Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 26, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
விண்டோஸ் திருட்டுக்களிலிருந்து பாதுகாப்பு பெற மைக்ரோசாப்டின் புதிய வெளியீடு
[Monday, 2012-07-09 07:25:37]
News Service

புதியதாக கணணி ஒன்று வாங்குகையில் விண்டோஸ் சிஸ்டம் பதிந்து கொடுக்கப்படுகிறது. கணணி தயாரிக்கும் நிறுவனங்கள் இதற்கான ஒப்பந்தத்தினை மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் மேற்கொண்டு, ஒவ்வொரு கணணிக்கு பதியப்படும் விண்டோஸ் சிஸ்டத்திற்கான உரிமத்தைப் பெற்று அதற்கான எண்ணையும், ஆப்பரேட்டிங் சிஸ்டம் டிஸ்க் அல்லது சிஸ்டம் மீட்பதற்கான ரெகவரி டிஸ்க்கினை வழங்குகின்றன.

  

கணணியை அசெம்பிளிங் செய்து கொடுப்பவர்கள், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பைரசி பதிப்பு என்று அழைக்கப்படும் நகல் பதிப்பினை பதித்துக் கொடுப்பார்கள்.

இது உரிமம் இல்லை என்பதால், மைக்ரோசாப்ட் இணையத்தளத்திலிருந்து எந்த சேவையையும் பெற முடியாது. இவ்வாறு இயங்குவது ஒரு வகையில் திருட்டு வழி என்றே கூற வேண்டும்.

மைக்ரோசாப்ட் நிறுவனம் இதனைக் கண்டறிவதற்கென பலரை நியமித்து, அவர்களும் முறையாக உரிமம் இல்லாமல் விண்டோஸ் சிஸ்டம் பயன்படுத்துவோரைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

குறிப்பாக நிறுவனங்கள், வர்த்தக மையங்களில் இது போல பயன்படுத்துவது கடுமையாகக் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

முறையாக உரிமம் பெற்று, அதற்கான சிடி பெற்றவர்கள் பலர், உரிமம் குறித்த தகவல்களை தொலைத்து விடுகின்றனர்.

சி.பி.யு. கேபினில் ஒட்டப்பட்டு வரும் லேபிள் நாளடைவில் கிழிந்து மறைந்து விடுகிறது. இதனை எடுத்துப் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும் அல்லது கீ எண்ணை எழுதி இருக்க வேண்டும்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

ஸ்கைப் சேவையினை பயன்படுத்துபவரா நீங்கள்? இதோ காத்திருக்கின்றது பாரிய அதிர்ச்சி!
[Sunday, 2013-05-26 12:16:12]

வெளிநாட்டில் இருக்கும் ஒருவருடன் நாம் எளிதில் பேச இன்று பலரும் பயன்படுத்துவது ஸ்கைப் நெட்வோர்க்கை தான். இதில் இருக்கும் ஆபத்துகள் உண்மையில் பலருக்கு தெரிவதில்லை ஸ்கைப்பில் நீங்கள் உரையாடுவது பதிவு செய்யபடுகின்றது அது தெரியுமா உங்களுக்கு. மேலும் ஸ்கைப்பில் இருக்கும் வைரஸ் தான் இணையத்திலேயே மிக கொடுமையான வைரஸ். ஸ்கைப் பயன்படுத்துவோர் பெற்று வரும், கெடுதல் விளைவிக்கும் ஸ்பாம் மெயில் குறித்து எச்சரிக்கை கொடுத்து வந்தது. தற்போது இந்த ஸ்பாம் வேகமாகப் பரவி வருவதாக அறிவித்துள்ளது. இந்த வைரஸ் உங்கள் கணிப்பொறியை என்னென்ன செய்யும் என்பதை கீழே பாருங்கள் சற்று அதிர்ந்தே போய்விடுவீர்கள்....



கண் பார்வையை விருத்தி செய்யும் கரட்டின் ஏனைய நன்மைகள்!
[Sunday, 2013-05-26 12:12:19]

காய்கறிகளிலேயே கேரட் மிகவும் சுவையான காய்கறியாகும். இதன் சுவையாலேயே, இதனை அப்படியே வேண்டுமானாலும் சாப்பிடலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு கேரட் என்றால் மிகவும் பிடிக்கும். இத்தகைய கேரட்டில் நிறைய உடல்நல நன்மைகள் நிறைந்துள்ளன. அதில் அனைவருக்கும் தெரிந்தது, கண் பார்வை கூர்மையாகும் என்பது தான். ஆனால் அதைத் தவிர, அதனை சாப்பிட்டால் வேறு சில நன்மைகளும் கிடைக்கும். ஏனெனில் இதில் வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி6, வைட்டமின் கே, பையோடின், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் தையமின் போன்ற சத்துக்கள் எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளது. எனவே இத்தகைய கேரட்டை உணவில் அதிகம் சாப்பிட்டால், நல்ல பார்வை மட்டுமின்றி, வேறு சில உடல் பிரச்சனைகளையும் தடுக்கலாம். இப்போது அந்த கேரட் சாப்பிட்டால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போமா!



தண்ணீர் உட்புகாத டேப்லட்களை அறிமுகம் செய்கின்றது சோனி நிறுவனம்!Top News
[Sunday, 2013-05-26 12:02:12]

ஜப்பானை தளமாகக் கொண்டு இயங்கும் பிரபல இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனமான சோனி ஆனது நீரிலிருந்து பாதுகாப்புடைய அதிநவீன டேப்லட்களை அறிமுகப்படுத்துகின்றது. Xperia Z எனும் தொடரிலக்கத்துடன் அறிமுகமாகும் இந்த டேப்லட்கள் 10.1 அங்குல அளவு 1920 x 1200 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் 1.5 GHz வேகத்தில் செயலாற்றவல்ல Quad Core Snapdragon S4 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளது. மேலும் கூகுளின் Android 4.1 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இச்சாதனத்தில் 8.1 மெகாபிக்சல்கள் உடைய பிரதான கமெரா, 2.2 மெகாபிக்சல்கள் உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா ஆகியனவும் காணப்படுகின்றன.



ஒரு மனிதன் தன்னை உணரும்போதுதான் உள்நிலையிலும் வெளிநிலையிலும் முழுமையடைகிறான்! - சத்குரு
[Sunday, 2013-05-26 09:50:24]

நாம் ஒவ்வொருவரும், நமக்கு என்ன தேவை என்று தெரியாமல், எப்போதும் எதையோ தேடிக்கொண்டிருக்கிறோம். இது முடிவில்லாமல் போய்க்கொண்டே இருக்கிறது. இந்தத் தேடலை எப்படி முழுமையடையச் செய்வது? இதோ சத்குரு நமக்கு தெளிவுபடுத்துகிறார்.



தோலை அழகாகவும், சுருக்கமின்றியும் வைத்திருக்க உதவும் நலுங்குமாவு பாசிப்பயறு!
[Saturday, 2013-05-25 18:02:37]

அழகிய தோலுக்கு ஆசைப்படாதவர்கள் யாருமே இருக்கமுடியாது. தோல் அழகாக வைத்திருப்பது மட்டுமின்றி தோலில் சுருக்கமில்லாமல், வறட்சியில்லாமல் வைத்திருப்பது மிகவும் கடினம். சுற்றுப்புற சூழலில் வெப்பமாற்றத்திற்கு ஏற்றவாறு நம் தோலும் மாறிக்கொண்டே இருக்கும். வெயில் காலத்தில் தோல் சுருங்கி தொங்குவதும், குளிர் காலத்தில் தோல் வறண்டு வெடிப்பதும் இயற்கையே. இதற்கேற்றாற் போல் நாமும் நமது தோலை பக்குவமாக பராமரிக்காவிட்டால் தோலில் பல தொல்லைகள் உண்டாகிவிடும்.



பெண்கள் எதிர்கொள்ளும் உடற்பிரச்சினைகளும் அவற்றிற்கான சில தீர்வுகளும்!
[Saturday, 2013-05-25 17:55:13]

பெண்கள் வயது வந்ததும், திடீரென உடல் ஊதும்போது, அழகு கெட்டு விடுகிறது. வழவழப்பான சருமம் எண்ணெய் நிறைந்ததாய், முகத்தில் பருவுடன் காட்சியளிக்கிறது. முகத்தில், கழுத்தில், கைகளில், மார்பில், தொடையில் முடி அதிகமாய் வளர்கிறது. ஆனால், தலையில் முடி உதிர்ந்து, வழுக்கை கூட ஏற்படுகிறது. கழுத்து, கை, அக்குள், தொடை ஆகிய இடங்கள் கருநிறமாய் மாறுகின்றன. சரியாக குளிப்பதில்லையோ என, மற்றவர்கள் நினைக்கும் நிலை ஏற்படுகிறது. கழுத்திலும், அக்குளிலும் கருமையான சிறு சிறு மருக்கள் தோன்றி விடுகின்றன. இவை துணியில் உரசும் போது வலியும், அசவுகரியமும் ஏற்படுகிறது.



உயர் கல்விக்கான மின் நூல்களை இலவசமாக தரும் தளம்!
[Saturday, 2013-05-25 15:03:46]

கல்லூரிகளில் தேர்வுகள் படு வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. பல மாணவர்கள் அடுத்த ஆண்டுக்கு தங்களைத் தயார் செய்து கொள்ளும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு நூல்களை வழங்க, கல்லூரி மற்றும் தனியார் நூலகங்கள் இருந்தாலும், தங்களுக்கென எடுத்து வைத்து, விரும்பும் நேரத்தில் படிப்பதனையே இவர்கள் விரும்புவார்கள். இவர்களுக்கு உதவிடும் வகையில் பல இணைய தளங்கள் உள்ளன. அவற்றில் சிறப்பான ஒன்றை அண்மையில் காண நேர்ந்தது. அதன் இணைய தள முகவரி bookboon.com.



பச்சை இலைக்காய்கறிகளுள் ஒன்றான முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
[Saturday, 2013-05-25 14:38:26]

பச்சை இலைக்காய்கறிகளில் ஒன்றான முட்டைகோஸின் நன்மைகள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் உண்மையில் முட்டைகோஸில் அளவுக்கு அதிகமான நன்மைகள் நிறைந்துள்ளன. மேலும் முட்டைகோஸில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. அவை வெள்ளை, சிவப்பு, பச்சை மற்றும் ஊதா போன்றவை. இவை அனைத்திலும் நல்ல அளவில் சத்துக்கள் அடங்கியுள்ளன. அதுவும் பல்வேறு பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின்களான ஏ, சி மற்றும் கே போன்றவை. இவை அனைத்தும் உடலில் ஏற்படும் பிரச்சனைகளான புற்றுநோய், இதய நோய் போன்றவை ஏற்படுவதை தடுக்கும். மேலும் இதில் உள்ள நார்ச்சத்து, செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்தும். குறிப்பாக முட்டைகோஸை சாப்பிடும் போது, அதனை அளவுக்கு அதிகமாக வேக வைத்து சாப்பிட கூடாது.



அணிந்த பின்னரும் ஆடைகளை அயன் செய்ய வந்துவிட்டது USB சாதனம்!Top News
[Saturday, 2013-05-25 14:18:17]

கணினியின் வருகையைத் தொடர்ந்து அறிமுகமான USB தொழில்நுட்பம் தற்போது மிக வேகமாக பிரபலமடைந்து வருகின்றது. இதன் காரணமாக பல துணைச்சாதனங்களும் USB இணைப்பானை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்தவண்ணம் உள்ளன. இவற்றின் தொடர்ச்சியாக தற்போது USB இணைப்பானில் இணைத்து ஆடைகளை அயன் செய்யக்கூடிய அதிநவீன சாதனம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. செல்லும் இடங்களுக்கு எல்லாம் இலகுவாக கூடவே எடுத்துச்செல்லக்கூடிய அளவில் மிகவும் கையடக்கம் உள்ளதாகக் காணப்படும் இச்சாதனத்திற்கு, USB இணைப்பான் மூலம் இரண்டு AA அளவு மின்கலங்களிலிருந்து கிடைக்கும் மின்சக்தி வழங்கப்படுகின்றது.



செல்பேசி உலகின் அனைத்து சாதனைகளையும் முறியடித்தது Samsung Galaxy 4 !
[Friday, 2013-05-24 21:44:17]

செம்சுங் நிறுவனத்தின் கெலக்ஸி எஸ்4 ஸ்மார்ட் போனானது உலகில் வேகமாக விற்பனையாகிய ஸ்மார்ட் போன் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. அந்நிறுவனத்தின் அறிக்கையின் படி வெளியாகி 1 மாத காலப்பகுதியில் 10 மில்லியன் கெலக்ஸி எஸ் ஸ்மார்ட் போன்கள் விற்பனையாகியுள்ளன. செம்சுங் கெலக்ஸி எஸ்4 வின் முன்னைய வெளியீடான எஸ் 3 இதே எண்ணிக்கையை எட்டுவதற்கு 50 நாட்கள் தேவைப்பட்டதாக செம்சுங் தெரிவிக்கின்றது. மேலும் கடந்த வருடம் மே மாதம் வெளியாகிய எஸ் 3 வரை 60 மில்லியனுக்கும் அதிகம் விற்பனையாகியுள்ளதாக செம்சுங் தெரிவிக்கின்றது.



கரப்பான் பூச்சிகள் இனிப்பை தவிர்க்கும் புத்திசாலித்தானம் வாய்ந்தவை - ஆய்வில் கண்டுபிடிப்பு!
[Friday, 2013-05-24 21:15:26]

கரப்பான் பூச்சிகளை ஒழிப்பதற்கு வீடுகளில் வைக்கப்படும் பொறிகளில் பயன்படுத்தப்படும் இனிப்பு உணவுகளை நாடாமல் இருக்கும் குணாதிசயம் சிலவகை கரப்பான் பூச்சிகளிடத்தில் இயல்பாகவே வளர்ந்திருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த வகையான உணவுப் பொருட்களை அண்டாமல் இருக்கும் பழக்கம் இந்த கரப்பான் பூச்சிகளிடத்தில் ஒருசில ஆண்டுகளில் மிக வேகமாக வளர்ந்திருப்பதாகவும் வடக்கு கரோலினா அரசு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த வகை கரப்பான் பூச்சிகளிடத்தில் வளர்ந்துள்ள இந்தப் பழக்கம் பூகோள ரீதியிலும் உலகின் பல பாகங்களிலும் உள்ள கரப்பான் இனங்களிடத்திலும் வேகமாக பரவிவருவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.



சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்களுக்கு புழுங்கல் அரிசியே சாலச்சிறந்தது!
[Friday, 2013-05-24 17:08:03]

பச்சரிசி உணவை சாப்பிட்டால் அதில் உள்ள சர்க்கரை உடனே ரத்தத்தில் கலந்து விடும். இதனால் தான் உடனடி சத்து தேவைக்காக பச்சரிசி உணவை உண்ணச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். வளரும் குழந்தைகளுக்கு பச்சரி உணவு தான் ஏற்றது. ஆனால் சர்க்கரை நோயாளிகள் இதை உண்ணக் கூடாது. புழுங்கல் அரிசியை உணவாக கொண்டால் அதில் உள்ள சர்க்கரை மெருவாகத் தான் ரத்தத்தில் கலக்கும். அதனால் சர்க்கரை நோயாளிகள் புழுங்கல் அரிசியை உண்ணலாம். இந்த அரிசி சற்று பழுப்பு நிறமாக இருப்பதால் சிலருக்கு பிடிப்பதில்லை. இந்த நிறம் தான் இந்த அரிசியின் சிறப்புக்கே காரணம். நெல்லை அவிக்கும் போது தவிட்டில் உள்ள உயிர்ச்சத்துகள் அரிசியில் இறங்கும். இதனால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கூடுதாலக் கிடைக்கின்றன.



கண்ணிவெடி அகற்ற நாய், எலி எதற்கு? இப்போது தேனீக்களையும் பயன்படுத்தலாம்!Top News
[Friday, 2013-05-24 13:38:10]

பொதுவாக மோப்ப சக்தி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது நாய்தான். காவல் துறையிலும் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க இந்நாள்வரை மோப்ப நாய்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன. இதுதவிர, கொலை வழக்கில் துப்பு துலக்கவும் மோப்ப நாய் உதவுகிறது. சில நாடுகளில் எலிகளை வைத்து கூட வெடிகுண்டு கண்டுபிடிக்கின்றனர். இதுபற்றி பல பகுதிகளில் ஆய்வுகளும் நடந்தன. இந்நிலையில், வெடிகுண்டுகளை தேனீக்கள் மூலம் கண்டுபிடிக்க முடியும் என்று ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியனோடு இணைந்த குரோடியா நாடு, அடர்ந்த பசுமை காடுகளும், பெரிய ஏரிகளும் உடையது. இயற்கை வளம் கொழிக்கும் இந்த நாட்டில், 1990ல் பால்கன் போரின்போது புதைத்து வைக்கப்பட்ட ஏராளமான கண்ணிவெடிகள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளன. சுமார் 750 சதுர கி.மீ. பரப்பளவுக்கு கண்ணிவெடிகள் ஆங்காங்கே புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.



தூசு, தண்ணீரிலிருந்து பாதுகாப்புடைய செல்பேசியினை அறிமுகப்படுத்தியது LG!Top News
[Friday, 2013-05-24 13:18:59]

முதற்தர இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனமான LG நிறுவம் Optimus GJ எனும் தொடரைக்கொண்ட அதிநவீன கைப்பேசிகளை அறிமுகப்படுத்துவது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. இக்கைப்பேசிகள் நீர் மற்றும் தூசிகளிலிருந்து மிகுந்த பாதுகாப்புடையதாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் கூகுளின் Android 4.1.2 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டவையாகவும் காணப்படுகின்றன.



கொழுத்தும் வெயிலுக்கு குளிர்பானங்கள் மட்டுமா தீர்வு? இருக்கவே இருக்கு கம்பங்கூழ் கம்பு!
[Thursday, 2013-05-23 20:12:01]

நாம் கொளுத்தும் வெயிலில் நாம் குளிர்பானங்களை தேடிச் செல்வதுண்டு. பல வகையான வேதிப்பொருட்களும், சாயப்பொருட்களும் நிறைந்த செயற்கை குளிர்பானங்களை குடிப்பதால் பல் எனாமல் தேய்ந்து, பற்கூச்சம் ஏற்படுவதுடன், கண்டு பிடிக்க இயலாத பலவிதமான வயிற்று உபாதைகளும் உண்டாகின்றன. உடனடியாக கிடைத்தல், அவசரம், நிற ஈர்ப்பு போன்ற காரணங்களால் செயற்கை குளிர்பானங்களை நாடி அதற்கு அடிமையாகி விடுகின்றனர். செயற்கை குளிர்பானங்கள் நமது எலும்புகளை தாக்கி அவற்றின் கனிம அடர்த்தியை குறைப்பதுடன், குடற்பகுதிகளில் வாழும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களையும் அழித்து விடுவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது மட்டுமின்றி வேதிப்பொருட்களால் செய்யப்பட்ட குளிர்பானங்களில் உள்ள நச்சுப்பொருட்கள் அதிகளவில் உட்கொள்ளப்படும் போது சிறுநீரகம், கல்லீரல் போன்றவற்றை பாதிப்படையச் செய்கின்றன.



மனிதனை நகல் எடுக்கும் முதற்கட்ட முயற்சியில் அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை!
[Thursday, 2013-05-23 18:05:51]

மனிதனின் தோல் செல்லுடன் பெண்ணின் சினைமுட்டையை சேர்த்து ஸ்டெம் செல் கரு முட்டையை உருவாக்கி அமெரிக்க விஞ்ஞானிகள் அபார சாதனை படைத்துள்ளனர். இதன்மூலம் சிக்கலான அறுவை சிகிச்சைகளுக்கு தேவையான ஸ்டெம்செல்களை உருவாக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறினர். குளோனிங் முறையில் மனிதனை ஜெராக்ஸ் எடுக்கும் முயற்சியின் முதல் கட்டம் இது என்ற பரபரப்பையும் ஏற் படுத்தியுள்ளது இந்த ஆராய்ச்சி. மனித உடலில் பல லட்சம் கோடி செல்கள் உள்ளன. இவற்றையோ, நுண்ணுயிர் களையோ மணம், நிறம், குணம் மாறாமல் அச்சு அசலாக ஜெராக்ஸ் பிரதி எடுப்பது தான் குளோனிங். இரு வரி விளக்கம் என்றாலும் இது மிகவும் சிக்கலானது. இதுதொடர் பான ஆராய்ச்சிகள் பல காலமாக நடந்து வந்தது. 1952இல் முதன்முதலாக தவளை ஒன்று குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டது.



காரணம் தெரியாமல் காப்பி குடிக்கலாமா? இதோ இன்றே தெரிந்துகொள்ளுங்கள்...
[Thursday, 2013-05-23 17:24:46]

காஃபி மற்றும் தேநீர் பருகாதவர்கள் மிகவும் குறைவே. ஆனால் இந்த பழக்கத்திற்கு அடிமையானவர்கள் பலர். ஒரு வேளை தேநீர் குடிக்கவில்லை என்றாலும் பைத்தியம் பிடிப்பது போல் ஆகிவிடுவர் பலர். சரி, தினமும் குடிக்கிறீர்களே, அதனை பற்றி எத்தனை பேருக்கு முழுவதுமாக தெரியும்? அதில் உள்ள மருத்துவ குணங்கள் எத்தனை பேருக்கு தெரியும்? நல்லது என்று தெரியாமலே, நாம் பல காரியம் செய்கிறோம் அல்லவா? அப்படி ஒன்று தான் இந்த தேநீர். ஆம், இதில் நமக்கு தெரியாத பல நன்மைகள் அடங்கியுள்ளது. தேநீரைப் பற்றிய நெடுங்கால ஆய்வுகள், அவற்றின் மருத்துவ குணங்களை ஒவ்வொன்றாக நமக்கு தெரிவிக்கின்றன. பழங்காலத்தில் இருந்தே தலைவலி முதல் மன அழுத்தம் வரை, பல பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணியாக விளங்குகிறது தேநீர். அத்தகைய தேநீரில் உள்ள மருத்துவ குணங்கள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.



A110Q Canvas 2 Plus ஸ்மார்ட் செல்பேசிகளை அறிமுகப்படுத்தியது மைக்ரோமக்ஸ்!Top News
[Thursday, 2013-05-23 16:48:12]

இந்தியாவை தளமாகக் கொண்டு இயங்கிவரும் Micromax நிறுவனமானது A110Q Canvas 2 Plus எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. கூகுளின் Android 4.2 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இக்கைப்பேசியானது 12.7 சென்டிமீட்டர், 854 x 480 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் 1.2GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Processor, பிரதான நினைவகமாக 1GB RAM ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.



2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்கள் பயன்பாட்டில் இருந்துள்ள நெய்!
[Thursday, 2013-05-23 00:05:25]

2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் நெய்யின் பயன்பாடு அதிகம் இருந்து வந்துள்ளது. மருத்துவக் குணம் வாய்ந்த மூலிகைகளில் உள்ள அணுக்களின் சுவர்களை ஊடுருவக்கூடிய தன்மை நெய்க்கு இருப்பதால் இத்தகைய மருந்து தயாரிப்பில் நெய்யை அதிகம் பயன்படுத்துகின்றனர். மருந்துக்கள் கெடாமல் பாதுகாக்க நெய்யே சிறந்த பொருளாகும். நெய்யை ரசாயனம் என்று ஆயுர்வேத மருந்தாளர்களால் அழைக்கப்படுகிறது. ஏன் என்றால் முழு உடல் நலம் கொடுத்து நீண்ட ஆரோக்கியத்தைக் கொடுக்கும் குணம் நெய்க்கு உண்டு.



குழந்தையின் மன வளர்ச்சியைப் பாதிக்கும் கர்ப்பகால அயடீன் குறைபாடு - ஆய்வில் தகவல்!
[Wednesday, 2013-05-22 19:30:46]

கர்பகாலத்தில் அயோடின் குறைபாடு இருந்தால், அது பிறக்கப் போகும் குழந்தையின் மன வளர்ச்சியை பாதிக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பிரிட்டனில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கர்பகாலத்தில் தாய்மார்கள் அயோடின் சத்து நிறைந்த மீன் மற்றும் பால் பொருட்களை போன்ற உணவுகளை போதுமான அளவில் உட்கொள்ளாவிட்டால் பிறக்கப் போகும் குழந்தையின் அறிவுத்திறன் மற்றும் வாசிப்புத்திறன் ஆகியவை ஒப்பீட்டளவில் மற்ற குழந்தைகளைவிட குறைவாக இருந்ததாக அந்த ஆய்வில் கணடறியப்பட்டுள்ளது.


NIRO-DANCE-100213
INNSYS-20120930
AJRwindows22.05.13
Suresh-remax-2013-01-01
Mahesan supramaniyam 031109
TamilsGuid-191012-2013
Ramans2011
TDE_Computers2011
RoyaShades-l2011(04-12-11)
Canada Kanthasamy Kovil
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com