Untitled Document
July 24, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
சட்டமா அதிபரின் கைக்குள் நீதித்துறை! - ஐ.நா நிபுணர் குற்றச்சாட்டு
[Monday 2017-07-17 09:00]

இலங்கையில் நீதித்துறையின் கைகளை சட்டமா அதிபர் கட்டி வைத்திருப்பதாக இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த மனித உரிமைகள் மற்றும் தீவிரவாத எதிர்ப்புக்கான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் குற்றம்சாட்டியுள்ளார். தனது இலங்கை பயணத்தின் முடிவில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இலங்கையில் நீதித்துறையின் கைகளை சட்டமா அதிபர் கட்டி வைத்திருப்பதாக இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த மனித உரிமைகள் மற்றும் தீவிரவாத எதிர்ப்புக்கான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் குற்றம்சாட்டியுள்ளார். தனது இலங்கை பயணத்தின் முடிவில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

  

இலங்கையில் நீதித்துறையின் கைகள் சட்டமா அதிபர் மூலமாக கட்டி வைக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு முற்றிலும் முரணானது. எந்தவொரு பிணை மனுவையும் நிராகரிக்கும் அதிகாரம் பெற்றவராக சட்டமா அதிபர் இருக்கிறார். இந்த நடைமுறை இன்னமும் இலங்கையில் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.comவடக்கு கிழக்கில் நீதிமன்றங்கள் இயங்கவில்லை! - யாழ். பல்கலைக்கழகத்தில் அஞ்சலி Top News
[Monday 2017-07-24 18:00]

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தைக் கண்டித்து, இன்று வடக்கு கிழக்கில் சட்டத்தரணிகள் நடத்திய பணிப்புறகணிப்பு போராட்டத்தினால் நீதிமன்றங்கள். முடங்கின. அதேவேளை, கவனயீர்ப்பு, கண்டனப் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.தாயின் மார்பில் குழந்தை எட்டி உதைத்தாலும் தாயின் அன்பு மாறாது: – சுமந்திரன் தொடர்பாக வடமாகாண முதலமைச்சர்!
[Monday 2017-07-24 18:00]

தாயின் மார்பில் குழந்தை எட்டி உதைத்தாலும் தாயின் அன்பு என்றென்றும் மாறாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் பற்றி வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற வித்தகவிழா 2017 இல் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு முதலமைச்சர் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.வடக்கில் தனியார் பஸ் போக்குவரத்து முடங்கியது!
[Monday 2017-07-24 18:00]

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், உண்மையான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமெனக் கோரியும், தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் ஆகியன இணைந்து, இன்று மேற்கொண்ட பணிப்பகிஷ்கரிப்பால், வடமாகாணத்தில் போக்குவரத்தில், முடக்கமான நிலை ஏற்பட்டது.பொறுமையுடன் பயணிக்கிறோம்: - த.சித்தார்த்தன் பா.உ
[Monday 2017-07-24 18:00]

மகிந்த ராஜபக்வின் ஆட்சிக்காலத்தில் நடக்காத விடயங்கள் ஆட்சிமாற்றம் ஒன்று இந்த நாட்டில் ஏற்பட்டால் நடைபெறும் என்ற தீவிரமான நம்பிக்கை கொண்டுதான் தமிழ் மக்கள் ஒரு ஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள். அரசியல் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்ற விடயத்துக்கு அப்பால் தங்களுடைய சாதாரண பிரச்சினைகளான காணி விடுவிப்பு, கைதிகளின் விடுதலை, காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கான நீதி, வேலைவாய்ப்பு போன்ற விடயங்களிலாவது ஆட்சி மாற்றம் ஒரு சாதகமான தீர்வை பெற்றுத்தரும் என்று தமிழ் மக்கள் நம்பினார்கள்.மட்டக்களப்பிலும் யாழ்ப்பாணத்திலும் கறுப்பு யூலை 34ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்! Top News
[Monday 2017-07-24 18:00]

1983ஆம் ஆண்டு யூலை 23ஆம்திகதி கொழும்பிலும் நாட்டின் தென்பகுதிகளிலும் வாழ்ந்த தமிழ் மக்கள் மீது சிங்களக் காடையர்கள் மேற்கொண்ட திட்ட மிட்ட கொலைவெறித்தாக்குதலில் ஆயிரத்திற்கும் அதிகமாகோர் படுகொலை செய்யப்பட்டதுடன், அதேயளவானோர் படுகாயமடைந்தனர். நூற்றுக் கணக்கான பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட பின்னர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.குடவிளக்காக இருக்கும் மலையக மக்களை அகல் விளக்காக சுடர் விட்டு எறிய விடுவதே எமது நோக்கம்: - அமைச்சர் மனோ கணேசன்
[Monday 2017-07-24 18:00]

குடவிளக்காக குடத்திற்குல் ஏற்றிய விளக்காக எறிந்துக் கொண்டிருக்கும் மலையக மக்களை அகல் விளக்காக சுடர் விட்டு எறிய வைக்கும் பாரிய முயற்சியில் நாங்கள் ஈடுபட்டு கொண்டு இருக்கின்றோம். கடந்த காலங்களில் அப்படி இருக்கவில்லை முற்று முமுதாக தள்ளி வைக்கபட்டவர்களாவே இருந்தோம். தற்போது மலைய தமிழர்கள் என்று அடையாளபடுத்தபட்டு கொண்டு இருக்கின்றோம் என்று கூறுகின்றார் அமைச்சர் மனோ கணேசன் அவர்கள்.துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தப்பிச் செல்லும் படம் வெளியானது - சாவகச்சேரியில் பதுங்கினாரா? Top News
[Monday 2017-07-24 18:00]

நல்லூர் பிரதேசத்தில் நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை கைது செய்வதற்காக விசேட விசாரணை பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. பல பொலிஸ் குழுக்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வித்தியா கொலை விசாரணை முன்கூட்டியே நிறுத்தப்பட்டது!
[Monday 2017-07-24 18:00]

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட காற்சட்டையில் இருந்த குருதிக் கறை, உயிரிழந்த மாணவியின் குருதி மாதிரியுடன் ஒத்துப் போகவில்லை என்று ஊர்காவற்றுறை நீதிவான் றியால் இன்று வித்தியா கொலை குறித்து விசாரிக்கும் தீர்ப்பாயத்தின் முன் சாட்சியம் வழங்கினார்.கேப்பாப்பிலவு காணி விவகாரம் - ஜனாதிபதிக்கு சம்பந்தன் கடிதம்!
[Monday 2017-07-24 18:00]

இராணுவத்தினர் வசமுள்ள கேப்பாபிலவு காணிகள் விடுவிப்பு விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்று கடிதம் ஒன்றை ழுதியுள்ளார். அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-வடமராட்சி இளைஞன் கொலை - இரு பொலிசாருக்கும் விளக்கமறியல் நீடிப்பு! Top News
[Monday 2017-07-24 18:00]

வடமராட்சி கிழக்குப் பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸார் இருவரினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று பருத்தித்துறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, எதிர்வரும் ஆகஸ்ட் 4ம் திகதிவரை சந்கே நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.சுட்டவருக்கும் சுவிஸ் குமாருக்கும் தொடர்பு? - கொழும்பு ஊடகம் தகவல்
[Monday 2017-07-24 18:00]

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் பிரதான சந்தேகநபரான சுவிஸ் குமாருக்கும், நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதாக கூறப்படும் நபருக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக, கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.விசாரணையில் பொலிசார் அவசரப்படுவது ஏன்? - சிவாஜிலிங்கம்
[Monday 2017-07-24 18:00]

நல்லூரில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு நீதிபதி இளஞ்செழியனை குறி வைத்து நடத்தப்பட்டதல்ல என பொலிஸார் அவசர அவசரமாக தெரிவிப்பது பலத்த சந்தேகத்தை எற்படுத்தியுள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.கடலில் தத்தளித்த காட்டு யானைகள் கடற்படையினரால் மீட்பு! Top News
[Monday 2017-07-24 18:00]

திருகோணமலை கடல் பகுதியில் உயிருக்குப் போராடிய இரண்டு காட்டு யானைகள் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டு காட்டுக்குள் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் இரு காட்டுயானைகள் கடலில் தத்தளிப்பதனை கடல் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் அவதானித்தனர்.முல்லைத்தீவில் இளைஞனுக்கு வாள்வெட்டு!
[Monday 2017-07-24 18:00]

முல்லைத்தீவு - கொக்கிளாய் பகுதியில் இன்று மாலை இளைஞன் மீது கத்தி வெட்டு தாக்குதலை மேற்கொண்ட பின்னர் தப்பிச்செல்ல முற்பட்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொக்கிளாய் பகுதியில் கடற்தொழிலில் ஈடுபடுவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இளைஞரொருவர் மீது மற்றொரு நபர் கத்தி வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.கரடியனாறில் விஷேட அதிரடிப் படையினர் துப்பாக்கி சூடு! - மட்டக்களப்பில் பதற்றம் Top News
[Monday 2017-07-24 17:00]

மட்டக்களப்பு - கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முந்தல்குமாரவேலியார் கிராமம் பகுதியில் விசேட அதிரடிப் படையினர் துப்பாக்கி சூடு நடத்திய போது, தப்பிச் செல்ல முற்பட்ட ஒருவர் ஆற்றில் குதித்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இலங்கையில் நம்பகமான பொறுப்புக்கூறல் அவசியம்! - கனடியப் பிரதமர்
[Monday 2017-07-24 08:00]

இலங்கையில் நம்பகமான பொறுப்புக்கூறல் அவசியம் என்று கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ இதனை வலியுறுத்தியுள்ளார். கறுப்பு ஜூலையை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர், 1983ம் ஆண்டு ஜூலை 24 முதல் 29ம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கொழும்பிலும், இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததுடன் எண்ணற்ற பகுதிகளில் மக்கள் பாதிக்கப்பட்டதுடன் இடப்பெயர்வுகளும் இடம்பெற்றன.நல்லூர் துப்பாக்கிச் சூடு - கண்டனக் கணைகள்!
[Monday 2017-07-24 08:00]

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன்னை இலக்கு வைத்து, நல்லூர் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட தலைவர்கள், அமைப்புகளால் கண்டன அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.நீதிபதி இளஞ்செழியன் மீதான தாக்குதலை கண்டித்து நாளை வடக்கு, கிழக்கில் கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்த அழைப்பு!
[Monday 2017-07-24 08:00]

யாழ்ப்பாணத்தில் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து நாளை வடக்கு, கிழக்கில் கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்துமாறு வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக்குழு அழைப்பு விடுத்துள்ளது. இக்­குழு விடுத்­துள்ள அறிக்கையில் , இலங்­கையின் நீதி­பதி ஒரு­வ­ருக்கு ஏற்­பட்­டி­ருக்கும் இந்த அசா­தா­ரண நிலை­மை­ என்­பது தற்­கா­லத்தை அள­விடக் கூடி­ய­ ஒ­ரு­ எ­டு­கோ­ளா­க­வே­ வி­ளங்­கு­கின்­றது.வடக்கில் வன்முறைகளை வைத்து அரசியல் செய்பவர்களின் செயற்பாடே நீதிபதி மீதான தாக்குதல்! - மனோ கணேசன்
[Monday 2017-07-24 08:00]

வடக்கிலே வன்முறைகளை வைத்து அரசியல் செய்யும் சிலரின் செயற்பாடாகவே மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான தாக்குதலைக் கருதுவதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “வடக்கிலே வன்முறைச் செயற்பாடுகள் இல்லை ஓய்ந்து விட்டன என்னும் நிலை காணப்பட்டபோதும், இன்னும் அங்கு வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுகின்றன என்று சொல்லி அரசியல் செய்ய விரும்பும் சிலரின் செயற்பாடாக இச்சம்பவத்தினைக் கருதுகின்றேன்.கறுப்பு ஜூலை வன்முறைகளின் 34 ஆவது ஆண்டு நிறைவையொட்டி லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்! Top News
[Monday 2017-07-24 08:00]

உலகை உலுப்பிய - ஈழத்தமிழர்களுக்கு எதிரான - கறுப்பு ஜூலை வன்முறைகளின் 34 ஆவது ஆண்டு நிறைவையொட்டி 23 ஆம் திகதி மாலை 5 மணி தொடக்கம், லண்டன், டவுனிங் வீதியில் உள்ள இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தின் முன் பிரித்தானியாவில் வாழும் தமிழ் உறவுகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.


SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
Elankeeran-debt-solution-25-06-2016
<b> 24-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் பரதமைல் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 10-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில்          இராகாலயா நுண்கலைக்கூடம் வழங்கிய கானமாருதம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 03-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற இதயராகங்கள் இசை நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா