Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 22, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
சிறைகளில் உயிர் உறிஞ்சப்படும் தமிழர்கள்! அனைத்துலகத்தின் உடனடி தலையீடு அவசியம்.- தமிழர் நடுவம் - பிரான்ஸ் -Top News
[Saturday, 2012-07-14 08:17:08]
News Service

சிங்கள இனவெறி ஆட்சியாளர்களின் கொடுஞ்சிறைகளில் வதைபடும் தமிழர்களின் துயரம், இன்றும் மிகமோசமான அனுபவங்களுடன் தொடரவே செய்கின்றது.

  

அனைத்துலகத்தின் கண்டனங்களுக்கு மத்தியிலும், தமிழர்களுக்கெதிரான கொடுமைகளை சிங்களம் தங்குதடையின்றித் தொடர்கின்றது என்பதற்கு, அண்மையில், வவுனியாச் சிறையில் நடைபெற்ற கொடுமைகளே சாட்சி.

தமிழ் அரசியல் கைதிகள் மீதான படுகொலைகள், வெறித்தனங்கள், சிறீலங்காவை ஆட்சிபுரிந்த அனைத்து ஜனாதிபதிகள் காலத்திலும், திட்மிட்டமுறையில், அரச அங்கீகாரத்துடன் நடந்தேறி வந்திருக்கின்றன.

ஜே.ஆர். ஜெயவர்த்தனா சனாதிபதியாக இருந்த காலத்தே, 1983 ஆம் ஆண்டு யூலை மாதம், கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில், சிறை அதிகாரிகள், இராணுவத்தின் ஒத்துழைப்புடன் அவர்களின் முன்னிலையில் சிங்களக் கைதிகள் இரு கட்டங்களாக நடத்திய கொலைவெறித் தாண்டவத்தில், 52 க்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் மிகக் கோரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.

சந்திரிகா ஆட்சிக்காலத்தில், 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், பிந்துனுவேவாவில், புனர்வாழ்வு முகாம் என்ற பெயரில் அமைக்கப்பட்ட சிறைக்கூடத்தில், இரண்டு சிறுவர்கள் உட்பட 26 தமிழர்கள், குத்திக் குதறிக் கொலை செய்யப்பட்டனர்.

அயல்கிராமங்களில் இருந்து, கொண்டுவரப்பட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிங்களக் குண்டர்கள், கோடரிகள், வாள், கத்திகள் பொல்லுகளுடன், முகாம் உள்நுளைந்து, நிராயுதபாணிகளாக இருந்த தமிழர்களை வேட்டையாடினர். ஆயுதம் தரித்த பொலிஸாரும், சிறைக்காவலர்களும் வேடிக்கை பார்த்தபடி இருக்க இக்கொடுமை அரங்கேற்றப்பட்டது.

இதுதவிர, ஒருவர் இருவராக, சிறைச்சாலைகளில் வைத்து, தற்கொலைகள் என்ற பெயரிலும், தப்பிக்க முனைந்தபோது சுடப்பட்டார்கள் என்ற பெயரிலும், குழுச்சண்டைகள், கைதிகள் மோதல் என்ற பெயரிலும் சிறைக்குள்ளே வைத்து தமிழ் அரசியல் கைதிகளின் உயிர்கள் காலத்திற்குக் காலம் பிடுங்கப்பட்டன.

தமது அசௌகரியங்களை தெரியப்படுத்தும்போதும், நீண்டகாலம் நீதி விசாரணையின்றித் தடுத்துவைக்கப்பட்டிருப்பதை எதிர்த்து அமைதியான முறையில் எதிர்ப்புகளை வெளிப்படுத்துகின்றபோதும், தமிழ் அரசியல் கைதிகள் மிருகத்தனமான முறையில் தாக்கப்படுகின்றனர். படுகொலை செய்யப்படுகின்றனர்.

இந்த வரிசையில், கடந்த வாரம் வவுனியாச் சிறையில் சிங்கள அதிரடிப்படையினரால், நடத்தப்பட்ட வெறித்தனமான தாக்குதலில், கால் கைகள் முறிக்கப்பட்ட நிலையில், கணேசன் நிமலரூபன் என்ற அரசியல் கைதி படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார். மேலும் பல தமிழ்க் கைதிகள், படுகாயங்களுடன் நினைவுகள் தப்பிய நிலையில், சிங்களப் பகுதிகளில் உள்ள வைத்திய சாலைகளில், இரும்புச் சங்கிலிகள் பிணைக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பல கைதிகள், வைத்திய சிகிச்சைகள் வழங்கப்படாமலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச விதிமுறைகளுக்கு அமைய, தமது கட்டுப்பாட்டில், கைதிகளாக வைக்கப்பட்டுள்ளவர்களின் முழுமையான பாதுகாப்பை எச்சந்தர்ப்பத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் உறுதிப்படுத்த வேண்டியவர்களே, இப்படுகொலைகளையும், காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களையும் புரிகின்றனர் என்பதே, சிறீலங்காவின் நடைமுறையாகவுள்ளது.

கணேசன் நிமலரூபனைப் சிறைக்குள் வைத்துப் படுகொலை செய்த சிங்கள அரசு, போலி மருத்துவச் சான்றிதழ்களில் பெற்றோரின் கையொப்பத்தைக் கேட்டு மிரட்டுகின்றது. படுகொலை செய்யப்பட்ட தமது ஒரே மகனின் உடலைப் பொறுப்பேற்று தமது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்வதற்குக்கூட சிங்கள அரசு நிமலரூபனின் பெற்றோருக்கு உரிமை மறுத்திருக்கின்றது.

சிங்களச் சிறைகளில் வாடும், பல்லாயிரக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள், நீதிவிசாரணைகள் இன்றி நெடுங்காலமாக கொடுத்துயர் அனுபவித்துவருவது இருண்ட சிறைகளைத் தாண்டி வெளியே தெரிவதில்லை. தவிர்க்கமுடியாமல் சில சம்பவங்கள் மாத்திரம் வெளிச்சத்திற்கு வருகின்றன. தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் குடும்பத்தினர், தினந்தோறும் அனுபவித்துவரும் வேதனைகள் பல. அவையும் கவனிக்கப்படுவதில்லை.

சிங்கள அரசால், தமிழ் அரசியல் கைதிகள் மீது திட்டமிட்டு, மிலேச்சத்தனமான முறையில், கட்டவிழ்த்து விடப்படும் இந்தக் கொடூரங்கள் உடனடியாக தடுத்து நிறுத்தப்படுவதுடன், சர்வதேசப் பாதுகாப்பை, தமிழ் அரசியல் கைதிகளுக்காகக் கோருவது புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களினதும், தமிழ் அமைப்புக்களினதும் முக்கியமான கடமையாகின்றது.

தமிழர் நடுவம் இதுகுறித்த கோரிக்கைகளை, மனித உரிமை அமைப்புக்கள், மற்றும், இதுவிடயத்தில் தீவிர பங்காற்றக்கூடிய நாடுகளிடம் முன்வைக்கின்றது.

சர்வதேச சட்டங்கள், சர்வதேச நியதிகளுக்கு உட்பட்டு, போர்க்கைதிகள் தொடர்பான சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்க சிறீலங்கா அரசு தொடர்ச்சியாக மறுக்கும் போக்கில், சர்வதேச சமூகம் இது குறித்த தீர்க்கமான உடனடித் தீர்மானத்திற்கு வரவேண்டும்.

காலங்காலமாகத் தொடரும் இச்சிறைக் கொடுமைகளில் இருந்து, தமிழ் அரசியல் கைதிகளைக் காப்பாற்ற, சர்வதேச சமூகம் முடிவுகளை எடுத்து, அவற்றை நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும் எனத் தமிழர் நடுவம் கோருகின்றது.

சிறைகளில், தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் இத்தகு கொடூரங்கள், நல்லிணக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லாத சூழலை நிரத்தரமாகத் தக்கவைத்துக் கொள்வதுடன், தமிழ் சிங்கள உறவுகளில், இன்னும் தீவிரமான பகை உணர்வு நிரம்பப்பெற்ற பெரும் இடைவெளியைத் தோற்றுவிக்கும் என்பதை, சர்வதேச சமூகத்திடம் தமிழர் நடுவம் இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விளைகின்றது.

இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காண்பதில் அக்கறை கொண்டிருப்பதாகக் கூறும், இந்தியா உட்பட்ட மேற்குலக நாடுகளுக்கு, இந்த யதார்த்த நிலையை தமிழர் நடுவம் சுட்டிக்காட்டுவதுடன், இதுவிடயத்தில், காத்திரமான நடவடிக்கைகளே, சமாதானத் தீர்வுக்கான எண்ணங்களுக்கு வலுச் சேர்க்கும் என்பதை தெளிவுபடுத்துகின்றது.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

தமிழர் நடுவம் - பிரான்ஸ்

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

உரிமைகளுக்காக குரல் கொடுக்காதுவிடின் சீனிக்காகவும், பாணுக்காகவும் காத்துக்கிடக்கும் நிலை உருவாகும் - ரணில்!
[Tuesday, 2013-05-21 21:23:41]

சிறிமாவோ ஆட்சிக்காலத்தைப் போன்று நாட்டு மக்களை ஒருவேளை உணவிற்காக வரிசையில் நிறுத்தும் முயற்சிலேயே தற்போதைய அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. பொதுமக்கள் நிலமையை புரிந்து கொண்டு உரிமக்காக குரல்கொடுக்காவிடின் பாணுக்காகவும் சினிக்காகவும் காத்துக்கிடக்கும் நிலையே உருவாகும். என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஜக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தொழிச்சங்கங்கள் ஒன்றிணைந்து நடத்தும் தேசிய அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கண்டு அரசாங்கம் பயந்து போய் உள்ளது. ஆகவே தற்போது நாட்டில் காணப்படுகின்ற மக்கள் எழுச்சி 2014 ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறியாகும்.இதனை இலக்காகக் கொண்டே நாம் செயற்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.



வாழ்க்கையில் விரக்தி - சென்னையில் தாய்,மனைவி,மகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்த இலங்கைத் தமிழரால் பரபரப்பு!
[Tuesday, 2013-05-21 20:17:06]

சென்னையில் டிராவல்ஸ் நிறுவனம் வைத்திருந்த இலங்கைத் தமிழர் தனது தாய், மனைவி மற்றும் மகளின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தானும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இலங்கையின் உள்நாட்டு போர் காரணமாக இலங்கைத் தமிழரான சுந்தரேசன் என்பவர் தனது தாயுடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் வந்து குடியேறினார்.



எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்த வேலை நிறுத்த போராட்டம் படு தோல்வி!
[Tuesday, 2013-05-21 20:02:19]

இலங்கையின் இரும்புத் தொழிச் சங்கம் என ஒருகாலத்தில் பேசப்பட்ட ஜேவீபீ தொழிற் சங்கமும், அதிக உறுப்பினர்களைக் கொண்டதாக கணிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கமும் ஏற்பாடு செய்திருந்த வேலை நிறுத்த போராட்டம் படு தோல்வியடைந்துள்ளது. வேலை நிறுத்த போராட்டம் நடந்தது என்பதற்கான அடையாளத்தையே இலங்கையில் காண முடியவில்லை எனக் கூறப்படுகிறது. கொழும்பில் தனியார் வர்த்தக நிலையங்கள் கூட அதாவது கோட்டை புறக்கோட்டை கடைகள் எல்லாம் இயங்கியது. வெளி மாவட்டங்களிலும் சகலதும் இயங்கியதாக தெரியவருகின்றது. அரசாங்கம் அச்சுறுத்தி அரச ஊழியா்களை வேலைக்கு வர வைத்தது என்று கூறினாலும் தனியார் நிறுவனங்கள் கடைகளுக்கு என்ன நடந்தது? ஒன்று கூட மூடப்படவில்லை என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.



விடுதலைக்கான இன்றைய கனவும் நாளைய வெற்றியும்: - முரசறையப்பட்ட தமிழீழ சுதந்திர சாசனத்தின் உள்ளடக்கம் வெளிவந்தது ! Top News Top News
[Tuesday, 2013-05-21 19:57:07]

2009ம் ஆண்டுக்கு பின்னரான ஈழவிடுதலைப் போராட்டத்தின் விடுதலைப்பாதையின் பெரும் இராஜதந்திர முன்னகர்வாக மே-18 முள்ளிவாய்க்கால் நான்காம் ஆண்டு கூட்டுநினைவேந்தல் நாளில் உலகத் தமிழர்களின் முரசறைவாக அமைந்த தமிழீழ சுதந்திர சாசனத்தின் உள்ளடக்கம் வெளிவந்துள்ளது. தமிழீழத் தாயக மக்கள் மக்கள் உட்பட 1 இலட்சத்துக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்மக்கள் பங்கெடுத்த உருவாக்கியிருந்த தமிழீழ சுதந்திர சாசனத்தின் உள்ளடக்கத்தின் விபரம் :



ஈழத்தமிழர்கள் உயிரிழக்கக் காரணமானவருக்கு வரவேற்பு கொடுப்பது தேசத்திற்கு பெருமை தரக்கூடியதா? சீமான் கேள்வி!
[Tuesday, 2013-05-21 19:36:12]

இலங்கையில் தமிழ் மக்கள் உயிரிழக்கக் காரணமானவரை அழைத்து, இரத்தின கம்பள வரவேற்பு கொடுப்பது தேசத்திற்கு பெருமை தரக்கூடியதா? என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். நாம் தமிழர் கட்சி கூட்டத்துக்கு யாசின் மாலிக்கை அழைத்தமை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,



கனேடிய சட்டங்களுக்கு அமைவாக தமிழ் மக்களின் சுதந்திர போராட்டத்துக்கு கரங்கோர்த்து நிற்பேன் - ராதிகா
[Tuesday, 2013-05-21 19:28:40]

கனேடிய சட்டங்களுக்கு அமைவாக தமிழ் மக்களின் சுதந்திர போராட்டத்துக்கு கரங்கோர்த்து நிற்பேன் என கனேடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் தெரிவித்துள்ளார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் கனேடிய மண்ணில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த மே-18 முள்ளிவாய்க்கால் துக்க நாள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.



மக்களின் ஒருமித்த எதிர்ப்பைக் கண்டு அரசு பயந்துள்ளது - கே. டி. லால்காந்த
[Tuesday, 2013-05-21 19:16:53]

வேலை நிறுத்தத்திற்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்ட செயற்பாடுகள் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளன. நாம் அரசாங்கத்திற்கு எதைக் கூற விரும்பினோமோ அந்த விடயத்தை இன்று வெற்றிகரமாக செய்து காட்டியுள்ளோம் என தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தலைவர் கே.டி. லால்காந்த தெரிவித்தார். நிப்போன் ஹோட்டலில் இன்று செவ்வாய்க்கிழமை தொழிற்சங்க ஒருங்கிணைப்பிற்கான இணைப்புக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



வட மாகாணசபை தேர்தல் தமிழீழத்திற்கு வழி வகுக்கும் - பொதுபல சேனா
[Tuesday, 2013-05-21 17:12:15]

வட மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டிய அவசியமில்லை. முதலில் அங்கு சிங்கள மக்களை பதிவுசெய்து குடியேற்ற வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். பொதுபல சேனாவின் தலைமையலுவலகமான சம்புத்தத்வ ஜயந்தியில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்; வடக்குத் தேர்தல் தேவையில்லை. அதனை நடத்துவதற்கு பொதுபல சேனா ஒருபோதும் அனுமதிக்காது. முதலில் அங்கு பெரும்பான்மை இனத்தவர்களாகிய சிங்கள மக்களை பதிவு செய்து குடியமர்த்த வேண்டும்.



சிறைக் கைதிகளுடன் தொலைபேசி பேச்சு எதற்கு? 4ம் மாடியில் வைத்து சிவசக்தி ஆனந்தனிம் விசாரணை!
[Tuesday, 2013-05-21 16:10:58]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கொழும்பில் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (21) காலை நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். வவுனியா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதிகள் அவருக்கு எடுத்த தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பாகவே அவர் மீது குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர். குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்கு வருமாறு வவுனியா பொலிஸ் நிலையம் ஊடாக அழைப்பாணை அனுப்பப்பட்டதையடுத்தே சிவசத்தி ஆனந்தன் இன்று (21) காலை 10.00 மணிக்கு கொழும்பிலுள்ள பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குச் சென்றிருந்தார்.



முஸ்லிம் மக்களை ஒடுக்குமுறைக்கு உட்படுத்துவதில் இலங்கை மும்முரம் - அமெரிக்கா!
[Tuesday, 2013-05-21 16:04:56]

இலங்கையில் முஸ்லிம் மக்கள் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. 2012ம் ஆண்டுக்கான அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் சர்வதேச மதச் சுதந்திர அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கிறிஸ்தவ தேவாயலங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக விசாரணை நடாத்தி தண்டனை விதிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



தனிநபர் பிரேரணை மூலம் 13ம் திருத்தத்தை நீக்க நடவடிக்கை!
[Tuesday, 2013-05-21 16:00:03]

13ம் திருத்தச் சட்டம் மற்றும் மாகாண சபை முறையை இரத்து செய்யுமாறு கோரி பாராளுமன்றில் தனிநபர் பிரேரணை ஒன்றை முன்வைக்கவுள்ளதாக ஹெல உறுமய கட்சியின் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். குறித்த பிரேரணை இந்த வாரம் பாராளுமன்றில் சமர்பிக்கப்படும் என அவர் தெரிவித்தார். 13ம் திருத்தச் சட்டமும் மாகாண சபை முறையும் பாராளுமன்ற முறைக்கு மாறானவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவில் மாநிலம் ஒன்று அதிகாரத்தை மீறி செயற்பட்டால் அம்மாநிலத்தின் அதிகாரத்தை மத்திய அரசு பொறுப்பேற்க முடியும்.



படைப் புலனாய்வாளர்களினால் முல்லைத்தீவு வாக்காளர் பட்டியல் சேகரிப்பு!
[Tuesday, 2013-05-21 15:52:52]

2013 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியலை தயாரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள 2012 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் பட்டியல் முல்லைத்தீவு மாவட்டக் கிராம சேவகர்களிடம் இருந்து படைப் புலனாய்வாளர்கள் பெற்று வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது நாடளாவிய ரீதியில் 2013 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியல் தயாரிப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இதற்கான 2012 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் ஒவ்வொரு கிராம சேவையாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரக் கிராம சேவகர் பிரிவுகள் மற்றும் நகரப் பகுதிக் கிராம சேவகர் பிரிவுகளில் இவ்வாறு வழங்கப்பட்ட வாக்காளர் பெயர்ப் பட்டியலை இராணுவ முகாம்களில் இருந்து வந்து தம்மைப் புலனாய்வாளர்கள் என அறிமுகப்படுத்துபவர்கள் பெற்றுச் செல்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.



கனகராயன்குளத்தில் 18 வயதுடைய பெண் மீது பாலியல் துஸ்பிரயோகம்:
[Tuesday, 2013-05-21 15:43:44]

வவுனியா கனகராயன்குளத்தில் விசேட தேவையுடைய பெண் மீது பாலியல் துன்புறுத்தல் இடம்பெற்றுள்ளதாக சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜெ. ஜெயக்கெனடி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
கனகராயன்குளம் வடக்கு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட கிராமத்திலேயே வீட்டில் தனியாக விசேட தேவைக்குரிய 18 வயதுடைய பெண் இருந்த சமயம் மீது இச் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவித்தார்.



கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்க மன்மோகன் சிங்கிற்கு கடிதம் அனுப்பினார் தமிழக முதல்வர்!
[Tuesday, 2013-05-21 15:42:57]

கச்சதீவை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதலமைச்சர் ஜெயலலிதா திங்கட்கிழமை அனுப்பிவைத்துள்ள அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கச்சதீவை இலங்கையிடம் இருந்து மீண்டும் இந்தியாவுக்கு மீட்பது தொடர்பாக கடந்த 3-5-2013 அன்று தமிழக சட்டசபையில் கொண்டு வந்து ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பற்றி உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். அந்த தீர்மான நகலை இந்த கடிதத்துடன் இணைத்துள்ளேன்.



இந்திய இராணுவத்தை விரட்டவே புலிகளுக்கு பிரேமதாஸ ஆயுதங்களை வழங்கினார் - சஜித் விளக்கம்!
[Tuesday, 2013-05-21 09:49:06]

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸா ஆயுதங்களை கொடுத்தது ஏன்? என்று ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியின் மகனுமான சஜித் பிரேமதாஸ தெளிவுப்படுத்தியுள்ளார். யுத்தம் நிறைவடைந்து 4 ஆண்டுகள் பூர்த்தியடைந்ததை கொண்டாடும் வகையில் காலி முகத்திடலில் சனிக்கிழமை நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் ஜனாதிபதி புலிகளுக்கு ஆயுதம் கொடுத்தார். அத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலமாக நாட்டைபிரிப்பதற்கு முயன்றனர் என்று குற்றஞ்சாட்டினார்.



இராணுவத்தின் காணி அபகரிப்புக்கு எதிரான 1478 ரிட் மனுக்கள் மீதான விசாரணை 27 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!
[Tuesday, 2013-05-21 09:38:00]

யாழ்ப்பாணத்தில் தமக்கு சொந்தமான காணிகளை இழந்துள்ள 1,474 பேர் தாக்கல் செய்துள்ள ரிட் மனுக்கள் மீதான விசாரணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் மே மாதம் 27 ஆம் திகதி வரையிலும் ஒத்திவைத்துள்ளது. தமக்கு சொந்தமான 6381 ஏக்கருக்கு கூடுதலான் பாரம்பரிய தனியார் நிலங்களை சுவீகரிக்க அரசாங்கம் எடுக்கு நடவடிக்கைகளை எதிர்த்தே கடந்த 15 ஆம் திகதி புதன்கிழமை இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நீதியரசர் கே. ஸ்ரீஸ்கந்தராஜா முன்னிலையில் நேற்று ஆராயப்பட்டன. 1474 ரிட் மனுக்களையும் ஏற்கவேண்டும் என்பதற்கான ஆதாரங்களை மே மாதம் 27 ஆம் திகதி முன்வைக்குமாறு பணித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் அன்றைய தினத்திற்கே வழக்கையும் ஒத்திவைத்தது.



தமிழர் இனவழிப்பு நினைவு நாள் நிகழ்வும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு நேரலையும். - பிரித்தானியா
[Tuesday, 2013-05-21 09:37:16]

தமிழீழ மக்களுக்கு எதிராக சிறிலங்கா படைகள் பெருமெடுப்பில் இனவழிப்பை மேற்கொண்டு தமிழீழ நிலப்பரப்பை தமது இராணுவ ஆக்கிரமிப்புக்குள் கொண்டுவந்து நான்கு வருடங்கள் நிறைவடைகின்றன. எமது தாயக நிலப்பரப்பில் சிங்கள அரச இயந்திரத்தால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பின் மூலம் சர்வதேசத்தின் கண்முன்னே எம்மக்கள் கொத்துக்கொத்தாக படுகொலை செய்யப்பட்டது மாத்திரமல்லாமல் இன்றுவரை சிங்கள அரசானது பல்வேறு வடிவங்களில் எம்மீதான இனவழிப்பை மேற்கொண்டுவருகிறது.



நிறைவேற்று அதிகாரம் உள்ளபோது வடக்கு தேர்தல் பற்றி அச்சம் கொள்ளவேண்டியதில்லை! - மல்வத்து பௌத்த பீடம் அரசுக்கு ஆலோசனை!
[Tuesday, 2013-05-21 09:34:47]

இலங்கையில் எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் நடத்தப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாக மாகாணசபைகளுக்கு உள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை ஒழித்துவிடுவதற்கான முஸ்தீபுகள் நடப்பதாக ஆளுந்தரப்பு தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலைமையில், தேர்தலுக்கு முன்னதாக அந்த அதிகாரங்களை ஒழிப்பதில் அரசாங்கம் அக்கறை செலுத்தத் தேவையில்லை என்று நாட்டில் செல்வாக்கு மிக்க மல்வத்து பௌத்த பீடம் அரசாங்கத்துக்கு ஆலோசனை கூறியுள்ளது.



பாடுமீன் சமூக அபிவிருத்திச் சங்கம் பிரான்ஸ் - இலவசபாட வகுப்புக்களை நடாத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
[Tuesday, 2013-05-21 09:30:17]

பிரான்ஸ் நாட்டை தளமாக கொண்டு செயற்படும் பாடுமீன் சமூக அபிவிருத்திச் சங்கம் பின் தங்கிய பகுதிகளில் கல்வி கற்கும் மாணவர்களில கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் இலவசபாட வகுப்புக்களை நடாத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.



எமது படையினரை நாம் எங்கு வைத்திருப்பதென்பதை தீர்மானிக்கும் உரிமை சர்வதேச சமூகத்துக்கு கிடையாது: - இராணுவத் தளபதி ஜெகத் ஜயசூரியா
[Tuesday, 2013-05-21 09:27:05]

வடக்கில் நாம் பெரும் படைக்குறைப்பை மேற்கொண்டுள்ளோம் போர்க்காலத்தில் யாழ். மாவட்டத்தில் 16 இராணுவ முகாம்கள் இருந்தன. தற்போது 3 இராணுவ முகாம்கள் மாத்திரமே அங்குள்ளன என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜெகத் ஜயசூரியா தெரிவித்துள்ளார். அரச வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே இராணுவத் தளபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


INNSYS-20120930
Mahesan supramaniyam 031109
RoyaShades-l2011(04-12-11)
TDE_Computers2011
Suresh-remax-2013-01-01
NIRO-DANCE-100213
Ramans2011
Canada Kanthasamy Kovil
TamilsGuid-191012-2013
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com