Untitled Document
November 23, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
வேட்புமனுத் தாக்கல் அறிவிப்பு 17ஆம் திகதி வெளியாகும்!
[Wednesday 2017-11-15 08:00]

உள்ளுராட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்யும் திகதி எதிர்வரும் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளதனால், தேர்தல்கள் ஆணைக்குழு கூடி தேர்தல் நடத்தும் திகதி தொடர்பில் தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்

உள்ளுராட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்யும் திகதி எதிர்வரும் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளதனால், தேர்தல்கள் ஆணைக்குழு கூடி தேர்தல் நடத்தும் திகதி தொடர்பில் தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்

  
  
   Bookmark and Share Seithy.comரவிகரனை கல்வியமைச்சராக நியமிக்க புதிய திட்டம்?
[Thursday 2017-11-23 07:00]

வடமாகாண கல்வி அமைச்சர் க. சர்வேஸ்வரனின் பதவியை பறிப்பதற்கான முழு வீச்சில் வட மாகாண சபையின் ஆளும் கட்சி குழு ஒன்று தீவிரமாக செயற்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தேசியக் கொடியிலும் மாற்றம் அவசியம்! - கூட்டமைப்பு
[Thursday 2017-11-23 07:00]

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்ற நிலையில் தேசியக் கொடியில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வலியுறுத்தியுள்ளார். தற்போதிருக்கின்ற தேசியக் கொடியானது தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யவில்லை என்ற தீர்மானத்தை தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் ஆரம்பகால கட்டத்தில் எடுக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.தண்ணீருக்காக இலங்கையிலும் போர் வெடிக்கும்! - எச்சரிக்கிறார் மகிந்தவின் சகோதரர்
[Thursday 2017-11-23 07:00]

தண்ணீர் பிரச்சினைக்காக எமது நாட்டிலும் போர் வெடிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷ எம்.பி தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நீர்ப்பாசன, கமத்தொழில், மகாவலி மற்றும் ஆரம்பக் கைத்தொழில் அமைச்சுக்கள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.தண்டனைக்காலம் முடிந்தும் விடுவிக்கப்படாத 3 தமிழ்க் கைதிகள்!
[Thursday 2017-11-23 07:00]

மாலைதீவில் இருந்து நாடுகடத்தப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் எந்த அமைச்சும் தீர்வுகளை முன்வைக்க வில்லை எனவும் தண்டனை காலம் முடிந்தும் அவர்கள் சிறையில் இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.ரணில்- மோடி இன்று முக்கிய பேச்சு!
[Thursday 2017-11-23 07:00]

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இருதரப்பு பேச்சு நடத்தவுள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சந்திப்பு புதுடில்லியில் இன்று இடம்பெறுகிறது. இதன் போது இலங்கை இந்திய மீனவர்கள் பிரச்சினை யில் முக்கிய கவனம் செலுத்தப்படுமென தெரிவிக்கப்படுகிறது.சுரேஸ் பிரேமச்சந்திரனின் கருத்துக்கு பதில் கூறும் அவசியமில்லை! - மாவை
[Thursday 2017-11-23 07:00]

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து செல்வதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியுள்ள கருத்துக்குப் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். இலங்கை தமிழரசு கட்சியின் யாழ். அலுவலகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி பிரிந்து செல்வது தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.தேர்தலைப் பிற்போட அரசு சதி - மகிந்த குற்றச்சாட்டு
[Thursday 2017-11-23 07:00]

உள்ளூராட்சித் தேர்தல்களை ஒத்திவைப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்படுவதாகக் கூறியதால் பாராளுமன்றத்தில் சர்ச்சை ஏற்பட்டது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இது தொடர்பில் எழுப்பிய ஒழுங்குப் பிரச்சினை, சபையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.ஆசனப் பங்கீடு குறித்து யாழ்ப்பாணத்தில் இன்று பேச்சு!
[Thursday 2017-11-23 07:00]

உள்ளூராட்சித் தேர்தல் ஆசனப் பங்கீடு குறித்து கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று மாலை 5 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான தமிழரசுக்கட்சி, ரெலோ, புளொட் ஆகியன இதில் கலந்து கொள்ளவுள்ளன. கட்சிகளிடையே ஆசனப்பங்கீடுகள் தொடர்பாகவும் இறுதி முடிவெடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கோண்டாவில் கிணற்றில் ஆணின் சடலம்!
[Thursday 2017-11-23 07:00]

கோண்டாவில் பழனியாண்டவர் கோவிலடியை அண்மித்த பகுதியில் உள்ள கிணற்றில் சடலம் ஒன்று காணப்படுவதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலம் அடையாளம் காணப்படவில்லை, சடலத்தை அடையாளம் காண்பதற்கு பொது மக்களின் உதவியை எதிர்ப்பார்த்திருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர்.வவுனியா விபத்தில் இருவர் காயம்!
[Thursday 2017-11-23 07:00]

வவுனியா ரயில் நிலைய வீதியில் நேற்றிரவு மோட்டார் சைக்கிள் மோதியதில், குழந்தை உட்பட இருவர் படுகாயமடைந்தனர். காயமடைந்த இருவரும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரயில் நிலைய வீதியூடாக குருமண்காடு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், மதுரா மண்டபத்தை அண்மித்த வேளை, வீதியில் நடந்து சென்ற பெண் மீது மோதி விபத்துக்குள்ளானது.மன்னார் ஆயராக இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை நியமனம்! - திருத்தந்தை அறிவிப்பு Top News
[Wednesday 2017-11-22 18:00]

மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயராக கொழும்பு மறைமாவட்ட துணை ஆயராக கடமையாற்றிய கலாநிதி பீடலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளதாக திருத்தந்தை அறிவித்துள்ளதாக மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை தெரிவித்தார்.இதுவரை குடாநாட்டில் 100 பேர் கைது!
[Wednesday 2017-11-22 18:00]

யாழ்ப்பாணத்தில் உள்ள கடைசி வாள்வெட்டுக் குழு உறுப்பினரைக் கைது செய்யும் வரை, பொலிஸ் வேட்டை தொடரும் என, யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ தெரிவித்தார். 'வாள் வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் தொடர்பில், பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது, நேற்று இரவு வரையில், 100 பேர் கைது செய்யப்பட்டனர்.புதுடெல்லி சென்றடைந்தார் ரணில் - நாளை மோடியுடன் சந்திப்பு! Top News
[Wednesday 2017-11-22 18:00]

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தினூடாக புதுடில்லியைச் சென்றடைந்தார். இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அவருடைய பாரியார் மைத்திரி விக்ரமசிங்கவுக்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் தலைமை ஒழுங்குமரபு அலுவலர் சஞ்ஜே வர்மா மற்றும் பிரதி ஒழுங்குமரபு அலுவலர் அபிசேக் குக்லா ஆகியோர் நேரில் சென்று வரவேற்றிருந்தனர்.வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை - உள்ளூராட்சித் தேர்தல் கேள்விக்குறி!
[Wednesday 2017-11-22 18:00]

உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயம் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உள்ளடங்கிய வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்த கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைகால தடை உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம் தேதி வரை இந்த இடைகால தடை உத்தரவு நீடிக்கும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.மருமகனைக் கொலை செய்த மாமனாருக்கு 7 வருடம், மைத்துனருக்கு 2 வருடம் சிறைத்தண்டனை!
[Wednesday 2017-11-22 18:00]

யாழ்ப்பாணம் - ஆறுகால்மடம் பகுதியில் மருமகனை கைமோசக்கொலை செய்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட மாமனாருக்கு 7ஆண்டு கடூழிய சிறைத் தண்டனையும், அவரது மகனுக்கு 2ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் விதித்து யாழ்.மேல் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.ஆவா குழுவின் உளவாளி பொலிசாரால் கைது! Top News
[Wednesday 2017-11-22 18:00]

ஆவா குழுவின் உளவாளி என்று கூறப்படும் ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். யாழ். இராமநாதன் வீதி கலட்டி பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய கஜபாலசிங்கம் நிதர்சன் என்ற இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றும் வாள் ஒன்றும் இன்று காலை கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.ஆளுனருக்கு எதிரான நீதிமன்ற உத்தரவு - சட்டமா அதிபர் திணைக்களம் மேல்முறையீடு!
[Wednesday 2017-11-22 18:00]

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் மரிதாஸன் ஜேகூ வெளிநாடு சென்று கல்வியைத் தொடர மாகாண ஆளுநர் விடுப்பை வழங்கி அனுமதிக்க வேண்டுமென யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கிய உறுதிகேள் எழுத்தாணை மீதான கட்டளையை ஆட்சேபித்து சட்டமா அதிபர் திணைக்களம் மேன்முறையீடு செய்துள்ளது.முகாபேக்கு நடந்ததே மஹிந்தவுக்கும் நடந்திருக்கும்! - சமீர பெரேரா
[Wednesday 2017-11-22 18:00]

ஜனவரி 08 புரட்சிக்குக் கைகொடுத்த அனைவருக்கும் மகிந்த ராஜபக்ச நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால், அந்த மாற்றம் இந்நாட்டில் ஏற்பட்டிருக்காவிட்டால், இன்று முகாபேக்கு நடந்ததுதான் ராஜபக்சவுக்கும் நடந்திருக்கும் என்று இடதுசாரி நிலையத்தின் உப தலைவர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.ஜனாதிபதியை விட ரணிலுக்கும் சம்பந்தனுக்குமே அதிகாரம் அதிகமாம்!
[Wednesday 2017-11-22 18:00]

ஜனா­தி­ப­தியை விடவும் எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோ­ருக்கே அதி­கா­ரங்கள் உள்­ளன. நாட்­டினை பி­ள­வு­ப­டுத்தும் அர­சியல் அமைப்­பினை உரு­வாக்­கு­வதில் இவர்­களே முன்­னின்று செயற்­பட்­டு ­வ­ரு­வ­தாக ரியர் அட்­மிரல் சரத் வீர­சே­கர தெரி­வித்தார்.சுமந்திரனை பகிரங்க விவாதத்துக்கு அழைக்கிறார் சுகாஸ்!
[Wednesday 2017-11-22 18:00]

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சுகாஸ் பகிரங்க விவாதத்திற்கு அழைத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சுமந்திரனை பகிரங்க விவாதத்திற்கு சுகாஸ், அழைப்பு விடுத்துள்ளார்.


SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா