற்கு அமெரிக்க விஞ்ஞானிகள் கூறும் காரணங்களை பாருங்களேன். உங்களுக்கே உண்மை விளங்கும்.



Leonid Rogozov என்பவர் தான் தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்து கொண்ட முதல் மருத்துவர். Top News
[Monday, 2013-06-17 22:22:48]

1961 ஆம் ஆண்டு 27 வயதான Leonid Rogozov க்கு கடும் வயிற்று வலியும் காய்ச்சலும் வந்தது.அவரே தன்னை பரிசோதித்து பார்த்த போது அவருக்கு குடல் அழற்சி நோய் இருப்பதை கண்டு பிடித்தார். குடல் அழற்சி நோய் மோசமாக இருப்பதால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் இல்லை என்றால் குடல் வால் வெடித்து, உயிருக்கே ஆபத்தை உண்டாக்கும்.அதனால் அவரே அவருக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிவெடுத்தார்.



ஏழே நாட்களில் முகப் பொலிவை பேண என்ன செய்ய வேண்டும்?
[Monday, 2013-06-17 21:06:00]

அனைவருக்குமே நன்கு வெள்ளையாகவும், அழகாகவும் மாற வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக கடைகளில் விற்கும் நிறைய அழகுப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். ஆனால் எந்த பலனும் இருக்காது. அவ்வாறு பாக்கெட்டில் இருக்கும் பணத்தை செலவழித்து, கெமிக்கல் கலந்த அழகுப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவதை விட, ஒருசில இயற்கை முறைகளை பின்பற்றினால், சருமம் அழகாக இருப்பதோடு, ஆரோக்கியமானதாகவும் இருக்கும். என்ன இயற்கை முறைகள் என்று கேட்கலாம். அது வேறொன்றும் இல்லை, முகத்தை கழுவுதல், ஃபேஸ் பேக் போடுதல், நிறைய தண்ணீர் குடித்தல், ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுதல், உடற்பயிற்சிகளை பின்பற்றுதல் என்று பல உள்ளன.



புரியாத புதிராக இருக்கும் சில மருத்துவக் கேள்விகளுக்கான விடைகள்!
[Monday, 2013-06-17 20:38:50]

பெப்டிக் அல்சர் என்பது என்ன?

சாப்பிட்டு வயிறு காலியானவுடன் வலி ஏற்படும். இதற்கு பெப்டிக் அல்சர் என்று பெயர். இந்த பிரச்னைக்கு எண்டோஸ்கோபி பரிசோதனை செய்து பார்த்து உணவு முறையில் மாற்றம் செய்து மருந்து எடுத்துக்கொண்டால் சரியாகிவிடும்.



உயிர்கொல்லி புற்றுநோயின் வகைகளும் அவற்றின் அறிகுறிகளும்!
[Monday, 2013-06-17 16:09:24]

எவ்வளவு தான் நவீன மருத்துவ கண்டுபிடிப்புகள் இருந்தாலும், புற்றுநோய் ஒரு உயிர்கொல்லி நோயாகவே உள்ளது. ஏனெனில் உலகில் உள்ள நோய்களிலேயே புற்றுநோயின் தாக்கத்தினால் தான் அதிக அளவு உயிரிழப்பானது ஏற்படுகிறது. இத்தகைய உயிரிழப்புக்களை தடுப்பதற்கு ஒரே வழியென்றால், ஆரம்பத்திலேயே புற்றுநோயின் அறிகுறிகளை அறிந்து, அதற்கேற்றாற் போல் சிகிச்சைகளை மேற்கொண்டால், அதிலிருந்து தப்பிக்க முடியும். மேலும் புற்றுநோயில் நிறைய வகைகள் உள்ளன. இவை அனைத்துமே ஒரே மாதிரியான அறிகுறிகளை கொண்டிருக்காது. ஒவ்வொரு புற்றுநோயும் ஒவ்வொருவிதமான அறிகுறிகளைக் கொண்டிருக்கும். வேண்டுமெனில் ஒருசில பொதுவான அறிகுறிகளான சோர்வு, காய்ச்சல், குறைவான இரத்தம் மற்றும் எடை குறைவு போன்றவை உள்ளன.



மின்னல் வேகத்தில் கண்களைத் தாக்கும் கணினி!
[Monday, 2013-06-17 15:41:32]

இன்றைய பறக்கும் யுகத்தில் கணினி பக்கத்தில் அமர்ந்தபடி தான் எல்லா வேலைகளும் செய்து முடிக்கப்படுகின்றன. தொழில் நுட்ப வளர்ச்சிக்கு இது உற்சாகத்தை அளிக்கக்கூடியது என்றாலும் உடல்நலத்துக்கு கேடு என்கிறது மருத்துவ ஆய்வு. கணினி முன் அமர்ந்து பணி செய்வபர்களில் ஆண்கள் தான் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீங்களும் அந்த வரிசையில் உள்ளவர்கள் என்றால் இதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். கணினி முன் அதிகநேரம் அமருபவர்களுக்கு முதல் பாதிப்பு ஏற்படும் பகுதி கண்தான். ஆகையால் அதில் இருந்து தப்பித்துக் கொளள சில வழிகள்....



ஜெட் என்ஜினில் இயங்கும் வேகம் கூடிய துவிச்சக்கர வண்டி தயாரிப்பு!Top News
[Monday, 2013-06-17 15:36:02]

இங்கிலாந்தைச் சேர்ந்த, பல கின்னஸ் சாதனைகளுக்கு சொந்தக்காரரான கொலின் புர்சி ஜெட் என்ஜினுடன் கூடிய சைக்கிளொன்றைத் தயாரித்துள்ளார். வீட்டில் தயாரித்த ஜெட் என்ஜினை அவர் தனது சைக்கிளுக்கு பொருத்தியுள்ளார். இதன்மூலம் மணித்தியாலத்திற்கு 50 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க முடியுமென அவர் தெரிவிக்கின்றார். பார்ப்பதற்கு மிகவும் ஆபத்தானதாக இச் சைக்கிள் தோன்றுகின்றது. தற்போது 32 வயதான கொலின் இச் சைக்கிளுக்கு 'நோரா' எனப் பெயரிட்டுள்ளார். இவர் இதற்கு முன்னரும் பல கண்டுபிடிப்புகளை இணையத்தின் ஊடாக அறிமுகப்படுத்தியுள்ளார். தற்போது இவர் தனது புதிய சைக்களில் தொடர்பான காணொளியை யுடியூப்பில் வெளியிட்டுள்ளார்.



மைக்ரோசொப்ட் மற்றும் பேஸ்புக்கிடமிருந்து தனிநபர் தகவல்களை அமெரிக்க அரசு கோருவது உறுதியாகியது!
[Sunday, 2013-06-16 15:07:25]

வெள்ளி இரவு உலகின் மிகப்பெரிய இணைய நிறுவனங்களான Facebook மற்றும் Microsoft ஆகியவை அமெரிக்க அரசு தனிநபரின் விடயம் தொடர்பாக தம்மிடையே விடுத்த கோரிக்கை தொடர்பாக தகவல்களை வெளியிட்டுள்ளது இதன் அடிப்படையில் 2012 ஆம் ஆண்டு இறுதி 6 மாதங்களில் மட்டுமே அமெரிக்க அரச உளவு நிறுவனங்கள் இநத உரிமை மீறல் செயற்பாடு இருந்தது என இவை தெரிவித்துள்ளன.


TDE_Computers2011
INNSYS-20120930
Suresh-remax-2013-01-01
Ramans2011
NIRO-DANCE-100213
TamilsGuid-191012-2013
RoyaShades-l2011(04-12-11)
Mahesan supramaniyam 031109
AJRwindows22.05.13
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com