Untitled Document
December 14, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
வெள்ளத்தில் சிக்கியவர்களை முதுகில் சுமந்து காப்பாற்றிய பெண்!
[Sunday 2017-08-13 08:00]

இந்தியாவில் வெள்ள பாதிப்பின் போது மம்தா ராவத் என்ற பெண் தனது உயிரைப் பற்றி கவலைப்படாமல் பலரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.கடந்த 2013-ஆம் ஆண்டு உத்தரகண்ட் மாநிலம் ருத்ர பிரயாக் மற்றும் சமோலி மாவட்டங்களில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய திருத்தலங்களுக்கு யாத்திரை சென்ற சுற்றுலா பயணிகள் அங்கு பெய்த கனமழை, நிலச்சரிவின் காரணமாக கடும் வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இந்தியாவில் வெள்ள பாதிப்பின் போது மம்தா ராவத் என்ற பெண் தனது உயிரைப் பற்றி கவலைப்படாமல் பலரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.கடந்த 2013-ஆம் ஆண்டு உத்தரகண்ட் மாநிலம் ருத்ர பிரயாக் மற்றும் சமோலி மாவட்டங்களில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய திருத்தலங்களுக்கு யாத்திரை சென்ற சுற்றுலா பயணிகள் அங்கு பெய்த கனமழை, நிலச்சரிவின் காரணமாக கடும் வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

  

இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த வெள்ள பாதிப்பினால் அப்பகுதியில் இருந்த வீடுகள் அடித்து செல்லப்பட்டன. இதனால் ஏராளமானோர் வீடில்லாமல் தவித்தனர்.இந்நிலையில் பன்கோலியை சேர்ந்த மம்தா என்ற மலையேற்ற வீராங்கணை, மலையேற்ற பயிற்சி நிலையம் சார்பில் அங்கு மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணிகளில் இடம்பெற்றிருந்தார்.மீட்பு பணியின் போது அவர், சுயநினைவில்லாத பெண் ஒருவரை தனது முதுகில் சுமந்து கொண்டு மலைப்பாங்கான பகுதியில் இருந்து சுமார் 3 கி.மீற்றர் தொலைவு அழைத்து சென்றார். அதன் பின் அங்கு அவருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது.இதற்கிடையில் இந்த வெள்ள பாதிப்பினால் மம்தாவின் வீடும் நீரில் அடித்து செல்லப்பட்டது. இருப்பினும் அவர் மக்களை மீட்பதிலேயே குறியாக இருந்தார்.இவரது வீடு அடித்து செல்லப்பட்டதால் ஏதேனும் உதவி வேண்டுமா என்று கேட்டதற்கு வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.

  
   Bookmark and Share Seithy.comவடமாநில கொள்ளையர்களைக் காட்டிக்கொடுத்த ட்ரோன் கேமரா!
[Thursday 2017-12-14 13:00]

கோவையில் ஏ.டி.எம் கொள்ளைகளில் ஈடுபட்டுவந்த வடமாநில கொள்ளையர்கள், நாமக்கல்லில் கைதுசெய்யப்பட்டனர்.கோவை, விளாங்குறிச்சி அருகே இண்டஸ் இண்ட் மற்றும் ஆக்சிஸ் வங்கிகளின் ஏ.டி.எம் மையங்களில், கடந்த சில நாள்களுக்கு முன்பு நுழைந்த கொள்ளையர்கள், சிசிடிவி கேமராக்களை மறைத்துவிட்டு, வெல்டிங் இயந்திரம் மூலம் ஏ.டி.எம் மெஷினை உடைத்துள்ளனர். இரண்டு இடங்களிலும் மொத்தம் 29 லட்சத்து 21 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்தவர்களைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஆபாச நடனம்: - அரச பாடசாலையில் நடந்த கொடுமை
[Thursday 2017-12-14 12:00]

தமிழக அரசு சார்பில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சி தொடக்க விழாவில் பள்ளி மாணவர்களின் முன் பெண் ஒருவர் பெல்லி டான்ஸ் ஆடியக் கூத்து அரங்கேறியுள்ளது.நாமக்கல் மாவட்டத்தில் அரசுப் பொருட்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவில் அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். விழாவின்போது, பெண் ஒருவர் பெல்லி டான்ஸ் ஆடினார். பள்ளி மாணவர்கள் முன்னிலையில் ஆபாசமாக நடந்த இந்த நடனத்தைக் கண்டு மாணவர்களும் ஆசிரியர்களும் முகம் சுளித்தனர்.திருச்செந்தூர் முருகன் கோயில் பிராகார மண்டபம் இடிந்துவிழுந்து விபத்து: - மூன்று பக்தர்கள் உயிரிழப்பு
[Thursday 2017-12-14 12:00]

திருச்செந்தூர் முருகன் கோயில் பிராகார மண்டபம் இடிந்துவிழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் சிக்கி மூன்று பேர் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. முருகன் கோயிலில் வடக்குப் பிராகாரத்தில் அமைந்திருக்கும் வள்ளிக்குகை அருகில் உள்ள மண்டபம் இன்று காலை 10.30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில், வடக்குப் பிராகாரத்தில் உள்ள மண்டபத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. காலை 10.30 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தில் மூன்று பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.சென்னையில் உள்ள சீன உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறும் ரோபோக்கள்!
[Thursday 2017-12-14 08:00]

சென்னையில் உள்ள சீன உணவகம் ஒன்றில் ரோபோக்கள் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறி வருகிறது. வெளிநாடுகளில் ரோபோக்களின் பயன்பாடு அதிகமாகவே இருக்கும். ஆனால் நம் நாட்டில் பொறுத்தவரை ரோபோக்களின் பயன்பாடு என்பது ஏட்டளவில் மட்டுமே இருந்து வந்தது. அந்த கவலையை போக்குவதற்காகவே இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அதுவும் சென்னையில் ரோபோக்களை கொண்டு ஒரு உணவகம் செயல்பட்டு வருகிறது.ஏ.டி.எம்.மில் கொள்ளை அடிக்கும் கும்பல்: - கூகுள் மப்ஸ் மூலம் கொள்ளை
[Thursday 2017-12-14 08:00]

ஏ.டி.எம் கொள்ளைகளில் தொடர்புடைய 8 பேர் நாமக்கல், சேலத்தில் கைது செய்யப்பட்டனர். சமீபத்தில் கோவையில் 2 ஏ.டி.எம் களில் நடந்த கொள்ளையில் தொடர்பு என சந்தேகம் எழுந்தது.ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: - திருமாவளவன் வலியுறுத்தல்
[Thursday 2017-12-14 08:00]

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்கப்பட உள்ள நிவாரண உதவி போதுமானதாக இல்லை. இறந்துபோன மீனவர்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் நாகர்கோவில் வந்திருந்தார். அவருக்கு கறுப்புக்கொடி காட்ட காத்திருந்த இந்து மகா சபா அமைப்பினரை போலீஸார் கைதுசெய்தனர்.இரட்டை சதம் அடித்து சாதனை படைத்த ரோஹித் சர்மா!
[Wednesday 2017-12-13 16:00]

இலங்கை அணிக்கெதிராக இன்று நடந்து வரும் இரண்டாவது ஒருநாள் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா பேட்டிங் செய்தது. இதில் ஓப்பனராக களமிறங்கிய கேப்டன் ரோஹித் ஷர்மா, இரட்டை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அவர் அடிக்கும் மூன்றாவது இரட்டை சதம் இதுவாகும்.நடிகை ராணி பத்மினி கொலை வழக்கு: குற்றவாளியை உடனடியாக விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவு
[Wednesday 2017-12-13 16:00]

1986-ம் ஆண்டு நிகழ்ந்த, நடிகை ராணி பத்மினி கொலை வழக்கில் 18 ஆண்டுகளாகச் சிறையில் இருந்த குற்றவாளியை உடனடியாக விடுதலை செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அக்காவை வெட்டி கொன்ற வாலிபர்!
[Wednesday 2017-12-13 16:00]

சோளிங்கர் அடுத்த தொண்டமாநத்தம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி மகன்கள் சேட்டு (வயது 30), நவீன் (25), மகள் அமுதா (28). சேட்டு அவரது மனைவி சகுந்தலாவுடன் தனியாக வசித்து வருகிறார். அமுதா திருமணமாகி காரையில் வசித்து வருகிறார். சுப்பிரமணி இறந்து விட்டதால் தாய் சாந்தியுடன் நவீன் வசித்து வந்தார். மேஸ்திரி வேலைக்கு சென்று வந்தார்.நவீன் அம்மூரை சேர்ந்த வைத்தீஸ்வரி (18) என்பவரை 3 ஆண்டுகளாக காதலித்து வந்தார். அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு நேற்று மாலை வீட்டிற்கு அழைத்து வந்தார்.ராமர் பாலம் மனிதர்களால் உருவாக்கப்பட்டதுதான் கட்டுக்கதை அல்ல: - அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
[Wednesday 2017-12-13 08:00]

ராமர் பாலம், மனிதர்களால் உருவாக்கப்பட்டது, அது கட்டுக்கதை அல்ல என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ராமேசுவரம் அருகே உள்ள பாம்பனில் இருந்து இலங்கையில் உள்ள தலைமன்னார்வரை கடலுக்கு அடியில் 50 கி.மீ. தூரத்துக்கு ராமர் பாலம் அமைந்துள்ளது. ராமாயண காலத்தில், இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை மீட்க சென்ற ராமருக்காக வானர சேனைகள் அந்த பாலத்தை கட்டியதாக நம்பப்படுகிறது. அதனால், அதை இந்துக்கள் புனிதமாக கருதுகிறார்கள்.பிள்ளைகளை வளர்க்க கடலுக்குள் போராடுகிறேன்: - பெண் மீனவர் ரேகா
[Wednesday 2017-12-13 08:00]

அதிகாலை நேரம் அரபிக்கடல் அமைதியாகக் காட்சியளிக்கிறது. படகை, கயிற்றில் இருந்து அவிழ்க்கிறார் அந்தப் பெண். படகில் நைலான் வலைகள் இறைந்து கிடக்கின்றன. ஒற்றை இன்ஜின் கொண்ட அந்தப் படகு, தண்ணீரைக் கிழித்து கடலுக்குள் சீறிச் செல்கிறது. சூரியன் மறைவதற்குள் கரை திரும்புகிறார். படகு நிறைய மீன்கள். `தரைமேல் பிறக்கவைத்தான்... எங்களை தண்ணீரில் பிழைக்கவைத்தான்...' என்ற பாடல் கே.சி.ரேகாவுக்கு அப்படியே பொருந்தும். இந்தியாவில் உரிமம் பெற்ற முதல் பெண் மீனவர் இவர்தான்.முத்தப் போட்டியில் பங்கேற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நோட்டீஸ்!
[Wednesday 2017-12-13 08:00]

ஜார்க்கண்ட் முத்தப்போட்டிஜார்க்கண்ட் மாநிலம், பகூர் மாவட்டத்தின் ஜூமாரியா கிராமத்தில் நடந்த தம்பதிகள் முத்தப்போட்டியில் பங்கேற்றதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, அக்கட்சியின் தலைவர் சிபு சோரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.கணவரைக் கொன்று காதலரைக் கணவராக்கிய பிளாஸ்டிக் சர்ஜரி: - காட்டிக் கொடுத்த மட்டன் சூப்
[Wednesday 2017-12-13 07:00]

தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னுல் நகரைச் சேர்ந்த நர்ஸ் ஸ்வாதி. இவரின் கணவர் சுதாகர் ரெட்டி. இந்தத் தம்பதிக்கு ஒரு குழந்தையும் உள்ளது. திருமணத்துக்கு முன்பே, ஸ்வாதி ராஜேஷ் என்பவரைக் காதலித்துள்ளார். நிர்பந்தம் காரணமாகச் சுதாகரைத் திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகளுக்குப் பின்னும் ஸ்வாதியால் காதலரை மறக்க முடியவில்லை. எனவே, கணவரைக் கொன்றுவிட்டு, காதலருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து, கணவர்போல மாற்றத்திட்டமிட்டுள்ளார். அதன்படி, நவம்பர் 27-ம் தேதி இருவரும் சேர்ந்து சுதாகர் ரெட்டிக்கு மயக்க மருந்து கொடுத்து கொலை செய்து உடலை காட்டுப் பகுதியில் புதைத்துள்ளனர்.அழகிக்கு வாழ்த்து தெரிவிக்கும் பிரதமர் மக்கள் துயரத்தில் பங்கெடுக்கவில்லை: - பொங்கிய சீமான்
[Tuesday 2017-12-12 17:00]

ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலோரக் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் போனார்கள். அவர்களில் சிலர் மட்டும்தான் மீட்கப்பட்டுள்ளனர். கடலில் தத்தளிக்கும் மீனவர்களை மீட்க வேண்டும் எனக் குமரி மீனவக் கிராமங்களில் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.பேரறிவாளன் மீதான குற்றச்சாட்டை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு!
[Tuesday 2017-12-12 16:00]

ராஜீவ் கொலை வழக்கில் கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன், உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், வெடிகுண்டில் நான் வாங்கிக் கொடுத்த பேட்டரியே பயன்படுத்தப்பட்டது என்பது நிரூபிக்கப்படவில்லை. இதனால் எனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும்’ என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக 2 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தனர்.தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் அம்மா மனைவி குழந்தைகளைக் கொன்றேன்! - தொழிலதிபரின் 5 பக்க கடிதம்
[Tuesday 2017-12-12 16:00]

சென்னை பல்லாவரம் அருகே உள்ள பம்மலில், அம்மா, மனைவி, இரண்டு குழந்தைகள் என நான்குபேரை கொலைசெய்துவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற தொழிலதிபரின் கதை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால், தொழிலதிபர் இந்த முடிவை எடுத்ததாக அவர் எழுதிய 5 பக்க கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.சாதி ஆணவக் கொலைகளுக்கு இதுவே சரியான தீர்ப்பாக இருக்கும்: - தீர்ப்பு குறித்து நெகிழ்ந்த கௌசல்யா
[Tuesday 2017-12-12 16:00]

சங்கர் கொலைவழக்கில் திருப்பூர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்பதாகச் கௌசல்யா தெரிவித்தார். உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி உள்பட 6 பேருக்கு தூக்குத்தண்டனையும் ஒருவருக்கு இரட்டை ஆயுள் மற்றும் ஒருவருக்கு ஐந்தாண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிமன்ற தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கௌசல்யா, `என் சங்கர் சிந்திய ரத்தத்துக்கு நீதி கிடைக்க ஒன்றே முக்கால் ஆண்டுகள் காத்திருந்தேன். அந்தவகையில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பை வரவேற்கிறேன். அதுவும், கொலை வழக்கு ஒன்றில் தீர்ப்பு வரும்வரை குற்றவாளிகளை நீதிமன்ற காவலிலேயே வைத்திருப்பது அரிதினும் அரிது. பெரும்பாலான குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையான தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. தூக்குத்தண்டனை குறித்த எனது கருத்து வேறாக இருந்தாலும் சாதி ஆணவக் கொலைகளுக்கு இதுவே சரியான தீர்ப்பாக இருக்கும்.விடுதலைச் சிறுத்தைகள்- பி.ஜே.பி மோதலால் பதற்றம்: -ஆர்ப்பாட்டம் போர்க்களமானது
[Tuesday 2017-12-12 16:00]

நாகை மாவட்டம் சீர்காழியில், திருமாவளவனைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பி.ஜே.பி.யினர் மீது விடுதலை சிறுத்தைகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், பி.ஜே.பி-யினர் 7 பேர் படுகாயமடைந்தனர். தாக்குதல் நடத்தியது தொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது, சீர்காழியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.சங்கர் ஆணவக் கொலை வழக்கு: - கௌசல்யா தந்தைக்கு தூக்குத்தண்டனை விதித்த நீதிமன்றம்
[Tuesday 2017-12-12 16:00]

தமிழகத்தை உலுக்கிய உடுமலைப் பேட்டை சங்கர் ஆணவக் கொலை வழக்கில், கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி உள்ளிட்ட 8 பேர் குற்றவாளிகள் என்று திருப்பூர் நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு வழங்கியுள்ளது. சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட சங்கர் - கௌசல்யா தம்பதியை கடந்த 2016 மார்ச் 13-ம் தேதியன்று, உடுமலையில் பட்டப்பகலில் ஒரு கும்பல் அரிவாளால் கொடூரமாக வெட்டியது. அதில், சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார்.விமானத்தில் பாலியல் தொல்லை: - - நடிகையை கேள்வி கேட்கும் தொழிலதிபரின் மனைவி
[Monday 2017-12-11 14:00]

விமானத்தில் பாலியல் தொல்லைக்கு உள்ளானதாக, நடிகை ஒருவர் நேற்று இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நடிகைக்கு பாலியல் தொல்லைகொடுத்த நபரை போலீஸார் நேற்று கைதுசெய்தனர்.


Easankulasekaram-Remax-300716
SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
Mahesan-Remax-169515-Seithy
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா