Untitled Document
December 14, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
சர்வதேச தமிழினத்தை கனடாவில் ஒன்றிணைத்த பூப்பந்தாட்ட சுற்றுப் போட்டி! Top News
[Friday 2017-08-11 07:00]

உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களை ஒரே புள்ளியில் இணைக்கும் விளையாட்டுக் களமாக பூப்பந்தாட்டம் (Badminton)   இன்று முன்னிலை பெற்றுள்ளது. அந்த வகையில், கடந்த சில வருடங்களாக புலம்பெயர்ந்த தேசங்களில் வாழும் தமிழர்கள் பூப்பந்தாட்ட விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கும் நிலையில்,தத்தமது நாடுகளில் மட்டுமே ஆடிவந்த விளையாட்டை சர்வதேசப் போட்டிக் களத்துக்கு எடுத்துச் செல்லும் முயற்சிகள் எடுக்கப்பட்டன.

உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களை ஒரே புள்ளியில் இணைக்கும் விளையாட்டுக் களமாக பூப்பந்தாட்டம் (Badminton) இன்று முன்னிலை பெற்றுள்ளது. அந்த வகையில், கடந்த சில வருடங்களாக புலம்பெயர்ந்த தேசங்களில் வாழும் தமிழர்கள் பூப்பந்தாட்ட விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கும் நிலையில்,தத்தமது நாடுகளில் மட்டுமே ஆடிவந்த விளையாட்டை சர்வதேசப் போட்டிக் களத்துக்கு எடுத்துச் செல்லும் முயற்சிகள் எடுக்கப்பட்டன.

  

சுவிஸ் நகரில் வசிக்கும் ‘சிங்கம் கந்தையா’ அவர்களின் சிந்தையில் உருவாகிய ‘தமிழர் பூப்பந்தாட்ட உலகக் கிண்ண சுற்றுப் போட்டி’ என்ற சர்வதேச தமிழர்விளையாட்டுக் களத்துக்கான திட்டமிடலானது 2013 ஆம் ஆண்டில் உதயமானது. சுவிஸ் நாட்டில் தொடங்கிய தமிழர் பூப்பந்தாட்ட சர்வதேசப் போட்டிகள், அடுத்தடுத்து வந்த ஆண்டுகளில் பிரான்ஸ், இங்கிலாந்து, ஜேர்மனி ஆகிய ஐரொப்பிய நாடுகளில் இடம்பெற்றிருந்தன. ஒவ்வொரு நாட்டிலும் இடம்பெற்ற போட்டிகளின்போதும்,கனடாவை சேர்ந்த தமிழ் பூப்பந்தாட்ட வீரர்கள் கலந்துகொண்டதோடு, பல வெற்றிகளையும் குவித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2016 ஆம் ஆண்டில்,நாலாவது சுற்றுப்போட்டி ஜேர்மனியில்இடம்பெற்றபோதே, 2017 ஆம் ஆண்டுக்கான போட்டிகள் ஐரோப்பிய நாடுகளை கடந்து வட அமெரிக்க நாடுகளில் ஒன்றான கனடாவில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கமைய ஐந்தாம் ஆண்டுக்கான போட்டிகளை கனடாவின் ரொரன்ரோ மாநகர பிரதேசத்தில்நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. திரு. அன்ரனி ஜெயகாந்தன் அவர்களின் தலைமையில் அதற்கென ஒரு செயற்பாட்டுக் குழு அமைக்கப்பட்டது. ஒரு வருட காலமாக பலரது அயராத உழைப்பின் வெளிப்பாடாக,‘உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் 5 ஆவது உலகக் கிண்ணப் போட்டி ரொரன்ரோ - 2017’ கடந்த ஜுலை 29, 30 ஆம் திகதிகளில் மிகவும் விறுவிறுப்பாகவும்,கோலாகலமாகவும் இடம்பெற்று முடிந்திருக்கிறது.

கடந்த வருடம் ஜேர்மனியில் இடம்பெற்ற சுற்றுப் போட்டியின்போது 11 நாடுகளைச் சேர்ந்த தமிழ் விளையாட்டு வீரர்கள் பங்குகொண்டிருந்தார்கள். இம்முறை அதற்கு மேலதிகமாக அமெரிக்கா,அவுஸ்திரேலியா, பின்லான்ட், போத்துக்கல் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் இணைந்துகொண்டதால் பங்குபற்றிய நாடுகளின் எண்ணிக்கை பதினைந்தாக அதிகரித்திருந்தது. பல்வேறு நாடுகளையும் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட தமிழ் வீரர்களும், வீராங்கணைகளும் இம்முறை போட்டியில் கலந்துகொண்டு தங்கள்திறமைகளை வெளிப்படுத்தியிருந்தார்கள்.

போட்டிகளுக்கான அரங்காக கனடாவின் Scarborough பிரதேசத்தில் அமைந்திருக்கும் ‘‘Epic Sports Centre’ தெரிவு செய்யப்பட்டு, கனடிய ஏற்பாட்டுக் குழுவினரால் அனைத்து ஒழுங்குகளும் நேர்த்தியாக செய்யப்பட்டிருந்தன. 13 வயதுக்கு உட்டபட்டவர்களுடன் ஆரம்பித்து அதற்கு மேற்பட்ட எந்த வயதினரும் பங்கு கொள்ளும் வகையில் வகைப்படுத்தப்பட்டு போட்டிகள் இடம்பெற்றன. வயதுவாரியாகப் பிரிக்கப்பட்ட போட்டியாளர்கள், பெண்கள் தனியாக, ஆண்கள் தனியாக, இருபாலாரும் சேர்ந்து என்று 25 வரையான பிரிவினருக்கிடையே போட்டிகள் இடம்பெற்றன. ஒற்றையாட்டம், இரட்டையாட்டம், கலப்பின ஆட்டம் மற்றும் திறந்த போட்டி பிரிவினருக்கான (open category) போட்டிகள் உள்ளடங்கலாக 500வரையான போட்டிகள் இரு நாட்களிலும் நடாத்தி முடிக்கப்பட்டன என்பது பெருமைக்குரிய விடயமாகும். இடம், மற்றும் காலநேரத்தை கருத்தில் கொண்டு,13 வயதுக்கு உட்பட்ட ஆண் பெண் இருபாலாருக்கும், 15 வயதான ஆண் போட்டியாளர்களுக்கும் வேறு ஒரு களத்தில் போட்டிகள் இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களில் இறுதிச் சுற்றுக்கு தெரிவானவர்கள் மறுநாள் பிரதான மையத்தில் நடைபெற்ற போட்டிகளில் பங்குபற்றியிருந்தார்கள்.

முதல்நாள் நிகழ்வாக, 29 ஆம் திகதி காலை 8 மணிக்கு உத்தியயோகபூர்வமாக போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டாலும், 10 மணியளவில் போட்டிகள் நிறுத்தப்பட்டுசம்பிரதாயபூர்வமானஆரம்ப நிகழ்வுகள்இடம்பெற்றன. தேசியகீதம், தமிழ்தாய் வாழ்த்து என்பவற்றோடு, மங்கள விளக்கேற்றலும் இடம்பெற்றது. கனடா செயற்பாட்டுக் குழுத் தலைவர் - அன்ரனி ஜெயகாந்த், உலகத் தமிழ் பூப்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் – சிங்கம் கந்தையா (சுவிஸ்), மார்க்கம் கவுன்சிலர் – லோகன் கணபதி, ஸ்காபரோ கவுன்சிலர் - நீதன் சண், ஆகியோரின் வாழ்த்துரைகளை தொடர்ந்து மீண்டும் போட்டிகள் ஆரம்பமாகின. இரவு 11 மணிவரை தொடர்ந்து போட்டிகள் இடம்பெற்றன.

அன்றைய போட்டிக் களம் மிகவும் உற்சாகமாகவும், விறுவிறுப்பாகவும் அமைந்தது. பார்வையாளர்களின் உற்சாகமூட்டல்களால் அரங்கம் அதிர்ந்தபடி இருந்ததை காணக்கூடியதாக இருந்தது. போட்டிகளில் கலந்துகொண்ட நாடுகளின் தேசியக் கொடிகள் ஒவ்வொன்றும் அரங்கில் தொங்கவிடப்பட்டு,அந்தச் சுற்றாடலே வர்ணமயமாகக் காட்சியளித்தது. போட்டி நிகழ்வுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்பாட்டுக் குழுவால் செவ்வனே செய்யப்பட்டிருந்தன. பிரபல உணவகமான ‘பாபு கேற்றறிங’; சிற்றுண்டி மற்றும்உணவுச் சாவடியை அமைந்திருந்தது. முதலுதவி, மற்றும் அவசர மருத்துவ தேவைகளுக்கான ஒழுங்குகளும் செய்யப்பட்டிருந்தன. முக்கியமாக, விளையாட்டு வீரர்களினதும், பார்வையாளர்களினதும் பாதுகாப்பு, கனடாவில் அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் உறுதி செய்யப்பட்டிருந்தது. தொலைக்காட்சித் திரையில் போட்டிகள் பற்றிய விபரங்களும், போட்டியாளர்களின் நிலைவரங்களும் அறிவிக்கப்பட்டவண்ணம் இருந்தன.

நூற்றி ஐம்பதுக்கு மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்கள், நீலநிற ஆடைகளில் தம்மை அடையாளம் காட்டி,தேவைகளுக்கு ஏற்றாற்போல் சேவைகளை வளங்கிக்ககொண்டிருந்தார்கள். போட்டிகளில் பங்குகொண்ட கனடிய வீரர்களும், வீராங்கணைகளும் சிவப்புநிற ஆடையில் வலம் வந்து தம்மை இனம்காட்டியிருந்தார்கள். பார்வையாளர்களுக்கென 300 ஆசனங்கள் அரங்கில் போடப்பட்டிருந்தன. போட்டிகள் ஆரம்பமாகி இரவு 11 மணிக்கு முடியும்வரை, தொடர்ச்சியாக வந்தும் போய்கொண்டும் இருந்த பார்வையாளர்களால் மண்டபம் நிறைந்தே காணப்பட்டது.

இரண்டாம் நாள் ஞாயிறு காலை 8 மணிக்கு மீண்டும் போட்டிகள் ஆரம்பமாகின. இறுதிப் போட்டிக்கான பரபரப்பான தினமென்பதால், முதல் நாளைவிடவும் உற்சாகம் அன்று மிகுந்து காணப்பட்டது. மாலை நாலு மணி அளவில் போட்டிகள் நிறைவடைந்து வெற்றியாளர்கள் கௌரவிக்கும் நிகழ்வு (Award ceremony) இடம்பெற்றது. மூன்றாக வகைப்படுத்தப்பட்ட 25 பிரிவுகளில் வெற்றியீட்டிய முதல் மூன்று போட்டியாளர்களுக்கு வெற்றிக் கிண்ணம் பரிசளிக்கப்பட்டது. ழிநn பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பணப் பரிசில்கள் வளங்கப்பட்டன. மொத்தத்தில் நூற்றுக்கு மேற்பட்ட பரிசில்களை வெற்றியாளர்களுக்கு வழங்கியதன் மூலம்,போட்டியாளர்கள் உற்சாகப்படுத்தப்பட்டதோடு, மலர் செண்டு கொடுத்து கௌரவித்திருந்தார்கள்.அதேசமயம், 19 வயதுக்கு உட்பட்ட போட்டியாளர்கள் அனைவருக்கும் விளையாட்டில் பங்குபற்றியதற்கான சான்றிதழ்கள் வளங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வின்போது, ஹரி ஆனந்தசங்கரி(MP) நகரசபை உறுப்பினர்கள் லோகன் கணபதி, நீதன் சண், குபேஸ்((Nava Law),னுச. கிருபாலினி மற்றும் Germany - Hamburg மாநில முன்னாள் பொருளாதார மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் ‘இயன் கரன்’ அவர்களும், அவரது பாரியாரும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

இந்தச் சுற்றுப்போட்டிகளில் அதிகம் கேடயம் பெற்ற நாடு ‘கனடா’ என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதன்மை வெற்றிக்கிண்ணமான ‘Challenge cup’ கனடாவின் சார்பில் கடந்த காலங்களில் பல வெற்றிக் கேடயங்கள் வென்ற ‘செறினா சிங்கராயர்’ என்ற 13 வயது இளம் கனடிய வீராங்கனைக்கு வளங்கி கௌரவிக்கப்பட்டது.

விளையாட்டுப் போட்டிகள் இனிதே நிறைவடைந்த நிலையில், போட்டிகளில் பங்குபற்றிய அனைத்து வீரர்களையும் மகிழ்விக்கும் வகையில் இராப்போசன விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. Estata Banquet Hall இல் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கனடாவின் முன்னணி இசைக்குழுவான ‘அக்னி;’, தங்கள் இசையால் விருந்தினர்களை மகிழ்வித்தார்கள். இந்த சுற்றுப்போட்டியை வெற்றிகரமாக நிகழ்த்தி முடிப்பதற்கு கைகொடுத்த அனுசரணையாளர்கள் அனைவரும் இரவு விருந்தின்போது கௌரவிக்கப்பட்டார்கள். இறுதிச் சுற்றுப் போட்டிகள் சம்பந்தமான விடயங்கள், அனுசரணையாளர்களின் விளம்பரங்கள், வாழ்த்துச் செய்திகளை தாங்கிய சிறப்பு விழா மலரும் அங்கு வெளியிடப்பட்டது.

அடுத்த ஆண்டுக்கான (2018) சுற்றுப் போட்டி ‘டென்மார்க்’ நாட்டில் இடம்பெற முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கனடாவில் இடம்பெற்ற போட்டியானது பூப்பந்தாட்ட விளையாட்டில்பலரது ஆர்வத்தையும் தூண்டியிருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. அது அடுத்த ஆண்டுக்கான போட்டிகளில் மேலும் அதிகப்படியான நாடுகளையும் விளையாட்டு வீரர்களையும் பங்குபற்றச் செய்வதற்கான உந்துதலை கொடுத்திருக்கும் என நம்பலாம்.இந்த பூப்பந்தாட்டப் போட்டியானது கனடாவின் தமிழ் மக்களிடையே மட்டுமல்லாமல், வேற்றின மக்களையும் கவர்ந்திருக்கிறது எனபதை, பார்வையாளர்களாக அவர்கள் கலந்துகொண்டதிலிருந்து தெரிந்து கொள்ளகூடியதாக இருந்தது.

போட்டியில் பங்குபற்றியவர்கள், மற்றும் அவர்களோடு கூட வந்தவர்கள் அனைவருமே தத்தமது சொந்தச் செலவிலேயே கனடாவுக்கு வந்து கலந்துகொண்டார்கள் என்பது, பூப்பந்தாட்ட விளையாட்டில் அவர்களுக்கு இருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. தேசம் தேசமாய் பிரிந்து வாழும் நாம்,விளையாட்டின் மூலம் தமிழர்களாய் ஒன்றுகூடி மகிழ்ந்தோம் என்று பெருமை கொள்ளும் வகையில், இருநாள்நிகழ்வுகளும், புதிய அறிமுகங்களும், சந்திப்புகளும் அமைந்ததாக நிகழ்வில் கலந்துகொண்டவர்களின் கருத்தாக இருந்தது.

கனடாவில் இடம்பெற்ற தமிழரின் சர்வதேசப் பூப்ந்தாட்டப் போட்டிகள் வெற்றிகரமாக நிறைவேறுவதற்கு பலரது பங்களிப்பும் கைகொடுத்திருக்கிறது. அனுசரணை வளங்கிய வர்த்தகப் பெருமக்கள், தன்னார்வத் தொண்டர்கள், விளையாட்டில் பங்குபற்றி தமது ஆர்வத்தை வெளிப்படுத்திய கனடிய, மற்றும் ஏனைய நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், நேர்மையோடு செயலபட்ட நடுர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், ஊடகங்கள் போன்றவை போற்றுதலுக்கு உரியவர்களாக கருதப்படுகிறது. பெருந்தோகையான பார்வையாளர்களின் வாகனங்கள் வீதியோரங்களில் தரிப்பதற்கான வசதியை ரொரன்ரோ மாநகரசபை இலவசமாக வளங்கியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐந்து வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட தமிழரின் சர்வதேச பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டியானது இம்முறை கனடாவில் மிகவும் சிறப்பாகவும், போற்றக்கூடிய வகையிலும் இடம்பெற்று முடிந்திருக்கிறது, இதற்கு காரணகர்த்தாக்களாக விளங்கிய கனடாவின் பூப்பந்தாட்ட ஏற்பாட்டுக் குழுவினர் மிகவும் திறம்படச் செயல்பட்டு தமது திறனை வெளிப்படுத்தியுள்ளார்கள். வெற்றிகரமான ஒருநிகழ்வை நிகழ்த்தி முடித்தற்கான வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடையகிறோம் .

மேலதிக படங்களை பார்வையிட.. www.puthinamphotos.com

  
   Bookmark and Share Seithy.com



ஒதியமலைப் படுகொலையின் 33 ஆவது ஆண்டு நினைவுதினம்! Top News
[Saturday 2017-12-02 19:00]

முல்லைத்தீவு, ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 திகதி இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி தமிழ் மக்களின் 33 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று படுகொலை நடைபெற்ற இடத்தில் நடைபெற்றது. படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள் தீபம் ஏற்றியும் ஒதியமலை பிள்ளையார் ஆலயத்தில் விசேட ஆராதனையில் ஈடுபட்டும் தமது உறவுகளை நினைவு கூர்ந்தனர்.



மெல்பேணில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தேசிய மாவீரர் நாள் நிகழ்வு! Top News
[Tuesday 2017-11-28 18:00]

தமிழீழ விடுதலைப்போரில் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் தேசிய நினைவெழுச்சிநாள் நிகழ்வுகள் 27ம் திகதி திங்கட்கிழமையன்று மெல்பேணில் அமைந்துள்ள Springvale நகர மண்டபத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. மெல்பேண் நேரம் மாலை 6 மணிக்கு மணியொலியுடன் தொடங்கிய ஆரம்பமான இந்நிகழ்விற்கு பிரசாத் (தமிழ்மொழியில்) மற்றும் துளசி (ஆங்கிலமொழியில்) ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.



டென்மார்க்கில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தேசிய மாவீரர் நாள்! Top News
[Tuesday 2017-11-28 18:00]

டென்மார்க்கில் மாவீரர் நாள் பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமானது . அதன் பின்பு டென்மார்க் பொறுப்பாளரால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு,சுடர்வணக்கம், மலர்வணக்கம்,அகவணக்கம் நடைபெற்றது . தமிழீழக்கனவுடன் தமிழ் மக்களின் விடுதலைக்காய் தங்கள் உயிர்களை ஆகுதியாக்கிய தேசப்புதல்வர்களின் கல்லறைக்கு சுடரேற்றும் போது மாவீரர் துயிலுமில்லப்பாடல் ஒலிபரப்பப்பட்டது.



வடமராட்சி கடலில் மாவீரர்களுக்கு நினைவுச் சுடர்! Top News
[Tuesday 2017-11-28 06:00]

தமிழர் தாயகம் எங்கும் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று இடம்பெற்றன. வடமராட்சி - தொண்டைமானாறு கடலிலும் கடற்கரையிலும் மாவீரர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் முல்லைத்தீவு கடற்கரையிலும் மாவீரர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் காலத்தில் கடற்புலிகளின் தளபதி சூசையினால் நடுக்கடலில் ஈகைச்சுடர் ஏற்றப்படுவது வழக்கம். போர் முடிவுக்கு வந்த பின்னர் முதற்தடவையாக வடமராட்சி கடற்பரப்பில் மாவீரர்களுக்காக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டுள்ளது.



மாவடி முன்மாரி துயிலுமில்லத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள்! Top News
[Tuesday 2017-11-28 06:00]

மட்டக்களப்பு - மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் நேற்றுமாலை உணர்வெழுச்சியுடன் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில், மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டுள்ளனர்.



லண்டன் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாவீரர் வார தொடக்க நிகழ்வு! Top News
[Friday 2017-11-24 19:00]

தமிழ் இளையோர் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மாவீரர் வார நிகழ்வுகள் பல நாட்டின் பல்கலைக்கழகங்களில் நடந்தேறிவருகின்றன. அதேபோல லண்டன் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை மாலை தாயக மண்மீட்பு போரில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.



லண்டனில் மாவீரர் பெற்றோர் கெளரவிப்பு நிகழ்வு! Top News
[Monday 2017-11-20 18:00]

தாயக விடுதலை போரில் உயிர்நீத்த மாவீரர்களின் பெற்றோர்களை கெளரவிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் லண்டனில் நடைபெற்றது. ஐக்கிய இராச்சியத்தில் உள்ள ஒக்ஸ்போர்ட் நகரில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் நேற்றுக் காலை 11.00 முதல் மாலை 5.00 வரை இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான மாவீரர்களின் உறவுகள் மதிப்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் எதிர்வரும் மாவீரர் நாளினை சிறப்புற நடாத்த வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக் கின்றன.



கனடா செந்தில் குமரனின் அறக்கட்டளை ஊடாக அக்கறைப்பற்றை சேர்ந்த சசிகலாவிற்கு வெற்றிகரமாக இருதய சத்திர சிகிச்சை நிறைவு! Top News
[Tuesday 2017-10-24 19:00]

25 வயதான சசிகலா தனது 9 வயது முதலே இதய நோயினால் பாதிக்கப்பட்டு மிகுந்த துன்பத்திற்கு உள்ளானார். இவரது தந்தையான சிவசுப்ரமணியம் தனது மகளின் உயிரை காப்பதற்கு அடிக்கடி அரசாங்கமருத்துவமனைக்குக் கூட்டிச் சென்று வைத்தியம் பார்த்தபடியே இருந்துள்ளார். ஆனால் சத்திரசிகிச்சை செய்த இந்த நோயினில் இருந்து முழுமையாக வெளிவர முடியாத நிலைமை ஏனென்றால் அரசாங்க மருத்துவமனையில் இவருக்கு முன் இவரை விட மோசமான நிலைமையில் பலர் நாட்கள் வருடங்களாக உருண்டோடி சசிகலாவுக்கு திருமணமும் ஆகி குழந்தையும் பிறக்கிறது.



யாழ்ப்பாணத்தில் நடந்த தேசிய தமிழ் மொழித்தின விழா! Top News
[Saturday 2017-10-14 19:00]

கல்வி அமைச்சின் மூலமாக ஒவ்வொரு வருடமும் நடாத்தப்படும் தேசிய தமிழ் மொழித்தினம் இந்த வருடம் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார்.



அகில இலங்கை பாடசாலை மட்டத்திலான தேசிய விளையாட்டு ஆரம்ப நிகழ்வு! Top News
[Tuesday 2017-10-03 18:00]

அகில இலங்கை பாடசாலை மட்டத்திலான தேசிய விளையாட்டு போட்டி கொழும்பு ரோயல் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகி (02) உள்ளது. தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறும் இந்த விளையாட்டு போட்டிகளில் 09 மாகாணங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்கள் கலந்துக் கொள்கின்றனர்இ ந்த விளையாட்டு போட்டிகளின் ஆரம்ப நிகழ்வு பிரதமர் ரனில் விக்கரமசிங்க தலைமையில் ஆரம்பித்து வைக்கபட்டது.



கனடிய தமிழர் தேசிய அவையின் அனுசரணையில் எமது சமூகத்தின் ஏற்பாட்டில் பாட்டாளிபுரத்தில் மருத்துவ முகாம்! Top News
[Thursday 2017-09-28 18:00]

26-9-2017 அன்று எமதுசமூகத்தின 10வது வைத்திய முகாம் திருமலைமாவட்டத்தின் பாட்டாளிபுரம் கிராமத்தை சூழவுள்ள 5 கிராமங்களை உள்ளடக்கி 750ற்கு மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டது ஒருவரலாற்று நிகழ்வாகும். திரு மகேந்திரன் மாணிக்கம் அவர்கள் கனடிய தமிழர் தேசிய அவையின் மண்வாசனத் திட்டத்தினூடாக எமது சமூகத்தின் ஏற்பாட்டில் மூதூர் பாட்டாளிபுரத்தில் இம் மருத்துவ முகாம் இடம்பெற்றுள்ளது.



நல்லூரில் தியாகதீபம் திலீபனுக்கு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி! Top News
[Tuesday 2017-09-26 19:00]

ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து, உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து உயிர்நீத்த தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நல்லூரில் எழுச்சியுடன் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.



தமிழர்கள் மத்தியில் பொதுவாக்கெடுப்பு நடத்த முன்வாருங்கள்! - ஜெனிவாவில் வைகோ அழைப்பு Top News
[Tuesday 2017-09-19 07:00]

உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என ஜெனிவா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, வலியுறுத்தியுள்ளார். ஜெனிவாவில் மனித உரிமைக் கவுன்சிலின் 36-வது அமர்வு செப்டம்பர் 11-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.



“அன்னை தந்த இல்லம்”நிகழ்த்திய நிதி திரட்டும் இசை விழாவிற்;கு அள்ளி வழங்கிய வள்ளல்கள்! Top News
[Sunday 2017-09-17 18:00]

மனோ வளம் குன்றிய பிள்ளைகளை பராமரித்து வரும் “அன்னை தந்த இல்லம்” (ATI Foun dation) நிகழ்த்திய இசைக் குயில் சித்திராhவின் “சித்திரா கீதம்” நிகழ்ச்சிக்கு தமிழ் மக்கள் பெருமனதுடன் நிதியினை அள்ளி வழங்கி தமது ஆதரவினை நல்கியுள்ளனர். கடந்த 15ம் திகதி வெள்ளிக் கிழமை மாலை மார்க்கம் மெக்னிக்கல் வீதியிலுள்ள Chandini Hall மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இசைக் குயில் சித்திரா தனது இசைக் குழுவினருடன் பங்குபற்றி தனது இன்னிசையினால் பார்வையாளர்களை மகிழ்வித்தார்.



பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஒலித்த காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்கான குரல்கள் ! Top News
[Thursday 2017-09-14 18:00]

பிரித்தானிய பாராளுமன்றத்தில் கேட்போர் கூடத்தில் இலங்கைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்கான குரல்கள் ஒலித்துள்ளன. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளிளையொட்டி கருத்தரங்கொன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறிலங்காவைக் கண்காணிக்கும் பன்னாட்டு நிபுணர் குழுவின் பிரதிநிதி அன்றூ உட்பட பிரித்தானிய பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள், நா.தமிழீழ அரசாங்க அமைச்சர் மணிவண்ணன் ஆகியோர் பிரதான கருத்துரைகளை வழங்கியிருந்தனர்.



அன்னை தந்த இல்லம்' நிதிக்காக " சித்திரகீதம்" - எதிர்வரும் செப்டம்பர் 15ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 7.00மணி Top News Top News
[Tuesday 2017-09-12 19:00]

எதிர்வரும் செப்டம்பர் 15ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 7.00மணிக்கு ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள "சண்டனி கிரன்ட்" மண்டபத்தில் நடைபெறவுள்ள " சித்திரகீதம்" இசை நிகழ்ச்சியானது கனடாவில் இயங்கிவரும் "அன்னை தந்த இல்லம்' நிதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



குங்குலிய கலய நாயனார் குரு பூசை: Top News
[Friday 2017-09-08 19:00]

குங்குலிய கலய நாயனாரின் ஆவணி மூல குரு பூசை கடந்த ஞாயிற்றுக்கிழமை வேப்பங்குளம் பத்திர காளி அம்பாள் ஆலயத்தில் நடைபெற்றது. குங்குலிய கலய நாயனாரின் திருவுருவ படத்திற்கு சாமி அம்மா அவர்களின் தலைமையில் விஸேட பூசை வழிபாடுகள் இடம் பெற்றன.அதனை தொடர்ந்து பத்திர காளி அம்பாள் அறநெறி பாடசாலையின் ஆசிரியர் தலைமையில் குங்குலிய கலய நாயனார் குரு பூசை நிகழ்வுகள் இடம்பெற்றன. பஞ்ச புராணத்தினை செல்வி கி.டக்சிகா ஓதினார். அதனை தொடர்ந்து நாயன்மார்களின் குரு பூசை தின் வழிபாடுகளின் அவசியத்தை மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் சிவ.கN;ஜந்திரகுமார் எடுத்து விளக்கினார்.



அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு லண்டனில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டம்: Top News
[Thursday 2017-08-31 08:00]

அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டங்களுக்கு வலுச் சேர்க்கும் வகையில் நேற்றைய தினம் புலம்பெயர் தமிழர்களினால் அறவழியில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட குறித்த போராட்டமானது பிரித்தானிய பிரதமரின் காரியாலயத்திற்கு முன்பாக நடைபெற்றது.



16 வது தமிழ் இணைய மாநாடும் மர்மமும். Top News
[Monday 2017-08-28 12:00]

16வது தமிழ் இணைய மாநாடு நேற்று டொராண்டோ பல்கலைக்கழகம் ஸ்கார்பாரோ (UTSC) வில் தொடங்கியது. மாறிவரும் தொழில்நுட்ப உலகில் மக்களுக்கு மிகவும் தேவையான ஒரு தொழில்நுட்ப மாநாடு, 350,000 தமிழ் மக்கள் வாழும் டொரோண்டோ மாநகரில் வெறும் 20 க்கும் குறைவான மக்களுடன் ஆரம்பித்து நடந்தது மிகவும் ஏமாற்றமே.



மாணிக்க விநாயகர் பரிஸ் வீதியினால் தேரேறி வந்த போது: Top News
[Monday 2017-08-28 06:00]

பரிஸ் லாசப்பல் மாணிக்க விநாயகரின் வருடாந்த தேர்த்திருவிழா 27.08.2017 ஞாயிறு அன்று வெகுசிறப்பாக இடம்பெற்றது. நிற, மொழி, மத வேறுபாடின்றி, பல்லாயிரக்கணக்கான பகதர்கள் கலந்து கொண்டு-விநாயகப்பெருமான் தேரேறி பரிஸ்வீதிகளில் வலம் வந்த கண்கொள்ளாக் காட்சியினைக் கண்டு மகிழ்ந்தனர்.


Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா