Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 24, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
இலங்கையில் தொடரும் அநீதிக்கு விடிவு காணவே"டெசோ' மாநாடு!
[Thursday, 2012-07-12 06:28:37]
News Service

இலங்கையில் தொடரும் அநீதிக்கு விடிவு காண வேண்டும் என்பதற்காக தான், "டெசோ' மாநாடு நடைபெறுகிறது என, தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

  

2013ம் ஆண்டு செப்.,ல் இலங்கை வடக்குப் பகுதியில், தேர்தல் நடத்தப் போவதாக, இலங்கை அதிபர் ராஜபக்ஷே கூறியுள்ளார். ஆனால், தேர்தல் நடைமுறைகள் என்று வாக்காளர் பட்டியல்கள் புதுப்பிக்கப்பட வேண்டும் என சொல்லியிருப்பதில், ஏதோ உள்ளார்ந்த அர்த்தம் இருப்பதாகத் தெரிகிறது. தேர்தல் நடத்துவது கூட பிறகு இருக்கட்டும்.

இலங்கை வவுனியா சிறையில் அடைக்கப்பட்டிருந்த, முன்னாள் விடுதலைப் புலிகள் சிலர், கடந்த மாதம் பூசா முகாமுக்கு மாற்றப் பட்டுள்ளனர். அதை எதிர்த்த மற்ற விடுதலைப் புலிகள், பூசா முகாமுக்கு மாற்றப் பட்டவர்களை மீண்டும் வவுனியா சிறைக்கே மாற்ற, கோரிக்கை வைத்துள்ளனர். இதை மறுத்த சிறை அதிகாரிகள், மூன்று விடுதலைப் புலிகளை ஒரே அறையில் தள்ளி பூட்டி விட்டனர். இதனால், வவுனியா சிறையில் கடந்த மாதம், 30ம் தேதி கலவரம் ஏற்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, வவுனியா சிறையில் இருந்த, 201 கைதிகளும், அனுராதாபுரத்தில் உள்ள சிறைக்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில், தமிழ்க் கைதிகள் பலர் காயமடைந்தனர். கணேசன் நிமலரூபன் என்பவர் இறந்து விட்டார். ஆனால், அவர் மாரடைப்பால் இறந்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிமலரூபனின் உடலை தகனம் செய்து விட்டனர்.

நிமலரூபனின் உடல் முழுக்க ரத்தம் படிந்திருந்ததாகவும், அவருடன் காயம் அடைந்த மற்றொரு கைதி கோமா நிலையில் மருத்துவமனையில் இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. மண்ணின் மைந்தனுக்கு மரணத்தில் கூட மண் உரிமை மறுக்கப்பட்டது மாபாதகம் அல்லவா? இதற்கெல்லாம் ஓர் விடிவு காண வேண்டும் என்பதற்காகத் தான், "டெசோ' மாநாடு நடைபெறுகிறது. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

அவுஸ்ரேலியாவுக்கு தப்ப முயன்ற 5 இலங்கை அகதிகள் கைது - பணம் வாங்கி ஏமாற்றிய மூவருக்கு பொலிஸ் வலைவீச்சு!
[Friday, 2013-05-24 08:03:10]

இலங்கை அகதிகளை, அவுஸ்ரேலியா அழைத்துச் செல்வதாக கூறி, ஐந்து லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு ஏமாற்றிய, மூன்று பேரை போலீசார் தேடுகின்றனர். கோவை, குனியமுத்தூர் அருகே வசிக்கும் அய்யப்பன் என்பவர் வீட்டுக்கு, நேற்று முன்தினம் ஐந்து இலங்கை அகதிகள் உட்பட ஏழு பேர் வந்தனர். குனியமுத்தூர் போலீசார், அய்யப்பன் வீட்டில் தங்கியிருந்தவர்களை சுற்றி வளைத்தனர்; இருவர் தப்பியோடினர். பிடிபட்ட ஐந்து பேரிடம் நடத்திய விசாரணையில், தர்மபுரி மாவட்ட அகதிகள் முகாமைச் சேர்ந்த சங்கர், ரத்தினராஜ், ஹுசூர் முகாமை சேர்ந்த காந்தகுமார், திருச்சி முகாமை சேர்ந்த நாகதீபன் மற்றும் மதுரை முகாமை சேர்ந்த ரமணன், தப்பியோடியவர்கள் தயா மற்றும் முரளி என தெரிந்தது.



கணவர் வெப்கேமிராவில் பார்த்துக் கொண்டிருக்க தூக்குப் போட்டுத் தற்கொலை செய்த பெண்!
[Friday, 2013-05-24 07:59:32]

காதல் திருமணம் செய்த இளம் பெண்,வரதட்சணை பிரச்னையால் , பெற்றோர் வீட்டில் இருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை ஆன்லைன் வாயிலாக கணவன் பார்த்து அதிர்ச்சியடைந்தார். மும்பை புறநகர் பகுதியான ஜுகூ பகுதியைச் சேர்ந்தவர் ஷோபனா ஸ்ருதி (25),இவரும், சுவப்னில் சுர்வி என்பவரும், காதலித்து வீட்டிற்கு தெரியாமல் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். கணவனின் பெற்றோர் இவர்கள் திருமணத்தை ஏற்றுக் கொண்டாலும், வரதட்சணை அதிகமாக கேட்டதால் கணவனும் மனைவியும் சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்தனர்.



"சோனியாவைப் போல நான் இல்லை" - ராகுலின் எச்சரிக்கையால் மிரண்டு போயுள்ள காங்கிரஸ் தலைவர்கள்!
[Friday, 2013-05-24 07:54:13]

காங்கிரஸ் தலைவர் சோனியா மென்மையானவர்; நான் அப்படிப்பட்டவன் அல்ல. கட்சியில் ஒழுங்கீனத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது' என, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் எச்சரித்துள்ளார்.டில்லி மாநில காங்கிரஸ் தலைவர்களுடன், ராகுல், நேற்று ஆலோசனை நடத்தினார்.இந்த ஆலோசனையின் போது, எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட, ஒன்றிய செயலர்கள், கவுன்சிலர்கள் என, அனைவரையும் தனித்தனியே அழைத்து ராகுல் பேசினார்.அப்போது, ராகுல் பேசியதாக, தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது:



துப்பாக்கியால் சுட்டு மிரட்டிய தொழிலதிபரை சிறையிலடைக்க முடியாமல் திணறும் பொலிஸ்!
[Friday, 2013-05-24 07:47:48]

மதுரையை சேர்ந்த தொழிலதிபர் விஜயகர் (50). கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு அபார்ட்மென்டில் வசிக்கிறார். நேற்று முன்தினம் இவர் திடீரென வீட்டை உள்பக்கமாக பூட்டி கொண்டு துப்பாக்கியை காட்டி வெளியே இருந்தவர்களை மிரட்டினார். 14 மணி நேர போராட்டத்துக்கு பிறகு, தப்ப முயன்ற அவரை போலீசார் மடக்கினர். விஜயகரை போலீசார் கைது செய்து 7 பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்தனர். பின்னர் பெருங்களத்தூரில் உள்ள எழும்பூர் 21வது மாஜிஸ்திரேட் வீட்டில் நேற்று காலை ஆஜர்படுத்தினர். புழல் சிறையில் அடைக்க கொண்டு சென்றபோது, அங்கு விஜயகரை சோதித்த மருத்துவர்கள் அவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததால், சிறையில் அடைக்க மறுத்தனர். பின்னர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு விஜயகரை அழைத்து வந்தனர்.



இராணுவம் எந்நேரமும் போருக்குத் தயாராக இருக்க வேண்டும்! - பிரதமர் மன்மோகன்சிங்
[Friday, 2013-05-24 07:42:17]

முறைகேடுகளை தடுக்க ராணுவ தளவாடங்கள் கொள்முதலை வெளிப்படையாக மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். அரியானாவின் குர்கான் நகரில் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்டும் விழா நேற்று நடந்தது. அடிக்கல் நாட்டி பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது: ராணுவ தளவாடங்கள் வாங்குவதில் முறைகேடு நடப்பதாக புகார்கள் வருகிறது. இதை தடுக்க தளவாடங்கள் வாங்குவதற்காக நடைமுறையில் மாற்றம் செய்ய வேண்டும். வெளிப்படையான முறையில் ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் வாங்க புதிய நடைமுறை வகுக்கப்படுகிறது. இதை அமல்செய்யும்போது, முறைகேடுகள் நடப்பதை தடுக்க முடியும்.



பாமகவுக்காக திருமாவளவனை கழற்றிவிட முனைகிறதா திமுக?
[Thursday, 2013-05-23 19:34:22]

பாமக இடம்பெறும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம் பெறாது என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ள நிலையில், இரண்டு திராவிட கட்சிகளுடனும் பாமக கூட்டணி அமைக்காது என அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின்போது, திமுக.கூட்டணியில் பாமகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இணைந்திருந்தது. அதன்பிறகு கடந்த 2012ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்லில் அதிமுகவுடன் பா.ம.க. கூட்டணி அமைத்துக் கொண்டது. அதிலிருந்து பாமகவுக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் பனிப்போர் தொடங்கியது.



ஐபிஎல் சூதாட்டத்தில் தமிழ் நடிகைகளுக்கும் தொடர்பு - மெய்யப்பனே அனுப்பினாராம்!
[Thursday, 2013-05-23 19:21:29]

ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளருமான சீனிவாசன், அவரது மருமகன் குருநாத் மெய்யப்பன் ஆகியோரது சென்னை வீடுகளில் மும்பை போலீசார் சோதனை மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்பாட் பிக்ஸிங் விவகாரத்தில் ஸ்ரீசாந்த், சாண்டிலா, சவான் ஆகிய வீரர்கள் சிக்கினர். சென்னை, கோயம்புத்தூர், மும்பை, கொல்கத்தா என நாடு முழுவதும் பல நகரங்களில் பிக்சிங் தரகர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் முன்னணி தமிழ் நடிகைகளுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், அவர்களும் விசாரிக்கப்படவுள்ளனர்.



நோ பால் போடாத ஸ்ரீசாந்தை கேவலமாகத் திட்டிய புக்கிகள் - வெளிவரும் புதிய தகவல்கள்!
[Thursday, 2013-05-23 19:13:41]

ஐபிஎல் போட்டியில் ஒரு ஓவரின் கடைசிப் பந்தில் நோ பால் போடாதது தொடர்பாக ஸ்ரீசாந்த்தை சூதாட்ட புக்கிகள் அசிங்கம் அசிங்கமாக திட்டிய கதை அம்பலத்திற்கு வந்துள்ளது. மே 9ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையிலான ஐபிஎல் போட்டியின்போது நடந்த பிக்ஸிங் தொடர்பாகவே இந்த வாய்ச்சண்டை நடந்ததாம். இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சாளராக செயல்பட்ட ஸ்ரீசாந்த் சூதாட்ட புக்கிகளுக்கு சிக்னல் காட்டி விட்டு தனது 2வது ஓவரை வீசினார். அதில் அவர் 13 ரன்களை விட்டுக் கொடுத்தார். மொத்தம் இரண்டு ஓவர்கள் வீசிய ஸ்ரீசாந்த் 18 ரன்கள் கொடுத்தார். 2வது ஓவரில் அவர்14 ரன்கள் விட்டுத் தர வேண்டும் என்பது புக்கிகள் பிறப்பித்த உத்தரவாகும். இருப்பினும் 13 ரன்கள்தான் கொடுத்தார் ஸ்ரீசாந்த்.



ஆந்திராவில் வறுத்தெடுக்கும் வெயிலுக்கு நேற்று ஒரே நாளில் 22பேர் பலி!
[Thursday, 2013-05-23 18:38:19]

ஆந்திராவில் அக்னி வெயில் சுட்டெரிக்கிறது. பல மாவட்டங்களில் 104 டிகிரியை கடந்து வெயில் வாட்டி வதைக்கிறது. அதிகபட்சமாக கரீம் நகர் மாவட்டத்தில் 116 டிகிரி வெயில் கொளுத்தியது. ராம் குண்டாவில் 114.8 டிகிரியும், வரங்கல், ஓங்கோல் மாவட்டத்தில் 113 டிகிரியும் வெயில் பதிவானது. கடும் வெயிலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் நேற்று ஒரே நாளில் 22 பேர் பலியாகி உள்ளனர். வரங்கல் மாவட்டத்தில் 7 பேரும், ஆதிலாபாத்தில் 6 பேரும், கரீம் நகரில் 6 பேரும், கிழக்கு கோதாவரியில் 3 பேரும் பலியாகி உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் 48 வயது மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



13 வயதுக்குட்பட்டவர்கள் பேஸ் புக் கணக்கு தொடங்குவதை தடை செய்ய வேண்டும் - மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட் உத்தரவு!
[Thursday, 2013-05-23 18:34:53]

13 வயதுக்குட்பட்டவர்கள் பேஸ் புக் கணக்கு தொடங்குவதை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 18 வயதுக்குட்பட்ட மைனர்கள் பேஸ் புக் போன்ற தளங்களில் கணக்கு தொடங்குவது இந்திய மெஜாரட்டி சட்டம், இந்திய ஒப்பந்த சட்டம், தகவல் மற்றும் தொழில் நுட்ப சட்டத்தை மீறுவதாக உள்ளது. எனவே 18 வயதுக்குட்பட்டவர்கள் பேஸ் புக் போன்ற தளங்களில் கணக்கு தொடங்குவதை தடை செய்ய வேண்டும் என பா.ஜ.க. மூத்த தலைவர் கே.என்.கோவிந்தாச்சாரியா டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.



காந்தியை அடைத்திருந்த எரவாடா சிறைக்கு இரவாடு இரவாக மாற்றப்பட்டார் சஞ்சய் தத்!
[Thursday, 2013-05-23 08:03:28]

மும்பை ஆர்தர் ரோடு சிறையில் இருந்து இரவோடு இரவாக புனே எரவாடா சிறைக்கு நடிகர் சஞ்சய் தத் மாற்றப்பட்டார்.மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் பிரபல நடிகர் சஞ்சய் தத்துக்கு சிறப்பு தடா நீதிமன்றம் 6 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதை கடந்த மார்ச் 21ம் தேதி உறுதி செய்த உச்ச நீதிமன்றம், தண்டனையை 5 ஆண்டுகளாக குறைத்தது. மேலும், அதன் உத்தரவுபடி கடந்த 16ம் தேதி சிறப்பு தடா நீதிமன்றத்தில் சஞ்சய் தத் சரண் அடைந்தார். பின்னர் அவர், மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு, மும்பை தாக்குதல் வழக்கு தீவிரவாதியான அஜ்மல் கசாப் அடைக்கப்பட்டு இருந்த பாதுகாப்பு மிக்க அண்டா சிறையில் அடைக்கப்பட்டார்.



ஊழலுக்கு பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலக வேண்டும் -கருத்துக்கணிப்பில் தகவல்!
[Thursday, 2013-05-23 07:57:31]

ஊழலுக்கு பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள் விரும்புவதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவி ஏற்று நான்கு ஆண்டுகள் நிறைவு செய்வதையொட்டி நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் இத்தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் 12 நகரங்களில் 18 வயது நிரம்பிய வாக்காளர் உரிமை பெற்ற 2 லட்சம் பேரிடம் இருந்து கருத்துக்கணிப்பு பெறப்பட்டுள்ளது. இவர்களில் 61 சதவீதம் பேர் மன்மோகன் சிங் பிரதமராக நீடிக்ககூடாது என்று கருத்து கூறியுள்ளனர், மன்மோகன் சிங் பிரதமராக நீடிக்க வேண்டும் என்று 37 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.



சென்னையில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய நபர் 14 மணிநேர போராட்டத்தின் பின் பிடிபட்டார் - இலங்கைப் படங்களில் நடித்தவராம்!
[Thursday, 2013-05-23 07:43:49]

கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அபார்ட்மென்ட்டில் துப்பாக்கியால் சுட்டு மிரட்டிய நபரை 14 மணி நேர பரபரப்புக்கு பின் போலீசார் பிடித்தனர். சினிமா பாணியில் நடந்த இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சப்தமாலிகா என்ற 4 அடுக்கு அபார்ட்மென்ட்டில், விஜயகர்(50) என்பவர் 5 ஆண்டுகளுக்கு முன் வாடகைக்கு வந்தார். 2 ஆண்டுகளாக ஒழுங்காக வாடகை கொடுத்தார். பின்னர் கடந்த 3 ஆண்டுகளாக வாடகை தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனால் உரிமையாளர் நீதிமன்றம் மூலம் வீட்டை காலி செய்ய நடவடிக்கை எடுத்தார்.



நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் அஸ்தி எங்கே? - பதிலளிக்கும் படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
[Thursday, 2013-05-23 07:30:31]

நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் அஸ்தி எங்கு இருக்கிறது என்பதை தெரிவிக்கும்படி மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியை சேர்ந்தவர் பிரசாந்த் பாலிவால். டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள பொதுநலன் வழக்கில் இவர் கூறியிருப்பதாவது: சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோசின் அஸ்தி, ஜெர்மனியில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வரும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதை இந்தியா கொண்டு வந்த பிறகு பொது மக்கள் அஞ்சலிக்காக பொது இடத்தில் வைக்க வேண்டும்.



பிணைப் பணம் செலுத்தாததால், 19 ஆண்டுகளை சிறையில் கழித்த தாயை மீட்ட மகன்!
[Thursday, 2013-05-23 07:22:24]

இந்தியாவில் பிணை வழங்கப்பட்ட ஒரு பெண் கைதி, சிறையிலிருந்து 19 ஆண்டுகளுக்குப் பின்னரே விடுதலை செய்யப்பட்டது குறித்து நீதிபதிகள் கவலை தெரிவித்துள்ளனர். வட இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட விஜய் குமாரி என்ற பெண், கர்ப்பமாயிருந்த நிலையில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார். தான் குற்றமற்றவர், தவறாகக் குற்றம் சாட்டப்பட்டவர் என்று கூறியிருந்தார். அவரது கணவர் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மேல் முறையீடு செய்திருந்தார்.



உலகின் அதிவேக ஏவுகணையான பிரமோசை வெற்றிகரமாக ஏவியது இந்தியா!
[Wednesday, 2013-05-22 18:32:06]

உலகின் அதிவேக ஏவுகணையான பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை இந்தியா இன்று மீண்டும் வெற்றிகரமாக பரிசோதனை செய்தது. கோவா கடற்பகுதியில் ஐஎன்எஸ் தர்காஷ் போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை, 290 கி.மீ. தூரம் பறந்து சென்று, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கியது. இந்தியா-ரஷ்யா கூட்டுத் தயாரிப்பான பிரமோஸ் ஏவுகணையானது, 300 கிலோ எடை கொண்டது. ஒலியை விட 2.8 மடங்கு வேகத்துடன் பறக்கும். இன்று ஏவுகணை செலுத்தப்பட்ட அதிநவீன போர்க்கப்பலான ஐஎன்எஸ் தர்காஷ், கடந்த ஆண்டு கப்பல் படையில் சேர்க்கப்பட்டது.



இலங்கைத் தமிழர்களை வைத்து தமிழக கட்சிகள் பிழைப்பு நடத்துகின்றன - நாராயணசாமி குற்றச்சாட்டு!
[Wednesday, 2013-05-22 18:27:46]

இலங்கைத் தமிழர்களை வைத்து தமிழக கட்சிகள் அரசியல் நடத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார் மத்திய அமைச்சர் நாராயணசாமி. புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் கட்சி அலுவலகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு நாராயணசாமி பேசியதாவது:- ராஜீவ்காந்தி நம்மோடு இருந்திருந்தால் இந்தியா சீனாவை தாண்டி வளர்ச்சி பெற்று இருக்கும். ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த காலத்தில் அண்டை நாடுகளுடன் உறவை மேம்படுத்தினார். அனைத்து கட்சிகள் வித்தியாசமின்றி வரவேற்று கைதட்டினார்கள். துரதிர்ஷ்டவமாக அவரை இழந்து விட்டோம்.



முதல்வர் பாதுகாப்புக்கு நின்ற பொலிசார் நடுத்தெருவில் லத்தியால் அடித்துக் கொண்டு சண்டை - ஒருவர் கவலைக்கிடம்!
[Wednesday, 2013-05-22 18:14:21]

உத்தர பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் இன்று லக்னோ கோமதி நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். இதையொட்டி அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அவர்களில் தலைமைக் காவலர் முகுல் சந்திர யாதவுக்கும், கான்ஸ்டபிள் சுனிர் தீக்சித்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி, ஒருவரையொருவர் லத்தியால் தாக்கிக்கொண்டனர்.கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையோரம் நடந்த இந்த சண்டையில் ஒருவரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. மற்றொருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.



சென்னை அடுக்குமாடிக் குடியிருப்பில் துப்பாக்கியுடன் புகுந்து மிரட்டும் நபரைப் பிடிக்க கொமாண்டோப் படை சுற்றிவளைப்பு!
[Wednesday, 2013-05-22 18:08:52]

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியுடன் புகுந்து மிரட்டி வரும் நபரைப் பிடிக்க கமாண்டோ படை வரவழைக்கப்பட்டுள்ளது. கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையையொட்டி உள்ள டெய்லர்ஸ் ரோட்டில் சப்தமாலிகா அபார்ட்மெண்ட் உள்ளது. 3 மாடிகள் கொண்ட இந்த அடுக்கு மாடி குடியிருப்பில் முதல் தளத்தில் விஜய்கர் (40) என்ற சினிமா பைனான்சியர் வாடகைக்கு குடியிருக்கிறார். இவரது மனைவி ஜெபி, மகன், மகளுடன் விடுமுறையை கழிக்க வெளியூர் சென்று இருக்கிறார்கள். விஜய்கர் சரிவர வாடகை தருவதில்லை.பராமரிப்பு கட்டணமும் செலுத்தவில்லை. இதனால் அவரை வீட்டை காலி செய்யுமாறு உரிமையாளர் கூறியதாக தெரிகிறது.



டோனி மனைவி அருகே அமர்ந்து போட்டியை பார்த்தது ஏன்? - சூதாட்டத்தில் சிக்கிய பாலிவூட் நடிகர் விண்டு தாராசிங் தகவல்!
[Wednesday, 2013-05-22 17:59:56]

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரும் இந்திய கிரிக்கெட் சபைத் தலைவருமான சீனிவாசனின் மருமகனும் அந்த அணியின் சிஇஓவுமான குருநாத் மெய்யப்பன்தான் தம்மை சென்னை போட்டியை பார்க்க வருமாறு அழைத்தார் என்று ஐபிஎல் பிக்சிங்கில் சிக்கி சிறைக்குப் போயிருக்கும் பாலிவுட் நடிகர் வின்து தாராசிங் கூறியுள்ளார்.கடந்த மாதம் ஏப்ரல் 9-ந் தேதியன்று சென்னை சேப்பாக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியைக் காண வின்து தாரா சிங் சென்னை வந்திருந்தார். அத்துடன் சென்னை அணியின் கேப்டன் டோணியின் மனைவி சாக்ஷி அருகே அமர்ந்து போட்டியை கண்டு ரசித்தார்.


NIRO-DANCE-100213
Ramans2011
RoyaShades-l2011(04-12-11)
Mahesan supramaniyam 031109
Suresh-remax-2013-01-01
Canada Kanthasamy Kovil
TamilsGuid-191012-2013
INNSYS-20120930
AJRwindows22.05.13
TDE_Computers2011
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com