Untitled Document
December 11, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
கிளிநொச்சியில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியது சந்திரகுமார் அணி! Top News
[Thursday 2017-12-07 18:00]

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளுராட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவதற்காக சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு இன்று  கட்டுப் பணத்தை  செலுத்தியுள்ளது. இன்று நண்பகல் கிளிநொச்சி மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் அந்த அமைப்பின் அமைப்பாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தலைமையில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளுராட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவதற்காக சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு இன்று கட்டுப் பணத்தை செலுத்தியுள்ளது. இன்று நண்பகல் கிளிநொச்சி மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் அந்த அமைப்பின் அமைப்பாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தலைமையில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

  

கரைச்சி, பூநகரி, பளை ஆகிய பிரதேசசபைகளுக்கான கட்டுப்பணத்தை செலுத்திய பின்னர் கருத்து தெரிவித்த அந்த அமைப்பின் உறுப்பினர், சுப்பையா மனோகரன், இந்த உள்ளுராட்சி தேர்தலில் நாங்கள் சுயேட்சையாக கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேசசபைகளிலும் போட்டியிடுகின்றோம். தற்போதுள்ள நிலைமைகளின் படி இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தலைமையில் சுயேட்சையாக போட்டியிடுகின்ற எங்களுடைய அமைப்புக்கு அதிக ஆசனங்களை பெற்றுக்கொள்ள கூடிய வாய்ப்புக்களே அதிகம் காணப்படுகிறது.

ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்றவர்கள் மக்களின் பிரச்சினைகளில் அக்கறை செலுத்தாமையினால் ஏமாற்றமடைந்த மக்களுக்கு அவர்கள் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக இந்த தேர்தல் மக்களாக முன்வந்து ஒவ்வொரு வட்டாரங்களிலும் தங்களுக்கான வேட்பாளர்களை வழங்கி ஆதரவளித்து நிற்கின்றனர். எனவே கிளிநொச்சியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் தலைமையிலான சுயேட்சை குழுவொன்று வருகின்ற உள்ளுராட்சி தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்துவம் என்பதில் எமக்கு அதிக நம்பிக்கை உள்ளது எனத் தெரிவித்தார்.

  
   Bookmark and Share Seithy.com



ஆசனப்பங்கீடு குறித்து தமிழரசுக் கட்சிக்குள் அதிருப்தி!
[Monday 2017-12-11 09:00]

உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் ஆச­னப் பங்­கீடு தொடர்­பில், முதன்­மைப் பங்­கா­ளிக் கட்­சி­யான இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் இரண்­டாம் நிலைத் தலை­வர்­கள், மாவட்ட நிர்­வா­கி­கள் மட்­டத்­தில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. ஒற்­றுமை என்ற பெய­ரில், பங்­கா­ளிக் கட்­சி­க­ளுக்கு அதி­க­ள­வான உள்­ளூ­ராட்சி மன்­றங்­களை, கூட்­ட­மைப்­பின் தலைமை மற்­றும் தமிழ் அர­சுக் கட்­சி­யின் உயர் பீடத்­தி­னர் தாரை­வார்த்­துள்­ள­தாக அவர்­கள் குற்­றஞ் சுமத்­தி­யுள்­ள­னர்.



இடைக்கால அறிக்கை குறித்த இறுதி நாள் விவாதம் இன்று!
[Monday 2017-12-11 09:00]

புதிய அரசமைப்பு தொடர்பான அரசமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான இறுதிநாள் விவாதம், அரசமைப்புச் சபையில் இன்று நடைபெறவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு இது தொடர்பான விவாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.



வட,கிழக்கு இணைப்பு உடனடிச் சாத்தியமற்றது! - சுமந்திரன்
[Monday 2017-12-11 09:00]

வட, கிழக்கு இணைப்பு வேண்டுமென்று கூவித்திரிபவர்களினால், அதனைச் செய்ய முடியுமா என நான் சவாலாக கேட்கின்றேன், கூவித்திரிபவர்கள் இணைப்பதற்குரிய உண்மைக் காரணங்களை சொல்வதற்கு தயாரா என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.



ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்ட சம்பவத்துடன் இராணுவத்துக்கு தொடர்பில்லையாம்!
[Monday 2017-12-11 09:00]

முல்லைத்தீவு தண்ணிமுறிப்புப் பகுதியில் சிங்கள மயமாக்கல் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை இராணுவம், பொலிஸால் சுற்றிவளைக்கப்பட்டு அரை மணித்தியாலங்களுக்கு மேல் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்துடன் இராணுவம் தொடர்புபடவில்லை என இராணுவச் பேச்சாளர் பிரிகேடியர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்தார்.



ஆனைக்கோட்டையில் வாள்வெட்டுக்குழு வீ்ட்டுக்குள் நுழைந்து அடாவடித்தனம்!
[Monday 2017-12-11 09:00]

இலக்கத்தகடு மறைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்த குழுவொன்று, ஆனைக்கோட்டை - உயரப்புலம் பகுதியில் அமைந்துள்ள வீட்டில் பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை, அடித்து, நொறுக்கியுள்ளதோடு, நகை மற்றும் பணம் ஆகியவற்றையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று இரவு 9.30க்கு இடம்பெற்றுள்ளது.



மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவத்தினால் தனியார் கல்வி நிலையம் தீக்கிரை!
[Monday 2017-12-11 09:00]

விசுமடு பகுதியில் தனியார் கல்வி நிலையம் ஒன்றை நடத்தி வந்த ஆசிரியர் ஒருவர் அங்கு கல்வி கற்ற மாணவியிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த சம்பவம், நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. நேற்று குறித்த ஆசிரியரை ஊர்தலைவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனர்.எனினும், குறித்த ஆசிரியர் விசாரணைக்கு செல்ல மறுத்துள்ளார். இந்த நிலையில், விசுமடு பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் நேற்று இரவு 7.00 மணியவில் அடையாளம் தெரியாத நபர்களினால் தீ மூட்டப்பட்டுள்ளது.



நீதிபதி இளஞ்செழியன் விரைவில் மட்டக்களப்புக்கு மாற்றம்!
[Monday 2017-12-11 09:00]

யாழ். மாவட்டத்திலிருந்து விரைவில் தாம் விடைபெறவுள்ளதாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு நான் வருகை தந்ததற்கான நோக்கத்தை, பொறுப்பை நிறைவேற்றி விட்டேன், மட்டக்களப்புக்குச் சென்று அங்குள்ள மக்களுக்குச் சேவையாற்ற விரும்புகின்றேன். அதற்கான மாற்றல் விரைவில் எனக்கு வரும், என, அவர் கூறியுள்ளார்.



மைத்திரி பக்கம் சாய்ந்தார் கூட்டு எதிரணியின் மற்றொரு எம்.பி!
[Monday 2017-12-11 09:00]

கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ஶ்ரீயானி விஜேவிக்ரம, நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். அத்துடன், அவர் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்.



மஹிந்தவைக் கண்டு அஞ்சவில்லை! -ரணில்
[Monday 2017-12-11 09:00]

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அணி குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அச்சப்படலாம். ஆனால் ஐக்கிய தேசிய கட்சிக்கு இந்த இரண்டு கட்சிகள் தொடர்பிலும் எவ்விதமான அச்சமும் கிடையாது. ஆகவே மக்களிடம் சென்று தேசிய அரசாங்கத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் உண்மையான பங்களிப்பை கூறுங்கள். மக்களின் ஆதரவு கிடைக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.



வாள்களுடன் வந்தவர்கள் பொலிசார் மீது தாக்குதல்! Top News
[Monday 2017-12-11 09:00]

வவுனியா, பசார் வீதியில் மோட்டார் சைக்கிளில் வாளுடன் வந்த இருவர் கடமையில் நின்ற போக்குவரத்து பொலிசாரை தாக்கி விட்டு தப்பியோடிய சம்பவமொன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, தர்மலிங்கம் வீதி வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று பசார் வீதி வழியாக வவுனியா நகரை நோக்கிச் சென்றுள்ளது.



காணாமல்போனோரின் உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்! Top News
[Sunday 2017-12-10 18:00]

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, காணாமல் போனோர்களின் உறவினர்கள், இன்று யாழ்ப்பாணத்தில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக இன்று காலை 10 மணியளவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.



சர்வதேச விசாரணையை வலிறுத்தி மட்டக்களப்பில் பேரணி! Top News
[Sunday 2017-12-10 18:00]

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலிறுத்தியும் அரசாங்கத்தை அதற்கு ஆதரவு வழங்குமாறு கோரியும், கிழக்கு மாகாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று மாபெரும் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 700க்கும் மேற்பட்ட காணாமல் போனவர்களின் உறவுகள் கலந்துகொண்டனர். கைகளில் தமது காணாமல்போனவர்களின் படங்களை ஏந்தியவாறு கண்ணீருடன் இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர்.



அக்கரைப்பற்றில் ஆர்ப்பாட்டப் பேரணி! Top News
[Sunday 2017-12-10 18:00]

சர்வதேச மனித உரிமை தினத்தில், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்படடோரின் உறவினர்களின் எற்பாட்டில், அக்கரைப்பற்றில் இன்று காலை ஆர்ப்பாட்டப் பேரணியொன்று நடத்தப்பட்டது. அக்கரைப்பற்று பாதிப்பற்ற பெண்கள் அரங்க அலுவலகத்தில் இருந்து ஆரம்பமாகி, அக்கரைப்பற்று மணிக்கூட்டுக் கோபுரம் வரைச் சென்று, மீண்டும் ஆலையடிவேம்பு பிரதான வீதியில் வழியாக வந்து சதோச வர்த்தக நிலையத்துக்கு அருகாமையில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தை இவர்கள் முன்னெடுத்திருந்தனர்.



தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பாக மாறியது தமிழர் விடுதலைக் கூட்டணி!
[Sunday 2017-12-10 18:00]

தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து உருவாக்கியுள்ள புதிய கூட்டணிக்கு தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளதோடு, அதன் சின்னமாக உதய சூரியன் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக, ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.



முள்ளியவளை துயிலுமில்லம் அருகே புதிய காவலரண்கள்!
[Sunday 2017-12-10 18:00]

முல்லைத்தீவு - முள்ளியவளை துயிலுமில்லப் பகுதியி்ல் உள்ள தமது காவலரண்களை இராணுவத்தினர் மேலும் பலப்படுத்தி வருகின்றனர். இறுதி யுத்தத்தின் போது இந்த துயிலுமில்லத்தை ஆக்கிரமித்த இராணுவத்தினர், மாவீரர் கல்லறைகள் உள்ளிட்ட கட்டடங்களை அழித்து அவ்விடத்தில் நிலை கொண்டுள்ளனர்.



அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு!
[Sunday 2017-12-10 18:00]

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்குப் பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஜெருசலமை இஸ்ரேலின் தலைநகர் என அறிவித்ததையடுத்து, உலகம் பூராகவும் அமெரிக்காவுக்கு எதிராக எதிர்ப்பு வலுத்துள்ளது. அமெரிக்காவுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறலாமென எதிர்பார்க்கப்படுகிறது. ந்த நிலையிலேயே கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.



அரச பாதுகாப்பில் தப்பிப் பிழைக்கும் மதம் உருப்படியானதா? - சுமந்திரன் கேள்வி
[Sunday 2017-12-10 18:00]

அரசாங்கத்தின் பாதுகாப்பினால் தான் ஒரு சமயம் தப்பிப் பிழைக்குமாக இருந்தால் அது ஒரு உருப்படியான சமயமாக இருக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.



ஐதேகவுடன் இணக்கம் இல்லையேல் தனித்துப் போட்டி! - மனோ கணேசன்
[Sunday 2017-12-10 18:00]

உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி, மாத்தளை, கேகாலை, பதுளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் போட்டியிடவுள்ளது.



ஊடகவியலாளரைத் தாக்கிய இருவர் கைது!
[Sunday 2017-12-10 18:00]

ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேகநபர்கள் மாங்குளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு இந்த சம்பவம் இடம்பெற்றது. ஊடகவியலாளரைத் தாக்கிய நபர்கள் அவரைக் கடத்துவதற்கும் முயற்சித்துள்ளனர். இதன்போது பிரதேசவாசிகள் குறத்த இடத்திற்கு வருகைத் தந்ததால் சந்தேகநபர்கள் தமது மோட்டார் சைக்கிளை சம்பவ இடத்திலேயே கைவிட்டு தப்பிச சென்றிருந்தனர். இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளையடுத்தே சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



மட்டக்களப்பு மாவட்டத்தில் 31 எயிட்ஸ் நோயாளிகள்!
[Sunday 2017-12-10 18:00]

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டு டிசெம்பர் மாதம் வரை 31 எயிட்ஸ் நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனரென, மட்டக்களப்பு மாவட்ட பாலியல் பரிமாற்ற நோய், எயிட்ஸ் நோய் கட்டுப்பாட்டு பொறுப்பு வைத்தியர் அனுஷியா ஸ்ரீசங்கர் தெரிவித்தார். எயிட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுகளிலும் முழு முயற்சியுடன் இடம்பெற்று வருவது குறித்து, அவர் இன்று இந்த விவரங்களைத் தெரிவித்தார்.


SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா