Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 22, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

இவ்வருட இறுதிக்குள் 340 முன்னாள் போராளிகள் விடுவிக்கப்படுவர் - சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவிப்பு!
[Wednesday, 2013-05-22 16:53:25]

தற்போது புனர்வாழ்வு பெற்றுவருகின்ற முன்னாள் போராளிகள் 340 பேரையும் இந்த வருட இறுதிக்குள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.சமூகமயப்படுத்தல் செயற்பாடுகளை துரிதப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக, வவுனியா மருதமடுவில் இயங்கிவந்த புனர்வாழ்வு முகாம் மூடப்பட்டுள்ளது. அதன்படி இந்த முகாமில் புனர்வாழ்வு பெற்றுவந்த 100 முன்னாள் போராளிகளும் பூந்தோட்டம், சேனதுறை மற்றும் கந்தக்காடு ஆகிய புனர்வாழ்வு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.



பீரிசை தொலைபேசியில் மிரட்டினார் குர்ஷித்?
[Wednesday, 2013-05-22 16:46:25]

இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தம்மை அச்சுறுத்தும் வகையிலோ, அடக்குகின்ற வகையிலோ உரையாடவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை காலை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுடன், இந்திய வெளிவிவகார அமைச்சர் கல்மான் குர்ஷித் தொலைபேசி மூலம் உரையாடியிருந்தார். இதன்போது, மாகாணசபையின் அதிகாரங்களை நீர்த்துப் போகச் செய்யும் வகையிலான சட்டத்திருத்தங்களை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளக் கூடாது என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரிடம் சல்மான் குர்ஷித் எச்சரித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.



மஹிந்த அரசை கவிழ்க்க சூழ்ச்சி தேவையில்லை - ரணில்!
[Wednesday, 2013-05-22 16:38:06]

இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு சூழ்ச்சிகள் செய்யத் தேவையில்லை எனவும் வாக்கு பலத்தின் ஊடாக அரசாங்கத்தை கவிழ்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வெளிநாட்டு பெண் தூதுவர் ஒருவரை சந்தித்த சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை கவிழ்க்க சூழ்ச்சி செய்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானதென ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். ஜேர்மன் உதவி கிடைக்கும் 'பெட்ரிக் நியூமான் பவுன்டேசன்' என்ற அமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நடத்தும் கருத்தரங்கை அரசாங்கத்தை கவிழ்க்கும் சூழ்ச்சி என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதால் அதில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் இன்று (22) பாராளுமன்றில் தெரிவித்தார்.



புதிய சட்டமூலத்தின் ஊடாக வட மாகாண சபையை திரிபுபடுத்து அரசு முயற்சி - கூட்டமைப்பு!
[Wednesday, 2013-05-22 16:32:34]

அரசாங்கம் வட மாகாண சபையை திரிபுபடுத்த புதிய சட்டமூலம் ஒன்றை நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார். கொழும்பு பான்ஸ் பிளேஸில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை கட்டியெழுப்பும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,



ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் தேவை - சம்பந்தனுக்கு அஸாத் சாலி கடிதம்!
[Wednesday, 2013-05-22 16:27:37]

தமிழ் முஸ்லிம் சமூகங்கள் சில முக்கிய பொதுவான விடயங்களில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது என்று தேசிய ஐக்கிய முன்னணியின் பொது செயலாளர் அஸாத் சாலி தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தனுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,



வேடர்களும் நாகர்களுமே இலங்கையின் ஆதிக்குடிகள் - பொதுபல சேனாவுக்கு இதுதான் பதில்! - மனோ கணேசன்!
[Wednesday, 2013-05-22 16:16:55]

பொதுபல சேனாவின் வண. ஞானசார கலபொட தேரர், இந்த நாடு சிங்கள பெளத்தர்களுக்கு மாத்திரம் உரியது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிறார். இதை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் எல்லோரும் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என்கிறார். இந்த அடிப்படையில் வடக்கில் தமிழர் பெரும்பான்மை அதிகாரத்தின் கீழ் மாகாணசபை ஒன்று உருவாக முடியாது என்கிறார். ஆகவே மாகாணசபை முறைமையை ஒழிக்க வேண்டும் என்கிறார். அனைத்துக்கும் முதலில் இந்த நாட்டின் ஆதிகுடிகள் வேடர்கள், நாகர்கள் என்பதை கலபொட தேரர் ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்த அடிப்படை உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறி, தத்தம் மூதாதையர்கள் வந்த நாடுகளுக்கு திரும்ப வேண்டும்.



மின்கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் போராட்டம்!
[Wednesday, 2013-05-22 10:32:03]

சாதாரண மக்கள் இன்றும் அடக்கி ஒடுக்கப்படுகின்றனர். மக்கள் அவ்வாறு அடக்கி ஒடுக்கப்படுகின்றபோது அதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டிய கடமை தொழிற்சங்கம் என்ற வகையில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களுக்கும் உண்டு. இவ்வாறு யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் ஆர்.இராசகுமாரன் தெரிவித்தார். மின்கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ். பல்கலைக்கழக வாயிலில் நேற்று நடந்த கவனவீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர், பல்கலைக்கழக ஆசிரியர் தொழிற்சங்கம் என்ற ரீதியில் பல்கலைக்கழகத்தில் மட்டுமன்றி நாட்டில் எந்தவொரு மக்களும் அடக்கி ஒடுக்கப்படுகின்ற போது அதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டிய கடமை எமக்கு உண்டு. எதிர்காலத்தில் மக்கள் நசுக்கப்படும் போது அடக்கப்படும்போது அதற்கெதிராக நாம் குரல் கொடுப்போம் என்றார்.



எனக்குள் தமிழ் உணர்வை ஏற்படுத்திய சம்பந்தன் ஐயா, மாவை போன்றோரை எனது குருவாக மதிக்கின்றேன் - முரளிதரன்
[Wednesday, 2013-05-22 10:13:18]

எனக்குள் தமிழ் உணர்வை ஏற்படுத்திய சம்பந்தன் ஐயா மற்றும் மாவை சேனாதிராஜா போன்றோரை எனது குருவாக மதிக்கின்றேன் என பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நேற்று சபையில் தெரிவித்தார். ஜனாதிபதியிடம் தான் விடுத்த வேண்டுகோளின் பேரிலேயே முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தோடு இணைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே பிரதியமைச்சர் முரளிதரன் இதனைத் தெரிவித்தார்.



வடக்கை போன்று கிழக்கிலும் இராணுவ ஆட்சி: முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு
[Wednesday, 2013-05-22 10:02:05]

வடக்கில் நிலவி வரும் இராணுவ ஆட்சி போன்றே இப்போது கிழக்கிலும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டியுள்ளார். ராஜகிரியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.



சங்கீதக் கதிரை விளையாட்டு போல அரசிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் வெளியேற முடியாது - ஹக்கீம்
[Wednesday, 2013-05-22 09:52:01]

சங்கீதக் கதிரை விளையாட்டில் பாடல் நின்றவுடன் கதிரையை நீக்கிவிட்டுச் செல்வது போன்று, அரசை விட்டு வெளியேறும் சித்து விளையாட்டில் எமது கட்சி ஈடுபடமாட்டாது. ஆனால் சில சக்திகள் அவ்வாறுதான் விரும்புகின்றன. இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் குற்றம் சாட்டியுள்ளார். குருநாகல் மாவட்டத்தில் குளியாப்பிட்டி, தம்பதெனிய, நிக்கவரெட்டிய தேர்தல் தொகுதிகளில் உள்ள சில கிராமங்களில் நடைபெற்ற கூட்டங்களின் போதே அவர் இவ்வாறு கூறினார்.



அரசின் ஏதேச்சாதிகார நடவடிக்கைகள் நிறுத்தப்படும் வரை - பொதுநலவாய நாடுகள் மாநாடு இலங்கையில் நடாத்தக் கூடாது: - மங்கள சமரவீர
[Wednesday, 2013-05-22 09:49:34]

பொதுநலவாய நாடுகளின் தலைவர்களது அமர்வுகளுக்கான மாநாடு இலங்கையில் நடாத்தப்படக் கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் ஏதேச்சாதிகார நடவடிக்கைகள் நிறுத்தப்படும் வரையில் அமர்வுகளை நடத்தக் கூடாது என அவர் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.



மாத்தளை மனித புதைகுழி விசாரணைகளில் சந்கேம்: ஐ.நாவின் தலையீட்டை கோருகிறது ஆசிய மனித உரிமை ஆணைக்குழு!
[Wednesday, 2013-05-22 09:41:00]

மாத்தளை பாரிய மனித புதைகுழி விசாரணைகள் குறித்து ஆசிய மனித உரிமை ஆணைக்குழு கேள்வி எழுப்பியுள்ளது. பாரிய மனித புதை குழி தொடர்பான விசாரணைகளில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 154 பேரின் உடல் எச்சங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் விசாரணை நடத்திய சட்ட வைத்திய அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், வழக்கு விசாரணை நடத்தி வரும் நீதவானும் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாரிய மனித புதைகுழி தொடர்பில் சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் இந்த இடமாற்ற உத்தரவுகள் குறித்த தகல்கள் வெளியாகியுள்ளன. இந்த விசாரணைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு தலையீடு செய்ய வேண்டுமென ஆசிய மனித உரிமை ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.



யுத்தம் புலிகளுக்கு எதிரானது என்று கூறப்படுகின்ற போதிலும் அது தமிழர்களுக்கு எதிராகவே நடத்தப்பட்டுள்ளது - சம்பந்தன்
[Wednesday, 2013-05-22 09:25:28]

நடந்து முடிந்துள்ள யுத்தம் புலிகளுக்கு எதிரானது என்று வர்ணிக்கப்பட்டாலும் அது தமிழ் சிவிலியன்களுக்கு எதிராகவே பாவிக்கப்பட்டது. எனினும், யுத்தம் நிறைவடைந்துள்ள இன்றைய காலகட்டத்தில் சமாதானத்தையும் சமவுரிமையுடனான சக வாழ்வையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதற்காக இந்நாட்டில் நீண்டு நிலைத்து நிற்கக்கூடிய அரசியல் தீர்வு ஒன்று தேவையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட எம்.பி.யுமான இரா. சம்பந்தன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அரசியல் தீர்வு என்பதும் சமாதான சகவாழ்வு என்பதும் தமிழ் மக்களுக்கு மாத்திரமின்றி இந்நாட்டில் வாழும் சகலருக்கும் அது வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.



சம்பூரில் அனல் மின் நிலையம் அமைப்பது தொடர்பிலான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.
[Wednesday, 2013-05-22 09:24:12]

திருமலை மாவட்டம் - சம்பூர் அனல் மின் நிலையம் தொடர்பில் சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்குமிடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இலங்கை அரசுடன் இந்திய தேசிய அனல் மின்சக்தி கூட்டுத்தாபனம் கைச்சாத்திடவுள்ளது. இது தொடர்பாகக் காணப்பட்ட உடன்பாட்டையடுத்தே இந்த ஒப்பந்தம் அடுத்த மாதம் கைச்சாத்திடப்படவுள்ளது.



திட்டமிட்டவாறு செப்டெம்பரில் வட மாகாணசபை தேர்தல் நடைபெறும் - ஜீ.எல்.பீரிஸ்
[Wednesday, 2013-05-22 09:11:33]

வடமாகாணத்துக்கான தேர்தல் திட்டமிட்டவாறு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறும். அதில் எந்தவித மாற்றமும் கிடையாது. அதேபோன்று கூட்டு அரசாங்கத்தில் அங்கம் வைத்திருக்கின்ற அரசியல் கட்சிகள் 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் பல்வேறு கருத்துக்களை முன்வைத்திருக்கின்ற போதிலும் அதிகுறித்து அலட்டிக்கொள்ளத்தேவையில்லை. தேவைப்பட்ட நேரத்தில் அரசாங்கம் உரிய முடிவுகளை மேற்கொள்ளும் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசியர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஐ.நா. அறிக்கை மற்றும் வடக்கு, கிழக்கின் காணி விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணைக்கு பதிலளித்து பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



யாழ்ப்பாணத்தின் இராணுவ முகாம்கள் பல பலாலிக்கு மாற்றப்படவுள்ளன!
[Wednesday, 2013-05-22 09:04:39]

யாழ்ப்பாணத்தின் இராணுவ முகாம்கள் பல பலாலிக்கு மாற்றப்படும் என இராணுவம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாண குடாநாட்டில் காணப்படும் இராணுவ முகாம்களே இவ்வாறு பலாலிக்கு மாற்றப்படவுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக மூன்று இராணுவ முகாம்கள் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் இயங்கும் என இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். ஏனைய அனைத்து முகாம்களும் பலாலிக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளன. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.



வாழைச்சேனை கல்குடா வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். Top News
[Wednesday, 2013-05-22 08:57:08]

இச்சம்பவம் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் கணித பாடம் கற்பிக்கும் சிவநேசன் கேமராஜன் (வயது 30) என்பவரே இவ்வாறு ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். அவரோடு இப்பாடசாலையில் சிற்றூழியராக கடமையாற்றும் மார்கண்டு அகிலன் (வயது 30) என்பவரும் படுகாயமடைந்துள்ளார்.



இசட் புள்ளி சர்ச்சைகளுக்கு ஷிரானி பண்டாரநாயக்கவே பொறுப்பு - பந்துல
[Wednesday, 2013-05-22 08:44:31]

இசட் புள்ளி சர்ச்சைகளுக்கு முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவே பொறுப்பு சொல்ல வேண்டுமென கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 2011ம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இசட் புள்ளி தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டிருந்தது. மாணவர்களுக்கு நியாயமான முறையில் தீர்வுகளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. எனினும், அப்போதைய பிரதம நீதியரசர் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு வழங்க சந்தர்ப்பம் அளிக்கவில்லை. ஐந்து பல்கலைக்கழக பேராசிரியர்களை அரசாங்கம் நியமித்திருந்த போதிலும், உச்ச நீதிமன்றம் பேராசிரியர் தட்டீல் என்பவரின் பரிந்துரைகளை மட்டுமே ஏற்றுக்கொண்டது. இதன் காரணமாகவே இசட் புள்ளி தொடர்பில் மாணவர்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கினர் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.



ஊடகவியலாளருக்கும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார் அழைப்பாணை!
[Wednesday, 2013-05-22 08:36:25]

மன்னார் பிராந்திய ஊடகவியலாளர் ஜோசப் பெர்ணாண்டோவை இன்று காலை 9 மணிக்கு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரின் வவுனியா காரியாலயத்திற்கு சமூகமளிக்கமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யுத்தத்தில் உயிரிழத்த மக்களுக்காக கடந்த 18ஆம் திகதி மாலை மன்னாரில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அஞ்சலி நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது அங்கு சென்ற பொலிஸாரும், இராணுவத்தினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணண் உட்பட அந்த நிகழ்வில் கலந்து கொண்ட 15 பேரை கைது செய்திருந்தனர்.



உரிமைகளுக்காக குரல் கொடுக்காதுவிடின் சீனிக்காகவும், பாணுக்காகவும் காத்துக்கிடக்கும் நிலை உருவாகும் - ரணில்!
[Tuesday, 2013-05-21 21:23:41]

சிறிமாவோ ஆட்சிக்காலத்தைப் போன்று நாட்டு மக்களை ஒருவேளை உணவிற்காக வரிசையில் நிறுத்தும் முயற்சிலேயே தற்போதைய அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. பொதுமக்கள் நிலமையை புரிந்து கொண்டு உரிமக்காக குரல்கொடுக்காவிடின் பாணுக்காகவும் சினிக்காகவும் காத்துக்கிடக்கும் நிலையே உருவாகும். என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஜக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தொழிச்சங்கங்கள் ஒன்றிணைந்து நடத்தும் தேசிய அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கண்டு அரசாங்கம் பயந்து போய் உள்ளது. ஆகவே தற்போது நாட்டில் காணப்படுகின்ற மக்கள் எழுச்சி 2014 ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறியாகும்.இதனை இலக்காகக் கொண்டே நாம் செயற்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Suresh-remax-2013-01-01
Mahesan supramaniyam 031109
Ramans2011
INNSYS-20120930
RoyaShades-l2011(04-12-11)
TDE_Computers2011
Canada Kanthasamy Kovil
TamilsGuid-191012-2013
NIRO-DANCE-100213
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com