Untitled Document
February 21, 2018 [GMT]
  • Welcome
  • Welcome
தாய் உயிரிழந்தது தெரியாமல் அருகில் படுத்துத்தூங்கிய மகன்!
[Tuesday 2018-02-13 15:00]

ஹைதராபாத் ஒஸ்மானியா அரசு மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு, 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், 5 வயது மகனுடன் சிகிச்சைக்கு வந்துள்ளார். பெரியவர்கள் யாரும் உடன் வரவில்லை. உடல்நிலையைப் பரிசோதித்த டாக்டர்கள், அவர் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டறிந்தனர். அவரைக் காப்பாற்ற மருத்துவர்கள் முயன்றனர். ஆனால், அரை மணி நேரத்தில் அவர் உயிரி ழந்துவிட்டார். மருத்துவர்கள், போலீஸுக்குத் தகவல் அளிக்கச் சென்ற சமயத்தில், தாய் உயிரிழந்தது தெரியாத சிறுவன் தாயின் அருகில் படுத்துறங்கத் தொடங்கினான்.

ஹைதராபாத் ஒஸ்மானியா அரசு மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு, 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், 5 வயது மகனுடன் சிகிச்சைக்கு வந்துள்ளார். பெரியவர்கள் யாரும் உடன் வரவில்லை. உடல்நிலையைப் பரிசோதித்த டாக்டர்கள், அவர் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டறிந்தனர். அவரைக் காப்பாற்ற மருத்துவர்கள் முயன்றனர். ஆனால், அரை மணி நேரத்தில் அவர் உயிரி ழந்துவிட்டார். மருத்துவர்கள், போலீஸுக்குத் தகவல் அளிக்கச் சென்ற சமயத்தில், தாய் உயிரிழந்தது தெரியாத சிறுவன் தாயின் அருகில் படுத்துறங்கத் தொடங்கினான்.

  

மீண்டும் அங்கு வந்த மருத்துவர்கள், தாயின் அருகில் மகன் உறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு வருத்தமும் வேதனையும் அடைந்தனர். பின்னர், சிறுவனை எழுப்பி தாய் இறந்துபோனதை மெள்ளத் தெரிவித்தனர். தாய் இறந்ததை அறிந்த சிறுவன் கண்ணீர் விட்டு அழுதான். மருத்துவர்கள், சிறுவனுக்கு ஆறுதல் கூறினர். ஆதார் அட்டையை வைத்து, இறந்தது ஜாகீர்பாத்தைச் சேர்ந்த சமீனா சுல்தானா என்று தெரியவந்தது. கட்டடத் தொழிலாளியான சுல்தானாவை 3 வருடங்களுக்கு முன் கணவர் கைவிட்டுச் சென்றுவிட்டார். இதனால், 5 வயது மகனுடன் அவர் வசித்துவந்துள்ளார். ஹைதராபாத் உதவும் கரங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள், சுல்தானாவின் பெற்றோரைத் கண்டுபிடித்து, அவரது உடலையும் சிறுவனையும் ஒப்படைத்தனர். மருத்துவமனை சார்பில் உடலைக் கொண்டுசெல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடுசெய்து தரப்பட்டது.

  
   Bookmark and Share Seithy.comகனடா பிரதமரை விருந்தினராக அழைத்து தமிழக அரசு கௌரவிக்க வேண்டும்: - சீமான்
[Wednesday 2018-02-21 17:00]

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை விருந்தினராக அழைத்து தமிழக அரசு கௌரவிக்க வேண்டும்’ என சீமான் வலியுறுத்தியுள்ளார்.கனட பிரதமர் ஜஸ்டின் இந்திய மற்றும் தமிழகப் பண்டிகைகளை ஆர்வமாகக் கொண்டாடுவது வழக்கம். அவர் மற்ற நாடுகளின் கலாசாரத்துக்கு மதிப்பு கொடுப்பதால் இந்தியாவில் அவருக்கு ஃபேன்ஸ் அதிகம். கடந்த தீபாவளிப் பண்டிகையின்போது கனடா தலைநகர் ஒட்டாவாவில், இந்திய மக்கள் முன் குத்துவிளக்கேற்றி தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடினார். இதையடுத்து இந்தாண்டு தொடக்கத்தில் கனடாவில் வசிக்கும் தமிழ் மக்களுடன் இணைந்து பொங்கல் வைத்துக் கொண்டாடி அசத்தினார்.தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த சிறுவனை கடித்து குதறி கொன்ற தெரு நாய்கள்!
[Wednesday 2018-02-21 16:00]

ஆந்திராவில் கர்னூல் மாவட்டம் சிட்டியலா கிராமத்தை சேர்ந்தவர் உசேன். இவரது 4 வயது மகன் இப்ராகிம் உசேன் தனது மனைவியுடன் வயல் வேலைக்கு சென்றார். சிறுவனை வயல் அருகே மரத்தில் தொட்டில் கட்டி தூங்க வைத்துவிட்டு சென்றனர். அப்போது 2 தெரு நாய்கள் தொட்டிலில் தூங்கி கொண்டிருந்த சிறுவனை கடித்து குதறின. முகம், கை, கால்களில் பலத்த காயமடைந்து சிறுவன் இப்ராகிம் பரிதாபமாக இறந்தான்.உங்கள் அன்புக்கு நன்றி: - பரமக்குடியில் காரில் இருந்தபடியே பேசிய கமல்!
[Wednesday 2018-02-21 16:00]

ராமநாதபுரத்தை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த ஊரான பரமக்குடியில் திரண்டிருந்த மக்களிடையே பேசினார். விழாவுக்கு நேரமாகிவிட்டதால் மேடைக்கு வரவில்லை என்ற அவர், காரில் இருந்தபடியே திரண்டிருந்த மக்களிடம் உங்கள் அன்புக்கு நன்றி என்றார். நடிகர் கமல்ஹாசன் இன்று தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். அப்துல் கலாம் வீட்டில் இருந்த தனது அரசியல் பயணத்தை தொடங்கிய கமல், கலாமின் குடும்பத்தாரிடம் ஆசி பெற்றார்.கலாம் சகோதரரிடம் ஆசி பெற்று அரசியல் பயணத்தைத் ஆரம்பித்தார் கமல்!
[Wednesday 2018-02-21 07:00]

கமல் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். முதல்கட்டமாக அப்துல்கலாம் இல்லத்துக்குச் சென்ற நடிகர் கமலஹாசன், அப்துல் கலாம் சகோதரர் முத்து மீரான் மரைக்காயரிடம் ஆசிப்பெற்று தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். அப்துல்கலாம் இல்லத்தில் அவரது உறவினர்களிடம் தற்போது கமல் பேசி வருகிறார்.கடிக்காத விஷப்பாம்பை கடித்து துப்பிய நபர்!
[Wednesday 2018-02-21 07:00]

உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவின் புறநகரில் உள்ள சுக்லாபூர் பகர் கிராமத்தை சேர்ந்தவர் சோனேலால், இவர் சம்பவத்தன்று மாலை வயலில் தன்னுடைய மாட்டை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு விஷப்பாம்பு வந்துள்ளது. அது அவரை கடித்ததாக கருதிய சோனேலால், அதனை பழிவாங்குவதற்காக அதைப் பிடித்து, அதன் தலையை கடித்து, மென்று துப்பியுள்ளார். இதையடுத்து மயக்கமடைந்த அவரை அவரது உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இரவு 7 மணிக்கு மோகாகன்ஜ் சமூகநல மையத்தில் சேர்க்கப்பட்ட அவருக்கு, இரவு 10 மணிக்கு நினைவு திரும்பியுள்ளது.காதலனுடன் செல்போனில் பேசி கொண்டே தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி!
[Wednesday 2018-02-21 07:00]

இந்தியாவில் காதலனுடன் செல்போனில் வீடியோ கால் பேசி கொண்டே தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஹனிஷா சவுத்ரி (24). இவர் தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ இரண்டாமாண்டு படித்து வந்தார்.சென்னையில் காதலனின் ஆவேசத்தால் காதலிக்கு நடந்த கொடூரம்!
[Tuesday 2018-02-20 17:00]

சென்னை அண்ணாநகரில் உள்ள டவர் பார்க்கில் காதலியைச் சரமாரியாகக் கத்தியால் குத்திய காதலன், தானும் கத்தியால் குத்திக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சோழவரத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். 23 வயதாகும் இவர், பொறியியல் படித்துவிட்டு கோவையில் பணியாற்றுகிறார். இவரும் செங்குன்றத்தைச் சேர்ந்த நிவேதாவும் காதலித்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இவர், அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்துவருகிறார்.தமிழ் வாழணும் என்றால் தமிழன் ஆளணும்: - கமல் முன்பு அதிர்ந்த சீமான்
[Tuesday 2018-02-20 13:00]

சென்னை ஆழ்வார்பேட்டையில் நடிகர் கமல்ஹாசனை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென சந்தித்துப் பேசினார். சந்திப்புக்குப் பின் கமல்ஹாசனுடன் இணைந்து சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய சீமான், ‘நான் சிறு வயதில் இருந்தே கமலில் திரைப்படங்களைப் பார்த்து ரசித்து வளர்ந்தவன். ஒரே ஊர். ஒரே மண்ணில் பிறந்தவர்கள். எங்கள் குடும்பங்களுக்கு கமலின் குடும்பம்தான் வழக்கறிஞராக இருந்து பல வழக்குகளை நடத்தியது.கடனை எப்போது அடைப்பீர்கள்? - லதா ரஜினிக்கு கெடு விதித்த உச்ச நீதிமன்றம்!
[Tuesday 2018-02-20 13:00]

கோச்சடையான் படத்துக்கான கடனை எப்போது அடைப்பீர்கள் என நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதாவுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் சௌந்தர்யா இயக்கத்தில் வெளியான படம் கோச்சடையான். ஏ.ஆர்.ரகுமான் இசையில், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் இந்தியாவின் முதல் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் வெளியான படம் என்ற பெருமையைப் பெற்றது.மனைவியை இழந்த 70 வயது முதியவருக்கு நடந்த வேதனை!
[Tuesday 2018-02-20 12:00]

உடல் நலிந்து, ஆதரவற்ற நிலையில் இருந்த பெரியவர் மேஸ்திரி முத்துவை மீட்டு, அவரை காப்பகத்தில் சேர்த்திருக்கிறார்கள், அன்பு மனம்கொண்ட அன்பர்கள் சிலர். இவர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தொடங்கிய 'மக்கள் பாதை' அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.அழிவின் விளிம்பில் இந்தியாவின் தொன்மையான 42 மொழிகள்!
[Tuesday 2018-02-20 08:00]

தமிழகத்தின் 2 வட்டார மொழிகள் உட்பட இந்தியாவின் தொன்மையான 42 மொழிகள் அழிவின் விளிம்பில் உள்ளதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 22 முக்கிய மொழிகள் மட்டுமின்றி, 100-க்கும் அதிகமான வட்டார மொழிகளும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த 100 மொழிகளில் 42 வட்டார மொழிகளை 10 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் மட்டும்தான் பேசுகின்றனர். இந்த 42 மொழிகளும் அழிவின் விளிம்பில் இருப்பதாக உள்துறை அமைச்சகம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.சென்னையில் கற்பூரம் காட்டும் போது கண்சிமிட்டும் பெருமாள் !
[Tuesday 2018-02-20 08:00]

சென்னையில் அமைந்துள்ள பெருமாள் கோயில் ஒன்றில், பெருமாள் சிலை கற்பூரம் காட்டும் போது, கண்சிமிட்டுவதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, நெற்குன்றத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ கரி வரத ராஜ ஸ்வாமி கோயில். இந்த கோயிலில் சனிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். அப்போது, பெரும்படை இந்த கோயிலுக்கு திரண்டு வரும்.64 தமிழர்களின் கதி என்ன? - அதிர்ச்சி தரும் செம்மரக் கடத்தல் மர்மங்கள்
[Tuesday 2018-02-20 08:00]

ஆந்திராவின் கடப்பா வனப்பகுதியில் உள்ள ஒன்டிமெட்டா ஏரியில், 5 தமிழகப் பழங்குடியின மக்களின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கும் நிலையில், மேலும் 64 பேரை காணவில்லை என்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.கின்னஸ் சாதனையைக் குறிவைக்கும் யோகா கில்லி 5-ம் வகுப்பு மாணவி!
[Tuesday 2018-02-20 07:00]

யோகா செய்வதில் கில்லியாக விளங்கும் 5-ம் வகுப்பு மாணவி பாவனாஸ்ரீ, தற்போது 'பதஞ்சலி புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்டு' சாதனை புரிந்துள்ளார். அடுத்து கின்னஸ்தான் எனது குறிக்கோள் என அடித்துச் சொல்கிறார்.வெல்லும் தமிழீழம்: - மே17 இயக்கம் நடத்திய பிரமாண்டமான மாநாடு
[Monday 2018-02-19 22:00]

''இலங்கை இனப்பிரச்னை குறித்தான விவாதம் வருகிற மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் நடைபெறவிருக்கிறது. இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைபெற்ற இறுதிக்கட்ட போரில், லட்சக்கணக்கிலான ஈழத் தமிழர்களை ராணுவம் கொன்றொழித்தது. இந்த இன அழிப்பு குறித்தான விவாதங்களை ஐ.நா மனித உரிமை ஆணையம் நடத்தி வருகிறது. ஆனால், இலங்கையில் இனஅழிப்பு நடத்தப்பட்டதையும், தமிழர்களுக்கான உரிமை பறிக்கப்பட்டு வருவதையும் ஐ.நா மனித உரிமை ஆணையம் இன்றுவரை ஏற்க மறுக்கிறது.விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் அந்நிய வல்லரசுகள் இலங்கைக்கு வரவில்லை: - பழ.நெடுமாறன்
[Monday 2018-02-19 16:00]

2009ஆம் அண்டு மே மாதம் 17ஆம் திகதி விடுதலைப்புலிகள் தமது ஆயுதங்களை மௌனித்தார்கள்.ஆயுதங்களை மௌனிக்கின்றோம் என்று சொன்னார்களே தவிற ஆயுதங்களை கீழே வைக்கின்றோம் என்று கூறவில்லை. என பழநெடுமாறன் தெரிவித்தார்.மே 17 இயக்கம் சார்பில் தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அண்ணா அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,எமக்கும் புலிகளுக்கும் இடையில் உள்ள உறவு சாதாரணமானது அல்ல: - வைகோ
[Monday 2018-02-19 16:00]
தமிழீழ விடுதலை உணர்வு என்பது 43 ஆண்டுகளாக எமது உதிரத்தில் உறைந்துள்ளது. எமக்கும் புலிகளுக்கும் இடையில் உள்ள உறவு சாதாரணமானது அல்ல என வைகோ தெரிவித்தார்.மே 17 இயக்கம் சார்பில் தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அண்ணா அரங்கில் நேற்று நடைபெற்றது.>நான் நெஞ்சால் பூஜிக்கும் தலைவன், என் வாழ்நாளில் இறுதிவரை தலைவனாக ஏற்றுக்கொண்ட தலைவன், உலகம் இதுவரை கண்டிராத ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்து தமிழனுக்கு இந்த உலகத்தில் முகவரியை தேடிக்கொடுத்த தலைவன் பிரபாகரன் அவர்கள்.சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த் குற்றவாளி: - நீதிமன்றம் தீர்ப்பு!
[Monday 2018-02-19 16:00]

தமிழகத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய சிறுமி ஹாசினி கொலை வழக்கில், குற்றவாளி தஷ்வந்த் குற்றவாளி என செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த சிறுமி ஹாசினி, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், ஐடி பொறியாளர் தஷ்வந்த் என்பவர் கைதுசெய்யப்பட்டார். பின்னர், இவர்மீது குண்டர் சட்டம் பதியப்பட்டு, பிறகு ரத்துசெய்யப்பட்டது.சில மாத சிறைவாசத்துக்குப் பிறகு வெளியே வந்த தஷ்வந்த், நகைக்காகத் தனது தாயைக் கொன்றுவிட்டு தலைமறைவானார். பின்னர், அவர் மும்பையில் மீண்டும் கைதுசெய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட அவர், புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.பெற்றோரின் சண்டையைத் தடுக்கச்சென்ற மகளை வெட்டி கொன்ற தந்தை!
[Monday 2018-02-19 16:00]

தாய், தந்தையிடையே ஏற்பட்ட சண்டையைத் தடுக்கச் சென்ற பத்து வயது சிறுமி வெட்டப்பட்டு பலியானச் சம்பவம் திருமங்கலம் பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த தாய், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் தப்பி ஓடிய தந்தையைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.திராவிட அரசியலைப் பின்பற்றி வெற்றி பெற்று காட்டுவேன்: - விஜயகாந்த்தைச் சந்தித்த பின் கமல் பேட்டி!
[Monday 2018-02-19 16:00]

திராவிட அரசியலைப் பின்பற்றி வெற்றி பெறுவேன் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரின் அரசியல் வருகையை அவர்களது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இருவரும் தங்கள் மக்கள் மன்றத்தின் மூலம் அரசியல் கட்சி தொடங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ரஜினியைக் காட்டிலும் கமல்ஹாசன் வேகமாகச் செயல்பட்டு வருகிறார். அதன்படி நாளை மறுநாள் அரசியல் சுற்றுப் பயணத்தை ராமநாதபுரத்தில் தொடங்க இருக்கிறார். அன்றே மதுரையில் பொதுக்கூட்டத்தையும் நடத்த உள்ளார். அரசியல் பயணத்தைத் தொடங்க உள்ள நிலையில் தனக்கு பிடித்தமான மனிதர்களைச் சந்திக்கிறேன் என்று கூறி இந்திய கம்யூனிஸ்ட் மூத்தத் தலைவர் நல்லகண்ணுவைச் சந்தித்த அவர் தொடர்ந்து,


SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா