Untitled Document
September 3, 2015 [GMT]
  • Welcome
  • Welcome
  
   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome


முருங்கை இலையில் பாலாடையை விட 2 மடங்கு புரோட்டீன் இருக்கிறது:
[Monday 2015-08-24 20:00]

முருங்கை இலையில் பாலாடையை விட 2 மடங்கு புரோட்டீன் இருக்கிறது. ஆரஞ்சைவிட 7 மடங்கு வைட்டமின் சி நிறைந்திருக்கிறது-. வாழைப்பழத்தைவிட 3 மடங்கு பொட்டாசியம் இருக்கிறது. கேரட்டைவிட 4மடங்கு வைட்டமின் ஏ உள்ளது. பாலைவிட 4 மடங்கு கால்சியம் உள்ளது. உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் முருங்கையிலை கொண்டுள்ளது என பட்டியலிடுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.கூகுளைவிட துல்லியமான தேடல் பொறி! – சவால் விடும் 16 வயது இந்திய வம்சாவளி குடிமகன்
[Friday 2015-08-21 09:00]

நாம் தினம் ஒரு முறையாவது பயன்படுத்திவிடும் கூகுளில், எதைத் தேடினாலும் நொடி நேரத்தில் ஐந்தாறு இலக்கங்களில் தேடல் முடிவுகளை கொட்டிவிடும். இருந்தாலும் இரண்டு பக்கங்களுக்கு மேல் போகவே மாட்டோம். ஏனெனில் அந்த அளவுக்கு துல்லியமாக நமக்கு என்ன வேண்டுமோ அதை முதலில் தர வல்லது கூகுள் தேடல் பொறி. ஆனால் இந்த பதின்ம வயது சிறுவன், கூகுளுக்கே சவால் விடுகிறார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனடிய குடிமகனான அன்மோல் டக்ரெல் என்பவர், தான் கண்டுபிடித்துள்ள தேடல் பொறி, கூகுளைவிட 47% துல்லியமாகவும் சராசரியாக 21% அதிக துல்லியமாகவும் இருப்பதை நிரூபித்துள்ளார்.பெண்களுக்கு பாலுறவில் நாட்டத்தை தூண்டும் புதிய மருந்து! - அமெரிக்காவில் அனுமதி Top News
[Friday 2015-08-21 09:00]

பாலுறவில் நாட்டம் குறைந்துள்ள பெண்களுக்கு உதவும் வகையிலான புதிய மருந்து ஒன்றுக்கு அமெரிக்காவின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு முதன் முதலாக ஒப்புதல் அளித்துள்ளது. அதேநேரம் இந்த மருந்தால் பக்கவிளைவுகள் ஏற்படலாமென்று எச்சரிக்கப்படுகிறது.காற்றின் வேகமும் பெயர்களும்!
[Thursday 2015-08-20 07:00]

மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினால் அது மென் காற்று.

மணிக்கு 6 முதல் 11 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினால் அது இளம் தென்றல்.

மணிக்கு 12 முதல் 19 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினால் அது தென்றல் காற்று.தனக்குத்தானே கற்பித்துக் கொள்ளும் செயற்கை மூளை கண்டுபிடிப்பு
[Tuesday 2015-08-18 19:00]

செயற்கை அறிவுத்திறனை மேம்படுத்தும் ஆய்வின், அடுத்த கட்ட பாய்ச்சலாக தனக்குத்தானே கற்பித்துக் கொள்ளும் செயற்கை மூளையை உருவாக்கி ரஷ்ய விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். கிழக்கு சைபீரியாவில் உள்ள டோம்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள ரஷ்ய நாட்டு விஞ்ஞானிகள், ஜெர்மனி, பல்கேரியா, உக்ரைன், பெலாரஸ், கஜகஸ்தான் நாட்டு விஞ்ஞானிகளுடன் இணைந்து செய்த ஆய்வை நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளிப்படுத்தினர். அதன்படி, இவர்கள் புதிதாக ஒரு மின்னணு சாதனத்தை உருவாக்கியுள்ளனர். இந்த சாதனம் தனக்குத்தானே கற்பித்துக் கொள்வதுடன் சுற்றுச்சூழலுக்கு ஏற்றபடி எதிர்வினை செய்யும் திறன் கொண்டது.ஒருாவத வது இடத்தில் தமிழ் மொழி - தமிழன் என்று சொல்ல டா தலை நிமிர்ந்து நில்லடா
[Friday 2015-08-14 07:00]

உலகத்தில் மிகப்பழமையான பத்து மொழிகளை Worldblaze இணையத்தளம் வரிசைப்படுத்தியிருக்கிறது.

உலகில் பேசப்படும்/பட்ட மிகப்பழமையான முதல் பத்து மொழிகள் Top 10 Oldest Languages in the World - சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மொழியானது தோன்றியிருந்தாலும், கிட்டத்தட்ட 6000 மொழிகள் தற்போது உலகெங்கும் பேசப்பட்டு வருகின்றன. இந்த மொழிகளில் பழைய மொழிகள் எவையென்பதைக் கண்டுபிடிப்பதில் பல சிரமங்கள் இருக்கின்றன. எங்களால் உருவாக்கப்பட்ட வரிசை இது.குண்டான ஆண்களையே பெண்களுக்கு அதிகம் பிடிக்குமாம்..
[Wednesday 2015-08-12 20:00]

பிரித்தானியாவில் உள்ள பெரும்பாலான இளம்பெண்களுக்கு கட்டுடல் தோற்றம் உடைய ஆண்களை விட அதிக எடையுள்ள குண்டான ஆண்கள் மேல் தான் அதிகம் விருப்பம் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.பிரித்தானியாவை சேர்ந்த பிரபல ஆடை நிறுவனம் ஒன்று, இளம்பெண்கள் எந்த விதமான தோற்றம் உடைய ஆண்களை மிகவும் விரும்புகிறார்கள் என தெரிந்துக்கொள்ள அண்மையில் ஆய்வு ஒன்றை நடத்தியது. 18 வயது இளம்பெண்கள் மற்றும் அதற்கு மேல் வயதுடைய சுமார் 2, 544 பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.உடலை சுத்தமாக்கும் உணவுகளான எலுமிச்சை ,மாதுளை ,பூண்டு..!
[Sunday 2015-08-09 19:00]

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தப்படுத்தும் உணவு வகைகள் சிலவற்றை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்,

எலுமிச்சை

எலுமிச்சையில் விட்டமின் சி இருப்பதால் இதனை ஜூஸ் போட்டு குடிப்பதன் மூலம், உடலின் மூலைமுடுக்குகளில் தங்கியுள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.இளம் வயதில் தந்தையானால் நடுத்தர வயதில் மரணம்!
[Wednesday 2015-08-05 08:00]

சமீபத்தில் பின்லாந்தை சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று மேற்கொண்ட ஆய்வில், இளம் வயதில் தந்தையாகும் ஆண்கள் நடுத்தர வயதில் மரணம் அடைவதற்கான சாத்தியம் அதிகமாக உள்ளதாக தெரியவந்துள்ளது. 25 வயதிற்குள்ளாகவே திருமணம் செய்துக்கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆண்கள் மற்றவர்களைவிட இளம் வயதில் கணவன், தந்தை மற்றும் குடுமபத் தலைவர் போன்ற பொறுப்புகளை சுமக்க வேண்டியுள்ளது. இதனால் அவர்கள் தங்கள் உடல் நலத்தை கவனிக்காமல் விட்டுவிடுகின்றனர். இது தான் நடுத்தர வயதில் மரணம் அடைவதற்கான காரணம் என கூறப்படுகிறது.விந்தணுக்களால் பெண்களுக்குள் ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியான மாற்றங்கள்!
[Sunday 2015-08-02 20:00]

கிராமங்களில் முன்னர் பரவலாக ஓர் சொல்வழக்கு புழக்கத்தில் இருந்து வந்தது, “இவ திமிரு எல்லாம் புருஷன்கிட்ட தான் அடங்கும்..”. அதாவது பருவ வயதில் கொஞ்சம் துடுக்காக இருக்கும் பெண்களை பெரியவர்கள் இவ்வாறு கூறி வந்ததுண்டு. ஒரு வேலை அந்த சொல்வழக்குக்கு இது தான் அர்த்தமாக இருக்குமோ என்ற எண்ணம் இப்போது பிறந்துள்ளது. சமீபத்தில், மருத்துவ ஆராய்ச்சியில், பெண்கள் தங்கள் கணவனோடு உடலுறவில் ஈடுபட்டு, அவனது விந்தணு அவளது உடலோடு கலந்த பின்னர், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், அவர்களது நடத்தையில் மாற்றங்கள் ஏற்படுகிறது என்று கண்டறிந்துள்ளனர்…மொபைல் சாதனங்களை சார்ஜ் செய்வதற்காக அதிகூடிய மின்சக்தியை தரும் POWER BANK!
[Sunday 2015-08-02 20:00]

Power Bank எனப்படும் மேலதிக மின்கலங்கள் (External Battery), ஸ்மார்ட் தொழில்நுட்பங்களைக் கொண்ட மொபைல் சாதனங்களை சார்ஜ் செய்வதற்காக பயன்பாட்டில் இருக்கின்றன. இத் துணைச் சாதனத்தை பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டு தயாரித்து அறிமுகம் செய்துவரும் நிலையில் Zendure A8 Pro எனும் புதிய Power Bank அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப் Power Bank 25600mAh மின்சக்தியை வழங்கக்கூடியது.விண்டோஸ் 10 இலவசம் ஒரே நாளில் 1.5 கோடி பேர் டவுன்லோட்! - நீங்களும் ஒருவரா!
[Friday 2015-07-31 18:00]

மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் 10 பதிப்புக்கு மக்களிடையே அமோக வரவேற்பு ஏற்பட்டுள்ளது. அப்பதிப்பு வெளியான 24 மணி நேரத்தில் ஒன்றரை கோடி பேர் பதிவிறக்கம் செய்தனர். மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் 10 பதிப்பு வெளியான இருபத்திநான்கு மணி நேரத்தில் சுமார் ஒன்றரை கோடி பேர் தமது கம்ப்யூட்டர்களை இலவசமாக தரம் உயர்த்திக் கொண்டுள்ளனர். கம்ப்யூட்டர் உலகின் புதிய வரவான மைக்ரோசாப்டின் விண்டோஸ் 10 பதிப்பு நேற்று முன்தினம் வெளியானது.பால்வினை நோய் இருந்தால் அதை கண்டுபிடித்து எச்சரிக்கும் ஆணுறைகள் தயார்!
[Friday 2015-07-31 18:00]

நிறம் மாறும் ஆணுறைகளை உருவாக்குவதில் ஈடுபட்டிருக்கும் மூன்று பள்ளி மாணவர்கள் நிறம் மாறும் ஆணுறைகளை உருவாக்குவதில் ஈடுபட்டிருக்கும் மூன்று பள்ளி மாணவர்கள் பிரிட்டனைச் சேர்ந்த மூன்று பள்ளிமாணவர்கள் ஒரு வித்தியாசமான முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். உடலுறவில் ஈடுபடுபவர்களுக்கு பால்வினை நோய் இருந்தால் அதைஉடனடியாகக் கண்டுபிடித்து எச்சரிக்கும் ஆணுறைகளை வடிவமைப்பதில் இவர்கள் தீவிரமாக இறங்கியிருக்கிறார்கள். இவர்களின் இந்த முயற்சிக்கு ஏகப்பட்ட ஆதரவு குவிந்து வருகிறது. கருத்தடை சாதன நிறுவனம் ஒன்று ஏற்கனவே இவர்களை தொடர்புகொண்டு பேசிவருகிறது. இத்தனைக்கும் இந்த மூன்று பேருமே இன்னமும் பள்ளிக்கூடத்தைக் கூட தாண்டவில்லை.ஆளில்லா விமானம் மூலம் இணையத்தள வசதி: விரைவில் பரிசோதனை நடாத்தவுள்ள பேஸ்புக்
[Friday 2015-07-31 09:00]

ஆளில்லா விமானம் மூலம் உலகம் முழுவதும் இணையத்தள வசதி செய்து தருவது தொடர்பான பேஸ்புக்கின் ஆராய்ச்சி நிறைவடைந்துள்ளது. விரைவில் பரிசோதனை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பிரதானமானது பேஸ்புக். உலகம் முழுவதும் கால்பதித்துள்ள இந்த நிறுவனத்தின் சேவைகள் சில நாடுகளில் உள்ள ஊரகப்பகுதிகளுக்கு மட்டும் சென்று சேரவில்லை. இந்த குறையை நிவர்த்தி செய்வதற்காக கடந்த மார்ச் மாதம் ‘டிரோன்’ எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானங்கள் மூலம் ‘இன்டர்நெட்’ வசதி செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.சிறுநீர் கழிக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
[Friday 2015-07-31 09:00]

உங்கள் உடலுறுப்பில் மிகவும் முக்கியமான பாகம் சிறுநீரகம். ஏனெனில் இது தான் உங்கள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உழைக்கின்றது. உங்களுக்கு உடல்நிலை சரியாக இல்லை அல்லது உங்கள் உடலில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது என்பதை உங்கள் இயற்கை உபாதையை வைத்தே கண்டுப்பிடித்துவிடலாம். பொதுவாக உங்கள் சிறுநீரில் ஏற்படும் மாற்றத்தை வைத்து எளிதாக உங்கள் உடல்நல மாற்றத்தை கண்டறிந்துவிடலாம். உடல்நிலை சரியில்லை எனும் போது முதலில் சிறுநீர் பரிசோதனை செய்வதற்கு காரணமும் இதுதான். நாட்டு வைத்தியம் செய்பவர்கள் கூட சிறுநீரின் நிறத்தை வைத்தே என்ன பாதிப்பாக இருக்ககூடும் என்பதை கணித்துவிடுவார்கள்.சிறு­நீ­ர­கத்தில் கற்கள் உருவாவதை எப்படி தெரிந்துகொள்வது?
[Thursday 2015-07-30 21:00]

ஒரு­வ­ருக்கு சிறு­நீ­ர­கத்தில் கல் ஏற்­பட்­டு­விட்டால், கீழ் வயிற்றில் அதீ­த­மான வயிற்­று­வலி ஏற்­படும். முதுகுப் பகு­தியில், சிறு­நீ­ரக மண்­ட­லத்தில் வலி அதி­க­மாக இருக்கும். சிறுநீர் கழிக்­கும்­போது எரிச்சல், ரத்தம் கலந்து வருதல் ஆகிய பிரச்சி­னைகள் இருக்கும். சிறு­நீ­ரகக் கல் இருப்­பதைக் கண்­ட­றிய அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எக்ஸ்ரே பரி­சோ­த­னைகள் போது­மா­னவை.எலும்பு தேய்மானத்தை சூரிய ஒளி தடுக்கும் !
[Wednesday 2015-07-29 20:00]

எலும்பு என்பது மனிதனின் உடலில் காணப்படும் விறைப்பான, கடினத்தன்மை கொண்ட உறுப்பாகும். உடல் உள் உறுப்புகளுக்கு பாதுகாப்பாக அமைந்து உடலை தாங்கும் உறுப்புகள்தான் எலும்புகள்.மனிதனின் உடலமைப்பை நிர்ணயம் செய்வதும் எலும்புகளே. இதில் ரத்த சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், குருதிச் சிறுதட்டுகள் போன்ற முக்கிய ரத்த உறுப்புகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாகவும் அமைந்துள்ளன. மேலும் கனிமங்களை சேகரித்து வைக்கும் சேமிப்பு கூடமாகவும் எலும்புகள் உள்ளன.பொதுவாக எலும்புகள் பலவகையான வடிவங்களில் அமைந்துள்ளன.தைராய்டு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்!
[Sunday 2015-07-26 20:00]

கழுத்திற்கு நடுவில் உள்ள ஓர் சுரப்பி தான் தைராய்டு. இந்த சுரப்பி சுரக்கும் ஓர் ஹர்மோன் தான் தைராக்ஸின். இது தான் உடலின் வெப்பநிலை, உடல் எடை, மெட்டபாலிசம் போன்றவற்றை சீராக பராமரிக்கவும், உடலுக்கு வேண்டிய ஆற்றலை உற்பத்தி செய்யவும் உதவுகிறது. சொல்லப்போனால், உடலின் செயல்பாடுகள் சீராக நடைபெறுவதற்கு இந்த ஹார்மோன் மிகவும் இன்றியமையாதது எனலாம். ஆனால் சிலருக்கு இந்த ஹார்மோன் அதிகமாகவும் (ஹைப்பர் தைராய்டு), சிலருக்கு குறைவாகவும் (ஹைப்போ தைராய்டு) சுரக்கப்படும். இப்போது நாம் பார்க்கப்போவது, தைராய்டு சுரப்பி தைராக்ஸின் ஹார்மோனை உடலுக்கு வேண்டிய அளவில் சுரக்காமல், குறைவாக சுரந்தால் தவிர்க்க வேண்டிய உணவுகளைப் பற்றி தான்.பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
[Friday 2015-07-24 07:00]

செரிமான மண்டலத்தை சுத்தம் செய்யும்.

செரிமான மண்டலம் நன்கு ஆரோக்கியமாக இருக்கிறதா இல்லையா என்பதை நம் முகமே வெளிக்காட்டிவிடும். செரிமான மண்டலம் பலவீனமாக இருந்தால், மலச்சிக்கல் ஏற்படக்கூடும். அப்படி மலச்சிக்கல் ஏற்பட்டால், முகப்பருக்கள் வர ஆரம்பிக்கும். ஆனால் தினமும் காலையில் ஊற வைத்த பாதாமை உட்கொண்டு வந்தால், அது வயிற்றில் வளரும் பாக்டீரியாக்களின் அளவை அதிகரித்து, செரிமானத்தை சீராக்கி, இதனால் அழகான மற்றும் ஆரோக்கியமான சருமத்தைப் பெற உதவும்.கேரட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
[Friday 2015-07-24 07:00]

ஒரு கேரட்டில், நாள் ஒன்றுக்கு தேவைப்படும் சத்துக்கள் எவ்வளவு இருக்கிறது தெரியுமா?

விட்டமின்-A சத்துக்கள் 210% உள்ளது.

விட்டமின் கே 10% உள்ளது.

விட்டமின் சி 6% உள்ளது.

கால்சியம் 2% உள்ளது.


Angel-220715-ads-With over 12 years of banquet services
Easankulasekaram-Remax-011214
Empire-party-rental-12-06-15-2015
Sugan Sivarajah 210615 Home Life
AIRCOMPLUS2014-02-10-14
Mahesan-Remax-169515-Seithy
NIRO-DANCE-100213
<b> 29-09-15 அன்று கனடாவில் நடைபெற்ற பாடும் மீன்களின் பொழுது 2015 ஒன்று கூடல் நிகழ்வின் படத்தொகுப்பு. </b>
<b>   29-08-15 அன்று கனடா - ரொறன்ரோவில் நடைபெற்ற  தமிழர் தெரு விழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b>
<b> 24-08-15 அன்று ரொறன்ரோவில் நடைபெற்ற GTR வானொலி ஒன்று கூடல் நிகழ்வின் படத்தொகுப்பு.. </b>