Untitled Document
December 11, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்: இவான்கா ட்ரம்பை எச்சரிக்கும் யூ-டியூப் ஜோதிடர்
[Thursday 2017-12-07 17:00]

இந்தியா கிரிக்கெட்டில் ஜெயிக்கும், டிசம்பரில் சென்னை வெள்ளத்தில் மூழ்கும், 7வது இடத்துல சனி பாக்குறதுனால இந்தியா சனி கிரகத்துக்கு ராக்கெட் விடும்னு ஜோதிடர்களை அதிகம் பார்க்க முடியும். அப்படி ஒரு ஜோதிடர்தான் இப்போது இந்தியா வந்த இவான்கா ட்ரம்ப் பற்றி கணித்து மாஸ் காட்டியுள்ளார். ஒரு கரும்பலகையில் கட்டம் போட்டு இவான்கா வாழ்க்கையைப் பற்றி கணித்துச் சொல்லி இணையத்தில் அந்த வீடியோ வைரலாகியுள்ளது.

இந்தியா கிரிக்கெட்டில் ஜெயிக்கும், டிசம்பரில் சென்னை வெள்ளத்தில் மூழ்கும், 7வது இடத்துல சனி பாக்குறதுனால இந்தியா சனி கிரகத்துக்கு ராக்கெட் விடும்னு ஜோதிடர்களை அதிகம் பார்க்க முடியும். அப்படி ஒரு ஜோதிடர்தான் இப்போது இந்தியா வந்த இவான்கா ட்ரம்ப் பற்றி கணித்து மாஸ் காட்டியுள்ளார். ஒரு கரும்பலகையில் கட்டம் போட்டு இவான்கா வாழ்க்கையைப் பற்றி கணித்துச் சொல்லி இணையத்தில் அந்த வீடியோ வைரலாகியுள்ளது.

  

வேணு சுவாமி எனும் ஹைதராபாத் ஜோதிடர் பிரபலங்களைக் கணிப்பதில் நிபுணராம். குறிப்பாகப் பெண் பிரபலங்களுக்கு பல ஜோதிட கணிப்புகளை வழங்கி தன் யூ-டியூப் சேனலில் வீடியோ பதிவிட்டுள்ளார். அந்த வரிசையில் இவரது கையில் கிடைத்திருக்கும் தற்போதைய சென்சேஷன் ட்ரம்ப் மகள் இவான்கா.

இவாங்கா ட்ரம்ப்பின் பிறந்த தேதி மற்றும் பிறந்த இடம் ஆகியவற்றை வைத்து அவருடைய எதிர்காலத்தைக் கணித்துச் சொல்லி இருக்கின்றார்.

ஒரு வீடியோவில் நல்ல மஞ்சள் வேட்டி – சட்டை சகிதம், ஒரு கரும்பலகையில் இவான்காவின் ஜாதகத்தை வரைந்து கட்டம் கட்டி சொல்கிறார். ட்ரம்புக்கும் இவான்காவுக்குமான உறவு, அவரது தந்தையின் திருமணங்கள், இவான்காவின் மண வாழ்க்கை, குழந்தைகள், பொதுவெளி, உடல்நலம் என எல்லாப் பிரிவிலும் இவான்கா ஜாதகத்தை எடுத்து அலசியிருக்கிறார்.

சில வியக்கத்தக்க, ஆச்சர்யமான சற்று அதிர்ச்சியான கணிப்புகளைத் தருகிறார். அவற்றில் சில

* அவருடைய வேலைபளு காரணமாக அவருக்கு முதுகுவலி ஏற்படும். அதிக பயணம் மேற்கொள்வார்.

* தம்பதியர் மத்தியில் சலசலப்புகள் ஏற்படும். திருமணமாகி பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2021இல் சில பிரச்னைகள் ஏற்படும். அதனால் இவான்கா ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 2009ம் ஆண்டு ட்ரம்ப் மகளுக்குத் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

* ட்ரம்ப் அதிபராக இவான்காவின் ஜாதகம்தான் காரணம் இல்லையென்றால் ட்ரம்ப் அதிபராகவே ஆகியிருக்கமாட்டார் என்கிறார்.

இதற்கு முன்பு, இவர் நாகசைதன்யா – சமந்தா திருமணம், எதிர்கால தெலுங்கு முதலமைச்சர்கள், அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் சர்ச்சை, ரேவந்த் ரெட்டியின் அரசியல் பிரவேசம் என்று கணிக்க முடியாத பல செய்திகளைக் கணித்துக் கூறியவராம்.இவான்கா ட்ரம்ப்பின் ஹைதராபாத் வருகைக்குப் பிறகு, அவருடைய ஜாதகம் குறித்து ஆழமான ஆராய்ச்சிகளைச் செய்து இந்தக் கணிப்புகளைக் கூறியுள்ளாராம்.இவான்கா ட்ரம்ப்புக்கு இதெல்லாம் தெரியுமா பாஸ் என்று இணையத்தில் ஜோதிடருக்கு பதில்கள் வந்தாலும், இவரது வீடியோக்கள் வைரல் ரகம்தான். தேடிக் கண்டுபிடித்து இவரை தொடர்பு கொண்டால் ஒரு ஜோதிடம் கணித்துச் சொல்ல நான்காயிரம் என்கிறார் இந்த ட்ரெண்டிங் ஜோதிடர்.

  
   Bookmark and Share Seithy.comவிமானத்தில் பாலியல் தொல்லை: - - நடிகையை கேள்வி கேட்கும் தொழிலதிபரின் மனைவி
[Monday 2017-12-11 14:00]

விமானத்தில் பாலியல் தொல்லைக்கு உள்ளானதாக, நடிகை ஒருவர் நேற்று இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நடிகைக்கு பாலியல் தொல்லைகொடுத்த நபரை போலீஸார் நேற்று கைதுசெய்தனர்.எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை: - கவுண்டமணி விளக்கம்
[Monday 2017-12-11 14:00]

சென்னை ஆர்.கே.நகரில் பிரசாரம் செய்யப் போவதாக வந்த தகவலை நடிகர் நடிகர் கவுண்டமணி திட்டவட்டமாக மறுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆர்.கே.நகரில் ஒரு கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப் போவதாக நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தி உண்மை இல்லை என்று கூறியுள்ளார்.தென்னிந்திய நடிகர் சங்கத் துணைத் தலைவர் பதவியைத் ராஜினாமா செய்த பொன்வண்ணன்!
[Monday 2017-12-11 13:00]

நடிகர் சங்கத் துணைத் தலைவர் பதவியைத் திடீரென பொன்வண்ணன் ராஜினாமா செய்திருப்பது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரசியல் கட்சிகளில் நடக்கும் மாற்றங்களைவிட நடிகர் சங்கத்தில் நடக்கும் மாற்றங்கள் சற்று அதிகம். நாள்தோறும் பரபரப்பான ஏதாவது ஒரு விஷயங்கள் நடிகர் சங்கத்தில் நடந்துவருகிறது.மீனவர்கள் செத்தா உனக்கென்ன: - போராட்டக்காரர்களை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்த போலீஸ்!
[Monday 2017-12-11 09:00]

ஒகி புயலில் மாயமான மீனவர்களை மீட்கக் கோரி கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இந்தப் போராட்டங்களில் கன்னியாகுமரி மாவட்டத்தின் மீனவக் கிராம மக்களோடு பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் அவர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக நீரோடி பகுதியில் நடந்துவரும் போராட்டத்தில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 7 பேர் கலந்துகொண்டுள்ளனர்.தந்தையையும் கொல்ல திட்டமிட்டேன்: - v தஷ்வந்த் வாக்குமூலம்
[Monday 2017-12-11 08:00]

நகை, பணத்துக்காக தாயை கொலை செய்தபோது, தந்தையையும் ெகாலை செய்ய திட்டமிட்டேன். ஆனால், வெளியில் சென்ற தந்தை வீடு திரும்ப காலதாமதமானதால், மாட்டிக்கொள்ள கூடாது என்ற அச்சத்தில் அங்கிருந்து தப்பிவிட்டேன் என தஷ்வந்த் வாக்குமூலம் அளித்துள்ளார். குன்றத்தூர் சம்பந்தம் நகர் பகுதியை சேர்ந்த சேகர் மகன் தஷ்வந்த் (24). இவர், மாங்காடு அடுத்த முகலிவாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தபோது, அதே குடியிருப்பை சேர்ந்த ஹாசினி (6) என்ற சிறுமியை கடந்த பிப்ரவரி 8ம் தேதி பலாத்காரம் செய்து எரித்து கொன்றார்.ஆறு வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை!
[Monday 2017-12-11 08:00]

அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ள உக்லானா கிராமத்தில் 6 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படு்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது தாயாருடன் சிறுமி தூங்கி கொண்டிருந்தார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது சிறுமியை காணவில்லை, இதை கண்டு சிறுமியின் தாயார் அதிர்ச்சி அடைந்தார்.குடும்ப கட்டுப்பாடு சிகிச்சைக்கு பின்னர் பிறந்த குழந்தை: - இழப்பீடு கோரி கோர்ட்டில் பெண் வழக்கு
[Sunday 2017-12-10 16:00]

டெல்லியில் நரேலா பகுதியில் அரசு உதவியுடன் செயல்பட்டு வரும் சத்யவாடி ராஜா ஹரீஷ் சந்திரா மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஒரு பெண்மணிக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்யப்பட்டது. இதற்கிடையே, ஏற்கனவே மூன்று குழந்தைகள் பெற்றிருந்த அந்த பெண்மணி மீண்டும் கருவுற்றார். இதனால் சந்தேகம் அடைந்த அந்த பெண், தனக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்த மருத்துவமனைக்கு சென்று முறையிட்டுள்ளார்.விஷாலுக்கு எதிராக போர்க்கொடி: - தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் ரகளை!
[Sunday 2017-12-10 16:00]

கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை தொடங்கிய தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கப் பொதுக்குழு கூட்டத்தில் ரகளை ஏற்பட்டதால் நேரம் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.கழிப்பறை அமைக்க வேண்டும் என்றால் பாலியல் ரீதியாக ஒத்துழைக்க வேண்டும்: - மிரட்டிய அரசு அதிகாரி
[Sunday 2017-12-10 16:00]

பிரதமர் நரேந்திர மோடி 'தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டுக்கும் கழிப்பறை அமைக்க உத்தரவிட்டார். "அந்த திட்டத்தின் கீழ் கழிப்பறை அமைக்க வேண்டும் என்றால் பாலியல் ரீதியாக ஒத்துழைக்க வேண்டும்" என்று பெண்ணிடம் கேட்டுள்ளார் பணியில் இருந்த அதிகாரி.திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தற்கொலை!
[Sunday 2017-12-10 09:00]

கொடைரோடு அருகேயுள்ள பள்ளபட்டியை சேர்ந்தவர் கருப்பு. அவருடைய மகள் சபிதா (வயது 19) என்பவருக்கும் மதுரையை சேர்ந்த முருகன் மகன் அகிலேஷ் கணேஷ் (வயது 23) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.மாணவர்களை சீரழிக்கும் சிடி கடை: - போதை பவுடர் விற்பனையும் அமோகம்
[Saturday 2017-12-09 19:00]

புதுக்கோட்டை சப் கலெக்டர் சரயுவுக்கு, பேருந்து நிலையம் மிக அருகில் உள்ள சிடி கடை ஒன்றில், ஆபாசப் படங்கள் விற்பனை செய்வதாக வந்த ரகசியத் தகவலை அடுத்து, சனிக்கிழமை முன்னிரவு அந்தக் கடையில் ரெய்டு செய்தார். அங்கே ஆபாச படங்கள் அடங்கிய பென்டிரைவுடன் போதைபவுடரான ப்ரௌன் சுகரும் இருக்கவே, சப் கலெக்டர் உள்பட ஒட்டுமொத்த டீமும் அதிர்ச்சி அடைந்தது. உடனடியாக அந்தக் கடைக்கு சீல் வைத்தார் சப் கலெக்டர் சரயு. கடையின் உரிமையாளர் தற்போது தலைமறைவாகி விட்டார். புதுக்கோட்டை நகரில் பெரும் பரபரப்பை இச் சம்பவம் கிளப்பியுள்ளது.பத்து ஆண்டுகளாக கொத்தடிமைகளாக இருந்தவர்கள் மீட்பு!
[Saturday 2017-12-09 19:00]

கடந்த பத்து ஆண்டுகளாக வளர்மதி - சசிகுமார் என்ற காதல் ஜோடியை செங்கல் சூளை உரிமையாளர் ஒருவர் தன்னுடைய கஸ்டடியில் வைத்துக் கொண்டு செங்கல் அறுக்க வைத்து மிக சொற்பனான கூலியை கொடுத்து பட்டினி போட்டதோடு வேறு எங்காவது வேலைக்குச் சென்றால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி கொத்தடிமைகளாக வைத்திருக்கிறார். அவர்களை செல்லியப்பன் என்ற வழக்கறிஞர் மீட்டு ஈரோடு எஸ்.பி.,யிடம் புகார் கொடுத்திருக்கிறார்.உயிரை மாய்த்துக் கொண்ட மாணவிகள்: - வகுப்பறையிலிருந்து பிரிக்கப்பட்டதால் ஏற்பட்ட விபரீதம்
[Saturday 2017-12-09 15:00]

சேலம் சென்யிட் மேரீஸ் பள்ளியைச் சேர்ந்த இரண்டு மாணவிகள், இன்று காலை 9:30 மணிக்கு, சேலம் ராஜகணபதி கோயில் அருகே உள்ள விடுதியின் நான்காவது மாடிமீது ஏறி, சாமி கும்பிட்டு கைகளைக் கோத்தவாறு கீழே குதித்தனர். இதில், ஜெயராணி என்ற மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கவிஶ்ரீ என்ற மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதனால், சேலம் மாவட்டத்தில் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்தவர் கைது!
[Saturday 2017-12-09 09:00]

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூரில் இந்து முன்னேற்ற கழக நிறுவன தலைவர் கோபிநாத் கைது செய்யப்பட்டுள்ளார். இந்து கோயில்களை இடிக்க வேண்டும் என்று பேசிய இந்து கோவில்களை இடித்து புத்த விகாரங்களை கட்ட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாக கூறி அவரது தலையை வெட்டி கொண்டு வருபவருக்கு ஒரு கோடி பரிசு வழங்கப்படும் இந்து முன்னேற்ற கழக நிறுவன தலைவர் கோபிநாத் தெரிவித்தார். இந்நிலையில் அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.நான் இந்து கோயில்களை இடிக்க வேண்டும் என்று கூறவில்லை: - திருமாவளவன் மறுப்பு
[Saturday 2017-12-09 08:00]

"ராமர் கோயில் இருந்த இடத்தில்தான் பாபர் மசூதி கட்டப்பட்டது. எனவே, அதை இடித்து விட்டு அங்கே மீண்டும் இராமர் கோயிலை கட்டப்போகிறோம் என வகுப்புவாதிகள் பேசி வருகின்றனர். இந்த வாதம் சரியென்றால் பௌத்த, சமண கோயில்களை இடித்து அந்த இடங்களில்தான் சிவன் கோயில்களும் பெருமாள் கோயில்களும் கட்டப்பட்டுள்ளன. அங்கே மீண்டும் பௌத்த விகார்களை கட்டுவோம் என கூறமுடியுமா? இந்த கேள்வியைத்தான் நான் எழுப்பினேன். அதைத்தான் திரித்து வெளியிட்டு இருக்கிறார்கள்" என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.13 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுப்படுத்த முயன்ற ஏழு பேர் கைது!
[Saturday 2017-12-09 08:00]

கரூரில் சிறுமி ஒருவருக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி கொண்டுபோய் திருப்பூரில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வைக்கப் பார்த்த ஏழு பேரை கரூர் நகர போலீஸார் கைது செய்தனர்.கரூர் நகரத்தில் உள்ள வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த அந்த சிறுமிக்கு வேலை வாங்கித் தருவதாக கல்பனா என்பவர் அழைத்திருக்கிறார். வர மறுத்த சிறுமியிடம், 'திருப்பூரில் மாசம் பத்தாயிரம் சம்பளத்தில் நல்ல வேலை வாங்கி தருகிறோம். வா' என்று பேசி மனதை கரைத்திருக்கிறார். அந்த சிறுமியும் சம்மதிக்க, அவரை அழைத்துச் சென்ற கல்பனா,மக்கள் பொய் பேசினால் குற்றம் அரசு பொய் பேசினால் அது அரசியல்: - சீமான் ஆவேசம்
[Friday 2017-12-08 17:00]

கொந்தளித்துக் கிடக்கின்றன தமிழக மீனவக் கிராமங்கள். தொடர் போராட்டம், கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் என அரசுக்கு எதிராகக் கொதிக்கின்றனர். ' ஒன்பது ஹெலிகாப்டர்களைக் கொண்டு தொலைந்துபோன மீனவர்களைத் தேடுகிறது கேரள அரசாங்கம். இங்கு தெருவுக்குத் தெரு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறார்கள். இப்படியொரு அரசை எங்குமே பார்த்ததில்லை' எனக் கொந்தளிக்கிறார் சீமான்.சிறுமி ஹாசினி கொலை குற்றவாளி தஷ்வந்த் மும்பையில் மீண்டும் கைது!
[Friday 2017-12-08 17:00]

திருவள்ளூர் மாவட்டம் மாங்காட்டை அடுத்த மவுலிவாக்கத்தில் வசித்த சாப்ட்வேர் இன்ஜினியர் பாபுவின் மகள் சிறுமி ஹாசினி(6)யை, பிப்ரவரி 6-ம் தேதி அதே குடியிருப்பில் வசித்துவந்த தஷ்வந்த் (24) கற்பழித்து கொலை செய்தான். இதுகுறித்து வழக்குப்பதிந்த மாங்காடு போலீசார் தஷ்வந்தை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். கடந்த செப்டம்பரில் தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை ஐகோர்ட்டு ரத்துசெய்து ஜாமீனில் விடுவித்தது. இதையடுத்து, அங்கிருந்து வீட்டை காலி செய்து குன்றத்தூருக்கு தனது பெற்றோருடன் சென்றார் தஷ்வந்த்.தலையில் குல்லா அணிந்து வாக்கு சேகரித்த ஓ.பன்னீர்செல்வம்!
[Friday 2017-12-08 17:00]

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அ.தி.மு.க-வினர், தலையில் குல்லா அணிந்து ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வி.ஐ.பி வேட்பாளர்கள் பள்ளி வாசலில் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். ஏராளமான இஸ்லாமியர்களின் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ள நேதாஜிநகர் 4 வது தெருவிலுள்ள பள்ளி வாசலில் அவர்கள் வாக்குகளைச் சேகரித்தனர். தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ், சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் தொப்பி அணிந்தபடி வாக்கு கேட்டனர்.லட்சத்தீவில் தத்தளித்துக் கொண்டிருந்த 180 தமிழக மீனவர்கள் மீட்பு!
[Friday 2017-12-08 12:00]

லட்சத்தீவுப் பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்த 180 தமிழக மீனவர்கள் மீட்கப்பட்டிருப்பதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழக தென்கடலோர மாவட்டமான கன்னியாகுமரியை ஒகி புயல் கடந்த 28-ம் தேதி தாக்கியது. இதனால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன், கனமழை பெய்தது. மேலும், கடலில் சீற்றம் இருந்ததால், புயலுக்கு முன்னதாக மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் கரைதிரும்ப முடியாமல் அவதியுற்றனர். அவர்களின் கதி என்னவென்றே தெரியாமல் இருந்தது. அவர்களைத் தேடும் பணியில் இந்திய கடற்படைக் கப்பல்களும், விமானங்களும் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுவருகின்றன. ஆபரேஷன் சகாயம் என்ற பெயரில் இந்தத் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.


Easankulasekaram-Remax-300716
SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா