Untitled Document
February 21, 2018 [GMT]
  • Welcome
  • Welcome
இளநீருடன் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
[Tuesday 2018-02-13 19:00]

உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் இளநீர் பெரிதும் உதவியாக இருக்கும். அதிலும் இந்த இளநீருடன் தேன் கலந்து குடித்தால், உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியும்.

உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் இளநீர் பெரிதும் உதவியாக இருக்கும். அதிலும் இந்த இளநீருடன் தேன் கலந்து குடித்தால், உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியும்.

  

நம் அனைவருக்குமே இளநீர் ஏராளமான நன்மைகளைக் கொண்ட பானம் என்பது தெரியும். உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் இளநீர் பெரிதும் உதவியாக இருக்கும். அதிலும் இந்த இளநீருடன் தேன் கலந்து குடித்தால், உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியும். சரி, இப்போது இளநீரில் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்துக் காண்போம்.

ஒரு டம்ளர் இளநீரில் 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து, தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

இளநீருடன் தேன் கலந்து குடிக்கும் போது, அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் ஏ, செல்களை ப்ரீ-ராடிக்கல்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து, விரைவில் முதுமை தோற்றம் வருவதைத் தடுக்கும்.

இளநீரில் தேன் கலந்து குடிப்பதால், குடலியக்கம் சீராகும் மற்றும் வயிற்றில் உற்பத்தி செய்யப்படும் அதிகப்படியான அமில சுரப்பு குறையும். இதனால் அசிடிட்டி பிரச்சனை தடுக்கப்படும்.

இளநீருடன் தேன் கலந்து குடிக்கும் போது, உடலினுள் உள்ள அழற்சி குறைவதோடு, தொற்றுக்கிருமிகளும் அழிக்கப்படும்.

இந்த இயற்கை பானம் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, இரத்தக் குழாய்களில் அடைப்புக்கள் ஏற்படுவதைத் தடுத்து, இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.

இளநீர் தேன் கலவையில் உள்ள ஏராளமான வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும், உடலினுள் உள்ள செல்களுக்கு ஊட்டமளித்து, உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும்.

இந்த இயற்கை பானத்தை வெறும் வயிற்றில் குடிப்பதால், சிறுநீரகங்களில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் கழிவுப் பொருட்கள் வெளியேற்றப்பட்டு, சிறுநீரகங்கள் ஆரோக்கிமாகவும், சுத்தமாகவும் இருக்கும்.

இளநீரில் தேன் கலந்து குடிப்பதால், குடலியக்கத்தின் செயல்பாடு மேம்பட்டு, மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

  
   Bookmark and Share Seithy.com



உடல் எடையை அதிகரிக்கும் உலர்திராட்சை
[Wednesday 2018-02-21 18:00]

உலர்திராட்சையில் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள், ஆற்றல் உள்ளதால், உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம்.



அடிக்கடி சிறுநீர் கழிப்பதன் காரணம்
[Wednesday 2018-02-21 18:00]

சர்க்கரை நோய் எதுவும் இல்லாமல் இருந்து, அடிக்கடி சிறுநீர் கழிக்க நேர்ந்தால், அது சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.



செரிமான பிரச்சனையால் வரும் நோய்கள்
[Wednesday 2018-02-21 17:00]

உடலின் முக்கிய உறுப்புக்களில் ஒன்றான வயிற்றில் தான் உணவு தங்கி செரிமானம் நடக்கிறது .இனி செரிமானக் கோளாறால் வரும் நோய்களைப்பற்றி காண்போம்.



குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி
[Wednesday 2018-02-21 17:00]

சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளை எப்படி எளிய வழிமுறைகளை பின்பற்றி சுலபமாக சாப்பிட வைக்கலாம் என்று பார்க்கலாம்.



வழுக்கைத் தலையிலும் முடி வளர செய்யலாம்!
[Wednesday 2018-02-21 17:00]

ஆண்களுக்கு இருக்கும் பெரும் அழகுப் பிரச்சனை தான் வழுக்கைத் தலை. வழுக்கைத் தலை வருவதற்கு மரபணுக்கள் காரணமாக இருந்தால், அதை சரிசெய்வதென்பது முடியாத காரியம். ஆனால் இதர காரணங்களான மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, கெமிக்கல் உபயோகங்கள் போன்றவை இருந்தால், ஒருசில சிகிச்சைகளின் மூலம் வழுக்கைத் தலையிலும் முடியை வளரச் செய்யலாம். தொடர்ச்சியை கீழே கீழே வாசியுங்கள்…



வயதானவர்கள் செய்யக் கூடிய உடற்பயிற்சிகள்!
[Tuesday 2018-02-20 12:00]

வயதானவர்கள் கடுமையான பயிற்சிகள் செய்ய முடியவில்லை என்றால், மிதமான முயற்சியில் பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் ஆரோக்கியம் மேம்படும்.



கூந்தல் வளர்ச்சிக்கும் உதவும் வெங்காயம்
[Tuesday 2018-02-20 12:00]

முடி உதிர்வு பிரச்சினைக்கு வெங்காயத்தை ஜூஸாக தயாரித்து கூந்தலில் தடவி வரலாம். இது முடி உதிர்வை கட்டுப்படுத்துவதோடு கூந்தல் வளர்ச்சிக்கும் துணை புரியும்.



எண்ணெய் குளியல் எதற்கெல்லாம் நல்லது?
[Tuesday 2018-02-20 12:00]

எண்ணெய் மூலம் உடலில் மசாஜ் செய்யும்போது, அந்த எண்ணெய் சருமத்துக்குள் ஊடுருவி ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. ரத்த ஓட்டம் அதிகரிக்கும்போது உள் உறுப்புகளுக்குப் புத்துணர்வு கிடைக்கிறது. உடலில் தேவையற்ற இடங்களில் சேரும் கொழுப்பைக் கரைத்து ஆரோக்கியம் அளிக்கிறது.



மேல் வயிறு அடிக்கடி வலிக்கிறதா? அது ஏன்?
[Tuesday 2018-02-20 12:00]

ஒவ்வொருவரும் கட்டாயம் வயிற்றின் மேல் பகுதியில் வலியை உணர்ந்திருப்போம். அப்படி வலி ஏற்படும் போது, நம்மில் பலர் அதை சாதாரணமாக நினைத்து விட்டுவிடுவர்.



குறட்டைப் பழக்கத்தை போக்கும் அரிய மூலிகை!
[Tuesday 2018-02-20 12:00]

குறட்டை என்ற ஒரு வியாதிதான், அந்த வியாதி உள்ளவர்களுக்கு அதன் சிரமம் ஒன்றும் அந்த சமயத்தில் தெரியாமல், அவரைச்சார்ந்தோருக்கு, அதிக அளவில், மன வேதனை, தூக்கம் கெட்டு ஏற்படும் உடல் வேதனை மற்றும் மன உளைச்சல் ஆகிய துன்பங்களை அடைய வைக்கும் ஒரு மோசமான வியாதி.



காளானின் கணக்கற்ற நன்மைகள்
[Monday 2018-02-19 20:00]

காளானை விரும்பி உண்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இயற்கை தந்த கொடையான காளானில் கணக்கற்ற ஆரோக்கிய அனுகூலங்கள் நிறைந்திருக்கின்றன.



குங்குமப்பூ தரும் அழகு
[Monday 2018-02-19 11:00]

எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில் உண்டு. உடல் நிறத்தை சிவப்பாக மாற்றக் கூடிய அற்புதக் குணம் இதில் நிறைந்து காணப்படுகிறது.



அலர்ஜி என்னும் ஒவ்வாமை வரக்காரணங்கள்
[Monday 2018-02-19 11:00]

மாசு ஒவ்வாமையில் இரண்டு விதங்கள் உண்டு. கரப்பான் பூச்சி, கொசு போன்ற பூச்சிகளால் ஒவ்வாமை ஏற்படலாம். சிலருக்குத் தாவரங்கள், செல்லப்பிராணிகளால் ஒவ்வாமை ஏற்படலாம்.



சிறுநீரக செயலிழப்புக்கு காரணமாகும் உணவுப்பழக்கம்
[Monday 2018-02-19 11:00]

நமது தவறான உணவுப்பழக்க வழக்கமே சிறுநீரகம் பழுதடைவதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.



பேஷியலின் வகைகளும் சிறப்பம்சங்களும்
[Monday 2018-02-19 11:00]

பேஷியல் என்பது பல வகைப்பட்டதாக உள்ளன. அவை ஒவ்வொன்றிற்கும் ஒரு சிறப்பம்சம் உள்ளன. அத்தகைய பேஷியல் வகைகளை பற்றி அரிய வேண்டுவது அவசியம்.



இரும்புச் சத்து மாத்திரைகள் சாப்பிடுவது நல்லதா?
[Saturday 2018-02-17 15:00]

உடலுக்குத் தேவையான சத்துகளை மாத்திரைகளாகச் சாப்பிடலாமா? குறிப்பாக இரும்புச் சத்து மாத்திரைகள்? சாப்பிடலாமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.



தர்பூசணி விதைகளின் மருத்துவ நன்மைகள்
[Saturday 2018-02-17 15:00]

தர்பூசணி விதைகள் நமது உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது. அதற்கு தர்பூசணி விதைகளை வறுத்தோ அல்லது நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரைக் குடித்தால், ஏராளமான மருத்துவ நன்மைகளை பெறலாம்.



மூக்கடைப்பிலிருந்து எளிதில் நிவாரணம் பெற!
[Saturday 2018-02-17 15:00]

மூக்கடைப்பு, மற்றும் சளி தொந்தரவுகள் ஏற்பட்டால், அது விடுமுறை நாளை வெகுவாக பாதிக்கும். படுக்கவும் முடியாமல், உட்காரவும் முடியாமல், மூச்சு திணறல் மற்றும் தொடர் தும்மல் போன்ற விஷயங்கள் பாடாய் படுத்தும். முடிவில், தூக்கமில்லா இரவாக, மறுநாள், சோர்வும் அசதியும் நம்மை வாட்டி எடுக்கும்.



சுண்டைக்காயில் இவ்வளவு நன்மைகளா?
[Saturday 2018-02-17 15:00]

நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் சுண்டைக்காய் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும் உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி உடலை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது. மார்புச் சளியை கரைக்க சுண்டைக்காய் வழியமைப்பதாக ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன. அந்த வகையில் சுண்மைக்காயின் நன்மைகளை கீழே காணலாம்.



குழந்தையின் எதிர்கால செயற்திறனைப் பாதிக்கும் விடயங்கள்!?
[Saturday 2018-02-17 15:00]

குழந்தைகளின் விடயத்தில் பெற்றோர்களே சில தவறுகளை செய்கின்றார்கள். பெற்றோர்களை பொறுத்தவரையில் குழந்தைகள் அதிகமாக சாப்பிட வேண்டும் என்ற ஒரு கருத்து மட்டுமே அவர்களிடம் நிலவுகின்றது. அதற்காக குழந்தைகள் உணவு போதும் போதும் என்று கூறினாலும் பெற்றோர்கள் அதிகளவிலான உணவினை குழந்தைக்கு திணிக்கின்றார்கள். இது குழந்தையின் எதிர்கால செயற்திறனை பாதிக்கின்றது.


SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
Mahesan-Remax-169515-Seithy
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா