Untitled Document
March 1, 2015 [GMT]
  • Welcome
  • Welcome
  
   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

உலகின் முதல் விஞ்ஞானிகளான சித்தர்கள் பயன்படுத்திய பதினொரு முத்திரைகள் இவை:
[Saturday 2015-02-28 23:00]

சித்தர்கள் உலகின் முதல் விஞ்ஞானிகள். இந்த முத்திரையை செய்தால் நரம்பு மண்டலம் ஊக்குவிக்கப்படும். வாயுத் தொல்லை, மலச்சிக்கல், மூலநோய் ஆகியவை நீங்க வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு கருப்பை வலுப்பெறும். பிரசவ காலத்தில் இயல்பான குழந்தைப் பேறு கிடைக்கும். முயற்சித்து பாருங்கள் நிச்சயம் மாற்றம் தெரியும்....மனிதர்கள் சத்தமாக பேசினால் மூளை வேலை செய்யாது! பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தகவல்
[Saturday 2015-02-28 22:00]

மனித மூளையில் ‘புரோகா’ என்ற ஒரு பகுதி, பேசுவதை கட்டுப்படுத்தும் மையமாக செயல்பட்டு வருகிறது. சுமார் 150 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கருத்துதான் நிலவி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் மேரிலாண்டில் உள்ள கலிபோர்னியாவில் உள்ள பெர்க்லி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மனிதர்கள் சத்தமாக பேசும்போது, மூளையின் குறிப்பிட்ட பகுதி இயங்காமல் போய்விடும் என்று கூறியுள்ள அவர்கள், அதற்கான அறிக்கை ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளனர்.ஆப்பிள் கைக்கடிகாரத்தை இனி கார் சாவியாகவும் கிரெடிட் கார்டாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்!
[Saturday 2015-02-28 21:00]

ஆப்பிள் கைக்கடிகாரத்தை இனி கார் சாவியாகவும் கிரெடிட் கார்டாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார். இது குறித்து டிம் குக் தி டெலிகிராஃப் பத்திரிகைக்காக கூறும்போது, "ஆப்பிள் கைக்கடிகாரத்தை கார் சாவியாக பயன்படுத்திக்கொள்ளும் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நீங்கள் இனி கொத்து கொத்தாக சாவியை கையில் சுமக்க வேண்டாம்.உங்கள் கணனி நோய்வாய்ப்பாட்டுள்ளதா? ஓசியில் கிடைக்கும் வைரஸ் தொற்று நீக்கிகள்!
[Saturday 2015-02-28 00:00]

உங்கள் மின் கணனிக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு நோய்வாய்ப்பாட்டு உங்களை அல்லல்படுத்தியிருக்கக் கூடும். கணனிக்கு வைரஸ் தொற்றிக் கொண்டால், உங்களுக்கு தலையிடி தொற்றும். நித்திரை வர மறுக்கும். இரத்த அழுத்தம் கூடும். கணனிக்குள் பதியப்பட்ட உங்கள் வாழ்க்கையே முடிவுக்கு வந்ததாக மன அழுத்தம் ஏற்படும். நீங்களோ, அல்லது உங்கள் வீட்டுப் பிள்ளைகளோ, இணையத்தில் உலாவும் போது, ஏதாவது ஒரு இடத்தில் ஏடாகூடமாய் அழுத்தப் போக, உங்களை அறியாமலேயே இந்த வைரஸ் தொற்றியிருக்கக் கூடும். சில வேளைகளில் உங்கள் கணனியை தாங்களாகவே சோதனை செய்து, வைரஸ் பீடித்திருப்பதாகவும் அதற்கான சர்வரோக நிவாரணி தங்களிடம் இருப்பதாகவும் அதை இலவசமாயோ, பணத்திற்கோ பெற இதை அழுத்துங்கள் என்று கூறும் நிறுவனங்கள் உள்ளன.எபோலாவை தடுக்கும் ஆற்றல் ஆசியாவில் விளையும் மூலிகைக்கு உண்டு: - ஆய்வில் கண்டுபிடிப்பு
[Friday 2015-02-27 23:00]

எபோலாவை தடுக்கும் ஆற்றல் ஆசியாவில் விளையும் மூலிகைக்கு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மனித செல்களில் எபோலா வைரஸ் கிருமிகள் புகுவதை மூலிகை தடுப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.ஆப்பிரிக்க நாடுகளான கினியா, லைபீரியா ஆகிய நாடுகளில் கடந்த 2013ம் ஆண்டு எபோலா நோய் பரவ ஆரம்பித்தது. இந்நோய்க்கு இதுவரை 9000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் எபோலாவால் பாதிக்கப்பட்டனர்.பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் எபோலாவை கட்டுப்படுத்த அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆப்ரிக்க நாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோர் பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.வாழ்க்கைத் துணையை விரட்டும் வாயுக்கோளாறு பற்றிய பதிவு!
[Friday 2015-02-27 23:00]

வயிற்றுக்குள் போகும் பருப்புகளும் பயறுகளும் சமிபாடடைவதன் விளைபயனாய், திருவிழா வெடியோசையாய் பெரும் ஒலியெழுப்பி, நறுமணம் பரப்பி படுக்கையறையில் சில்மிசம் பண்ணும் வாயுக்கோளாறு, வாழ்க்கைத் துணைகளை விரட்டுவது ஒன்றும் புதியதல்ல. ‘நாற்றம் என்ற சொல் முன்பு நறுமணத்தைக் குறித்தது’ என தமிழ்ப் பேரறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை ‘மலரும் மாலையும்’ நூலில் குறிப்பிடுவார். அவர் குறிப்பிட்டது மலரையா அல்லது வாயுக் கோளாறையா என்பது இன்றுவரை புரியவில்லை.ஆயுள்காக்கும் ஆயுர்வேதம் திரிபலா! - பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து!
[Friday 2015-02-27 20:00]

திரிபலா - பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து..

லும் உள்ளமும் முழுத் தகுதியுடன் இருந்தால் தான் இவை சாத்தியமாகும். உடலும் உள்ளமும் முழுத்தகுதியுடன் விளங்குவதற்கு, அன்றாட வேலைகளை ஒரு ஒழுங்கு முறையுடன் செய்து வர வேண்டும். முறையான மற்றும் கட்டுப்பாடான உணவுப்பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். வாழ்க்கையை உடலளவில் மிகவும் வசதியான முறையில் வாழ்கிறோம். ஆனால், மனதளவில் மிகவும் அழுத்தம் நிறைந்த வாழ்க்கையை தான் வாழ்கிறோம். இத்தகைய வாழ்க்கை முறை சீக்கிரமாகவே முதுமையாக உணர வைத்து விடும் அல்லது பல நோய்களுக்கு வழிவகுக்கும்.எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக வியர்க்கின்றதோ அந்தளவிற்கு நல்லதாம்:
[Friday 2015-02-27 07:00]

வியர்ப்பது நல்லதுதான் என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் அளவுக்கு அதிகமாக வியர்த்தால்.. அதுவும் குண்டாக இருப்பவர்களுக்கு அதிகளவில் வியர்க்கும். இது நல்லதா? நிச்சயம் நல்லதுதான். எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக வியர்க்கின்றதோ அந்தளவிற்கு நல்லதாம். பலர் அந்த வியர்வையைக் கட்டுப்படுத்த நிறைய முயற்சிகளை மேற்கொள்வார்கள். ஆனால், வியர்ப்பதால் உடல் எடை குறையுமாம். வியர்வை அதிகம் வந்தால், உடல் பருமனானது குறையும். அதுமட்டுமின்றி, வியர்வை வெளியேறுவதன் மூலம் நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. எனவே, அதிகம் வியர்த்தால், சற்று வியர்க்க வழிவிடுங்கள்.தற்கொலைகளை தடுக்க பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் புதிய வசதியை அறிமுகப்படுத்துகிறது:
[Friday 2015-02-27 07:00]

தற்கொலைகளை தடுக்க பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் புதிய வசதியை அறிமுகப்படுத்துகிறது. பேஸ்புக்கில் இருப்பவர்கள் யாரேனும் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணங்களுடன் போராடி வந்தால், அவர்களுக்கு அறிவுரை மற்றும் ஆறுதல்களை வழங்கி எண்ணத்தை மாற்றும் முயற்சியில் பேஸ்புக் களமிறங்கியுள்ளது. இதற்கென 24 மணிநேரமும் செயல்படக்கூடிய ஒரு ஹெல்ப்லைனும் உருவாக்கப்பட்டுள்ளது. வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள சமூக சேவை அமைப்புடன் இணைந்து இந்த புதிய டூலை உருவாக்கியுள்ளது பேஸ்புக்.இமைகள் கண்களை எப்படி காக்கின்றன? - விஞ்ஞானிகள் விடுவித்துள்ள புதிர்
[Thursday 2015-02-26 21:00]

இமைகள் எப்படி கண்களைப் பாதுகாக்கின்றன என்பது குறித்த புதிரை விஞ்ஞானிகள் விடுவித்துள்ளனர். மிகநீண்ட காலமாக இமைகள் கண்களுக்குள் தூசிகள் போவதைத் தடுக்கும் ஒரு வடிகட்டியாகவே கருதப்பட்டது. ஆனால் மனிதர்கள் உட்பட 22 பாலூட்டிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வுகள், இமைகளின் செயல்பாடு தொடர்பில் புதிய தகவல்களை அளித்துள்ளன. கண்களின் மேற்பரப்பில் காற்று நேரடியாக வீசுவதை இமைகள் தடுத்து, அதை திசைமாற்றி விடுகின்றன என்று அமெரிக்க ஆய்வாளர்கள் இப்போது கண்டறிந்துள்ளனர்.ஆபாச தரவுகள் போட்டோ, வீடியோக்களுக்கு கூகுள் தடை விதிப்பு!
[Tuesday 2015-02-24 18:00]

பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற இன்றைய சமூக வலைத்தளங்களுக்கு இணையாக முன்பு பாப்புலராக இருந்தவை 'பிளாக்' எனப்படும் வலைப்பூக்கள். சீனா உள்ளிட்ட சில நாடுகளில் ஆபாச தரவுகள் அடங்கிய விஷயங்களை தேடுதலில் கிடைக்க செய்ய கூகுளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கூகுளுக்கு சொந்தமான பிரபல 'Blogger'-ல் வரும் மார்ச் 23-ந்தேதி முதல் ஆபாச போட்டோக்கள், வீடியோக்களை 'ஷேரிங்' செய்ய தடை விதிக்கப்படுகிறது. அதேபோல், பாலுணர்வை (sexually explicit) தூண்டக்கூடிய ஆபாசக்காட்சிகள் (graphic nudity) அடங்கிய வீடியோக்களை அப்லோடு செய்யவும் தடை விதிக்கப்படுகிறது.நெஞ்செரிச்சல் (Heart Burn ) ஏன் வருகிறது?
[Monday 2015-02-23 19:00]

உணவுக் குழாய்க்கும் இரைப்பைக்கும் நடுவே ஒரு வால்வு அதாவது ஒரு தடுப்பிதழ் இருக்கிறது. இந்த வால்வு நமது வாயில் இருந்து வயிற்றுக்குள் போகும் உணவை அனுப்புகிற ஒரு வழிப் பாதையாக செயல்படுகிறது. அத்தோடு உணவுக்குழாயில் ஆல்கலியும், வயிற்றில் அமிலமும் உள்ளது. இவை இரண்டும் ஒன்றாக கலக்காமல் தடுப்பதுதான் இந்த வால்வின் வேலையாகும்.மசாலாப் பொடி, எண்ணெய், டீ, காபி, புகைபிடித்தல், காரமான உணவு போன்றவைகளை எதிர் கொள்ளும் சக்தி இயற்கையாகவே சிலருக்கு குறைவாக இருப்பதால் இந்த வால்வு பலவீனமாகிறது.இளம்வயதில் மது குடிக்கும் ஆண்களின் அறிவுத்திறன் குறையும்!
[Monday 2015-02-23 07:00]

இளம்வயதில் மது குடிக்கும் ஆண்களிடம் அறிவுத்திறன் குறைவதாக ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1969 முதல் 1971 ஆண்டுகளில் பிறந்த ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 49,321 பேரிடம் எடுக்கப்பட்ட ஆய்வில் இந்த தகவல் கிடைக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் கேள்வி தாள்கள் அளிக்கப்பட்டு அதற்க்கு அளித்த பதிலின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 5 குளிர்பானங்கள் பற்றிய செய்தி!
[Sunday 2015-02-22 22:00]

நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால், உடலில் நோய்கள் விரைவில் தாக்கும். ஆதலால் நோயெதிர்ப்பு மண்டத்தை வலிமையுடனும், ஆரோக்கியத்துடனும் வைத்துக்கொள்ள ஆரோக்கியமான பழங்கள், காய்கறிகளை எடுத்துக்கொள்வதோடு குளிர்பானங்களையும் குடிக்க வேண்டும்.பெண்கள் கணவன் காதலனை சுலபமாக புரிந்து கொள்ள என்ன செய்யவேண்டும்?
[Sunday 2015-02-22 07:00]

ஒவ்வொரு பெண்ணுக்கும் தன் காதலன் அல்லது கணவ னை பற்றி அதிகமாக தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்கும். அப்படி தெரிந்து கொள்ளும்போதுதான் அந்த உறவில் அவர்களின் நிலை என்னவெ ன்று அவர்களுக்கு புரியும். அல்லது அந்த உறவில் உள்ள அர்த்தத்தை அவர்களால் புரிந்து கொள்ளமுடியும். உங்கள் கணவன் அல்லது காதலனை சுலபமாக புரிந்து கொள்ளலாம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் நீங்கள் நினை க்கும் அளவிற்கு அது ஒன்றும் அவ்வளவு சுலபம் இல்லை. அவ ரைபற்றி ஆழமாக தெ ரிந்து கொள்ள நீங்கள் முற்படும்போது அதனை நீங்கள் மென்மையாக கையாள வேண்டும்.பொன்னாங்கண்ணியில் ஆண்களது மலட்டுத்தன்மையை போக்கவல்லது !
[Sunday 2015-02-22 07:00]

பொன்னாங்கண்ணி கீரையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் பொதிந்து கிடக்கிறது. பொன்னாங்கண்ணி ஓர் அற்புதமான உடற்தேற்றி என்று கூறலாம். உடல் வலியைப் போக்கக் கூடியது மட்டுமின்றி உடலுக்கு பலத்தையும் தரவல்லது. பல்வேறு நரம்பு நோய்களையும் குணப்படுத்தும் வல்லமை படைத்தது. பொன்னாங்கண்ணி ஞாபக சக்தியைத் தூண்டக் கூடியது. கண்களுக்கும், மூளைக்கும் குளிர்ச்சி தரவல்லது. தலைவலி, மயக்கத்தை தணிக்க கூடியது. பொன்னாங்கண்ணி சாறு பாம்புக் கடி விஷத்தை முறிக்கும் தன்மை உடையது.எங்கெங்கும் இணைய வசதி செய்து தர கூகுளின் பிரமாண்ட திட்டம்!
[Saturday 2015-02-21 12:00]

உலக அளவில் இணைய வசதி எட்டாதவர்கள், 5 பில்லியன் பேர் இருக்கின்றனர். இதற்கு, பல இடங்களில் இணைய சமிக்ஞைகள் எட்ட முடியாமல் இருப்பது தான் காரணம். எனவே, வருமானத்திற்கு இணையத்தையே நம்பியிருக்கும் தேடு பொறி இயந்திர நிறுவனமான கூகுள், எல்லோருக்கும் இணையம் எட்ட வேண்டும் என்பதற்காக, 'புராஜக்ட் லூன்' என்ற திட்டத்தை, 2013ல் அறிவித்தது.மூலிகைகளில் பெரும் சக்தி படைத்தது வேம்பு: - நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்!
[Friday 2015-02-20 23:00]

ஆலமரம், அரசமரம் போல பல ஆண்டுகள் வளரக்கூடியது வேப்பமரம். இது சாதாரணமாக 30 அடி முதல் 40 அடி உயரம் வளரக்கூடியது. நல்ல வளமான களிமண்ணில் 50 அடி முதல் 65 அடிவரையிலும் கூட வளரும். பொதுவாக வேப்ப மரத்தை பார்ப்பதாலும், அதனடியில் அமர்வதாலும், அதன் காற்றை சுவாசிப்பதாலும் மன அமைதி கிடைக்கும். வேம்பு என்பதற்கு பராசக்தி மூலிகை என்ற சிறப்பு பெயர் உண்டு. மூலிகைகளில் பெரும் சக்தி படைத்ததாக விளங்குகிறது. வேம்பின் பூர்வீகம் இந்தியாவும் பாகிஸ்தானும் தான். பின்னர் உலகம் முழுவதும் பரவியது. வேம்பிற்கான காப்புரிமையை இந்தியா போராடி பெற்றது.கழிவறைகளுக்கென்று தனி இடம் ஒதுக்கி வைத்து வாழும் எறும்புகள்! ஆய்வு மூலம் தெரிவிப்பு
[Friday 2015-02-20 11:00]

எறும்புகள் தங்கள் கூட்டின் ஓரத்தில் கழிவறைகளுக்கென்று தனி இடம் ஒதுக்கி வைத்து வாழ்வதாக ஆய்வொன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. ஜெர்மனி நாட்டில் உள்ள ரெகன்ஸ்பர்க் பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் டாமர் சேக்ஸ் மற்றும் அவரது சகாக்கள் இதுகுறித்த ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வு முடிவுகள் ‘ப்ளஸ் ஒன்’ எனும் பிரபல அறிவியல் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளன. இதற்காக 21 கட்டெறும்புக் கூடுகள் தெரிவு செய்யப்பட்டன‌. அவற்றில் 150 முதல் 300 கட்டெறும்புகள் வாழ்ந்து வந்தன. இந்த ஆய்வு இரண்டு மாதங்கள் நடைபெற்றது.வார்த்தைகளை அளவோடு பேசி நீண்ட ஆயுளுக்கு அத்திவாரமிடுவோம்:
[Friday 2015-02-20 07:00]

பிரச்சனைகள் இல்லாத மனிதனே இல்லையென்று சொல்வார்கள், யாரோடு பேச்சுத் தொடுத்தாலும் ஏதாவது ஒரு பிரச்சனையைப் பற்றி கூறாமல் தன் பேச்சை நிறுத்த மாட்டார்கள் என்று சொல்லுமளவிற்கு பிரச்சனைகள் இவ்வுலகத்தில் நிறைந்து காணப்படுகிறது. தொழில்நுட்பம் உலகை ஆளுகின்ற காலம் மறைந்து இனிவரும் காலங்களில் பிரச்சனைகள் தான் இந்த உலகத்தை ஆளப் போகிறதோ தெரியவில்லை. அப்படியாகாமல் இருக்க வேண்டும். மனிதன் தன் வாழ்வைப் பூரணப்படுத்துவதற்கு இறைவனால் வரமாக வழங்கப்பட்ட பார்வை,செவிமடுத்தல்,பேச்சு, நடத்தைகள் போன்றவைதான் இன்று குடும்பங்களில் பிரச்சனைகளைத் தோற்றுவிக்கின்ற பிரதான காரணிகளாய் அமைந்துவிடுகின்றன.


ALLsesons-15-06-14
AIRCOMPLUS2014-02-10-14
NIRO-DANCE-100213
Easankulasekaram-Remax-011214
SUGAN-SIVARAJHA 2014
Mahesan-Remax-200215
RoyaShades-l2011(04-12-11)